பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன் (Post No.13,772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,772

Date uploaded in London – 12 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன்

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன்

நார்வே நாட்டில் பெர்கன் என்னும் இடத்தில் ஒரு சுங்க  அதிகாரியின் மகனாகப் பிறந்த கிறிஸ்டியன் லாசன் , அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின்னர்  ஜெர்மனிக்கு வந்து அங்கேயே வாழத் தொடங்கினார்

அவர் செய்த முக்கியப் பணி, பிராகிருத மொழி, பாலி மொழி ஆராய்ச்சியாகும். ஜெர்மன் மொழியில் பிராக்கிருத இலக்கணம்  எழுதியது மொழியியல் ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக நின்றது.

முதலில் ராமாயணத்தை எடிட் செய்து — தொகுத்து, முறைப்படுத்தி வெளியிட- இவருக்கு நிதி உதவி கிடைத்தது;  பான், ஹைடல்பர்க் பல்கலைக் கழகங்களில் படித்தகாலையில் உதவித்தொகை கிடைத்து பாரிஸ், லண்டன் நகரங்களுக்குச் சென்றார் . ஸ்லெகல் என்பவரின் ராமாயணப் பணியில் உதவினார் 

Christian Lassen 1800-1876

பிறந்த தேதி -22-10-1800

பிறந்த  ஊர் – Bergen in Norway பெர்கன், நார்வே

இறந்த தேதி – 8-5-1876

கல்வி கற்ற இடம்  Heidelberg, Bonn நகரங்கள்

அவரது குரு  – French Scholar E.Burnouf

பார்த்த வேலைகள் – Professor  ,Bonn University விரிவுரையாளர். பின்னர் பேராசிரியர்.

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

Prakrit Language Grammar

History of Indian Archipelago ad Further India in Four Volumes

Book on Pali Language

Hitopadesa with commentary

Bhavabhuti’s Malatimadhava

Sankyakharikas

Jayadeva’s Gita Govinda

Anthology of Sanskrit works

பிராகிருத மொழி இலக்கணம்

இந்தியா மற்றும் இந்தியாவுக்கு அப்பாலுள்ள நாடுகளின் பழமை. வரலாறு Four Volumes

ஹிதோபதேசம்

ஸாங்க்ய கார்த்திகா

சம்ஸ்க்ருத கவிதை நூல்களின் அட்டவணை

பவபூதியின் மாலதி மாதவம்

ஜெயதேவரின் கீத கோவிந்தம்

பிரெஞ்சு அறிஞர் பர்னுப் என்பவருடன் இவர் பாலி, பிராக்கிருத மொழிகளை பற்றி எழுதி முதலில் வெளியிட்டார்.

இந்தியாவின் பஞ்சாப் பிரதேச புவியியல் என்ற ஆராய்ச்சி நூலுக்காக இவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினர். பான் ஹைடல்பர்க் நகரங்களில் பேராசிரியராகப்nபணியாற்றினார். ஆனால் அவரது கண்பார்வை மங்கி இறுதிக் காலத்தில் கண்பார்வையை அறவே இழந்தார். கிரேக்க, இந்திய ஆசிரியர்கள் பஞ்சாப் பிரதேசம் பற்றி எழுதிய அனைத்தையும் தொகுத்து ஆய்வு நூலை வெளியிட்டார்.. இவர் இலங்கை பற்றியும் எழுதினார்

வான் ஸ்லெகல், பரனூப் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆய்வு நூல்களை வெளியிட்டார்.

பாரசீக மொழியில் எழுதப்பட்ட கியூனிபார்ம் லிபி கல்வெட்டுகளைப் படித்து சிலர் எழுதியிருந்தனர். அவைகளை மேலும் ஆராய்ந்து நிறைய செய்திகளைக் கண்டுபிடித்தது இவரது இன்னும் ஒரு சிறப்பான பணியாகும்

பாரிசில் இருக்கும்போதுதான் இவருக்கு பிராகிருத மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது வரருசி எழுதிய பிராகிருத பிரகாசிக்காவைப் பயன்படுத்தி முழு இலக்கண நூலை வெளியிட்டார்.

இந்திய பழமை புராதனம் Antiquary  என்ற பத்திரிக்கையில் அவர் பலூச்சி, பிராகூயி மொழிகள் பற்றியும் எழுதினார். இந்த இதழ்களின் மொழிபெயர்ப்புகள் இன்றுவரை வெளிவந்த வண்ணம் இருக்கின்றன .அவரது பத்திரிக்கைகளின் விஷய அட்டவணை , இண்டெக்ஸ் முதலியன இல்லாததால் அதிகம் பயன்படுத்தப்படாமலே போய்விட்டன .

தென் இந்திய வரலாற்றையும் இலங்கை பற்றியும் அவர் எழுதியது குறிப்பிட்டது தக்கது .

வடமேற்கு இந்தியாவை ஆண்ட கிரேக்க சித்திய மன்னர்களின் வரலாற்றை நாணயங்களைக் கொண்டு ஆராய்ந்து எழுதினார்

இந்த ஆராய்ச்சிகளின் பயனாக கிறிஸ்டியன் லாசன், நான்கு தொகுதிகளில் இந்தியா மற்றும் இந்தியாவுக்கு அப்பால் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகளை வெளியிடார்.

பழங்குடி இன வரலாறு, ஜாதிகளைப் பற்றி முதலில் எழுதியவர் லாசன்தான் .

முதல் தொகுதியில் புராணங்களில் கிடைக்கும் வரலாற்றை எழுதி மனு நீதி நூல் குறித்தும் எழுதினார்.

ஆரியர்களைப் புகழ்ந்து அவர் எழுதிய வாசகம் இதோ

கீழ்த்திசை நாடுகளில் ஆரியர்கள் பண்பாட்டினைப் பரப்பியது போல வேறு எவருமே செய்ததில்லை.

முதல் தொகுதியில்தான் ஜாதிகள் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டார்.

இரண்டாவது தொகுதியில் புத்தர் காலம் தொடங்கி குப்தர் காலம் வரை வரலாற்றினை மொழிகிறார் அவருக்கு முன்னர் எழுதிய படைப்புகளின் அடைப்படையில் அவர் எழுதியபோதும் அலக்சாந்தர் படையெடுப்பு போன்ற விஷயங்களுக்கு கிரேக்க ரோமானிய மொழிகளில் எழுதிய விஷயங்களையும் சேர்த்துக்கொண்டார்

மூன்றாவது தொகுதியில் வட இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை வழங்கினார்.

நாலாவது – இறுதி – வால்யுமில் – தொகுதியில் கிழக்கி ந்திய,   தென்னிந்திய வரலாற்றினை அளித்தார்

கிறிஸ்டியன் லாசனின் மிகப்பெரிய சாதனை இந்தியா பற்றி பழைய மொழிகளில் சிதறிக்கிடந்த விஷ்யங்களைத் தொகுத்து, அதை ஆராய்ச்சி நோக்கில் விமர்சித்து எழுதியதாகும்..

இவரது படைப்புகளில் உள்ள விஷயங்கள் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் வருவது எக்காலமோ!   அக்காலம் பொற்காலமாக இருக்கும் !

–subham—

Tags- கிறிஸ்டியன் லாசன் , ஜாதி இன ஆராய்ச்சி, இந்தியா, தென் இந்தியா, இலங்கை வரலாறு பிராக்கிருத இலக்கணம் , பாலி மொழி, ஆய்வு , ஜெர்மானிய அறிஞர், பாரசீகம், கியூனிபார்ம் லிபி கல்வெட்டுகள்

Leave a comment

Leave a comment