Post No. 13,821
Date uploaded in London – 27 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,821)
Part Two
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் மொத்த கதா பாத்திரங்களின் எண்ணிக்கை -981; அவரகளில் பெண்கள் 155 ; அதாவது 16 சதவிகிதமே!
ஷேக்ஸ்பியர் – பெண்கள் பற்றி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நோட்ஸ் இதோ :
பல நாடகங்களில் கெட்ட நோக்கமுள்ள பெண்கள்தான் , நாடகங்களையே முன்னெடுத்துச் செல்கின்றனர்
(கைகேயி இல்லாவிடில் ராமாயணம் இல்லை; திரவுபதி சிரித்திராவிடில் மஹாபாரதம் இல்லை என்பதும் உண்மையே)
In many of Shakespeare’s plays, the female villain, or femme fatale, is instrumental in moving the plot forward. These characters are manipulative and clever, but they almost always meet a grisly end as a payback for their evil deeds.
பெண்கள் சதிகாரிகள் ;புத்திசாலிகளும் கூட; ஆனால் இறுதியில் சோக முடிவினை சந்திக்கிறார்கள்
How were women treated in Shakespeare’s plays?
Women were expected to be subservient, quiet and homebound, with their primary ambitions entirely confined to marriage, childbirth and homemaking; granted, social status and economic class played into what degree these expectations manifested, with the chief example being Queen Elizabeth I herself.
பெண்கள் அடங்கி நடக்க வேண்டும்; வீட்டிலேயே இருக்க வேண்டும்; அமைதியாக இருக்க வேண்டும்; கல்யாணம், குழந்தை பெறுவது, வீட்டைக் கவனிப்பது ஆகியனதான் அவர்களுடைய வேலை அடுப்பூதும் பெண்களுக்குப் பள்ளிப்படிப்பு தேவை இல்லை.
****
‘பெண் புத்தி கேட்கின்ற மூடர்’ பற்றி அம்பலவாணர் (Post.11,592)
அறப்பளீசுர சதகம் 35. மூடர்களில் உயர்வு தாழ்வு
பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்
பிழைபுறம் சொலும்மூ டரும்,
பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
பிதற்றிடும் பெருமூ டரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான
பழிதொழில்செய் திடுமூ டரும்,
பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்
பரிதவித் திடுமூ டரும்,
கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது
காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,
கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்
கால்மூடர் அரைமூ டர்காண்
அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அண்கற்ற நாவலர்க்காகவே தூதுபோம் ஐயனே –
அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற
தலைவனே!, அருமை ……… தேவனே!,
பெண்புத்தி கேட்கின்ற மூடரும் –
பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், ……………….– (நூல்களை) உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும் பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.
****
தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் உள்ளன. இது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அக்காலத்தில் ஆண்களுக்கும் கல்யாணமான பெண்களுக்கும் இடையே, பெரிய வயது வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கு வயது முதிர்ந்த ஆண்களின் அளவுக்கு பக்குவம் அல்லது அனுபவம் இருந்திராது. ஆகையால் இப்படி ஒரு கருத்து நிலவியது போலும்.
தாயார் என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது பாராட்டுவதும், மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது தாழ்த்துவதும் கண்கூடு. நான் பெண்கள் பற்றி வெளியிட்ட 300 பழமொழிகளில் பெரும்பாலும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே உள்ளன. ஆனால் உபநிஷதம், மனு ஸ்ம்ருதி போன்றவற்றில் அவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்துள்ளனர்.
எந்த வீட்டில் பெண்கள் அழுகை கேட்கிறதோ அந்தக் குடும்பம் வேருடன் அழியும் என்று மனு நீதி நூல் சொல்கிறது. எங்கு பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வசிக்கும் என்று மனு கூறுகிறார். சகோதரிகளுக்கு நகை நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள் என்றும் அறிவுரை பகிர்கிறார் மநு .
இதோ எதிரும் புதிருமான கருத்துக்கள்|:
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
पितृभिर्भ्रातृभिश्चैताः पतिभिर्देवरैस्तथा ।
पूज्या भूषयितव्याश्च बहुकल्याणमीप्सुभिः ॥ ५५ ॥
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு 3-.55)
xxx
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:”—Manu 3-56
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता:।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला: क्रिया:।
****
शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत् कुलम् ।
न शोचन्ति तु यत्रैता वर्धते तद् हि सर्वदा ॥ ५७ ॥
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)
****
जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः ।
तानि कृत्याहतानीव विनश्यन्ति समन्ततः ॥ ५८ ॥
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
****
तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः ।
भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च ॥ ५९ ॥
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’ (மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
உலகங்களை எரித்து சாம்பலாக்கும் சக்தி எனக்கு உண்டு — சீதா தேவி
சீதையின் மகத்தான சக்தி
(சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)
‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)
பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-
(தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)
To be continued…………………..
Tags- கம்ப ராமாயணத்தில், பெண் புத்தி கேட்கின்ற மூடர், அம்பலவாணர் , மனு, எச்சரிக்கை, பெண்கள் மீது, ஷேக்ஸ்பியர் தாக்குதல், Part 2