Post No. 13.796
Date uploaded in London – —20 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (14)
ராமாயணத்தில் வரங்கள் (14) பிரம்மா விஸ்வாமித்திரருக்கு வரம் அருளியது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் அறுபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷியானது” என்ற ஸர்க்கம்.
சதானந்த மஹரிஷி ஶ்ரீ ராமருக்கு விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷியான வரலாற்றை ஜனக சபையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
க்ஷத்ரிய பலத்தை விட பிரம்ம பலம் அதிகம் என்பதை உணர்ந்த அரசரான விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷியாக வேண்டும் என்று கடும் தவத்தை மேற்கொண்டார்.
ஆயிர வருட காலம் உண்ணாமல் மௌன விரதத்தை மேற்கொண்டார்.
ஆயிரம் வருடங்கள் முடிந்த போது உண்ணுவதற்காக அன்னத்தை புசிக்கத் தொடங்கினார்.
அப்போது இந்திரன் பிராம்மண வேஷம் பூண்டு அவர் முன் தோன்றி இலையில் பரிமாறப்பட்டிருக்கும் அன்னத்தை யாசித்தார்.
உடனே விஸ்வாமித்திரர் அதை அந்த அந்தணருக்குக் கொடுத்து விட்டு மீண்டும் ஆயிர வருட காலம் தவம் மேற்கொண்டார்.
கடும் தவத்தால் தேவர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் பன்ன்கர்களும், உரகர்களுக் ராக்ஷஸர்களும் அவரது தவத் தீயினால் மூர்ச்சித்து ஒளி மங்கியவர்கள் ஆனார்கள்.
அவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் விரைந்து சென்று விஸ்வாமித்திரரை சந்துஷ்டராக ஆக்க வேண்டும் என்று வேண்டினர்.
அனைவரும் பிரம்மாவுடன் விஸ்வாமித்திரரிடம் வந்தனர்.
அவர்கள் முன்னிலையில் பிரம்மா விஸ்வாமித்திரரை நோக்கி இப்படிக் கூறினர்:
ப்ரஹ்ம்ர்ஷே ஸ்வாகம் தேஸ்து தபஸா ஸ்ம சுதோஷிதா: |
ப்ரஹ்மர்ஷே – பிரம்மரிஷியே
தே ஸ்வாகதம் – உமக்கு க்ஷேம
அஸ்து – உண்டாகட்டும்
தபஸா – தவத்தால்
சுதோஷிதா: ஸ்ம – மிகத் திருப்தி அடைந்தவர்களாக ஆனோம்
ப்ராஹ்மண்யம் தபஸோக்ரேண ப்ராப்தவானஸி கௌஸிக |
தீர்கமாயுஸ்ச தே ப்ரஹ்மாண்ததாமி சமருத்கண: |
ஸ்வாஸ்தி ப்ராப்துஹி பத்ரம் தே கச்ச சௌம்ய யதா சுகம் ||
கௌஸிக் – கௌஸிகரே
உக்ரேண – உக்கிரமான
தபஸா – தவத்தால்
ப்ராஹ்மண்யம் – பிராம்மணன் நிலையை
ப்ராப்தவான் அஸி – அடைந்து விட்டனை
ப்ரஹ்மண் – பிராம்மணரே
தே – உமக்கு
தீர்க – (தீர்க்கமான) நீடித்த
ஆயு: ச – ஆயுளையும்
சமருத்கண: – தேவகணங்களோடிருக்கிற நான்
ததாமி – வரமாய் கொடுக்கிறேன்
தே பத்ரம் – உம்முடைய மனோரதம் சித்தி பெற்றதாகிறது
ஸ்வஸ்தி – மன சந்துஷ்டியை
ப்ராப்துஹி – நீர் அடைவீராக
சௌம்ய – புண்யாத்மாவே
யதா சுகம் – இஷ்டமானபடி
கச்ச – சஞ்சரிப்பீராக
– பால காண்டம் 65-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 19,20 & 21
பிரம்மாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட விஸ்வாமித்திரர் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்.
உடனே பிரம்மாவை நோக்கி அவர் கூறினார்:
ப்ராஹ்மண்யம் யதி மே ப்ராப்தம் தீர்கமாயுஸ்ததைவா ச |
ஓங்காரோஸ்த வஷட்காரோ வேதாஸ்ச வரயந்து மாம் ||
தீர்க ஆயு: ச – தீர்க்க ஆயுளும்
ததா ஏவ – அவ்வண்ணமே
ப்ராஹ்மண்யம் – பிராம்மண்யமும்
மே – எனக்கு
ப்ராப்தம் – கிடைத்து விட்டது
யதி – என்கிற பக்ஷத்தில்
அத -அது காரணமாய்
ஓங்கார: ச – பிரணவமும்
வஷ்ட்கார: – வஷட்காரமும்
வேதா: ச – வேதங்களும்
மாம் – என்னை
வரயந்து – வரிக்கட்டும்
க்ஷத்ரவேதவிதாம் ஸ்ரேஷ்டோ ப்ரஹ்மவேதவிதாமபி |
ப்ரஹ்மபுற்றோ வஸிஷ்டோ மாமேவம் வதது தேவதா: ||
யத்யயம் ப்ரம: காம: க்ருதோ யாந்து சுரர்ஷபா: ||
தேவதா: – தேவதைகளே
க்ஷத்ரவேதவிதாம் – க்ஷத்திரியர்களுக்குரிய அதர்வ வேதத்தை அறிந்தவர்களுக்குள்ளும்
ப்ரஹ்மவேதவிதாம் – பிராம்மணர்களுக்கே உரிய த்ரயீ என்னும் வேத பாகங்களை அறிந்தவர்களுக்குள்ளும்
ஸ்ரேஷ்ட: – தலைமை பெற்று விளங்குகின்றவரும்
ப்ரஹ்ம புத்ர: – பிரம்மாவின் புதல்வருமான
வஸிஷ்ட; – வஸிஷ்டர்
மாம் – என்னைக் குறித்து
ஏவம் – இந்த விதமாக
வதது – சொல்ல வேண்டும்
அயம் – இந்த
பரம: – ஸர்வமுமாய்க் கொண்ட
காம: – மனோரதம்
க்ருத: யதி – ஈடேறி முடிந்ததுமே
சுரர்ஷபா: – தேவோத்தமர்கள்
யாந்து – திரும்பி எழுந்தருளலாம்
இப்படி விஸ்வாமித்திரர் கூறியவுடன் வசிஷ்டர், “ஏவம் அஸ்து” அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்.
ப்ரஹ்மர்ஷ்ஸ்த்வம் ந சந்தேஹ: சர்வம் சம்பத்ஸ்யதே தவ |
இத்யுக்த்வா தேவதாஸ்சாபி சர்வா ஜக்முர்யதாகதம் ||
த்வம் – நீர்
ப்ரஹ்மர்ஷி: ச – பிரம்ம ரிஷியே
சந்தேஹ: ந – ஸந்தேகம் இல்லை
தவ – உமக்கு
சர்வம் – எல்லாம்
சம்பத்ஸ்யதே – கைகூடினதாகும்
இதி – என்று
உக்த்வா – சொல்லி விட்டு
சர்வா: – எல்லா
தேவதா: அபி – தேவதைகளும்
யதாகதம் – வந்த வழியே
ஜக்மு – திரும்பிச் சென்றார்கள்.
– பால காண்டம் 65-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 22, 23 & 24
பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரும் மகிழ்ச்சியுடன் வசிஷ்டரை பூஜித்தார்.
**