Post No. 13,781
Date uploaded in London – 15 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜிப்ஸி மொழியை ஆராய்ந்த அகஸ்ட் பாட்(Post No.13,781)
வேறு யாரும் செய்யாத அரிய பணிகளை ஜெர்மனியில் பிறந்த அகஸ்ட் பாட் செய்தார். ஐரோப்பாவில் குடியேறிய இந்திய ஜி ப் ஸிக்கள் என்ற நாடோடிக ளின் மொழி, இனம் , நடை உடை பாவனைகளை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மன் மொழியில் வடித்தார் சம்ஸ்க்ருதம் என்ற சொல்லைச் சொன்னால் உலகமே இந்தியாவிலிருந்து பண்பாட்டினைப் பெற்றது தெரிந்து விடுமே என்று அஞ்சி நடுங்கி இந்திய -ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்ற புதிய சொல்லை வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தனர். அந்த சம்ஸ்க்ருத மொழிக்குடும்ப ஒற்றுமையை அவர் அகராதியாகத் தொகுத்து வெளியிட்டார் . இவை இரண்டும் இவரது ஒப்பற்ற சாதனைகள் .
ஜிப் ஸிக்கள் எப்படி இந்தியாவிலிருந்து பரவினர் என்பதை கட்டுரையின் இறுதியில் காண்க
AUGUST POTT 1802- 1887
பிறந்த தேதி -14-9-1802
பிறந்த ஊர் -NETTLEREDE NEAR HANOVAR
இறந்த தேதி 5-7-1887
கல்வி கற்ற இடம் – GOTTINGEN UNIVERSITY
அவரது குரு – FRANZ BOPP பிரான்ஸ் பாப்
பார்த்த வேலைகள் – LECTURER விரிவுரையாளர்.. PROFESSOR, HALLE UNIVERSITY
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –
THE GIPSIES IN EUROPE AND ASIA, AN ETHNOLOGICAL LINGUISTIC STUDIES,
THE INEQUALITY OF RACES,
FAMILY NAMES AND THEIR MODE OF ORIGIN
DICTIONARY OF INDO- EUROPEAN ROOTS
அகஸ்ட் பிரெடெரிக் பாட் ஜெர்மனியில் ஹனோவர் அருகிலுள்ள நெட்டில் ரீட் என்ற இடத்தில் பிறந்தார். கிராமத்து கிறிஸ்தவ பிரசாரகரின் மகன்; இதனால் இயற்கையாகவே காட்டி ங்கன் பல்கலைக் கழகத்தில் சமயக்கல்வியைக் கற்றார். செல் என்னும் இடத்தில் முதலில் ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது லத்தீன் மொழியில் முதல் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார் ; பின்னர் பெர்லின் நகருக்குச் சென்று பிரான்ஸ் பாப் நிகழ்த்திய உரைகளைச் செவிமடுத்தார். பின்னர் அவர் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது சம்ஸ்க்ருதம், கிரேக்கம், லிதுவேனியன், காத்திக் மொழித் தொடர்புகள் என்ற புஸ்தகத்தை எழுதி வெளியிட்டார்; தற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.. ஏற்கனவே பிரான்ஸ் பாப் எழுதியஇலக்கண ஒப்பீடு என்ற நூலுக்கு இது துணைப் புஸ்தகமாக அமைந்தது
பின்னர் ஹால் HALLE பல்கலைக் கழகத்தில் முழு நேர பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கே ஐம்பது ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகித்தார்.
பல ஆராய்சசி இதழ்களில் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதினார்.
ஸ்லாவோனிக் மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளை ஆராய்ந்து எழுதிய பின்னர், குடும்பப் பெயர்கள் எப்படி உருவாயின என்று ஒரு நூல் எழுதினார்.
இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்ப வேர்ச் சொற்கள் என்ற நூலை எழுதினார்; இது ஒன்பது தொகுதிகளில் வந்த மிகப்பெரிய நூல்.
இவருக்கு முன்னர் மனித இனத்தில் உள்ள வேறுபாடுகள் என்ற நூலை கவுண்ட் கோபிநா எழுதியிருந்தார்; அதே தலைப்பில் இவர் மறுப்புரை எழுதி மொழியியல் ரீதியில் மனித இனங்களின் வேறுபாடுகள் என்ற நூலை வெளியிட்டார்.
ஆப்பிரிக்க மொழிகளை ஆராய்ந்தும் எழுதினார்.; சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் ஐரோப்பா ஆசியாவிலுள்ள ஜிப்ஸிக்களின் மொழிகள் என்ற இவரது புஸ்தகம் மீண்டும் மீண்டும் அச்சிடப்படுகிறது. வேறு எவரும் ஆராயாத இந்தத் துறையை இவர் முழுதும் ஆராய்ந்து ஜிப்ஸிக்கள் தொடர்பான ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தார்
******
ஜிப்ஸிக்கள் யார் ?
1992- ம் ஆண்டில் நான் தினமணிப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினைத் தருகிறேன் ஐரோப்பாவில் குடியேறிய இந்திய நாடோடிகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தேன் .
ஜிப்ஸிக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து கால்நடையாகவே ஐரோப்பாவுக்குச் சென்றனர்.
ஜிப்ஸிக்கள் என்ற சொல் தோன்றியதற்கு எகிப்து EGYPT நாடே காரணம் .முதலில் இந்த நாடோடிகள் எகிப்துக்குச் சென்றனர்; எகிப்து என்பது ஜிப்ஸி என்று உருமாறியது. பாமர மக்கள் குதிரையை குருதை என்றும் மதுரையை மருதை என்றும் சொல்வது போன்ற மாற்றம் இது .
இவர்கள் ஐரோப்பாவில் நரிக்குறவர்கள் போல வாழ்க்கை நடத்தினர். ஓரிடத்தில் அதிக காலம் இருக்க மாட்டார்கள்; அவர்களுடைய இயல்பு நாடு விட்டு நாடு செல்லும் நாடோடி வாழ்க்கை.
இவர்களது மொழியில் நிறைய இந்தி சொற்கள் உண்டு. ரோமனி என்றும் மொழிக்குப் பெயர். காரணம் இவர்கள் ஐரோப்பா சென்ற பின்னர் பல மொழிகள் பேசுவோரிடையே வசித்தவுடன் அவர்களுடைய மொழியின் தாக்கமும் ஏற்பட்டது . இதனால் ஜிப்ஸி மொழிகள் என்று பன்மையில் பேச தொடங்கினர் ஆராய் ச்சியாளர்கள்.
கிழக்கு ஐரோப்பிய கமியூனிஸ்ட் நாடுகளின் அரசுகள் வீழ்ச்சி அடைந்த போது பொருளாதாரக் கஷ்டங்கள் தோன்றின அப்போது ஆயிரக்கணக்கில் ஜிப்ஸிக்கள் பல நாடுகளுக்குள் நுழைத்தனர். ருமேனியாவிலிருந்து நிறைய பேர் ஜெர்மனிக்குள் புகுந்தார்கள்.
பிரிட்டனில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 6000 ஜிப்ஸிக்கள் இருப்பதாகப் புள்ளி விவரம் கூறியது ஆனால் பலரும் தங்களை ஜிப்ஸிக்கள் என்று சொல்ல வெட்கப்பட்டு அறிவிக்காமலும் இருந்தனர். முதலில் இவர்களைத் தீண்ட தகாதவர்களாக நடத்திய பிரிட்டன் 1988- சட்டம் இயற்றி இவர்களுக்காக ஒவ்வொரு நகரசபையும் கூடாரம் அடிக்கத் தனியான திடல்களை ஒதுக்க வேண்டும் என்று கூறியது
ருமேனியாவில் நான்கு லட்சம் பேர் இருப்பதாகப் புள்ளி விவரம் கூறியது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இருபது லட்சம் பேர் என்று கணிக்கிறார்கள்.
ருமேனியாவின் தலைநகர் புகாரெஸ்டில் ஒரு மதுபானக்கடை திறப்பதாக விளம்பரம் வெளியானவுடன் 3000 பெண்கள் மனுப்போட்டனர். ஆனால் அதன் உரிமையாளர் ஜிப்ஸி என்று தெரிந்தவுடன் 600 பேர் மட்டுமே இன்டெர்வியூவுக்கு வந்தார்கள்.
முதலில் குதிரை வண்டியில் சென்றவர்கள் பிற்காலத்தில்– இன்று வரை- காரவான் எனப்படும் மோட்டார் வாகனத் தொடர் வண்டிகளில் செல்லத் தொடங்கினர். எங்கு பொட்டல்வெளிகள் இருந்தாலும் அங்கு முகாமிடத் தொடங்கினர். இவர்களைத் திருடர்கள் ,ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்திய ஐரோப்பியர்கள் இவர்களைத் தீண்டத் தகாதவர்கள் என்று அறிவித்து மதுபான விடுதிக்குள் வரக்கூடாது என்று போர்டு வைத்தனர். இவர்களுக்காகப் போராடிய பலர், புதிய சட்டங்களை இயற்றவைத்து பாதுகாப்பு பெற்றனர். இவர்கள் எங்கு முகாமிட்டலும் வழக்குப் போட்டு அந்தத் தீர்ப்பு வந்த பின்னர்தான் இவர்களை வெளியேற்றலாம்.
குதிரைகள் விஷயத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் பாசி மணி உடைகள் தயாரிப்பதும் இவர்களின் தனிப்பட்ட திறமையைக் காட்டும். இவர்கள் அணியும் பல வண்ண உடைகளும் முகமும் இவர்களை இனம் காட்டிவிடும்.
இந்தியாவில் ஜாதி வேறுபாடு உள்ளது போல ஜிப்ஸிக்களுக்கு இன்றுவரை சம உரிமைகள் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்ற வள்ளுவன் வாக்கு உலகில் எங்குமே பின்பற்றப்படவில்லை. எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்ற பாரதியின் வாசகமும் செயல் முறைக்கு வரவில்லை.
பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்றும் அரச வம்சம் ஜாதியின் அடைப்படையில் உள்ளது இந்தியாவில் பல மாநிலங்களில் வம்சாவளி ஆட்சி இருப்பதைக் கண்ணால் காண்கிறோம்.
நான் சுவீடன் நாட்டுத் தலை நகர் ஸ்டாக்ஹோமுக்கு சென்ற போது பஜார் தெருவில் ஒரு தண்ணீர் தொட்டி அருகில் ஜிப்ஸிக்கள் முகாமிட்டு ரோட்டில் கொடிகளில் துணிகளை உணர்த்தி இருந்ததைக் கண்டு அசந்தே போனேன். ஒரு நாட்டின் தலைநகரில் கடைத்தெரு ரோட்டில் நான் கண்ட காட்சி இது. அவர்களும் திருந்தவில்லை என்பதை இது காட்டுகிறது.
—subham—
TAGS- ஜிப்ஸிக்கள், AUGUST POTT ,ஜிப்ஸி மொழி, ஆராய்ச்சி ,அகஸ்ட் பாட்,linguist