வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி ! (Post No.13,980)

Written by London Swaminathan

Post No. 13,980

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாராஷ்டிரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு அற்புதம் இது. எருமை மாடு வேதம் சொன்னவுடன் பிராமணர்கள் வாயடைத்துப் போய் மிரண்டு விட்டனர்; பின்னர் அந்த எருமை மாட்டுக்கு மரியாதையாக சமாதி காட்டினார்கள்!

தமிழ் நாட்டில்  ஆழ்வார்களையும்களும் , நாயன்மார்களையும் எப்படி எல்லோரும் அறிவார்களோ தைப் போல மகாராஷ்டிரம் முழுவதும் ஞானதேவர் மற்றும் அவருடைய சகோதர ,சகோதரிகள் , சீடர்கள் பெயர்களை எல்லோரும் அறிவார்கள்  .

குருவின் கட்டளையின் பேரில் ஞானதேவரின் தந்தை, துறவறத்தை விட்டு இல்லறத்திற்கு வந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களை மஹாராஷ்டிர பிராமணர்கள் ஜாதியிலிருந்து ஒதுக்கிவிட்டு எந்த சடங்கினையும் செய்ய மறுத்து வந்தனர். காரணம் ? துறவறத்தில் இருந்தவர் எப்படி இல்லறத்துக்குத் திரும்ப முடியும் ? அதற்கு  சாஸ்திரத்தில் சான்றே இல்லையே!

அந்த வட்டார அரசனுக்கு இது தெரிய வந்தது. உடனே வறுமையில் வாடிய அந்தக் குடும்பத்துக்கு பொன்னும் மணியும் கொடுத்து ஆதரித்தான். ஆயினும் பிராமண குருவிடம் சர்டிபிகேட் வாங்கிவந்தால் நல்லது என்று எண்ணி மந்திரியுடன் ஞானேஷ்வர் குடும்பத்தைப் பைதான் / பிரதிஷ்டான நகருக்கு அனுப்பினான். அந்த பிராமண குரு அவர்கள் வருவதற்கு முன்னாலேயே இவர்களைப் பற்றி அறிந்து இருந்தார்; ஏனெனில் இருபது பிராமணர்கள் புகார் மனு கொடுத்திருந்தனர்; ஆகையால் வந்தவுடன் குடும்பத்தின் மீது வெறுப்பைக் கொட்டினார். ஞானேஸ்வர் சின்னப் பையன்; ஞான சம்பந்தர்   போல இறைவனின் வடிவம்; ஆகையால் முறையான வாக்குவாதம் மூலம் பிராமணன் என்பவன் செயல்களினால் பிராமணனா பிறப்பினால் பிராமணனா என்று அடிப்படைக் கேள்வியை எழுப்பினார்.

பகவத் கீதையிலும் தமிழ் வேதமான திருக்குறளிலும் சொன்ன வாதத்தை முன்வைத்தார்; பிறப்பொக்கும் எல்லா உயிரும், செய்தொழிலால்தான் வேற்றுமை என்ற வள்ளுவர், கிருஷ்ணரின் வாதத்தை எடுத்துரைத்தார்  அவர் கேட்பதாக இல்லை. அந்த நேரத்தில் தண்ணீர் பானைகளை சுமந்து கொண்டு ஒரு எருமை வந்தது.

ஞானேஸ்வர் சொன்னார். உங்களுடன் வாதம் செய்வதைவிட இந்த எருமையுடன் வாதம் செய்யலாம். அதற்குள்ள அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உங்களுக்கு இல்லையே என்றார். பிராமண குருவுக்குக் கோபம் பொங்கியது ; அடா! சிறுவா!  ஏது சொன்னாய் ?என்னை எருமையுடன் ஒப்பிட்டாயா? இப்போது அந்த எருமையின் அறிவினைக் காட்டாவிடில் உன்னை இங்கேயே வெட்டிப்போடுவேன் என்று வசனம் பேசினார்

சிறுவனான ஞானேஸ்வர் எருமை அருகில் சென்று, அதன் தலையில் கையை வைத்தான். அது நாலு வேதங்களில் இருந்தும் வேத மந்திரங்களை உச்சரித்தன. இதற்குள் பெரிய கூட்டமும் கூடிவிட்டது.எருமை மேலும் சொன்னது:

ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

வேதோ முக்யஸ்து விப்ராணாம் ப்ரஹ்ம ஞானம் து ப்ரஹ்மணாம்

பொருள்

ஒருவன் பிறவியில் சூத்திரனானகப் பிறக்கிறான். செய்யும் தொழிலால்தான் அந்தணன் ஆகிறான். உயர்ந்தவர்களுக்கு வேதத்தின் பொருளை  , அதாவது பிரம்மத்தை, அறிவதே குறிக்கோள்; அதனால்தான் அவனை பிராஹ்மணன் என்கிறோம் .

பிராமணனுக்கு இருபிறப்பாளர் என்று பெயர்; இதை சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் காணலாம். பிறப்பில் எவரும் பிராமணர் இல்லை; வேதம் கற்றவுடன் அவர்களுக்கு இரண்டாவது பிறப்பு வருகிறது இதே போல அவரவர் செய்யும் தொழிலால் அவர்களுக்கு ஜாதி ஏற்படுகிறது

இதை வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.—குறள் 972

இது பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்:|| 4-13

பொருள்:

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன். செயற்கையற்றவனும், அழிவற்றவனுமாகிய நானே அவற்றைச் செய்தவன் என்று உணர்வாய்.4-13

மேற்கூறிய ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

ஸ்லோகமும் இதையே சொன்னது.

*****

தாஸி கர்ப்ப ஸமுத் பூதோ நாரதஞ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

நாரதர், தாசியின் வயிற்றில் தோன்றியவரே ; ஆயினும் தவம் இயற்றி பிரம்மாவின் குமாரராக ஆனார்; இவருடைய ஜாதி என்ன என்று கற்பனையே செய்ய முடியாது (கூடாது).

****

ஊர்வசீ கர்ப்ப  ஸம்பூதோ வசிஷ்டஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

ஊர்வசீயின் வயிற்றில் பிறந்த வசிஷ்ட மஹாமுனிவர் தவத்தால் மஹா முனிவர் ஆனார் ;இவருடைய ஜாதி என்ன என்றும் சொல்லவே முடியாது (கூடாது).

****

சுனகீ கர்ப்ப  ஸம்பூதோ செள னககஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

பெண் நாயின் வயிற்றிலிருந்து தோன்றிய செளனக முனிவர் தவம் செய்து பிரம்ம குமாரர் ஆனார். இவருடைய ஜாதியையும் கற்பனை செய்துவிட முடியாது / கூடாது.

ஒருவன் பிறப்பினால் பிராம்மணன் ஆகிறானா? அல்லது வேதம் முதலிய நூலின்

உண்மைப்பொருளை உணர்ந்து பிரம்மத்தை அறிவதால் பிராம்மணன் ஆகிறானா? என்று ஞானேஸ்வர் கேட்ட கேள்விக்கு மேற்கூறிய நான்கு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை சொல்லி எருமை மாடு பதில் சொன்னது  எல்லோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்து நின்றனர்

பிராமண குருவின் நற் சான்றிதழ் தேவையில்லாமேயே எல்லோரும் ஞானேஸ்வரரை அங்கீகரித்தனர்; அவர் எழுதிய ஞானேஸ்வரி என்ற பகவத் கீதை விளக்க உரை, பட்டி தொட்டிகள் எல்லாம் முழங்கின. பாமரரும் படித்தோரும் அதை ஒலித்தனர் .

நிவ்ருத்தி -ஞானதேவ்- சோபாந=  முக்தா  பாய்–  ஏக நாத—நாமதேவ்– துக்காராம் ; ஸமர்த்த ராமதாஸ் கீ ஜெய் —என்ற கோஷம் எல்லா பஜனைகளிலும் இன்றும் முழங்குகிறது !

வேதம் சொன்ன  எருமை மாட்டினை பூமியில் புதைத்து சமாதியும் கட்டினார்கள்; அதை இன்றும் காணலாம் என்று சுவாமி சிவானந்தர்  ஞானியர் வரலாறு என்ற நூலில் செப்புகிறார்[  ஸ்ரீ ஞாந  தேவரின் முழு சரித்திரமும்  ஸ்ரீ மஹா பக்த விஜயம் என்ற லிப்கோ நூலிலும் கிடைக்கும்

—subham—-

Tags- எருமை மாடு, வேதம், சமாதி, ஞானேஸ்வர், ஞானதேவ், மகாராஷ்டிரம்

Leave a comment

Leave a comment