குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,819

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-41

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

குடிமல்லம் என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தில் ரேணிகுண்டா அருகில் இருக்கிறது . சுவர்ணமுகி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த சிறிய கிராமம் இருக்கிறது . எப்படி சிந்து சரஸ்வதி நாகரீகம் பற்றிப் பலர் புரளியை கிளப்பிவிட்டு அதன் எழுத்தைக் கண்டுபிடிக்காமற் செய்தனரோ அதைப் போலவே இங்குள்ள லிங்கம் போன்ற உருவம் பற்றியும் பல கதைகளை எட்டுக்கட்டியுள்ளனர் அரைவேக்காட்டுப் பேர்வழிகள்.

இங்குள்ள லிங்க உருவம் காலத்தால் மிகப் பிந்தியது. அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சொறிகள் இதற்கு 700 ஆண்டுக் காலம் கற்பித்துள்ளனர். அதாவது காளிதாசனை 700 ஆண்டுகள் ரேஞ்சில் வைத்தது போல இதற்கும் காலம்; அதிலிருந்தே இவைகள் செய்வது சநதேகத்துக்கு உரியதாகின்றது. யாருக்குமே தெரியாத இந்த லிங்க உருவம் ஆண்குறி போல உள்ளதால்  வெள்ளைக்காரர்களுக்கு மகா சந்தோசம். பிரிட்டன் அமெரிக்கா முதலிய     நாடுகளில்,  இந்துக்கள் படிக்கும் புஸ்தகங்களில் இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்கள் என்று எழுதியுள்ளது ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அப்பர்  சம்பந்தர் சுந்தரரும் அப்படிச் சொல்லவில்லை சிவனுக்கு அடி, முடி கிடையாது உருவமற்றவர் என்ற பொருளில் லிங்கம் வணங்கப்படுகிறது.

எனது மகன் லண்டனில் பள்ளியில் இந்துமதம் என்பதை பாடமாக எடுத்துக்கொண்டான். அப்பா இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்களென்று சிவலிங்கம் பற்றி என் வாத்தியார் சொன்னார். அது உண்மையா? என்று கேட்டான். இல்லை ; இறைவன் அருவமும் உருவமும் உடையவன் என்பதற்கு லிங்கம் அருவம் என்பதன் படைப்பு. இதை ஆண்குறி என்று இந்தத் சைவரும் பாடவில்லை என்றேன். வாத்தியாரிடம் போய்ச் சொன்னான். நீ விரும்பியதை எழுதலாம்; ஆனால் ஆண்குறி என்று எழுதாவிடில்  உனக்கு மார்க் போட மாட்டோம் என்றார் வாத்தியார். அவன் என்னிடம் சொன்னபோது புஸ்தகத்தில் உள்ளது போல எழுதி மார்க் வாங்கு; ஆனால் உண்மை இது என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரை மூலம் காட்டு என்று ங்கிலத்தில் பாரதீய வித்யா பவன் வெளியிட்ட காஞ்சி சுவாமிகளின் ஆங்கிலப் பேருரை மொழிபெயர்ப்பைக் கொடுத்தேன்.

****

குடிமல்லம் பற்றிய ‘கப்ஸா’க்களை முதலில் வெடிவைத்துத் தகர்ப்போம்.

இந்த ஊரின் பெயர் குடிமல்லம் என்று எந்தக் கல்வெட்டிலும் இல்லை. இங்குள்ள பழைய கல்வெட்டுகள் பல்லவர்களின் காலத்தியது . அதாவது தந்திவிக்ரம வர்மன் காலம்.

ராமேஸ்வரத்தில் சிவனை ராமர் வணங்கியதால் ராமேஸ்வரம் என்ற தலம் வந்தது; நால்வரில் சிலரால் பாடப்பெற்றது

இங்குள்ள கோவிலுக்கு பரசுராமேச்வரம் என்ற பெயர் வரலாற்றிலோ இதிஹாச புராணத்திலோ இல்லை.

இங்குள்ள வேடன் கையில் பரசு இருக்கிறது அவ்வளவுதான்.

(சிவன் கையிலுள்ள ஆயுதங்கள்: மழு – கோடாரி போன்ற அமைப்பினை உடையது).

அந்த வேடனுக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராலும் விளக்க முடியவில்லை. ஏனெனில் சிவனை ( லிங்கம் ) குடைந்து வேடன் உருவம் வடிக்கப்பட்டுள்ளது; அவனை சிவன் என்று சொல்லுவோர் முகத்தில் கரியைப் பூசிக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர் கையில் ஆடு இருக்கிறது தோளில் பரசு இருக்கிறது ; அவருக்குப் பூணுல் இல்லை. மூன்று கண் இல்லை உடுக்கை  யில்லை; லிங்கத்துக்கு யோனி என்னும் பீடமும் இல்லை  இது முடிக்கப்படாத அரை குறை  சிலையோ?

மேலும் அருகிலுள்ள காளஹஸ்தியை சிவனடியார்கள் பாடினார்கள்; ஸ்ரீசைலத்தைப் பாடினார்கள்;.இந்த இடத்தை எந்தச் சிவனடியாரும் பாடவில்லை ஏன்? ஆகவே சிவன் இல்லை!

லிங்கம் என்ற சொல்லே திருமூலர் காலம் முதல்தான் பிரபலமானது அதற்கு முன் லிங்கத்தையும் சிவன் என்றே அடியார்கள் பாடினர். 650 [பாடல்கலைக்கப்ப பாடிய மாணிக்கவாசகரோ லிங்கம் என்பதைக் குறிப்பிடவில்லை அவர் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முந்தியவர்.; அப்பர் சம்பந்தர் போன்றோர் அரிதாகவே லிங்கத்தைக் குறிப்பிட்டனர்.

இந்த மாதிரி ஆண்குறி லிங்கம் எங்குமில்லை; பாடப்படவும் இல்லை. “அங்குள்ளது இங்குள்ளது”  என்று கூறியோர் அந்தப் படததைக் காட்டி ஒப்பிடவுமில்லை அதாவது அப்படி இல்லவே இல்லை.

லிங்கத்தில் உள்ள வேடன் கண்ணப்ப நாயனார் ஆக இருக்கலாம். அவன்தான் கையில் மாமிசத்துடன் வந்து வணங்கிய ஒரே நாயன்மார்.

லிங்கத்தின் உயரம் ஐந்து அடி சிவலிங்கம் என்றால் கீழே பீடம் இருக்கவேண்டும். யோனி என்பார்கள் ; அது இங்கே இல்லை.  எந்தக் கூமுட்டை சிற்பி யோனி இல்லாமல் லிங்கத்தை வடிப்   பான்? இது சிவனே இல்லையோ!

ராயலசீமா என்ற ஆங்கிலப் புஸ்தகம் 2014-ம் ஆண்டில் வெளியானது அதை அன்னா எல். டல்லாபிக்கோலா, ஜார்ஜ் மிஷல், அனிலா வர்கீஸ் என்ற மூன்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காண்போம் :–

பல்லவர்களுக்கு கீழேயிருந்த  பாணர் வம்ச சிற்றரசர்கள்  ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் செங்கற்களைக் கொண்டு கோவில் எழுப்பினர்.

Gudimallam,  Very near Tirupati and Kalahasti

இங்குள்ள மிகப் பழைய கல்வெட்டின் காலம் 845 CE.

அது தந்திவிக்ரம வர்மன் கால கல்வெட்டு

விக்ரம சோழனின் 1127 –ஆம் ஆண்டுக் கல்வெட்டு இந்தக் கோவில் மீண்டும் எழுப்பப்பட்டது பற்றிப் பேசுகிறது

சோழர் கால தட்சிணா மூர்த்தியை ஒரு மாடத்தில் காணலாம்; பிற்காலத்தில் விஷணுவையும் பிரம்மாவையும் இரு மாடங்களில் வைத்துள்ளனர் .

ஏனைய கட்டிடங்கள் விஜய நகரப்பேரசு காலத்தைச் சேர்ந்தவை அதாவது 16—ஆம் நூற்றாண்டு !

கோபுரம் இல்லாத கோவில் !!!!!!!!!!

சோழர்கால சூரியன் சிலை அற்புதமாக உள்ளது

நந்தி ,பலிபீடம், த்வஜ ஸ்தம்பம் உள்ளன

லிங்கத்தின் உயரம் 160 செ..மீ

செதுக்கி முடிக்கப்படாத சதுர வடிவ அமைப்பு பூமியில் புதைந்துள்ளது .

லிங்கத்தை எண்கோண வடிவில் வெட்டி ஒரு இளைஞன் உருவத்தைச் செதுக்கியுள்ளனர் அவன் கையில் ஒரு ஆடும் இன்னொரு கையில் நீர்க்குடமும் உள்ளது இடது கைப்புறம் தோளை ஒட்டி பரசு- கோடரி உள்ளது   

அவனுக்கு நீண்ட மூக்கு., சுருள் முடி., காதில் குண்டலம்; கைகளில் காப்புகள் இருக்கின்றன கழுத்தில் நெக்லஸ் .

கால்களில் செருப்பு இல்லை தெளிவான புருவம், கண்கள் ஆண்குறி   யைக் காட்டும் கண்ணாடி போல வேஷ்டி

இளைஞனின் உயரம்  90 சே மீ

சிலர் இளைஞன் உருவத்தை வேத கால ருத்ரன் என்பார்கள் ஆயினும் மூன்றாவது கண் இல்லை. புடைத்து நிற்கும் ஆண்குறியும் இல்லை இரண்டே கைகள்தான் இருக்கின்றன ; ஆகையால் இது வேடனின் உருவமே.

சிந்து சரஸ்வதி தீர பசுபதி சிலை யை ஒப்பிடுவோருக்குப் பதில் சொல்லும் வகையில் இதை எழுதியுள்ளனர்

தந்தி விக்ரம பல்லவன் காலம் Dantivarman CE 795–846

*****

முடிவுரை

பரசுராமேஸ்வர் என்ற சிவ வழிபாட்டில் புதிய சொல்: காலத்தினால் பிற்பட்ட சொல்.

நால்வரால் பாடப்பெறாததால் அவர்கள் காலத்தில் இந்தக் கோவிலே இல்லை . இது பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டது

அங்குள்ள உண்மையான உருவம் மாறப்பட்டிருக்கலாம். பாழடைந்து இருந்த கோவிலில் பிற்காலத்தில் லிங்கத்தை நிறுவி இருக்கலாம் .

பழங் கால செங்கற்களைக் கொண்டு கோவிலின் சில பகுதிகளைக் கட்டியதால் பழங் கால செங்கற்களின் காலத்தை ஊகித்து பழைய காலம் கற்பித்துள்ளனர். இது பழைய கோவிலாக இருந்திருந்தால் நால்வரும் பாடி இருப்பார்கள்; அவர்கள் அறியாத கோவில் இல்லை அருகிலுள்ள காளத்தியையும் ஸ்ரீ சைலத்தையும் பாடியோர் இதை பாடியிருப்பார்கள்;  இது சிவன் இல்லை என்பதால் விட்டிருக்கலாம்; அதாவது அவரது காலத்தில் லிங்கம் வைக்கப்படவில்லை .

*****

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ???????

அடாடா !!!!!!

ரிக்வேத ஆடை முறை என்ன? அதற்கு எழுத்திலோ சிலைப் படைப்பிலோ சான்று உண்டா ?

முண்டங்கள் வாய்க்கு வந்ததை எழுதுகின்றன.

இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

அடாடா !!!!!!

அது எப்படி? கண்ணாடி வைத்துப் பிரதிபலிக்க வைத்தார்களா? இப்படி சிவலிங்கம் சிந்து சரஸ்வதி நதிதீர 1500   அகழ்வாராய்ச்சிகளில் எங்குமே இல்லையே!!!!!!

லிங்கத்தின் அமைப்பு

கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்கம் சிலையின் நடுவில் நின்ற நிலையில் சிவன் உருவம் திறந்த மேனியுடன் வடிக்கப்பட்டுள்ளது. குட்டை வடிவ இயக்கனின் தோள்பட்டைகளில் கால்களை வைத்து நின்ற நிலையில் சிவபெருமான் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் தலையில் தலைப்பாகையும், காதில் குண்டலங்களும், தோள்பட்டையிலும், டுப்பிலும் நகையணிகள் அணிந்த நிலையில் உள்ளது.

இது சிவன் இல்லை; வேடன் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர். ஏனெனில் சிவன் ஆட்டைத் தூக்கிக்கொண்டு வலம்வந்ததாக எங்கும் இல்லை.

ஒருவேளை கண்ணப்ப நாயனாரோ ????

சிவன் வேடர் வேடத்தில் வந்த கதை கிராதார்ஜுனிய நூலில் உள்ளது அதன் கரு மஹாபாரத வனபர்வத்தில் இருந்தாலும் அதை கிராதார்ஜுனியமாக எழுதியவர் பாரவி; அதன் காலம் ஆறாம் நூற்றாண்டு .

ஒருவேளை அந்த சம்ஸ்க்ருத நூலைவைத்து இந்த சிலையை வடித்திருந்தாலும் அதற்குப்பின்னரே காலத்தைக் கணிக்க முடியும்; சிவனடியாரான   மாணிக்க வாசகரும் வேடன் பற்றிப் பாடியுள்ளார்  ஆக காலத்தில் இந்து முந்தியது இல்லை. கோபுரம் இல்லாதது, லிங்கத்தின் யோனி இல்லாதது ஆகியன முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டதைக் காட்டுகிறது.

அது சரி; இதையெல்லாம் ஒப்புக்கொண்டாலும் பரசுராமர் எங்கே வந்தார் ? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

அது சரி வேடனுக்கு கீழேயுள்ள உருவம் யார் ?

சோழர் காலத்தில் வடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கீழே  அல்லவா இதை முதலில் காண்கிறோம். அது ஆயிரம் ஆண்டு பழமை உடையதுதானேயே!!!    நடராஜர் காலடியில் அபஸ்மார என்ற அறியாமையின் சின்னம் இருக்கிறது.

இந்த வேடன் காலில் எப்படி அது வந்தது?

ரிக்வேத ருத்ரன் என்று சிலர் உளறி இருக்கின்றனர் அவர் காலில் அபஸ்மாரன் இருப்பதாக ரிக் வேதம் பாடவில்லையே யஜுர் வேத்தில்தான் முதலில் சிவன் வருகிறார். அதுவும் லிங்கம் இல்லையே

ஆக வேதமும் தேவாரமும் தெரியாத உளறல் பேர்வழிகள் உளறிக்கொட்டியதே குடிமல்லம்!

—subham—

Tags- குடிமல்லம் சிவன் கோவில், அதிசய உருவம்,  ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 41

Leave a comment

Leave a comment