Post No. 13,818
Date uploaded in London – 26 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818)- 1
மனு ஸ்ம்ருதி , பாரதியார் பாடல் ஆகிய இரண்டு நூல்களைத் தவிர எல்லா கலாசார நூல்களிலும் பெண்கள் மீது தாக்குதல்கள் இருக்கின்றன.
ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் பெண்கள், அவர்கள் சில வேலைகளுக்கு மட்டுமே லாயக்கனவர்கள், ஆண்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் நடக்க வேண்டும், பெண் புத்தி பின்புத்தி என்றெல்லாம் மேலை நாட்டினர் கருதினர்; அதைச் சொற்களிலும் வடித்தனர்.
தமிழில் பெண்களுக்கு எதிரான பழமொழிகள் அதிகம் உள்ளன. சங்க காலம் முதல் கம்பன் காலம் வரை பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் காண்கிறோம். கணவனே கண்கண்ட தெய்வம், அவனே அடுத்த பிறவியிலும் கணவனாக வர வேண்டும் என்றும் சங்க காலப் பாடல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர், கம்பன் போன்றோர் கற்புடைய மங்கையரின் அபூர்வ சக்திகளைப் பாடினாலும் வேசிகளையும், விபசாரிகளையும் ஏசுகின்றனர்..
மேலை நாட்டுக்கும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களுக்கும் பெரிய வேறு பாடு:
1.இந்திய இலக்கியங்கள் தாயைப் புகழ்வது போல எந்தப் பழங்கால இலக்கியத்திலும் காண முடியாது.
2. பிறன் மனைவியை காமக் கண்களோடு நோக்கக் கூடாது என்ற கருத்தையும் பிறநாட்டு இலக்கியங்களில் காண முடியாது.
3.ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சுமார் அறுபது பெண் கவிஞர்களைக் காண்கிறோம். இதையும் எகிப்திய, பாபிலோனிய கிரேக்க இலக்கியங்களிலும் காண முடியாது.
4.கார்க்கி என்ற பெண்மணி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அகில இந்திய தத்துவ மகாநாட்டில் கலந்து கொண்டு யாக்ஞ வாக்கிய மஹரிஷியைக் கேள்வி கேட்டது போன்ற விஷயத்தையும் மேலை நாட்டில் காண முடியாது
****
ஊனமடைந்த ஆண்களின் உருவம்தான் பெண்கள் “a male deformed,”என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்
கொடூரமான மனைவியைக் கட்டிக்கொண்ட சாக்ரடீஸ், நீ தத்துவ ஞானி ஆக வேண்டுமானால் கல்யாணம் கட்டிக்கொள் என்கிறார்
Greek physicist Galen, who argued that women’s relative amorphousness and instability gave rise to excess humoral fluids which were always in danger of spillage and in need of control.
நிலையற்ற , உரு மாறக்கூடிய பெண்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார் கிரேக்க விஞ்ஞானி காலன்.
இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை; இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
பெண்களைப் பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதிவிட்டதால் அவைகளின் தலைப்புகளை மட்டும் இறுதியில் கொடுக்கிறேன்.
****
ஷேக்ஸ்பியர் கருத்துக்களை மட்டும் இங்கே வைக்கிறேன் எழுதிவிட்டதால் :
Frailty, thy name is woman.
Hamlet
பெண்கள் பலவீனமானவர்கள்.
****
Who is’t can read a woman?
Cymbeline
பெண்களை யாரே அறிவார்கள் ?
(Meaning: What a sneaky demon! Who can know what women are actually like? Is there more?)
****
You are the weaker vessel, as they say, the emtier vessel.
Henry IV
(Meaning: I swear, it’s always like this. You two can never meet without having some kind of argument. I swear, you’re both as hot as dry toast—you can’t stand each others flaws. What on earth is wrong with you two! But one of you has to bear the brunt of it. And that has to be you, Doll, since you’re the weaker sex, the empty vessel as they say.
பெண்கள் பலவீனமானவர்கள் ; உள்ளே ஒன்றுமில்லாத காலியான உருவம்.
****
COUNTRYMAN
You must not think I am so simple but I know the devil
himself will not eat a woman. I know that a woman is a
dish for the gods, if the devil dress her not. But,
truly, these same whoreson devils do the gods great harm
in their women, for in every ten that they make, the
devils mar five.
Antony and Cleopatra
பத்தில் ஐந்து பெண்கள் பழுது (ஐம்பது சதவிகிதம் கெட்டுப்போனவை)
****
ROSALIND
Do you not know I am a woman? When I think, I must
speak. Sweet, say on.- As You Like It
ROSALIND
Don’t you know that I am a woman? When I think, I must speak. Now go on, sweet one.
நான் பெண் என்பது தெரியாதா ? என்ன நினைக்கிறேனோ அதைப் பேசுவேன்
(அதாவது அதன் விளைவை யோசிக்கமாட்டார்கள் என்றும் பொருள் கொள்ளலாம் )
பொன் மான் உலகில் கிடையாது என்று தெரிந்தும் அதைப் பிடித்து வா என்று ராமனை ஏவினாள் சீதை
கூனி, பேச்சைக் கேட்டு ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் கைகேயி.
இதையெல்லாம் விவேக சிந்தாமணி பாடல்களில் காணலாம்.
****
ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?
புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது
ஹென்ரி 6- பகுதி 3
Oh tiger’s heart wrapped in a woman’s hide – York
Henry VI Part 3
****
ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்
Must, like a whore, unpack my heart with words – Hamlet
*****
A woman, an ass, and a walnut tree, the more you beat them, the better they will be.
Bon cheval, mauvais cheval veut l’eperon; bonne femme, mauvaise femme veut le baton- French
Win weib, ein esel und eine nuss- diese drei man klofen muss- german
Donne, asini e noci voglion le mani atroci- italian
It is in Latin and other European languages.
எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் உள்ள பழமொழி
பெண், கழுதை, வால்நட் மரம் ஆகிய மூன்றையும் எவ்வளவு அடிக்கிறீர்களாளோ அவ்வளவுக்குப் பலன் தரும்.
*****
சீனாவில் 2000ஆண்டுகளாகவும் ஐரோப்பாவிலும் உள்ள பழமொழி
சேவலை விட உரத்த குரலில் கோழி கூவும் வீடுகள் சோகக் கிடங்குகளே
It is a sad house where the hen crows louder than the cock.
It is in German, Hungarian and other languages.
The hen announces the morning, an ill omen for the house says Book of Shu of first century BCE.
அழிவின் சின்னங்கள் பெண்கள் என்பது சீனர்களின் கருத்து
To be continued…………………………………..
Tags- மனு , சங்கத்தமிழ் , ரிக்வேதம், பெண்கள் , ஷேக்ஸ்பியர் நாடகங்கள், மேலை நாடுகள் அரிஸ்டாட்டில், கிரேக்க விஞ்ஞானி , சீனர்கள் , ஐரோப்பியர்கள், கருத்துPart 1