ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16 (Post.14,150)

SYDNEY HARBOUR BRIDGE

OPERA HOUSE FROM MY FERRY IN PARRAMATTA RIVER.

Written by London Swaminathan

Post No. 14,150

Date uploaded in Sydney, Australia – 28 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16

பாரமேட்டா நதியில் படகு சவாரி

SWAMINATHAN IN OPERA HOUSE 

லண்டன் மாநகருக்கு வந்தால் தேம்ஸ் நதியில் படகு சவாரி செய்ய வேண்டும் ; முக்கிய இடங்களைப் பார்க்க கிரீனிச் வரை செல்ல வேண்டும் . பாரீஸ் சென்றால் செயின் நதியில் படகு சவாரி செய்ய வேண்டும் ; முக்கிய இடங்களைப் பார்க்க .வேண்டும்;

நியூயார்க் சென்றால் லிபர்டி சுதந்திர தேவி சிலையைப் பார்க்க கடலில் படகு சவாரி செய்ய வேண்டும் ; அதே போல சிட்னி நகருக்கு வந்தால் பாரமேட்டா நதியில் படகு சவாரி  செய்து எல்லா இடங்களையும் பார்ப்பது அவசியமாகும்.

இவை அனைத்தையும் செய்த நான், நேற்று 27=ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பாரமேட்டா நதியில் படகு சவாரி செய்தேன். ஆபரா ஹவுஸ் வரை சென்று முக்கிய இடங்களைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்த சவாரியை விட இப்போது அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது   .

இந்தப் படகுகள் பெரி FERRY  எனப்படும் சிறிய கப்பல்களைப் போன்றவை 100 முதல் 300 ஆட்கள் வரை அமர்ந்து செல்லலாம்

The Parramatta River is one of Sydney’s most iconic waterways. It extends from Blacktown Creek in the west to where it meets the Lane Cove River in the east and flows into Sydney Harbour.

FERRY 

பாரமேட்டா என்ற போர்டினை சிட்னி செல்லும் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் காணலாம்; இது ஆஸ்திரேலியா ஆதிவாசிகளின் மூலம் உண்டான பெயர் ; பல நதிகள் கூடி சிட்னி துறைமுகத்தில் விழும் நதிக்கும் இதே பெயர்; இதில் பல சிறிய ஓடை. கள்   கலக்கின்றன ; கலங்கலான தண்ணீர் ஆனாலும் நிறைய மீன் வளம் உடையது இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்கார ஆக்கிரம்பிப்பாளர்கள் ஆஸ்திரேலியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் நாலு இன ஆஸ்த்திரேலியப் பழங்குடியினர்-  ஆதி வாசிகள் இங்கே வசித்து வந்தனர் அவர்களுக்குத் தேவையான நண்டு , மீன் வகைகள், நீர்ப்பறவைகள் அங்கே கிடைத்தன. அதை வேட்டையாடி சாப்பிட்டனர்.

பாரமேட்டா என்றால் நதியின்  அல்லது நீரோட்டத்தின் தலைப்பகுதி என்று பொருள். வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் றோஸ் ஹில் என்று பெயர் சூட்டினர்; அது நீடிக்கவில்லை இது கடலில் கலக்குமிடத்தில் உப்பு ஈறாக மாறுகிறது ; மலை மற்றும் ஆற்று வெள்ளத்தின் அளவைப்பொருத்து  உப்பு நீர் மாறிக்கொண்டே வரும். முகத்துவாரத்தில் விலங்கு மீன்களும் வாழ்கின்றன. நதியின் பாதையில் பல இடங்களில் மீன்பிடிப்போரைக் காணலாம் .

இதில் படகில் சவாரி செய்ய பெரிய FERRYக்கள் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளியில் சென்று கொண்டே இருக்கும். ரயிலில் சென்றால் டிக்கெட்டுகளை வாங்குவது போல இதற்கும் டிக்கெட் உண்டு ; நாங்கள் படகில் ஏறிய ஸ்டேஷனிலிருந்து சர்குலர் கீ என்னும் ஸ்டேஷன் வரை செல்ல பத்து டாலர் டிக்கெட் வாங்கினோம். சுமார் ஒரு மணி  நேரரத்தில் சர்குலர் கீ துறையை அடைந்தோம் அங்குதான் சிட்னி ஹார்பர் பாலமும் ஆபரா ஹவுஸும் உள்ளன. புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவும் உள்ளது  . நீண்ட தூரம் நடந்து சென்றால் வழி நெடுகிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தையும் உணவு விடுதிகளையும் கலைப்பொருட்கள், நினைவுப் பொருட்களை விற்கும் கடைகளையும் காணலாம்.

SYDNEY HARBOUR BRIDGE

முன்னர் சொன்னதைப்போல ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை கார் விலையைத் தவிர வேறு எல்லா விலைகளும் மிக மிக அதிகம்! இதற்கு ஆஸ்திரேலியாவின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள்தான் காரணம்.

படகு சவாரியின் பொது நூற்றுக்கணக்கான கப்பல்களையும் படகுகளையும் பார்த்துக்கொண்டே போகலாம். இரு புறமும் புகைப்படமும் எடுக்கலாம்.

பெரி FERRY என்னும் சிறிய கப்பல்களில் மேல் அடுக்கும் கீழ் அடுக்கும் உள்ளன . வெய்யிலைப் பொருட்படுத்தாதவர்கள் மேல் அடுக்கில் உட்காரலாம் .

லோக்கல் ரயில்கள் செல்லும் முக்கிய ஸ்டேஷன்களின் பாதையில் செல்வதால் அதே ஸ்டேஷன் பெயர்கள் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பல இடங்களை ரயில் அல்லது பெரி FERRY மூலம் அடையலாம்  படகு மூலம் சென்றால் அரிய காட்சிகளைக் கண்டுகொண்டே பயணம் செய்யலாம் ; நல்ல சுகமான காற்றினையும் அனுபவிக்கலாம் .

சிட்னி நகருக்கும் ,பிரிஸ்பேன் நகருக்கும் வருவோர் கட்டாயம் படகு சவாரி செய்ய வேண்டும்; யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் .

பொதுமக்களுக்கான பெரி FERRY சர்வீஸுடன் தனி படகுகளும் உண்டு; அவைகளைக் கூடுதல்  பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கலாம்..

சிட்னி ஆபரா ஹவுஸைப் பார்த்த பின்னர் அருகிலுள்ள தாவரவியல் பூங்கா, சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் (பாலம்) ஆகியவற்றையும் பார்க்கலாம். இரண்டுக்கும் அனுமதி- இலவசம்.

ஆப்ரா ஹவுஸையும் உள்ளே நுழைந்து பார்க்கலாம். அனுமதி இலவசம். ஆயினும் கச்சேரி, முதலிய நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளைப் பார்ப்பதற்கு கட்டணம் உண்டு; நாற்பது டாலருக்கு மேல் கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஒரு மணி நேரத்துக்குச் சுற்றிக் காண்பிப்பார்கள்; நிகழச்சிகளுக்குச் செல்ல தனியே டிக்கெட் வாங்க வேண்டும்.

—subham—

Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16, பாரமேட்டா நதி, படகு சவாரி, பெரி FERRY சர்வீஸ், ஆபரா ஹவுஸ்

Leave a comment

Leave a comment