Date uploaded in Sydney, Australia – 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் இயற்றிய திருவருட்பாவில் ஒரு துதி தெய்வமணி மாலை. அதிலுள்ள பாடல்கள் அனைத்திலும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. சென்னை நகர கந்த கோட்டத்தில் கோவில் கொண்டுள்ள சண்முகனைப் பற்றிய 31 பாடல்கள் அவை .
முதலில் கவனிக்கவேண்டிய விஷயம் சென்னை நகருக்குத் தரப்படும் சிறப்பு அடைமொழிகள் ஆகும் .
சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே. என்று 31 பாடல்களும் முடிகின்றன ; ஆயினும் தருமமிகு , திரு ஓங்கு, நன்னரிய, தலைவர் புகழ், தரையில் உயர், தார் கொண்ட , தன் புகழ் செய், தானமிகு, தப்பற்ற, சந்தமிகு, தானம் நீடு, தாய்கொண்ட, தரமேவு, முதலிய சிறப்பு அடைமொழிகளால் சென்னையை உயர்த்திப் பேசுகிறார்
அவர் காலத்தில் இருந்த சென்னையைவிட இப்பொழுது சென்னை எவ்வளவோ மாறிவிட்டது; ஆனாலும் அவர் தீர்க்கதரிசி போல, சொன்ன சில விஷயங்கள் இன்றும் உண்மையாகி வருகிறது. தலைவர் புகழ், தானமிகு , தரமேவு என்பன குறிப்பிடத்தக்கவை; சென்னையில் சங்கீதமும் நாட்டியமும் திரைப்படத் துறையும் கொடி கட்டிப் பறக்கின்றன. சென்னை நகரிலுள்ளது போல இத்தனை சபாக்கள் வேறு எங்கும் இல்லை. எங்கும் கோவில்களும் திருவிழாக்களும் நடக்கின்றன. அறுபத்து மூவர் பவனி போன்ற சிறப்பான விழாக்களும் நடக்கின்றன ; நல்லோர்கள் கொடுத்த நன்கொடையில் பச்சையப்பா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களும் சென்னைப் பல்கலைக் கழகமும் நடக்கின்றன ; இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
*****
இனி சில உவமைகளைக் காண்போம்
“நான்கொண்ட விரதம்
நின் அடிஅலால்
பிறர்தம்மை நாடாமை ஆகும்
இந்த நல்விரத மாங்கனியை
இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான் கொண்டு போவதினி
என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும்
ஒருகைத் தடிகொண் டடிக்கவோ
வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய் — என்று பாடி தெய்வ மணிமாலையை முடிக்கிறார்
கந்தன் திருவடிகளைத்தவிர பிறரை விரும்பிச் செல்லாமல் இருப்பதே என் விரதம்; இந்த விரத மாங்கனியை கெட்ட நாய் கவ்விக்கொண்டு போகிறதே என்று அலறுகிறார். நாய் என்பது நாய் போன்றலையும் மனம். அதை மன உறுதி என்னும் தடியைக் கொண்டு அடிக்க முடியவில்லை; முருகப்பெருமானே நீதான் அருளவேண்டும் என்கிறார்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உருகிய வள்ளலார், அவரைப் போலவே நாய் என்ற சொல்லை, உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துவதும் குறிப்பிடத் தக்கது.
****
25. பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்பட்ட மனையில்நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்அன்றிப்…… என்ற பாடலிலும் நாய் வருகிறது
பாயும் புலி போன்ற கொடுமையும் நாய் போன்ற அற்ப குணமும் உடைய கொடியவர்கள் வாழும் பாழான வீட்டில்…….. என்பது பொருள் .
இகலோக வாழ்வினை புலிகள் வாழும் காடு , சுறாமீன்கள் வசிக்கும் கடல் என்று ஆதிசங்கரரும் வருணிக்கிறார்.
கந்தனை விட்டுவிட்டு சிறு தெய்வங்களை வழிபடுவோர் பசும்பாலை விட்டு நாய்ப்பாலுக்கு அலைவோர் போன்றவர்கள் ; கசப்பான வேப்பம்பழத்தை விரும்பிச் சாப்பிடும் காகம் போன்றவர்கள் ஆவர் நெல்லுக்கு நீர் பாய்ச்சாமல் புல்லுக்கு நீர் இறைந்தவராவார்.
இவ்வாறு மூன்று உவமைகளை ஒரே பாட்டில் கொணர்கிறார்.
நாய்ப்பால் பற்றிய நீதி வெண்பாப்படலையும் நினைவுபடுத்தும் வரிகள் இவை .
நாயினுடைய பால் எல்லாம் நாய்க்குத்தான்; தூயவர்களுக்கு அல்ல .அது போல தீயவர்களின் செல்வம் எல்லாம் அடித்து வாங்கும் தீயவர்களுக்கே போய்ச சேரும்; தூயோருக்குக் கிடைக்காது..
****
இஞ்சி தின்ன குரங்கு போல என்பது தமிழ் ப்பழமொழி ; கள் குடித்த குரங்கு என்ற உவமையை ராமலிங்கர் பயன்படுத்துவது அதைவிட அழகிய சித்திரத்தினை மனக்கண் முன்னே கொண்டுவருகிறது :
மனம் என்னும் குரங்கு என்பதும் ஆன்றோர் வாக்கே; அத்தோடு நிறுத்தாமல் குயவன் சக்கரமோ பந்தோ, காற்றாடியோ என்றும் உவமிக்கிறார்.
****
இறைவனை வணங்காத உடலுறுப்புகளை சாடுகிறார் வள்ளலார்;
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
கந்தனை வணங்காத– வாழ்த்தாத — வாய் கூழ் கூடக் கிடைக்காமல் தவிக்கும் வாய்; கண்கள் அழுகின்ற கண்கள்; காதுகள் இழவுச் செய்திகளையே கேட்கும்; கைகள் பிச்சை எடுக்கும் கைகள் என்கிறார்.நெஞ்சமோ திடீர் திடீரென்று நடுங்கும் நெஞ்சம என்கிறார்.
உடம்பினை ஒன்பது வாசல் வீடு என்று வருணிப்பதைப் பகவத் கீதை முதல் பல நூல்களில் காண்கிறோம். அதை வருணிக்கும் வள்ளலார், வள்ளுவர் போல பறவைக்கூடு என்றும் பாடுகிறார்
17. உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
………
ஒப்பிடுக:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு— குறள் 338
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
தொடரும்……………………………………
—-Subham—
Tags- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 3, தெய்வமணி மாலை,உவமை நயம்
Date uploaded in Sydney, Australia — 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசிய ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது இந்துக்களுக்கு மிக முக்கியமாக அமையும் ஒரு திருத் தலமாகும். இதுவே புத்தமதத்தினருக்கும் மிக முக்கியமாக அமையும் திருத்தலமாகவும் திகழ்கிறது.
இத்திருத்தலம் பீகார் மாநிலத்தில் அதன் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. கல்கத்தா- வாரணாசி செல்லும் ரயில் பாதையில் கயா ரயில் நிலையத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர் : கதாதரர்
தீர்த்தம் : ராமாயணத்தில் நிரஞ்சனா என்று குறிப்பிடப்படும் பல்குனி நதி
தல விருட்சம் : அட்சய வடம் எனப்படும் ஆலமரம்
இந்தத் தலத்தைப் பற்றிய முக்கியமான புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்பொரு காலத்தில் கயாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா, சிவன் ஆகியோருடைய சரீரங்களை விடத் தனது சரீரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அதன் படியே அவன் பரிசுத்தமாக ஆனான். இதனால் அவன் யாரைத் தொட்டாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைய ஆரம்பித்தனர். அவனால் பாவிகளும் கூட ஏராளமானோர் சொர்க்கத்திற்குச் செல்லவே தேவர்கள் விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தித்து இதற்கு ஒரு தீர்வைத் தருமாறு வேண்டினர். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா ஒரு யாகத்தை கயாசுரனின் சரீரத்தின் மீது செய்தார். யாகத்திற்கு பிரம்மாவும் சிவனும் வந்திருந்தனர்.
அக்னியின் சூடு அந்த அசுரனை ஒன்றும் செய்யவில்லை. யமனை அழைத்து அவனை எழுந்திருக்காதபடி செய்ய முயன்ற போதும் அவன் தலை ஆடியது. யமனின் மகன் அந்தத் தலை மீது காலால் அமுக்கியபோதும் உடல் அசைவு நிற்கவில்லை.
விஷ்ணு நேரில் பிரத்யட்சமாகி அசுரன் தலை மேல் தன் பாதத்தை வைத்தார். அத்துடன் அவன் தலை ஆடாமல் நின்றது. யாகமும் பூர்த்தியாயிற்று.
இங்குள்ள கோவில் விஷ்ணுவின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவே இந்த விஷ்ணு பாதம் ஆகும்.
இது கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு உள்ளது. எண்கோண வடிவில் அமைந்த இந்த கோவில் 30 மீட்டர் உயரமும் எட்டு அடுக்குகளும் கொண்டதாகும்.
அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள அட்சய வடத்தில் திதியை முடிப்பவர்களுக்கு முக்தி நிலையைக் கொடுக்க வேண்டும் என்ற கயாசுரனின் வேண்டுதலும் அருளப்பட்டது.
ஆகவே இங்கு சிரார்த்தம் செய்தால் ஏழு தலைமுறை பித்ருக்கள் மோக்ஷம் அடைவார்கள் என்பது ஐதீகம். ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் இங்கு வந்ததையும் ராமர் தசரதருக்கு பிண்ட தானம் கொடுத்ததையும் ராமாயணன் குறிப்பிடுகிறது
இங்கு வருபவர்கள் காமம், கோபம், மோகம் ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது ஐதீகம். அட்சய வடத்தில் சிரார்த்தம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரு காய் அல்லது பழம் போன்ற எதையாவது விட்டு விடுதல் வேண்டும். இந்த உறுதி மொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
இங்குள்ள அட்சய வடத்தின் வேர்ப்பகுதி பிரயாகையிலும் நடுப்பகுதி காசியிலும் உச்சி மரக்கிளை கயாவிலும் இருப்பதாக ஐதீகம். இதை மூலம் – மத்யம் – அக்ரம் என்று குறிப்பிடுவது வழக்கம்.
இது உயரமான ஒரு இடத்தில் இருப்பதால் படிகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கலாம்; கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
புத்த கயா
புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும். இங்குள்ள போதிமரத்தடியின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற நாள் புத்த பூர்ணிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
புத்த கயாவில் போதி விருட்சம் எனப்படும் அரச மரம் உள்ளது.
இங்கிருக்கும் புத்தர் கோவில் 185 அடி உயரம் கொண்டது. இங்குள்ள போதி விருட்சத்தின் அடியில் புத்த பிட்சுக்கள் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பது பாரம்பரியப் பழக்கமாகும். இந்த மரத்திலிருந்து உதிரும் இலைகளே இங்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை மீது நமஸ்கரித்து அனைவரும் வணங்குகிறார்கள்.
இங்குள்ள பிரகாரத்தைச் சுற்றி மணி மகுட அமைப்புகள் உள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாறு இங்கு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள உருளைகளைச் சுற்றினால் செய்த பாவம் போகும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தாய் மடாலயம், முச்சலிண்டா ஏரி, பல்கு நதி, பிரம்மயோனி கோவில், சங்கமனா, சீனக் கோவில். வியட்நாம் கோவில் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றிற்கும் அனைவரும் செல்வது வழக்கம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ மஹாவிஷ்ணுவும் புத்த பெருமானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Date uploaded in Sydney, Australia – 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected and edited from national newspapers.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 5–ம் தேதி 2025-ம் ஆண்டு
*****
நேயர்கள் அனைவருக்கும் 2025–ஆம் ஆண்டு புத்தாண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
****
மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா, நேற்று டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த கும்பமேளாவின்போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், சுமார் 40 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது
2 ஆயிரம் டிரோன்கள் வானில் பறந்தபடி புராண காட்சிகளை லேசர் ஒளியில் காட்சிப்படுத்த உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைகளுக்காக இந்திய ராணுவம் முகாம்களை அமைத்துள்ளது.
கும்ப மேளா இந்த ஆண்டு இன்னொரு வகையில் சிறப்பு பெறுகிறது. சனாதனத்திற்கு என தனி வாரியம் அமைக்கும் குரல் வலுப்பெறுகிறது
வரும் ஜனவரி 26ம் தேதி திரிவேணி சங்கமத்தில் நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி சனாதன வாரியம் அமைக்குமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், ஹிந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியமாகிறது.
முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதைப் போல், ஹிந்துக்களுக்கு சனாதன வாரியம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.
சனாதன தர்ம கொடி ஏற்றம்
மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். திரிவேணி சங்கமம் நோக்கி ஊர்வலமாக செல்லும சாதுக்களை பொதுமக்கள் உற்சாகமாக மலர்கள் தூவி வரவேற்றனர்
நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தில், திங்களன்று, இரண்டு சன்னியாசி அகாராக்கள், பாரம்பரிய சடங்குகளைப் பின்பற்றி தங்கள் தர்மக் கொடிகளை நிறுவின. நாகா சன்னியாசிகளின் தலைமையில் 41 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. ****** 2024-இல் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை !!
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 2024 ஆம் ஆண்டில், 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்; உண்டியலில் ரூ.1365 கோடி காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 -ஆம் ஆண்டில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய மொத்த காணிக்கை ஆயிரத்து 365 கோடி ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
சென்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை திருப்பதி பாலாஜியை 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாகவும், 99 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகிறது .
****
டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைத்தால் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.
3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 100, முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு அர்ச்சகர் கோஷ்டி ஆர்ப்பாட்டமும் செய்தனர். டில்லி நகர கன்னாட் பிளேஸ் அனுமார் கோவிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த அர்ச்சகர்கள், ஒரு கேள்வியை எழுப்பினர். பத்தாண்டுக்காலமாக டில்லியை ஆண்ட ஆம் ஆத்மீ கட்சி அர்ச்சகர்களைக் கவனிக்காமல் இருந்துவிட்டு தேர்தல் வந்தவுடன் அறிவிப்பு வெளியிடுவது ஏனோ என்று குரல் எழுப்பினர்.
******
தெலுங்கானா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்
தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி அரசு, கோவில் நிலங்களில் சூரிய ஒளி மின்சாரப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது இதைக் கைவிட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது
இது கோவில் நிலங்களை அரசு எடுத்துக்கொள்ளும் மறைமுக வேலை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்தது
கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது; கோவில் நிலங்கள் இறைவனுக்கே சொந்தம்; அதைப் பராமரிக்கும் பொறுப்புதான் அரசு கையில் இருக்கிறது; மனம்போனபோக்கில் பயன்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று பரிஷத் கூறுகிறது .
****
அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடை மாலை
நாமக்கல் மாநகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என 3 வழிகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டன. ****
2569 ஏக்கரில் சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம்!
சபரிமலை விமான நிலையம் 2569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையம் அவசியம் என்பது அங்குள்ளோரின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.
இதையடுத்து, அங்கு சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து 1039.876 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
விமான நிலையம் அமைக்க மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து மட்டும் 1039.876 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள், 2492 தேக்கு, 2247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி, 1131 பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.
சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 குடும்பங்கள் செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் குடும்பங்களாகும். விமான நிலையம் அமைக்கப்பட்டால் உள்ளூர் வணிகம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 26ம் தேதி நிறைவுபெற்றது. மண்டல பூஜை காலத்தில் சுமார் 32 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். வருமானம் ரூ.297 கோடி கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4 லட்சம் பக்தர்கள் அதிகம் வந்துள்ளனர்.
மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும்., ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும் ,
******
5 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஆண்டவனை தரிசினம் செய்த தெலங்கானா பக்தர்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான விஜயகுமார் என்பவர் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து சென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
தங்க ஆபரணங்களை அணிவதில் ஏழுமலையானுடன் போட்டி போடுவது போல் நகைகளை அணிந்து கோயிலுக்கு சென்ற விஜயகுமாரை சக பக்தர்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர்..
நம் அனைவரின் கருணை மற்றும் அன்பின் மூலம் நம் உலகத்தை சிறந்த இடமாக மாற்றிய அமிர்தானந்தமயி அம்மாவை நான் மரியாதையுடன் வணங்குவதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :‘”சில நேரங்களில் நமக்குத் தேவைப்படுவது ஒரு அணைப்பு மட்டுமே’
நம் அனைவரின் கருணை மற்றும் அன்பின் மூலம் நம் உலகத்தை சிறந்த இடமாக மாற்றியதற்காக மாதா அமிர்தானந்தமயி அம்மாவை நான் மரியாதையுடன் வணங்குகிறேன்!
அனைவருக்கும் மகிழ்ச்சியான, வளமான மற்றும் நிறைவான 2025 ஐ ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
****
ஆங்கிலப்புத்தாண்டில் பரவசம்; ஒரே நாளில் அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சூரிய உதயத்திற்கு முன்பு நள்ளிரவில் ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில், அயோத்தியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று கடவுளை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையை கணக்கிட்டு பார்த்தால் 3 லட்சத்தை தாண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரையில் மட்டும் 3.50 லட்சம் பக்தர்கள் சுவாமி செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வந்ததால் நடை அடைக்கப்படாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
Markazzi Month Street Bhajan in Palani Kalayamuthur
பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம், ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக் கோயிலை வந்தடைந்தனர்.அதில் பலரும் பால் குடம், மயில் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
**** ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
***
கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை
கேரளாவில், பெரும்பாலான கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள், மேல் சட்டையை கழற்றும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அங்குள்ள நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சமீபத்தில் சிவகிரி யாத்திரை மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற சுவாமி சச்சிதானந்தா, ‘கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறை கைவிடப்பட்ட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இது, கேரள கோவில் நிர்வாகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் கூறியதாவது:
ஹிந்துக்களிடையே உள்ள பல பிரிவினர், பல்வேறு பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்றுவது போன்ற பிரச்னைகள் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கக் கூடாது. சுவாமி சச்சிதானந்தா கூறியதில் தவறேதும் இல்லை. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் கீழ் செயல்படும் கோவில்களில், ஆண்கள் மேல்சட்டை அணிய அனுமதிக்கப்படுகிறது.
சில கோவில்களில் வெவ்வெறு நடைமுறைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஒரே நாளில் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சுவாமி சச்சிதானந்தாவின் கருத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்தற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில், சரியான நேரத்தில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
“அனைத்து பிரிவுகளுடனும் விவாதிக்காமல், இந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வர முடியாது,” என்றார்.
அரசு தலையிடக்கூடாது!
நாயர் சமூக சங்க பொதுச்செயலர் சுகுமாரன் நாயர் கூறியதாவது: அனைத்து ஹிந்துக்களும், அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள நடைமுறைகளை சீர்குலைக்காமல் கோவில்களுக்குள் நுழைய சுதந்திரம் உள்ளது. எனவே, கோவில்களில் உள்ள பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறையில் அரசு தலையிடக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கேரள யோகக்ஷேம சபா தலைவர் அக்கீரமன் காளிதாசன் பட்டாதிரிபாட்டும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-12-2024 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
மஹரிஷி பாணினி! – 2
மீண்டும் பாடலிபுத்ரத்திற்கு தான் இயற்றிய இலக்கண நூலுடன் பாணினி வந்தார். அப்போது வர்ஸாவிடம் பயின்ற இன்னொரு சீடரான வரருசி இந்திரனின் அருளால் இயற்றிய இன்னொரு இலக்கண நூலைக் கொண்டிருந்தார்.
பாணினி வரருசியை வாதுக்கு அழைத்தார். எட்டு நாட்கள் நீண்ட விவாதம் நடந்தது. எட்டாம் நாளன்று வரருசி பாணினியைத் தோற்க அடித்தார். அப்போது வானிலிருந்து ஒரு பெரும் ரீங்கார ஒலி கேட்டது.
வரருசியின் இலக்கணப் புத்தகம் அழிக்கப்பட்டது. பின்னர் பாணினி தனது சகாக்கள் அனைவரையும் தோற்கடித்தார் பெரும் இலக்கண வித்வானாகத் திகழ்ந்தார்.
பாணினி சிவனை நோக்கித் தவம் செய்த போது சிவன் அவர் முன்னே தோன்றி நடனமாடலானார். தனது உடுக்கையை சிவபிரான் 14 முறை அடித்தார். அதிலிருந்து அய்ம் ருக் இன் அவ் ஹயவரட் உள்ளிட்ட 14 ஒலிகள் எழுந்தன.
பாணினி இந்த பதினான்கையும் 14 சூத்ரங்களாக அமைத்தார். இவை ப்ரத்யாஹார சூத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்போது இவை மாஹேஸ்வர சூத்ரங்கள் என்று அழைக்கின்றனர்.
சம்ஸ்கிருத மொழிக்கு உள்ள சிறப்புகளில் ஒன்று கடபயாதி அமைப்பு முறையாகும்.
அது என்ன கடபயாதி முறை?
சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. தாங்கள் சொல்ல வந்ததை இந்த கடபயாதி அமைப்பு முறை மூலமாக ஏராளமான கவிஞர்களும் அறிஞர்களும் கூறி விடுவார்கள்.
நாராயணீயம் இயற்றிய நாராயண பட்டத்ரி தான் எந்த ஆண்டு இந்த நூல் இயற்றி முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அமைப்பைப்
பயன்படுத்தியே சொல்லி இருக்கிறார்.
நாராயணீயம், ஆயுர் ஆரோக்ய சௌக்யம் என்ற வார்த்தைகளுடன் முடிகிறது. இந்த வார்த்தைகளுக்கான எண் கடபயாதி சங்க்யா முறைப்படி 17,12,210 ஆகும். கலியுகத்தின் ஆரம்பத்திலிருந்து எண்ணிப் பார்த்தால் 1586, டிசம்பர் 8 என்று வருகிறது. அன்று தான் நாராயணீயம் எழுதி முடிக்கப்பட்ட நாளாகும்.
மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் முதல் ஸ்லோகம், ‘நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் தேவீம் சரஸ்வதீ சைவ ததோ ஜயம் உதீரியேத்’ என்று ஆரம்பிக்கிறது. இதிலிருந்து மஹாபாரதத்தின் பெயர் ஜய என்று தெரிகிறது,
ஜ என்ற எழுத்திற்கு உரிய எண் 8. ய என்ற எழுத்திற்கு உரிய எண் 1. ஆக 81 என்ற இதை திருப்பிப் போட்டால் வருவது 18.
மஹாபாரதத்தில் 18 பர்வங்கள் உள்ளது. கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது. மஹாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. ஆக ஜய என்ற இந்தப் பெயர் பொருள் பொதிந்த ஒன்றாக இருக்கிறது. கடபயாதி சங்க்யா இதை சூசகமாக விளக்குகிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இறுதியில் சொல்லப்படும் முக்கியமான ஸ்லோகம் ஒன்று உண்டு.
ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
ராம ராம ராம என்று மூன்று முறை உச்சரித்தால் அது ஆயிரம் முறை உச்சரித்ததற்கு சமமாகும் என்பது இதன் பொருள்.
அது எப்படி 1000 முறை உச்சரித்தது போல் ஆகும்?
இந்தக் கேள்விக்கு விடை கடபயாதி அமைப்பில் இருக்கிறது.
கடபயாதி அமைப்பின் படி ரா என்றால் 2 ம என்றால் 5.
ஆக ராம என்றால் 2 x 5 = 10. ராம என்று மூன்று முறை சொன்னால் வரும் எண் 1000. அதாவது 10 x 10 x 10 = 1000
இது போல இறைவனின் நாமத்திற்கு கடபயாதி முறை மூலமாக வரும் எண்கள் அற்புதமான உண்மைகளைச் சொல்லி என்ன பயன் கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மந்திரங்களுக்குச் சக்தி உண்டு என்பதை ஏராளமான விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
மந்திரங்களில் உச்சரிப்பு மிக முக்கியம்.
யாக்ஞ்யவல்கிய ஸ்மிருதி, ஒரு புலியானது எப்படி தன் குட்டியை வாயில் கவ்வி எடுத்துச் செல்லுமோ அதே போல ஒருவர் ஒரு சொல்லை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இதை பண்டைய காலத்திலிருந்து இன்று வரை மனனம் செய்து ஓதி வரும் வேத பண்டிதர்களை நாம் பார்க்கலாம். மூவாயிரம் வருடத்திற்கும் முந்தைய வேத மந்திரங்களை,- 40000 முதல் ஒரு லட்சம் வார்த்தைகள் உள்ளதை- அவர்கள் மனப்பாடம் செய்து உச்சரிப்புத் தவறாமல் ஓதுவது அதிசயமான ஒரு விஷயம்.
சம்ஸ்கிருதத்தின் பயனை ஆராயப் புகுந்தார் ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் (JAMES HARTZELL) என்ற ஒரு விஞ்ஞானி.
இவர் ஒரு நியூரோ சயின்டிஸ்ட்.
டெல்லிக்கு வந்த இவர் டெல்லி பகுதியில் இருந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து வேத பண்டிதர்களை ஆய்வுக்காக அழைத்தார். மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் எனப்படும் எம் ஆர் ஐ சாதனைத்தால் வேத பண்டிதர்களின் மூளையைப் படம் பிடித்தார்.
வேதம் ஓதும் வேத பண்டிதர்களின் மூளை அதிசயிக்கத்தக்க விதமாக பல்வேறு மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதைக் காண்பித்தன. மூளையில் காணப்படும் க்ரே மேட்டர் எனப்படும் சாம்பல் நிறப் பொருளானது 10 சதவிகிதம் மூளையின் இரு செமிப்ரல் ஹெமிஸ்பியர்களிலும் அதிகமாக இருப்பதை இவர் கண்டறிந்தார். இவை உச்சரிக்கின்ற திறனைக் கூட்டுவதோடு ஒலியை மிகச் சரியாக திறம்பட வழங்க உதவுகின்றன.
மறதி ஏற்படாது என்பன போன்ற இன்னும் பல பயன்களையும் அவர் பட்டியலிடுகிறார். இதற்கு அவர் சான்ஸ்க்ரிட் எஃபெக்ட் (Sanskirt Effect) என்று பெயரிட்டார்.
கம்ப்யூட்டர் புரொகிராமிங்கிற்கு பொருத்தமான மொழி சம்ஸ்கிருதம் என்று நாஸா கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத் தகுந்தது.
ஆக இப்படி சம்ஸ்கிருதத்திற்கு ஒரு அருமையான இலக்கணத்தை வகுத்து அதை உலகின் ஒப்பற்ற மொழியாகத் திகழ வைத்ததில் பாணினியின் பங்கு மகத்தானது.
சூரிய சந்திரர் உள்ள வரை சம்ஸ்கிருதம் புகழுடன் நீடித்து நிலைத்து நிற்கும். சம்ஸ்கிருதம் உலகில் உள்ளவரை பாணினியின் புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!
Date uploaded in Sydney, Australia – 5 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ACROSS
1.the most famous Sahasranamam is in the name of this goddess.
4.Bull, Shiva’s vehicle (mote:Hindi spelling is used)
5.Atri Maharishi’s wife; famous woman
DOWN
1.word for salt; name of an Asura
2.word for sugarcane; name of a dynasty; they propagated sugarcane cultivation
3. One of the daugthers of Kāśirāja, who, together with her sister named Ambālikā, were taken away by force and were married to by Vicitravīrya. Goddess in Hinduism, Buddhism, Jainism.
Date uploaded in Sydney, Australia – 5 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 1823- 1874
பள்ளிக்கூடப் பருவத்தில் மதுரையில் வீட்டில் பஜனைகள் நடக்கும் . எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெங்கடராமன் சந்தானம் சங்கீத ரசிகர் ; தாயார் வயலினில் சர்ட்டிபிகேட் வாங்கி சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வயலின் வாசித்தவர். அந்த சங்கீத ஞானத்தைத் தக்கவைத்துக்கொண்டது எனது தம்பி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பிரின்சிபாலாக இருந்த சூரிய நாராயணன் மட்டுமே.
பத்திரிகை ஆசிரியர் என்பதால் தந்தையிடம் செய்திகளைக் கொடுக்க நேரடியாக வடக்கு மாசிவீதி வீட்டுக்கே வந்து விடுவார்கள்; ஏனெனில் என் தாயார் (திருமதி ராஜ லெட்சுமி சந்தானம் ) போடும் காப்பி மிகவும் பிரசித்தம்; யார் எப்போது வந்தாலும் அந்த காப்பி கிடைக்கும். அப்படி வரக்கூடியவர்களில் ஒருவர் மஹாதேவன் அவர் வசித்தது கல்லறைச்ச சந்து (உண்மையான பெயர் சமப்ந்த மூர்த்தித்தெரு). அதிக தூரம் இல்லை. அவர் நாடக நடிகர் ; நன்றாகப் பா டுவார். (உண்மையான தொழில் எனக்குத் தெரியாது) எப்போது வந்தாலும் அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் என்ற பாடலைப் பாடச் சொல்லி கேட்போம் .அவர் வள்ளலார் பாடல்களையும் வள்ளி திருமணம் போன்ற நாடகப் பாடல்களையும் பாடுவார். அவைகளையெல்லாம் ரசித்துக் கேட்போம்.
தந்தையும் பஜனையில் அம்பலத் தரசே அரு மருந்தேஎன்ற பாடலைப்பாடுவார் ஒவ்வொரு வரியையும் நாங்கள் திரும்பிச் சொல்லுவோம். பிற்காலத்தில் நானும் அடுத்த வீட்டு ஐயங்கார் வீட்டில் அவருடைய பையன்களுடன் சேர்ந்து பஜனை செய்தேன்; அதில் ஒரு பாடல் அம்பலத் தரசே அரு மருந்தே ;சிவன் மீது அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) பாடிய பாடல் ; அப்போதெல்லாம் பட்டையாக விபூதி பூசிய வள்ளலார் சிவ பக்தர் என்றே நினைத்திருந்தேன் ; எங்கள் வீட்டிலும் சுவரில் தொங்கிய படங்களில் ஒன்று வள்ளலார் படம். சொல்லபோனால் எங்கள் வீட்டில் இல்லாத சாமியார் படமே இல்லை. என் தந்தையோ ஆறாயிரம் புஸ்தகங்களை சேர்த்து வீட்டில் லைப்ரரியே வைத்திருந்தார் அவற்றில் பெரும்பாலானவை சாமியார் புஸ்தகங்கள்தான் .
பள்ளிக்கூடத்தில் தமிழ் புஸ்தகத்தில் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே,அல்லது அப்பா நான் கேட்டருள்புரிதல் வேண்டும் என்ற பாடலும்தான் இருக்கும்; அதைப் பரீட்சைக்காக மனப்பாடம் செய்வோம்.
மதுரைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தபோது முதல் பேப்பர் ஆங்கிலம்; இரண்டாவது பேப்பர் தமிழ்; மூன்றாவது பேப்பர் நாம் எடுத்துக்கொண்ட பாடம். அப்போது தமிழில் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற பாடல் வந்தது . அந்தப்பாடலைத்தான் அதிகமான பாகவதர்கள் பாடியுள்ளனர். அதைப்படாத தமிழிசைக்கு கச்சேரிகள் இல்லை .
அந்தப்பாடலையும் அது இடம்பெறும் வள்ளலாரின் தெய்வ மணி மாலையையும் படிப்போருக்கு வள்ளளார் பெரிய முருக பக்தர் என்பது தெளிவாகும்.
அவர் பாடிய மகாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருந்தாலும் சிவ பெருமானைப் பற்றி அதிகம் சொல்லாமல் பொதுவான தத்துவ விஷயங்களையே அதிகம் பாடியுள்ளார்.
ஆனால் தெய்வ மணிமாலை, கந்தர் சரணப் பத்து போன்ற பாடல்களில் தெளிவாக, வெளிப்படையாக முருகனைப் பாடுகிறார்.
வள்ளலார் முருகனை அதிகம் பாடினாரா? சிவனை அதிகம் பாடினாரா? என்று பட்டி மன்றம் நடத்தினால் நான் முருகன் பக்கமே நின்று பேசுவேன்
****
தெய்வ மணிமாலை பற்றிப் பார்ப்போம்.
ராமலிங்க சுவாமிகள் ஒன்பது வயதிலேயே முருகன் பற்றிப் பாடினார்; 24 வயது வரை சென்னையில் வாழ்ந்து கந்த கோட்டத்தினை வலம் வந்தார். சென்னையைத் தரும மிகு சென்னை என்று புகழ்ந்தார்; காரணம்; சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் சித்தர் சமாதிகள் உள்ளன. கந்த கோட்டம், கபாலீஸ்வரர் கோவில், திரு அல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் ,திருவான்மியூர் கோவில் போன்ற பாடல்பெற்ற தலங்கள் உள்ளன .
ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. அவர் பாடிய ஆறாயிரம் பாடல்களில் முருகன் மீது 560 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தணிகைப் பெருமாள் மீதும் , சென்னை கந்தகோட்ட முருகன் மேலும் வைத்தீஸ்வரன் கோவில் முத்துக் குமார சுவாமி மீதும் , பொதுவில் முருகன் மீதும் பாடிக் குவித்திருக்கிறார்
இவற்றில் தெய்வமணிமாலை என்ற தலைப்பில் 31 பாடல்களும் கந்தர் சரணப்பத்து என்ற தலைப்பில் பத்து பாடல்களும் பாடியுள்ளார்.
ஆண்டாள் பாடிய முப்பது பாசுரங்களுக்கு அவரே சங்கத் தமிழ் மாலை என்று பெயர் சூட்டினார்; அதே போல வள்ளலார் பாடிய 31 பாடல்களுக்கு தெய்வ மணி மாலை என்று பெயர் சூட்டினார்; ஒவ்வொரு பாடலும் ஒரு ரத்தினம்/ மணி தான்!
எல்லாப் பாடலும் தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே — என்று முடியும்.
இந்தப் பாடல்களில் மிகவும் பாடப்பட்ட பாடல் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற……. அதற்கு அடுத்தபடியாக வரும் சிறந்த பாடல் ஈயென்று நானொருவரிடம் ………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-12-2024 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
மஹரிஷி பாணினி! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்தை வகுத்து எழுதிய மகரிஷி பாணினி பற்றி சிந்திக்கப் போகிறோம்.
முதன் முதலாக இப்படி ஒரு இலக்கண நூலை வகுத்தவர் இவரே.
பாணினி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் காந்தாரத்தில் அட்டோக் என்ற நகரில் உள்ள சாலாதுரா என்ற கிராமத்தில் பாணினா என்பவருக்கும் தக்ஷி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆனால் அவர் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை பாடலிபுத்ரத்தில் தான் கழித்தார். ஆகவே அறிஞர்கள் அவர் சாலாதுராவில் பிறந்திருந்தாலும் பாடலிபுத்ரத்திலேயே வளர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.
ஜைமினி மற்றும் பர்த்ருஹரி பாணினியை ஒரு சிஸ்டா என்று கூறுகின்றனர். சிஸ்டா என்பவர்கள் பிராமணர்களின் ஒரு பிரிவு. அவர்கள் சாஸ்திரங்களை நன்கு கற்றவர்கள். உலக இன்பங்களைத் துறந்தவர்கள். இமயமலையிலும் காலகாவனம் எனப்படும் வங்காள பிராந்திய காடுகளிலும் விந்திய மலையிலும் ஆரவல்லி மலையிலும் வாழ்க்கையைக் கழித்தவர்கள்
இவர் வாழ்ந்த காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. டாக்டர் கோல்ட்ஸ்டக்கரும் பண்டார்கரும் (Dr. Goldstucker and Bhandarkar) இவர் கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் வின்சென்ட் ஸ்மித் மற்றும் பெல்வல்கர் (Vincent Smith and Belvelkar) ஆகியோர் கிறிஸ்துவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர்.
பாணினி புத்தரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் அவர் புத்தர் காலத்திற்கு முன் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது.
ஸ்மிருதிகளைப் பற்றி அவர் நன்கு அறிந்திருப்பதால் அவர் மனு வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் வாழ்ந்திருக்கவேண்டும். ஆக அவர் கிறிஸ்துவுக்கு முன்னர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.
பதஞ்சலி பாணினியை தாக்ஸியின் மகனே பாணினி என்று நம்புகிறார். பாணினியை அவர் ஆசார்யர் என்றும் மஹரிஷி என்றும் பகவான் என்றும் அழைக்கிறார்.
ராமபத்ராக்க்ஷிதர் என்ற அறிஞர் பாணி என்ற முனிவரின் மகனே பாணினி என்று கூறுகிறார்.
மிக முக்கியமான இலக்கணகர்த்தாக்கள் தனக்கு முன்னர் இருந்ததாக பாணினி குறிப்பிடுகிறார். இவர்களில் பத்து பேரை அவர் குறிப்பிட்டாலும் கூட அவர்கள் இயற்றிய நூல் ஒன்று கூட நம்மிடையே இன்று இல்லை.
பாணினி தான் வகுத்த விதி ஒன்று பழைய விதியுடன் ஒத்துப் போகவில்லை என்றால் முந்தைய விதி என்ன என்பதையும் மாற்றாகத் தருகிறார்.
இலக்கணத்தை வடமொழியில் வ்யாக்ரணம் என்று சொல்கிறோம். இலக்கணம் என்று வழக்கு மொழியில் நாம் கூறுவதிலிருந்து வ்யாக்ரணம் என்பது சற்று மாறுபடுகிறது. லத்தீன் வழியில் பிறந்த இதர மொழிகளின் இலக்கண நூல்கள், எப்படி வாக்கியங்களை அமைப்பது போன்ற விதிகளைக் கூறுகையில் சம்ஸ்கிருத வ்யாக்ரணமானது மொழியின் அறிவியலாக அமைகிறது. Science of Language என்று இதைக் கூறலாம்.
இதில் அடங்கி இருப்பவை: PHONETICS, ETYMOLOGY, ACCENTUATION, SYNTAX, WORD FORMATION BY DECLENSION, CONJUGATION, SEMANTICS.
இவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி. பெயரே இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்பதைத் தெரிவிக்கிறது. இந்த ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களைக் கொண்டிருக்கிறது.
இது மொத்தம் 3995 சூத்திரங்களைக் கொண்டிருக்கிறது. இது வேதத்தின் அடிப்படையிலானது. தாதுபாடா, கணபாதா, பரிபாஷா, லிங்கானுசாஸனா ஆகிய உப உரைகளைக் கொண்டிருக்கிறது. சிவபிரானின் அருளால் உத்வேகம் பெற்று அவர் தனது நூலை இயற்றியுள்ளார்,
சீன யாத்ரீகரான யுவான் சுவாங் உலக மொழிகள் அனைத்தும் பாணினீயத்திலிருந்தே தமது இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்கிறார்.
இவரைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
பாடலிபுத்ரத்தில் வர்ஸா என்ற அறிஞர் வாழ்ந்து வந்தார். அவரிடமே கல்வி கற்றார் பாணினி. நாளடைவில் வர்ஸாவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களில் மிகவும் மந்த புத்தி கொண்டவராக பாணினி இருந்தார். ஆனால் அவர் குருவுக்கும் குரு பத்னிக்கும் நல்ல சேவை செய்து வந்தார். குரு பத்னிக்கு பாணினி மீது மிகுந்த அன்பு இருந்தது. அவர் பாணினியை அழைத்து இமயலைக்குச் சென்று சிவனைக் குறித்துத் தவம் இருக்க அறிவுரை வழங்கினார்.
அதன்படியே சிவனைக் குறித்து இமயமலையில் பாணினி தவம் செய்ய சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரை சம்ஸ்கிருத இலக்கணம் எழுத அருள் பாலித்தார்.
Date uploaded in Sydney, Australia – 4 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
We went to Sydney Murugan Temple on 3rd January 2025. Being a Friday evening, we saw a lot of devotees in the temple. It is a Sri Lankan Tamil temple, but I saw people from different communities including North Indians and Nepalis coming. A white coupe was doing special Puja in front of the main shrine with the help of a priest. There are three main shrines in the temple for Lord Murugan (Skandan, Kartikeyan, Shanmugam), Shiva in Linga form and Goddess Meenkashi.
The temple is constructed in the agamic way with the deities around the main shrines. Lord Ganesh and Lord Kartikeya/Muruga on either side with Dakshinamurthy, , Vishnu. Lakshmi, Durga , Chandikeswara etc. At the end Navagrahas also are installed.
The temple has a good and divine atmosphere. It won’t take much time to go around the temple. It has a spacious car park and a canteen behind.
I was surprised to see many devotees coming by public transport. It has a bus stop in front of the temple.
People wash their feet before entering the temple. The taps are just outside. In those days every temple has a tank where the devotees washed their hands and feet. It is still in all big temples in Tamil Nadu. Three or four priests were serving the devotees.
The temple has a website where the festival events and opening hours are given. It is better to check it before visiting the temple.
After having good Darshan we entered the temple canteen and ordered Masala dosa and Vadais. The quality was not good and the items were expensive as well. The dosa was not hot and made from sour dough. The temple authorities must improve it and reduce prices as well. When we went to Venkateswara temple, we had curd rice and lemon rice with other snacks. So, the temple may provide some rice items as well irrespective of the time of the day.
The temple surroundings have good flowering plants. The temple is maintained well.
From the temple website I came to know that they organise religious discourses and concerts on festival days. More details about the coming events are also available on the website.
There was a big board announcing the opening of a community centre very soon. It is a good move. Since Sydney has a sizeable population of Hindus it would serve the Hindu community.
When was the Sydney Murugan Temple built?
The foundation of this temple was laid way back in 1994. During 1985 a Hindu society, the Saiva Manram, was founded to construct a temple for Lord Murugan. Since its inception, Lord Murugan has been called ‘Sydney Murukan. ‘ The Saiva Manram has laboured hard for nearly ten years to build this temple for Lord Murugan.
Date uploaded in Sydney, Australia – 4 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே— திருவருட்பா பாடல் , அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்
எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மனப்பாடம் ஆன பாடல் இது. ஏனெனில் நான் மதுரையில் யாதவர்கள் நடத்தும் யாதவா ஸ்கூலில் முதல் ஐந்து வகுப்புகளைப் படித்தேன். யாதவர்கள் ஒரு புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலையும் நடத்தி வந்தார்கள். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அடுத்தபடியாக நான்கு மாசி வீதிகளையும் வலம் வரும் ஒரே தெய்வம் அந்தக் கிருஷ்ணர் மட்டுமே. அவ்வளவு சிறப்பாக நடத்திய கோவில் அது. என்னுடைய வடக்கு மாசிவீ தி வீட்டிலிருந்து பள்ளிக்கூடமும் கோவிலும் கூப்பிடு தூரம்தான் .
யாதவர்கள்களோ க்ருஷ்ண பக்தர்கள். ஆயினும் அந்தப் பள்ளியில் பாடிய பாடலோ வள்ளலார் பாடல். அதுதான் காலையில் தினமும் பள்ளிக்கூட இறைவணக்கப் பாடல். குடுமி வைத்த, நாமம் போட்ட ஒரு அய்யங்கார் எங்களுக்கு ஹெட்மாஸ்டர் ; பெயர் எல்லாம் மறந்துவிட்டது என்னுடைய ஆப்த நண்பர்கள் சுடலை முத்து, கோவிந்தன், பக்கோடா சுந்தரம்; இவை தவிர எதுவுமே நினைவு இல்லாவிடினும் வள்ளலார் பாடல் மட்டும் இன்று வரை– 77 வயது வரை– நினைவில் இருக்கிறது.
சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ( எஸ் எஸ் எல் சி ) படித்தேன். அங்கு தினசரி இறைவணக்கப் பாடல் காக்கைச் சிறகினிலே நந்த லாலா. அதைப் பாடிய மதுரை சேஷகோபாலன் எனக்கெல்லாம் மிகவும் சீனியர். பிற்காலத்தில் மதுரை சேஷகோபாலன் மிகவும் புகழ்பெற்ற பாடகர் ஆனார்.
இப்பொழுது ஆரம்பப்பள்ளிக் கூடப் பாடலுக்கு நன்றாகப் பொருள் தெரிகிறது நிறைய நல்ல விஷயங்களை சிறு வயதிலேயே குழந்தைங்களை மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த பொருளைக் கற்பிக்கும் . விநாயகர் அகவல் பற்றி காஞ்சி பரமாசார்யசுவாமிகள் (1894-1994) குறிப்பிடுகையில் தினமும் அதைப்படித்து வந்தால் போகப்போகப் பொருள் புரியும் என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுகிறார் காரணம் இதை எத்தனை விளக்கினாலும் நாமே மனதில் பொருளை வரவழைத்துக் கொண்டால் அது ஆழம் ஆழமாகச் சென்று கொண்டே போகும்.
சிறைச் சாலையில் இந்துக் கைதிகளை சந்திக்கும் பகுதிநேர வேலையையும் லண்டனில் செய்துவந்தேன். HINDU CHAPLAIN ஹிந்து சாப்ளைன் என்று பெயர். பெண்கள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. ஒரு இலங்கைப் பெண்மணி – இளம் வயது — பாஸ்போர்ட் திருத்திய குற்றத்துக்காக ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றிருந்தார் ; அவரிடம் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்குகிறீர்கள் என்றேன் ; முருகன் என்றார். என்ன தெய்வபக்திப் பாடல் தெரியும்? என்று கேட்டேன். பேந்தப் பேந்த விழித்தார் ; அம்மா ,அப்பா என்ன பாடினார்கள் ; அதாவது நினைவு இருக்கிறதா? என்று கேட்டேன் . ஆங்கிலத்தில் மில்க், ஹனி என்றெல்லாம் வரும் பாடல் என்றார். உடனே நான் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்….. என்ற பிள்ளையார் துதியைச் சொன்னேன். ஆமாம் அதுதான் அதுதான் அம்மா சொல்லிக்கொடுத்தார் என்று தலையை ஆட்டினார் இதனால்தான் இளமையில் கல் என்று என்று ஆன்றோரும் சொன்னார்கள். ஆங்கிலத்திலும் CATCH THEM YOUNG என்று சொல்லுவார்கள் .
****
இப்போது வள்ளலார் பாடலின் பொருளைக் காண்போம் :
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
களிப்பு = பேரானந்தம்
பக்த விஜயம் என்ற நூலைப் படித்தால் கீழ்மட்ட தொழில்களை செய்துவந்த குயவர்கள், நெசவாளர்கள், சக்கிலியர் , உழவர்கள் — அதாவது பள்ளிக் கல்வி கற்காத –பக்தர்களும் பெரிய மஹான்களான கதைகளை அறியலாம். ஆழ்வார்களில், நாயன்மார்களில், இது போல பல அடியார்களைக் காண்கிறோம். ராம கிருஷ்ண பரமஹம்சரோ ரமணரோ சேஷாத்ரி சுவாமிகளோ பள்ளிக்கூடம் செல்லவில்லை .அவர்கள் எல்லோர்க்கும் இறைவன் அருள் புரிந்தார் ; பெரிய படிப்பு படித்த சுவாமி சிவானந்தர், ஆதிசங்கரர் போன்றோருக்கும் அருள் புரிந்தார் ஆக ஆன்மீக முன்னேற்றம் அடைய கல்வி என்பது ஒரு பொருட்டல்ல .
****
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
சூர்தாஸ் , தீர்க்கதமஸ் போன்ற பக்தர்கள் கண் பார்வையற்றவர்கள் . தீர்க்க தமஸ் — நீண்ட இருள் – ஒரு ரிக் வேத ரிஷி; அவருடைய பெயரே அவர் குருடர் என்பதைக் காட்டும்; அவர் பாடிய புகழ்பெற்ற துதிகள் ரிக்வேதத்தில் உள. புகழ்பெற்ற கிரேக்க இதிஹாசக் கவிஞர் ஹோமர் என்பவரும் அந்கரே ; அவர்களுக்கு எல்லாம் ஞானக் கண் கொடுத்தவன் இறைவன் ; இறைவனைக் கண்டவர்கள் வரிசையில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சாது சந்யாசிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானக்கண் கொடுத்ததால் இன்று ரமணர், ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்றோரின் அ,,ய சொற்பொழிவுகளை நாம் படிக்க முடிகிறது
****
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
வல்லார் என்பதை உடல் வலிமை, மன வலிமை, பொருள் வலிமை உடையோர் என்றும் மாட்டார் என்பதை அவை இல்லாதோர் என்றும் பொருள் கொள்ளாலாம். மதுரையில் சிவன் விளையாடிய 64 லீலைகளைக் கூறும் திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு சிவ பெருமான் பெரிய அரசர்களுக்கும் வலிமையற்ற ஏழைப்பங்காளருக்கும் எப்படியெல்லாம் அருள்புரிந்தார் என்பது புரியும்.
****
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
இறைவனை மதிக்காதவர்களை நாம் அசுரர்கள் என்போம். நரகாசுரன், ஹிரண்யகசிபு, மஹாபலி, ராவணன் போன்ற அசுரர்களுக்கும் இறைவன் மோட்ச கதியைக் கொடுத்ததை புராண இதிகாசத்தில் காண்கிறோம் ; அவர்கள் செய்த பாவங்கள் அத்தோடு கழிவதால் அவர்கள் இறைவன் கைகளில் இறக்கும் பாக்கியத்தைப் பெறுகின்றனர் . இதைக் கம்ப ராமாயணத்தில் வாலி வதை படலத்தில் காணலாம். மறைந்திருந்து கொன்றதாக ராமனைக் குற்றஞ் சாட்டிய வாலி, இறுதியில் ராமன் கையால் மரணம் அடைந்தது பாக்கியமே என்கிறான்.
இன்னொரு பொருளும் உண்டு இறைவன் எல்லோருக்கும் மதி- புத்திமதி — சம அளவில் கொடுத்து இருக்கிறான். அவரவர் அதைப் பயன்படுத்துவது வேறு வேறு விதமாக இருக்கிறது பிறப்பொக்கும் எல்லா உயிரும் ; ஆனால் செய்தொழிலால் வேற்றுமை ஏற்படுகிறது என்று வள்ளுவனும் பகர்வான்.
****
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
இறைவன் பாரபட்சமற்றவன்; அவன் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்றவன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது கணியன் பூங்குன்றன் என்ற தத்துவ ஞானியின் பொன்மொழி அவரவர் பூர்வ ஜென்ம வினைப்பயனால் ஒருவர் தவறான வழியிலோ சரியான வழியிலோ செல்கின்றனர் ; உபநிஷத்தில் வரும் த, த, த, கதை இதை விளக்குகிறது அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் மூவரும் உபதேசம் கேட்கச் சென்றனர்; இறைவன் பிரஜாபதி சொன்னது ஒரே சொல் அதைத் தேவர்கள் தர்மம் /அடக்கம் வேண்டும் என்றும் அசுரர்கள் தயா /கருணை வேண்டும் என்றும் மனிதர்கள் தத்த / தானம் செய்ய வேண்டும் என்றும் பொருள்கொண்டனர் மேற்கூறிய இறப்பிண்டு வள்ளலார் வரிகளையும் விளக்கு கதை இது
நாம் பிறக்கும்போது நமது பாங்கில் இறைவன் ஒரு தொகையை டெபாசிட் செய்து அனுப்புகிறான். எப்படி முதலீடு செய்தால் அது வளரும் என்றும் என்ன செய்தால் அது தேயும் என்றும் (இதிஹாச, புராண, தர்ம சாஸ்திர நூல்களில்) சொல்லியும் கொடுக்கிறான்; இதற்குப் பிறகும் விவேகத்தைப் பயன்படுத்துவது நம் கைகளில்தான் இருக்கிறது ..பஸ்மாசுரன் போன்றவர்க்கும் சிவன் வரம் கொடுத்தார் ராவணனுக்கு வரம்/ அஸ்திரம் கொடுத்தார் ; அவர்கள் தவறாகப் பயன்படுத்தியதால் அழிந்தனர் .
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே
இவ்வாறு எல்லோருக்கும் பாரபட்சமின்றி அருளும் சிவ பெருமானே என்னுடைய துதியை ஏற்பாயாக என்பது வள்ளலாரின் வேண்டுகோள்.
—SUBHAM—-
TAGS- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
26-12-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! – 2
ச. நாகராஜன்
ஊனமுற்றோருக்கு நல் வாழ்வு
உலகின் உன்னதமான மனித குல சேவை ஒன்றைச் செயலில் காட்டியவர் காஸுமா ததேய்ஷி.
உலகில் உள்ள நாடுகளில் ஐரோப்பாவில் 14 சதவிகிதமும்
12 சதவிகிதம் அமெரிக்காவிலும் ஜப்பானில் 4 சதவிகிதமும் உடலில் குறை உள்ளோர் வாழ்கின்றனர்.
க்யோடா நகர்புற எல்லையில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் ஒரு அரிய காட்சியைக் காண்பவர் வியந்துபோவார்கள்.
உடல் ஊனமுற்றவர்களையும் மனதளவில் மன வளர்ச்சி குன்றியவர்களையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைக்கவே முனையும். அவர்களைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய பொதுவாக தொழில் அதிபர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஓம்ரான் நிறுவனரான ததேய்ஷி படைப்பாற்றல் திறனுடன் அதி நவீன தொழில்நுட்பங்களை இந்த ஊனமுற்றவர்களுக்காகவும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகவும் உரிய முறையில் மாற்றி அமைத்தார்.
ஸிஸ்டம்ஸ் தியரி என்ற தொழில்நுட்பக் கொள்கையானது வெவ்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து எப்படி ஒரு முழு பொருளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது. சைபர்னெடிக் எஞ்ஜினியரிங் என்ற தொழில் நுட்பமும் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் தொழில் நுட்பமாகும்.
ஆக இந்த தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து கொண்ட ததேய்ஷி உடல் ஊனமுற்றவர்கள் கூட சிக்கலான அசெம்பிளி லைனில் திறம்பட வேலை பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவர்கள் திறனுக்கு ஏற்றபடியும் உடல் வலிமைக்கு ஏற்றபடியும் அவர் இயந்திரங்களைத் தயாரிக்கச் செய்தார். அவர்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதை நன்கு கணித்து மீதி திறனை இயந்திரங்களே செய்ய உரிய வழி வகைகளை அவர் உருவாக்கினார். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வேலையை நிச்சயம் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
ஓம்ரான் சன் ஹவுஸ் தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி லைனில் உள்ள இயந்திரங்கள் உடல் ஊனமுற்றோர் அமர்ந்திருக்கும் வீல் சேர் அளவு கீழே இறங்கி வரும். ஒரு கையை இழந்த ஒருவர் இன்னொரு கையால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காக கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
உடல் வலுவே இல்லாத ஒரு பெண்மணி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பாக்கேஜிங் மெஷின் உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இலேசாக தன்னிடம் உள்ள சிறு பெட்டியை உள்ளே தள்ளி விட அந்த பாக்கேஜிங் அதை ஏற்றுக் கொண்டு மிக வேகத்துடன் தன் உள்ளே இழுத்துக் கொள்ளும்.
தொழிற்சாலையில் உள்ள அனைத்து விளக்குகளையும் லிப்டுகளையும் இவர்கள் தங்கள் வீல் சேரிலிருந்தே இயக்கலாம்.
அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து கண்ணியமாகவும் பிறர் மதிக்கும் படி மரியாதையுடன் வாழவும் அவர் வழி வகை செய்தார்.
உலகம் இதை ஆச்சரியத்துடன் பார்த்தது; அவரை அனைவரும் வாழ்த்தினர்.
முதலில் “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று நினைத்தவர்களே ஓம்ரான் நிறுவனத்தின் லாபத்தைக் காண்டு வியந்தனர்.
உடல் ரீதியாக குறைகள் உள்ளவர்கள், மன ரீதியாக குறைகள் உள்ளவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குறைகள் உள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஓம்ரான் நல்ல வாய்ப்புகளையும் பயிற்சியையும் தந்தது.
பெரிய வணிக வியாதி
ஒரு நிறுவனம் வளர்ந்து வரும் போது அங்கு பிக் பிஸினஸ் டிஸீஸ் எனப்படும் “பெரிய வணிக வியாதி” என்று ஒன்று உருவாகி நிறுவனத்தின் கட்டுக்கோப்பை சிதைக்கச் செய்வதைக் கண்ட ததேய்ஷி தனது பெரும் நிறுவனத்தைப் பல பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய ஒரு மேலாளரை நியமித்தார். அவர்கள் கம்பெனியின் தலைவர் போல இருக்க வேண்டும் என்று அவர் உணர்த்தினார். நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உள்ள வழிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
உற்பத்திப் பிரிவே தொழிற்சாலைக்கு இதயம் போன்றது என்பதால் அங்கு மதிய இடைவேளையின் போது முதலில் தொழிலாளர்களுக்கே உணவு முதலில் பரிமாறப்படும். கடைசியில் தான் மேலாளர்கள் சாப்பிடலாம். இது போன்ற பல சிறப்பு விதிகள் தொழிலகத்தை மிக அழகுற நடத்த வழி வகுத்தது.
“உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல விளைவானது நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது நிச்சயம் நடைபெறும் என்பதற்கான நல்ல சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று அடிக்கடி அவர் கூறுவார்.
ததேய்ஷி எழுதிய நூல்
ததேய்ஷி ‘தி எடர்னல் ஸ்பிரிட் ஆஃப் எண்டர்ப்ரெய்னர்ஷிப்’ என்ற நூலை 1985ல் எழுதினார். இது சீன, ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் விற்பனையைக் கண்ட நூலாக ஆனது.
மறைவு
1991ல் ததேய்ஷி தனது 91ம் வயதில் மறைந்தார்.
பொன்மொழிகள்
தன் வாழ்நாள் அனுபவத்தை அவர் பிறருக்கும் தெரிவித்து வந்தார்.
அவற்றில் சில இதோ:
முக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் வணிகமானது சமூகத்தில் ஒரு மதிப்பை உருவாக்க வேண்டும்.
ஒரு நிறுவனம் சமூகத்திற்கு லாப நோக்கில் அல்லாமல் பெரிய அளவில் நல்லனவற்றை வழங்கும் போது அது மிக்க சக்தி வாய்ந்ததாக ஆகிறது.
‘என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது’ என்று பார். முயற்சி செய்து அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்.
முதலில் முயற்சி செய் என்பதே மந்திரம்!
உலகம் வியக்கும் ததேய்ஷியின் வாழ்க்கைத் தத்துவமே மொத்தம் மூன்றே வார்த்தைகளில் அடங்கியுள்ளது.
“முதலில் முயற்சி செய்!” என்பது தான் அந்த மூன்று வார்த்தை மந்திரமாகும்!
அன்றாடம் ஆரோக்கியம் சம்பந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டில் உபயோகிக்கும் போது நாம் மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டிய ஒரு பெயர் காஸுமா ததேய்ஷி!