குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,819

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-41

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

குடிமல்லம் என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தில் ரேணிகுண்டா அருகில் இருக்கிறது . சுவர்ணமுகி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த சிறிய கிராமம் இருக்கிறது . எப்படி சிந்து சரஸ்வதி நாகரீகம் பற்றிப் பலர் புரளியை கிளப்பிவிட்டு அதன் எழுத்தைக் கண்டுபிடிக்காமற் செய்தனரோ அதைப் போலவே இங்குள்ள லிங்கம் போன்ற உருவம் பற்றியும் பல கதைகளை எட்டுக்கட்டியுள்ளனர் அரைவேக்காட்டுப் பேர்வழிகள்.

இங்குள்ள லிங்க உருவம் காலத்தால் மிகப் பிந்தியது. அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சொறிகள் இதற்கு 700 ஆண்டுக் காலம் கற்பித்துள்ளனர். அதாவது காளிதாசனை 700 ஆண்டுகள் ரேஞ்சில் வைத்தது போல இதற்கும் காலம்; அதிலிருந்தே இவைகள் செய்வது சநதேகத்துக்கு உரியதாகின்றது. யாருக்குமே தெரியாத இந்த லிங்க உருவம் ஆண்குறி போல உள்ளதால்  வெள்ளைக்காரர்களுக்கு மகா சந்தோசம். பிரிட்டன் அமெரிக்கா முதலிய     நாடுகளில்,  இந்துக்கள் படிக்கும் புஸ்தகங்களில் இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்கள் என்று எழுதியுள்ளது ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அப்பர்  சம்பந்தர் சுந்தரரும் அப்படிச் சொல்லவில்லை சிவனுக்கு அடி, முடி கிடையாது உருவமற்றவர் என்ற பொருளில் லிங்கம் வணங்கப்படுகிறது.

எனது மகன் லண்டனில் பள்ளியில் இந்துமதம் என்பதை பாடமாக எடுத்துக்கொண்டான். அப்பா இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்களென்று சிவலிங்கம் பற்றி என் வாத்தியார் சொன்னார். அது உண்மையா? என்று கேட்டான். இல்லை ; இறைவன் அருவமும் உருவமும் உடையவன் என்பதற்கு லிங்கம் அருவம் என்பதன் படைப்பு. இதை ஆண்குறி என்று இந்தத் சைவரும் பாடவில்லை என்றேன். வாத்தியாரிடம் போய்ச் சொன்னான். நீ விரும்பியதை எழுதலாம்; ஆனால் ஆண்குறி என்று எழுதாவிடில்  உனக்கு மார்க் போட மாட்டோம் என்றார் வாத்தியார். அவன் என்னிடம் சொன்னபோது புஸ்தகத்தில் உள்ளது போல எழுதி மார்க் வாங்கு; ஆனால் உண்மை இது என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரை மூலம் காட்டு என்று ங்கிலத்தில் பாரதீய வித்யா பவன் வெளியிட்ட காஞ்சி சுவாமிகளின் ஆங்கிலப் பேருரை மொழிபெயர்ப்பைக் கொடுத்தேன்.

****

குடிமல்லம் பற்றிய ‘கப்ஸா’க்களை முதலில் வெடிவைத்துத் தகர்ப்போம்.

இந்த ஊரின் பெயர் குடிமல்லம் என்று எந்தக் கல்வெட்டிலும் இல்லை. இங்குள்ள பழைய கல்வெட்டுகள் பல்லவர்களின் காலத்தியது . அதாவது தந்திவிக்ரம வர்மன் காலம்.

ராமேஸ்வரத்தில் சிவனை ராமர் வணங்கியதால் ராமேஸ்வரம் என்ற தலம் வந்தது; நால்வரில் சிலரால் பாடப்பெற்றது

இங்குள்ள கோவிலுக்கு பரசுராமேச்வரம் என்ற பெயர் வரலாற்றிலோ இதிஹாச புராணத்திலோ இல்லை.

இங்குள்ள வேடன் கையில் பரசு இருக்கிறது அவ்வளவுதான்.

(சிவன் கையிலுள்ள ஆயுதங்கள்: மழு – கோடாரி போன்ற அமைப்பினை உடையது).

அந்த வேடனுக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராலும் விளக்க முடியவில்லை. ஏனெனில் சிவனை ( லிங்கம் ) குடைந்து வேடன் உருவம் வடிக்கப்பட்டுள்ளது; அவனை சிவன் என்று சொல்லுவோர் முகத்தில் கரியைப் பூசிக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர் கையில் ஆடு இருக்கிறது தோளில் பரசு இருக்கிறது ; அவருக்குப் பூணுல் இல்லை. மூன்று கண் இல்லை உடுக்கை  யில்லை; லிங்கத்துக்கு யோனி என்னும் பீடமும் இல்லை  இது முடிக்கப்படாத அரை குறை  சிலையோ?

மேலும் அருகிலுள்ள காளஹஸ்தியை சிவனடியார்கள் பாடினார்கள்; ஸ்ரீசைலத்தைப் பாடினார்கள்;.இந்த இடத்தை எந்தச் சிவனடியாரும் பாடவில்லை ஏன்? ஆகவே சிவன் இல்லை!

லிங்கம் என்ற சொல்லே திருமூலர் காலம் முதல்தான் பிரபலமானது அதற்கு முன் லிங்கத்தையும் சிவன் என்றே அடியார்கள் பாடினர். 650 [பாடல்கலைக்கப்ப பாடிய மாணிக்கவாசகரோ லிங்கம் என்பதைக் குறிப்பிடவில்லை அவர் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முந்தியவர்.; அப்பர் சம்பந்தர் போன்றோர் அரிதாகவே லிங்கத்தைக் குறிப்பிட்டனர்.

இந்த மாதிரி ஆண்குறி லிங்கம் எங்குமில்லை; பாடப்படவும் இல்லை. “அங்குள்ளது இங்குள்ளது”  என்று கூறியோர் அந்தப் படததைக் காட்டி ஒப்பிடவுமில்லை அதாவது அப்படி இல்லவே இல்லை.

லிங்கத்தில் உள்ள வேடன் கண்ணப்ப நாயனார் ஆக இருக்கலாம். அவன்தான் கையில் மாமிசத்துடன் வந்து வணங்கிய ஒரே நாயன்மார்.

லிங்கத்தின் உயரம் ஐந்து அடி சிவலிங்கம் என்றால் கீழே பீடம் இருக்கவேண்டும். யோனி என்பார்கள் ; அது இங்கே இல்லை.  எந்தக் கூமுட்டை சிற்பி யோனி இல்லாமல் லிங்கத்தை வடிப்   பான்? இது சிவனே இல்லையோ!

ராயலசீமா என்ற ஆங்கிலப் புஸ்தகம் 2014-ம் ஆண்டில் வெளியானது அதை அன்னா எல். டல்லாபிக்கோலா, ஜார்ஜ் மிஷல், அனிலா வர்கீஸ் என்ற மூன்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காண்போம் :–

பல்லவர்களுக்கு கீழேயிருந்த  பாணர் வம்ச சிற்றரசர்கள்  ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் செங்கற்களைக் கொண்டு கோவில் எழுப்பினர்.

Gudimallam,  Very near Tirupati and Kalahasti

இங்குள்ள மிகப் பழைய கல்வெட்டின் காலம் 845 CE.

அது தந்திவிக்ரம வர்மன் கால கல்வெட்டு

விக்ரம சோழனின் 1127 –ஆம் ஆண்டுக் கல்வெட்டு இந்தக் கோவில் மீண்டும் எழுப்பப்பட்டது பற்றிப் பேசுகிறது

சோழர் கால தட்சிணா மூர்த்தியை ஒரு மாடத்தில் காணலாம்; பிற்காலத்தில் விஷணுவையும் பிரம்மாவையும் இரு மாடங்களில் வைத்துள்ளனர் .

ஏனைய கட்டிடங்கள் விஜய நகரப்பேரசு காலத்தைச் சேர்ந்தவை அதாவது 16—ஆம் நூற்றாண்டு !

கோபுரம் இல்லாத கோவில் !!!!!!!!!!

சோழர்கால சூரியன் சிலை அற்புதமாக உள்ளது

நந்தி ,பலிபீடம், த்வஜ ஸ்தம்பம் உள்ளன

லிங்கத்தின் உயரம் 160 செ..மீ

செதுக்கி முடிக்கப்படாத சதுர வடிவ அமைப்பு பூமியில் புதைந்துள்ளது .

லிங்கத்தை எண்கோண வடிவில் வெட்டி ஒரு இளைஞன் உருவத்தைச் செதுக்கியுள்ளனர் அவன் கையில் ஒரு ஆடும் இன்னொரு கையில் நீர்க்குடமும் உள்ளது இடது கைப்புறம் தோளை ஒட்டி பரசு- கோடரி உள்ளது   

அவனுக்கு நீண்ட மூக்கு., சுருள் முடி., காதில் குண்டலம்; கைகளில் காப்புகள் இருக்கின்றன கழுத்தில் நெக்லஸ் .

கால்களில் செருப்பு இல்லை தெளிவான புருவம், கண்கள் ஆண்குறி   யைக் காட்டும் கண்ணாடி போல வேஷ்டி

இளைஞனின் உயரம்  90 சே மீ

சிலர் இளைஞன் உருவத்தை வேத கால ருத்ரன் என்பார்கள் ஆயினும் மூன்றாவது கண் இல்லை. புடைத்து நிற்கும் ஆண்குறியும் இல்லை இரண்டே கைகள்தான் இருக்கின்றன ; ஆகையால் இது வேடனின் உருவமே.

சிந்து சரஸ்வதி தீர பசுபதி சிலை யை ஒப்பிடுவோருக்குப் பதில் சொல்லும் வகையில் இதை எழுதியுள்ளனர்

தந்தி விக்ரம பல்லவன் காலம் Dantivarman CE 795–846

*****

முடிவுரை

பரசுராமேஸ்வர் என்ற சிவ வழிபாட்டில் புதிய சொல்: காலத்தினால் பிற்பட்ட சொல்.

நால்வரால் பாடப்பெறாததால் அவர்கள் காலத்தில் இந்தக் கோவிலே இல்லை . இது பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டது

அங்குள்ள உண்மையான உருவம் மாறப்பட்டிருக்கலாம். பாழடைந்து இருந்த கோவிலில் பிற்காலத்தில் லிங்கத்தை நிறுவி இருக்கலாம் .

பழங் கால செங்கற்களைக் கொண்டு கோவிலின் சில பகுதிகளைக் கட்டியதால் பழங் கால செங்கற்களின் காலத்தை ஊகித்து பழைய காலம் கற்பித்துள்ளனர். இது பழைய கோவிலாக இருந்திருந்தால் நால்வரும் பாடி இருப்பார்கள்; அவர்கள் அறியாத கோவில் இல்லை அருகிலுள்ள காளத்தியையும் ஸ்ரீ சைலத்தையும் பாடியோர் இதை பாடியிருப்பார்கள்;  இது சிவன் இல்லை என்பதால் விட்டிருக்கலாம்; அதாவது அவரது காலத்தில் லிங்கம் வைக்கப்படவில்லை .

*****

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ???????

அடாடா !!!!!!

ரிக்வேத ஆடை முறை என்ன? அதற்கு எழுத்திலோ சிலைப் படைப்பிலோ சான்று உண்டா ?

முண்டங்கள் வாய்க்கு வந்ததை எழுதுகின்றன.

இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

அடாடா !!!!!!

அது எப்படி? கண்ணாடி வைத்துப் பிரதிபலிக்க வைத்தார்களா? இப்படி சிவலிங்கம் சிந்து சரஸ்வதி நதிதீர 1500   அகழ்வாராய்ச்சிகளில் எங்குமே இல்லையே!!!!!!

லிங்கத்தின் அமைப்பு

கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்கம் சிலையின் நடுவில் நின்ற நிலையில் சிவன் உருவம் திறந்த மேனியுடன் வடிக்கப்பட்டுள்ளது. குட்டை வடிவ இயக்கனின் தோள்பட்டைகளில் கால்களை வைத்து நின்ற நிலையில் சிவபெருமான் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் தலையில் தலைப்பாகையும், காதில் குண்டலங்களும், தோள்பட்டையிலும், டுப்பிலும் நகையணிகள் அணிந்த நிலையில் உள்ளது.

இது சிவன் இல்லை; வேடன் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர். ஏனெனில் சிவன் ஆட்டைத் தூக்கிக்கொண்டு வலம்வந்ததாக எங்கும் இல்லை.

ஒருவேளை கண்ணப்ப நாயனாரோ ????

சிவன் வேடர் வேடத்தில் வந்த கதை கிராதார்ஜுனிய நூலில் உள்ளது அதன் கரு மஹாபாரத வனபர்வத்தில் இருந்தாலும் அதை கிராதார்ஜுனியமாக எழுதியவர் பாரவி; அதன் காலம் ஆறாம் நூற்றாண்டு .

ஒருவேளை அந்த சம்ஸ்க்ருத நூலைவைத்து இந்த சிலையை வடித்திருந்தாலும் அதற்குப்பின்னரே காலத்தைக் கணிக்க முடியும்; சிவனடியாரான   மாணிக்க வாசகரும் வேடன் பற்றிப் பாடியுள்ளார்  ஆக காலத்தில் இந்து முந்தியது இல்லை. கோபுரம் இல்லாதது, லிங்கத்தின் யோனி இல்லாதது ஆகியன முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டதைக் காட்டுகிறது.

அது சரி; இதையெல்லாம் ஒப்புக்கொண்டாலும் பரசுராமர் எங்கே வந்தார் ? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

அது சரி வேடனுக்கு கீழேயுள்ள உருவம் யார் ?

சோழர் காலத்தில் வடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கீழே  அல்லவா இதை முதலில் காண்கிறோம். அது ஆயிரம் ஆண்டு பழமை உடையதுதானேயே!!!    நடராஜர் காலடியில் அபஸ்மார என்ற அறியாமையின் சின்னம் இருக்கிறது.

இந்த வேடன் காலில் எப்படி அது வந்தது?

ரிக்வேத ருத்ரன் என்று சிலர் உளறி இருக்கின்றனர் அவர் காலில் அபஸ்மாரன் இருப்பதாக ரிக் வேதம் பாடவில்லையே யஜுர் வேத்தில்தான் முதலில் சிவன் வருகிறார். அதுவும் லிங்கம் இல்லையே

ஆக வேதமும் தேவாரமும் தெரியாத உளறல் பேர்வழிகள் உளறிக்கொட்டியதே குடிமல்லம்!

—subham—

Tags- குடிமல்லம் சிவன் கோவில், அதிசய உருவம்,  ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 41

பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818) Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,818

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818)- 1

மனு ஸ்ம்ருதி , பாரதியார் பாடல் ஆகிய இரண்டு நூல்களைத் தவிர எல்லா கலாசார நூல்களிலும் பெண்கள் மீது தாக்குதல்கள்  இருக்கின்றன.

ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் பெண்கள், அவர்கள் சில வேலைகளுக்கு மட்டுமே லாயக்கனவர்கள், ஆண்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் நடக்க வேண்டும், பெண் புத்தி பின்புத்தி என்றெல்லாம் மேலை நாட்டினர் கருதினர்; அதைச்  சொற்களிலும் வடித்தனர்.

தமிழில் பெண்களுக்கு எதிரான பழமொழிகள் அதிகம் உள்ளன. சங்க காலம் முதல் கம்பன்  காலம் வரை பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் காண்கிறோம். கணவனே கண்கண்ட தெய்வம்,  அவனே அடுத்த பிறவியிலும் கணவனாக வர வேண்டும் என்றும் சங்க காலப்  பாடல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர், கம்பன் போன்றோர் கற்புடைய  மங்கையரின் அபூர்வ சக்திகளைப் பாடினாலும் வேசிகளையும், விபசாரிகளையும் ஏசுகின்றனர்..

மேலை நாட்டுக்கும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களுக்கும் பெரிய வேறு பாடு:

1.இந்திய இலக்கியங்கள் தாயைப் புகழ்வது போல எந்தப் பழங்கால இலக்கியத்திலும் காண முடியாது.

2. பிறன் மனைவியை காமக் கண்களோடு நோக்கக் கூடாது என்ற கருத்தையும் பிறநாட்டு இலக்கியங்களில் காண முடியாது.

3.ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சுமார் அறுபது பெண் கவிஞர்களைக் காண்கிறோம். இதையும் எகிப்திய, பாபிலோனிய கிரேக்க இலக்கியங்களிலும் காண முடியாது.

4.கார்க்கி என்ற பெண்மணி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அகில இந்திய தத்துவ மகாநாட்டில் கலந்து கொண்டு யாக்ஞ வாக்கிய மஹரிஷியைக் கேள்வி கேட்டது போன்ற விஷயத்தையும் மேலை நாட்டில் காண முடியாது

****

ஊனமடைந்த ஆண்களின் உருவம்தான் பெண்கள் a male deformed,”என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்

கொடூரமான மனைவியைக் கட்டிக்கொண்ட சாக்ரடீஸ், நீ தத்துவ ஞானி ஆக வேண்டுமானால் கல்யாணம் கட்டிக்கொள் என்கிறார்

Greek physicist Galen, who argued that women’s relative amorphousness and instability gave rise to excess humoral fluids which were always in danger of spillage and in need of control.

நிலையற்ற , உரு மாறக்கூடிய  பெண்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார் கிரேக்க விஞ்ஞானி காலன்.

இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை; இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

பெண்களைப் பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதிவிட்டதால் அவைகளின் தலைப்புகளை மட்டும் இறுதியில் கொடுக்கிறேன்.

****

ஷேக்ஸ்பியர் கருத்துக்களை மட்டும் இங்கே வைக்கிறேன் எழுதிவிட்டதால் :

Frailty, thy name is woman.

Hamlet

பெண்கள் பலவீனமானவர்கள்.

****

Who is’t can read a woman?

Cymbeline

பெண்களை யாரே அறிவார்கள் ?

(Meaning: What a sneaky demon! Who can know what women are actually like? Is there more?)

****

You are the weaker vessel, as they say, the emtier vessel.

Henry IV

(Meaning: I swear, it’s always like this. You two can never meet without having some kind of argument. I swear, you’re both as hot as dry toast—you can’t stand each others flaws. What on earth is wrong with you two! But one of you has to bear the brunt of it. And that has to be you, Doll, since you’re the weaker sex, the empty vessel as they say.

பெண்கள் பலவீனமானவர்கள் ; உள்ளே ஒன்றுமில்லாத காலியான உருவம்.

****

COUNTRYMAN

You must not think I am so simple but I know the devil

himself will not eat a woman. I know that a woman is a

dish for the gods, if the devil dress her not. But,

truly, these same whoreson devils do the gods great harm

in their women, for in every ten that they make, the

devils mar five.

Antony and Cleopatra

பத்தில் ஐந்து பெண்கள் பழுது (ஐம்பது சதவிகிதம் கெட்டுப்போனவை)

****

ROSALIND

Do you not know I am a woman? When I think, I must

speak. Sweet, say on.- As You Like It

ROSALIND

Don’t you know that I am a woman? When I think, I must speak. Now go on, sweet one.

நான் பெண் என்பது தெரியாதா ? என்ன நினைக்கிறேனோ அதைப் பேசுவேன் 

(அதாவது அதன் விளைவை யோசிக்கமாட்டார்கள் என்றும் பொருள் கொள்ளலாம் )

பொன் மான் உலகில் கிடையாது என்று தெரிந்தும் அதைப் பிடித்து வா என்று ராமனை ஏவினாள் சீதை

கூனி, பேச்சைக் கேட்டு ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் கைகேயி.

இதையெல்லாம் விவேக சிந்தாமணி பாடல்களில் காணலாம்.

****

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

****

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

*****

A woman, an ass, and a walnut tree, the more you  beat them, the better they will be.

Bon cheval, mauvais cheval veut l’eperon; bonne femme, mauvaise femme veut le baton- French

Win weib, ein esel und eine nuss- diese drei man klofen muss- german

Donne, asini e noci voglion le mani atroci- italian

It is in Latin and other European languages.

எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் உள்ள பழமொழி

பெண், கழுதை, வால்நட் மரம் ஆகிய மூன்றையும் எவ்வளவு அடிக்கிறீர்களாளோ அவ்வளவுக்குப் பலன் தரும்.

*****

சீனாவில் 2000ஆண்டுகளாகவும் ஐரோப்பாவிலும் உள்ள பழமொழி

சேவலை விட உரத்த குரலில் கோழி கூவும் வீடுகள் சோகக் கிடங்குகளே

It is a sad house where the hen crows louder than the cock.

It is in German, Hungarian  and other languages.

The hen announces the morning, an ill omen for the house  says Book of Shu  of first century BCE.

அழிவின் சின்னங்கள் பெண்கள் என்பது சீனர்களின் கருத்து

To be continued…………………………………..

Tags- மனு , சங்கத்தமிழ் , ரிக்வேதம், பெண்கள் , ஷேக்ஸ்பியர் நாடகங்கள், மேலை நாடுகள் அரிஸ்டாட்டில், கிரேக்க விஞ்ஞானி , சீனர்கள் , ஐரோப்பியர்கள், கருத்துPart 1

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 (Post No.13,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.817

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

திருக்குறள் மர்மம் 

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 

ச. நாகராஜன்

திருக்குறளில் மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன.

இந்து மதக் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் வேதமாக திருக்குறள் மலர்ந்திருக்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை.

இந்து மதம் வலியுறுத்தும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல அருமையான கருத்துக்களைத் திருக்குறளில் காணலாம்.

சொர்க்கம் என்ற வார்த்தையை திருவள்ளுவர் திருக்குறளில் பயன்படுத்தவில்லை என்றாலும் தேவர் உலகம், புத்தேளிர் உலகு, புத்தேள் உலகு, புத்தேள் நாடு என்பன போன்ற வார்த்தைகளால் சொர்க்கத்தைக் காட்டுகிறார்.

முதலில் சொர்க்கத்தைப் பற்றி வள்ளுவர் கூறும் குறள் பாக்களைக் காணலாம்.

தேவர் உலகம் என்னும் பொருளில் வரும் குறள் இது:

பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு                 (குறள் 58)

இல்லத்தரசிகள் தம் தம் கணவன்மாரைப் போற்றித் தம் கடமையை ஆற்றினாரெனில் வானவர் வாழும் உலகத்தின் பெரும் சிறப்பைப் பெறுவர். (இவ்வுலக இன்பமும் விண்ணுலகு (சொர்க்கத்தின்) இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற  (குறள் 213)

கைமாறு எதிர்பார்க்காது பிறருக்குச் செய்யப்படும் உதவி ஒப்புரவு எனப்படும்.

பிறருக்கு உதவி செய்யும் ஒப்புரவைப் போல – சேவையைப் போல நன்மை தருகின்ற பிற அறச்செயலை தேவர் உலகத்திலும் இந்த நிலவுலகத்திலும் காண்பது அரிது.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு    (குறள் 234)

ஒருவன் இந்த பூமியில் வறியவர்களுக்குக் கொடுத்து தனது நீண்ட புகழைப் பரப்பி நின்றால் தேவர் உலகம் அவனை வரவேற்குமே அல்லாது தேவர்களைப் போற்றாது.

வறியவர்களுக்குக் கொடுக்கும் குணம் உள்ளவர்களை தேவர் உலகம்

வரவேற்கும். தேவர்களைக் கூட அந்த உலகம் போற்றாது என்கிறார் வள்ளுவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு                 (குறள் 290)

களவு செய்யும் திருடர்களுக்கு உடம்பில் உயிர் வாழும் நிலை தவறி விடும். ஆனால் திருடாமல் வாழ்பவர்க்கு புத்தேள் உலகம் என்னும் சொர்க்கம் தவறாமல் கிடைக்கும்.

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை       (குறள் 966)

தன்னுடைய மானத்தை விட்டு இகழ்கின்றவர்கள் பின் சென்று பணிந்து நிற்கும் ஒருவனின் நிலையால் இவ்வுலகில் புகழ் கிடைக்காது. மறுமையில் தேவருலகத்திலும் கொண்டு சேர்க்காது. அப்படி இருக்க இகழ்பவர் பின்னால் செல்வதால் என்ன பயன்?

தேவர் உலகத்திலும் கிடைக்காத இன்பம் ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரின் ஊடலில் காணப்படும் இன்பம் என்கிறார் வள்ளுவர்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து                (குறள் 1323)

நிலத்தொடு நீர் பொருந்தி இருப்பது போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் கொண்ட ஊடலில் காணப்படும் இன்பம் போல தேவர் உலகத்திலும் கூட உண்டா என்ன?

அடுத்து மேல் உலகம் உண்டா இல்லையா என்ற சர்ச்சைக்கும் அவர் பதில் கூறுகிறார். மேல் உலகம் என்று ஒன்று உண்டு. அது இல்லை என்று நீ கருதினாலும் கூட வறுமையில் வாடுபவர்க்கு கொடு என்கிறார் அவர்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று              (குறள் 222)

மேல் உலகம் என சொர்க்கத்தைக் குறிப்பிடும் குறள் இது.

பிறரிடமிருந்து பொருளைப் பெறலாம் எனக் கூறுபவர் இருப்பினும் அப்படிப் பெறுவது தீமையானது. மேலுலகம் இல்லை என்று கூறினாலும் வறியவர்க்குக் கொடுத்தலே சிறந்தது.

அடுத்து பல்வேறு உலகங்கள் உண்டு என்பதையும் வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். இந்திரனைப் பற்றிக் கூறுகிறார். திரு என்னும் லக்ஷ்மியைப் பற்றிக் கூறுகிறார். திருமால் உறையும் உலகம் ஒன்று உண்டு என்றும் கூறுகிறார்.

திருமால் தாமரையில் உறைந்து வாழூம் உலகை தாமரைக் கண்ணான் உலகு என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். திருமால் தாமரைக்கண்ணன் என்னும் பெயரை உடையவன்.

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு                   (குறள் 1103)

தாமரையில் வாழும் மாயவன் உறையும் வைகுண்ட உலகம் தரும் இன்பமானது தம்மால் காதலிக்கப்பட்டவரின் மெல்லிய தோளின் மேல் சேர்ந்துறையும் இன்பத்தை விட இனிதாக இருக்குமா?

சொர்க்க இன்பத்தை சொர்க்கத்திலும் காணலாம்அதே இன்பத்தை பூவுலகிலும் அனுபவிக்கலாம் என்கிறார் வள்ளுவர்.

ஆக இப்படி பாரதீயப் பண்பிலே தோய்ந்த வள்ளுவரை பல குறள்களிலும் காணலாம்.

அடுத்து நரகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

**      தொடரும்

Ghosts in Shakespeare‘s Plays (Post No.13,816)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,816

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ghosts in Shakespeare‘s Plays (Post No.13,816)

Ghosts appear in five Shakespearean plays: Julius Caesar, Hamlet, Richard the Third, Macbeth and Cymbeline. In all but one of these plays, and in many other Elizabethan and Jacobean dramas, a ghost is a murdered person who needs someone to avenge their deaths.

Their function is to warn the hero of the play to revenge their deaths, and/ or to torment their murderers.

The plays and the ghosts are:

Hamlet: Hamlet Senior.

Macbeth: Banquo.

Richard III: Everyone Richard killed or was in some or another responsible for or connected to.

Julius Caesar: Caesar.

Cymbeline: Pot humus’s father mother and brothers.

****

The appearance of a ghost in the opening scenes of “Hamlet” suggests that this is a play with Catholic sympathies at a time when this was a dangerous affiliation.  Ghosts were a feature of the world of superstition and witchcraft that Protestant Europe wanted to leave behind, making the appearance of the ghost of Hamlet’s father a provocative gesture.

 in “Shakespeare’s Ghosts,” F.W. Moorman sheds some light on some of the earlier history of the supernatural. In the Middle Ages a popular belief was “that the ghosts of criminals, suicides, or murdered persons, walked the earth after death, that they sometimes entered into compacts with the living, that they appeared at midnight and ‘faded on the crowing of the cock,’ and that at their approach the lights grew dim—all this is a part of the primitive ghost-lore common to most European nations” (Moorman 197). This is very similar to contemporary ideas about the supernatural that exist in the United States. Keeping these beliefs in mind, Moorman goes on to say that, because of these beliefs, the Catholic church was able to better prove the idea of purgatory.

Moorman quotes Louis Lavater, who was a Swiss protestant reformer, that Catholics believed that “… they come from Purgatory, and are permitted to walk the earth for a season, ‘for instructing and terrifying of the living.’

Despite the progressing enlightenment of the Renaissance, superstition was still rampant among Elizabethan Londoners, and a belief in such things as astrology was common .

Bear-baiting, was a highly popular spectator sport, and the structure where they were generally held was not unlike the theatres of the day. A bear was chained to a stake in the centre of the pit, and a pack of large dogs was turned loose to bait, or fight, him. The bear eventually tired was mauled by the dogs. Then there were the public hangings, whippings, or drawing and quarterings for an afternoon’s entertainment. So, the violence in some of Shakespeare’s plays was clearly directed at an audience that revelled in it.

****

Did Shakespeare believe in ghosts? We have no evidence as to what Shakespeare personally

believed. What we can say is that he knew that a ghost was a very effective dramatic device. So too with devils and spirits. In the early 1590s, as he was carving out his career as a player and playwright, two of the most

celebrated plays in the London theatre repertoire were Thomas Kyd’s The Spanish Tragedy, which is presided over by the Ghost of Don Andrea and a personification of Revenge, and Christopher Marlowe’s Dr Faustus, conjuror of the devilish spirit Mephistopheles. In each case, the supernatural is the driver of the action: the demand for revenge in one case, the quest for illicit knowledge in the other.

Shakespeare’s ghosts are visible to some but not all characters.

Hamlet is mourning the loss of his father when he hears something worse. The ghost of his father appears to him and asks him to avenge his murder.

(Quotes on Ghosts are given at the bottom of this post)

****

Hindu Ghost Stories

In India, Hindu texts have lot of ghost stories. Katha Sarit Sagara has several ghost stories. Vikram and Vetal is the most popular ghost story. Brahma Rakshas (the brahmin ghost) appear in several books. Even Ramakrishna Paramahamsa told us the ghost that gave a barber seven jars of gold . This is like Hindu Midas story. Swami Vivekananda said that some spirits followed him seeking help and he prayed strongly  for them and then they stopped coming.

Ananatha Rama Dikshitar, famous religious speaker, also narrated a story in the eighth part of Jayamangala Stotra about driving a ghost.

But the most notorious ghost mentioned by Tiru Gnana Sambandar (600 CE) and Tirumular (around 800 CE) and in several Tamil proverbs is the woman ghost of Neeli; She kiiled 70 Chettiars/ Businessmen.

Every town and village in India has a ghost story and people are scared to go there in the night. But the modern men who live in crowded multi story buildings never bothered about lonely places or the ghosts; in fact they are scarce in crowded India.

Hindus believed that the people who died due to murder, suicide, accidents wander as ghosts. Brahma rakshas or the Brahmin ghosts are the ones who committed some offence and died. Till this day we see ghost busters in rural parts. They are more in Kerala.

Many of the ghost stories are false; they are spread by people who wanted some juicy stories. Criminals also used them to keep the people away from their dens.

****

Ghostly Quotes of Shakespeare

A collection of Shakespearean quotations on ghosts, witches and omens :

I have heard (but not believ’d) the spirits of the dead

May walk again: if such thing be, thy mother

Appeared to me last night; for ne’er was dream

So like a waking.

(The Winter’s Tale, 3.3)

Angels, and ministers of grace, defend us!

Be thou a spirit of health, or goblin damn’d.

Bring with thee airs from heaven, or blasts from hell.

Be thy intents wicked or charitable.

Thou com’st in such a questionable shape,

That I will speak to thee.

(Hamlet, 1.4)

But, soft: behold! lo where it comes again!

I’ll cross it, though it blast me. – Stay, illusion!

If thou hast any sound, or use a voice.

Speak to me.

(Hamlet, 1.1)

What may this mean.

That thou, dead corse, again, in complete steel,

Revisit’st thus the glimpses of the moon.

Making night hideous ; and we, fools of nature,

So horridly to shake our disposition,

With thoughts beyond the reaches of our souls?

Say, why is this?

(Hamlet, 1.4)

My hour is almost come,

When I to sulphurous and tormenting flames

Must render up myself.

(Hamlet, 1.5)

O, answer me:

Let me not burst in ignorance! but tell,

Why thy canoniz’d bones, hears’d in death,

Have burst their cerements! why the sepulchre,

Wherein we saw thee quietly inurn’d.

Hath op’d his ponderous and marble jaws,

To cast thee up again.

(Hamlet, 1.4)

Why, what care I ? If thou canst nod, speak too, –

If charnel-houses, and our graves, must send

Those that we bury, back, our monuments

Shall be the maws of kites.

(Macbeth, 3.4)

The ghost of Caesar hath appear’d to me

Two several times by night : at Sardis, once;

And, this last night, here in Philippi fields.

I know, my hour is come.

(Julius Caesar, 5.5)

Glendower. – I can call spirits from the vasty deep.

Hotspur. – Why, so can I; or so can any man:

But will they come when you do call for them ?

(1 Henry IV, 3.1)

Infected he the air whereon they ride,

And damned all those that trust them.

(Macbeth, 4.1)

The night has been unruly: where we lay,

Our chimneys were blown down; and, as they say,

Lamentings heard i’ the air; strange screams of death,

And prophesying with accents terrible

Of dire combustion and confused events

New hatch’d to the woeful time: the obscure bird

Clamour’d the livelong night: some say, the earth

Was feverous and did shake.

(Macbeth, 2.3)

By the pricking of my thumbs,

Something wicked this way comes.

(Macbeth, 4.1)

In ranks and squadrons and right form of war,

Which drizzled blood upon the Capitol;

The noise of battle hurtled in the air,

Horses did neigh, and dying men did groan,

And ghosts did shriek and squeal about the streets.

(Julius Caesar, 2.2)

The bay-trees in our country are all wither’d

And meteors fright the fixed stars of heaven;

The pale-faced moon looks bloody on the earth

And lean-look’d prophets whisper fearful change.

(Richard II, 2.4)

For night’s swift dragons cut the clouds full fast,

And yonder shines Aurora’s harbinger;

At whose approach, ghosts, wandering here and there,

Troop home to churchyards: damned spirits all,

That in crossways and floods have burial,

Already to their wormy beds are gone.

(A Midsummer Night’s Dream, 3.2)

The southern wind

Doth play the trumpet to his purposes,

And by his hollow whistling in the leaves

Foretells a tempest and a blustering day.

(1 Henry IV, 5.1)

Well may it sort that this portentous figure

Comes armed through our watch; so like the king

That was and is the question of these wars.

(Hamlet, 1.1), Bernardo to Horatio, speaking of Hamlet’s father’s ghost.

As stars with trains of fire and dews of blood,

Disasters in the sun; and the moist star

Upon whose influence Neptune’s empire stands

Was sick almost to doomsday with eclipse:

And even the like precurse of fierce events,

As harbingers preceding still the fates

And prologue to the omen coming on,

Have heaven and earth together demonstrated

Unto our climatures and countrymen.

(Hamlet, 1.1)

At my nativity

The front of heaven was full of fiery shapes,

Of burning cressets; and at my birth

The frame and huge foundation of the earth

Shaked like a coward.

(1 Henry IV, 3.1)

No natural exhalation in the sky,

No scope of nature, no distemper’d day,

No common wind, no customed event,

But they will pluck away his natural cause

And call them meteors, prodigies and signs,

Abortives, presages and tongues of heaven.

(King John, 3.4)

Calpurnia here, my wife, stays me at home:

She dreamt to-night she saw my statua,

Which, like a fountain with an hundred spouts,

Did run pure blood: and many lusty Romans

Came smiling, and did bathe their hands in it:

And these does she apply for warnings, and portents,

And evils imminent; and on her knee

Hath begg’d that I will stay at home to-day.

(Julius Caesar, 2.2)

Is this a dagger which I see before me,

The handle toward my hand? Come, let me clutch thee.

I have thee not, and yet I see thee still.

Art thou not, fatal vision, sensible

To feeling as to sight?

(Macbeth, 2.1)

Bloody thou art; bloody will be thy end.

(Richard III, 4.4)

Before the times of change, still is it so:

By a divine instinct men’s minds mistrust

Ensuing dangers; as by proof, we see

The waters swell before a boisterous storm.

(Richard III, 2.3)

How bloodily the sun begins to peer

Above yon busky hill! the day looks pale

At his distemperature.

(1 Henry IV, 5.1)

****

MY OLD POSTS ON GHOSTS

Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind … – Tamil and Vedas

1.      

26 Mar 2016 – Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666). tansen tomb. Research Article by london swaminathan. Date: 26 March ..

Tamil ghost

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › t…

·Translate this page

23 Dec 2012 — This is a story that shook the ancient Tamil Nadu. Neeli in her second birth took revenge upon 72 people and killed all of them. If there is a …

39 GHOSTS IN ATHARVANA VEDA ! (Post.10,447)

Post No. 10,447
Date uploaded in London – – 15 DECEMBER 2021

UNKNOWN ANGELS AND DEMONS IN RIG VEDA-1 (Post No.10,201)

Post No. 10,201

Date uploaded in London – 12 OCTOBER  2021         

MUSLIM, CHRISTIAN SUPERSTITION ANECDOTES (Post No.4725)

Date: 10 FEBRUARY 2018; Post No. 4725

Hindu Beliefs in Shakespeare: Moon, Eclipse, Ghosts (Post No.4096)


Date: 19 July 2017; Post No. 4096

White Mustard Seeds to drive away the Ghosts!

Research Article No.1743; Date:- 23  March, 2015

–Subham—

Tags- Ghosts, Spirits, Apparitions, Shakespeare plays, Hindu Texts, Vikram and Vetal, Brahmarakshas

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்! (Post No.13,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,815

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்!

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார் மீது ஏதொரு நூல் இது போலே

என்று பாரதியார் பாடுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதை பறை அறிவித்தார் ஜெர்மானிய தத்துவ ஞானி ஷோபனேர்!

Arthur Schopenhauer, 19th century German philosopher, said,

“In the whole world there is no study so beneficial and so elevating as that of the Upanishads. It has been the solace of my life, it will be the solace of my death”

இலங்கையின் தலைநகரமான கொழும்பில், சுவாமி விவேகானந்தர் 1897, ஜனவரி 15-ஆம் நாள் ஆற்றிய சொற்பழிவில் ஷோபனேர்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஷோபனேர் வேதங்களின் லத்தீன் மொழிபெயர்ப்பைப் படித்தார். அது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் அதிலிருந்து பிரெஞ்சு இளைஞன் ஒருவனால் லத்தீனிலும் மொழிபெயர்க்கப் பட்டது. அவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பாக அதனைக் கருதுவதற்கில்லை. இருப்பினும் அதைப் படித்த பின் அவர், உபநிடதங்களைப்போல் நன்மையளிப்பதும் உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்வதுமான நூல் எதுவும் இல்லை. அது என் வாழ்விற்கு அமைதியைத் தருவதாக உள்ளது. என் மரணத்திற்கும் அமைதியை அளிப்பதாக இருக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்த மகத்தான ஜெர்மானியப் பேராசிரியர் முன்பே தீர்க்க தரிசனமாக, கிரேக்க இலக்கியங்களால் உலகச் சிந்தனையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைவிட மிக ஆற்றல் வாய்ந்த, மிகவும் தீவிரமான சிந்தனை மறுமலர்ச்சி ஏற்படப்போவதை உலகம் காணப்போகிறது”என்று கூறினார். இப்போது அவரது வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருக்கின்றன. யாரெல்லாம் கண்களைத் திறந்து வைத்துள்ளனரோ, யாரெல்லாம் மேலைத் திசையில் உள்ள பல்வேறு நாட்டு மக்களின் மனப் போக்குகளைப் புரிந்து கொண்டார்களோ. யாரெல்லாம் பல்வேறு நாடுகளைப் பற்றிப் படிக்கின்ற சிந்தனையாளர்களோ, அவர்கள், மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்ற இந்த இந்தியச் சிந்தனைகளால் உலக இலக்கியங்களின் கண்ணோட்டமும் போக்கும் வழிமுறைகளும் வெகுவாக மாறி வருவதைக் காண்பார்கள்.”

****

ஆர்தர் ஷோபனேர்

ஷோபனேர் ஒரு ஜெர்மானிய தத்துவ அறிஞர் .தனித்துவமிக்க தத்துவ அறிஞர். உலகிலேயே உன்னதமான நூல்கள் உபநிஷத்துக்கள்தான் என்று பாரதியார் போல முரசு கொட்டினாலும் அவர் படித்தது, மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாக வந்த உபநிஷதம் ஆகும்; இந்துமதத்தைப் புகழ்ந்ததற்காக முஸ்லீம் மதவெறியன் அவுரங்கசீப் கொடூரமாகக் கொலை செய்த தாரா ஷிகோஷ் பாரசீக மொழியில் ஆக்கிய உபநிஷதத்தை ஒரு பிரெஞ்சுக்காரர் லத்தீன் மொழியில் ஆக்கினார். அதைப்      படித்துவிட்டுப்  புகழந்த  ஷோபனேர், ஸம்ஸ்க்ருதத்தைப் படித்திருந்தால் இந்தியாவுக்கு வந்து தங்கி இருப்பார் ஆனால் அவரது வாழ்க்கையோ. கொந்தளிப்பான வாழ்க்கை.

****

Arthur Schopenhauer 1788- 1860 ஆர்தர் ஷோபனேர்

பிறந்த தேதி -22 February 1788

பிறந்த  ஊர் –  ஜிடான்ஸ்க்/ டான்சிக் , போலந்து (அந்தக் காலத்தில் ஜெர்மனியின் பகுதி) அப்போது ஜெர்மானிக்கு பிரஷ்யா என்று பெயர்

இறந்த தேதி – 21 September 1860 (aged 72)

கல்வி கற்ற இடம் – Illustrious Gymnasium

University of Göttingen, University of Berlin,

University of Jena (PhD, 1813)

தந்தை பெரிய வணிகர் . அவருடைய பெயர் Heinrich Floris Schopenhauer , ஹென்றி ஷோபனேர்

தாயின் பெயர் – ஜோவன்னா ஷோபனேர்

Johanna Schopenhauer அவரும் நூலாசிரியர் 

பார்த்த வேலைகள் – Businessman, Writer

ஜெர்மன் உச்சரிப்பு- ஷோபன்ஹவர்

அவரது 1818-ஆம் ஆண்டு புத்தகமான The World as Will and Representation, Vol. 1: Volume 1 தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட் ரெப்ரசென்டேஷன் என்ற புஸ்தகம் மூலம் புகழ் பரவியது .

ஜெர்மன் இலட்சியவாதத்தின் சமகால கருத்துக்களை நிராகரித்ததால் சர்சைக்குரியவர் ஆனார். அவரது குடும்பமே நாத்தீகக் குடும்பம். ஆனால் பிறந்தது பிராடஸ்டன்ட கிறிஸ்தவப் பிரிவில்; பணம் ஒன்றே குறியாக இருந்த குடும்பம்.

“டேய், படிக்கப் போறீயா? அல்லது என் கூட பயணம் செய்து பிஸினஸ்ஸ கத்துக்கதறியா? “ என்று தந்தை கேட்டார். அப்பா உன் கூட வந்து வியாபாரத்தைக் கத்துக்கறேன் என்று சொல்லி தந்தையுடன் 12 ஆண்டுகள் ஐரோப்பாவை வலம் வந்தார்;  பிற்காலத்தில் இளமையில் கற்காமல் போனதற்கு ஷோபனேர் வருத்தப்பட்டார்.

ஒன்பது வயதான போது, அவரை ஒரு பிரெஞ்சு குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு வாழ்வதற்கு, தந்தை ஹென்றி, ஏற்பாடு செய்தார்; இதனால் அவருக்குப் பிரெஞ்ச்  மொழியிலும் புலமை ஏற்பட்டது.

ஷோபனேருக்குப் பல துறைகளில் ஆர்வம் இருந்தது

துறவு, தன்னலத் துறப்பு, உலகின் மாயத்தோற்றம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களின்  கோட்பாடுகளை ஏற்றுத் தழுவினார். அழகியல், ஒழுக்கம், மற்றும் உளவியல் பற்றிய அவரது கருத்துக்கள் அவருக்குப் பின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஷோபனேருக்கு 17வயதானபோது தந்தை ஹாம்பர்க் நகரில் தற்கொலை செய்து கொண்டார் . இதன் விளைவாக அவருக்கும் சகோதரிக்கும் தாயாருக்கும் பாகப் பிரிவினையில் பெருந்தொகை கிடைத்தது  பின்னர்தான் அவர் படிக்கச் சென்றார். வணிகத் தொழிலைக் கைவிடவும் தீர்மானித்தார். அவர் டெபாசிட் செய்த தொகைக்கு பெரும் வட்டி கிடைத்ததால் பணம் பற்றிய கவலையே இல்லை; ஆயினும் பயணத்தின் போது ஐரோப்பிய மக்களின் வறுமையையும் ஏழ்மையையும் கண்டதால் தத்துவ எண்ணங்கள் மனதில் உதித்தன. ஏழைகள்  படும்பாடு அவர் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணின.

ஷோபனேர் இத்தாலியில் பல நகரங்களில் தங்கினார்  பெர்லினில் ஒரு பெண்ணைத் தள்ளிவிட்டதால் அவள் பொய்சொல்லி கேஸ் போட்டார் அந்த வழக்கில் ஷோபனேர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது அவளுக்கு  வாழ்நாள் முழுதும் ஷோபனேர், பென்சன் தர கோர்ட் உத்தரவிட்டது .

****

பெண்களைப் பற்றி

பெண்கள் நர்ஸ் வேலைக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வேலைக்கும்தான் பொருத்தமானவர்கள். அவர்களே சிறுபிள்ளைத்தனமாவார்கள் ; குறுகிய நோக்கு உள்ளவர்கள் ; அற்பமான எண்ணம் கொண்டவர்கள்; கலைகளில் அவர்களுக்குப் புலமை இல்லை ; நீதி விஷயத்திலும் அறிவு கிடையாது; ஆயினும் முடிவு எடுப்பதில் நிதானமான பேர்வழிகள்; ஆண்களை விட அனுதாபம் அதிகம் உள்ளவர்கள் என்கிறார். ஒருதார மணம் சரியல்ல என்பதும் அவரது கருத்து

பிற்காலத்தில் அவரது சிலையை வடிக்க ஒரு பெண் வந்தாள் ; அவளைப் பார்த்தவுடன் பெண்களைப் பற்றிய கடைசி வார்த்தையையும் சொல்லி விடுகிறேன் என்று பின்வருமாறு சொன்னார் :

ஒரு பெண்மணி பொது ஜனக் கூட்டத்திற்கு மேல் உயர்ந்து நின்றால் மேலும், மேலும் வளர்வாள் ; ஆண்களைவிட உயர்வாள்.

****

எழுதிய நூல்கள் –

The World as Will and Representation, Vol. 1: Volume 1

The World as Will and Representation, Vol. 2: Volume 2:

Essays and Aphorisms (Penguin Classics)

Die Welt als Wille und Vorstellung II: Sämtliche Werke in fünf Bänden, Band 2

The Essays of Arthur Schopenhauer; the Art of Controversy

The Horrors and Absurdities of Religion

Great Ideas : On The Suffering of the World

The Art of Being Right: 38 Ways to Win an Argument

****

ஷோபனேர் ஒரு பன்முகப் பேர்வழி;

பெண்களை வெறுத்தவர்;

தாயாருடன் மோதியவர்

தொழில் ரீதியில் வணிகர்

பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கை உடையவர்

ஐரோப்பாவில் கல்வி கற்போர் அனைவரும் லத்தீன் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதால் அந்த மொழியைக் கற்றவர் .

ஏனைய ஐரோப்பிய தத்துவ ஞானிகளான இம்மமானுவேல் கான்ட் Immanuel Kant (1724–1804) ,ஸ்பினோசா முதலியோரைக் கற்று,  தனது சித்தாந்தத்தை   நிறுவியவர்; பல நூல்களை எழுதியவர். இதன் காரணமாக இவரே தத்துவம் பயிலுவோருக்கு படிப்பில் ஒரு பாடமாக (Subject) வைக்கப்பட்டார்.

–subham—

Tags–Arthur Schopenhauer , ஷோபனேர், பெண்களைப் பற்றி, உபநிஷதத்தின் பெருமை

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள் (Post No.13,814)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,814

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது தமிழ்ப் பழமொழி ; இது போன்ற கருத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள் சீன ஜப்பானிய மொழிகளிலும் உண்டு .

வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய்  புகுந்தது

என்பது சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகளில் உள்ளது .

அவை தெரிவிக்கும் கருத்து :

ஒரு பிரச்சனையைத் தீர்த்தால் இன்னும் ஒரு பிரச்சனை வருகிறது. இதை நாம் நமது குடும்பத்திலும், வீடு கட்டும்போதும், கல்யாணம் செய்யும்போதும், பிசினஸ் நடத்தும் போதும் காண்கிறோம். முதலில் சீனாவில் இந்தப் பழமொழி உருவான கதையைக் காண்போம்.

Chinese

前门打虎,后门打狼 (前門打虎,後門打狼) –

qián mén dǎ hǔ , hòu mén dǎ láng

சீனாவில் க்வான் மென் டா ஹூ ,  ஹூ மென் டா லாங் என்பார்கள்

1.     to beat a tiger from the front door, only to have a wolf come in at the back (idiom); fig. facing one problem after another

ஜப்பானில், சென்மோன் நீ டோரா வோ  புஸேஜி , கொண்மோன் யோ ஓகாமி வோ சுசுமு என்பார்கள்

Japanese

Zenmon ni tora wo fusegi, komon yo okami  wo Susumu

இதோ அந்தக் கதை

ஜப்பான் சக்ரவர்த்தியின் எதிரியை குஸுநோக்கி நசுக்கிவிட்டார் ; சக்ரவர்த்தியை சிம்மாசனத்தில் அமரவைக்கும் தருணத்தில் வேறு ஒரு புரட்சி வெடித்தது. உள் நாட்டில் ஒரு தளபதி புரட்சிக் கொடியைத் தூக்கினார் ; உடனே குஸுநோக்கி அங்கே படைகளுடன் விரைந்தார்; அங்கே அவர் இறந்தார். உடனே மீதோ நகர இளவரசர் ஒரு நடுகல் சமைத்தார். அந்த நடு கல்லில் வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய் புகுந்தது –என்ற பழமொழியை சீன அறிஞர் ஷூ ஷின் சுய் எழுதினார்.

ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட பழமொழிகள் இருக்கிறன.

Misfortunes never come singly

Bad things come in threes

****

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது கதை

முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை சரி செய்வோம்; சனை ஹி சரன் = சனைச் சரன் (மெல்லச் செல்வோன்) என்பதே சரி. மக்களோ  அவனை பகவான் நிலைக்கு உயர்த்தி, சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள் . சூரியனைச் சுற்றிவர நமது பூமிக்கு 365 +  நாள் போதும்  ; ஆனால் சனி கிரகத்துக்கோ முப்பது ஆண்டுகள் ஆகும். ஆகையால் அவனுக்கு நொண்டி, மெல்லச் செல்வோன்  என்றெல்லாம் இந்துக்கள் பெயர் சூட்டினார்கள்.

ஒரு கடவுள் பக்தன் இருந்தான். அவனுக்கு சனி திசை துவங்க இருந்தது ; நீண்ட ஆயுள் உடைய ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சனி திசை வரும். அந்த ஏழரை ஆண்டுக்கலாத்தில் பொங்கு சனி, மங்கு சனி என்றெல் காலத்துக்கு கட்டாயம் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் கஷ்டப்படுவார்கள். சனி திசையை வரக்கூயூட்டிய பக்தனுக்கு கடவுள் அருள் இருப்பதால் சனி , அவன் முன் தோன்றி அப்பா, முன் எச்சக்காரிகை தருகிறேன் ; உன்னைப் பீடிக்கப்பகிறேன் என்கிறார்.

அவனோ அலட்சியமாக நான் பெ எரிய பக்தன் ; நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என்று பாட்டுப் பாடினான் ; சனியும் சிரித்துக் கொண்டே போய்விட்டார் ; சனி திசை துவங்கும் நாள் வந்தது ; இந்த  ஆள் தனது அரண்மனை போன்ற வீட்டை விட்டு சாக்கடை ஓடும் இடத்திலுள்ள குடிசையில் ஒளிந்து கொண்டார் . அவர் புத்தி சனி திசை காரணமாக மங்கியதால் இப்படித் தோன்றியது. சனி நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்ற அசட்டுத் தைரியாத்தில் வாழ்ந்தார் .

சனி திசை முடிந்தது அப்பாடா என்று எருமூச்சுவிட்டுக்கொண்டு வெளியே வந்தார் . சனி ப அவன் முன் தோன்றி என்ன எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நான் சுகம்தான் நீர் சொன்னபடி எண்ணெய் பீடிக்க முடியவில்லையே என்று நகைத்திட்டார்  இல்லையே  நான் உனைப் பிடித்ததால் அந்தக் காலம் முழுதும் றன் மனை வாசத்துக்குப் பதிலாக நீ சாக்கடை நாற்றத்தின்ல் பன்றிகளுடன் அல்லவா வாழ்ந்தாய் அதுதான் நான் செய்த வேலை என்கிறார். அவன் வெட்கித்து தலை குனிந்தான்.

இதைத்தான் நாம் ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடவில்லை என்கிறோம்.

கடவுள் நம்பிக்கை இருந்தால் அந்தக் கஷ்டம் நமக்கு கஷ்டம்போலத் தோன்றாமல் களிக்கலாம். அனால் இறை நமிக்கை தொடரவேண்டும் நம்பி

கம்பளிக்காரனுக்குப் பயந்து கட்டடியைக் கட்டிக்க  கரடி கொண்டானாம் என்பது போன்ற பழமொழிகளும் உண்டு.

சாண் ஏற முழம் சறுக்குகிறது

One step forward and two steps back

****

உரல் போய் மத்தளத்தோட முறையிட்டது போல

As the mortar went to the tomtom with its complaints.

மத்தளம்= drum, tomtom ; beaten on both sides.

Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ; அப்படி இருக்கும்போது, உரல் போய் மத்தளத்திடம் புகார் மனு கொடுத்ததாம்,

****

இராவுத்தனை தள்ளியதோடும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை!

It is said that the horse not only threw his rider, but dug his grave also.

It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

போன்ற பழமொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்!

–subham—

Tags- குதிரை, உரல் ,மத்தளம், ராமேஸ்வரம் ,சனீஸ்வரன் விடாது ,கதை , பட்ட காலிலே படும்,வாசல், புலி, கொல்லைப் புறத்தில், ஓநாய்  . சீன ஜப்பானிய தமிழ் பழமொழிகள்

சந்திரனுக்கு உடல் ஊனம்; சனிக்கோ கால் ஊனம்! (Post No.13,813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.813

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தனிப்பாடல் தமிழ் இன்பம் 

சந்திரனுக்கு உடல் ஊனம்சனிக்கோ கால் ஊனம்! 

ச.நாகராஜன் 

குறையில்லாத மனிதனே இல்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் குறை உண்டாம்.

சொக்கநாதப் புலவர் தன் பாடல் ஒன்றில் வரிசையாக அடுக்குகிறார் தேவர்களின் குறைகளை!

 சந்திரனுக் குடலூனந் தனதனுக்கோர் கண்ணூனந் தருவினீழல்

 இந்திரனுக்கோ பகக்குறையா மியமனுக்கோ புழுக்காலா மிரவியீன்ற

 மைந்தனுக்கோ கால்முடமாம் வனசனுக்கோர் தலைகுறையாம் வரலாறீதேல்

 பந்தமுள மானிடரை விதிவிடுமோ ஆலவாய்ப் பதியுளானே

பாடலின் பொருள்: 

ஆலவாய்ப் பதியுளானே – திருவாலவாய் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருப்பவனே

சந்திரனுக்கு உடல் ஊனம் – சந்திரனுக்கு உடல் பழுது

தனதனுக்கு  ஓர் கண் ஊனம் – குபேரனுக்கு ஒரு கண் பழுது

தருவின் நீழல் இந்திரனுக்கு பகக்குறி – கற்பகத்தருவின் நிழலில் இருக்கின்ற இந்திரனுக்கோ உடம்பு முழுவதும் பெண் குறி

இயமனுக்கோ புழுக்கால் – யமனுக்கோ புழுக் கால்

இரவி ஈன்ற மைந்தனுக்கோ கால் முடமாம் – சூரியன் பெற்ற புதல்வனான சனிக்கோ கால் முடம்

வனசனுக்கு ஓர் தலை குறையாம் – தாமரை மலரை ஆசனமாகக் கொண்ட பிரம்மாவுக்கு ஒரு தலை குறையாகும்

வரலாறு ஈதேல் – வரலாறு இதுவென்றால்

பந்தமுள மானிடரை – பாசக்கட்டுள்ள மானிடரை

விதி விடுமோ – விதியானது விட்டு விடுமா என்ன?!

 தனது குறையையும் அவர் சூசகமாக ஒரு பாடலில் கூறி திப்பையராயன் என்ற வள்ளலிடம் வேண்டியதைப் பெற்றார்.

இத்தோடு சூரியனுக்கு பல் ஊனம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்!

பாடல் இதோ:

 இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா நக்கினி யுதரவிட் டகலான்,

 எமனெனைக் கருதா னரனெனக் கருதி நிருதிவந் தென்னை யென்செய்வான்

 அந்தமாம்வருண நிருகண்விட்டகலா னகத்தினின் மக்களும் யானும்

 அநிலம தாக மமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகில்

 சந்ததமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித்

 தலைசெயு மெம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவக் கோப்பையளுதவும்

 மந்தர புயத்தான் றிப்பைய ராயன் மகிழ்வொரு விலையிலா வன்னோன்

 வாக்கினாற் குபேரனாக்கினா னவனே மாசிலீ சாணபூ பதியே

பாடலின் பொருள்: 

இந்திரன் – தேவேந்திரன்

கலை ஆய் – ஒரு கூறாகி

என் மருங்கு இருந்தான் – என்னிடத்தில் இருந்தான்

அக்கினி – அக்கினியானவன்

உதரம் விட்டு அகலான் – என் வயிற்றை விட்டு நீங்க மாட்டான்

என்னை அரன் எனக் கருதி – என்னை சிவன் என்று நினைத்து

எமன் கருதான் – எமன் என்னை நினைக்க மாட்டான்

நிருது வந்து என்னை என் செய்வான் – நிருதியானவன் வந்து என்னை என்ன செய்வான்

அந்தம் ஆம் வருணன் – அழகாகிய வருணன்

இரு கண் விட்டு அகலான் – இரண்டு கண்களையும் விட்டு நீங்க மாட்டான்

அகத்தினில் – வீட்டில் மக்களும் யானும்

அநிலமது ஆகும் அமுதினைக் கொள்வோம் – காற்றாகிய அமிர்தத்தை உட்கொள்வோம்

உலகில் – உலகத்தில்

எமக்கு எதிர் – எமக்கு நிகரானவர்

யார் உளார்- யார் இருக்கின்றார்கள்

சந்ததம் – எப்பொழுதும்

இந்த வரிசையைப் பெற்று – இந்த முறைமையைப் பெற்று

தரித்திர ராசனை வணங்கி – தரித்திரராஜனைத் தொழுது

தலைசெயும் எம்மை – தழைக்கின்ற எங்களை’

நிலை செய் – நிலைப் படுத்திய

நற்கீர்த்தி – நல்ல புகழை உடைய

சாளுவ கோப்பையன் உதவும் – சாளுவ கோப்பையன் பெற்ற

மந்தரபுயத்தான் – மந்தரமலை போலும் தோள்களை உடைய

திப்பையராயன் – திப்பையராயன் என்பான்

மகிழ்வொடு – சந்தோஷத்துடன்

அன்னோன் வாக்கினால் – அவனது சொல்லினால்

குபேரன் ஆக்கினான் – குபேரனாகச் செய்தான்

அவனே மாசிலாத – அவனே குற்றமில்லாத

ஈசான பூபதி – ஈசானத்திற்கு அதிபதியானவன்!

அருமையான இந்தப் பாட்டின் மூலம் தன் அவல நிலையைத் தெரிவிக்கிறார் கவிஞர் சொக்கநாதர். 

தான் உடுத்திய ஆசை கந்தையாய்ப் பல துளைகள் உள்ளது என்பதை ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் மேனிக்கு உவமையாகக் கூறினார்.

பசி ஒருபோதும் தன்னை விட்டு நீங்கவில்லை என்பதை அக்கினி உதரம் விட்டு அகலான் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

வருணன் இரு கண் விட்டு அகலான் என்று கூறி தனது இரு கண்களிலும் நீர் அழுகையாகப் பொழிகிறது என்று நயமாகக் கூறினார்.

 அநிலமதாகும் அமுது என்று கூறி வாயுவையே ஆகாரமாகக் கொள்வதைக் குறிப்பாகக் கூறினார். 

இப்படி இந்திரன் முதலிய அஷ்டதிக்பாலகர்களும் தேவர்களும் எனது வசமாய் இருக்கிறபடியால் எனக்கு நிகரானவர் உலகத்திலேயே இல்லை என்று அவர் கூறுகிறார்.

 பசி வருத்துவதை புகழ் மொழி போல இரு அர்த்தம் கொண்ட பாடலாக உரைத்தார் சொக்கநாதர்.

 அவர் பசிப்பிணி தீர்ந்தது; குபேரன் அளவு செல்வம் குவிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

 தமிழின் அழகையும், புலவரின் கவித்திறனையும் தமிழ் வளர்க்கும் வள்ளல்களின் வள்ளன்மையையும் காட்டும் பாடல் இது! 

**

At the front door a tiger was checked, at the back door a wolf entered ! (Post No.13,812)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,812

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Gu shi  quong lin – Kojikerin

Chinese

前门打虎,后门打狼 (前門打虎,後門打狼)

 – 

qián mén dǎ hǔ , hòu mén dǎ láng

1.     to beat a tiger from the front door, only to have a wolf come in at the back (idiom); fig. facing one problem after another

Japanese

Zenmon ni tora wo fusegi, komon yo okami  wo Susumu

The story for this proverb is

Kusunoki has just succeeded in crushing a powerful enemy of the Japanese

Emperor and restoring the latter to his throne , when another chief revolted. Realising that the situation is desperate, and there was no hope of his return in safety, Kusunoki departed to the battle. The prince of Mito set up a memorial stone to Kusunoki , and the epitaph, containing the proverb cited, was written by the naturalised Chinese scholar Shu Shin -sui.

The meaning is when one problem is sorted out another problem crops up.

This is very common in many of our works such as building work or health issues or family problems.

In English , we have Misfortunes never come singly

Bad things come in threes

Tamils also have equivalent proverbs,

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

Even when one goes to hoy place like Rameswaram evil planet Saturn/ Saneesvaran follow

There is a story about Sani and Siva Devotee

Planet Saturn/ Saniachcharan told a devotee of Lord Siva that he is going to catch him during Sani Disa (Hindu horoscope shows every one is affected by planet Saturn during one’s life time). He told him that he is a devotee of all powerful Siva and no one can catch him. Sani even told the exact time of his attack . The devotee hid himself for the whole period in the dirtiest place like a drainage thinking that Sani wont be able to find him there. After the attack time was over, Siva ‘s devotee came out and teased Sani,

Hey Saturn, I told you can’t catch me.

Saturn smiled and said,

Oh Ye All Powerful devotee . Where were you during Sani Disa period?

Oh now I can reveal the secret. I was in a place like a drainage.

Sani laughed and said, I made you to hide there. You let your beautiful palace like house or Siva Temple and spent your time at the worst place where only pigs roam.

The devotee was speechless.

It is like tackling tiger at  the front door  and letting in wolf through the back door .

****

சாண் ஏற முழம் சறுக்குகிறது

One step forward and two steps back

****

உரல் போய் மத்தளத்தோட முறையிட்டது போல

As the mortar went to the tomtom with its complaints.

மத்தளம்= drum, tomtom ; beaten on both sides.

Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.

****

இராவுத்தனை தள்ளியதோடும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை

It is said that the horse not only threw his rider, but dug his grave also.

It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

****

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்

Misfortunes never come single.

—subham—

Tags- Tiger, wolf, front door back door, Chinese, Japanese, Proverbs, planet Sani, Saturn, devotee, drainage

அண்டங்காக்கை ஜோதிடம்-2 (Post No.13,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,811

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – 2

பிருஹத் ஜாதகம் என்னும் ஜோதிட நூலையும் பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியாவையும் வராஹமிஹிரர் எழுதினார். இந்தக் கலைக்களஞ்சியத்தில்  அத்தியாயம் 88 சகுனங்கள் பற்றியது ; அதில் காகங்கள் பற்றி மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடுகிறார்.அவற்றின் குரல் கர்ண கடூரமாக இருந்தால் ஆபத்து;. இரண்டு பறவைகள் வலமாகப் பறந்து சண்டையிட்டு ஒன்று இறந்தால் ஆபத்து என்கிறார்.

அத்தியாயம் 45- ல் ,  16  ஸ்லோகங்களில் வாலாட்டி குருவி ஜோதிடம்- சகுனம் பற்றி     எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடல்களில் அதன் நிறம் எப்படி இருந்தால் வெற்றி,  அது எங்கெங்கு காணப்பட்டால் வெற்றி, மன்னன் படை எடுக்கும்போது அது எங்கு காணப்பட்டால் வெற்றி என்றெல்லாம் சொல்கிறார். அதே போல, தோல்வி ஏற்படுவது எப்போது என்றும் அந்தப் பறவையை வைத்துச் சொல்கிறார்.

வாலாட்டிக் குருவி பறவையின் ஆங்கிலப் பெயர் Wagtail (khañjana-kalakṣaṇa)

ஸம்ஸ்க்ருதப் பெயர் – கஞ்சன கலக்சன ( Mounta alla, Alba )

****

உலகம் முழுதும்  அண்டங்காக்கை பற்றி அபூர்வமான செய்திகள் உள்ளன :-

ண்டங்காக்கை என்பது பெரும்பாலும் கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. ஆனால் சில கலாசாரங்கள் இதை அறிவின் சின்னமாகவும் கருதுகின்றன.

பைபிளில் முதல் அத்தியாயத்திலேயே இது வருகிறது  கப்பலில் சென்ற நோவா , கரையை நெருங்கி விட்டோமா என்று அறிய இந்தப்  பறவையை அனுப்புகிறார். மேலும் எலிஜாவுக்கு Prophet Elijah ரொட்டியும் மாமிசமும் கொண்டுவருகிறது..

பாபிலோனியர்கள் இதைக் கெட்ட பறவையாகவே கருதினர்.  இது 13 ஆவது மாதத்தை ஆளும் பறவை. இந்துக்கள் அந்த மாதத்தை மல மாதம் என்று சொல்லி நல்ல காரியங்களை ச்      செய்யமாட்டார்கள்.

கிரேக்க  புராணத்திலும்  இந்தப்  பறவைக்கு கெட்ட பெயர்தான். இது ரகசியங்களை வெளிப்படுத்தியதால், இதன் வெள்ளைச் சிறகுகளை  அப்பலோ APOLLO கருப்பாக மாற்றினார். அதீனாவின் ATHENA  பறவையாக இருந்த இதை பதவி நீக்கம் செய்து ஆந்தையை அதீனா அருகில் அமர்த்தினர்.

தண்ணீர் கொண்டு வா என்று சொல்லி .அண்டங்காக்கையை, அப்பலோ அனுப்பினார். அது ஒரு அத்தி மரத்துக்கு அடியில் அமர்ந்து அதன் காய்கள் பழமாகும் வரை காத்திருத்தது. இதனால் கோபமுற்ற அப்பலோ அந்தப் றவையை வாநத்திற்கு அனுப்பி நட்சத்திர மண்டலம் ஆக்கினார். அது மட்டுமல்லாமல் அதை ஹைட்ரா  நட்சத்திர மண்டலம் எப்போதும் கண்காணிக்கும் இடத்தில் வைத்தார் .

மூத்த பிளினியும் இந்தப்பறவையின் குரல் பற்றி எழுதியுள்ளார்.

இந்தப் பறவை அலகின் வழியாக முட்டையிடும் என்று    பழங்கால மக்கள் நம்பியதால் கர்ப்பிணிப் பெண்கள் இதன் அருகில் வரமாட்டார்கள். அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழாது என்ற ச்சகமே இதற்குக்  காரணம்.

****

இது பற்றிய நல்ல செய்திகளும் உண்டு; அப்பலோ இந்தப் பறவையின் வடிவத்தில் சன்டோரினி தீவிலிருந்து வழி காட்டிப் பலரையும் வெளியே கொணர்ந்தார். அலெக்சாண்டருக்கும் இந்தப் பறவை வழிகாட்டியது..

ரோமில் மித்ரா  வழிபாட்டுக்காரர்களும் வட அமெரிக்காவில் பழங்குடி மக்களும், அண்டங்காக்கையை,  தங்கள் சின்னமாக வைத்துக் கொண்டனர்

நார்ஸ் Norse Mythology  புராண கதைகளில் ஓடின்  ODIN என்னும் தெய்வத்துக்குத் துணையாக வருவது இரண்டு அண்டங் காக்காய்கள்தான் ஒன்றின் பெயர் சிந்தனை இன்னொன்றின் பெயர் ஞாபகம்.

பல கிறிஸ்தவ சான்யாசிகளுடன் இந்தப் பறவையைக் காணலாம்.

சீனாவில் மூன்றுகால் அண்டங்காக்கையை,  சூரியனுடன் தொடர்புபடுத்தி கதைகள் செல்கின்றனர்.; சூ வம்ச அரசர்கள் சோசர்களைப்போல சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக்கொண்ண்டனர் அவர்களுக்கு சிவப்பு நிறப்   பறவைகள் சொந்தமாகும் . அவர்கள் வணங்கிய தெய்வங்களுக்கு இந்தப் பறவைகள் உணவு கொண்டு வந்தன. 

 –subham–

Tags- ஷேக்ஸ்பியர், அண்டங்காக்கை, காகம் ,ஜோதிடம் – Part 2, Wagtail,  வராஹமிஹிரர், வாலாட்டிக் குருவி

அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,810

Date uploaded in London – 24 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810)

முதலில் இரண்டு நியாயங்களைக் காண்போம்.

ஸம்ஸ்க்ருதத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லாத நியாயங்கள் சுமார் ஆயிரம் உள்ளன. அருந்ததி நியாயம் , மர்கட நியாயம் முதலியன பலருக்கும் தெரிந்திருக்கும் . கழுதை நியாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

रासभरतितन्यायः ராசபரதிதந்யாயஹ என்பது இதன் பெயர்

கழுதை கத்துவது முதலில் உரத்த குரலில் துவங்கும்; பின்னர் குறைந்துகொண்டே வரும்; ரோட்டில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்கார் சங்குகள் ஒலிப்பதைக் கேட்கிறோம்; அவை தூரத்தில் செல்லச் செல்ல ஒலி குறைந்து கொண்டே வரும்.; ஆக தற்காலத்தில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் கார் நியாயம் என்று கூடப் பெயர் வைக்கலாம்.

இதன் கருத்து சில விஷயங்கள் முதலில் பெரிதாகப் பேசப்படும். நாட்கள்  செல்லச் செல்ல சத்தம் குறைந்துகொண்டே வரும்.

பத்திரிகைகளில் இதை நன்றாகவே பாக்கிறோம். முதலில் பெரிதாக அடிபடும் விஷயங்கள் முடிவு தெரிவதற்குள் அடுத்த கழுதை வந்து சப்தம் போடுகிறது!

****

புரிடான் கழுதை முரண்பாடு 

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவ ஞானி ஜான் புரிடான் ஒரு கழுதை முரண்பாட்டைச் சொன்னார்.

பசியால் வாடும் ஒரு கழுதை நடுவில் நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமதூரத்தில் ஒரு புறம் தண்ணீர் எதிர்ப்புறத்தில் உணவு வைப்போம். அது எந்தப் பக்கம் போகும்?

அவர் சொல்கிறார் எந்தப் பக்கமும் போகாமல் செத்து விடும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் நவீன கால உரைகாரர்கள் சொல்லுவர்.

இரண்டு கழுதைப் பேர்வழிகள் தேர்தலில் நிற்கிறார்கள்; நடுவில் நிற்கும் கட்சி சாரா வாக்காளர் யாருக்கும் வோட்டுப் போடாமல் இருந்து விடுவார் இதுதான் புரிடான் கழுதை முரண்பாடு Buridan’s ass” or “Buridan’s donkey”: 

The French philosopher Jean Buridan (1300-1358) is the namesake of the philosophical paradox known as “Buridan’s ass” or “Buridan’s donkey”:

The paradox: A hungry and thirsty donkey is placed exactly between a stack of hay and a pail of water. Because there’s no reason to choose one over the other, the donkey is unable to decide and starves to death.

****

வேண்டாத ஆறு

1.பாலஸகித்வம் அகாரண ஹாஸ்யம் ஸ்திரீஷு விவாதம்  அஸஜ்ஜன சேவா

கர்தப யானம்   அஸம்ஸ்க்ருத வாணீ  ஷட்ஸு நரோ லகுதாம் உபயாதி

மனிதனை இழிவு அடைய வைக்கும் ஆறு செயல்கள் :

1.சிறுவர்களுடன் நட்புகொண்டு அவர்களுடன் திரிவது;

2.காரணமின்றி சிரிப்பது;

3.பெண்களோடு வாக்குவாதம் செய்வது;

4.கெட்டவனுக்கு பணியாற்றுவது / சேவை செய்வது;

5.கழுதை மீது சவாரி செய்தல்;

6.சம்ஸ்க்ருத மொழி அறிவு இல்லாமல் அதைப் பயன்படுத்துவது;

ஆகிய ஆறும் ஒருவரை நகைப்புக்குள்ளாகி விடும்.

ராமாயணத்தை பலரும் ராமயாணம் என்பர். வேங்கடாசலபதியை வெங்கடாஜலபதி என்பர் ; இது ஸம்ஸ்க்ருதம் அறியாமையைக் காட்டிவிடும் கேது எனற கிரகத்தை KETU என்று சொல்லவேண்டும்; KEDHU என்று சொல்லக்கூடாது.

****

2.முக்தா  பலைஹி கிம் ம்ருக பக்ஷிணாம் ச

மிஷ்டான்ன பானம் கிமு  கர்த்தபானாம்

அந்தஸ்ய தீபோ பதிரஸ்ய கீதம்

மூ    கஸ்ய கிம் சாஸ்த்ரா கதா ப்ராஸங்கஹ

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் முத்துக்களால் பயன்?

கழுதைகளுக்கு அறுசுவை உணவைப் படைப்பதால் என்ன பயன்?   

குரு ட னுக்கு பலவண்ண விளக்குகளும்

செவிடனுக்கு இனிய சங்கீதமும் பயன் தருமா ? தராது;

அது போல

முட்டாளுக்கு சாஸ்திர அறிவுரைகளை எடுத்துரைப்பதும் பலன் தராது .

நீதி – நாய்வாலை நிமிர்த்த முடியாது

பாத்திரம் அறிந்து தானம் செய்

****

3.வாங் மாதுர்யாத் சர்வ லோக ப்ரியத்வம்

வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்

கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ  பநீதம்

கோ வா லோகே கர்தபஸ்யா (அ )பராதஹ

குயிலினிடத்தில் அதன் குரல் இனிமையால் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது ;

கழுதையின் குரலால் ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது ;

அதே போல ஒருவரின் இனிமையான சொற்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் கடுஞ் சொற்களால் வெறுப்பும் உண்டாகின்றது

(கருத்து- எப்போதும் இனிமையே பேசுக)

*****

கழுதையும் குதிரையும்

4.போதித்தோ (அ)பி பகு சூக்தி விஸ்தரைஹி

கிம் கலோ ஜகதி  சஜ்ஜனோ பவேத்

ஸ்நாபிதோ(அ)பி  பஹூசோ நதி ஜலைஹி

கர்த்தபஹ கிமு ஹயோ பவேத் க்வசித்

எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு  புண்ணிய நதி நீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!

****

கழுதையின் தூசி

5.அஜா ரஜஹ கரா ரஜஹ ததா  சம்மார்ஜநீ ரஜஹ

தீப மஞ்சகயோஹா  சாயா சக்ரஸ்யாபி  ச்ரியம் ஹரேத் 

கழுதையின் தூசி , ஆட்டின் தூசி  துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ  இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)

****

6.ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்

ச ஏவ தசபிப் புத்ரைர்  பாரம் வஹதி கர்த்தபீ.  

–சுபாஷித ரத்ன சமுச்சயம்

ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.

(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)  

****

7.யதா கரச் சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேதா ந து சந்தனஸ்ய

ததைவ லோகா பஹுஸாஸ்த்ரயு  க்தாஹா தர்மே ஹீனாஹா  பசுபிஸ் சமானஹா —சமயோசித  பாஹ்ய மாலா

 சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் ,  நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.

ஒப்பிடுக —

கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர  வாசனை?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?

****

8.கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்

ருஷ்டஹ ச  பத்ப்யாம் மாம்  ஹந்தி  மூர்கபூஷா பலம் த்விதம்

கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.

—subham—

Tags- அடச் சீ, கழுதை! கழுதை, எட்டு, ஸம்ஸ்க்ருத கவிதைகள், கழுதை நியாயம், Buridan, donkey, ass, புரிடான் கழுதை முரண்பாடு