அந்தர்வேதி, அரசவல்லி, முரமல்ல கோவில்கள்- 39 (Post.13,788)


Antarvedi Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,788

Date uploaded in London – 17 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அந்தர்வேதி ஸ்ரீ லெட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் -39

ஆந்திர பிரதேசத்தின் 108 புகழ்மிகு கோவில்கள் 39 

அந்தர்வேதி ஸ்ரீ லெட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்,  ஆந்திர பிரதேசத்தில் அமலாபுரத்திலிருந்து 65 கி.மீ, ராஜமஹேந்திரவாரத்திலிருந்து 100 கி.மீ காகிநாடாவிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது; வசிஷ்ட நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

Sri Lakshmi Narasimha Swamy Vari Devasthanam, Antharvedi

வசிஷ்ட நதி என்பது கோதாவரியின் கிளை நதி. இந்த ஆறு கடலில் கலக்கும் இடம் என்பதால் அந்தர்வேதிக்குக் கூடுதல் சிறப்பு.

இது இருக்கும்  மாவட்டம் கோணஸீமா மாவட்டம்.

வசிஷ்ட சேவாஸ்ரமம் இங்கே இருக்கிறது; நீலகண்டேஸ்வரர் என்ற சிவன் கோவிலும் இருக்கும் இடம் இது

கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகால வரலாறு உடையது கோவிலில் உள்ள தெலுங்கு மொழிக்கு கல்வெட்டு ஒரு குறுநில மன்னர் செய்த முதல் சுவர் பணியைக் குறிப்பிடுகிறது.

இங்கிருந்து படகு மூலம் எதிர்க்கரையிலுள்ள புதிய கோவில்களுக்கும் செல்லலாம். படகு சர்வேஸ் பயணிகளை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வசதிகள் உள்ளன.

கோவிலின் சிறப்பு

நவதா லோகபால மாலிக என்பவர் தனது மகன்களுக்காக வேண்டி கோவில் மதபங்கள், மதில் சுவர் ஆகியவற்றை நிர்மாணித்ததை கல்வெட்டு கூறுகிறது இதன் காலம் 1823-ஆம் ஆண்டு. அவர் தன்னை அக்நி  குல க்ஷத்ரியர் என்றும் பல்லவ ராஜ வம்சம் என்றும் அறிவித்துள்ளார். மன்னரின் பெயர் கொப்பநதி கிருஷ்ணம்மா என்று தெரிகிறது . ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் தங்கம், ரத்தினக் கற்களையும் அவர் கோவிலுக்கு தானம் செய்த செய்தியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது 

முக்கிய திருவிழாக்கள் 

மாசி மாதம் கல்யாண உற்சவம் நரசிம்ம ஜெயந்தி . லிவிங்  இவை தவிர வெங்கடேஸ்வரா கல்யாணமும் நடக்கிறது.

****

அரசவல்லி சூர்யநாராயணர் கோவில்

SURYANARAYANA SWAMY TEMPLE, அரசவல்லி

ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசவல்லி கிராமத்தில் சூரிய பகவானுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஆண்டுக்கு இரண்டு முறை குறிப்பிட்ட நாளில் சூரிய நாராயணன் திருப்பாதங்களில் சூரிய கிரணங்கள் விழுவதாகும்.

அரசவல்லி சூரியநாராயணன் ஆலயத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு; இதைக் கட்டியமன்னனின் பெயர் கலிங்க மன்னர் தேவந்திர வர்மன். ஆலயமானது  ஒடிசா மாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரைக்கு அருகில் இருக்கிறது  மிகவும் சிதிலமடைந்த கோவில் 17 – 18-ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டு கீழைச் சாளுக்கியர் காலம் தொடங்கி கலிங்க, கங்க, விஜயநகர, ரெட்டி வம்சம் வரை பலரும் கோவிலை மேம்படுத்தியுள்ளனர் சாளுக்கிய அரசன் பீமன் கோவிலை எழுப்புவதில் முனைப்பு காட்டினார்.

வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது.  மூலவரான சூரிய தேவனின் கருவறையின் நான்கு மூலைகளில் சிறிய கோவில்கள் அமைந்துள்ளது. மேலும் கோவில் விமானத்திற்கும், மகா மண்டபத்திற்கு இடையே அந்தராளம் எனும் முற்ற வெளி அமைத்துக் கட்டப்பட்டது.

சூரியநாராயணருடன் அவரது மனைவியர் உஷா, சாயா, பத்மினி ஆகியோரையும் தரிசனம் செய்யலாம். சூரியபகவான் பயணம் செய்யும் தேரினை சாரதி/ ட்ரைவர் அருணன் செலுத்துகிறார். சிலைகள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலில் சிவன் நவக்ரஹ சந்நிதிகளும் இருக்கின்றன .

முக்கிய விழா -ரத சப்தமி; ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் ஒன்பது நாள் ரத உற்சவம் மிகவும் பெரிய திருவிழா.

கோவில் வரலாறு

அரசவல்லியில்  மக்களின் நன்மைக்காக காஸ்யப மகரிஷி சூர்ய நாராயணரைப் பிரதிஷ்டை செய்ததாக பத்மபுராணம் செப்பும். தேவேந்திர வர்மன் பற்றிய கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன. சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடத்தில் உள்ள தவறுகளைத் திருத்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  புலாஜி பந்துலு இதைச் செய்தார்

கோவிலின் மூர்த்தியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி விழும் நாட்கள் :

உத்தராயணத்தில் மார்ச் மாதம் 9-11 ஆம் தேதிகள்;

தஷிணானத்தில் அக்டோபர் மாதம் 1-3 ஆம் தேதிகள்

கோவிலின் முக்கிய நுழைவாயில் மூடப்பட்டிருந்தாலும் சூரிய கிரணம் விழும் முறையில் அற்புதமாக கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது

****

முரமல்லா வீரேஸ்வர சுவாமி கோவில்

SRI VEERESWARA SWAMY TEMPLE, MURAMALLA

அமலாபுரத்திலிருந்து 25 கிமீ ;

காக்கிநாடாவிலிருந்து 38 கிமீ ;

ராஜா முந்திரியிலிருந்து 105  கிமீ  தொலைவில் இருக்கிறது.

இங்கேயுள்ள  வீரபத்ர சுவாமி பத்ரகாளியுடன் காட்சி தருகிறார். திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டி இந்தக் கோவிலுக்கு வருகின்றனர்.

கெளதமி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்த கோவில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது

–SUBHAM–

TAGS-  ஆந்திர பிரதேச, கோவில்கள், PART 39, அந்தர்வேதி அரசவல்லி முரமல்ல Antarvedi, Arasavalli, Muramalla, temples

Leave a comment

Leave a comment