தமிழ் தெரியுமா25125 ?  (Post No.14,141)

Written by London Swaminathan

Post No. 14,141

Date uploaded in Sydney, Australia – 25 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

12 34
 5  6
     
7    

குறுக்கே

1.இங்கிருந்து மலை ஏறினால் பணக்கார பெருமாளைச்  சேவிக்கலாம்.

5. இரும்பில் தண்ணீரோ காற்றோ பட்டால் இது பிடித்துவிடும்  . right to left

6. கடல், செல்வம், யானை கட்டும் இடம், அறிவுத்திரளுக்குக் கடவுளான கலைமகள் ; சேர்தல், திரள்தல், கூடுதல் என்னும் பொருள்களின் அடிபப்டையாக வருவன. Right to left

7. நவக்கிரகத் தலம்; சந்திரனின் அருள்பெற கைலாசநாதர் உதவும் கோவில்

****

கீழே

1. கல்யாணமான பெண்களைக் குறிப்பிடுகையில் இதை முதலில் போட்டு மரியாதை கொடுக்கவேண்டும்.

2. ஆறு காலங்களைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல் ; காளிதாசன் எழுதிய நூலின் முதல் சொல் ; பெண்கள் வயதுக்கு வந்தாலும் இந்தச் சொல்லை பயன்படுத்துவர்.

3. குதிரை; மாணிக்கவாசகரை உலகப் புகழ்பெற வைத்த சொல்.

4. கதிரவனின் ஸம்ஸ்க்ருதப் பெயர் .

விடைகள்

தி1ரு2ப்ப3தி4
ருது5 ரிவா6
   
தி7ங்ளூர்

xxxxxxxxxx

 tags–தமிழ் தெரியுமா25125 

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 14 (Post No.14,140)

Written by London Swaminathan

Post No. 14,140

Date uploaded in Sydney, Australia – 25 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 14

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் மீண்டும் ஒலிம்பிக் போட்டி

Brisbane, Queensland, Australia was announced as the host city for the 2032 Summer Olympics on July 21, 2021. The announcement was made at the 138th IOC Session in Tokyo, Japan. 

சென்ற 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரீஸ் நகரில் நடந்தது. அடுத்த 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டில் நடைபெறப்போகிறது. அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ் லாந்து மாநிலத்திலுள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெறப்போகிறது  எப்போதும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் அவகாசம் கொடுத்தால்தான் ஒரு நகரம் தயாராகும்; இதனால் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிஸ்பேனின் பெயர் அறிவிக்கப்பட்டது சர்வதேச கமிட்டியில் இதற்கு ஆதரவாக 75 வோட்டுகளும் எதிராக 5 வோட்டுக்களும் லிழுந்தன.

பிரிஸ்பேன் அழகான நகரம். வண்ண வண்ண கட்டிடங்கள் நிரம்பிய நகரம்; இதற்கு முன்னர் பல சர்வதேச விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்திய நகரம்.

இதற்கு முன்னர் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இப்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது

Olympic Games held in Australia

1956 Summer Olympics – Melbourne

2000 Summer Olympics – Sydney

2032 Summer Olympics – Brisbane

பிரிஸ்பேன் நகரில் முக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடக்கும். மேலும் நான்கு நகரங்களில் கால்பந்து முதலிய போட்டிகள் நடக்கும். இவைதவிர முன்னர் ஒலிம்பிக் நடந்த சிட்னி, மெல்போர்ன் நகரங்களுக்கு சில போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் அறிவிப்பு வந்தவுடன் வெடிகளை வெடித்து பிரிஸ்பேன் ஆனந்தத்தில் மூழ்கியது .

பதினாறாயிரம் விளையாட்டு வீரர்களையும் அதிகாரிகளையும் மூன்று நான்கு நகரங்களில் குடியமர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது; அரசும் கோடிக்கணக்கான டாலர் உதவியை அறிவித்தது; இந்த ஒலிம்பிக் மூலம் நாடும், பிரிஸ்பேன் நகரமும் ஏராளமான வருவாயை ஈட்டும் ; விளையாட்டுகளுக்குப் புத்துணர்ச்சி பிறக்கும்; ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடங்களுக்குள் ஆஸ்திரேலியா நிற்கிறது  பிரிஸ்பேனில் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

****

நான் கண்ட பிரிஸ்பேன் நகரம்

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!

பிரிஸ்பேன் (Brisbane) என்னும் நகரம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது சிட்னி நகரிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிஸ்பேன் நதிக்கரையில் இருக்கிறது. நாங்கள், உலக மஹா இயற்கை அதிசயமான பெரும் பவளத்திட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் விமானத்தில் பிரிஸ்பேன் நகருக்கு வந்தோம். 

பிரிஸ்பேனில் என்னை அதிசயிக்க வைத்த முதல் விஷயம், இலவச படகு சவாரி! உலகில் பத்துப் பதினைந்து நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க படகு சவாரியானலும் சரி, அல்லது பாரீஸ் நகரில் செயின் நதியில் பவனி வருவதானாலும் சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் படகில் ஏற்றுவர். அட! எங்கள் லண்டன் மாநகரில் எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் தேம்ஸ் நதியில் உலாவர அழைத்துச் சென்றபோதும் ஒவ்வொரு ஆளுக்கும், ஒரு இருபது  பவுனாவது (ரூ2000) செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் இலவச படகு சவாரி.

ஹோட்டலில் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், சில தகவல் விசாரித்தபோது ‘ரெட் Fபெர்ரி’யில் (Red Ferry) போங்கள்; டிக்கெட் எதுவும் வேண்டம் என்று ஒரு துப்பு கொடுத்தார். சிவப்பு நிற படகில் ஏறினால் பிரிஸ்பேன் முழுதும் சுற்றிப் பார்க்கலாம். ஊரின் வரைபடம் கையிலிருந்தால் எந்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் என்ன சுற்றுலாக் கவர்ச்சி இருக்கிறது என்பது தெரியும். ஆங்காங்கே இறங்கி இலவசமாகப் பார்த்துவிடலாம்.

உலகில் சில இடங்களில் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் இலவச சவாரி இருக்கும். ஆனால் நதியில் ஊர் முழுவதும் செல்ல இலவச சவாரி, எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான். வாழ்க பிரிஸ்பேன்.

இன்னொரு அதிசயம்!

பிரிஸ்பேனில் கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்தவாறு நகர்ந்தோம். ஒரு கடையின் வாசலில் பெரிய பெரிய பாறைகளாக (சிவப்புக் கூழாங்கற்கள் போல இருக்கும்) 30 கிலோ, 35 கிலோ என்று வைத்திருந்தார்கள். ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் – (Himalayan Salt) இமய மலை உப்பு என்று எழுதிவைத்திருந்தனர். எனக்கு ஒரே வியப்பு. அட! இந்தியாவில் கூட நான் பார்த்திராத இமயமலை உப்பை ஆஸ்திரேலியாவில் விற்பதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழவே, கடைக்குள் சென்றேன். அங்குள்ள ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடமென் ஐயப்பாட்டைக் களைய வினாக்கள் தொடுத்தேன். அவர் சொன்னார்: “ இவை அனைத்தும் இமயமலையிலிருந்து வந்தவை. இது மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்குச் சுகமளிக்கும். காற்றைத் தூய்மையாக்கும்”. பல புத்தகங்களும் வைத்திருந்தனர். காசு கொடுத்து வாங்க மனமுமில்லை. ஓசியில் புரட்டிப் பார்க்கத் துணிவுமில்லை. மனைவி மக்கள் விரட்டவே மெதுவாக நகர்ந்தேன்.

எங்களுக்கு போனஸ்

ஒவ்வொரு இடத்திலும் ஒரே நாள் இரவு ஹோட்டல் ரிசர்வ் செய்திருந்ததால் அருகிலுள்ள கோல்ட்கோஸ்ட், (Koala) கோவாலா சரணாலயம் ஆகியவற்றுக்குப் போக முடியவில்லையே என்று வருத்தம். கோவாலா என்னும் மரக் கரடியும். கங்காரு என்னும் மிருகமும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் பிராணிகள்.

ஆயினும் கலைக் கூடத்துக்குச் (Art Gallery) சென்று வண்ண ஓவியங்களைப் பார்ப்போம் என்று குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். எங்களுக்கு போனஸ் காத்திருந்தது. நாலு மாதங்களுக்கு ஆசிய- பசிபிக் வண்ண ஓவியங்களின் விசேஷ காட்சி என்பதைக் கண்டு மகிழ்ந்தோம். உள்ளே சென்றவுடன் அருமையான ஓவியங்களைக் கண்டு இரண்டு காமிராக்களையும் முடுக்கினேன். ஒரு நூறு படங்கள் கிடைத்தன. நேபாள, இந்திய ஓவியர்கள் பல இந்துமத ஓவியங்களைத் தீட்டியிருந்தனர்.

எல்லா ஊர்களிலும் இருப்பது போல இராட்சத ராட்டினம் (பிரிஸ்பேன் வீல் Brisbane Wheel) இங்கும் இருந்தது. ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு ஒரு புதுமையைக் காண விரைந்தோம். செயற்கைக் கடற்கரை அங்கு இருப்பதாக சுற்றுலாக் கவர்ச்சிப் பட்டியலில் இருந்தது. ஒரு பெரிய பூங்காவில் நிறைய கடல் மணலை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாண உடையுடன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தனர். அருகிலேயே குழந்தைகள் , அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அப்படி ஒன்றும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. அட, சரியப்பா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூதானே சர்க்கரை என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தோம்.

இரவு நெருங்க நெருங்க பசி எடுத்தது. நாங்களோ சுத்த சைவம். எனது மகன் கஷ்டப் பட்டு, கூகிள் செய்து ஒரு ‘வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்டைக் கண்டுபிடித்திருந்தான். ‘கூகிள் மேப்’ பைப் பயன்படுத்தி அங்கே போவதற்குள் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அது ஒரு தாய்(லாந்து) ரெஸ்டாரண்ட். வழக்கம்போல எங்கள் பல்லவியைப் பாடினோம். “நாங்கள் அனைவரும் சுத்த வெஜிட்டேரியன்ஸ். அதன் பொருள் என்ன வென்றால், ‘நோ பிஷ்’, ‘நோ மீட்’, ‘நோ எக்’ No Fish, No Meat, No Egg (மச்சம், மாமிசம், முட்டை அற்ற) என்று விளக்கினோம். அந்தப் பெண்ணோ, ‘நோ பிராப்ளம்’, பிஷ் சாஸ் (No Problem; we will use fish sauce or oyster sauce)  போடுகிறோம் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் போடுகிறோம், மாமிசம், முட்டை எதுவும் போட மாட்டோம்’ என்று உறுதி தந்தாள்!!!! அடக் கடவுளே! அது வெஜிட்டேரியன் அல்லவே என்றோம். அதற்கென்ன, அதையெல்லாம் போடாமல் செய்வோம் .ஆனால் அது ‘ஹாரிபிள்’ (Horrible அதி பயங்காச் சுவை) ஆக இருக்குமென்று அச்சுறுத்தினாள்; தாயே, உண்மையைச் சொன்னாயே; நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க! என்று மனதிற்குள் வாழ்த்திக்கொண்டே ஒரு இதாலிய ரெஸ்டாரண்டில் நுழைந்து, வழக்கம்போல பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta) சாப்பிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

பிரிஸ்பேன் நகரில் வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே, நீல நதியில் படகு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நல்ல பூங்காக்கள், தாவரவியல் பூங்கா ஆகியனவும் அழகூட்டுகின்றன. சுமார் 24 மணி நேரமே இருந்தாலும் மலையளவு சாதித்த மகிழ்ச்சி.

ஆர்ட் காலரிக்குச் செல்லும் வழியில் அந்த ஊர் அறிவியல் காட்சிசாலையும் உள்ளது. அந்தக் கூடத்தில் பெரிய திமிங்கில (WHALE) உருவங்களைத் தொங்கவிட்டுள்ளனர். திமிங்கிலங்கள் கடலில் எழுப்பும் பெரிய சங்கொலி போன்ற சப்தத்தை திமிங்கிலப் பாட்டு (Whale Song) என்பர். அதை அப்படியே ரிகார்ட் செய்து அந்தக் கூடத்தில் ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறார்கள். முதலில் இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று வியந்த எங்களுக்கு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் விளங்கியது.

எல்லா ஊர்களையும் போல, பல ஷாப்பிங் மால் (கூடங்கள்), தெருக்களும் இருக்கின்றன. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல. அதையும் பார்த்துப் பொழுதும் போக்கலாம்!

—SUBHAM—

TAGS- பிரிஸ்பேன், அதிசயங்கள்! ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் ,அனைத்தையும் பாருங்கள் Part 14, மீண்டும் ஒலிம்பிக் போட்டி

I am a Rat? Gandhiji was a Snake. Are You a Pig?(Post No.14,139)

Compiled  by London Swaminathan

Post No. 14,139

Date uploaded in Sydney, Australia – 25 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I was born in 1948. So, I am a Rat.  Mahatma Gandhi was a Snake. And you are………

Chinese Zodiac Years

Chinese Zodiac SignYears
Rat…1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020…
Ox…1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021…
Tiger…1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022…
Rabbit… 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023 …
Dragon… 1952, 1964, 1976, 1988, 2000, 2012, 2024 …
Snake… 1953, 1965, 1977, 1989, 2001, 2013, 2025 …
Horse… 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026 …
Goat… 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027 …
Monkey… 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028 …
Rooster… 1957, 1969, 1981, 1993, 2005, 2017, 2029 …
Dog… 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030 …
Pig… 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031 …

Year of Snake from January 29, 2025

The centuries-old Chinese zodiac system assigns one animal sign to each year based on a 12-year cycle. Among all living creatures, the Snake is the best equipped due to its magnetic resonance to hear the heartbeat of Mother Earth.

In 2025, the strongest wealth element is Fire, so industries relating to water, wood and fire will thrive, while industry related to the elements of earth and metal may suffer from weak support.

The Year of the Wood Snake 2025

The Snake is the sixth animal in the zodiac, and it has a complex and mysterious nature. The Wood Snake is a charming, intelligent and creative sign, but also secretive, cunning and sometimes ruthless.

What are the taboos in the Year of the Snake?

In Chinese culture, each year associated with the Chinese zodiac carries its own set of beliefs and traditions, including taboos and lucky colours. These traditions, integral to Lunar New Year celebrations and the broader cultural practices throughout the year, guide behaviours and decisions to promote a year of prosperity and good fortune. Understanding and respecting taboos and colour significances can profoundly influence personal outcomes, according to Chinese beliefs. Taboos in the Year of the Snake include:

Killing Snakes: During the Year of the Snake, it is a serious taboo to harm snakes, as such actions are believed to invite misfortune. Conversely, showing respect to snakes throughout their zodiac year can attract good fortune.

Travelling West: According to Chinese cosmology, the East is associated with Wood, as detailed in the Shuowen Jiezi, an early second-century AD dictionary. The dictionary explains that the character for ‘East’ (dong東) combines the symbols for Wood (mu 木) and Sun (ri 日), symbolising the rise of the sun from the woods in the East. Given that the 2025 Year of the Snake is identified as the Year of the Yisi, with Yi representing Wood and Si representing Fire, those born in 2025 should favour the East over the West. Heading East is thought to be more auspicious and supportive of personal growth for Wood Snake individuals.

Wear red, green and gold for good luck

In Chinese culture, red is universally known as a harbinger of good luck. It is thought to repel evil spirits and misfortune. In 2025, this symbolism is particularly potent, as red is associated with Fire. It is believed that wearing red can help mitigate excessive Wood energy, thus maintaining balance and harmony between the elements.

For those born in the Year of the Wood Snake, green is the most auspicious colour for life. Green represents Wood, which corresponds to Yi, the second of the ten Heavenly Stems. In the framework of the Five Elements in Chinese cosmology, Wood nurtures Fire, which relates to Si, the sixth of the twelve Earthly Branches. Therefore, green can enhance the energy of individuals born in the Year of the Wood Snake, attracting good luck and favourable fortune into their lives.

Gold represents wealth and prosperity. It is another auspicious colour, especially in the Year of the Wood Snake, where Si also signifies Gold/Metal. This element correlates with the direction of the West. Therefore, using gold in decorations or wearing gold can attract positive energy, enhance financial prosperity and maintain a healthy balance between the elemental associations of the East (Wood) and West (Metal) in 2025.

The Lunar New Year will begin on 29 January in 2025. This marks the start of the Year of the Wood Snake.

(Sydney University Professor Xiaohuan Zhao is Professor Sinology (Religion, Literature and Theatre) at the School of Languages and Cultures. He is also a member of the China Studies Centre and Sydney Southeast Asia Centre.)

****

This year on 29 January, we’ll be welcoming in the year of the Wood Snake. While the Year of the Snake may sound scary to some, according to the Chinese Zodiac the year promises slow and steady development.

Those who are patient, strategic and willing to embrace the Snake’s wisdom will find they can thrive by adapting to a slower pace in all aspects of life. People born in the Year of the Snake are considered rational, calm, thoughtful, and loyal to their loved ones.

Some famous names who share the Snake zodiac include Mahatma Gandhi, Pablo Picasso, Mao, Taylor Swift, John F. Kennedy, J.K.Rowling and Robert Downey Jnr to name a few.

Along with JFK and Tay Tay, other famous Snakes in history include Bob Dylan, Oprah Winfrey, Stephen Hawking, Tony Blair and Volodymyr Zelensky.

****

Snake | 1953, 1965,1977, 1989, 2001, 2013, 2025

As this is the Snake’s year, those born under this sign are in for a period of empowerment and transformation. Career-wise, 2025 could bring breakthroughs, especially for Snakes, who are diligent and strategic in their approach. Long-term financial prospects appear strong, but it’s wise to avoid high-risk investments in favour of steady, stable gains. Relationships during this year will be a mix of passion and tension. Clear communication will prevent misunderstandings and maintain harmony with loved ones. On the health front, Snakes should be particularly mindful of burnout. Engaging in restful practices and maintaining a healthy diet will be key to sustaining vitality and well-being.

In the Chinese zodiac, each animal sign is believed to have certain affinities and rivalries with other signs.

For people born under the sign of the Snake, there are three signs that are considered their “enemies”: the Tiger, Monkey and Pig.

These rivalries can play out in various aspects of life, from romantic relationships to business partnerships, and can often lead to conflicts or misunderstandings.

What are ‘enemy signs’ in the Chinese zodiac? Snakes have 3; how to find success with them

The Tiger, Monkey and Pig animal signs are considered ‘enemies’ of Snakes. Here’s how to overcome relationship issues in love and business.

—subham—

Tags—Year of Snake, Chinese New Year , Chinese Zodiac Years

Hindu Crossword25125 (Post No.14,138)

Written by London Swaminathan

Post No. 14,138

Date uploaded in Sydney, Australia – 25 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1   2   3 4
           
5 6   7    
           
8 9  10     
    11      
           
12         13
           

ACROSS

1. Swami Vivekananda’s famous saying ARISE (awake and stop not till the goal is reached)

5.Great saint of Odisha who composed Gita Govidam/Ashtapathy.

8.Rajasthanis worship this God

10.Number Four in Sanskrit; prefix for many words.

12.A religious treatise teaching magical and mystical formularies for the worship of the deities or the attainment of superhuman power; Kathāsaritsāgara ; loom; warp; thread

13.”a desirable woman”, “beloved”, or “a charming and attractive woman” – RIGHT TO LEFT

DOWN

2.Pure in Indian languages

3.Nectar from Heaven; they got it from ocean.

4.Words such as Interior, Interval came from this Sanskrit word; also means between.

5.Swami Vivekananda’s famous saying AWAKE(arise,awake and stop not till the goal is reached)

6.One who performs Yaga/ fire sacrifice

7.That which is fowling; used with River names

9.Grinder in Sanskrit

11.Water

U1TTIS2HTHA3TA4
    U   M N
J5AY6ADEV7AR T
A A H A U A
G8UG9A C10HATUR
R I V11 I H A
A R A N A  
T12ANTRAINMAK13
A I I      

—subham—

Tags- Hindu Crossword25125

ரிலேடிவிடி என்றால் என்ன, மிஸ்டர் ஐன்ஸ்டீன்? (Post.14,137)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,137

Date uploaded in Sydney, Australia – –25 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் அத்தியாயம் 13

ச. நாகராஜன் 

ரிலேடிவிடி என்றால் என்னமிஸ்டர் ஐன்ஸ்டீன்?      

ரிலேடிவிடி என்றால் என்ன?

ஆல்ப்ரட் ஐன்ஸ்டீனைப் பற்றிய புகழ் பெற்ற சம்பவம் இது.

ஒரு பெரிய விருந்தில் விருந்தளித்த பெண்மணி , “ரிலேடிவிடி என்றால் என்ன மிஸ்டர் ஐன்ஸ்டீன்?“ என்று கேட்டார். அப்பாவியான அவருக்கு ஐன்ஸ்டீன் கொடுத்த விளக்கம் இது.

“மேடம், ஒரு நாள் நான் நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கண்பார்வையற்றவருடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவரிடம் எனக்கு ஒரு டம்ளர் பால் வேண்டும் என்றேன்.

“பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லையே, அது என்ன சொல்லுங்கள்” என்றார் நண்பர்.

“ஒரு வெள்ளை நிற திரவம் அது” என்றேன் நான்.

“திரவம் எனக்குத் தெரியும். வெள்ளை என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.

“வாத்தின் சிறகுகளில் காணப்படுவது வெண்மை ” என்றேன் நான்.

“சிறகுகள் எனக்குத் தெரியும். வாத்து என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.

“வளைந்த கழுத்துடன் கூடிய ஒரு பறவை அது” என்றேன் நான்.

“கழுத்து எனக்குத் தெரியும். வளைந்தது என்றால் என்ன?” என்று கேட்டார் அவர்.

எனக்குப் பொறுமை இழந்து விட்டது. உடனே அவரது கையைப் பிடித்து இழுத்து நேராக வைத்தேன். இது தான் நேராக இருப்பது என்று கூறி விட்டு அவர் கையை முழங்கையில் மடக்கினேன். இது தான் வளைந்து இருப்பது. இப்போது புரிகிறதா?” என்றேன் நான்.

“ஆஹா!” என்று கூவிய எனது நண்பர், “இப்போது பால் என்று நீங்கள் சொன்னது என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறது!” என்றார்.

இதைக் கூறிய ஐன்ஸ்டீன் மெல்ல நிறுத்தினார். அந்தப் பெண்மணி வெட்கத்துடன் மெதுவாக அவரிடமிருந்து நகர்ந்தார்!

ஐன்ஸ்டீனை விடப் பெரிய ஆள்! 

கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் அடங்கிய கூட்டத்தில் ஐன்ஸ்டீனின் அபூர்வமான கொள்கைகளை ஒருவர் தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் அவர் ஆவேசமாகப் பேசிய பின்னர் சிறிது மூச்சு விட்டு நிறுத்தினார். அப்பொது கூட்டத்தில் இருந்த ஒரு கணித நிபுணர் கூறினார்;” நண்பரே! நீங்கள் நிஜமாகவே ஐன்ஸ்டீனை விடப் பெரிய ஆள். ஐன்ஸ்டீன் கூறியது இதுவரை பன்னிரெண்டு பேருக்குத் தான் புரியும் என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் சொன்னது யாருக்குமே புரியவில்லை!” என்றார்.

தப்பைக் கண்டுபிடிக்க ஒருவர் போதுமே! 

ஐன்ஸ்டீனின் சிலையை வடிவமைக்க ஜாகப் எப்ஸ்டீன் (JACOB EPSTEIN) என்ற சிற்பி முன் வந்தார். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் முன் ஐன்ஸ்டீன் வந்து அமர்ந்து விடுவார். சிற்பி தன் வேலையைச் செய்வார்.

அவர் கூறியது இது: “அவரது சிலையை அமைக்கும் போது ஒரு நாள் அவர் என்னிடம் கூறினார் – நாஜி பேராசிரியர்கள் நூறு பேர் எனது தியரியில் தப்பைக் கண்டுபிடித்து அதைக் கண்டித்தார்கள். எனது ரிலேடிவிடி கொள்கை தப்பாக இருந்தால் அதைக் கண்டிக்க நூறு பேர் எதற்கு வேண்டும்? ஒருவர் போதுமே” என்றேன் நான்!

ஐன்ஸ்டீனின் கணிதத்தைச் சரி பார்ப்பவர்! 

சர் வில்லியம் ரோதென்ஸ்டீன் (SIR WILLIAM ROTHENSTEIN) பெர்லின் நகரில் ஐன்ஸ்டீன் பற்றிய உருவப்படம் ஒன்றைத் தயார் செய்து கொண்டிருந்தார். ஐன்ஸ்டீனுடன் எப்போதும் கூடவே ஒரு படித்த அமைதியான இளைஞர் வருவார்.  அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டே இருப்பார். சில சமயம் பேச்சின் நடுவில் ஐன்ஸ்டீன் அவரைப் பார்ப்பார். அவர் ஆமாம் என்று சில சமயம் தலையை ஆட்டுவார். சில சமயம் இல்லை என்பது போலத் தலையை அசைப்பார்.

ரோதென்ஸ்டீனின் வேலை முடிந்தது

அவர் ஐன்ஸ்டீனைப் பார்த்து,  “இதோ உங்கள் கூட வந்திருக்கிறாரே, இவர் யார்?” என்று கேட்டார்.

“அவர் தான் எனது உதவியாளர். எனது கணக்குகளை எல்லாம் சரி பார்ப்பவர். அது சரியா என்று அவர் பார்ப்பார். இல்லை என்றால் இல்லை என்று சொல்வார். பாருங்களேன், நான் ஒன்றும் நல்ல கணித நிபுணர் இல்லையே” என்றார் ஐன்ஸ்டீன்.

 ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் இது போன்ற சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு!

***

Interview with Dr Rajesh Devadas of Pustaka. co. on Sunday

Interview with Dr Rajesh Devadas of Pustaka. co. on Sunday

GNANAMAYAM 26-1-2025 BROADCAST PROGRAMME

புஸ்தக வெளியீட்டில் பெரும் புரட்சி செய்துவரும் டாக்டர் ராஜேஷ் தேவதாஸுடன் சிறப்புப்பேட்டி

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

26-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

GNANAMAYAM SUNDAY BROADCAST 26-1-2025

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer

****

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Saint Pattinathar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Kasi Viswanathar Temple in Tenkasi .

***

Interview with Dr Rajesh Devadas, Publisher, Pustaka. Co. in

London swaminathan based in Sydney interviews him

About Pustaka: 

Founded in Bengaluru in 2014, Pustaka is a multimodal publishing company that publishes paperback, audiobook, and e-book formats. The company published more than 2500 paperbacks, 400 audiobooks, and 10,500 e-books as of December 2024. The Pustaka platform employs cutting-edge technologies and comprises a website, a mobile application available on both Android and iOS, as well as a dashboard designed for authors.               

Through an effective partnership with well-known ebook channels including Amazon Kindle, GoogleBooks, Everand, Overdrive, Pratilipi, and StoryTel, Pustaka maximises revenue for the authors. Pustaka has collaborations with StoryTel, GoogleBooks, Amazon Audible, KukuFM, and Overdrive for audiobooks. In addition to physical sales through stalls in various book fairs, the paperbacks are available on the Pustaka website, Amazon, and Flipkart.

 Pustaka has gained the trust of numerous authors by obtaining appropriate copyrights and paying royalties on time. The authors can monitor transactions across all ebook, audiobook, and paperback channels via a sophisticated and transparent dashboard.

About Rajesh Devadas: 

Rajesh Devadas brings in 26+ years of IT experience with 17+ years at Hewlett Packard, Bangalore (until April 2014).  Rajesh is currently managing an e-commerce platform for e-books (http://www.pustaka.co.in) which publishes e-books in regional languages.

Apart from ebooks publishing, Rajesh is a training consultant to Manipal ProLearn, StackRoute [a NIIT company] and engages in corporate trainings. He also plays cloud architect role at Logus, Bangalore on consulting basis for a large financial company in Europe. Rajesh holds a Ph.D. and Masters degree in Computer Applications from Madurai Kamaraj University. Rajesh currently resides and works out of Bangalore.

 He currently lives in Bangalore and Dindigul and he has wife and 2 kids.

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

புஸ்தக வெளியீட்டில் பெரும் புரட்சி செய்துவரும் டாக்டர் ராஜேஷ் தேவதாஸுடன் சிறப்புப்பேட்டி

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – காசி விஸ்வநாதர் கோவில்,  தென்காசி

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — பட்டினத்தார்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 26-1-2025 programme,  GNANAMAYAM BROADCAST, three continents

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 13 (Post 14,136)

Written by London Swaminathan

Post No. 14,136

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

சிரிக்கும் பறவை கூகாபர்ரா ;கொண்டையுள்ள காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை !

EMU BIRDS

ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகளான கங்காரு, வல்லபி, கோவாலா, பிளாட்டிபஸ், எகிட்ணா, ஓபோஸ்ஸம் , பண்டிகூட் பற்றிக் கண்டோம் . இதே போல பறவைகளிலும் விநோதப் பறவைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வசிக்கின்றன. அருகாமையிலுள்ள நியூகினி, நியூசிலாந்து ஆகியவற்றுக்கும் சிலர் கொண்டு சென்றதால் அங்கும் காணக்கிடக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் மரம் இல்லாத பகுதிகள் பாலைவனமும் நகரின் மையப்பகுதி மட்டுமே. ஆகையால் உயர்ந்த — மிக உயர்ந்த – மரங்களில் பறவைகள் சுகமாக வசிக்கின்றன. பேட்டைக்குப் பேட்டை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ரிசர்வ் என்று போர்டு போட்டிருப்பார்கள்; பூங்காங்களும் உண்டு ;ஆகையால் பறவைகளை —வண்ண வண்ண கிளிகள் , மிக மிக சிறிய சிட்டுக்குருவிகள் கூக்கபரராக்கள், புறாக்கள் ஆகியவற்றைக்  காணலாம். காக்காட்டு  என்ற வெள்ளைப் பறவை மஞ்சள் கொண்டையுடன் அழகாகக் காட்சி தரும். ஆனால் யாருக்கும் பிடிக்காது; அதிக இரைச்சல் உள்ள பறவை. இந்திய காகங்கள் போல எங்கும் திரியும்  இவை தவிர கொண்டையுள்ள புறா, புஷ் டர்கி எனப்படும் வான்கோழி ஆகியவையும் எங்கும் திரியும்  பறவைப்   பிரியர்களுக்கு சொர்க்க பூமி இது..

வீட்டுத் தோட்டங்களில் பறவைகளுக்கு இரை போட தனியே சின்னப் பானைகளைத் தொங்க விட்டிருப்பார்கள்; அதில் தானியங்களைப் போட்டால் வண்ணக்கிளிகள் நிறைய வருகின்றன. ஐபிஸ் எனப்படும் எகிப்திய கொக்குகளும் , கடலோரமாக பெலிகன், கடற் கழுகுகளும் எப்போதும் இருக்கும். எல்லா ஏரிகளிலும் வாத்து, குள்ள வாத்து ஆகியவற்றையும் காணலாம். பறவைகள் பற்றி அறியாதோரும் இருபது வகைப் பறவைகளையாவது தினமும் பார்த்துவிடுவார்கள். ஆஸ்திரேலியா முழுதும் இவை வசிக்கின்றன

****

சிற்சில பறவைகளை மட்டும் காண்போம்


எமு

எமு என்னும் பறவைகள் மிகப்  பெரியவை; ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான பறவை. இதனால் கங்காருவுடன் இதையும் ஆஸ்திரேலிய தேசீய சின்னத்தில் காணலாம் இந்தப் பறவைகளை இப்பொழுது இந்தியா உள்பட பல நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான டாஸ்மேனியா தீவிலிருந்து எல்லா எமு பறவைகளையும் வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் கொன்று குவித்ததால் அங்கு எமு பறவைகள் அறவே அழிந்துவிட்டன . உலகில் மிகப்பெரிய பறவை ஆஸ்ட்ரிச். அதற்கு அடுத்த பெரிய பறவை எமு.

***

கூக்காபர்ரா என் சிரிக்கிறது ?

இவை மீன்கொத்தி வகைப் பறவைகள் ; பாம்பு, பல்லி முதல் சிறு பூச்சிகள் வரை எல்லாவற்றையும் தின்னும். விக்கல் எடுப்பது போல சப்தம் போடும்; இறுதியில் ஹாஹாஹா என்று முடியும்  இதனால் இவைகளை சிரிக்கும் பறவைகள் என்றழைப்பார்கள் . வீடுகளில் பொறுமையாக அமர்ந்து பூச்சியைக் கண்டவுடன் பாய்ந்து பிடிக்கும். சில வகை கூக்காபர்ரா ஒரு அடிக்கு மேல் வளரும். மனிதர்களுடன் கூச்சமில்லாமல் பழகும். கையில் உணவு வைத்திருந்தால் வந்து அமரும்.

****  

காக்காட்டு 

கிளி போல மூக்கு; மயில் போல கொண்டை ; கொக்குபோல வெண்மை ; சிட்னி நகரம் முழுதும் காணலாம். இப்போது இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் தீவுகள் வரை பரவியுள்ளன பெரும்பாலும் விதைகள் கொட்டைகள் பழங்கள் பூக்களையே சாப்பிடும்; பூச்சிகளையும் உண்ணும் மரப்பொந்துகளில் வசிக்கும் இவைகளில் நாற்பதுக்கும் மேலான வகைகள் இருப்பதால் இளம் சிவப்பு, கருப்பு காக்காட்டுகளையும் பார்க்கலா.ம் கர்ண கடூ ரமான சப்தம் உடையவை  இந்தியக் குயில்களுக்கு நேர் எதிர்ப்பதம்!

***

வண்ணக் கிளிகள்

நாம் ராஜ நாகம் என்று சொல்லுவது போல ராஜ கிளிகள் உண்டு; அவை பஞ்சவர்ணக் கிளிகள் ; பழங்கள், கொட்டைகள் தானியங்களை உண்ணும்; பல வீட்டுத் தோட்டங்களிலும் இவைகளுக்கு உணவு படைக்கிறார்கள்  கிழக்கு ஆஸ்திரேலியா முழுதும் இவை இருக்கின்றன

*****

சர்க்கஸ் செய்யும் கலா pink Galahs பறவை

கிள்ளை—மேலும் ஒரு தமிழ்ச் சொல்

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் கிளா kilaa (கிளி) என்றனர். அதை வெள்ளைக்காரர்கள் pink Galahs கலா ஆக்கிவிட்டார்கள் இவை இளம் சிவப்பு கழுத்துடையவை. விதைகளை உண்டு வாழும். ஆயிரக் கணக்கில்  கூட்டமாகப் பறந்து போகும் .கிளி/கிள்ளை  என்ற தமிழ்ச் சொல் ஆஸ்திரேலியா வரை பறந்து வந்துள்ளது என்றும் சொல்லலாம் ; ஆஸ்திரேலிய கொச்சை மொழியில் கலா Galahs என்றால் கோமாளி; இந்தப் பறவையின் பெயரை அப்படிப்   பயன்படுத்தக்   காரணம் கலா Galahs பறவை நிறைய சர்க்கஸ் வேலைகளை செய்யும்; தலை கீழாகத் தொங்கும்; கம்பி வழியே சறுக்கி விழும்.

*****

கருப்பு அன்னம் The black swan (Cygnus atratus)

தென் கிழக்கு தென் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும்  கருப்பு அன்னம்  மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னம் ஆகும்நம்ப முடியாதது என்ற பொருளில் ஐரோப்பியர்கள் இதை பயன்படுத்தினர். ஏனென்றால் அன்னப்பறவைகள் உலகம் முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கையில் கருப்பு நிறத்தில் எப்படி அன்னம் இருக்க முடியும் என்று கேலி செய்து நடக்க முடியாததுநம்பக்கூடாதது என்ற பொருளில் பிளாக் ஸ்வான் என்ற சொல்லை பயன்படுத்தினர்; இந்த அதிசய பறவை ஆஸ்திரேலியாவில் வாழ்கிறது. அதிசயம் என்னவென்றால் பறக்கும்போது வெள்ளை இறக்கை தெரியும்.

இது அன்னப் பறவை வகை என்றாலும் கருப்பு இறக்கைகளையும் சிவப்பு மூக்கையும் கொண்டது. பறக்கும்போது அடிப்புற வெள்ளை இறக்கை தெரியும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடியேற்றம் செய்யும் நீரில் வாழும் பெரிய பறவை . ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் சுத்த நீர், உப்பு நீர், கலங்கிய நீர் எல்லாவற்றிலும் வாழ்கின்றன..

****

ஐபிஸ் கொக்குகள் IBIS

இவை நீண்ட மூக்கு உடைய நீர்ப்பறவைகள்  சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர்  இது ஆஸ்திரேலியாவில் இல்லை. புதிய குடியேறிகள்!!

ஆறு சென்டிமீட்டர் அளவேயுள்ள குருவிகள் முதல் பெரிய — அதாவது — இந்தியா முதலிய இடங்களில் காணும்–  சைஸ் வரையுள்ள நூற்றுக்கணக்கான வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுகின்றன. இதில் நீல நிறக்குருவிகளும் வால் பிளவுட குருவிகளும் அடங்கும். அத்தனை வகைப் பறவைகளையும் ஆஸ்திரேலிய மியூசியத்தில் மேல் மாடியிலுள்ள படங்களில் காணலாம்.

–subham—

Tags– சிரிக்கும் பறவை கூகாபர்ரா , காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை ! ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 13

ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள் -Part 16 (last part) Post.14,135

Written by London Swaminathan

Post No. 14,135

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 16

ராமலிங்க சுவாமிகளின் மூன்று முக்கியப்பாடல்கள்

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நிறைவு செய்ய மூன்று முக்கியப்   பாடல்ககளை  தெரிவு செய்துள்ளேன் .

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் ………..  பாடல் போல ஏனைய பாடல்கள் பிரபலம் அடையாவிட்டாலும்  சங்கீத வித்வான்களால் பாடப்பெற்ற மற்றுமொரு பாடல்  அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம்  – என்ற பாடல் ஆகும் .

1

பெர்ற  தாய்தனை மக மறந்தாலும் என்ற பாடலை முன்னரே கண்டோம்; அதே தொனியில் அமைந்த இன்னும் ஒரு செய்யுள்

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால்

 தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு

பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத்தாடும்

புனித நீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மை அப்பா இனி ஆற்றேன்

இதில் மாணிக்கவாசகரின் திருவாசகத் தொனியைக் காணலாம் ; அழுதால் அவனைப் பெறலாமே என்கிறார் மாணிக்கவாசகர்.

*****

பாரதி மீது  தாக்கம்

ராமலிங்க சுவாமிகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர் பாரதியார் . ஆயினும் இருவர் பாடல்களிலும் பல ஒற்றுமைகளைக் காண்கிறோம். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இருவரும் வேண்டினர் ; அதுமட்டுமல்ல சமுதாய புரட்சியும் செய் தனர்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்

அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

என்றான் பாரதி .

***

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம் என்றும் இயம்பினான் பாரதி.

***

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே”– என்றும் பாடினான் பாரதி.

2

இதை வள்ளலார் ராமலிங்க சுவாமிகளும் பாரதிக்கு முன்னரே பாடிவிட்டார்:-

1. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.

2. பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்

பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல

கண்ணிகள்

3. மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல

4. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த  மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல

5. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று

கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று

தாபமும் சோபமும் தான்தானே சென்றது

தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல

6. கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது

புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

7. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.—- ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா பாடல்.

***

பாரதியும் நல்ல காலம் வருகுது பாடலில் இதை எதிரொலிக்கிறார்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;

நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;

சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!

வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;

படிப்பு வளருது;பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2

*****

3

இறுதியாக வள்ளலார் தனது பாடல்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக வைத்த பாடலைக் காண்போம் . கண்டசாலா முதல் தண்டபாணி தேசிகர் வரை எல்லா பாடகர்களும் பாடிய புகழ்பெற்ற பாடல் இது .

அச்சோப் பத்து

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்

நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்

அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்

சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்

நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்

நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்

பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்

பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்

திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்

இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்

எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்

பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்

பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்

செச்சைமலர் எனவிளங்குந் திருமேனித் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்

மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்

ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்

தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்

துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்

மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்

ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்

ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்

தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்

எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்

அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்

அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்

ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்

ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்

செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்

சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்

நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா

நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்

பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்

பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்

சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

திருவருட்பா 

சிதம்பரம் என்னும் சிற்சபையில் சிவகாமியுடன் உறையும் நடராஜனே தனது குலதெய்வம் என்று பாடி முடிக்கிறார். திருமந்திர, திருவாசகக் கருத்துக்களையும் பிழிந்து தந்துள்ளார். மாண்டவரை எழுப்ப முடியும் என்ற கருத்தை மீண்டும் பாடுகிறார். தன்னைப் போல எல்லோரையும் பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பொன்னம்பலவாணனைப் புகழ்கிறார் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களை எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இப்போதுள்ள பிரபல பாடகர்கள் வரை பலரும் பாடிய பாடல்கள் அனைத்தும் யூ டியூபில் கிடைக்கின்றன. நான் கேட்டு ஆனந்தம் அடைவதைப் போல அவைகளை அனைவரும் கேட்டு மகிழவேண்டும். .யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

—SUBHAM—

TAGS — வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -16, last part

ராமலிங்க சுவாமிகளின்,  மூன்று முக்கியப் பாடல்கள்

Hindu Crossword 24 1 25 (Post No.14,134)


Written by London Swaminathan

Post No. 14,134

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 12  3  4  5 
         
6        
      7   
         
 8    9   
  10      
         
  11      

ACROSS

1Jyotirlinga shrine in Andhra Pradesh

6.Father of Raghu in Raghuvamsa of Kalidasa

7.Sanskrit word for hero; prefix of many Hindu kings

9.palmyra tree or “the sap of a palm tree,toddy

10.Praiser, singer in Sanskrit

11. Dark coloured, worthy of worship, charming in Sanskrit

XXXXXX

DOWN

2.Chhatrapati Shivaji renovated this fort and made it his capital in 1674 AD. 

3. Mystical diagram (yantra) used in the Shri Vidya worship; goddess lives in the middle

4.Indra’s elephant

5.Grandson of Krishna and Rukmini

8.Higher, supreme, absolute in Sanskrit

S 1R2IS 3AI 4LA 5M
 A R R N 
D6ILIPA I 
 G C V 7IRA
 A H A U 
P 8D A T9ADI
A R10KVA D 
R  R   H 
A R11ADHYA 

—SUBHAM—

tags–Crossword24125

ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post .14,133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,133

Date uploaded in Sydney, Australia – –24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் அத்தியாயம் 12

ச. நாகராஜன்

ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன் (பிறப்பு 12-2-1809 இறப்பு 15-4-1865). அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்ற இவரது வாழ்வில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் சில இதோ:

எதிரிகளை அழிப்பது எப்படி?

ஜனாதிபதியாக ஆப்ரஹாம் லிங்கன் (ABRAHAM LINCOLN) இருந்த போது ஒரு முறை அவரது எதிர்க்கட்சியினரைப் பற்றி மிகவும் அன்பாகவும் உயர்வாகவும் புகழ் மொழிகளைச் சொன்னார் லிங்கன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி எப்படி இவர் இவ்வளவு அன்பாக எதிரிகளைப் புகழலாம் என்று கேட்டார். அதற்கு லிங்கன் உடனே, “ அம்மணீ! அவர்களை நான் நண்பர்களாக்கிக் கொண்ட போதே எதிரிகள் அழியவில்லையா என்ன?” என்று கேட்டார்.

லிங்கன் மிகுந்த புத்திகூர்மையுடன் அனைவரையும் கவர்வதில் வல்லவர், நல்லவர்!

லிங்கனின் அறிவார்வம்

லிங்கன் எந்த விஷயத்தையும் ஆர்வம் உந்த அறிந்து கொள்வது வழக்கம்.

ஒரு முறை அவரது நண்பர்களுள் ஒருவர் அவரிடம், “லிங்கன், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் நின்று அதைப் பார்த்த போது உங்களுக்கு என்ன தோன்றியது” என்று கேட்டார்.

ஒரு கணம் யோசித்த லிங்கன், “உலகத்தில் இவ்வளவு நீரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு எப்படி வந்து சேர்கிறது? என்று தோன்றியது” என்றார்.

வால்நட் விஷயம்

ரோலண்ட் டில்லர் (ROLAND DILLER) என்பவர் லிங்கனின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் கூறிய சம்பவம் இது.

ஒரு நாள் வாசலில் ஏகப்பட்ட சத்தம். என்னெவென்று பார்க்க வெளியே வந்தேன். இரண்டு குழந்தைகள் லிங்கனைச் சூழ்ந்து கொண்டு பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.

நான் லிங்கனை நோக்கி, “ லிங்கன், என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னவா? உலகத்தில் எப்போதும் எங்கும் உள்ள விஷயம் தான் இங்கும். என்னிடம் மூன்று வால்நட் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் ஆளுக்கு இரண்டு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன” என்றார்.

உலக நடப்பை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டி விட்டார் லிங்கன்!

கல்லறைக்குச் செல்லும் குதிரை

ஒரு முறை லிங்கன் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்ல வேண்டியதாக இருந்தது. எதிரிகளிடமிருந்து பணம் பெற்று குதிரைக்குத் தீவனம் போடும் ஒரு ஊழியர் வேண்டுமென்றே குதிரையை மெல்ல வழி நடத்திச் சென்று கொண்டிருந்தார். லிங்கன் அந்தக் கூட்டத்திற்குப் போகக் கூடாது என்பது அவர் எண்ணம். ஆனாலும் ஒரு வழியாகக் கூட்டத்திற்குச் சென்று அதில் கலந்து கொண்ட லிங்கன் மீண்டும் திரும்பிச் செல்ல அந்தக் குதிரை வண்டிக்காரரிடம் வந்தார்.

குதிரையை ஓட்டி வந்தவரிடம் லிங்கன்,”என்ன இந்தக் குதிரையை சவ ஊர்வலத்திற்குத் தான் கொண்டு செல்வீர்களோ?” என்று கேட்டார்.

திடுக்கிட்ட குதிரையோட்டி, “இல்லையே” என்றார்.

“நல்ல வேளை! உங்கள் பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒருவேளை இந்தக் குதிரைகள் சவ ஊர்வலத்தில் சவத்தைக் கல்லறைக்குக் கொண்டு சென்றால் அவரை மீட்பது என்பது நடக்கவே நடக்காதே (RESURRECTION) என்று கவலையாக இருந்தது” என்று கிண்டலடித்தார்.

குதிரை வண்டிக்காரர் வெட்கித் தலை குனிந்தார்.

அற்புத மனிதர் லிங்கன்

ஃப்ரெடெரிக் டக்ளஸ் (FREDERICK DOUGLASS) என்பவர் ஒரு நீக்ரோ இனத் தலைவர். பெரிய எழுத்தாளரும் கூட. அவரை ஒரு முறை லிங்கன் தன்னுடன் ஜனாதிபதி மாளிகையான ஒய்ட் ஹவுஸில் விருந்துண்ண அழைத்தார்.

அவரும் விருந்துக்குச் சென்று விருந்துண்டார்.

இந்த விருந்தைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம், “விருந்துண்ணச் சென்று ஒரு மணி நேரம் வெள்ளைக்காரரான லிங்கனுடன் கழித்த நான் ஒரு முறை கூட அவரால் நான் ஒரு நீக்ரோ என்று நினைவுபடுத்தப்படவில்லை. நான் சந்தித்த இப்படிப்பட்ட ஒரே ஒரு வெள்ளைக்கார மனிதர் இவர் தான்” என்று கூறுவது வழக்கமாயிற்று.

லிங்கன் அனைவரையும் சரி சமமாக மதித்து நடத்தியவர் என்பது அனைவரும் போற்றும் ஒரு விஷயம்! 

***

அத்தியாயம்11 வெளியான தேதி 22-11-23 கட்டுரை எண் 12748