Date uploaded in Sydney, Australia – 23 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
There are some known places in Sydney (Australia) which attract local residents and tourists. We went to Lake Paramatta on 22nd and Darling Harbour on 23rd January, 2025. Train is the best transport to go into city (Darling Harbour).
Those who come from London or England can see all the station names here as well (Epping, Lewisham, Croydon in Sydney). We have Liverpool, Newcastle in Australia. The English migrants named street, areas and towns from where they came.
Darling Harbour has a big park for children with many activities. There are lot of restaurants in the to cater to every taste. Children can play and bathe in the water fountains.
Paramatta lake is a place where children and adults can swim safely under the supervision of coast/ life guards.
More details about Darling Harbour
Darling Harbour Fireworks are the ultimate Sydney experience for local Sydneysider or those just visiting. These free, dazzling displays paint the harbour sky with vibrant colour, creating a magical atmosphere that’s pure Sydney. The dates and times are in website. In 2025
9pm Saturdays 4, 11, 18 & 25 January
9pm Saturdays 1, 8, 15 & 22 February and so on.
Best places to watch fire works-Darling Harbour’s best waterfront restaurants and bars at Cockle Bay Wharf .
The best free outdoor cinema of the summer is here! Warner Bros. Discovery has returned with some of their most iconic films, as well as new favourites. The dates and film titles are announced in websites. Sydney Festival in Summer (January, February) have lot of ticketed music, dance, circus events.
Those who don’t want to spend may just go around with their children and grand children and enjoy the waterfront, parks etc. you may require half a day or a full day to it.
Australian open Tennis and major sporting events are shown on huge screens.
****
More details about Paramatta Lake
Swimming, picnicking, bushwalking and pedal boating, Lake Parramatta is an amazing place of natural beauty to enjoy with friends and family.
With the lake open for swimming from October each year, the summer season is the time to shake winter off and reserve a spot by the water.
Fully patrolled by lifeguards, the designated swimming area is safe for children to splash and paddle and big enough for adults to get some laps in.
You may hire kayaks, canoes, paddleboats, stand up paddle boards and row boats on offer. All levels of ability are welcome to enjoy a few hours on the water.
Bushwalk around the tracks: There are four walking routes to around the lake.
History of Aborigines
The name Paramatta itself shows it belongs to sons of the soil.
A significant place for the traditional owners of the land the Darug people, evidence still remains of the regular usage of and occupation by the Aboriginal Burramattagal clan within Lake Parramatta Reserve and Hunts Creek.
Their shelter caves, hand-stencils, stone flaking, tree scars and midden deposits are still there .
The local Aboriginal community and City of Parramatta Council have in recent years established a Bushfoods Garden and Walk to show these remarkable items to visitors .
Wherever you go in Australia there will be a board showing to which of the 250 aborigine groups it belongs to. People will salute and show respect to them (in words) for stealing and occupying their land. It is one way of pacifying them. Since they are in a small minority and so scattered in a very large continent, they are also powerless.
Date uploaded in Sydney, Australia – 23 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
pictures taken by london swaminathan
சிட்னி நகர ஆபரா ஹவுஸ்
பிக் பென் மணிக்கூண்டைப் பார்த்தால் லண்டன் என்று சொல்லிவிடுவோம்; பாரீஸ் நகருக்கு ஜபல் டவர் சின்னம். நியூயூயார்க்கநகருக்கு லிபர்டி சுதந்திராதேவி சின்னம்; அதே போல சிட்னி நகருக்கு ஆபரா ஹவுஸ் சின்னம் ; இது ஆஸ்திரேலியாவையும் நினைவு படுத்தும் சின்னம்.
Since its grand opening on 20 October 1973, the Opera House has stood as a beacon of artistic expression, leaving an indelible mark on the global stage. Its iconic silhouette has become a symbol of Sydney, and Australia.
இது 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மஹா ராணி திறந்து வைத்தார் அதற்குப்பின்னர் பலமுறை வந்து சென்றார் .
இந்த இடத்தில் பெரிய இன்னிசை நிகழ்சசிகள் நடைபெறும்; அது தவிர கூட்டங்களும் நடைபெறும்; அவைகளுக்கு கட்டண உண்டு ஆனால் இலவசமாக கட்டிடத்தைச் சுற்றி வரலாம்
சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்
முதலில் இதைக் கட்டுவதற்கு எழுபது லட்சம் ஆஸ்திரேலிய டாலர் ஆகும் என்று திட்டம் போட்டார்கள்; ஆயினும் கட்டிடத்தை முடிக்க ஒரு கோடி டாலருக்கு மேல் ஆனது. பெரும்பாலான அத்தொகை லாட்டரி மூலமா கிடைத்துவிட்டது ; லக்கி ப்ரைஸ் என்று சொல்லலாம்
The original cost estimate to build Sydney Opera House was $7 million. The final cost was $102 million and it was largely paid for by a State Lottery.
இந்தக் கட்டிடத்துக்கு வரைபடங்கள் தேவை என்று ஒரு போட்டியை அறிவித்தவுடன் 233 படங்கள் 233 designs வந்தன. இறுதியில் டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த ஜான் உத்சவ்ன் Jørn Utzon வெற்றி பெற்றார் அவருக்கு 5000 பவுன் பரிசுத்த தொகை கிடைத்தது. இது நடந்த ஆண்டு 1956.
நான்கே ஆண்டுகளில் கட்டி முடிப்போம் என்றார்கள்; ஆனால் ராமர் காட்டுக்குச் சென்ற ஆண்டுகள் ஆயின (14)!
1959 -ல் துவங்கி 1973 ல் முடித்தார்கள் ; பத்தாயிரம் பேர் வேலை பார்த்து முடித்த கட்டிடம் இது.
யுனெஸ்கோ–வின் உலக பாரம்பரியமிக்க இடங்களில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.
சுவீடனில் தயாரிக்கப்பட்ட பத்து லட்சத்துக்கு மேலான ஓடுகள் 1-62 ஹெக்டேர் கூரையை அலங்கரிக்கின்றன.
இசைக்கருவிகள் சரியான சுருதியில் இருப்பதற்கு குறிப்பிட்ட வெப்பமும் காற்றின் ஈரப்பதமும் இருக்க வேண்டு; ஆகையால் கச்சேரி மண்டபத்தில் சிட்னி சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கும்போது வெப்ப நிலை 22.5 degrees ஆக பராமரிக்கப்படுகிறது .
கட்டிடத்தின் வெப்ப நிலையைப் பராமரிப்பதற்கு துறைமுக கடல் நீர் பயன்படுகிறது கட்டிடத்தைச் சுற்றி கடல் நீர்க்குழாய்கள் செல்கின்றன. குகாய்களின் நீளம் 35 கிலோமீட்டர்.
ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் ஆபரா ஹவுஸைக் காண்பதற்கு வருகிறார்கள்
famous sydney harbour bridge with london swaminathan
ஒரு சம்பவத்துக்குப் பின்னர் ஒரு தியேட்டரில் வலை அடிக்க நேரிட்டது; ஒரு இசை நிகழ்ச்சியில் கோழிக் குஞ்சுகளைப் பயன்படுத்தினார்கள்; ஒரு குஞ்சு பறந்து போய் ஒருவரின் இசைக்கருவியில் அமர்ந்து கொண்டது ; பின்னர் சுருதி தப்பி, இசையை தற்காலிகமாக நிறுத்த நேரிட்டது . இது நடந்தது 1980 ஆம் ஆண்டு.
ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டினை இங்கு கொண்டாடிவருகிறார்கள்; ஆஸ்திரேலியாவில் இன வாரியாகப்பார்த்தால் வெள்ளைக்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சீனர்களும் வியட்நாமியரும்தான்!
எப்படிப் போவது ?
The Sydney Opera House is a six-minute walk from Circular Quay, which is regularly served by public buses, trains and ferries to Circular Quay.
சர்குலர் கீ என்னும் இடத்திலிருந்து ஆறு நிமிடங்கள் நடந்தால் ஆபரா ஹவுஸுக்கு வந்துவிடலாம்; அந்த இடத்தை ரயில், பஸ், கார், படகு சர்வீஸ் மூலம் அடையலாம்.
ஆபரா ஹவுசில் ஏழு மண்டபங்கள் இருக்கின்றன ; அவைகளை வாடகைக்கு எடுத்து இன்னிசை நிகழ்ச்சிகளையும் வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம்.
picture taken from my ferry in Paramatta River
The Sydney Opera House in Sydney, Australia has seven performance venues:
Concert Hall: The largest venue, with a seating capacity of 2,679
Opera Theatre: Seats 1,547
Drama Theatre: Seats 544
Playhouse: Seats 398
Studio Theatre: Seats 364
Forecourt: An iconic outdoor space with harbour views
Utzon Room: A small, elegant space with excellent acoustics
Each venue has its own rehearsal space. The Sydney Opera House also has restaurants, bars, souvenir shops, and meeting rooms.
இவை தவிர கூட்டங்களை நடத்தும் சிறிய ஹால்கள், உணவு விடுதி, ரிகர்சல் என்னும் ஒத்திகை பார்க்கும் அறைகள் , கடைகளும் உண்டு. ஐயாயிரம் இருக்கைகளுக்கு மேல் இருப்பதால் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் .
நான் படகிலிருந்தும் உள்ளேசென்றும் எடுத்த படங்களை இணைத்துள்ளேன்.
அவர்களுடைய வெப்சைட்டில் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளையும் வரைபடத்தையும் பார்க்கலாம்.
–subham—
Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12, சிட்னி நகர ஆபரா ஹவுஸ்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(14-1-25 kalkionlineல் பிரசுரமான கட்டுரை
எரிபொருள் அறிவியல்
கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான ‘பவர்’!
ச. நாகராஜன்
பூமியில் எரிபொருள் தீரப்போகிறது என்று அவ்வப்பொழுது அச்சுறுத்தல் செய்தி வந்து கொண்டே இருக்கிறது அல்லவா?
இனி கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான சக்தி என்று ஒரு ஆறுதல் செய்தியை சயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) பத்திரிகை தனது 2024 டிசம்பர் 13ம் தேதி இதழில் வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெட்ரோலிய புவியியல் இரசாயன வல்லுநரான ஜியாப்ரி எல்லிஸ் (Geoffrey Ellis,a petroleum geochemist at the U.S. Geological Survey (USGS)) மற்றும் சாரா ஜெல்மன் (Sarah Gelman) ஆகிய இரு ஆய்வாளர்கள் கண்டுபிடித்த இந்த செய்தி ஆறுதல் அளிக்கும் செய்தி.
பூமியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா சக்தியைப் போல் இரு மடங்கு ஹைட்ரஜன் பவர் பூமியின் அடியில் இருக்கிறது என்பது அவர்கள் தரும் ஊக்கமூட்டும் செய்தியாகும்.
இதுவரை இவ்வளவு பெரிய ஆற்றல் பூமிக்கு அடியில் இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறியவில்லை. ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அல்பேனியம் க்ரோமியம் சுரங்கத்திலும் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லாமல் போனது! பூமிக்கு அடியில் ஏராளமாக ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு புதிய பார்வையே அப்போது தான் அவர்களுக்குக் கிடைத்தது.
இன்னும் இருநூறு வருடம். படிமப்பாறை எரிபொருளை (Fossil Fuel) நம்பி இருக்கும் நமக்கு பூமிக்கு அடியில் உள்ள இந்த ஹைட்ரஜன் ஆற்றலில் ஒரு துளி கிடைத்தால் கூடப் போதுமாம் படிமப்பாறை எரிபொருளுக்கு டாட்டா சொல்லி விடலாமாம்! இருநூறு வருடங்களுக்கு கவலையே இல்லை!
10 டிரில்லியன் டன் (ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்குப் பக்கத்தில் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண்) இருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு. ஆனால் நிச்சயமாக பூமிக்கு அடியில் 6.2 டிரில்லியன் டன் (அதாவது 5.6 மெட்ரிக் டன்) ஹைட்ரஜன் பாறைகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களின் ஆய்வு மூலம் உறுதியானது.
அதாவது பூமிக்கு அடியில் உள்ள எண்ணெயின் அளவு போல 26 மடங்கு இது அதிகமாம்.
ஹைட்ரஜன் ஒரு தூய்மையான ஆற்றலின் ஆதாரமாகும். தொழிலகங்களுக்குத் தேவையான மின்சக்தி மற்றும் வாகனங்களை ஒட்டுவதற்கான எரிபொருள் ஆகியவற்றை ஹைட்ரஜனிலிருந்து பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே!
2 சதவிகித ஹைட்ரஜன் ஆற்றல் 124 பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) டன் வாயுவுக்கு சமம்.
ஹைட்ரஜனிலிருந்து பெறப்படும் சக்திக்கு “க்ரீன் ஹைட்ரஜன்” என்று பெயர். படிமப் பாறைகளைலிருந்து வரும் சக்திக்கு “ப்ளூ ஹைட்ரஜன்” என்று பெயர்!
நமக்குக் கிடைக்கப்போவது இனி க்ரீன் ஹைட்ரஜன்!
இதில் ஒரு பெரிய பயன் என்னவென்றால் இந்த ஆற்றலைத் தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து ஒரு இடத்தில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை!
கடற்கரைக்கு வெகுதூரத்தில் அல்லது அதிக ஆழத்தில் இருக்கும் இந்த ஆற்றலை எங்கு இருக்கிறது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்
விஞ்ஞானிகளுக்கு சவாலான விஷயம் இந்த ஹைட்ரஜன் பாறைகள் எந்த இடத்தில் உள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க வேண்டியது தான்!
Date uploaded in Sydney, Australia – 22 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
BEACH PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN
பத்தாயிரம் கடற்கரைகள்
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11
ஆஸ்திரேலியா உலகிலேயே ஆறாவது பெரிய நாடு. ஒரு கண்டத்தையே நாடாக அழைக்கும் பெருமை உடைத்து இது; மேலும் அழகான கடற்கரைகள் நிரம்பிய நாடு; இதன் கடற்கரையின் நீளம் 36,000 கிலோமீட்டர்கள் .
கிழக்கில் பசிபிக் மஹா சமுத்திரமும் மேற்கிலும் வடக்கிலும் இந்து மஹாசமுத்திரமும் அலைகளை அள்ளிவீசும் அழகான நாடு ;ஜனத்தொகையோ மிகக்குறைவு.
சுற்றுலாப்பயணிகள் செல்லும் பத்தாயிரம் கடற்கரைகள் உள்ளன. சிட்னி நகரிலேயே புகழ்பெற்றன பாண்டி பீச் உள்ளது அங்கே உள்ளூர்க் கார்களையும் சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் காணலாம். இவ்வளவு கடற்கரைகள் இருந்தபோதிலும் நான் சென்றது நாலைந்து கடற்கரைகள்தான் சில இடங்களில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதைக் கண்டேன். கடல் தாவரங்கள் கொத்து கொத்தாக கரை ஒதுங்குவதைக் கண்டேன். கிளிஞ்சல்களும் கிடைக்கின்றன. வட கோடியில் கேர்ன்ஸ் என்னும் இடத்திற்குச் சென்று பவளைப் பாறைகளையும் பார்த்தேன்
சிட்னி நகர பாண்டி பீச் சென்னை மெரீனா கடர்களை போல புகழ்பெற்றது. ஆனால் தைவிட சுத்தமானது; கடை கன்னிகள் இல்லாதது . எல்லா கடலோர சுற்றுலாத் தலங்களிலும் நீர் விளையாட்டுகள் அதிகம்; பள்ளிக்கூடங்களில் நீச்சல் கட்டாய பயிற்சி. இதனால் நீச்சல் தெரியாத சிறுவர்கள், இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். பேட்டை பேட்டையாக நீச்சல் குளங்களும் உண்டு .
நீர் விளையாட்டுகளுக்காகப் போகும் இளம் ஜோடிகளை எல்லாக் கடற்கைரைகளிலும் காணலாம். அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு சுவர்க்கம்.
குறிப்பிடத்தக்க சில கடற்கரைகளைக் காண்போம்
Bondi Beach பாண்டி பீச்
Located in Sydney, this iconic beach is known for its sun-drenched sand, surf lessons, and the famous Bondi Icebergs ocean pool.
சிட்னியில் உள்ள பாண்டி பீச் எளிதில் போகக்கூடியது; ஏராளமான பஸ்கள் நிமிடத்துக்கு நிமிடம் வந்து கொண்டிருக்கும். கற்றகரைய ஒட்டி நீச்சல் குளங்களையும் கட்டியிருக்கிறார்கள்; வெள்ளை மணலில் உட்கார்ந்தது (காதல்) கதைகளை பேசலாம் ஆனால் சன் க்ரீம் போடாமல் ஆஸ்திரேலியர்கள் வர மாட்டார்கள்; இங்கு சூரிய ஒளி மூலம் வரும் தோல் புற்றுநோய் (Sun Cream to prevent Skin Cancer) அதிகம்.
கடலில் மிதக்க ஆசைப்பட்டால் சர்பிங் பயிற்சியும் பெறலாம் (காசு கொடுத்து) ; ஆஸ்திரேலியாவில் எல்லாம் ஆனை விலை குதிரை விலை ; விலைவாசியில் லண்டனைத் தோற்கடித்துவிடும் லண்டன் விலையை இரண்டால் பெருக்கிக்கொள்க
****
நீலக்கல் வளைகுடா
இது சிட்னிக்கு நேர் எதிர்ப்புறம் 2500 மைல்களுக்கு அப்பால் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது ; கடல் நீளம் என்ற வருணனைக்கு பொருத்தமான இடம் ; நிங்களூ Ningaloo Reef. பவளப் பாறைகளையும் காணலாம்
Turquoise Bay
Located in Cape Range National Park in Western Australia, this beach is known for its bright blue waters and proximity to the Ningaloo Reef.
*****
கின்னஸ் புஸ்தக பீச் – வெள்ளை வெளேர் கடற்கரை
Hyams Beach
Located in Jervis Bay, New South Wales, this beach is known for its white sand, which has been recorded in the Guinness Book of Records as the whitest in the world.
சிட்னி நகரம் இடம்பெற்றுள்ள மாநிலம் நியூ சவுத் வேல்ஸ்; இங்கேயுள்ள ஹையம்ஸ் பீச்/ கடற்கரை உலகிலேயே வெண்மணல் உடைய கடற்கரை என்ற தலைப்பில் கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெற்றது.
****
கடற்கரையில் ஒட்டக சவாரி
பாலை வனம் உள்ள மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்திலும் ஒட்டக சவாரி இருப்பதில் வியப்பில்லை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் ஓட்டகங்களைக் கொண்டு வந்து ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தியதால் இங்கு அரபு நாடுகளை விட ஒட்டக எண்ணிக்கை பெருத்துவிட்டது மேற்கு ஆஸ்திரேலிய கேபிள் பீச் சுப் க்குப் போனால் ஒட்டக சவாரி செய்தவாறே கடலில் சூரியன் அஸ்தமிப்பதையும் காணலாம் ; பதினான்கு மைல் தூரத்துக்கு வெள்ளை நிறைத்தில் மணல் பிரகாசிக்கும்
Cable Beach
Great for: Camel rides and magical sunsets
The iconic Cable Beach is located in Broome, on the northern border of Western Australia. This beach is famous for its 22km (14mi) of soft white sand, where visitors can enjoy the calm blue water and show-stopper sunsets. Soak up the golden glow on a camel train, where you’ll traverse the beach on the back of a camel during sunset.
*****
கங்காரு பீச்
கடற்கரையில் கங்காருக்களும் சூரிய ஒளிக்குளியல் எடுப்பதைக் காண ஆசைப்பட்டால் மேற்கு ஆஸ்திரேலியா லக்கி பெ கடற்கரைக்குப் போகவேண்டும்
Great for: Australia’s famous sunbathing kangaroos
If your idea of a beach day involves hanging out with laid-back kangaroos on dazzling white sand, then Lucky Bay’s name rings true for you. Down in Western Australia’s southwest corner, Lucky Bay is a beautiful crescent of white sand and turquoise water in Cape Le Grand National Park.
****
டால்பின்கள் சீல்களைக் காண
தெற்கு ஆஸ்திரேலிய கங்காரு தீவில் பல அழகான கடற்கரைகள் உள. விவோன் பீச்சுக்குப் போனால் டால்பின்கள், கடல் சிங்கங்கள் எனப்படும் seals and dolphins சீல்கள் ஆகியவற்றைக் காணலாம்.
Vivonne Bay Beach
Great for: Natural beauty and local wildlife
South Australia’s Kangaroo Island is enveloped by picture-perfect beaches, with Vivonne Bay Beach often dubbed the most beautiful. There’s not a lot around this beach – but that’s what makes it so special. Picture an immaculate stretch of sand, crystal-clear waters home to playful seals and dolphins, and miles of unspoiled bush known as the Vivonne Bay Conservation Park.
****
BLUE BOTTLE JELLY FISH
MIGHTY PACIFIC OCEAN
SEA WEEDS
ஆயிரக் கணக்காண பீச்சுகளைப் பட்டியலிட்டு ,போகும் வழி தங்கும் இடம் , சாப்பிட உணவுவிடுதிகள் முதலியவற்றைப் பட்டியலிட்ட புஸ்தகங்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.
—SUBHAM—
Tags- பத்தாயிரம் கடற்கரைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11
Date uploaded in Sydney, Australia – 22 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 15
நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் —மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் — கடும் தாக்கு
நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் கடும் தாக்கு
வள்ளலார் சொன்னது என்ன ?
பிண்ணாக்கு! நாத்திகர் மீது வள்ளலார் கடும் தாக்கு !
“நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்
இதுவரை கண்ணில் படாத ஒரு அற்புதப் பாடல் கண்ணில் பட்டது.. இதோ அந்தப்பாடல்!
முதல் பத்தியில் கண்புருவப்பூட்டு என்பது நெற்றிக்கண் எனப்படும் ஞானக் கண் திறப்பது பற்றி என்று அறிஞர்கள் கூறுவார்கள்
அதற்கு அடுத்த பத்தியில் மேருமலைக் காட்சிகளை வருணிக்கிறார். அது யோகம் பற்றியது.
அதைத் தொடர்ந்து இரண்டு பத்திகளில் என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.என்ற வரிகள் வள்ளலார் அடைந்த ஞானத்தைக் காட்டுகிறது
அடுத்த பத்தியில் அருட்கடலில் ஓடம் ஏறி கரைசேர்ந்து தீப ஒளி கண்ட சந்தோஷத்தைக் காட்டுகிறார்.
ஆனால் நான் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புவது கடைசி பத்திதான்
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
நாத்திகம் பேசுவோரின் பேச்சு, முடை நாற்றம் வீசும் என்று தாக்குகிறார். அவர்கள் ருசிப்பது பிண்ணாக்கு என்றும் சாடுகிறார் இதற்கு நேர் மாறானது தெய்வீகப் பெரியோரின் திருவாக்கு என்றும் பாடுகிறார்.
He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!
(An ancient saying from the Middle East)
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்
இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.
அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின் என்ற கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!
*****
வள்ளலார் பாடல்கள் சிலவற்றை பள்ளிப் பருவத்திலேயே கற்கும் பாக்கியம் கிடைத்தது .நான் படித்த மதுரை வடக்கு மாசி வீதியில் யாதவர் பள்ளி இருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமணர்கள்; தமைமை ஆசிரியரோ உச்சுக்குடுமி வைத்து நாமம் போட்ட ஒரு அய்யங்கார். பெயர் எல்லாம் நினைவில்லை. அங்கு வகுப்பறைக்கு வெளியே மழை நீர் போக ஒரு தாழ்வாரம் உண்டு. எல்லா வகுப்பறைகளை இணைக்கும் தாழ்வாரம் அது. அங்கேதான் காலை நேர பிரார்த்தனை. ஒரு பிரியது PERIOD முடிந்தவுடன் எல்லா வகுப்புகளுக்கும் கேட்பதற்கு மணி அடிக்கும் இடமும் அதுதான் . வாத்தியாரின் நன் மதிப்பை பெற்ற சீனியர் மாணவர் கனமான மணியைக் கையில் தூக்கி அடிப்பார். சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் வேறு மணி. பெரிய இரும்புப் பாளம் METAL BAR தொங்கும் அதில் ஒரு பியூன் போய் பெரிய கம்பியை வைத்து அடிப்பார்.
யாதவாஸ்கூல் பற்றி மீண்டும் பார்ப்போம் ;
பள்ளிக்கூடமோ யாதவர் பள்ளி; கும்பிடுவதோ பத்து தப்படி தள்ளி இருக்கும் கிருஷ்ணர் கோவில். மறுபுறமோ ராமையாணச் சாவடி. ஆனால் பள்ளியில் பிரார்த்தனை “கல்லார்க்கும் கற்றவருக்கும் களிப்பருளும் களிப்பே” என்ற வள்ளலார் பாடல். சில நாட்களுக்கு ஒரு change சேஞ் – சிவ பெருமான் மீது பொன்னர் மேனியனே – தேவார பாடல் .
அப்போது கற்ற வள்ளலார் பாடல் இன்றுவரை மறக்கவில்லை. அதற்குப் பின்னர் அப்பா சொல்லிக் கொடுத்த “முன்னவனே யானை முகத்தவனே” என்ற கணபதி (வள்ளலார்) பாடல். பின்னர் வீட்டில் அப்பா செய்யும் பஜனையில் “அம்பலத்தரசே அரு மருந்தே” (வள்ளலார் )வந்து விடும். அவ்வப்போது வீட்டுக்கு வரும் சம்பந்த மூர்த்தித்தெரு நாடக நடிகர் மஹாதேவன் “அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்- பொருட்சார் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்” (வள்ளலார்) என்பதைப் பாடிக்காட்டுவார் ; எல்லோரும் உருகிப்போவோம். அப்பாவுக்கு பல வள்ளலார் பாடல்கள் அத்துப்படி. எனக்கு எங்காவது பஜனைப் பாடல் பாட ‘சான்ஸ்’ chance கிடைத்தால் நான் படுவது ‘“அம்பலத்தரசே அரு மருந்தே” தான். அடுத்த வீட்டு ஐயங்கார் வீட்டின் முன்புறம் Modern Scientific Company மாடர்ன் சைன்டிபிக் கம்பெனி . அதன் பின்புறம் வீட்டு ஓனர் Owner செல்லூர் அய்யங்கார் சீனிவாசாயங்கார். பலே கிண்டல் பேர்வழி.
சத்ய சாயிபாபா படத்தில் விபூதி வருகிறது; பால் வருகிறது; தேன் வருகிறது என்று மதுரை முழுதும் பரபரப்பு. அவரிடம் அது பற்றிப் பேசினால் “டேய் மண்ணெண்னைக்கு ரேஷனில் கியூவில் நிற்கிறோமே; பாபா படத்தில் கெரசின் வந்தால் நன்றாக இருக்குமே!” என்பார். அவர் வீட்டிலும் நான் என் தம்பி முதலியோர் சென்று பஜனை செய்வோம். அப்போது என் பாட்டு அமபலத்தரசே …. தான்.
என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த வரிகள் “தும்பைப் பூ வை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே” என்ற வரியாகும் . அதைப் பாடிப் பாடி மகிழ்வார். ‘தும்பபைப் பூவாக பிறந்தால் சிவன் பாதத்தில் மலராகக் கிடக்கலாம்’ என்பது தாத்பர்யம் .
சென்ற முறை இந்தியா போனபோது என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. வடலூர் சென்று வள்ளலார் சந்நிதிகளை தரிசித்தேன் . மீண்டும் ஒருமுறை திருவருட்பா வாங்கினேன். மறந்து போன “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” பாடலை எல்லாம் மனப்பாடம் செய்தேன்.
–சுபம்—
Tags-, திருமூலர், எச்சரிக்கை, நாத்திகம் ,நாத்தீகர் மீது, ஐந்து புலவர்கள்,கடும் தாக்கு, part-15,வள்ளலார், ஆராய்ச்சிக் கட்டுரை 15
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரை சந்தித்து அதிசயமான அனுபங்களைப் பெற்றவர்களுள் மன்னர்கள் முதல் சாமானியர் வரை அனைவரும் அடங்குவர்.
இங்கு அவரைச் சந்தித்த இரண்டு மன்னர்களை மட்டும் காண்போம்.
கேத்ரிமன்னருடன் சந்திப்பு
1891 ஜூன் மாதம் 4ம் தேதி
ஸ்வாமி விவேகானந்தரை முதன் முதலாகச் சந்தித்த கேத்ரி மன்னர் அவரால் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார்.
‘என் தலைநகருக்கு வந்து என்னுடன் வசிக்க வேண்டும்’ என்ற மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் கேத்ரியை அடைந்தார் ஸ்வாமிஜி.
வேதாந்த பேச்சுக்கள், பஜனை, பாடல்கள், என நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அரண்மனையில் நடனமாது ஒருவரின் நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள மன்னர் ஸ்வாமிஜியை அழைத்தார். ஒரு துறவி இதில் கலந்து கொள்வது அழகல்ல என்றார் ஸ்வாமிஜி.
இதனைக் கேள்விப்பட்ட நடனமாது ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார். “பிரபுவே எனது குறைகளை உனது மனதில் கொள்ளாதே! சமமாக பாவிப்பதே உனது பண்பு அல்லவா?” என்று தொடங்கியது பாடல். அடுத்த அறையிலிருந்து இதைக் கேட்டு மனம் உருகிய ஸ்வாமிஜி ஒரு நடனமாது என்று அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்லவே என்று சிந்தித்தார். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் இந்த சமபாவனையைக் கடைப்பிடித்தார். அவரிடம் பல பிரபல நடிகைகள் வந்து ஆசி பெற்று வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தனர்.
இன்னொரு நிகழ்ச்சி.
ஸ்வாமிஜியும் மன்னரும் அடிக்கடி குதிரை சவாரி செய்து அருகில் உள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு முறை அப்படிச் செல்லும் போது அனைவர் கையிலும் துப்பாக்கி இருக்க ஸ்வாமிஜியிடம் மட்டும் ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் அனைவரும் ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது ஒரு புலி ஸ்வாமிஜி அமர்ந்திருந்த மரத்தின் அருகே சென்றது. மன்னரும் மற்றவர்களும் ஓடோடி வந்து அவரிடம் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். உடனே ஸ்வாமிஜி, “பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை ஒன்றும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக்கூடாது” என்று கூறி துப்பாக்கி வாங்குவதை மறுத்து விட்டார்.
மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சந்திப்பு
ஸ்வாமிஜியின் அபார அறிவாற்றலால் கவரப்பட்டவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி! அவரை சர்வமத சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர்.
சிகாகோவில் மாபெரும் உரை நிகழ்த்தி அமெரிக்காவையே கவர்ந்து பின்னர் இந்தியா வரும் போது முதலில் அவருக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தவர் பாஸ்கர சேதுபதியே.
1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பு வந்த ஸ்வாமிஜி இலங்கையில் சில நாட்கள் தங்கினார். ஜனவரி 26ம் நாள் அவரை பாம்பனில் வரவேற்க அலங்காரப் படகு ஒன்றில் மன்னர் பாஸ்கர சேதுபதி வந்தார். அந்தப் படகில் ஏறிய ஸ்வாமிஜியை சேதுபதி சந்தித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. ஸ்வாமிஜியின் செருப்புகளை அவர் பாதத்தில் அணிவித்தபடியே சேதுபதி, “விலை மதிக்க முடியாத வைரத்தை என் தலையில் சூடுவதை விட இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று பக்திப் பரவசத்துடன் கூறினார்.
ஸ்வாமிஜியை ஊர்வலமாக ரதத்தில் அமர்த்தி தன் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் சென்ற சேதுபதி மன்னர் சிறிது தூரம் சென்ற பின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே ரதத்தை இழுத்துச் செல்லலானார்.
பின்னர் இன்னொரு நாள் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார் ஸ்வாமிஜி. அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு ராஜரிஷி என்ற பட்டத்தைச் சூட்டினார் அவர். மன்னராக இருக்கும் போதே முனிவராகவும் திகழ்கின்றார் என்ற அந்தப் பெருமையைப் பெற்றவரானார் சேதுபதி!
இப்படி காஷ்மீர் மன்னர், கட்ச் மன்னர், ஆள்வார் மன்னர் உள்ளிட்ட மன்னர்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டு அடைந்த அனுபவங்கள் பல.
Date uploaded in Sydney, Australia – 21 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியாவிலுள்ள இந்து வணிகர்கள் முதலில் ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்களுடன் தொடர்பு கொண்டனர்
ஆஸ்திரேலியாவில் சுமார் ஐம்பது இந்தக் கோவில்கள் இருக்கின்றன மேலும் மேலும் புதிய கோவில்களும் உருவாகிவருகின்றன . இந்துக்கள் வசிக்கும் முக்கிய நகரங்களில் இந்துக்கள் வசிக்கும் இடங்களில் கோவில்களில் நல்ல கூட்டம் வருகிறது மிகப்பெரிய நாடான ஆஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனர்; இந்துக்க——க்கும் இது பொருந்தும்
கிழக்குக்கடற்கரையை ஒட்டிய சிட்னி நகரில்தான் அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்; அடுத்தப்படியாக மெல்போர்ன் என்று புள்ளி விவரங்கள் தெரிவி க்கி ன்றன.
இரண்டு பெரிய இந்திய நகரங்களின் ஜனத்தொகைக்குச் சமம்தான் மொத்த ஆஸ்திரேலிய ஜனத்தொகை .270 லட்சம்தான்
Australia’s population was 27,204,809 people at 30 June 2024.
இதில் ஏழு லட்சம்தான் இந்துக்களின் எண்ணிக்கை.
1971 – சுவாமி பிரபுபாத வந்து ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் துவக்கினார்.
1977 – The first Hindu temple in Australia, the Sri Mandir Temple, மூன்று இந்துக்கள் சேர்ந்து சிட்னி வட்டாரத்தில் முதல் கோவிலைத் துவக்கினார்கள் ; இதன் பெயர் ஸ்ரீ மந்திர ர்.
மொத்த மக்கட்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை மூன்று சதவிகிதத்துக்கும் குறைவுதான் ; பார்லிமெண்டில் 2015– முதல் இந்து உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகித்து வருகின்றனர்
இதைத்தொடர்ந்து பல கோவில்கள் பல நகரங்களில் கட்டப்பட்டன
ஒவ்வொரு நகரமாகக் காண்போம்
ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்தான் ஆகம விதிப்படி கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில். 1985 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது . பின்னர் ஏனைய கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
Murugan Temple
சிட்னி முருகன் கோவில்
பிரிஸ்பேன் நகரில் செல்வ விநாயகர் கோவில்
சிட்னி நகர ஸ்ரீ கற்பக விநாயகர்-என்பன குறிப்பிடத் தக்கவை.
மிண்டோ என்னுமிடத்தில் சிவன் கோவில் இருக்கிறது
இவை தவிர நியூசவுத்வேல்ஸ் , சிட்னி வட்டாரத்தில் சாயி மந்திர், ராகவேந்திர சுவாமிகள் மடம், துர்கா கோவில் உள்பட பல சிறிய கோவில்க—-ம் உள்ளன
Sri Venkateswara Temple Helensburgh Limited NSW Australia
4.7(5K) · Hindu temple
Helensburgh NSW · (02) 4214 9080
Sydney Murugan Temple
4.8(4.9K) · Hindu temple
Mays Hill NSW · (02) 9687 1695
Shri Shiva Mandir
4.7(2.4K) · Hindu temple
Minto NSW · (02) 9820 1094
****
இதற்கு அடுத்தபடியாக மெல்போர்ன் நகரினைக் குறிப்பிட்ட வேண்டும் அங்கும் அதிகமாக இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
மெல்போர்ன் நகரிலுள்ள குறிப்பிட்டத தக்க கோவில்கள்
மெல்போர்ன் முருகன் கோவில் ,வக்ரதுண்ட விநாயகர் கோவில், குஜராத்திகள் சுவாமி நாராயண் மந்திரர், ஷீர்டி சாயி சமஸ்தான, ஸ்ரீ வேங்கட கிருஷ்ண பிருந்தாவனம்
சிவா விஷ்ணு கோவில், துர்கா கோவில், சங்கட மோசன் ஹனுமார் கோவில்.
• BAPS Temple, Melbourne
• Sri Venkata Krishna Brundavana, Melbourne
• Shiva Vishnu Temple, Melbourne
• Durga Temple, Melbourne
• Shirdi Sai Sansthan, Melbourne
• Sankatamochan Hanuman Mandir, Melbourne
• Melbourne Murugan Temple, Melbourne
• Sri Vakrathunda Vinayagar Temple, Melbourne
****
மேற்கு ஆஸ்திரேலியக் கோவில்கள்
சிட்னி நகருக்கு நேர் எதிர்ப்புறம் உள்ளது மேற்கு ஆஸ்திரேலியா ஆகும். இரண்டுக்குமிடையே உள்ள இடைவெளி 2500 மைல்கள்
அங்கு பெர்த் என்னும் நகரில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர் . அங்குள்ள ஸ்ரீ ராமர் கோவில்தான் நாட்டிலேயே பெரிய கோவில்.
பெர்த் நகரில் பால முருகன் கோவில், சிவன் கோவில், சுவாமி நாராயண் கோவில் முதலிய கோவில்களும் இருக்கின்றன.
· Perth Ram Temple, Perth (biggest temple in the country)
மெல்போர்ன், விக்ட்டோரியா மாகாணத்தில் உள்ளது . சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது . பெர்த் என்னும் நகரம் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் உள்ளது.
****
நாட்டின் தலைநகர் கான்பெர்ரா; அங்கும் ஹிந்துக் கோவில்கள் இருக்கின்றன.
ஸ்ரீ விஷ்ணு சிவா மந்திர், கான்பெர்ரா சைவ கோவில், ஹிந்து கோவில், ப்ளோரி, ஹரே கிருஷ்ணா கோவில் , சுவாமிநாராயண் கோவில் முதலியன தலை நகர வட்டாரத்தில் Australian Capital Territory ACTஇருக்கின்றன.
Mandir Address: BAPS Shri Swaminarayan Mandir, 236 Robin Boyd Cres, Taylor, ACT 2913 Canberra Australia
இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.
சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.
சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.
பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்..
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்
சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.
இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.
கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.
****
My Visit to Sydney Murugan Temple in Australia (Post No.14,050)
Written by London Swaminathan
Post No. 14,050
Date uploaded in Sydney, Australia – 4 January 2025
****
Sri Venkateswara Temple at Helensburgh, Australia (Post No.14,014)
Written by London Swaminathan
Post No. 14,014
Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .
—subham—
Tags–ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள், சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில், கான்பெர்ரா, மெல்போர்ன், பெர்த், சிட்னி , மிண்டோ, ஹெலென்ஸ்பர்க்
பிரபல பாகவதர்கள் அனைவரும் மாண்டு ராகத்தில் பாடிய அருமையான பாடல் இது . அக்கச்சி என்பது அக்காள் என்ற பொருளில் வருகிறது
முதலில் மயில் என்னும் மாயக் காட்சி நீங்கி ஓம்கார ஒலியைக் கேட்கிறார்- குயில் மூலமாக .
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி.
வானம் என்பது சிதாகாசம். மயிலாடக் கண்டேன் என்பது சிதாகாச ஞானக் காட்சி; சிவக் காட்சியுமாம். சிவத்தைக் கண்டு சத்தியைத் தரிசித்தமை விளங்க, “மயில் குயில் ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள். மயிலை விந்து என்றும், குயிலை நாதம் என்றும் கூறுவதுண்டு. இங்கே மயில் குயிலானதாகக் குறிக்கப்படுகின்றது. இனிமையான இசை போன்ற குயிலின் ஒலி பிரணவ நாதத்திற்கு ஒரு அடையாளமாம். அகத்தில் உள்ளது நிலையான ஒளி. ஆடும் மயில் ஆகும். அதுவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நாத வண்ணமாகிப் புறத்தில் சதா சுற்றிக் கொண்டேயிருக்கின்றது.என்று சுவாமி சரவணானந்தா எழுதியுள்ளார்.
***
இரண்டாவது கண்ணியில் அருணகிரிநாதர் போல பேசா அனுபூதி கிடைத்ததை பாடுகிறார் ; உபநிஷத்துக்களும் எங்கு சொற்கள் செல்லாதோ, வார்த்தைகளை விளக்கமுடியாதோ அதுவே பிரமம் என்கிறது முதலில் ஆடுவர்; பாடுவர்; ஏனையோருக்கும் அதை எடுத்துரைப்பர்; ஒரு நிலையை அடைந்தவுடன் துள்ளல்– அதாவது ஆட்டபாட்டம் எல்லாம் அடங்கிவிடும் எப்போது ? மன்றில் ஆடிக்கொண்டிருக்கும் அமபலவாவணனைக் கண்டவுடன்.
****
மூன்றாவது கண்ணியில் சந்யாச நிலையை அடைந்தைக் காட்டுகிறார். சன்யாசம் எடுப்போர் எல்லா வேற்றுமைகளையும் நீக்கி, பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்ற நிலையை அடைவார்கள்; அவர்களுக்கு சொந்த உறவினர் இல்லை;. சாதி சமயம் இல்லை; எல்லோரும் சமம்; எவருக்கும் அருள்பாலிப்பார்; அது பயன்தருவது அவரவர் ஏற்கும் கொள்கலனைப் பொருத்தது அதாவது வினைப்பயனைப் ஒத்தது. அதுபோல வள்ளலாரும் சாதி சமய வேற்றுமைகளை அகற்றி உயர்நிலையை அடைந்ததைக் காட்டும் வரிகள் இவை .
அந்த நிலையில் அவர்கள் காண்பது ஜோதி.
இதனால்தான் உபநிஷத்தும் தாமஸோ மா ஜ்யோதிர் கமய என்று இயம்பியது .
மஹாத்மா காந்தியும் உண்மையே கடவுள் என்பார் ; உண்மைஎது என்பதை நம் மனச் சாட்சியே சொல்லும். மனுவும் கூட முதலில் அற நூல்களை பின்பற்று; அது புரியாவிட்டால் ஆன்றோர்கள் வாக்கினை கவனி; அதிலும் மனக்குழப்பம் ஏற்பட்டால் உன் மனச் சாட்சிப்படி நடந்து கொள் என்று மனு விளம்பினார் இப்படி அவர் பகர்ந்ததற்கு காரணம் சூது வாது, களவு காமம் கொலை , கோபம் எல்லாவற்றிலும் எது சரி என்பதை நம் மனச்சாட்சி சொல்லும் அதையும் மீறி நாம் தவறுசெய்தால் அதன் தீய பலனை அனுபவிக்கிறோம்.
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் என்பது அசததோமா சத் கமய என்ற உபநிஷத் வாக்கியம் ஆகும்; மாயத்தை உண்மையென நம்பியது பொய்- அதாவது அசத்தியம் . ஸத் என்பது உண்மைப்பொருள் பற்றிய ஞானம்
பொய்யை/- மாயத்தை- ஒழித்து வள்ளலார் உயர் நிலையை அடைந்ததை இந்தச் சிறிய பாடல் கற்பிக்கிறது இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்
பிருகதாரண்யக உபநிஷாத மந்திரம் :
ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி(ஸ்) சாந்தி( ஸ்) சாந்திஹி
அறியாமையிலிருந்து என்னை மெய்யான ஞானத்துக்கு அழைத்துச் செல்;
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்;
பிறப்பு – இறப்பு என்னும் சூழலிலிருந்து என்னை மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல் – என்பதாகும்.
ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||
Meaning:
1: Om, (O Lord) From (the Phenomenal World of) Unreality, make me go (i.e. Lead me) towards the Reality (of Eternal Self),
2: From the Darkness (of Ignorance), make me go (i.e. Lead me) towards the Light (of Spiritual Knowledge),
3: From (the World of) Mortality (of Material Attachment), make me go (i.e. Lead me) towards the World of Immortality (of Self-Realization),
4: Om, Peace, Peace, Peace.
இருளிலிருந்து என்னி ஒளிக்கு ழைத்துச் செல்வாயாகுக என்பது இதன் பொருள்; அறியாமை என்பதே இருள்.
—-SUBHAM—
Tags–வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -14