ஆதிவாசி மொழி சொற்கள் -சிட்னி மியூசியத்துக்கு விஜயம்-29 (Post.14,247)

Written by London Swaminathan

Post No. 14,247

Date uploaded in Sydney, Australia – 26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

சிட்னியில் இலவசமாகப் பார்க்கக்கூடிய கடைசி மியூசியத்தையும் பார்த்துவிட இன்று பிப்ரவரி 26-ஆம் தேதி (2025) சென்றேன் ஆனால் ஓவியங்கள் படங்கள் இல்லை. ஆதிவாசிகள் மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றைக் கூறும் டாக்குமெண்டரி படங்கள் மட்டும் மூன்று அறைகளில் ஓடிக்கொண்டிருந்தன. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். அவைகளில்  ஆதிவாசிகளின் வாழ்க்கை பற்றிய பாறை வரைபடங்கள், கிறுக்கல்கள் மூலம் விளக்கினார்கள் ; ஆஸ்திரேலியக் குடியேற்றத்தின்போது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த தாவரங்களை படங்களுடன் விளக்கும் டாக்குமெண்டரி படமுமிருந்தது.

அந்தக்கால கப்பல்களின் மாடல் வடிவங்களும் காட்சியில் இருந்தன.

நான் கண்ட சுவையான விஷயம் ஆதிவாசிகளின் மொழி பற்றி அவர்கள் கொடுத்த அட்டைப்படம் ஆகும். மியூசியம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன. மக்கள் பேசிய சொற்கள் அந்த அட்டையில் உள. அவைகளைக் கீழே கொடுக்கிறேன். மொழியியல் அறிவு படைத்தோர் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் அந்த சொற்களுடன் எந்த தொடர்புமில்லை என்பதை அறிவார்கள்

The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”

ஆஸ்திரேலியாவில் 250 ஆதிவாசி இனங்கள் இருப்பதை நாம் அறிவோம்; சிட்னி நகர் இப்போதுள்ள இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இனம் இயோரா எனப்படும். இயோரா என்றால் மக்கள் அல்லது இந்த இடத்திலிருந்து என்று பொருள்.

இதோ அந்த இனத்தினர் பேசிய சொற்களின் பட்டியல் :

பமல்- பூமி, களிமண், நிலம்

நாங்கமாய்- கனவு

வருவி- பெண்

பங்களா – கூடை

குவிங்- சூரியன்

டையினுராகங் – கிழவி

முருங்கல்- இடி முழக்கம்

கானிங்- குகை

இங்கரமாங்- ஒருவகை நடனம்

கயநாயங்-கிழவன்

புருவா -மேகம்

நுவி- படகு

உங்கர்ரா – பையன்

பரா- மீன்பிடி தூண்டில்

குணங்- ஈட்டி

அரிக்கராங்- கடல்

வர்ராவல்- பால்வெளி மண்டலம்

முங்கி – மின்னல்

துருகா – விண்கல், எரி நடச்சத்திரம்

டிஜனாபா- சிரிப்பு

கரட்டியகாந்- டாக்டர், புத்திசாலி

புருவங்- தீவு

****

எனது கருத்து

பெரும்பாலான சொற்கள் இங் ஒலியில்  முடிவத்தைக் கவனிக்கவும் மேலும் பல சொற்கள்  முடிகின்றன.

எடுத்துக்காட்டு– பார்ரமேட்டா , வருங்கா வைத்தாரா

இன்னும் ஒரு குறிப்பு – ர்ரா ஒலி

மொத்தத்தில் பழ ங்குடி மக்களின் சொற்கள் ங்ர்ரா,  ஒலியில் முடிகின்றன .

இந்தியாவில் வடகிழக்கு மாநில மொழிகள் இங் சப்தத்தில் முடிவதை ஒப்பிடலாம்

ஷில்லாங், கடுங், டனானங் etc

இது சீனா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியுள்ளன

எடுத்துக்காட்டு- பீகிங் , டா நாங்

–subham—

Tags- ஆதிவாசி, மொழி சொற்கள்,  சிட்னி மியூசிய,  விஜயம் , ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

Leave a comment

Leave a comment