ஒரு வரியில் ஜோதிடம்! (Post No.13,827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.827

Date uploaded in London – 29 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜோதிடம் பற்றி அறிய விரும்புவோருக்கு அதன் ஆரம்ப அடிப்படைகள் சுருக்கமாக ஒவ்வொரு வரியிலும் தரப்படுகிறது.

ஒரு வரியில் ஜோதிடம்!

(1 முதல் 52 முடிய)

ச. நாகராஜன்

1.        மேஷம், (Aries) ரிஷபம்(Taurus), மிதுனம் (Gemini), கடகம், (Cancer), சிம்மம்(Leo), கன்னி(Virgo), துலாம் (Libra), விருச்சிகம் (Scorpio), தனுசு(Sagittarius), மகரம்(Capricornus), கும்பம் (Aquarius), மீனம் (Pisces) ஆகியவையே 12 ராசிகள் ஆகும்.

2.        அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம்,அனுஷம், கேட்டை,மூலம், பூராடம், உத்தராடம்,திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகியவை 27 நட்சத்திரங்கள்.

3.        அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம், ஆருத்ரா, புனர்வசு, புஷ்யம், ஆஸ்லேஷம், மகம், பூரம், உத்தரா, ஹஸ்தா, சித்ரா, ஸ்வாதி, விசாகா,அனுராதா, ஜேஷ்டா, மூலம், பூர்வாஷாடா, உத்தராஷாடா ஸ்ரவணம்,  ஸ்ரவிஷ்டா, சதபிஷக், பூர்வபத்ரா, உத்தரபத்ரா, ரேவதி என்றும் ஜோதிட ரீதியாக இந்த 27 நட்சத்திரங்கள் குறிப்பிடப்படும்.

4.        ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு.

5.        ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் உண்டு.

6.        ஆக 12 ராசிகளில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களுக்கு  (27×4 = 108) பாதங்கள் வரும்.

7.        ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

8.        12 ராசிகளுக்கு 360 டிகிரிகள் வரும்.

9.        சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியவை நவ கிரகங்கள் ஆகும்.

10.     இந்த நவ கிரகங்கள் சுப மற்றும் அசுப (தீய) கிரகங்கள் என இருவகையாக பகுக்கப்படும்.

11.      குரு, சுக்ரன், சரியான நல்ல சேர்க்கையில் இருக்கும் புதன், பௌர்ணமி சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள்.

12.      சூரியன், அமாவாசை சந்திரன், தீய சேர்க்கையில் இருக்கும் புதன். செவ்வாய், சனி, ராகு,கேது ஆகியவை அசுப (தீய) கிரகங்கள்.

13.     ஜனன காலத்தில் ஜாதகத்தில் உள்ள இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு அனைத்து கிரகங்களுக்கும் பார்வை உண்டு.

14.     குரு தனது இடத்திலிருந்து ஐந்தாம் இடத்தையும் ஒன்பதாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.

15.     செவ்வாய் தனது இடத்திலிருந்து நான்காம் இடத்தையும் எட்டாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.

16.     சனி தனது இடத்திலிருந்து மூன்றாம் இடத்தையும் பத்தாம் இடத்தையும் வலிமையுடன் பார்க்கும்.

17.     நல்ல சுப பார்வை நல்ல விளைவுகளைத் தரும்.

18.     தீய  பார்வை தீய விளைவுகளைத் தரும்.

19.     இந்த இடங்களில் இந்தப் பார்வைகள் ஏழாம் பார்வையை விட விளைவுகள் அதிக சக்தியுடன் இருக்கும்.

20.     தீய மற்றும் நல்ல பார்வைகள் கலந்திருந்தால் விளைவுகளும் அப்படியே தீய மற்றும் நல்ல விளைவுகள் கலந்ததாக இருக்கும்.

21.     கிரகங்களில் சில நட்பு கிரகங்கள்.

22.     கிரகங்களில் சில எதிரி கிரகங்கள்.

23.      கிரகங்களில் சில சேர்க்கை கிரகங்கள்.

24.     நட்பு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமானதாகவோ இருக்கக்கூடும்.

25.     நட்பு கிரகங்கள் நலத்தைத் தர, எதிரி கிரகங்கள் தீயதைத் தர சேர்க்கை கிரகங்கள் நடுநிலைமையுடன் இருக்கும்.

26.     சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை ஒரு குழு.

27.     புதன், சுக்ரன், சனி இன்னொரு குழு.

28.     ஒரு குழு இன்னொரு குழுவை வெறுக்கிறது.

29.     ஆனால் சந்திரன் மட்டும் எந்தக் குழுவிலும் சேரவில்லை என்பதால் எதிரிகளே சந்திரனுக்கு இல்லை.

30.     குரு, செவ்வாய். சூரியன் ஆகியவை ஆண்கள்.

31.     சுக்ரன், ராகு, சந்திரன் ஆகியவை பெண்கள்.

32.     சனி, புதன், கேது ஆகியவை அலிகள்.

33.     ஒரு கிரகத்தின் செல்வாக்கே, ஒரு பெண்ணானவள்  பெறப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.

34.     இத்துடன் குழந்தையின் சகோதரர்களையும்,  குழந்தைகளையும் நிர்ணயிக்கிறது.

35.     குரு, சூரியன், சந்திரன் ஆகியவை தெய்வீக கிரகங்கள் அல்லது சாத்வீக கிரகங்களாகும்.

36.     இவை ஒரு ஜாதகரை சாத்விகவாதி, சத்யவாதி,இரக்கத்தன்மை உடையவர்,அன்பு பாராட்டுபவர், நன்கொடையாளர் ஆக்கும்.

37.     சுக்ரன், புதன் ராஜஸத்தைக் குறிக்கும்.

38.     இவை ஒரு ஜாதகரை தனி உயர் ரகமாக்குவதோடு, காதல் வாழ்க்கை, கலை, விஞ்ஞானத்தில் மேன்மை, பெண்களின் மீது நேசம், தைரியம், ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்களாக ஆக்கும்.

39.     செவ்வாய், சனி தாமஸத்தைக் குறிக்கும்.

40.     இவை கடுமையான சுபாவத்தையும், ஏமாற்றுவோராகவும், கதை கட்டுபவராகவும், சண்டை இடுபவர்களாகவும் கடுமையானவர்களாகவும், சோம்பேறிகளாகவும், இரக்கமற்றவர்களாகவும், பழி வாங்குபவர்களாகவும், தூங்குவதில் விருப்பம் உள்ளவர்களாகவும், கீழ்த்தர ஆசை உடையவர்களாகவும், தகுதியற்ற பெண்களாகவும் ஆக்கும்.

41.     சூரியனும் செவ்வாயும் உக்கிரமான கிரகங்கள்.

42.     புதன் நிலம் சார்ந்த கிரகம்.

43.     சனி வாயு கிரகம்.

44.     குரு தெய்வீக கிரகம்.

45.     சுக்ரன், சந்திரன் நீர் சார்ந்த கிரகங்கள்.

46.     சூரியனின் வர்ணம் தாமிரம்.

47.     சந்திரனின் வர்ணம் வெண்மை

48.     செவ்வாயின் வர்ணம் இரத்தச் சிவப்பு.

49.     புதனின் வர்ணம் பச்சை.

50.     குருவின் வர்ணம் பிரகாசமான மஞ்சள்.

51.     சுக்ரனின் வர்ணம் அனைத்து வண்ணங்களின் கலவை.

52.     சனியின் வர்ணம் கறுப்பு.

இந்த அடிப்படை  விவரங்களை ஜோதிட ஆர்வலர் ஒவ்வொருவரும் அறிதல் இன்றியமையாதது.

இன்னும் சில அடிப்படை ஜோதிடங்களை அறிய நம் பயணத்தைத் தொடர்வோம்.

***

Leave a comment

Leave a comment