ரிக்வேதத்தை ஆராய்ந்த பிரெடெரிக் ரோசன் (Post No.13,791)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,791

Date uploaded in London – 18 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக்வேதத்தை ஆராய்ந்த பிரெடெரிக் ரோசன்

ரிக் வேத சம்ஹிதை முழுவதையும் மொழிபெயர்த்து பெரிய சாதனை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி, முதல் மண்டலத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த ஜெர்மானிய அறிஞர் , பிரெடெரிக் ரோசன் முப்பத்திரண்டு வயதில் இறந்ததால் அவரது கனவு நிறைவேறவில்லை. ஆயினும் ஜெர்மனியில் ஹனோவரில் பிறந்து லைப்சிக் பல்கலைக் கழகம், பாரிஸ் முதலிய இடங்களில் சம்ஸ்க்ருதம், அராபிக்,பாரசீகம், ஹிந்துஸ்தானி மொழிகளைக் கற்று லண்டனில் வேலை பார்த்து, இண்டாலஜி – இந்தியவியலில் — ஒரு சிறப்பிடம் பெற்றார்.

FRIEDRICH BALLHORN ROSEN   1805-1837

பிறந்த தேதி -2-9-1805

பிறந்த  ஊர் –  HANOVER

இறந்த தேதி – 12-9-1837

கல்வி கற்ற இடம் –LEIPZIG UNIVERSITY, AND PARIS  

அவரது குரு  FRANZ  BOPP பிரான்ஸ் பாப் AND SILVESTRE  DE SAZY

பார்த்த வேலைகள் – UNIVERSITY COLLEGE, LONDON சம்ஸ்க்ருத பேராசிரியர்.

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

SANSKRIT ROOTS IN ALPHABETICAL ORDER WITH EXAMPLES

RIGVEDA SPECIMEN

THE HINDOOS

EDITED BENGALI AND SANSKRIT DICTIONARY

EDITED THE ALGEBRA OF MOHAMMED BEN MUSA

BOOK ON INDIAN LAW

LATIN TRASLATION OF RIG VEDA, FIRST BOOK

ரோசன் செய்த பணிகள் பிற்காலத்தில் வந்த மாக்ஸ்முல்லர் முதலியோருக்கு முன்னோடியாக அமைந்தது.

சட்டத்துறையில் வல்லுனரான தந்தையிடம் முதலில் கற்று, காட்டிங்கன், லைப்சிக் நகரங்களில் உயர் கல்வி பெற்றார். . தந்தை வீட்டுக்குச் சென்ற பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் ஆர்வம் ஏற்பட்டு, குழந்தைகளுடன் மஹாபாரதத்தைப் படித்தார்.

பின்னர் பிரான்ஸ் பாப், சில்வஸ்டர் சசி ஆகியோரைச் சந்தித்து ஸம்ஸ்க்ருத இலக்கணத்  துறையில் புகுந்தார். ஸம்ஸ்க்ருத வேர்ச் சொற்களை அகர வரிசையில் தொகுத்து எடுத்துக் காட்டுகளையும் கொடுத்தார் .

லண்டனுக்கு வந்து யூனிவர்சிட்டி காலேஜில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

சம்ஸ்க்ருதம் கற்றவுடன் வேதங்களை படித்தால்தான் அந்த மொழியின் மஹிமை புரியும் என்று கருதி இலக்கணத்தை விட்டு வேதக் கல்வியில் நுழைந்தார். சாயன பாஷ்யம் , பாணினியின் வியாகரணம், யாஸ்கரின் மொழியியல் நூல்/ நிருக்தம்  ஆகியவற்றின் துணையுடன் ரிக்வேதத்தை மொழிபெயர்க்கத் துவங்கினார். பேராசிரியர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு ஜெர்மன் மொழியைக் கற்பித்து பொருள் ஈட்டினார். ஏற்கனவே வெளியான இந்துக்கள் THE HINDOOS , வங்காளி- சம்ஸ்க்ருத அகராதி, முகமது மூஸாவின் அல்ஜீப்ரா முதலிய நூல்களை எடிட் செய்து– முறையாகத் தொகுத்து- வெளியிட்டார் கோல்ப்ரூக் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டார். பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்த சிரியாக் மொழி சுவடிகளின் அட்டவணையைத் தயாரித்துக் கொடுத்தார் . இவரது சில நூல்களும் கட்டுரைகளும் அச்சில் ஏறவில்லை  ரிக்வேதத்தின் முதல் மண்டல லத்தீன் மொழி நூல் மட்டும் 1968 ல் வெளியானது நாலாவது மண்டலத்துக்கு நோட்ஸ்- குறிப்புகள் – எழுதி தயாராக இருந்த நிலையில் உயிர் நீத்தார் . இது இந்தியவியல் துறைக்கு பெரும் இழப்பு.

****

.

சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தை ஆராய்ந்த ஹென்றிச் எவால்டு

.

சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தை ஆராய்ந்த ஹென்றிச்  எவால்டு

ஏழு பேராசிரியர் டிஸ்மிஸ்

ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஹென்றிச்  எவால்டு அரசியலில் ஈடுபட்டதால் மேலும் ஆறு பேராசிரியர்களுடன் காட்டிங்கன் பல்கலைக்கழத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர் பைபிளையும், இஸ்ரேல் வரலாற்றையும், எபிரேய மொழி இலக்கணத்தையும் எழுதி புகழ்பெற்றார். ஹனோவர் நகரில் அரசியல் சட்ட நீக்கத்தை எதிர்த்து கையெழுத்திட்டதால் காட்டிங்கன் எழுவர் GOTTINGEN SEVEN டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பின்னர் அவர் ட்யூபங்கன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றார்.

ஹனோவர் ராஜாவுக்கும் பிரஷ்யா ராஜாவுக்கும் ஏற்பட்ட மோதலில் இவர் ஹனோவருக்கு ஆதரவு தெரிவித்ததால் சொற்பொழிவு ஆற்றும் உரிமைகளை இழந்தார்

ஸ ம்ஸ்க்ருத மொழியின் பழைய யாப்பிலக்கணம், காளிதாசரின் ஸ்ருதபோத நூலின் யாப்பு, சாதகப் பறவை மீதான  கவிதை, பரனுப் BURNOUF சுவடிகளின்படி பாகவத புராணம் என்பது இவரது கட்டுரைகள். அனைத்தும் கீழ்த்திசை ஆய்வுப் பத்திரிகையில் வெளியானது

GEORG HEINRICH AUGUST EWALD 1803-1875  

பிறந்த தேதி -16-11-1803

பிறந்த  ஊர் –  GOTTINGEN

இறந்த தேதி – 4-5-1875

கல்வி கற்ற இடம் – GOTTINGEN UNIVERSITY

பார்த்த வேலைகள் – TUEBINGEN UNIVERSITY பேராசிரியர்.

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

HEBREW GRAMMAR,

HISTORY OF ISRAEL

INDIAN MANUSCRIPTS IN TUEBINGEN UNIVERSITY LIBRARY

KALIDASA’S SHRUTABODHA

INDIAN POEM ON THE CATAKA BIRD

BHAGAVATA PURANA

பிரஷ்ய அரசுக்கு எதிராக அவதூறு கற்பித்ததாக, இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆயினும் இவர் இஸ்ரேல், பைபிள், ஹீப்ரு முதலிய துறைகளில் செய்த ஆய்வுகள் இவருக்குச் சிறப்பிடம் பெற்றுத் தந்தன.

–SBHAM—

TAGS- ரிக் வேத சம்ஹிதை, பிரெடெரிக் ரோசன், யாப்பிலக்கணம் , ஹென்றிச் எவால்டு, GEORG HEINRICH AUGUST EWALD, FRIEDRICH BALLHORN ROSEN  

Leave a comment

Leave a comment