Post No. 13,797
Date uploaded in London – 20 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—16
கிரகணங்கள், சகுனங்கள் –ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -16
ஆந்தைக ள் அலறல் தீய சகுனம் என்று ஷேக்ஸ்பியர் , ரோமானியர்கள் (இத்தாலியர்கள்) , இந்துக்கள் சொன்னதை முந்திய பகுதியில் கண்டோம். ஆங்கிலக் கட்டுரையில் மேலும் பல எடுத்துக் காட்டுக்களைக் கொடுத்துள்ளேன்.
கிரகங்கள் பற்றியும் ஷேக்ஸ்பியர் அபாயச் சங்கு ஊதியிருக்கிறார்.
ராகு கேது கிரகங்களை சாயா கிரகங்கள்/ நிழல் கிரகங்கள் என்று இந்துக்கள் அழைத்தனர். இதனால் நிழல்கள்தான் கிரகணங்களை உண்டாக்குகின்றன என்பதை இந்துக்கள் அறிந்ததோடுமல்லாமல் சரியான கணக்குகள் மூலம் எப்போது சூரிய கிரகணம் எப்போது சந்திர கிரகணம் என்பதையும் பஞ்சாங்கத்தில் வெளியிட்டனர். இது ரிக் வேத காலம் முதல் நடந்து வருவதை ரிக்வேதத்தில் உள்ள அத்ரி மஹரிஷி ( Rig Veda Hymn 5. 40 ) துதி காட்டுகிறது மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்கு கிருஷ்ணர் அன்று நடந்த சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தினார் என்பதையும் மஹாபாரதம் காட்டுகிறது .
இதோ ஷேக்ஸ்பியர் வசனங்கள்:
ஐரோப்பா முழுவதும் இந்துக்களின் நம்பிக்கைகள் நிலவியதை இதில் காணலாம்.
A mote it is to trouble the mind’s eye.
In the most high and palmy state of Rome,
A little ere the mightiest Julius fell,
The graves stood tenantless, and the sheeted dead
Did squeak and gibber in the Roman streets;
As stars with trains of fire and dews of blood,
Disasters in the sun; and the moist star,
Upon whose influence Neptune’s empire stands,
Was sick almost to doomsday with eclipse.— Hamlet
ஜூலியஸ் சீசரை 70 எம்.பிக்கள். ஒன்று கூடி ரோம் நகர பார்லிமென்டில் (செனட்டில்) படுகொலை செய்வதற்கு முன்னர் சூரிய ,சந்திர கிரகணங்கள் ஏற்பட்டன. பேய்கள் தோன்றின; எங்கும் ரத்த சுவடுகள் ஏற்பட்டன என்று ஹாம்லெட் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் வருணிக்கிறார்.
மஹாபாரதப் போருக்கு முன்னால், வானத்திலென்ன என்ன தோன்றின என்பதை மகாபாரதமும் இப்படி வருணிக்கிறது. காளிதாசனும் மன்னர் இல்லாதபோது (அராஜகம்- ராஜா இல்லாத நாடு) என்ன என்ன நடந்தது என்பதை இப்படி வருணிக்கிறார். நகரத்தின் தெருவில் நரிகள் ஊளையிட்டுத் திரிந்தனவாம்.
****
ஓநாய்கள் சூரியனை சாப்பிடுகின்றன என்று கிரகணங்களை வைகிங் இன மக்கள் வருணித்தனர் கிரகணம் ஏற்பட்டால் மன்னர்கள் மரணம் சம்பவிக்கும் என்று சீனர்கள் எழுதி வைத்துள்ளனர். கிரகணங்கள் கடவுளின் கோபத்தைக் காட்டுகின்றன; மனித இனத்தை அவர் அழிக்கப்போகிறார் என்று கிரேக்கர்கள் புலம்பியுள்ளனர்.
****
“These late eclipses in the sun and moon portend no good to us” is a line from King Lear by William Shakespeare.
கிங் லியர் நாடகத்தில் அகாலத்தில் ஏற்பட்ட கிரகணங்கள் குறித்த வரிகள் தீய சகுனங்கள் என்ற வசனம் இருக்கிறது.
*****
ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனா படுகொலைக்கு கிரகணமும் சந்திரனும்தான் கா ரணம் என்ற வரிகள் வருகின்றன
Methinks it should be now a huge eclipse
Of sun and moon, and that the affrighted globe
Should yawn at alteration.
It is the very error of the moon,
She comes more near the earth than she as wont,
And makes men mad.
சந்திரன் கடலைப்பொங்க வைப்பது போல மன எழுச்சியையும் உண்டாக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் அஷ்டமி நவமி, அமாவாசை பெளர்ணமி, பிரதமை நாட்களில் வேத வகுப்புகளை நடத்த மாட்டார்கள். ரிக்வேத புருஷசூக்த துதியும் நிலவையும் மனதையும் சம்பந்தப்படுத்திப் பாடுகின்றது.
****
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள்
தமிழில் ௭ழுபது செட்டியார்களை நீலி என்ற பெண் பேய் கொன்றதை எல்லோரும் அறிவர். நிறைய தமிழ்ப் பாடல்களிலும் பழமொழிகளிலும் நீலி பேய் வருகிறது; ஞான சம்பந்தர், திருமூலர் ஆகியோரும் நீலி பேயைக் குறிப்பிடுகின்றனர் (இது பற்றி நான் எழுதிய புத்தகம் அச்சு வடிவிலும் e – புஸ்தக வடிவிலும் கிடைக்கும்)
ஆயினும் Bishop கால்டுவெல் போன்ற விஷமிகள், நாடார்களை பேய்களை வணங்குவோர் என்று விஷப் பிரசாரம் செய்து எழுத்து வடிவில் எழுதியும் வைத்துள்ளனர் நாம் நடு கற்களுக்கும் (Hero Stones) முன்னோர்களுக்கும் (Departed Souls) செலுத்தும் வணக்கத்தை அந்த விஷமிகள் மதப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினர் .
ஷேக்ஸ்பியர் ஐரோப்பாவில் நிலவிய நம்பிக்கையைக் கொடுக்கிறார்
கிங் லியர் , ஹாம்லெட், மூன்றாம் ரிச்சர்ட், ஜுவலியஸ் சீசர் நாடகங்களில் பேய்கள் பற்றிய வசனங்களைக் காணலாம்
In King Lear, Shakespeare says,
Unsepulchred they roamed and shrieked, each wandering ghost”.
தூக்கத்தில் இறந்தோரின் ஆவிகளைக் கண்டது பற்றி ரிச்சர்ட் நாடகத்தில் சொல்கிறார். தசரதன் போன்றோர் நேரில் ராமன் முன்னர் தோன்றியதை வால்மீகி நமக்குக் காட்டுகிறார்
மாக்பெத் நாடகத்திலும் பேய்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஷேக்ஸ்பியர் .
அகாலத்தில் (Untimely Deaths) இறந்தோர், கொலை செய்யப்பட்டோர்தான் பேய்களாகத் திரிவர் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஷேக்ஸ்பியர் படம்பிடித்துக் காட்டுகிறார் கொலைகள் பற்றி வரும் நடங்கங்களில் மட்டும் அவர் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.
இவைகள் அனைத்திலும் கொஞ்சம் உண்மைகள் இருக்கின்றன என்பதை இந்துமத நூல்கள் மட்டுமே காட்டுகின்றன.
கிரகண காலத்தில் மன்னரின் நட்சத்திரத்திலோ நம்முடைய நட்சத்திரத்திலோ அது ஏற்பட்டால்தான் பாதிப்பு என்பதை வராஹ மிகிரர் பிருஹத் சம்ஹிதா நூலில் மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறார். அனைத்து ஸ்லோகங்களும் கட்டுரையின் ஆங்கிலப்ப பகுதியில் உள்னன. விஸ்டம்லைப்ரரி வெப்சைட்டில் அவைகளை இலவமாகப் பெறலாம்.
அந்தக் காலத்தில் எங்கள் வீட்டு வாத்தியார்/ பிராமண புரோகிதர் கிரகணம் பீடிக்கும் நட்சத்திரங்களில் பிறந்தோருக்கு ஒரு ஓலையில் சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை எழுதி அதை எங்கள் தலையில் கட்டுவார் ; இதனால் மன ரீதியில் நமக்கு அச்சங்கள் விலகி நமபிக்கை ஏற்பாடும். மேலும் ஜாதகத்தில் அந்த கிரகம் பலம் இழந்ததாக இருந்தால்தான் ஆபத்து. இவையெல்லாம் மேலை நாட்டினருக்குத் தெரியாது வரஹமிகிரர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இவைகளை எழுதி வைத்தார்; ஷேக்ஸ்பியரை நமக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதினார்; அதற்குள் அவர்களுக்கு முந்தைய அறிவு மழுங்கிவிட்டது.
Purananuru 174 in Sangam Tamil literature explains the solar eclipse that happened in first century BCE. The poet says the demons hid the sun
புறநானுற்றுப் பாடல் 174-ல் ஸூரிய கிரகணம் பற்றித் தமிழ்ப்புலவர் பாடியிருக்கிறார்
வராஹமிஹிரர் 98 பாடல்களில் கிரகணம் பற்றி சம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார்
வராமிகிரர் எழுதியதன் சாராம்சம் :
கிரஹணம் பீடிக்கும் லக்கினம் எது , நட்சத்ரம் எது? பலவீனமானது எது? என்பதைப் பொருத்தே பாதிப்பு இருக்கும் இந்த விஷயத்தில் ஒருவரின் ஜாதகத்தையும் அறிந்தால்தான் துல்லியமான பலனைச் சொல்ல இயலும்.
தானங்கள், தர்ப்பணங்கள் மூலம் கெட்ட பலன்களைத் தவிர்க்கலாம்.
ஜபங்கள் , நாம ஜபம் ஆகியனவும் உதவும்; என்ன என்ன தானங்கள் என்பதையும் உரைகாரர்கள் விளக்குகிறார்கள் .
கிரகணம் ஆரம்பிக்கும்போதும் முடியும் போதும் ஸ்நானம் செய்ய வேண்டும். கோவில்களும் அந்த நேரத்தில் சார்த்தப்பட்டிருக்கும் . வேத மந்திரங்களை, காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கலாம்
–subham—
Tags-தமிழ்,சம்ஸ்க்ருத நூல்கள், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 16,
கிரகணங்கள், சகுனங்கள் , part 16, வராஹமிகிரர், பிருஹத் சம்ஹிதா, நாடகங்களில் பேய்கள், நீலி பேய்