Talpagiri Temple
Post No. 13,784
Date uploaded in London – 16 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
38.நெல்லூர் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -38
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் வட்டாரத்தில் நிறைய புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன . அவைகளால் முக்கியமானவை-
ஸ்ரீ தல்பகிரி ரங்கநாத சுவாமி கோவில்
Talpagiri Ranganathaswamy Temple
****
ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி- காமாக்ஷி தாயி கோவில்,, ஜொன்னவாடா
Sri Mallikarjuna Swamy Kamakshi Tayee Devasthanam
*****
இவைகளை தரிசனம் செய்வோம் :
ஸ்ரீ தல்பகிரி ரங்கநாத சுவாமி கோவில் நெல்லூரில் இருக்கிறது. பஸ் நிலையத்திலிருந்து ஐந்தே கி.மீ தொலைவில் உள்ளது
இது சுமார் அறுநூறு ஆண்டுகள் பழமையானது.
பெண்ணாற்றங்கரையில் அமைந்த இந்த ஆலயம் குன்றின் உச்சியில் இருக்கிறது
ஏழு தங்கக் கலசங்களுடன் உயர்ந்த கோபுரம் நம்மை வரவேற்கும். ஆண்டுதோறும் நடக்கும் இதன் ரத உற்சவம் நெல்லூரில் மிகவும் பிரபலமானது; மார்ச் ஏப்ரல் மாதத்தில் பிரமோற்சவத் திருவிழா நடக்கிறது .
கோவிலின் வரலாறு
காஸ்யப மகரிஷி தவம் செய்ததால் ஸ்ரீ ரங்க நாதரே தரிசனம் தந்து இங்கு கோவில் கட்ட அருள்புரிந்தார்
ஏழாம் நூற்றாண்டில் கோவிலுக்கு பல்லவ மன்னன் ராஜ ராஜ நரேந்திரன் பல தானங்களை செய்தான். அதன் பின்னர் ஸ்ரீ ஜடாவர்மன் பல தங்கம், இரத்தின நகைகளை அளித்தான்
இந்தப் பெண்ணாற்றங் கரையில்தான் ஆந்திர மஹாபாரதத்தை பிரம்ம டிக்கண்ணா எழுதினார்
கிழக்கு திசையில் எழுநிலைக் கோபுரம் அமைந்துள்ளது
அங்கு கண்ணாடி மேடையில் ரங்க நாதரையும் லெட்சுமி தேவியையும் தரிசிக்கலாம் அருகில் ஆண்டாள் கோவிலும் இருக்கிறது.
****
ஜொன்னவாடா மல்லிகார்ஜுன சுவாமி காமாக்ஷி தாயி ஆலயம்
நெல்லாரிலிருந்துலு 12 கி.மீ தொலைவில் ஜொன்னவாடா மல்லிகார்ஜுன சுவாமி காமாக்ஷி தாயி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயமும் பெண்ணாற்றங்கரையில்தான் இருக்கிறது
திரேதா யுகத்தில் காஸ்யப பிரம்மா இங்கு யாகம் செய்ததால் இந்த ஆலயம் உருவானது . இந்த இடத்தின் முழுப்பெயர் யக்ஞவேதிகா ஜோன்னாவாடா .
இந்த சிவன் கோவிலில் ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். அருகிலுள்ள காஸ்யப தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து காமாட்சியையும் மல்லிகார்ஜுனரையும் தரிசித்தால் எல்லா நன்மைகளையும் பெறலாம் .
***
நரசிம்மகொண்டா என்னும் குன்று ஜொன்னவாடா கிராமத்திலிருந்து ஐந்து கி.மீ; நெல்லூரிலிருந்து 15 கிமீ
இங்கு வேதகிரி லெட்சுமி நரசிம்மர் , பக்தர்களுக்கு அருள்புரிகிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் கட்டிய கோவில் என்று கல்வெட்டு கூறுகிறது சுமார் 350 அடி உயரத்தில் கோவில் அமைந்துள்ளது.
நரசிம்ம கொண்டா அமைந்துள்ள வேதகிரி காடுகளிடையே அமைந்துள்ளதால் இந்தக் கோவிலின் கோபுரம் தொலைவிலிருந்து காணும் போது அற்புதமான இயற்கை எழிலுடன் தோற்றமளிக்கிறது.
அருகிலுள்ள குகைகளின் பெயர் அஸ்வத்தாமா குகைகள். மகாபாரதப் போரின் போது திரவுபதியின் பிள்ளைகளை அஸ்வத்தாமன் கொன்றதால் கிருஷ்ணன் அவரை சபித்தார் ; அந்தப் பாவம் தீர பரிகாரமாக அவர் பல இடங்களில் தவம் செய்தார்; அதில் இதுவும் ஒன்று. அவர் சிரஞ்செவி எழுவரில் ஒருவர் என்பதால் இன்றும் இங்கே இருப்பதாக ஐதீகம்.
இந்தக் கோவில் காஸ்யப மகரிஷி மற்றும் சப்த ரிஷிகளுடன் தொடர்புடையது. பிநாகினி நதியின் கரையில் அமைந்திருக்கிறது மே மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
****
பெஞ்சல கோண நரசிம்ம சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவில்; நவ நரசிம்மர் என்னும் ஒன்பது தலங்களில் இதுவும் ஒன்று
இங்கு மிகப்பெரிய பாறையில் நரசிம்மர் உருவம் உளது யோக முத்திரையுடன் நரசிம்மர் காட்சி தருகிறார்
ஹிரண்ய கசிபு என்னும் அரக்கனைக் கொன்ற பின்னர் நரசிம்மர் கோபம் தணிந்து இங்கு யோகத்தில் ஆழ்ந்ததாக வரலாறு .
பெனுஸிலா என்றால் பெரிய பாறை ; அது பெஞ்சலகோன என்று மருவியது. பக்கத்தில் கண்வ நதி ஓடுகிறது; கண்வ மகரிஷி தவம் செய்த இடம் இது .இப்பொழுது அதை கண்டலேறு என்கிறார்கள் இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உடையது.
*****
நெல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவில்
Sri Rajarajeswari Ammavari Temple, Nellore
இந்தக் கோவில் அண்மைக்காலத்தில் தோன்றிய கோவில்
ராஜ ராஜேஸ்வரி பீடாதிபதி அருள் ஜோதி நடராஜ சுவாமி, இங்கு ஆஸ்ரமம் அமைக்க தீர்மானித்தார் 1968 ம் ஆண்டில் காஞ்சி மகா சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.
1975 ஆம் ஆண்டில் காஞ்சி சுவாமிகள், புஷ்பகிரி மடத்து சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தையும், விக்ரஹப் பிரதிஷ்டையையும் நடத்தி வைத்தனர்.
ரத்ன சுவாமி முதலியார், கோவில் கட்டுவதற்காகன நிதியைத் திரட்டித் தந்தார்.
ஆலய வளாகத்தில் காயத்ரீ அம்மன், நவக்கிரகங்கள், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சந்நிதிகளும் இருக்கின்றன.
****
பூமிக்கடியில் சிவன் கோவில் கண்டுபிடிப்பு
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நெல்லூர் ஜில்லாவில் பெருமாள்பாடு என்னும் கிராமத்தில், மணல் எடுப்போர் பழைய சிவன் கோவிலைக் கண்டுபிடித்தனர். இந்தக் கோவில் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெண்ணாறு திசை மாறிப் பாய்ந்தபோது மணல் மூடிப்போனது. இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவில் இருந்ததை கிராமமக்கள் உறுதி செய்தனர்.
கோவிலின் பெயர் நாகேஸ்வரன் கோவில். இதை பல்லவர்கள் கட்டியதாகத் தெரிகிறது அதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது
கோவிலை மீட்டு எடுத்தாலும் அதை எங்கே அமைப்பது என்ற பிரச்சினை இருக்கிறது. ஆற்றின் நடுவில் இது நீடிக்க முடியாது
–subham–
Tags –ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற, கோவில்கள் -38, பூமிக்கடியில், சிவன் கோவில் , நெல்லூர்