கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? உலகெங்கிலும் தமிழ்ப் பழமொழிகள் (Post.13,787)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,787

Date uploaded in London – 17 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலகெங்கிலும் தமிழ்ப் பழமொழிகள்- கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

What has the frog in the well to do with the news of the country ?

கிணற்றுத் தவளை பற்றிய பழமொழிகள் உலகம் முழுதும் பல மொழிகளில் இருக்கிறது; அதுமட்டுமல்ல. சுவாமி விவேகானந்தர் உலகம் புகழும் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதை நாம் அறிவோம். இரண்டாவது நாள், இந்தக் கிணற்றுத் தவளைக்  கதையைச் சொல்லி அவரவர் தங்கள் மதத்தை மட்டுமே அறிந்து பிதற்றுகின்றனர் என்றும்  விளக்கினார் . ஆக அவரது சொற்பொழிவு மூலம்  130 ஆண்டுகளுக்கு முன்னரே இது ஆங்கிலப்   பத்திரிக்கைகள் அனைத்திலும் மீண்டும் வந்தது.

சீனா ஜப்பான் உள்பட குறைந்தது 15 ஆசிய மொழிகளில் இருக்கிறது. இது பஞ்ச தந்திரக் கதைகள் மூலம் உலகம் முழுதும் பரவியிருக்க வேண்டும். இந்துமத நூல்களில் முதலில் பஞ்ச தந்திரக் கதைகளில் இது சம்ஸ்க்ருத ஸ்லோகமாக வருகிறது,

Yo na nirgatya nihsesham aalokayati medinim

Anekaascarya sampuurnaam sa narah kuupaadardurah

யோ ந நிர்கத்தய நிஸ்சேஷம் ஆலோக்யதி மேதினீம்

அநேகாஸ்சர்ய சம்பூர்ணாம் கி ச நரஹ கூபாதர்த்துரஹ

வீட்டை விட்டு வெளியே சென்று அற்புதங்கள் நிறைந்த இந்த உலகத்தைக் காணாதவன் கிணற்றுத் தவளை போன்றவனே .

மங்கோலிய மொழியில் இதை விரிவாகவே விளம்புவர் ,

கிணற்றுத் தவளைக்கு பெரிய சமுத்திரத்தின் அளவு தெரியாது

சமுத்திரத்  தவளைக்கு கிணற்றின் சிறிய அளவு தெரியாது

ஜப்பானிய மொழியில்,

செய்ய வா மொட்டே உமி நோ கேட்ருபெக சாறு

Seia wa motte umi no katarubekarazu, meaning

கிணற்றுத் தவளையிடம் மஹா சமுத்திரம் பற்றிப் பேசுவது வீண்

*****

விவேகானந்தர் சொன்ன கிணற்றுத் தவளை கதை

ஒரு கிணற்றில் ஒரு தவளை நீண்ட காலம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் கடலில் வசித்து வந்த ஒரு தவளை அந்தக் கிணற்றில் விழுந்தது. உடனே அந்தத் தவளையைப் பார்த்து ‘’நீ எங்கிருந்து வருகிறாய்?’’ என்று கேட்டது. ‘’நான் கடலில் இருந்து வருகிறேன்’’ என்று சொன்னவுடன் கடல் எவ்வளவு பெரியது என்று கேட்டது. அது மிகப் பெரியது என்று கடல் தவளை சொன்னது. கிணற்றுத் தவளை, அந்தக் கிணற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்குத் தாவியது. இவ்வளவு பெரிதாக இருக்குமா? என்று கேட்டது. கடல் தவளை, ‘’கடல் என்பது மிகப் பெரியது’’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை பழைய இடத்துக்குத் திரும்பித் தாண்டியது. இவ்வளவு பெரிதாக இருக்குமா? என்று கேட்டது.

கடல் தவளை, ‘’நீ என்ன முட்டாள் மாதிரி பேசுகிறாய்? கடல் மிக மிகப் பெரியது’’ என்று சொன்னது. உடனே என் கிணற்றை விடப் பெரியதாக ஒரு இடம் இருக்க முடியாது என்று சொல்லி அந்தத் தவளையைப் பொய்யன் என்று கூறி வெளியேறச் சொன்னது. இப்படித்தான் நாம் இருக்கிறோம். ஒவ்வொரு மதத்தினரும் கிணற்றுத் தவளையாக இருக்கிறோம். நான் இந்துக் கிணற்றிலும், கிறிஸ்தவர்கள் அவர்கள் கிணற்றிலும், முஸ்லீம்கள் அவர்கள் கிணற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரவர்கள் அவர்கள் கிணறே உலகம் என்றிருக்கிறோம். இந்தச் சிறிய உலகத்தின் தடைகளைத் தகர்த்தெறிய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய கடவுள் உதவட்டும்’’ என்றார் சுவாமி விவேகாநந்தர் 130 ஆண்டுகளுக்கு முன்.

*****

அப்பர் சொன்ன கிணற்றுத் தவளை கதை

இதையே நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் ஆமையாக உருவகித்துச் சொல்லுகிறார்.

அப்பர் சொன்ன கதை
மேலே உள்ள கதையில் தவளை என்பதற்குப் பதிலாக கடல் ஆமை, கிணற்று ஆமையைச் சந்தித்ததாக அப்பர் பாடிய பாடல் இதோ:


கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றால்போல்
பாவகாரிகள் பார்ப்பதரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே — (ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)

கிணற்றில் வசிக்கும் ஆமை, கடல் ஆமையைப் பார்த்து உன் கடல் இந்தக் கிணறு அளவுக்குப் பெரிதாக இருக்குமா? என்று கேட்டது போல பாவம் செய்வோருக்கு சிவனுடைய பெரிய தன்மையை அறிய முடியாது.

சீனாவில் அப்பர் சொன்னகதை

கிணற்றுத் தவளை குறித்து அப்பர் பெருமான் சொன்ன கதை சீனாவிலும் உள்ளது!

கிணற்றுக்கு அடியில் வசித்த ஒரு தவளை அதுதான் உலகம் என்று நினைத்து பரம திருப்தியுடன் வாழ்ந்தது . ஒரு நாள் ஒருஆமை கடலிலிருந்து வந்து அதைச் சந்தித்தது. கடல் வாழ்க்கை எவ்வளவு அருமையானது என்று ஆமை விளக்கியது; அதைக் கேட்ட தவளை மவுனமானது ; இது சீனக்ககத்தை.

****

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? என்ற பழமொழியும் உலகம் முழுதும் இருக்கிறது

Can clapping be effected by one hand ?

இந்தப் பழமொழியும் பஞ்ச தந்திரக் கதை ஸ்லோகத்தில் இருக்கிறது

யதைகேன ந ஹஸ்தேன தாலிகா ஸம்ப்ரபத்யதே  

ததோத்தம பரித்யக்தம் ந பலம் கர்மணஹ ஸ்ம்ருதம் 

यथैकेन न हस्तेन तालिका संप्रपद्यते ।

तथोद्यम-परित्यक्तं न फलं कर्मणः स्मृतम् ॥

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புவதில்லை[  ஒரு வினை செய்யாமல் அதற்கான பலன் வருவதில்லை.

அதாவது தீதும் நன்றும் பிறர் தர வாரா .

நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்வதுதான்.

****

இது குறைந்தது 21 ஆசிய மொழிகளில் இருக்கிறது

ஜப்பானிய மொழியில்

In Japanese,

Kosho narashi gatashi meaning one hand can hardly clap.

கோஷா நராசி கடாஷி என்பார்கள் ; ஒருகையினால் சப்தம் எழுப்ப முடியாது என்பது இதன் பொருள்

ஜெர்மன் மொழியில்

Mit einer hand allein kann man nicht klatschen

ஹிந்துஸ்தானியில்

एक हाथ से ताली नहीं बजती • (ek hāth se tālī nahī̃ bajtī) (Urdu spelling ایک ہاتھ سے تالی نہیں بجتی)

ஓரு கையினால் ஒலி எழுப்ப முடியாது; இருவர் இருந்தால்தான் சண்டை என்பது இதன் பொருள்

“one cannot clap with just one hand”: it takes two to make a quarrel.

ஜப்பானிலும் கணவன் மனைவி சண்டை வந்தால் இதைச் சொல்லி ஒருவர் மட்டும் காரணமில்லை என்று தீர்மானிக்கிறார்கள்.

–subham—

Tags-கிணற்றுத் தவளைக்கு, நாட்டு வளப்பம் ஏன்? உலகெங்கிலும்,  தமிழ்ப் பழமொழிகள் , ஒரு கை தட்டினால் , Japanese, German Proverbs, Tamil, பஞ்ச தந்திரக் கதை

Leave a comment

Leave a comment