GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

12-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

GNANAMAYAM SUNDAY BROADCAST 12-1-2025

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Swami Vivekananda

***

Talk by Brahannayaki Sathyanarayan on Dakshineswaram from Bengaluru

***

Interview with Nellai R C Raja, Editor, Health care Magazine

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — ஸ்வாமி விவேகானந்தர்

***

சிறப்பு பேட்டி அளிப்பவர் – நெல்லை திரு R.C.ராஜா, ஆசிரியர், ஹெல்த் கேர் பத்திரிகை

ஹெல்த் கேர் பத்திரிகை பற்றி …….

இந்த பத்திரிகை ஒரு சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டது. அதன் வளர்ச்சியின் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர்.  விளம்பரதாரர்கள்,நுண்ணறிவு கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள். அவர்களது பங்களிப்பு ஆகியவை  இன்று இந்த பத்திரிகையின் முன்னேற்றத்தை அடைய உதவியுள்ளது.

திரு.சந்தனம் நாகராஜன், திரு.சுவாமிநாதன், திரு.வெ. சுப்பிரமணியன், மூலிகை ஆர்வலர் திரு.குப்புசாமி, மருத்துவர் மகாதேவன் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் உள்ளிட்ட தலைமை எழுத்தாளர்கள் பணம் பெறாமல், தங்கள் திறமையை பகிர்ந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.

இந்த பத்திரிகையில் மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் இல்லாவிட்டால், இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்களின் சந்தேகங்களையும்,கேள்விகளையும் தீர்த்து இருக்க முடியாது. மருத்துவத் துறையில் உள்ள தேர்ச்சி மற்றும் அனுபவம் கொண்டவர்கள் தங்கள் அறிவை வழங்கி, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான புரிந்துணர்வு வழங்குவதன் மூலம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.

இனிவரும் காலங்களிலும்,ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பரவலான பயன்பாடு பற்றி மேலும் புதிய அறிவியல் முன்னேற்றத் தகவல் வழங்குதல் என்ற நோக்கத்தோடு, இந்த பத்திரிகை தொடர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பரப்பும் பணியில் உள்ளது.

****

இடையிடையே திருப்புகழ் பாடல்கள்

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 12-1-2025 ,  PROGRAMME, GNANAMAYAM BROADCAST, three continents

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 1 (Post No.14,075)

Written by London Swaminathan

Post No. 14,075

Date uploaded in Sydney, Australia – 10 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குருவாயூருக்கு வாருங்கள்

ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்

ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்— என்ற பாடல் மிகவும் பிரபலமான தெய்வ பக்திப்பாடல்.

இதே தொனியில் 

ஆஸ்திரேலியாவைக் காண வாருங்கள்

அதிசயம் அனைத்தையும் பாருங்கள் — என்று பாடும் அளவுக்கு ஆஸ்திரேலியா அதிசயம் நிறைந்த நாடு!

அப்படி என்ன அதிசயங்கள் ? முதலில் பட்டியலை மட்டும் தருகிறேன்; பின்னர் விளக்கங்களைத் தருகிறேன்

1.கங்காரு முதலிய வினோத விலங்குகள்

2.வேறும் எங்கும் இல்லாத வினோத தாவரங்கள்

3) 1600 மைல்  நீளமுள்ள பவளப் பாறைகள் ; பவளப் பாறைகளுக்கு இடையே 4000 வகையான மீன்கள் !

4.சிரிக்கும் பறவையாகிய கூகாபாரா ,  காக்காட்டு , வண்ண வண்ணக் கிளிகள்

5.லண்டன் பிக் பென், பாரீஸ் ஐப்பல் டவர் போல சிட்னி ஆபரா ஹவுஸ்  

6).60,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறிய பழங்குடி மக்களின் பூமராங் ஆயுதம் ; டிட்ஜரீடு இசைக்கருவி .

7.பழங்குடி மக்களின் ஓவியங்கள்!  விபூதி பூசும் பழங்குடி மக்கள்!

8). 10,000 கடற்கரைகள்

9.தங்கச் சுரங்கங்கள் வைரச் சுரங்ககங்கள்,  ரத்தினக் கற்கள் சுரங்கம்

10.ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ்

11.கண்டத்தின் மத்தியில் ஐயர்ஸ் ராக் என்னும் பாறையும் ஓவியங்களும்

12.மர்ரே–டார்லிங் நதிகள்

13.நிலத்துக்கு அடியிலிருந்து பீச்சி அடிக்கும் ஆர்டீஷியன் ஊற்றுகள்!

14.பழங்குடி மக்களிடையே இரு நூறு மொழிகளுக்கு மேல் ! மொழியியல் அறிஞர்கள் திகைப்பு !!

15. அலைவீசும் பசிபிக் மஹா சமுத்திரமும் அதன் அழகும்!

ஏனைய புறங்களில் இந்து மஹா சமுத்திரம்.

16.பெரும்பாலான மக்கள் கடற்கரை அருகில் மட்டுமே வசிக்கின்றனர்

17.பரப்பளவில் பெரியது;  மக்கட் தொகையில் சிறியது

உலகில் பெரிய நாடுகளில் ஒன்று ;ஆஸ்திரேலிய மாகாணங்கள்

18.பாலைவனமும், புல் வெளியும் ; எப்போதும் புஷ் பையர் / காட்டுத்  தீ ஆபத்து

19.திரும்பும் இடமெல்லாம் காடுகள் ,மழை வனக் காடுகள்

20.எல்லா பள்ளிக்கூடங்களிலும், வெப் சைட்டுகளிலும் பழங்குடி மக்களுக்கு வணக்கம் செலுத்தல்

21.பேட்டைகளின் பெயர்கள் எல்லாம் பழங்குடி மக்களின் சொற்கள்

22.வெள்ளைக்காரர் குடியேறிய இடம் எல்லாம் இங்கிலாந்து பெயர்கள்– லிவர்பூல் நியூகாஸில், எப்பிங் etc.

23.முதலில் குடியேறியது கிரிமினல்கள்! பின்னர் வந்தது சுரங்கம் தோண்டிகள் !!

24.நீர் விளையாட்டும்; காடுகளில் நடைப்பயணமும்

25.அதி பயங்கர விலைகள் ; லண்டனை விட அதிக விலை!

26.குடியேற்றத்தில் சீனர்கள் முதலிடம் ; அடுத்ததாக அராபியர்கள் , வியட்நாமியர்கள் இந்துக்கள் சீக்கியர்கள்

27.நகரெங்கிலும் இந்துக் கோவில்கள் ; தமிழர்கள் நடத்தும் கோவில்களின் பட்டியல்

28.அரசியலில் தமிழ் எம் பி

29.வெள்ளையர் குடிஏற்றம் ;வெள்ளைக்காரர்கள் செய்த பழங்குடி மக்களின் படுகொலைகள்

30.உலகப் போர்களில் பங்கு பணி

31.குறைந்த விலையில் பெட்ரோல்

32.ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து சாதனைகள்

33.விம்பிள்டனுக்கு நிகரான டென்னிஸ் போட்டி

34.கிரிக்கெட் விளையாட்டில் சாதனைகள்

35.ஊர்தோறும் மியூசியங்கள் ;

சிட்னியில் பார்க்க வேண்டிய  மியூசியங்கள்

36.தென் கோளார்த பூமி; தட்சிணாயன பூமி ; லண்டனில் கடுங் குளிர்; சிட்னி நகரில்  கடும் வெய்யில்

37.லண்டனில் திங்கட் கிழமை; சிட்னியில் செவ்வாய்க்கிழமை !

38.ஆஸ்திரேலிய கடிகாரம் ; டில்லி, லண்டன் கடிகாரம் ; நேர வேறுபாடு

39.ஜனவரியில் சம்மர் வெகேஷன்

40.ஆஸ்திரேலிய தேசீய கீதம்

41.கொடியில் திரிசங்கு நட்சத்திரம் ;ஆஸ்த்திரேலிய அரசாங்க சின்னம்

42. ஆஸ்திரேலிய கொச்சை மொழிச் சொற்கள் (slang)

43.தபால்தலைகளில் ஆஸ்திரேலியா ; விலை உயர்ந்த தபால்தலை

44.ஆஸ்திரேலிய கரன்சி , காசுகள்

45. மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டு Brisbane  Australia  8 August 2032

 Where will the , 2028, and 2032 Olympics be held?

Los Angeles    United States   30 July 2028

Brisbane  Australia  8 August 2032

46.நான்டியன் Nan Tien Temple புத்தர் கோவில்

47.சிட்னியில் பார்க்க வேண்டிய இடங்கள்

48.ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ரா

49.ஆஸ்திரேலியா – இந்தியா உறவு

50.ஆட்டு ரோம கம்பளி ஆடைகள் ;கம்பளி உற்பத்தியில் முதலிடம் 

51.அருகிலுள்ள நியூசிலாந்து, பிஜி, பசிபிக் தீவுகள்

52.டாஸ்மேனியா தீவு அதிசயங்கள்

53.கேரளாமா ஆஸ்திரேலியாவா – வியப்பு

54.உலகிலேயே நீண்ட வேலி

55.உலகிலேயே அதி பயங்கர விஷம் படைத்த 20 சிலந்திகள்

56.யூகாலிப்டஸ் மரங்கள்!  900 வகை!!

57. ஆஸ்த்திரேலியாவின் பத்து ஏற்றுமதி பொருட்கள்

58.ஆஸ்த்திரேலியாவின் பத்து இறக்குமதி பொருட்கள்

59.ஆஸ்திரேலியர்களின் கண்டுபிடிப்புகள்

60.ஆஸ்திரேலியாவில் தென் துருவ பெங்குவின் பறவைகள் ! அரேபியாவை வீட அதிக ஓட்டகங்கள் !

பட்டியலில் சொல்லாத இன்னும் பல புதுமைகள்!

இவை ஒவ்வொன்று பற்றியும் விளக்கமாக எழுதுவேன்

தொடர்ந்து படியுங்கள்

–subham—

Tags—ஆஸ்திரேலியா,  வாருங்கள்! அதிசயம்  பாருங்கள் , பட்டியல், Part 1

My Visit to Sydney University Museum (Post No.14,074)

Written by London Swaminathan

Post No. 14,074

Date uploaded in Sydney, Australia – 10 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

We went to the Sydney University museum on 9th January 2025. It is a small museum and one hour is enough to see the displayed objects. The museum is called CHAU CHAK WING MUSEUM.

The entry is free. Compared with the British Museum and V&A in London, it is nothing. But there are some unique design models and miniature models; I went with my grandchildren and they learnt a lot. The atmosphere is very quiet and the staff are very nice.

At the entrance you get a free booklet explaining the sections on different floors in the building. The collections include antiquities, contemporary art, natural history, and objects of indigenous culture. It is open seven days a week. There is a café and a gift shop.

Level 1

We saw antiquities from Cyprus and the Middle East; stuffed animals, birds; sea shells are also displayed. Café serving hot food and drinks.

China gallery

Level 2

The Mummy Room, Roman and Greek antiquities.

Level 3

Entrance, gift shop etc.

The latest addition is the China gallery which brings together the work of five contemporary Australian artists from Chinese communities. This is a unique section.

I like the Micro Macro section with models of insight and inspiration. This is also unique. It presents models in miniature scales; they are part of the teaching in the University of Sydney. Models made up of wax, papier maches, glass, brass and iron are displayed. Single cells are expanded by a magnitude of thousands and a whole suburb is shrunken to the size of a tabletop.

Mini instruments, minerals , aeroplane models are also on display. It will help Australian students to learn a lot and generate new interest in some subjects/ areas.

Temporary exhibitions are also held.

****

I took lot of pictures with my I Pad.

Worth visiting with students and youngsters.

More information is available in their websites and Facebook pages:

sydney.edu.au/museum

Facebook – ChauChakWingMuseum

Address

University Place

The University of Sydney

Camperdown, NSW 2006

Phone (02)9351 2812

–subham—

Tags- The University of Sydney, museum, CHAU CHAK WING MUSEUM.

தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-7 (Post No.14,073)

Written by London Swaminathan

Post No. 14,073

Date uploaded in Sydney, Australia – 10 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7 

எனக்கு ரொம்ப நாளாக ஒரு டவுட்டு; சந்தேகம்; சம்சயம்;ஐயப்பாடு !

அது என்னவெனில் தமிழை முதலில் எளிமைப் படுத்தியவர் பாரதியாரா அல்லது அவருக்கு முன்னர் வாழ்ந்த அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகளா என்பதே .

இருவரும் தமிழை வளப்படுத்தினர், எளிமைப்படுத்தினர் என்பதில் ஐயமில்லை. அந்த மொழியின் கடின நடையை எளிமைப்படுத்தியதில் முதலில் நிற்பவர் வள்ளலார் ; ஆனாலும் வள்ளலாரின் வீச்சு தெய்வ பக்திப் பாடல்களுடன் நின்றுவிட்டது .

பாரதியாரோ தெய்வம், தேசம், பெண் விடுதலை, தமிழ் மொழியின் உயர்வு , இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் வளர்ச்சி, அகத்தியர் ஆதிசங்கரர் , காளிதாசர்,  வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் முதலிய இந்திய பெரியோர்கள் , உலகப் புகழ்பெற்ற தலைவர்கள்,  என்று நூற்றுக் கணக்கானோரை பாடிவிட்டார். ; அவை தெரு முழக்கம் ஆகிவிட்ட பாடல்கள்.

 மேலும் வள்ளலார் போல,.பாரதியார் சிக்கலில் சிக்கவில்லை. அவர் ஆறுமுக நாவலருடன் மோதி வழக்கு மன்றம் ஏக நேரிட்டது ; திருமுறை என்ற சொல்லை உபயோகித்ததால் சைவர்களால் நிராகரிக்கப்பட்டார் .பாரதியார் வழக்கில் சிக்கியது வேறு விதம்; சுதந்திர  போராட்டத்தில் மட்டுமே !

பாரதியாரினால் பாடப்பட்டவை இன்றுவரை சிறுவர் நாவிலும் தவழ்கிறது; ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதி பாடலில் கூட ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.

பாரதியாரும் வள்ளலாரும் மாணிக்க வாசகரின் செல்வாக்கிற்கு உட்பட்டதால் திருப்பள்ளி எழுச்சி போன்ற வகைப் பாடல்களைக் காணமுடிகிறது

இருவரும் எல்லா சமயங்களையும் போற்றி அவற்றின் உட்பொருள் ஒன்றே என்று உணர்த்தினர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலாளர்; பாரதியாரோ தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார்.

இருவரும் வேதங்களைப் போற்றினர்;  ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் புகழ்ந்தனர்  இருவரும் முருக பக்தர்கள் ; ஆயினும் ஒரு வித்தியாசம்! வள்ளலார் கிருஷ்ண, விஷ்ணு பக்தர் என்று காட்டவில்லை; பாரதியாரோ கண்ணன் மீது ஏராளமான பாடல்களைப் பாடினார்.

சொல்லப்போனால் பாரதியார் பாடாத தெய்வங் கள் இல்லை கணபதி முதல் கிராம தேவதைகள் வரை பாடினார்; பெரிய தேவி பக்தரும்  கூட;  அது போன்ற பாடல்களை வள்ளலாரின் திருவருட்பாவில் காண இயலாது .

காட்டுவழியினில் கள்ளர் பயமிருந்தால் –

வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

காட்டு வழிதனிலே-அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்?எங்கள்

வீட்டுக் குலதெய்வம்-தம்பி

வீரம்மை காக்குமடா! 1

நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே-எங்கள்

கறுத்த மாரியின் பேர்-சொன்னால்

காலனும் அஞ்சுமடா! 2– பாரதியார்

முத்துமாரி முதல் பராசக்தி வரை பாடினார் பாரதி

****

பாரதியார் 1882-1921

வள்ளலார் 1823- 1874

பாரதியார் இறந்தது  1921- ஆம் ஆண்டில்; வள்ளலார் மறைந்தது 1874 – ஆம் ஆண்டில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.

பாரதியாரும் வள்ளலாரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தவிர்க்காமல், வெறுக்காமல் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். இருவரும் கவிதை மட்டுமின்றி உரைநடை இலக்கியத்தையும் நமக்கு அளித்தனர்  . இருவரும் இந்து மதத்தின் காவலர்களாக நின்றனர்.

*****

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்– என்கிறார் வள்ளலார்

‘’பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்!

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்!

மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் தேவ தேவா!’’

என்று இறைவனை இறைஞ்சுகின்றார் பாரதி.

அது மட்டுமல்லாமல் காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும் மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன் என்றும் சொன்னார் பாரதியார் ;  ஆகவே இவ்விஷயத்தில் இருவர் கருத்தும் ஒன்றே.

****

பாரதியார் திருவெம்பாவை பற்றி உரையாற்றினார் ; ஆண்டாள் பற்றியும் நம்மாழ்வார் பற்றியும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார்; வள்ளலாரும் சைவ விஷயங்கள் பற்றி உரையாற்றினார்; ஆனால் ஆங்கிலத்தில் எழுதவில்லை.

****

பாரதி, நாடு முழுதும் பயணம் செய்தார் ; பல மொழிகளைக் கற்றார் ; இதை வள்ளலார் செய்யவில்லை. இருவரும் படிக்காத மேதைகள்! பிறவியிலேயே கவிஞர்கள்!! இளம் வயதிலேயே கவிதைகளை புனைந்து சான்றோர்களை அசத்தியவர்கள்.

*****

இருவரும் சமய ஒற்றுமையை வலியுறுத்தினர்

பூமியிலே, கண்ட மைந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்

சாமி யென யேசு மதம் போற்று மார்க்கம்,

ஸநாதன மாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

நாம முயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,

நல்ல “கண்பூசி“ மத முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;

யாவினுக்கு முட் புதைந்த கருத்திங் கொன்றே.(65)

பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்

பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;

சாமி நீ ; சாமி நீ ; கடவுள் நீயே ;

தத்வமஸி ; தத்வமஸி ; நீயே யஃதாம் ;

பூமியிலே நீ கடவு ளில்லையென்று

புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி

ஸதாகாலம் ‘சிவோஹ’ மென்று ஸாதிப்பாயே. – பாரதியார்

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்

தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்

செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவ தேவே – வள்ளலார்

****

இருவரும் தமிழ் மொழியை  வளர்த்தனர்; எளிமைப்படுத்தினர் ; இருவரும் இந்து மதத்தினைப் போற்றினர் ; சிவனையும் முருகனையும் பாடினர்; பசிப்பிணியை அகற்ற விரும்பினர் .

பெரிய வித்தியாசம் – வள்ளலார் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து பசிப்பிணி அகற்ற உணவளித்தார்; பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் இருந்ததால் இதைச் செய்யவில்லை.

****

இருவரும் வள்ளுவர் போல புலால் உணவை வெறுத்தனர் ;

பாரதியார் உலக அரசியலை அலசினார் ; வள்ளலார் இந்துக்கடவுளருடன் நின்றுவிட்டார் அரசியலில் புகவில்லை  இருவரும் ஆங்கிலேய ஆட்சியில் வாழ்ந்தவர்கள் .

பாரதியார் பாடிய, பேசிய, எழுதிய  விஷயங்கள் இமய மலை போன்றது. வள்ளலாரின் வீச்சு  ஒரு சிறு குன்றினைப் போன்றது ; ஆயினும் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ; மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்ற பழமொழிகளுக்கு இணங்க புகழ் மணம் பரப்பினார் .

தமிழ் உள்ளவரை- இந்து மதம் வாழும் வரை- இவர்கள் இருவர் பெயர்களும் அழியாது என்பதில் ஐயமில்லை .

–subham—

Tags- தமிழ், வளர்ச்சி, பாரதியாரும் வள்ளலாரும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7

மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 2 (Post No.14,072)

 WRITTEN BY S NAGARAJAN 

Post No. 14,072

Date uploaded in Sydney, Australia – –10 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 2 

ச. நாகராஜன்

 ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தில் மேதையாகலாம் என்று அவர் கூறியதோடு அதற்கான திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் சொல்லித் தந்தார். தான் எப்படி மனதிலேயே இதை சாதிக்க முடிகிறது என்பதையும் அவர் விளக்கினார்.

 மணவாழ்க்கை

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் பரிதோஷ் பானர்ஜி என்பவரை அவர் மணம் புரிந்தார். அனுபமா பானர்ஜி என்ற ஒரு பெண்குழந்தை அவருக்கு உண்டு. ஆனால் 1979ல் தன் கணவரை அவர் விவாக ரத்து செய்தார்.

அரசியல் ஈடுபாடு

அரசியலில் குதித்த அவர் ஆயிரத்தி தொள்ளாயிருத்து எண்பதுகளில் லோக் சபா உறுப்பினராக ஆந்திராவில் மேடக் தொகுதியில் இந்திரா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மும்பை தெற்குத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளராக நின்று அவர் தோல்வி அடைந்தார்.

நூல்கள்

சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார். ‘பஸில் டு பஸில் யூ’, ‘தி வோர்ல்ட் ஆஃப் ஹோமோசெக்ஸுவல்ஸ்’, ‘மேதபிலிடி: அவேகன் தி மேத் ஜீனியஸ் இன் யுவர் சைல்ட்’ போன்ற அவரது நூல்கள் பெரும் வரவெற்பைப் பெற்ற நூல்களாகும்.

1977ல் வெளியான ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அவரது நூல் தான் இதைப் பற்றி முழு ஆய்வு செய்யப்பட்ட நூலாக இருந்தது.

அவர் ஒரு ஜோதிட நிபுணரும் கூட. எண்களைப் பற்றிய மர்மங்கள் அனைத்தையும் அறிந்த பெரும் கணித நிபுணராக அவரை உலகம் அங்கீகரித்தது.

மறைவு

2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாசக் கோளாறுகளுக்காக பங்களூரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் இதயத்திலும் சிறுநீரகத்திலும் பாதிப்புகள் ஏற்பட அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம்  தேதி தனது 83ம் வயதில் மரணமடைந்தார்.

திரைப்படம்

சகுந்தலா தேவி பற்றிய திரைப்படம் ஒன்று 2020,ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.

சகுந்தலா தேவி தன் வாழ்க்கை மூலம் தெரிவிப்பது

சகுந்தலா தன் வாழ்க்கை மூலம் தெரிவிக்கும் ஒரு செய்தி இது தான். கடவுள் படைப்பில் – அல்லது இயற்கை என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் – அனைத்துமே எண்கள் தான் – கணிதம் தான்! “எல்லாமே எண்கள் தான்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன பிதகோரஸின் கூற்றை திடமாக, வலுவாக ஆமோதிக்கிறார் அவர். கணிதம் இல்லாத ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அவரது ‘கணிதப் புதிர்களும் விடுகதைகளும் ‘என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் விரிவாக இதைக் கூறுகிறார்.

“மனிதனும், மிருகங்களும் தங்கள் உள்ளுணர்வு மூலம் கணிதத்தை தங்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்றனர்.  நத்தை தன் கூடை துல்லியமான கணித அடிப்படையில் உருவாக்குகிறது. சிலந்திகளின் கணித ஆற்றல் அதன் கூட்டை அமைக்கும் போது தெரிய வருகிறது. சோளம், சூரியகாந்திப் பூ ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவற்றில் கணித அமைப்பைக் காணலாம்.” என்று அவர் கூறுகிறார். 

சகுந்தலா தேவியின் பொன்மொழிகளில் சில: 

எண்கள் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு; அவை பேப்பரில் அடையாளங்களாக மட்டும் உள்ளன! 

கணிதமில்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே எண்கள் தான்! 

கல்வி என்பது பள்ளிக்குச் சென்று ஒரு பட்டத்தைப் பெறுவது அல்ல; அது உங்கள் அறிவைப் பெருக்கி வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உள்ளே இழுத்து உணர்வதாகும். 

உங்கள் உடலில் உள்ள எந்த ஒரு தசையையும் பயன்படுத்தாவிடில் அது சுருங்கி வறண்டு விடும். அதே போலத் தான் மூளையும். அதை அதிகமதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த அது இன்னும் சிறப்பாக ஆகிவிடும். 

கணிதம் என்றாலேயே ஏன் குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றன? ஏனெனில் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாக அணுகுவதனால் தான் இது ஏற்படுகிறது.

இந்தியாவின் பெருமைக்குரிய கணித மேதையாக விளங்கிய சகுந்தலா தேவியின் நூல்கள் நமது மூளை ஆற்றலை வளர்க்க உதவுபவை. அவற்றைப் பயன்படுத்துவோமாக.

***

Hindu Crossword912025 (Post No.14,071)

Written by London Swaminathan

Post No. 14,071

Date uploaded in Sydney, Australia – 9 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1  2  3 4
        
5       
    6   
    7   
8   9   
        

Across

1.hills where Balaji temple is located

5.short sound= wealth; long sound= donation

6.mother

7.said, spoken, addressed, told in Sanskrit literature

8.Buddhist painting or scroll

Down

1.literally end  of Vedas; gist of Vedas

2.daughter, son, Goddess Durga; neuter gender Sanskrit word

3.Hindu mark on forehead.

4.monkey in Sanskrit; famous Nyaya; …. Nyaya; Marjara nyaya

9.pranava mantra;  go upward

V 1EN 2KAT3AM4
E A  I A
D5ANA L R
A D M6A K
N A U7KTA
T8ANKA9A t
A A  M A

—subham—

Tags- Hindu Crossword912025

தமிழ் தெரியுமா912025 ? – (Post No.14,070)

Written by London Swaminathan

Post No. 14,070

Date uploaded in Sydney, Australia – 9 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் தெரியுமா912025 

1  2 
    
  3 
   4

 ACROSS 

1. சகரர் என்ற புத்ரர்களிடமிருந்து சமுத்திரத்துக்கு வந்த பெயர்;

 2. மேனகா  ஊர்வசி திலோத்தமை ஆகிய தேவ லோக அழகிகளுடன் சேர்த்துச்  சொல்லப்படும் அழகி;

3. தமிழில் ஐந்திணைகளில் முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சியுடன் வரும் ஒரு திணை

3. ஆழ்வார்கள் பாடிய பாடல்களை இப்படி அழைப்போம்

 DOWN

1. சுவாமிக்கும் அரசருக்கும் இருபுறமும் நின்று வீசுவது ; விசிறி அல்ல; 

4. வீதி, தெரு, சந்து என்பதை விடபெரிய வழி

தமிழ் தெரியுமா912025 

சா1ர 2ம்
 ம் 
சுபா3லை
ம்  சா4

 —-Subham— 

Tags- தமிழ் தெரியுமா912025 

வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6 (Post.14,069)


Written by London Swaminathan

Post No. 14,069

Date uploaded in Sydney, Australia – 9 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 6

வள்ளலார் இயற்றிய திருவருட்பாவில் பகவத் கீதை மற்றும்  ஆதி சங்கரரின் ஸ்லோககங்களின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது . இந்து சந்யாசிகள் ஒரே மாதிரிதான் சிந்திக்க முடியும். இதனால் இமயம் முதல் குமரி வரையிலுள்ள எல்லா ஆன்மீக நூல்களிலும் வேத, உபநிஷத் கருத்துக்கள் இருக்கும். அதைச் சொல்லும் முறையில் வேண்டுமானால் சிறிது மாறுதல் இருக்கும். உபநிஷத்தின் சாரம் பகவத் கீதை ஆகும்.

வேதங்கள் அனைத்தும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் துவங்குகின்றன ; இந்த ஓரெழுத்திலிருந்துதான் – ஏகாக்ஷரத்திலிருந்துதான் —பிரபஞ்சம் தோன்றியது ; இதை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டு பிக் பேங் BIG BANG என்னும் மாபெரும் வெடிப்பு கொள்கையை வெளியிட்டனர்

பிராதஸ் மரணம் என்று இந்துக்கள் தினமும் சொல்லும் துதியிலும் நபஸ்ச சப்தம் மஹாதா சைவ என்ற வரியில் இந்தக் கருத்து வெளிப்படுகிறது

पृथ्वी सगन्धा सरसास्तथापः

स्पर्शी च वायुर्ज्वलितं च तेजः ।

नभः सशब्दं महता सहैव

कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥७॥

Prthvii Sa-Gandhaa Sa-Rasaas-Tatha-Apah

Sparshii Ca Vaayur-Jvalitam Ca Tejah |

Nabhah Sa-Shabdam Mahataa Sahai[a-E]va

Kurvantu Sarve Mama Suprabhaatam ||5||

ஆகாயம் என்பது சப்தம் நிரம்பியது

Morning:

5.1: (In the early morning I remember) Mother Nature manifesting as the Prithivi (Earth) which is connected with Gandha (Smell), Apah (Water) which is connected with Rasa (Taste), …

5.2: … Vayu (Air, Wind) which is connected with Sparsha (Touch), Tejah (Fire) which is connected with Light and …

5.3: … Sky which is connected with Sabda (Sound); I remember all these Mahat Tatvas (Material Energy),

5.4: May all of them make my Morning Auspicious.

****

தெய்வமணிமாலை

தெய்வமணி மாலையில் ஓம் என்னும் எழுத்தை ராமலிங்க சுவாமிகள் — வள்ளலார்- குறைந்தது இரண்டு இடங்களில் போற்றித் துதிக்கிறார்  பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா   ஓம் என்னும் அக்ஷரத்தின் பெருமையை இரண்டு இடங்களில் விளக்குகிறார் .

6. காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

எனைப்பற்றி டாமல்அருள்வாய்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்

திறன்அருளி மலயமுனிவன்

சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ

தேசிக சிகாரத்னமே

தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

24. கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி

கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்

கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்

கருதிலேன் நல்லன்அல்லேன்

குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்

குற்றம்எல் லாம்குணம்எனக்

கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்

குறைதவிர்த் தருள்புரிகுவாய்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்

பெற்றெழுந் தோங்குசுடரே

பிரணவா காராரின் மயவிமல சொரூபமே

பேதமில் பரப்பிரமமே

தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

பகவத் கீதையில் ஓம்

பகவத் கீதை 17-24

BG 17.24: எனவே, யாகம் செய்யும் போதும், தானம் செய்யும்போதும், தவம் செய்யும்போதும், வேதங்களை விளக்குவோர் எப்போதும் வேத கட்டளைகளின்படி ஓம் என்று உச்சரிப்பதன் மூலம் தொடங்குகிறார்கள்.

தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஞ்ஞதானதப: க்ரியா: |

ப்ரவர்தன்தேவிதானோக்தா: ஸததம் ப்3ரஹ்மவாதி3னாம் ||17-24||

तस्माद् ॐ इत्युदाहृत्य यज्ञदानतप:क्रिया: |

प्रवर्तन्ते विधानोक्ता: सततं ब्रह्मवादिनाम् || 17-24||

****

பரம புருஷனாகிய என்னை நினைவு செய்து, ஓம் என்ற எழுத்தை உச்சரித்துக்கொண்டே உடலை விட்டுப் பிரிந்தவன், உன்னதமான இலக்கை அடைவான் 8-13

ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ||8-13||

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् |

य: प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् || 8-13||

****

தந்தை யார் தயார் யார் ?

மனைவி மக்கள் என்பவர் எல்லாம் நிரந்தர உறவுகள் அல்ல ; இந்தக் கருத்தை பகவத் கீதை, ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய பாடல்களில் காண்கிறோம்; இதை வள்ளலாரும் ஒரு பாடலில் பாடுகிறார்

14. கானலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்

காண்உறு கயிற்றில் அறவும்

கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்

கதித்தபித் தளையின்இடையும்

மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை

மாயையில் கண்டுவீ ணே

மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்

வாள்வென்றும் மானம்என்றும்

ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்

உள்என்றும் வெளிஎன்றும்வான்

உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை

உண்மைஅறி வித்தகுருவே

தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

வீடு வரை உறவுகடைசி வரை யாரோ?

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 921 தேதி 21 மார்ச் 2014.

கவிஞர் கண்ணதாசன், இந்து மதக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர். அவர் பிறந்த செட்டியார் ஜாதி, கோவில்களையும், கோவில்களைப் போற்றிய பெரியோர்களையும் இரண்டு கண்களாகக் கருதிப் பாதுகாத்த ஜாதி. தெய்வத் தமிழ் தழைத்தோங்க உடல், பொருள், ஆவியைக் கொடுத்த ஜாதி. பொருளை நாடிப் பிழைத்த ஜாதியானாலும் “செம் பொருளை” மறவாத ஜாதி. தர்ம ,அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு புருஷார்த்தங்களில் அர்தத்துக்கும் காமத்துக்கும் (பொருள் தேடல், இன்பம் நாடல்) வரையறையாக தர்மத்தையும் மோக்ஷத்தையும் (அறம், வீடு பேறு) வைத்துக் கொண்டு வாழ்ந்த ஜாதி. இது கண்ணதாசனின் ரத்தத்தில் ஓடியதால்— முதலில் வால்மீகி போல மற வாழ்க்கை நடத்தினாலும்– பின்னர் அற வாழ்வில் நுழைந்தார். அவருக்கு ஊற்றுணர்ச்சியாக விளங்கிய பெரியோர்கள் ஆதி சங்கரர், அப்பர்,, பட்டினத்தார் முதலியோர் என்பதை அவரது பாடலே காட்டும். இதோ ஒரு சான்று:

திரைப்படம்: பாதகாணிக்கை

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

பட்டினத்தார் சொன்னது:

பழந்தமிழ்நாட்டின் ‘பில் கேட்ஸ்’, ‘லெட்சுமி மித்தல்’ — பட்டினத்தார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பணக்காரருக்கு “காதற்ற ஊசி” மூலம் ஞானம் பிறந்தது. புத்தர் போதி (அரச) மரத்துக்கடியில் பல்லாண்டு தவம் செய்து ஞானோதயம் பெற்றார். பட்டினத்தாருக்கோ ‘பட்’டெனப் பிறந்தது பட்டறிவு! இதோ அவரது பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்

கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்

எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?

தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்

தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

பொருள்: முன்னர் செய்த தவம் தினை அளவோ எள் அளவோ இருந்தாலும் போதும். அது கூடவே வந்து பரலோகத்தில் நல்ல கதி கிடைக்க சத்தியமாக உதவும்.

இன்னொரு பாடலிலும்

என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்

பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்

உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

பொருள்: என்னைப் பெற்ற தாயார் ,’மகனே, பிணமாப் போயிட்டியே’ – என்று அழுது, அத்தோடு நிறுத்திவிட்டாள். நான் கழுத்தில் பொன் தாலி மாட்டிய என் மனைவியோ, அழுது புலம்பி விட்டு, ‘சடலத்தைத் தூக்கிட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டாள். என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய என் மகன்கள், என் சடலத்தைச் சுற்றி வந்து பானையைப் ஓட்டு உடைத்துவிட்டுப் போய்விட்டாங்க. இறைவா உன்னைத் தவிர, வேறு யாரும் இல்லையப்பா!

இப்படிப் பட்டினத்தாரைப் பாட வைத்தவர் அப்பர் பெருமான். அவரும் குடும்பப் பற்றுகளை அறவே துறந்தவர்:

அப்பர் எழுப்பும் கேள்விகள்

தந்தை யார்தாய் யார்உடன்பிறந்தார்,

தாரம்ஆர்புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே?

வந்த ஆறு எங்ங்அனேபோம் ஆறு ஏதோ?

மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா!

சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்;

திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி

எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய”

என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.

——918, ஆறாம் திருமுறை

பொருள்: எளிய தமிழ். பொருளே தேவை இல்லை. சிந்திக்கும் திறம் படைத்த அறிவாளிகளே, ஒன்று மட்டும் சொல்கிறேன். நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டு தினமும் படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு சுவர்க்கமும் கிடைக்கும்.

ஆதிசங்கரர் பாடியது

அப்பர் இப்படிப் பாடுவதற்கு ஊற்றுணர்ச்சி தந்தவர் ஆதி சங்கரர்; அவரது பஜ கோவிந்தம் அற்புதமான ஒரு துதி. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு ஆழமான கருத்துக்கள்! அவர் பாடுகிறார்:

காதே காந்தாகஸ்தே புத்ர:

சம்சாரோ அயம் அதீவ விசித்ர:

கஸ்ய த்வம்க: குத ஆயாத-

ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

———பாடல் 8, பஜ கோவிந்தம்

பொருள்: மனைவி யார்? மகன் யார்? என்ன அதிசயமான உறவுகள் இவை!! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சகோதரனே, இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்.

குடும்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, குடும்பப் பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு வெளியே வா என்று சொல்லவில்லை. இந்து மதம் ஒன்றுதான் உலகில் மனித வாழ்வை ,அழகாக ,நான்கு கூறு போட்டுக் கொடுத்திருக்கிறது1.பிரம்மசர்யம்: படிப்பு ஒன்றே உனக்கு லட்சியம் 2. க்ருஹஸ்தம்: கல்யாணம் செய்து இன்பத்தை அனுபவித்துக் குடும்பத்தை காப்பாற்று 3. வானப் பிரஸ்தம்: ஒரு கட்டத்தில் பற்றை எல்லாம் விட்டு விட்டு, தாமரை இலைத் தண்ணீர் போல இரு 4.சந்யாசம்: முற்றும் துற. பற்றுக, பற்றற்றான் பற்றை; (எதற்காக?) அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு (வள்ளுவன் குறள்)

(குறிப்பு: அப்பர் பெருமானுக்கு முன் வாழ்ந்தவர் ஆதி சங்கரர்– என்று போதுமான தமிழ் இலக்கியச் சான்றுகளோடு நான் எழுதிய கட்டுரை இதே பிளாக்—கில் உள்ளது.; காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சொல்லுவது போல ஆதி சங்கரர், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். மேலே உள்ள அப்பர் பாடலையும் பஜ கோவிந்தத்தையும் ஒப்பிட்டால் இது மேலும் தெளிவாகும். குறிப்பாக, சொற்றொடர்களைக் கவனிக்கவும்)

கீதையிலேயே உள்ளது!

ஆதி சங்கரருக்கும் அனைத்து சாது சந்யாசிகளுக்கும் இக் கருத்தை வழங்கியவர் கண்ண பிரான் ஆவார். பகவத் கீதையிலேயே இக்கருத்து உள்ளது:–

அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தார க்ருஹாதிஷு

நித்யம் ச ஸமச்சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷு (13—9)

பொருள்: மக்கள், மனைவி, மனை முதலியவற்றில் பற்றின்மை, அபிமானமின்மை, இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்தபோதும் கூட மன அமைதி (சமச்சித்தம்)———– (ஞானம் என்று கூறப்படும்).

ஆக கண்ணன் முதல், ஆதி சங்கரர் வரை , வள்ளலார் வரை ,கண்ணதாசன் வரை அனைவரும் கூறுவது ஒன்றே!

****

பாம்பும் கயிறும்

கயிறு  என்பதை இருட்டில் பாம்பு என்று கருதுவது போல என்ற உவமையை முதல் முதல் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர்; அதிகமான இடத்தில் ஸ்லோகங்களில் திரும்பத் திரும்ப சொன்னவரும் சங்கரரே.  இதைப் பல சித்தர்களும்

தமிழ் அடியார்களும் பாடியுள்ளனர். வள்ளலாரும் ஆதி சங்கரரைப் பின்பற்றி இதை பல இடங்களில்  பயன்படுத்துகிறார்

–SUBHAM—

TAGS- வள்ளலார் பாடல், பகவத் கீதையின் தாக்கம் 6

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 6, தெய்வமணிமாலை, வீடு வரை உறவுகடைசி வரை யாரோ?, பாம்பு கயிறு

மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 1 (Post No.14,068)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,068

Date uploaded in Sydney, Australia – –9 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-1-2025 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 1 

ச. நாகராஜன் 

இதோ சில கணிதப் புதிர்கள். விடைகளைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்:

1)      ஒரு விசித்திரமான இரண்டு இலக்க எண் அது. அதனுடைய இலக்கங்களைக் கூட்டி வரும் எண்ணைப் போல மூன்று மடங்கு ஆகும் அந்த எண். அந்த எண் என்ன?

2)      1/81 – இதன் விடையை எழுதுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது

3)       1789. இந்த எண்ணை ரோமன் எழுத்துக்களில் எழுத முடியுமா?  

4)      4) 100 அடி நீளமுள்ள ரிப்பன் ஒன்று இருக்கிறது. இதில் ஒரு அடி வெட்ட ஒரு வினாடி ஆகும். இந்த ரிப்பனை ஒரு அடி துண்டுகளாக வெட்ட எவ்வளவு நேரம் ஆகும்?

5)      ஒரு தவளை 30 அடி உயரமுள்ள சுவரில் ஏறுகிறது. ஒரு மணி நேரத்தில் அது மூன்று அடி ஏறுகிறது. ஆனால் மூன்று அடி ஏறினால் அது இரண்டு அடி வழுக்கி கீழே வருகிறது. சுவரின் மேலே செல்ல அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

6)      தீபாவளி தினத்தன்று பரிசு கொடுப்பது அந்தக் குடும்பத்தின் பழக்கம். இரண்டு தந்தைமார் பரிசு கொடுக்க முனைந்தனர். ஒரு தந்தை தன் மகனுக்கு ரூ150 கொடுக்க இன்னொருவர் தன் மகனுக்கு ரூ 100 கொடுத்தார்.  ஆனால் அந்த இரண்டு மகன்களும் தங்களிடையே ரூ 150 தான் பரிசாக வந்ததைக் கண்டனர். இதற்கான விளக்கம் என்ன?

விடை

1)   அந்த எண் 27.

    27 ; 2+7 = 9 ; 9 x 3 = 27

2)   0123456789 (பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரை தொடர்ந்து எண்கள் வருவதைக் கவனிக்கவும்)

3)   M D C C L X X X I X

4)   4) 99 வினாடிகள். 99வது அடியை வெட்டிய பின் மீதி இருக்கும் ரிப்பனை வெட்ட வேண்டாமே!

5)   மொத்தம் 30 மணி நேரம் ஆகும்என்று சொன்னால் அது தவறு. 27வது மணி முடியும் போது அது உச்சியிலிருந்து மூன்று அடி கீழே இருக்கும். மூன்று அடி ஏறினால் அது சுவரின் வெளியில் வந்து விடும், இல்லையா?

6)   அந்தக் குடும்பத்தில் இரண்டு தந்தைமார், இரண்டு மகன்கள் என்று நினைத்தால் அது தவறு. தாத்தா, அவர் பிள்ளை, பேரன் என்று மூன்று பேர் தான் அவர்கள். தாத்தா தன் பிள்ளைக்கு ரூ 150 கொடுக்க அதிலிருந்து பிள்ளை தன் மகனுக்கு (அதாவது தாத்தாவின் பேரனுக்கு ரூ 100 கொடுத்தார். ஆக 100 + 50 = ரூ150 தான் மொத்த பரிசுத் தொகையாக ஆனது)

இது போன்ற நூற்றுக் கணக்கான கணிதப் புதிர்களைச் சொல்லி அசத்துபவர் ஒரு கணித மேதை. அவர் யார் என்று பார்ப்போமா?

கம்ப்யூட்டரை விட வேகமாக கணக்கைப் போட முடியும் என்று நிரூபித்தவர் யார்? 3 வயதிலேயே தனது கணிதத் திறமையைக் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தவர் யார்? கின்னஸ் ரிகார்டில் தன் திறமையைப் பதிவு செய்தவர் யார்? இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக வரும் ஒரே பெயர் சகுந்தலா தேவி என்பது தான்

பிறப்பும் இளமையும்.

சகுந்தலா தேவி பங்களூரில் 1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் நாள் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை சி வி. சுந்தரராஜ ராவ் சர்கஸில் ஒரு ட்ரபீஸிய வித்தை நிபுணராகவும் கயிற்றில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைப்பவராகவும் பணியாற்றி வந்தார்.

சகுந்தலாவிற்கு மூன்று வயது ஆகும் போது கார்ட் வித்தைகளை விளையாட்டாக அவருக்கு தந்தை காண்பிக்க அனைத்து எண்களையும் அபாரமாக அவர் சொல்வதைக் கண்டு அவர் வியந்தார்.

தனது மகளின் திறமையைக் கண்ட தந்தை சர்கஸிலிருந்து விலகினார். தன் மகளுக்கு ஆறு வயதாகும் போது பல  தெருக்களிலும் அவரது திறமையைக் காட்டும் நிகழ்ச்சிகளை நடத்தலானார்.

காலம் செல்லச் செல்ல அவரது திறமையை உலகம் நன்கு அறிந்து கொண்டு பிரமித்தது. மைசூர் பல்கலைக் கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் உஸ்மானியா பல்கலைக் கழகத்திலும் அவர் தனது திறமையைக் காட்டினார்.

பின்னர் 1944ம் ஆண்டு அவர் தனது தந்தையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு பல பல்கலைக்கழகங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடக்கவே இங்கிலாந்து பத்திரிகைகள் அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்தன. அவர் முதலில் ஆங்கிலம் கற்கவில்லை என்றாலும் நாளடைவில் அதைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

1950ம் ஆண்டு பிபிசி அவரைத் தனது நிகழ்ச்சிக்கு அழைத்தது. அங்கு லெஸ்லி மிட்சல் என்பவர் அவரைப் பேட்டி கண்டார். ஒரு சிக்கலான கணிதம் அவரிடம் கொடுக்கப்பட அதற்கான விடையை ஒரு சில விநாடிகளிலேயே சகுந்தலா கூறி விட்டார்.

ஆனால் விடைகள் மிட்செலின் விடைகளுடன் ஒத்துப் போகவில்லை.

திருப்பி ஒரு முறை தனது விடையை மிட்செல் சரி பார்க்கும் போது சகுந்தலாவின் விடையே சரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உலகளாவிய விதத்தில் பெரும் பரபரப்பை ஊட்டியது.

இதிலிருந்து அவருக்கு ஹ்யூமன் கம்ப்யூட்டர் (மனிதக் கணினி) என்ற பெயர் தரப்பட்டது.

தொடர்ந்து பல நாடுகளிலும் அவரது கணித நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன.

1976ம் ஆண்டு நியூயார்க் நகரமே அவரது திறமையைக் கண்டு பிரமித்தது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உள்வியல் பேராசிரியரான ஆர்தர் ஜென்ஸன் அவரைத் தன் ஆய்வுக்காக அழைத்தார்.

616297875 என்ற எண்ணின் கனமூலம் என்னும் க்யூப் ரூட்டையும் 170859375 என்ற எண்ணின் ஏழாம் மூலத்தையும் கண்டுபிடிக்குமாறு கூறினார். 395, 15 என்று விடைகளை மனதிலேயே போட்டு அவர் கூற ஜென்ஸன் தான் இந்த எண்களை எழுதும் முன்னரேயே விடைகளை சகுந்தலா தேவி கூறியது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் என்றார்.

201 இலக்கமுள்ள ஒரு பெரிய எண்ணின் 23வது மூலத்தைப் போடுமாறு அவரைச் சொல்ல அவர் 50 விநாடிகளில் விடையை (விடை 546372891) அவர் சரியாகக் கூறினார். இந்தக் கணக்கின் தீர்வைக் கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் ஒரு தனி புரோகிராமையே எழுதி இதை சரிபார்க்க வேண்டி இருந்தது.

லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு 13 இலக்க எண்களைக் கொடுத்து அவற்றைப் பெருக்கி விடை தருமாறு கூற 28 விநாடிகளில் அதற்கான விடை 18,947,668,177,995,426,462,773,730 என்று கூறினார்.

இந்த நிகழ்வு கின்னஸ் புக் ஆஃப் ரிகார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது.

To be continued……………………….

***

Hindu Crossword812025 (Post No.14,067)

Written by London Swaminathan

Post No. 14,067

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Hindu Crossword812025

1  2   3   
          4
5     6    
     7     
8  9  10    
           
11          
           
12      13   

Across

1.Vamana took this form.

5.Mother of Gods in the Vedas

6.class, division, same group, similar type

8.Gautama’s wife molested by Indra

10.Scriptures dealing with temple worship in South India

11.Star of Shiva; also festival of Shiva

12.Name of Ganesh and Jain Tirtankara

Down

1.Shiva with three eyes

2.God of Pandharpur

3.Stage in Sanskrit

4.Goddess of Kanchipuram in Tamil Nadu

7.Garland in Indian languages

9. A sweetmeat-ball. It is made of coarsely ground gram or other pulse, or of corn-flour, mixed up with sugar and spices, and fried in ghee or oil. It is distinguished into several varieties.

13.English word Snake is derived from this Sanskrit

word (go upward)

Hindu Crossword812025

T 1RIV2IKRA3MA 
R  I   R  K4
A5DITI V6ARGA
Y  A M7 N  M
A8HAL9YAA10GAMA
B  A L A  K
A11RUDRA G  S
K  U   A  H
A12RISHTAN13EMI

–subham—

Tags- Hindu Crossword812025