உபநிஷத்துக்களை அச்சிட்ட எட்வர்ட் ரோயர் (Post No.13,803)


Picture of Eduard Roeer.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,803

Date uploaded in London – 22 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இந்தியாவில் 22 ஆண்டுகள் தங்கி முக்கிய உபநிஷத்துக்களை வெளியிட்ட ஜெர்மானிய அறிஞர் எட்வர்ட் ரோயர் (1805- 1866) EDUARD ROEER  தனது இறுதிக் காலத்தை ஜெர்மனியில் செலவிட்டார்.

மனித இனத்தின் உன்னத கருத்துக்களை இந்து மத உபநிஷத்துக்கள் வெளியிடுகின்றன. அவைகளுக்கு சங்கரர் எழுதிய பாஷ்யங்கள் மூன்று விஷயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்கிறார்:–

1.மிகப்பெரிய புலமை

2. பொறுமைமிக்க ஆராய்ச்சி

3.புராதன இந்துக்களின் தத்துவ ஞானம்

****

மாக்ஸ்முல்லருக்கு முன்னால் சுமார் நூறு அறிஞர்கள் உலகில் சம்ஸ்க்ருத நூல்களை பிரபலப்படுத்தினர். பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் சுதந்திரப்போரில் உயிர்நீத்த பின்னர் காந்திஜி எப்படி அந்தப் பெயரைத் தட்டிப்பறித்தாரோ அப்படி மாக்ஸ்முல்லரும் தட்டிப்பறித்தார். அவர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை; ஒரு இந்துவையும்  இந்தியாவில் நேரில் பார்த்ததும் இல்லை. ஏனையோர் செய்த பணிகள் இமய மலை என்றால்  மாக்ஸ்முல்லர் செய்த பணி ஒரு சிறிய குன்றுதான்.

எட்வார்ட் ரோயர் JOHANN HEINRICH EDUARD ROEER 1805-1866

தத்துவ ஆராய்ச்சியில் தனக்கென ஓரிடத்தை உண்டாக்கிக் கொண்டார்.

ஜோகன் ஹென்றிச் எட்வார்ட் ரோயர் பிரவுன்ஸ்வேய்க் நகரில் – 26-10-1805 ல் பிறந்தார். கோணிஸ்பிர்க்கில் கல்வி கற்றார். பெர்மின் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியர் பதவியை ஏற்றார் .

முதலில் மேலைநாட்டுத் தத்துவ ஞானிகள் பற்றி நான்கு ஆண்டுகள் படித்து ஸ்பினோசா முதலியோர் பற்றி நூல்களை எழுதினார்

பிரான்ஸ் பாப் என்ற அறிஞரிடம் சம்ஸ்க்ருதம் படித்தவுடன் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று துடியாயத் துடித்தார். இதற்காகாக கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து 1839-ல் கல்கத்தாவுக்குச் சென்றார் அங்கு ஆசிய கழகத்தின் நூலகத்தில் நூலகர் வேலை கிடைத்தது. அதன் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகளை எழுதினார்.

அவர் எழுதிய விஷயங்கள்:—

இந்திய – கிரேக்க அரசர்களின் வரலாறு;

பாஸ்கரரின் சித்தாந்த சிரோன்மணியின் லத்தீன் மொழிபெயர்ப்பு.

வானவியல் பகுதியை மட்டும் அவர் எடுத்துக் கொண்டார்;

சதானந்த பரிவ்ராஜகரின் வேதாந்த சாரம்;

வங்காளத்தின் ஆசிய கழகம் வெளியிட்ட பிப்லியோதீகா இண்டிகாவில் 33 சம்ஸ்க்ருத நூல்களை எடிட் செய்து — முறைப்படுத்தி — வெளியிட்டார்.

மாக்ஸ்முல்லர் ஆக்ஸ்போர்டில் இருந்து கொண்டு ரிக்வேதத்தை வெளியிடப்போவதை அறியாமலேயே இவர் ரிக்வேத முதல் பகுதியை 1849-ல் வெளியிட்டார். இது மாதவாசார்யா பாஷ்யத்துடன் ஆங்கிலத்தில்  வெளியானது.

ரோயருடைய அறிவுரையை ஏற்ற வாங்க ஆசியாட்டிக் சொசைட்டி Asiatic Society of Bengal  உபநிஷத்துக்களை அச்சிட ஒப்புக்கொண்டது . ஆதிசங்கரர்  பாஷ்யத்துடன் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து சம்ஸ்க்ருதம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றைப் புகழ்ந்து வீபருக்குக் Weber கடிதம் எழுதினார்.

அவர் பிப்லியோதீகா இந்தியா ஜர்னலில் வெளியிட்ட  உபநிஷத்துகளும், ஆண்டுகளும்  பின்வருமாறு :–

பிருகத் ஆரண்யக உபநிஷத்-1849

சாந்தோக்ய உபநிஷத்-1850

தைத்ரீய உபநிஷத்- 1850

ஸ்வேதஸ்வதார, ஈஸா, கேன, கடோ, ப்ரஸ்ன முண்டக, மாண்டூக்ய உபநிஷத்துக்கள்.-1850 reprinted in 1980

ஏனைய உபநிஷத்துக்கள்.-1853

பின்னர் நியாய சாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார். அவர் எழுகியதை ஜெ ஆர் பல்லாண்டைன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஈ பி கோவில் என்பவருடன் சேர்ந்து கிருஷ்ண யஜுர் வேதத்தையும் வெளியிட்டார்.

ஷேக்ஸ்பியர் கதைகளை வங்காள மொழியில் வெளியிட்டார்.

தர்ம சாஸ்திரம் என்ற நூலில் யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியையும் வெளியிட்டார்.

EDUARD ROEER 1805- 1866

பிறந்த தேதி -26-10-1805

பிறந்த  ஊர் –  BRAUNSCHWEIG

இறந்த தேதி – 17-3-1866

கல்வி கற்ற இடம் – KOENIGSBERG UNIVERSITY

அவரது குரு  FRANZ  BOPP பிரான்ஸ் பாப்

பார்த்த வேலைகள் – BERLIN UNIVERSITY   பேராசிரியர். EAST INDIA COMPANY LIBRARIAN IN CALCUTTA

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

BOOKS ON PHILOSOPHY, ALL UPANISHADS, YAJNAVALKYA SMRITI, VAISHEKA SASTRA OF KANADA

22 ஆண்டுகள் இந்தியாவில் தங்கிய ரோயர் உடல் நலம் குன்றியதால் – 1861-ல் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டார்.

அங்கு ஐந்து ஆண்டுகளில் வைசேஷிக தத்துவம் பற்றி நூல் எழுதினார் ; சொந்த ஊரான பிரவுன்சவைக்கில் 17-3-1866- ல் இறந்தார். அவர் இறந்த பின்னர் வைசேஷிக தத்துவ நூலை ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டி வெளியிட்டது.

Picture of Friedrich Rosen (picture for the earlierr post)

—subham—

Tags–எட்வர்ட் ரோயர், JOHANN HEINRICH EDUARD ROEER ,1805-1866, உபநிஷத்துக்கள், ஜெர்மானிய அறிஞர், வைசேஷிக தத்துவம், நியாய சாஸ்திரம், தத்துவ, ஆராய்ச்சி

Leave a comment

Leave a comment