WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.774
Date uploaded in London – —13 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (13)
ராமாயணத்தில் வரங்கள் (13) மஹாதேவர் விஸ்வாமித்திரருக்கு தனுர்வேதத்தை அளித்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘விஸ்வாமித்திரர் தனுர் வேதத்தை அடைந்தது” என்ற ஸர்க்கம்.
மஹாதபஸ்வியான சதானந்தர் ஶ்ரீ ராமருக்கு விஸ்வாமித்திரருக்கு எப்படி அஸ்திரங்கள் கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறுகிறார்.
முன்னொரு காலத்தில் க்ஷத்ரியரான விஸ்வாமித்திரர் மன்னராக இருந்து தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கையில் ஒரு நாள் காமதேனுவைப் பார்த்தார். அது வசிஷ்டரிம் இருந்தது.
அதன் மீது ஆசை கொண்டு வசிஷ்டரிம் அதைக் கேட்க அவர் கொடுக்க மறுத்து விட்டார்.
உடனே அதைத் தானே கவர்ந்து கொண்டு சென்று விட்டார்.
வருத்தமடைந்த காமதேனு வசிஷ்டரிம் வந்து அழுது முறையிட்டது.
உடனே வசிஷ்டர் ‘சத்ரு சேனையை நாசம் செய்யும் ஒரு சேனையை உண்டாக்கு’ என்றார்.
ஒரு கர்ஜனை மூலம் காமதேனு பப்லவர்கள் என்ற ஒரு சேனையை உருவாக்கியது. அதை விஸ்வாமித்திரர் அழித்தார்.
உடனே சகர்கள், மற்றும் யவனர்களை அது உருவாக்கியது. அவர்களையும் விஸ்வாமித்திரர் அழித்தார். உடனே காமதேனு ஹூம் என்ற முக்காரத்தால் காம்போஜர்களை உண்டு பண்ணியது. அவர்களைய்ம் விஸ்வாமித்திரர் அழித்தார்.
விஸ்வாமித்திரரின் நூறு பிள்ளைகள் வசிஷ்டரை எதிர்க்கவே அவர் ஹீம் என்ற சப்தத்தால் அவர்களை அழித்தார்.
இதனால் வருந்திய விஸ்வாமித்திரர் தன் ஒரு புதல்வனிடம் அரசாட்சியை ஒப்புவித்து விட்டு இமயமலை சென்று தவம் புரிய ஆரம்பித்தார்.
அவரது கடும் தவத்தினால் மகிழ்ந்த மஹாதேவர் அவர் முன் தோன்றினார்.
கிமர்தம் தப்யஸே ராஜன் ப்ரூஹி யத்தே விவக்ஷிதம் |
வரதோஸ்மி வரோ யஸ்தே காங்க்ஷித: ஸோஸ்மிதீயதாம் ||
– பாலகாண்டம், 55-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 14
ராஜன் – அரசனே
கிமர்தம் – எதற்காக
தப்யஸே – நீ தவம் செய்கிறாய்?
தே – உன்னுடைய
விவக்ஷிதம் – கோரிக்கை
யத் – எதுவோ
தத் – அதை
ப்ரூஹி – சொல்
தே – உனக்கு
காம்க்ஷித: – வேண்டப்பட்ட
வர: – வரம்
ய: ஸ: – எதுவோ அது
அமிதீயதாம் – சொல்லப்படட்டும்
வரத: – வரமளிக்கிறவனாய்
அஸ்மி – இருக்கிறேன்
இவ்வாறு மஹாதேவர் அவரிடம் கூறினார்.
உடனே விஸ்வாமித்திரர் பின்வரும் மொழியை மொழிந்தார்:
யதி துஷ்டோ மஹாதேவ தனுர்வேதோ மாமநக |
சாங்கோபாங்கோபனிஷத: சரஹஸ்ய ப்ரதீயதாம் ||
அனக – மாசற்ற
மஹாதேவ – மஹாதேவரே
துஷ்ட: – உள்ளம் குளிர்ந்தவராய்
யதி – இருக்கிறீர் என்றால்
மம – எனக்கு
தனுர்வேத: – தனுர்வேதமானது
சரஹஸ்ய – ரஹஸ்யமெனப்படும் உபநிஷத்துடன்
சாங்கோபாங்கோபனிஷத: – அங்கம், உபாங்கம், உபநிஷத் இவைகளுடனும்
ப்ரதீயதாம் – அளிக்கப்பட வேண்டும்
யானி தேவேஷு சாஸ்த்ராணி தானவேஷு மஹர்ஷிஷு |
கந்தர்வ யக்ஷரக்ஷ: ஸு ப்ரதிமான்ந்து மமானக ||
தவ ப்ரஸாதாத்பவது தேவதேவ மமேப்ஸிதம் ||
அனக – மாசற்ற
தேவ தேவ – தேவர்களின் தேவனே
தேவேஷு – தேவர்களிடத்திலும்
தானவேஷு – அசுரர்களிடத்திலும்
மஹர்ஷிஷூ – மஹரிஷிகளிடத்திலும்
கந்தர்வ யக்ஷரக்ஷ:ஸு – கந்தர்வகளிடத்தும் யக்ஷர்களிடத்தும் ராக்ஷஸர்களிடத்தும்
அஸ்த்ராணி – அஸ்திரங்கள்
யானி ச – எவை எவைகளோ அவைகள் எல்லாமும்
மம – எனக்கு
ப்ரதிபான்ந்து – உரிமை உடையவைகளாய் விளங்க வேண்டும்
தவ – தேவரீருடைய
ப்ரஸாதாத் – அனுக்கிரகத்தால்
மம – என்னுடைய
ஈர்ஸிதம் – மனோரதமானது
பவது – சித்திபெற்றதாக ஆகட்டும்
இப்படியாக விஸ்வாமித்திரர் மஹாதேவரிடம் வேண்டினார்.
ஏவமஸ்வதி தேவேஷோ வாக்யமுத்த்வா திவம் கத:
தேவேஷ: – தேவ தேவரும்
ஏவம் – ‘அப்படியே
அஸ்து இதி – ஆகட்டும்’ என்கிற
வாக்யம் – வாக்கியத்தை
உக்த்வா – திருவாய்மலர்ந்தருளிவிட்டு
திவம் – தேவலோகத்திற்கு
கத: – எழுந்தருளினார்
– பாலகாண்டம், 55-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 16,17 & 18
உடனே மஹாதேவர் அவர் கேட்ட வரத்தை அவருக்கு அருளினார்.
விஸ்வாமித்திரர் அஸ்திரங்களுடன் கூடிய பலம் பொருந்தியவராக ஆனார்.
**