Post No. 14,154
Date uploaded in Sydney, Australia – 29 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலிய பாலைவன அதிசயங்கள்! பத்து லட்சம் ஒட்டகங்கள்!
ஒட்டக எண்ணிக்கை பெருக்கம் !
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 17

இந்தியாவில் தார் பாலைவனம் ஒன்றுதான் உள்ளது; ஆஸ்திரேலிய யாவில் பத்து பாலைவனங்கள் இருக்கின்றன. இவைகளில் பத்து லட்சம் ஒட்டகங்கள் தெரு நாய்களைப்போல கேட்பாரற்றுத் திரிகின்றன. அரபு நாடுகளில் ஒட்டகங்கள் இருப்பதில் வியப்பில்லை; ஆனால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆஸ்திரேலியாவில், பல அரபு நாடுகளை விட அதிக எண்ணைக்கையில் ஒட்டகங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது .
வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் தொழில் முன்னேற்றத்துக்காக இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டகங்களைக் கொண்டு வந்தனர்.
ஒன்பது ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகிவிடும்; ஒரு புறம் தங்கள் நிலங்களில் ஒட்டகங்கள் வந்து மேயாமலிருக்க வேலி போடுகிறார்கள்; மறுபுறம் ஒட்டகங்களை மிகக் குறைந்த விலையில் ஏலத்தில் எடுக்கிறார்கள்; ஏனெனில் பாலைவனத்தில் பயணம் செய்ய இவைகள் பயன்படுகின்றன. தெரு நாய்களைப் போலத் திரியும் ஒட்டகங்களை சுட்டுத்தள்ள அந்தந்த மாநில அரசாங்கங்கள் ஆண்டுக்கு கோட்டா நிர்ணயிக்கின்றன. குயின்ஸ்லாந்து நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டிலும் பத்தாயிரம் ஓட்டங்களைக் கொன்று குவிக்கலாம் என்று குறியிலக்கு நிர்ணயித்தது; இவைகள் மத்திய ஆஸ்திரேலியாவில் அதிகம்.
Feral camels are found across Central Australia and in the Victoria River District regions.
ஆஸ்திரேலியா ஒரு வினோதமான நாடு; இந்த பிரமாண்டமான நாட்டின் நடுப்பகுதி முழுதும் வறண்ட பாலைவன பூமி.
தலைநகர் கான்பெர்ரா, அடிலெய்டு, மெல்போர்ன், ஒலிம்பிக் போட்டி நடைபெறப்போகும் பிரிஸ்பேன், சிட்னி, ஆகியன எல்லாம் கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ளன. 85 சதவிகித மக்கள் அங்குதான் வசிக்கின்றனர். இவை தவிர மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் மக்கள் அதிக எண்ணைக்கையில் வசிக்கின்றனர் ; மத்திய பகுதி முழுவதிலும் நாகரீகம் என்பதைக் காண பழங்குடி மக்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும்.
எகிப்து, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல, எல்லா மத்திய கிழக்கு நாடுகளைப் போல, ஆஸ்திரேலியாவிலும் ஒட்டக மாமிசத்தைப் புசிப்போர் உள்ளனர்
இதுவரை ஆறு லட்சம் ஒட்டகங் களைக் கொன்று குவித்து விட்டனர். ஆயினும் அவைகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது .
ஒட்டகங்கள் மிகவும் மூர்க்கத் தனமானவை. ஆடு மாடுகளைத் தாக்குகின்றன. கங்காரு முதலிய அதிசய ஆஸ்திரேலிய விலங்குகளின் தாவரங்களையும் மேய்ந்து விடுகின்றன. மேலும் பாலைவனப் பகுதியில் கிடைக்கும் தண்ணீரை எல்லாம் குடித்து முதுகில் சேமித்து வைக்கின்றன. இதானால் கங்காரு, வல்லபி போன்ற விலங்குகள் நீரில்லாமல் தவிக்கின்றன.
Australia has 10 deserts, including the Great Victoria Desert, the Great Sandy Desert, and the Simpson Desert.
நாட்டிலுள்ள பத்து பாலைவனங்களில் கிரேட் விக்டோரியா டெஸெர்ட் பாலைவனம்தான் மிகப் பெரியது. உலகிலேயே அதிக வறண்ட பூமி உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று; அப்படி இருந்தும் கங்காரு, வல்லபி, டிங்கோ என்னும் நாய்கள், வௌவால்கள் வசிக்கின்றன ; பாலைவனத்துக்கே உரிய தாவரங்களும் வசிக்கின்றன.
சிவப்பு கண்டம்
வானத்திலிருந்து பார்த்தால் ஆஸ்திரேலியா சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கிறது; காரணம் நடுப்பகுதி முழுதும் இரும்புச் சத்துள்ள பாறைகள் நிறைந்த பூமி.
The Great Victoria Desert is the largest in Australia, whilst the Pedirka Desert is the smallest. Australia is the driest inhabited continent in the entire world. Around 18% of the Australian mainland is desert. Most of Australia’s deserts are located in the Western Plateau and the Interior Lowlands.
இந்தப் பாலைவனங்களில் மிகப்பெரியது கிரேட் விக்டோரியா ….; மிகச் சிறியது பெட்ரிகா.

…
1.GREAT SANDY DESERT
2.LITTLE SANDY DESERT
3.GIBSON DESERT
4.GREAT VICTORIA DESERT
5.TANAMI DESERT
6.PEDRIKA DESERT
7.SIMPSON DESERT
8.TIRART DESERT
9.STRZELECKI DESERT
10.STURT STONY DESERT
பல பாலைவன விலங்குகளும் தாவரங்களும் அழிந்தேவிட்டன. எலி கங்காரு என்ற எலி போன்ற கங்காருக்கள் இப்போது இல்லை.
ஆப்கானிஸ்தானத்திலிருந்து வெள்ளைக்காரர்கள் கொண்டுவந்த ஒட்டகங்கள் ஆரம்ப காலத்தில் பாலைவனப்பகுதியில் மகத்தான பணிகளைச் செய்தன; அந்தப் பகுதியில் ரயில், சாலை வசதிகளை செய்யவும் கட்டடங்களை எழுப்பவும் உதவின ;அடிலேய்ட் நகரிலிருந்து டார்வின் வரை சுமார் இரண்டாயிரம் மைல் நீளமுள்ள ரயில் பாதை அமைக்கப்பட்டது இது அலிஸ் ஸ்பிரிங்க்ஸ் வழியாகச் செல்லும் அங்கிருந்து பழங்குடி மக்களின் புனிதச் சின்னமான அயர்ஸ் ராக் எனப்படும் உளூருக்குப் AYERS ROCK/ ULURU போகலாம்.
பருவ மழைக்காலத்தில் பாலைவனத்திலும் மழை கொட்டும்; அப்போது அந்த இடங்களுக்கே உரிய மலர்களும் பூத்துக் குலுங்கும்.
தனாமி பாலைவனத்தின் உண்மைப்பெயர் சநாமி /சனாமி ; இது பழங்குடி இன மக்கள் வைத்த பெயர்; இதன் பொருள் என்றும் இறவாதது. ஸம்ஸ்க்ருதச் சொல் போல ஒலிக்கிறது.
The Tanami Desert’s name is thought to be an English version of the traditional name for the area, ‘Chanamee’ which means ‘never die’.
naaham mriyamanah asmi = I am not dying in Sanskrit.
****
பாலைவனத்தில் பழங்குடி மக்கள் வசித்தனர். அவர்களை பின்ட்டுபி இன மக்கள் என்று வெள்ளைக்காரர்கள் அழைத்தனர் . அந்த இனத்தில் கடைசியாக உயிர் வாழ்ந்த ஒன்பது பேர் வெள்ளைக்காரர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடைய பாரம்பர்ய வழக்கங்களை விட்டுவிட்டனர். பாறைகளில் தண்ணீர் கண்டுபிடித்தல், கிழங்கு மற்றும் விலங்குகளைக் கண்டுபிடித்து உண்ணுதல் போன்றவைகளுக்கு அவர்கள் பல நவீன உத்திகளைக் கையாண்டனர். அவர்களைத் தவிர வெவ்வேறு இடங்களில் வேறு பல இனங்களும் வாழ்ந்தன . கிப்சன் பாலைவனத்தில்தான் அதிக இனங்கள் வாழ்ந்தன.
The Western Desert, including the Gibson Desert, is where most desert-dwelling Aboriginal groups lived. Besides the Pintupi, other groups include the Martu, Ngaanyatjarra, and Yankunytjatjara.
பாலைவனைச் சுற்றுலாக்கள்
Uluru-Kata Tjuta National Park: The most iconic desert destination in Australia, featuring Uluru (Ayers Rock) and Kata Tjuta (the Olgas) with guided tours, sunset views, and cultural experiences.
Simpson Desert: A large sand dune desert spanning across multiple states, offering 4WD tours, camel riding, and overnight camping.
Great Victoria Desert: A vast desert in Western Australia and South Australia, with opportunities for remote exploration
பழங்குடி இன மக்கள் வாழ்ந்த இடங்களை அரசாங்கம் தேசீய பூங்காவாக அறிவித்துள்ளது; இதற்காகப் பலரும் அங்கு செல்கிறார்கள். இரவு நேரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நட்சத்திரங்களைப் பார்க்கவும், பகல் நேரத்தில் மலை ஏறுதல், ஒட்டக சவாரி செய்தல் , முகாமிடுதல், மணற்திட்டுகளைக் கண்டுகளித்தல் போன்றவைகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் செல்வார்கள்; அவர்களுக்காக பயணங்களை ஏற்பாடு செய்யும் சுற்றுலா கம்பெனிகளும் இருக்கின்றன.
–subham—
Tags — ஆஸ்திரேலிய பாலைவன அதிசயங்கள், பத்து லட்சம் ஒட்டகங்கள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள், Part 17