Post No. 13,800
Date uploaded in London – 21 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம் பஸ்சாத் வைத்யஹ பவேத்சித்தஹ
ஆயிரம் பேரைக் கொன்ற பின்னரே ஒருவன் முழு டாக்டர் ஆகிறான்- ஸம்ஸ்க்ருதப் பழமொழி
*****
சீர்ஷே ஸர்ப்பஹ, தேசாந்தரே வைத்யஹ
தலைக்கு மேலே பாம்பு தொங்குகிறது, டாக்டரோ பல மைல்களுக்கு அப்பால் இருக்கிறார் .
*****
மதுரமபி பஹு காதிதம் அஜீர்ணம் பவதி
-சாருதத்த நாடகம்
இனிப்பான பண்டங்களும் கூட அதிகம் சாப்பிட்டால் அஜீரணத்தை உண்டாக்குகின்றன (எளிதில் செமிக்காது)
****
அதிபுக்தி அதி வோக்தி ஹி சத்யஹ ப்ராண அபஹாரிணீ
–சுபாஷித ரத்ன கண்ட மஞ்சுஷா
அதிகம் பேசுவதும் அதிகம் உண்ணுவதும் ஆயுளைக் குறைத்துவிடும்
****
பலந்தி வேதாஹா காலேசஷு புராணம் து ஏக மாசகே
சத்யப் பலதி காந்தர்வீ ஜ்யோதிர் வைத்ய நிரந்தரம்
வேதங்கள் உரிய சமயம் வரும்போது பலன் தரும்; புராணங்கள் ஒரு மாதத்தில் பலன் தரும்; சங்கீதம் உடனே பலன் தரும்; வைத்தியமும் ஜோதிடமும் எப்போதும் பலன் தரும்.
****
பதரீ பலானி ஸ்வாதூனி புபுக்ஷிதஸ்ய
பசித்தவனுக்கு புளிப்பான இலந்தைப் பழமும் சுவையானதே
****
புதாநபி க்ஷுதா பாததே
புத்திசாலிகளையும் பசி பலமிழக்கச் செய்துவிடும்/ பலவீனம் ஆக்கிவிடும்
****
அஜீரணே போஜனம் விஷம் -சாணக்கியனின் நீதி சாஸ்திரம்
அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;
****
சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்
ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.
****
சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:
ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்
(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)
அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)
****
சரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3
அறப்பணிகளை செய்வதற்கு ஆதாரமானது உடல் – குமார சம்பவம் , காளிதாசன்
சிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்த்தித்துச் சொல்கிறார்: உன் உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா? ஏனெனில் தர்ம காரியங்களைச் செய்வதற்கு மூலம் நம்முடைய உடல்தான்
ஒப்பிடுக
உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்– திருமந்திரம்,
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக--நாலாம் திருமுறை, தேவாரம், அப்பர்
****
புஷ்டிர்ஹி ப்ரதமா ரதிஹி – பழமொழி
நல்வாழ்வு கிடைப்பதே பெரும் பாக்யம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
*****
ஜகத்ஸ்யாத் உதாரதீனம்
உலகமே இந்த வயிற்றுக்கு அடிமை — ஸம்ஸ்க்ருதப் பழமொழி
ஒப்பிடுக
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.—ஒளவை, நல்வழி
துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; ) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; – ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.
*****
சரீரே அரிஹி பிரஹரதி ஹ்ருதயே ஸ்வஜனஸ்ததா
எதிரிகள் உடலை வருந்துகிறார்கள் ; அந்தக் காரகளவனில் ஹ்ருதயத்தைக் காயப்படுத்துகிறார்கள் – ப்ரதிமா நாடகம்
–subham—
Tags- சம்ஸ்க்ருதம், மருத்துவம், பொன்மொழிகள், பழமொழிகள்