Post No. 14,248
Date uploaded in Sydney, Australia – –27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
விதியின் வலிமை!
ச. நாகராஜன்
சுபாஷித ஸ்லோகங்கள் வாழ்க்கைக்கு உதவும் பலவித விஷயங்களை சுவாரசியமாகத் தருபவை.
சிலவற்றை இங்குக் காண்போம்.
விதியும் முயற்சியும்
க்ருத: புருஷகார: சன் சோபி தைவேன சித்யதி |
ததாஸ்ய கர்மண: கர்துர: அபிநிர்வர்ததே பலம் ||
மனிதனின் இடைவிடா முயற்சி விதியினால் வெற்றி அடைகிறது.
விதியினாலேயே ஒருவன் ஒருவன் இடைவிடாமல் உழைத்து வெற்றியை அடைகிறான்.
விதி தனித்து பலன் தராது!
க்ருத: புருஷகாரஸ் து தைவ மேவானுவர்ததே |
ந தைவமக்ருதே கிஞ்சித் கஸ்யவித் தாதுமர்ஹதி ||
மனிதனின் சக்தியானது இடைவிடா முயற்சியினால் விதியையே பின்பற்றுகிறது; ஆனால் முயற்சி வேண்டி இருக்கும் போது விதி தனித்து எந்த வித பலனையும் தராது.
கர்மங்களின் விளைவுகளை எப்போது அனுபவிக்கவேண்டி வரும்?
க்ருதகர்மக்ஷயோ நாஸ்தி கல்பகோடி ஷதைரபி |
அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ||
ஒரு மனிதன் செய்த கர்மங்களின் விளைவுகள் கோடி கல்பங்கள் சென்றாலும் அழியாது. ஒருவனது கர்மங்களின் விளைவுகளை அவை நல்லவையோ கெட்டவையோ அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.
கடமையைச் செய்த வேலைக்காரனுக்கு என்ன செய்ய வேண்டும்?
க்ருதக்ருத்யஸ்ய ப்ருத்யஸ்ய க்ருதம் நைவ ப்ரணாஷயேத் |
பலேன மனஸா வாசா த்ருஷ்ட்யா சைனம் ப்ரஹர்ஷயேத் ||
தனது கடமையைச் செய்த ஒரு வேலைக்காரனின் உழைப்பை நிச்சயமாகத் துன்பப்படும்படி விடக்கூடாது அவனது பணியை இதயபூர்வமாகவும் சொல்லினாலும் பார்வையினாலும் பாராட்டி அவனை மகிழ வைக்கவேண்டும்.
நூறு வருஷம் வாழ்வதை ஒரு நாள் எதைச் செய்வது மேலானது?
க்ருதகங்கோதகஸ்நானம் ச் ருதபாரதசத்கதம் |
அசிந்தாச்யுதபாதாப்ஜம் தினம் கல்பசதாத் வரம் ||
ஒரு நாள்
கங்கையில் ஸ்நானம் செய்வது,
மஹாபாரதக் கதையைக் கேட்பது
விஷ்ணுவின் பாதங்களை நமஸ்கரிப்பது ஆகியவை நூறு நூறு வருஷங்கள் வாழ்வதை விட மேலானது.
யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்?
க்ருதக்ஞம் தார்மிகம் சத்யம் அக்ஷுத்ரன் த்ருடபக்திகம் |
ஜிதேந்த்ரியம் ஸ்திதம் ஸ்தித்யாம் மித்ரமத்யாகி சேஷ்யதே ||
எவன் ஒருவன் நன்றி உள்ளவனாக இருக்கிறானோ, தார்மிகமாக இருக்கிறானோ, சத்யவாதியாக இருக்கிறானோ, பெரிய மனதுடன் இருக்கிறானோ, பக்தியுள்ளவனாக இருக்கிறானோ, தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தனது மரியாதை,மதிப்பைக் காத்து வைத்திருக்கிறானோ, ஒருபொழுதும் நண்பனைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனையே நண்பனாகக் கொள்ள வேண்டும்.
எப்போது ஒருவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது?
க்ருதஞஸ்வாமிஸம்சர்கம் உத்தமஸ்த்ரீ பரிக்ரஹம் |
குர்தன் மித்ரலோபம் ச நரோ நைவாதசோந்ததி ||
ஒரு பெரும் மகானின் தொடர்பு, ஒரு கற்புள்ள மனைவியைத் திருமணம் செய்து கொள்வது, பேராசை இல்லாத ஒருவனை நண்பனாகக் கொள்வது ஆகிய இவற்றை எவன் ஒருவன் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது!
***