Hindu Crossword25225 (Post No.14,243)

Written by London Swaminathan

Post No. 14,243

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across

1.Holiest Hindu book from Kurukshetra

5. In Sanskrit, “it means “water pot,” “bowl,” or a small pond, essentially referring to a vessel used to hold water; it can also signify “jasmine flower” depending on context. 

6. 1) Burning, combustion; ओषमित् पृथिवीमहम् (oṣamit pṛthivīmaham) Ṛgveda 1.119.1.

2) Cooking, baking.

8. 1) A wave, billow; पयो वेत्रवत्याश्चलोर्मि (payo vetravatyāścalormi) Meghadūta 24; R.5.61,12.85.

2) Current, flow.; girls’ name

9. proficient, adept, expert; also boys’ name

11. a kind of pulse; black gram, Dolichos pilosus..main ingredient of Idli, Dosa and Vada

12. One of the Three Powers; other two being Gnan and Kriya Shakti

Down

1…… sage was one of the seven great sages, the SaptaRishis. He is a ManasaPutra (wish-born-son) of Lord Brahma. His father is Brahma, who simply wished him into existence, to assist in the process of creation. He is married to Khyati, the daughter of Daksha. He has two sons by her, named Dhata and Vidhata.

2.  is a multifaceted goddess in various traditions, primarily revered in Hinduism as another name for Parvati, the divine consort of Lord Shiva. Also A young girl eight years old

3. A tapasvinī famed in Ṛgveda. She was the grand-daughter of Dṛgata maharṣi and daughter of sage Kakṣīvān. As she contracted leprosy in her very childhood nobody came forward to marry her. Ultimately she composed a mantra in praise of Aśvinīdevas. They cured xxxxxxx of leprosy and she got married. (Ṛgveda, Maṇḍala 1, Anuvāka 7, Sūkta 117).

4. this Kashmiri  town name was mentioned in the Nilamata Purana and other texts. According to the Gazetteer of Kashmir and Ladak, it is named after xxxxx the great serpent of Vishnu and the emblem of eternity.  Later it was distorted to endless spring during Muslim rule.

7.fried spicy doughnut of Tamils ↑

10.Sanskrit meaning- sound, shrieking;howling, roaring; Hindi meaning Semolina with which Dosa and Kesari made.

13.Goddess; English word SIR and Tamil word THIRU derived from it according to Linguists↑

25225

1  2    3  4
            
  5     6   
      7 ↑     
8           
      910    
11           
            
 12     13      

25225

B1HAG2AVADG3ITA4
R  A  D H  N
I K5UNDA O6SHA
G  R  V7 ↑ S  N
U8RMIR   H  T
M     P9R10AVIN
U11RAD I A   A
N    R V   G
I 12CCHAS 13HAKTI 

–subham—

Tags– Hindu Crossword25225

தமிழ் தெரியுமா25225 ? – (Post No.14,242)

Written by London Swaminathan

Post No. 14,242

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளையும் பின்பற்றுக.

25225

1  2 3   
         
    4←    
       5↑←6
  7  8   
  ↑ 9 ←   10 

குறுக்கே

1.தமிழ் இசை பாடியவர்; நடிகர்; அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறை அறிஞர்;

4. போகரின் சீடர்; பழனியில் சமாதி அடைந்த சித்தர் ←

4.அழுகிய பழங்களில் நெளியும்;

6.நளவெண்பா பாடிய புலவர்,

7.பவளம்←

9. பத்து தலை அரக்கன்  ←

10.கிளி பச்சை வண்ணம் மாங்காய் மூக்குப் அறவை;      வது மணமகள் ↑, ராகி

கீழே

1. பூமியைத் தாங்கிய திருமால்; 

2.இப்போதைய பெயர் பாட்னா; தாவரத்துக்கும் பெயர்  

3. கம்பர் பிறந்த ஊர்; ஆமருவியப்பன் கோவில்; 

5. பொன்னியின் செல்வன் ஆசிரியர்;

6.நீரின் பெயர் உடைய ஊர்; கல்லடா நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள மிகப்பெரிய தொங்கு பாலம் உள்ள இடம் ↑  

8. இதை வாறினால் குளங்கள் ஏரிகள் கிணறுகள் ஆழமாக இருக்கும்;

 9.கேழ்வரகின் பெயர் ↑   

*************

விடைகள்

த1ண்பா2ணிதே3சிர்
     லூ
ணிபாப்லிபு 4←ழு  
   திந்ழேக5பு↑←6
 து7கிர்தூ8 ல் 
ன்வ↑↑ 9 ரா← ர் கி10ளி

—subham—-

 Tags-தமிழ் தெரியுமா25225

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் அற்புத நூல் (Post No.14,241)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,241

Date uploaded in Sydney, Australia – –25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-2-25 அன்று கல்கிஆன் லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

MOTIVATION

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் அற்புத நூல்: Be Useful: Seven Tools  for Life 

ச. நாகராஜன்

 முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு முக்கிய நூல் ‘பீ யூஸ்ஃபுல்: செவன் டூல்ஸ் ஃபார் லைஃப்’ (Be Useful: Seven Tools for Life.)

இதை எழுதியவர் உலகின் ஆகப்பெரும் பாடிபில்டரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.

1947ம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த  ஸ்வார்ஸ்னேக்கர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் கழிப்பறை கூடக் கிடையாது.

ஆனால் படிப்படியாக உயர்ந்து ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் ஆனார். பின்னால் கலிபோர்னியா மாநிலத்தில் கவர்னராகப் பொறுப்பேற்றார்.

கின்னஸ் ரிகார்டில் உடலை நன்கு பேணும் பாடிபில்டர் என்ற புகழைப் பெற்றார்.

சிறு வயதில் ரெக் பார்க் என்ற பிரிட்டிஷ் பாடிபில்டர் பற்றி அவர் படித்தார். அவரால்  வாழ்க்கையில் ஒரு தெளிவான பார்வையைப் பெற்று, விடாமுயற்சியால் பெரிய பாடிபில்டர் ஆனார். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வெய்ட் லிப்டிங் பயிற்சியை விடாது செய்வார்.

தனது சொந்த அனுபவத்தினால் வாழ்க்கையில் உயர ஏழு கருவிகளை (விதிகளை) இவர் தருகிறார்.

ஏழு கருவிகள் எவை தெரியுமா?

  1. Have a clear vision.
  2. Never think small.
  3. Work your ass off.
  4. Sell, sell, sell.
  5. Shift gears.
  6. Shut your mouth, open your mind.
  7. Break your mirrors.

1.      தெளிவான பார்வை தேவை!

குறிப்பிட்ட குறிக்கோளைத் தெளிவாகக் கொள்ள வேண்டும். மனச்சித்திரத்தில் அதைக் கொண்டு அதனால் எப்போதும் உத்வேகம் பெற வேண்டும். அடிக்கடி அதை மதிப்பீடு செய்து வர வேண்டும். ஒரு போர்டில் குறிப்பிட்ட குறிக்கோளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.      பெரிதாக நினைசிறிதாக நினைக்காதே!

சந்தேகப்பேர்வழிகளையும் ஊக்கத்தைக் கெடுப்பவர்களையும் உங்கள் அருகில் அண்ட விடாதீர்கள். நெகடிவ் பர்ஸனாலிடி எனப்படும் எதிர்மறையாகப் பேசுவோர் ஆபத்தானவர்கள். ஆகவே நம்மைச் சுற்றி எப்போதும் ஆக்கபூர்வமாகப் பேசி ஊக்கமளிப்பவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய வெற்றி பெற்றால் கூட அதைக் கொண்டாட வேண்டும்.

3.        உழைத்து முன்னேறு!

உழைப்பு, உழைப்பு. கடும் உழைப்பு தேவை.

பாடிபில்டர்; மிக அதிக சம்பளத்தைப் பெற்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்; கலிபோர்னியா கவர்னர் – இதெல்லாம் எப்படி சாத்தியம். ஒரே வார்த்தை – உழைப்பினால் தான்!

4.        விளம்பரமும் தேவை தான்!

தன்னைத் தானே சமுதாயத்தில் உயர்த்திக் கொள்ள போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது. 19 வயதில் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாவதாக வந்த அர்னால்ட்,, மீடியாவைத் தன் பக்கம் இழுக்க நீச்சல்உடை அணிந்து போஸ் கொடுத்தார்.

அவ்வளவு தான் அன்றிலிருந்து மீடியா அவர் பக்கம். இந்த ஸ்டண்டும் தேவை தான். தன்னைத் தானே பல்வேறு விதங்களில் முன்னிலைப் படுத்திக் கொள்வது இன்றியமையாதது.

30 நாட்களில் 30 நகருக்குப் பயணம் செய்தார் அவர்! எதற்காக? அவரது ‘அர்னால்ட் – தி எஜுகேஷன் ஆஃப் எ பாடிபில்டர்’ என்ற தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த! விளைவு? அவரது புத்தகம் 2,50,000 காப்பிகள் விற்று புத்தகப் பதிப்பாளரையே அதிர வைத்தது!

சமூக ஊடகங்களை ஒரு போதும் விடாதே; விளம்பரம் செய்து கொண்டே இரு; வாய்ப்புகளைக் கவனி- பயன்படுத்து! இது தான் அவர் வழி!

5.        ஷிப்ட் கியர்ஸ்!

தோல்வியைக் கண்டு பயப்படாதே. தோல்விக்கான காரணங்களைப் பற்றிப் புகார் செய்வதை விட்டுவிட்டு அவற்றை எப்படி மீறி முன்னேறுவது என்பதை யோசி! தோல்வியில் நிறையக் கற்றுக் கொள் – திருப்பி எழுவேன் என்று உறுதி செய்து கொள்!

6.வாயை மூடுமனதைத் திற!

ஒரு கடல்பஞ்சு போல இரு. அதிகமதிகம் அறிவைப் பெறு. பேசுவதை விட கேட்பதை அதிகமாக்கு!

7.        கண்ணாடியை உடை!

அர்னால்டின் மாமனார் அவருக்குக் கூறிய புத்திமதி இது : உனது கண்ணாடியை உடை!

அதாவது இந்த சமூகத்தில் அனைவரும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அதை விட்டு விட்டு நீ வாழும் சமூகத்திற்குச் சேவை செய்; கண்ணாடிக் கூண்டை உடைத்து வெளியே வா, என்பது அவர் கொள்கை!

சுற்றுப்புறச் சூழலில் அதிக அக்கறை கொண்டு அதற்காக வெகுவாகப் பாடுபட்டு வருகிறார் அர்னால்ட்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்…..

நான்கே வார்த்தைகளில் அர்னால்ட் தனது மந்திரக் கொள்கையை வலியுறுத்தி விடுகிறார் : STAY BUSY; BE USEFUL – சுறுசுறுப்பாய் இருபயனுள்ளவனாக இரு!

போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல இவை!

சொந்த அனுபவத்தில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கூறும் அனுபவ வார்த்தைகள்!

அருமையான நூல்! படிப்பதற்கு மட்டும் அல்ல; பயன்படுத்தவும் தான்!

புத்தக விலை அமெரிக்க டாலர்கள் $ 18-17

(Second hand book) பயன்படுத்தப்பட்ட புத்தகம் அமெரிக்க டாலர்கள் $2-88

பக்கங்கள் 288

***

மார்ச் 2025 காலண்டர்; புரந்தரதாசர் பொன்மொழிகள் (Post No.14,240)

Written by London Swaminathan

Post No. 14,240

Date uploaded in Sydney, Australia – 24 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2025 மார்ச் மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

08 –      உலக மகளிர் தினம்12 –மாசி மகம்; 14-காரடையான் நோன்பு ஹோலி30யுகாதி31 – ரம்ஜான் ,

9/10 , 25/26    ஏகாதசி விரதம்; 14-பௌர்ணமி ; 29-அமாவாசை.

2025 மார்ச் மாத முகூர்த்த தினங்கள்

மார்ச் 2 ஞாயிறு, 3 திங்கள், 9 ஞாயிறு, 10 திங்கள், 12 புதன், 16 ஞாயிறு, 17 திங்கள்.

வட இந்திய சம்பிரதாயப்படி- 12,6,712

Here are auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:

1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),

6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),

12th March 2025 (Wednesday).

****

Thanks to dasar-songs.blogspot.com for rendering great songs of Purandara dasa in Tamil. இவை அனைத்தும் வேறு ஒரு வெப்சைட்டில் கண்ட மொழிபெயர்ப்பு; யார் மொழி பெயர்த்தார்கள் என்ற பெயர் இல்லை; அவர்களுக்கு நன்றி உரித்தாகுக

****

மார்ச் 1 சனிக்கிழமை,  

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே

கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

இந்த (கீழ்க்கண்ட) சிறப்புகளை வேறு எந்த தேவரிடத்திலும் நான் கண்டதில்லை;கோபியர்களின் மனங்களைக் கவர்ந்த கோபாலனைத் தவிர (ஈ பரிய)

****

மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை

தொரெயதனதலி நோடே தரணிதேவிகே ரமணா

சிரியதனதலி நோடே ஸ்ரீகாந்தனு

ஹிரியதனதலி நோடே சரசிஜோத்பவனய்யா

குருவுதனதலி நோடே ஜகதாதி குருவு (ஈ பரிய)

முதலாளிகளில் யார் பெரிய முதலாளி என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே முதலாளி

செல்வந்தர்களில் யார் பெரிய செல்வந்தர் என்று பார்த்தால் இவர் இலக்குமிக்கே கணவன்

மூத்தவர்களில் யார் மூத்தவர் என்று பார்த்தால் இவர் பிரம்மாவிற்கே தந்தை

ஆசான்களில் யார் பெரிய ஆசான் என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே ஆசான் (ஈ பரிய)

****

மார்ச் 3 திங்கட்கிழமை

பாவனத்வதி நோடே அமர கங்கா ஜனக

தேவத்வததி நோடே திவிஜரொடெயா

லாவண்யதலி நோடே லோகமோஹகனய்யா

ஆவ தைர்யதி நோடே அசுராந்தகா (ஈ பரிய)

புனிதர்களில் யார் மிகப் புனிதர் என்று பார்த்தால் இவர் புனிதமான கங்கையின் தந்தை

தேவர்களில் யார் பெரியவர் என்று பார்த்தால் இவர் தேவாதி தேவர்

அழகானவர்களில் யார் சிறந்தவர் என்று பார்த்தால், இவர் உலகத்தையே மயக்குபவர்

தைரியமானவர்களில் யார் மேலானவர் என்று பார்த்தால், இவர் பல அசுரர்களையே வென்றவர்

****

மார்ச் 4 செவ்வாய்க்கிழமை  

ககனதலி சஞ்சரிப கருட தேவனே துரக

ஜகதீதரசேஷ பரியங்க சயன

நிகம கோசர புரந்தர விட்டலகல்லதே

மிகிலாத தைவகளிகே ஈ பாக்யவுண்டே (ஈ பரிய)

வானத்திலேயே பறக்கும் கருட தேவனே இவனது வாகனம்

சேஷமே இவனது வாகனம்

வேதங்களில் பாடப்பட்டிருக்கும் இந்த புரந்தரவிட்டலனைத் தவிர

(மேலே சொன்ன) இந்த தகுதிகள் வேறு யாருக்கு உண்டு? யாருக்கும் இல்லை (ஈ பரிய)

**********

மார்ச் 5 புதன்கிழமை

தாள பேகு பக்க மேள பேகு

சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்

அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

****

மார்ச் 6 வியாழக்கிழமை

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு

களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;

(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்

(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்

(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 7 வெள்ளிக்கிழமை

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு

ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;

(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;

ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 8 சனிக்கிழமை,  

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு

புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;

(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்

புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

மார்ச் 9 ஞாயிற்றுக்கிழமை

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன

யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?

(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

****

மார்ச் 10 திங்கட்கிழமை

கோபால கிருஷ்னன பாப விநாசன

ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை

இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

****

மார்ச் 11 செவ்வாய்க்கிழமை  

வேணு விநோதன ப்ராண ப்ரியன

ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை

நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

****

மார்ச் 12 புதன்கிழமை

கரிராஜ வரதன பரம புருஷன

புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை

புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

*****

 மார்ச் 13 வியாழக்கிழமை

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி

நித்ய தானவ மாடி பலவேனு

சத்ய சதாசார இல்லதவனு ஜப

ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு

தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?

உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்

பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

****

மார்ச் 14 வெள்ளிக்கிழமை

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி

சின்ன தானவ மாடி பலவேனு

பின்னானந்ததலி தேசதேசவ திருகி

அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு

செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?

பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்

அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

****

மார்ச் 15 சனிக்கிழமை,  

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு

கானனதொளகித்து பலவேனு

ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன

நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது

(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?

நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை

நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு

பயமும் எதுக்கய்யா

ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

****

மார்ச் 17 திங்கட்கிழமை

கனசல்லி மனசல்லி களவளவாதரெ

ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)

ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 18 செவ்வாய்க்கிழமை  

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித

பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த

பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 19 புதன்கிழமை

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ

குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்

குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

****

மார்ச் 20 வியாழக்கிழமை

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா

ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை

ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

****

மார்ச் 21 வெள்ளிக்கிழமை

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு

மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா

ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு

(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே

(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்

உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 22 சனிக்கிழமை,  

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே

குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி

ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக

புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்

(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே

நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது

நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு

குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி

கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக

நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது

சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே

யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது

உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

****

மார்ச் 24 திங்கட்கிழமை

ஆச்சாரவில்லத நாலிகே

நின்ன நீச புத்திய பிடு நாலிகே

விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே

சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே

உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே

(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக

வெளியில் வருகிறாயே நாக்கே

***

மார்ச் 25 செவ்வாய்க்கிழமை

ப்ராத: காலதொள் எத்து நாலிகே

ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே

பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன

சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே

ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே

அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)

எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 26 புதன்கிழமை

சாடி ஹேளலு பேடா நாலிகே

நின்ன பேடிகொம்பேனு நாலிகே

ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ

பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே

உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே

இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை

பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 27 வியாழக்கிழமை

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே

நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே

வரத புரந்தர விட்டலராயன

சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே

நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே

வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்

பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 28 வெள்ளிக்கிழமை

கோவிந்தா நின்ன நாமவே சந்தா

கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

****

மார்ச் 29 சனிக்கிழமை,  

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா

நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா ;மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா

பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா

பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன

ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா

(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்

பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை

(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 31 திங்கட்கிழமை

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

—Subham—

Tags- 2025 மார்ச் மாத காலண்டர், புரந்தரதாசர் ,கீர்த்தனைகள் ,பொன்மொழிகள்

GNANAMAYAM 23-2-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

23-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London


PRAYER BY MISS DIKSHA MURALI

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Pandharpur Temple

***

SPECIAL TALK BY SINGAPORE DR RAJI SRINIVASAN Ph.D

Topic – Maanava Seva is Maheswara Seva (Service to men leads to God)

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

செல்வி  திக்ஷா  முரளி

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்கியவர்  திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  பண்டரிபுரம் ஆலயம்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு தலைப்பு

இறைவனைச் சென்றடையச் சிறந்தவழி தொண்டு செய்வதே !

சொற்பொழிவாளரை லண்டன் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தினார்.

(மானவ சேவை= மாதவ  சேவை ; மக்கள் சேவை= மகேஸ்வரன் சேவை)

****

முனைவர் ராஜேஸ்வரி ஸ்ரீநிவாசன் Ph.D. ,சிங்கப்பூர்

முனைவர் ராஜேஸ்வரி ஸ்ரீநிவாசன் என்கிற ராஜி ஸ்ரீநிவாசன் 1300 பட்டிமன்றங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கு மேல் படைத்தவர். “பல்திறன் வித்தகி” “தமிழ்ச் செம்மல்”. “தமிழ் மாமணி”, “திருக்குறள் ஆய்வு நெறிச் செம்மல்”, “தமிழ்த் தொண்டர்” போன்ற “ எண்ணற்ற விருதுகள் பெற்றவர். பன்னாட்டு தலைமைத்துவப் பண்புக்கான விருதையும் பெற்றவர். நடுவராகவும், பேச்சாளராகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். இரு மொழியில் Monoacting எனப்படும் தனி நடிப்பாளர். இரு மொழி எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஆங்கிலத்தில் Ph.D மற்றும் TESOL பட்டங்கள் பெற்று 30 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராக பணி புரிந்தவர். நீதிமன்றத்தில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்ப்பாளர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழில் உடனடி மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிகிறார்., மொழி பெயர்ப்பு மற்றும் பல்கலைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். MASTERS ACADEMY OF SPEECH AND TRAINING, MAST என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் நிறுவனர். இரு மொழிகளில் அனைத்து வயது மாணவர்களுக்குமான ஒப்படைப்பு, ஆராய்ச்சி மற்றும் பேச்சுப் பயிலரங்கங்கள், ஆளுமைப் பயிலரங்குகள் வழி பயிற்சி அளிக்கிறார். உலக அளவில் பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வட்ட மேசை மாநாடுகளையும் நடத்தி உள்ளார். தன்முனைப்புப் பேச்சு, ஆன்மீகச் சொற்பொழிவுகள் போன்றவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்..

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM 23-2-2025 BROADCAST , summary

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  23-2-2025 (Post N.14,239)

Written by London Swaminathan

Post No. 14,239

Date uploaded in Sydney, Australia – 24 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 23- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு

Collected from popular newspapers and edited for broadcast.

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

55 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இப்போது வரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.


குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மவுனி அமாவாசை தினத்தில் 8 கோடி பக்தர்களும், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், ஜனவரி 30 அன்று 1.7 கோடி பேரும், பிப்ரவரி 1 அன்று 2 கோடி பேரும் புனித நீராடினர். பிப்ரவரி 2 ஆம் தேதியான வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பேரும், மாக் பூர்ணிமா தினமான பிப்.12 அன்று இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்கள் எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மகாகும்பமேளா திட்டமிட்டபடி பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் முடிவடையும்’ என பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர மந்தர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வருவாய்

உத்தர பிரதேசத்தில் புனித நீராடலுக்காக பக்தர்களை அழைத்து சென்று நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கல்லூரி மாணவ மாணவிகள் வருவாய் ஈட்டுகின்றனர். தினமும் கோடிக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த திருவிழாவில், மாணவ மாணவிகள் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு உதவி வருகின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்ட நெருக்கடியால், டாக்சி மற்றும் ரிக்சா சேவைகள் முடங்கியுள்ளன.இதனால், இரு சக்கர வாகன சேவையை கல்லூரி மாணவ மாணவிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதற்காக மோட்டார் சைக்கிள்கள் முதல் ஸ்கூட்டர்கள் வரை பயன்படுத்தும் அவர்கள், ஒரு சவாரிக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை கட்டண தொகையாக பெற்று கொள்கிறார்கள். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய்கிடைக்கிறது என பீட்டர் என்ற முதுநிலை மாணவர் கூறுகிறார். இவர்கள் மட்டுமினிறி லடாக்கில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் லால் பகதூர் என்பவர் கூட இந்த பணியில் இறங்கியுள்ளார்.

90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

பிரயாக்ராஜ்:பிப்.20- உத்தரப்பிரதேச மாநிலத்தில்  75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு, சிறைக் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில நீர் மேலாண்மை துறை செய்துள்ளது.

இதுகுறித்து மாநில சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீர் அனைத்து சிறைகளுக்கும் கொண்டுசெல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை நீர் மேலாண்மை துறை மேற்கொள்ளும். அவ்வாறு கொண்டுவரப்படும் புனித நீர் அந்தந்த சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டு, கைதிகள் அதில் நீராட அனுமதிக்கப்படுவர் என்று  கூறப்பட்டுள்ளது.

******

சிதம்பரம் கனகசபை வழக்கு: அறநிலையத்துறை ஐகோர்ட் உத்தரவு

அறநிலையத் துறை கனகசபையில் பக்தர்களை எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்தும், நெரிசலை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டம் வகுத்து தாக்கல் செய்யப்படும் என பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.செளந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ஆறுகால பூஜைகள் நடைபெறும் நேரங்கள் தவிர்த்து இடைப்பட்ட நேரத்தில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக சாய்தளப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ‘‘பக்தர்கள் கனகசபையில் நின்று நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதைவிடுத்து ஆறு கால பூஜை தவிர்த்து மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பதை ஏற்க முடியாது. அதேபோல தற்போது கனகசபைக்கு கிழக்குப் பகுதியில் வருபவர்கள் சுவாமி தரிசனம் முடித்து மேற்குப்பகுதியில் இறங்கி செல்லும் வகையில் கிழக்கு நுழைவாயிலை திறந்து ஒருவழிப்பாதையாக மாற்றினால் மட்டுமே கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் திறக்கப்படும் 11.30 மணி நேரத்தில் ஆறு கால பூஜைகள் மற்றும் பால், நைவேத்தியம் போன்ற பிற பூஜைகள் தினமும் 8.30 மணி நேரத்துக்கு நடைபெறும் எனவும், எஞ்சிய 3 மணி நேரம் மட்டும் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை கனகசபையில் அனுமதிக்கும் விதமாகவும், பக்தர்கள் ஒரே வழியில் சென்று திரும்புவதை தவிர்க்கும் விதமாகவும் கட்டிடக்கலை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து திட்டம் வகுத்து அதை பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச 6-க்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல அறநிலையத் துறையும் கனகசபையில் பக்தர்களை எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்தும், நெரிசலை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

*****

திருப்பதியில் சர்வதேச கோவில்கள் மாநாடு!

சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி இன்று (பிப்.17) திருப்பதியில் தொடங்கியது.

ஆன்மிக சுற்றுலாத்தலங்களை ஊக்குவிக்கும் நோக்கில், உலகளவில் பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெம்பிள் கனெக்ட் மற்றும் மும்பையை தளமாக கொண்ட அந்தியோதயா பிரதிஷ்டான் அறக்கட்டளை 58 நாடுகளில் உள்ள 1581 பக்தி நிறுவனங்களின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோவில்களின் மஹா கும்பமேளா என்றழைக்கப்படும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிப்.19ம் தேதி நிறைவு பெற றது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது; நாட்டின் வளர்ச்சியில் ஆன்மிக சுற்றுலாவுக்கு என சிறப்பு இடம் உண்டு. ஏ.ஐ. பற்றியே இப்போது அனைவரும் பேசுகின்றனர். நாம் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அடுத்தக்கட்ட நகர்வுக்கு நாம் நகர வேண்டும்.

ஆண்டு முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் நடைபெறும் பகுதி கோவில்கள். இந்தியாவின் கோவில் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடி ஆகும். மற்ற எந்த பொருளாதார செயல்பாடுகளுடன் ஒப்பிட்டாலும் கோவில் பொருளாதாரம் என்பது நாட்டின் மிகப்பெரியது என என்னால் கூற முடியும்.

கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தல், வழிபாட்டுடன் தொடர்புடைய நடைமுறைகள், கோவில்களை சுற்றி வளர்ந்து வரும் நகரத்தில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு செயல்பாடுகள் என 365 நாட்களிலும் இது நடக்கிறது. நாம் அனைவரும் இதில் ஈடுபடுகிறோம். பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நன்கொடை வழங்குகிறார்க   . அந்த நன்கொடை பணத்தை அவர்களின் விருப்பங்களுக்காக செலவிட வேண்டும்.

கோவில்களை நிர்வகிப்பதில் நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஏராளமான பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாயை காணிக்கையாக தருகின்றனர். அவற்றை நாம் ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துகிறோம்.

கடவுளுக்கு சேவை செய்வது என்பது அனைத்திலும் சிறந்தது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை திருப்பதி கோவில். ஆந்திராவில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வித வசதிகளும் செய்து தரப்படும்.

கோவில்களைச் சுற்றிலும் பசுமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 75 சதவீதம் பசுமை திருமலை பகுதியில் இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறோம். நமது கலாசாரத்தை பேணி பாதுகாப்பதில் கோவில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

2029ல் இந்தியா உலகில் 3வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் முதல் இரண்டில் ஒன்றாகவும் மாறும். 2047ல் இந்தியர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க உலகளாவிய சமூகமாக உருவெடுப்பார்கள். வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை வடிவமைக்க நமது வளமான பாரம்பரியங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வோம் என்றார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

****

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹரிஷ்குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்.

இந்தியா – பிலிப்பைன்ஸ் நட்புறவு உருவாகி 75 ஆண்டுகள் பவளவிழா காண்பதை ஒட்டி, ஷிஃபு நகரில் உள்ள யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி மற்றும் கலாச்சார விழா நடைபெற்றது.யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டேவிட் கே.பிள்ளை தலைமையிலும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர்

விஜி சந்தோசம் முன்னிலையிலும், உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் சிலை மற்றும் தமிழ், ஆங்கில திருக்குறள் நூல்கள் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன.

*****

மகா சிவராத்திரி: கன்னியாகுமரியில் பக்தி பரவசத்துடனான 110 கிமீ ‘சிவாலய ஓட்டம்

மகா சிவராத்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம் வரும் 25-ந் தேதி தொடங்குகிறது. சிவாலய ஓட்டத்துக்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மொத்தம் 110 கிமீ இந்த சிவாலய ஓட்டம் நடைபெறும்.

மகா சிவராத்திரி வரும் 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையில் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. சிவராத்திக்கு முந்தைய நாள் கன்னியாகுமரி முன்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் கோவிலில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களையும் சென்றடைந்து இறுதியாக திருநட்டாலம் சங்கரநாயனார் கோவிலில் முடிவடைவதுதான் இந்த சிவாலய ஓட்டம்

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். இந்த விரத காலத்தில் காலை. மாலை இருநேரங்களிலும் புனித நீராடி சிவாலயத்தில் வழிபாடு செய்வர்.

****

மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்

மயிலாடுதுறை:”தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே 3 முதல் 5ம் தேதி வரை சென்னை காட்டாங்கொளத்துாரில் நடைபெற உள்ளது,” என, தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டி:

செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப்பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவ செய்யும் நோக்கோடு தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 1984ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார்.

இந்நிறுவனம் சார்பில் இதுவரை, தருமபுரம், மலேஷியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை, தருமை ஆதீன சைவ சித்தாந்த மாலை நேர கல்லுாரியில் சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, சென்னை காட்டாங்கொளத்துாரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

‘சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்த பதிவுகள்’ எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மாநாட்டில், சைவ ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலை பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், கோவில் அறங்காவலர்கள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நைஜீரியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு கோவை மற்றும் 10க்கும் மேற்பட்ட நுால்கள் வெளியிடப்பட உள்ளன. முதற்கட்டமாக சிறப்பு மலர் குழு, கருத்தரங்க குழு, நுால் வெளியீட்டு குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று

தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.

****

திருப்பரங்குன்றத்தை போல துடியலூரிலும் எழுச்சி வரப்போகிறது – காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி!

கோவை துடியலூரில் தெருக்களில் தொழுகை நடத்துகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் எப்படி ஒரு எழுச்சி வந்ததோ அதேபோன்று ஒரு எழுச்சி துடியலூரிலும் வரப்போகிறது என கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

முக்கிய அம்சங்கள்:

துடியலூரில் தெருக்களில் தொழுகை நடத்துகிறார்கள்

திருப்பரங்குன்றத்தை போல துடியலூரிலும் எழுச்சி

இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம்

கோவையில் கடந்த 14ம் தேதி குண்டுவெடிப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம் பகுதியில் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்டது. அதில் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், துடியலூர் பகுதியில் ஆடு வெட்டினால் நாங்கள் பன்றியை வெட்டுவோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ் புரம் போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் மீது இரு மதத்தவர் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து இன்று மாலை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: இன்று நடக்கும் அரசாங்கம் இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு ஏழரை சனி பிடித்து இருக்கிறது. 2026 ல் இந்த ஏழரை சனி என்ன என்பதை காட்டும். கடந்த 24 ம் தேதி கூட பெரியார் திராவிட கழகத்தினர் நாமம் போட்டு ஒரு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் நகல் கூட கொடுக்கவில்லை. இந்து முன்னணி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி இருக்கிறார்கள். அதற்கும் புகார் கொடுத்து இருக்கிறோம். அதன் மீதும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோவை துடியலூர் முத்துச்சாமி கவுண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை தோறும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்கள் சேர்ந்து தொழுகை நடத்துகிறார்கள். பல முறை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறோம். அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 14 ம் தேதி நடந்த கூட்டத்தில் நான் கூறி இருந்தேன். அதற்காக வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இரவு ஒரு மணிக்கு வீட்டில் வந்து நோட்டீஸ் ஒட்டி சென்றதாக தெரிவித்தார்.

இதை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன். திருப்பரங்குன்றத்தில் எப்படி ஒரு எழுச்சி வந்ததோ அதேபோன்று ஒரு எழுச்சி துடியலூரிலும் வரப்போகிறது. அதற்காகத் தான் அரசாங்கம் முயற்சி செய்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாளும் விசாரணைக்கு வரக் கூறியுள்ளனர். வந்த பிறகு தான் எதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்தார்.

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

மார்ச் மாதம் இரண்டாம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

Tags- ஞானமயம் உலக இந்துமத செய்தி மடல் , 23-2-2025

ஆலயம் அறிவோம்! பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயம் (Post No.14,238)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,238

Date uploaded in Sydney, Australia — 24 February 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயம்

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஜெய் ஜெய் விட்டலா ஜெய ஹரி விட்டலா

பாண்டுரங்க விட்டலா பண்டரிபுர விட்டலா

ஜெய் ஜெய் விட்டலா ஜெய ஹரி விட்டலா

பாண்டுரங்க விட்டலா பண்டரிபுர விட்டலா

         ஜெய் விட்டல் மஹராஜ் கீ ஜெய் 

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது மகராஷடிரத்தில் உள்ள புகழ்பெற்ற பண்டரிபுரம் திருத்தலமாகும். பந்தர்பூர் என்றும் இது அழைக்கப்படுகிறது

இத்திருத்தலம் சோலாபூரிலிருந்து 76 கிலோமீட்டர் தூரத்திலும் சாங்கியிலிருந்து 136 கிலோமீட்டர் தூரத்திலும் புனேயிலிருந்து 210 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இது சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. நதியின் வடகரையில் விட்டலன் கோவில் உள்ளது. நதியின் தென்கரையில் சங்குபாய் கோவில் உள்ளது. இங்கு சக்குபாய் மாவு அரைத்த இயந்திரம் உள்ளது. இங்கு படகு மூலம் செல்லலாம். சந்திரபாகா நதியில் யாத்ரீகர்கள் ஸ்நானம் செய்து பின் விட்டலனை தரிசனம் செய்கின்றனர்.

இறைவர் : பாண்டுரங்கப் பெருமாள்

இறைவி :  ருக்மாபாய்.

தீர்த்தம் :    சந்திரபாகா நதி மற்றும் கிருஷ்ண தீர்த்தம்

பண்டரி என்ற இடத்தில் நிற்பதால் இவருக்கு பண்டரிநாதன் என்று பெயர்.

ஈட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல்லின் மீது இவர் நிற்பதால் இடோபா என்ற பெயரையும் பெற்றார். இந்த இடோபா தான் விட்டலன் ஆனார்.

பண்டரிநாதன், பாண்டுரங்கன், விட்டல், விடோபா, விதுமாலி என பல பெயர்கள் இறைவனுக்கு உண்டு.

விட்டலன் என்ற பெயருக்கு துகாராம் மஹராஜ் அறிவு வடிவம் என்ற பொருளைத் தருகிறார். இன்னொரு அர்த்தப்படி ‘வி’ என்றால் கருடன் என்றும் ‘தோபா’ என்றால் அமர்ந்திருப்பவர் என்றும் பொருள் கொண்டு விட்டோபா என்றால் கருடன் மீது அமர்ந்திருப்பவர் என்ற அர்த்தம் பெறப்படுகிறது.

பண்டரிபுர கர்பக்ருஹத்தில் விட்டலன் மட்டும் காட்சி தருகிறார். ருக்மிணி மற்றும் சத்தியபாமா இல்லை.

இந்த ஒரே ஒரு திருத்தலத்தில் மட்டும் தான் பக்தர்கள் கர்பக்ருஹத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பாத ஸ்பரிச தரிசனம் என்ற ஒரு தரிசனம் இங்கு மட்டும் தான் உண்டு. அதாவது மேடையின் அடியில் குனிந்து இறைவனின் பாதத்தில் தங்கள் சிரத்தை வைத்து வழிபட முடியும்.

இங்கு வெளியேயும் உள்ளேயும் நான்கு வாயில்கள் உண்டு. கிழக்கு வாயிலுக்கு நாமதேவ் வாயில் என்று பெயர். கையில் தம்புராவுடன் உள்ள நாமதேவரின் பித்தளை சிலை இங்கு உள்ளது. பிரதான வாயிலின் வழியே நுழைந்தால்  மகாமண்டபத்தை அடையலாம். இங்கு தத்தாத்ரேயர் மற்றும் கணபதியை வணங்கி விட்டு அடுத்துள்ள அழகிய  மண்டபத்தைக் கடந்து கர்பக்ருஹத்தை அடையலாம்.

விட்டலனின் கொவிலுக்குள் 26 சிறிய கோவில்கள் உண்டு. நாமதேவ பயாரி, கணேஷ் மந்திரி, தத்தா மந்திர், கருட மந்திர், மாருதி மந்திர், சௌரங்கி தேவி மந்திர் என இப்படி பல கோவில்கள் உள்ளன.

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. ஜானு தேவர் சத்யவதி தம்பதிகளுக்குப் பிறந்த புண்டரீகன் என்னும் பெரும் பக்தன் பெற்றோர்கள் மீது மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவன். பகவான் அவனது பக்தியைச் சோதிக்க எண்ணினார்.

புண்டரீகன் வீட்டில் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்திற்காக இந்திரன் ஒரு செங்கல்லாக மாற்றி வைக்கப்பட்டிருந்தான்.

ஒரு நாள் பகவான் அவனது வீட்டிற்கு வந்தார். அப்போது புண்டரீகன் தன் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான். எனவே இந்திரன் செங்கல்லாக மாறி இருந்த அந்தக் கல்லைத் தூக்கிப் போட்டு அதன் மீது பகவானை சற்று நிற்குமாறு வேண்டினான்.

பகவானின் பாதம் பட்டதும் இந்திரன் சாப விமோசனம் பெற்றுத் தனது சுயரூபத்தை அடைந்தான். இந்திரன் பகவானைப் போற்றித் துதித்தான்.

தனது பணிவிடையை முடித்துக் கொண்டு வந்த புண்டரீகன் பகவானை தரிசித்துப் போற்றித் தொழுதான். விட்டலன் என்ற நாமத்துடன் அங்கேயே அவர் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.

அதன்படியே பகவான் விட்டலனாக இன்றளவும் அங்கு காட்சி தந்து அருள்கிறார்..

பண்டரிபுரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கோபால்பூரும் விஷ்ணுபாதமும் அமைந்துள்ளன.

பத்மபுராணம்,ஸ்கந்தபுராணம்  உள்ளிட்ட புராணங்களில் இதன் மகிமை விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது புஷ்கரத்தை விட மூன்று மடங்கும், கேதார்நாத்தை விட ஆறு மடங்கும், வாரணாசியை விட பத்து மடங்கும் ஶ்ரீ சைலத்தை விட பல மடங்கும்

அதிக மகிமை வாய்ந்தது என்று ஸ்கந்தபுராணத்தில் பார்வதிக்கு சிவபிரான் கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

ஆதி சங்கரர் இயற்றி அருளியுள்ள பாண்டுரங்க அஷ்டகம் பிரசித்தி பெற்ற அஷ்டகமாகும்.

புரந்தரதாசரைப் பற்றியும் இந்தக் கோவிலைப் பற்றியும் கூறும் ஏராளமான சம்பவங்கள் உள்ளன. புரந்தரதாசர் இங்கு ஒரு தூணின் அடியில் அமர்ந்து கிருஷ்ணரைப் பற்றியும் பாண்டுரங்கனைப் பற்றியும் ஏராளமான பாடல்களைப் பாடினார். இந்தத் தூணை ஆரத் தழுவினால் தங்கள் பாவம் போகும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்தத் தூணை பாண்டுரங்களை தரிசிப்பதற்கு முன்னர் தழுவிவிட்டுச் செல்வது வழக்கம்.

பெரும் மகானான கிருஷ்ன சைதன்யர் இங்கு விடோபா கோவிலில் ஏழு நாட்கள் இருந்தார். இன்னும் தியானேஷ்வர், பக்த துகாராம், ஏக்நாத், முக்தாபாய், மீராபாய் போன்ற ஏராளமான மகான்கள் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளனர்,

ஜூன்- ஜுலை (ஆஷாட) மாதத்தில் பத்து லட்சம் பக்தர்கள் இங்கு  வந்து திரளுகின்றனர்.

மகராஷ்டிர மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகரமாக பண்டரிபுரம் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பாண்டுரங்கனும் தேவி ருக்மிணியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

 TAGS– பண்டரிபுரம் ,பாண்டுரங்கன் ,ஆலயம்

கண்ணதாசனும் கல்கி வார இதழின் கடைசிப் பக்கமும்! (Post.14,237)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,237

Date uploaded in Sydney, Australia – –24 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 10-2-25 கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!

தமிழர் தம் கல்கி!

கண்ணதாசனும் கல்கி வார இதழின் கடைசிப் பக்கமும்! 

ச. நாகராஜன்

ராஜாஜியின் அழைப்பு

மூதறிஞர் ராஜாஜியிடமிருந்து  கல்கி ஆசிரியர் திரு கி.ராஜேந்திரனுக்கு அழைப்பு வந்தது. உடனே சென்று அவரைச் சந்தித்த கல்கி ஆசிரியரிடம் அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையைக் காண்பித்த அவர், “இது போன்றவை நமது பத்திரிகையில் அல்லவா வரவேண்டும்” என்றார்.

அவர் குறிப்பால் உணர்த்தியதை உடனே புரிந்து கொண்ட கல்கி ஆசிரியர் கண்ணதாசனைச் சந்திக்க கண்ணதாசன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

விளைவு – வாரந்தோறும் கல்கியின் கடைசிப் பக்கத்தில் கண்ணதாசன் தோற்றமளிக்கலானார்.

வித விதமான தோற்றம்!

மக்கள் பரவசமடைந்தனர்.

1976ல் கல்கியை வாங்குவோர் அனைவரும் முதல் பக்கமாகத் தேர்ந்தெடுத்தது கடைசிப் பக்கத்தை!

அதில் தன் எண்ணங்களைக் கொட்டித் தீர்த்தார் கவிஞர்.

இளைஞனுக்கு எச்சரிக்கை!

“இன்றைய இளைஞனுக்கு என்னுடைய வாழ்க்கை ஓர் எச்சரிக்கை! பழைய பண்பாடுகளை அவன் மறந்து விடக் கூடாது. புகை, மது போன்ற கொடிய பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது.”

இப்படி வரிசையாக அற்புதமான அறிவுரைகளை தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் வழங்கினார்.

எழுபது ஆண்டுகள் மட்டுமே இறைவனிடம் கேட்ட கவிஞர்!

‘கிருஷ்ணகாந்தன் பதிகம்’ என்ற தலைப்பில் அவர் தனது கவிதையை அழகுறப் பதிவு செய்தார் இப்படி:

சீராடும் நாற்பதும் நீரோடிப் போனபின்

    சிந்தையில் வந்து நின்றாய்

சென்றகா லங்களை எண்ணிஎன் கண்ணிலே

    சிறுமழை வீழ வைத்தாய்

காராரு மேனியாய ஐம்பதில் உன்னையான்

   கண்டனன் காதல் நாதா!

கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக்

   காத்தருள் கிருஷ்ண காந்தா!

என்று கண்ணனிடம் பணிவுடன் வேண்டினார்.

ஆனால் கண்ணனோ அவரை அதிகமாக நேசித்து விரைவில் தன் பக்கம் அழைத்துக் கொண்டான் – 54 வயதிலேயே! (தோற்றம்:24-6-1927 மறைவு: 17-10-1981) 

ஏறாதே! ஏறினால் இறங்காதே! 

பகவத்கீதை ஸ்லோகத்தை ஒரு கட்டுரையின் ஆரம்பத்தில் வைத்து விளக்கி விட்டு அவர் அறிவுரை வழங்கினார் இப்படி:

“ஏறாதே, ஏறினால் இறங்காதே! வீடு கட்டிப் பிரமாதமாக ‘கிரக பிரவேசம்’ நடத்தாதே; நடத்தினால் அதை விற்கின்ற நிலைமைக்கு வராதே. புதுத் தொழிலில் இறங்கிப் பழைய தொழிலை இழக்காதே. சமநிலையில் ஓடும் நதியைப் போல ஜாக்கிரதையாக இரு. விழுந்தால் விதை போல விழு; எழுந்தால் மரம் போல எழு.” 

என்ன அற்புதமான ஒரு அறிவுரை! இது போல எளிய சொற்களால் பெரிய உண்மைகளை வாரம் தோறும் வழங்கலானார் அவர். 

சாரமிருக்குதம்மா!

சாரமிருக்குதம்மா என்ற தலைப்பில் அவர் தந்த கவிதை:

தனிமை ஒரு தனிமை அதில் தத்துவங்கள் கோடி

இனிமைஇது இனிமைஎன இன்னிசைகள் பாடி

பனிமலர்கள் மயில்களுடன் பந்துவிளை யாடி

கனிவகைகள் உண்ணவொரு காலம் வரு மோடி!

        (காலம் வருமோடி   – காலம் வரும் ஓடி! காலம் வருமோடி?)

“ஆள் அரவமற்றதொரு அற்புத இடத்தை நாள் முழுதும் தேடி மனம் நாடி அலைகின்றேன்” என்ற கவிஞரின் தனிமை இரக்கம் இது!

சம்ஸ்கிருதக் கவிதை

கடைசிப் பக்கத்தில் ஒரு சம்ஸ்கிருத கவிதையைக் கூட இயற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் என்று ஆரம்பித்து 12வது வரியில் கீத போதகம் ஶ்ரீ கிருஷ்ண மந்திரம் என்று அற்புதமாக முடித்தார்.

சி’றிய சுயசரிதம்’ என்று எழுதினார்:  ‘நானும் என் கவிதைகளும்’ என்று சுயமதிப்பீடு செய்து கொண்டார். கண்ணதாசன் கடைசிப் பக்கத்தில் செய்யாத விந்தை இல்லை;

கண்ணதாசனைப் பற்றி எப்படி மதிப்பீடு செய்வது?

அவர் மகாகவி பாரதியைப் பற்றி ‘மரணத்தை வென்ற மகாகவி’ என்று ஒரு கவிதையை இயற்றித் தமிழருக்கு அளித்தார்.

அதில் ஒரு பகுதி இது:

“சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்றுவிட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்து விட்டான்

இந்திரதேவரும் காலில்விழும்படி

   என்னென்ன பாடிவிட்டான் – அவன்

இன்றுநடப்பதை அன்றுசொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்”

மகாகவி பாரதியைப் பற்றி கவியரசு கண்ணதாசன் பாடிய வரிகள் அவருக்கும் பொருத்தமாக அமைகிறது அல்லவா?

பல வாரங்கள் தொடர்ந்த கடைசிப் பக்கம் கடைசியாக ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது! ஒரு பக்கம் போய் நாலைந்து பக்கம் வாராவாரம் தரும் ‘சேரமான் காதலி’யை அவர் ஆரம்பிக்க இருந்ததனால் கடைசிப் பக்கம் முடிவுற்றது.

‘விநாயகர் படம் போட்டு அன்பார்ந்த நேயர்களுக்கு என்று கல்கி ஆசிரியர் ஆரம்பித்தால், அதில் சுவையான செய்தி ஒன்று நிச்சயம் இருக்கும். சேரமான் காதலி ஆரம்பத்தைச் சொல்ல வந்த கல்கி ஆசிரியர்  திரு கி.ராஜேந்திரன், கண்ணதாசனைப் பற்றி அற்புதமான ஒரு மதிப்பீட்டைத் தந்தார். அந்த மதிப்பீட்டில் கண்ணதாசனையும் கடைசிப்பக்கத்தையும்’ பற்றி விவரித்தவர் அபூர்வமாகத் தன்னைப் பற்றியும் கூறிக் கொண்டார் இப்படி:

“கண்ணதாசனின் கடைசிப் பக்கத்தில் பத்திரிகை ஆசிரியன் என்ற முறையில் என்னுடைய பெயரும் ‘இம்பிரிண்டில்’ வந்து கொண்டிருந்ததைப் பெருமையாகவே நான் கருதினேன்”!

கண்ணதாசனால் கல்கியும் பெருமை பெற்றது!

கல்கியால் கண்ணதாசனும் பெருமை பெற்றார்!!

அவர் பாணியிலேயே மனம் ஏங்கி இப்படிக் கேட்கிறது:

“கட்டுரையும் கவிதையும் கலந்து விளையாடி

தமிழர்தமை மகிழ்விக்கக் காலம் வருமோடி

 **

tags-கண்ணதாசன், கல்கி 

My Visit to Art Gallery in Sydney (Post No.14,236)

Written by London Swaminathan

Post No. 14,236

Date uploaded in Sydney, Australia – 23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the New South Wales Art Gallery in Sydney yesterday 22-2-2025. I spent two hours in both the wings of the art gallery. They are called NAALA BADU and NAALA NURA in aboriginal languages.

Naala Badu is an Aboriginal name that means “seeing waters” Naala Nura, which means “seeing Country”

There about 40,000 paintings and art objects. I have visited all the art galleries in London where I have been living from 1987. But the Sydney galleries are unique in showcasing aboriginal paintings and modern Australian paintings. The newly constructed buildings were opened a few year ago. The National Art Gallery in the capital city Canberra has original paintings of the aborigines. But Sydney gallery has commissioned works from living aborigines.

The attractions in Sydney include Asian paintings of Hindu Gods and Buddhist deities.  The paintings on women’s struggle for freedom are also good.

Art gallery is accessible from stations like Martin Place and St James in Sydney..

From the Art Gallery, one can walk through the Royal Botanical Gardens and reach other places such as Sydney Opera House and the harbour.

I saw at least three Ganesh paintings and sculpture from Indonesia.

The building named Nala badu has Yiribana gallery with aboriginal paintings. The were not ancient, but commissioned and painted by aboriginal artists.

The building named Naala Nura has very old and modern paintings. Asian paintings are exhibited there.

I liked painting on Greek Philosopher Diogenes and paintings on aborigines by the English migrants.

It isa  must for art lovers and students 

As soon as one enters the building one can take a map and go through the exhibits. The website also shows digitised pictures of paintings.

The entry is free; but occasional special exhibitions are ticketed events.

Following are the details:

Sydney’s must-see museum, where art, architecture and landscape connect. Art for all.

Art Gallery Road

The Domain

Sydney NSW 2000

Australia

Free general entry  Open daily 10am–5pm
Until 10pm Wednesdays.

Collections

all works (37,115) artists with profiles (248) highlights (100).

london swaminathan in front of art gallery in Sydney, Australia

Australian art (22,420)

The Australian collection of the Art Gallery of New South Wales connects Aboriginal and Torres Strait Islander art – from the oldest continuous cultures in the world – with stories told by a legion of Australian artists from the early 19th century to the present. These works of art come together to form an Australian collection that is among the finest and most representative in the country.

Works by Australian artists help reframe our history and its global connections, its deep past and its complex manifold futures. Highlights from the collection include 19th-century shields and ink drawings by Indigenous artists that reveal the impact of colonisation, as well as iconic visions of that same contested landscape that helped define a longstanding image of Australia. It also features 20th-century exemplars of the development of modernism in Australia and their echoes in contemporary art practices from around the country. In an art museum conceived for Australian artists, we recognise Australian art as having always been international, reflecting our more than 150-year history of being outward-looking and cosmopolitan.

International art (13,145)

From its home in Sydney, on Gadigal Country, the international collection of the Art Gallery of New South Wales connects multiple global histories, art periods, styles, meanings and inspirations.

Founded on a significant collection of British Victorian art and an early gift of ceramics and bronzes from Japan, the international collection has since expanded to include fine examples from 15th-century European Renaissance art; ceramics from across the centuries; an outstanding photography collection; works by avant-garde modernists; exceptional works by late 20th-century American and European artists, and contemporary art from across the globe.

We are a leading centre for Asian art, with a collection that takes visitors on a journey through arts and cultures stretching from Indonesia to Mongolia, Japan to Iran. And we especially recognise our place within the Pacific region, through a rich and diverse collection of works by our neighbours across the Great Ocean.

As new channels of global communication increasingly transcend national boundaries, the international collection grows in response to an ever more fluid and interconnected world.

Gallery’s website has digitised pictures.

–subham—

Tags–New South Wales, art gallery, Sydney, aborigins, paintings, london swaminathan, my visit

கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்! (Post.14,235)

Written by London Swaminathan

Post No. 14,235

Date uploaded in Sydney, Australia – 23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலகிலேயே புனிதமான நதி கங்கை நதி என்பதால் உலகம் எங்கும் ஆதிவாசிகளும் பழங்குடி மக்களும் எல்லா நதிகளையும் கங்கை என்று அழைத்தனர். ஆப்பிரிக்காவின் அதி  பயங்கரக் காடுகளுக்கு இடையே பிக்மி என்னும் குள்ளர்கள் வாழும் காங்கோ நாட்டில் ஓடும் நதிக்கும் கங்கோ என்று பெயர். தென் கிழக்காசியாவில் பல நாடுகளை வளப்படுத்தும் மா கங்கா (மீ காங்) என்ற நதியும் இலங்கையில் ஓடும் பல நதிகளும் கங்கை என்றே அழைக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது என்ற காரணத்தினால் கல்கத்தா துறைமுகத்திலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற கப்பல்கள் கங்கை நீரை ஏற்றிச் சென்று குடித்ததையும், பிரிட்டனுக்குச் சென்ற இந்திய மஹாராஜா பெரிய அண்டாவில் கங்கை நீரை கப்பலிலேற்றிச் சென்ரதையும் நாம் அறிவோம்..

இப்போது அறுபது கோடிபேர் கும்பமேளாவில் குளித்த பின்னரும் அதன் தூய்மை கெடாதது ஏன் என்று பிரபல விஞ்ஞானி அஜய் சோ ன்கர் Padma Shri scientist Dr Ajay Kumar Sonkar   விளக்கம் அளித்துள்ளார் . அவர் புற்று நோய் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் வல்லவர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் .

கங்கை நீரில் ஆயிரத்து நூறு வகையான பாக்டீரியோபேஜஸ் வசிக்கின்றன. அவை அந்த நதி நீரின் பாதுகாவலர்கள் போல செயல்படுகின்றன என்றும் இதனால் பாக்டீரியாக்கள் வசிக்க முடியாத நீர், புனித கங்கை நீர் என்று அவர் விளக்குகிறார்

பாக்டீரியோ பேஜஸ் என்றால் என்ன?

இவை வைரஸ் வகையைச் சேர்ந்தவை. பாக்டீரியாவுக்குள் புகுந்து அவைகளை அழித்துவிடும் . இந்த வகை வைரஸ்களின் 1100 வகை கங்கை ஜலத்தில் உள்ளது .  வேறு எந்த நதியிலும் இல்லாத ஒரு அதிசயம் இது  அந்த வைரஸ்கள் அவற்றின் எண்ணிக்கையைப் போல ஐம்பது மடங்கு கிருமிகளை அழிக்கும் அபூர்வ சக்தி படைத்தவை. பாக்டீரியாவுக்கள் புகுந்து அவற்றின் மரபணுவையே மாற்றிவிடும் வல்லமை படைத்தவை

A bacteriophage is a type of virus that infects bacteria. In fact, the word “bacteriophage” literally means “bacteria eater,” because bacteriophages destroy their host cells. All bacteriophages are composed of a nucleic acid molecule that is surrounded by a protein structure.  They are known

‘security guard,’ of the river; these bacteriophages instantly purify the river.

பாக்டீரியோ பேஜஸ் பாக்டீரியாவைவிட ஐம்பது மடங்கு சிறியவை; இவை நல்ல பாக்டீரியாக்களை அழிக்காமல் கெட்டவற்றை மட்டும் அழிக்கின்றன. ஒவ்வொன்றும் 100 முதல் 300 வரை பெருகுகின்றன  இவை கடல் நீரிலும் வசிக்கின்றன. அதனால்தான் கடல் நீரும் அசுத்தம் அடையாமல் இருக்கிறது என்று சோன்கர் சொல்கிறார்

அஜய் சோன்கர் காலஞ்சென்ற ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பெற்றவர். செல் பயாலஜி எனப்படும் உடல் செல்கள் ஆராய்ச்சி ,ஜெனெடிக் கோட்  என்னும் மரபியல் ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கும் விஞ்ஞானி. அவர் நோபல் பரிசை வென்ற ஜப்பானியருடன் பணியாற்றியவர்

கங்கை நீர் புனிதம் பற்றி பல அரசியல் கட்சிகள் தவறான தகவலைப் பரப்பி வரும் தருணத்தில் இவர் வெளியிட்ட ஆராய்சசி அறிக்கை , கெடு மதி படைத்தோரின் சவப்பெட்டியில் ஆணி அடித்துவிட்டது.

—subham—

Tags- கங்கை நீர், புதிய ஆராய்ச்சி, அதிசயத் தகவல்,