ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18 (Post.14,162)

Written by London Swaminathan

Post No. 14,162

Date uploaded in Sydney, Australia – 1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18

டால்பின் பார்க்க வாருங்கள் ;

அது போல ஆனந்தமாக குதியுங்கள்

நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்

Nelson Bay, Port Stephens –

A vibrant coastal gem in the Port Stephens area, Nelson Bay serves as a launchpad for nature adventures. Port Stephens is home to over 150 bottlenose dolphins that reside in the bay year-round. During the migration season, from May to November, humpback whales make their way along Australia’s east coast, providing spectacular opportunities for sightings.

ஆஸ்திரேலியாவில் பத்தாயிரம் கடற்கரைகள் இருப்பதை முன்னம் ஒரு கட்டுரையில் பார்த்தோம் .கிழக்குக் கடற்கரையை ஒட்டி வசிப்போருக்குத் திரும்பிய இடமெல்லாம் கடற்கரைதான். பசிபிக் மகா சமுத்திரம் அலை வீசும் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள். ஆகையால் இப்பகுதியிலுள்ள கடற்கரைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.

ஜனவரி 2025 கடைசி இரண்டு நாட்களில் நாங்கள் சிட்னி நகரிலிருந்து நெல்சன் வளைகுடாவுக்கு Nelson Bay சென்றோம் அங்கு கடலில் சென்று டால்பின்களைப் பார்க்க வசதிகள் உண்டு; இது நிறைய சுற்றுலாப்   பய ணிகளை ஈர்க்கிறது. அத்தோடு கூடுதல் கட்டணம் உடைய பெரி FERRY கப்பலில் ஏறினால் நடுக்கடலில் கப்பலில் இருந்தவாறே கடற்குளியல் செய்யவும் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்.

நாங்கள் ஆளுக்கு நாற்பது டாலர் கொடுத்து அத்தகைய கப்பலில் ஏறினோம் . கப்பலை ஓட்டுபவர் நேர்முக வருணனை செய்து கொண்டே வருகிறார். டால்பின்கள் வரும்போது உரத்த குரல் பேசி  நம்மை உற்சாகப் படுத்துவார் அது மூன்று அடுக்கு THREE DECKS  உடைய பெரி; அதில் 200 பேர் வரை ஏறலாம். எல்லா அடுக்குகளிலும் வெயில் அடிக்காத கூரை உடைய இடங்களில்    ஆசனங்கள் உள்ளன. வெளியே நிற்க விரும்பினாலும் நிற்க நிறைய இடம் உண்டு. மேல் அடுக்குக்குப் போனால் முழுவதும் திறந்த வெளி; ஆனால் முழுக்க முழுக்க வெயிலும் அடிக்கும்.

நாங்கள் எங்கள் பயணத்தில் 31-1-2025 அன்று நான்கு டால்பின்களைப் பார்த்தோம். முன்னரே கடற்கரையிலுள்ள ரெஸ்டாரண்ட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஏறினோம். இரண்டு மணி நேரத்துக்குள் கப்பலில் திரும்பி வந்தோம்.

THE DOLPHIN WE SAW FROM THE FERRY

போகும் வழியெல்லாம் அலைவீசும் பசிபிக் சமுத்திரத்தையும் நூற்றுக்கணக்கான கப்பல்களையும் , பெரி FERRY படகுகளையும் பார்த்துக் கொண்டே போனோம். பெரி கப்பல் ஓரிடத்தை அடைந்தவுடன் கடலில் குளிக்க விரும்புவோர் திறந்த வெளி டெக்குக்கு வாருங்கள் என்று  அறிவித்தார்கள் ; எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளவெட்டுகளும் பேரக் குழந்தைகளும் கடலில் குளிக்க ஆயத்த மாயினர். கப்பலின் பின்புறத்தில் பெரிய வலையைக் கட்டியுள்ளனர். அது மூன்று அடி வேலி உடையது . அதில் குதித்தவுடன் முழங்கால் அளவு கடல் நீர் இருக்கும் ; அதில் ஒரே நேரத்தில் பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கிக் கொட்டமடிப்பார்கள் . நடுக்கடலில் கப்பலிலே கடல் நீரில் மிதக்க, நீந்த, குளிக்க அற்புதமான ஏற்பாடு! பாதுகாப்புக்காக இரண்டு ஊழியர்கள் அருகிலேயே நிற்பார்கள்[ எல்லோரும் குளித்து முடிந்தவுடன் மேல் டெக்குக்குப் போய் வெய்யிலில் நின்றால் கப்பல் திரும்பும் முன்னர்  நீச்சல் உடைகள் காய்ந்து விடும்.

ஆக ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!!!

1.பெரி FERRY கப்பல் பயணம் – பசிபிக் மஹா சமுத்திர தரிசனம்

2.டால்பின் என்னும் கடல் வாழ் மிருகங்களின் காட்சி

3.நடுக்கடலில் கப்பலி ல் உள்ள வலைக்குள் குளிக்கும் அரிய வாய்ப்பு

****

நெல்சன் பே என்னும் இடம் எங்கே உள்ளது ?

சிட்னியிலிருந்து புறப்பட்டு 220 கிலோமீட்டர் பயணம் செய்ய இரண்டரை மணி ஆகும்; வழியில் காப்பிக்கு நிறுத்தினால் அரை மணி நேரத்தைக் கூட்டிக் கொள்க . நியூகாஸில் என்னும் நக ரினைக் கடந்த ஒரு மணி நேரத்தில் Nelson Bay நெல்சன் வளைகுடாவில் இருப்போம். நாங்கள் போர்ட் ஸ்டிவன் என்னும் ஊரில் தங்கினோம். பத்து நிமிடத்தில் கப்பல் துறையை அடைந்தோம். போர்ட் ஸ்டிவன்ஸ் ஊரை ஒட்டி நிறைய கடற்கரைகள் உள;  மணிக்கணக்கில் கடல் அலையில் காலை நினைத்தோம் அலைந்தோம்; பேரக் குழந்தைகளும் இளம் சிட்டுகளும் நீச்சல், மணல் வீடு கட்டல், சங்கு கிளிஞல் சேகரித்தல் முதலியவற்றில் இறங்கினர். எதிர்ப்புறமுள்ள காப்பிக் கடைகளில் TAKE AWAY டேக் அவே வாங்கி வாடகை வீட்டில் சாப்பிட்டோம். 

நெல்சன் வளைகுடா வட்டாரத்தில் bottlenose dolphins 150   பாட்டில்னோஸ் டால்பின்கள் வசிக்கின்றன. வருடம் முழுவதும் பார்க்கலாம்.

திமிங்கிலங்களைப் , humpback whales பார்க்க வேண்டுமானால்  மே  மாதம் முதல் நவம்பர் மாதம் வரை  உள்ள சீசனில் போக வேண்டும் அப்போது அவை இடம் விட்டு இடம் போகும் குடியேற்ற காலம் ஆகும்.

LONDON SWAMINATHAN IN NELSON BAY, AUSTRALIA

கடற் குளியல்,   பீச்சில் உலாவுதல், டால்பின்/ திமிங்கில காட்சிகளை விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்  நெல்சன் பே.

பையில் கனம் (பணம்)  இருந்தால் பயணம் செய்க.

—subham—

Tags- டால்பின் ,நெல்சன் வளைகுடா, எனது பயணம்,

ஆஸ்திரேலியா, அதிசயம் , பாருங்கள்! Part 18

Leave a comment

Leave a comment