Date uploaded in Sydney, Australia – 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25
சிட்னி மாநகரிலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் மிண்டோ(Minto, NSW 2566) என்ற நகரினை அடையலாம் அங்கு அமைதியான சூழ்நிலையில் ஒரு அழகான சிவன் கோவில் இருக்கிறது. நான் என் குடும்பத்துடன் பிப்ரவரி 16 ஆம் தேதி (2025) அங்கு சென்றேன். சூலூர் சிவ சண்முக குருக்கள் எங்களை வரவேற்று நல்ல தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார்; பிரசாதமும் கிடைத்தது .
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குஜராத் மாநில மக்கள் கட்டிய இந்தக் கோவில் வடக்கத்திய தெற்கத்திய கோவில்களின் அம்சத்தைக் கொண்டு விளங்குகிறது.
இலங்கைத் தமிழர்களும் இங்கு ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். நாங்கள் சென்றபோது நிறைய நேபாள இந்துக்களும் ஆஸ்திரேலிய நகரத்தார் சமூக மக்களும் வந்திருந்தனர் . அவர்களுடைய வருடாந்திர காவடி உற்சவம் நடந்ததால் முருகப்பெருமானின் உற்சவ கோலத்தையும் பக்தர்களின் காவடியையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியது
கோவிலின் அமைப்பு
கோவில் பிரதான சந்நிதி காசி விஸ்வநாதர் ஆவார். பெரிய, அழகான சிவலிங்க உருவத்தில் அவரைத் தரிசிக்கலாம். இந்த விக்கிரகத்துக்கு மட்டும் தமிழ் ஆகம கோவில்களைப் போல அபிஷேக ஆராதனைகள் உண்டு அவருக்கு ஒரு புறம் அஷ்ட தச
புஜ துர்க்கையும் மறு புறம் ராம லெட்சுமணர் சீதாதேவி அனுமன் சகிதமும் காட்சி தருகின்றனர். இந்த துர்கா, ராம பரிவார் வடக்கத்திய பாணியில் உள்ளன. வெறும் உடை அலங்காரம் மட்டுமே .
கோவிலுக்குள் நுழையும் போதே கணபதியையும் முருகனையும் தரிசிக்கலாம்.முக்கிய சந்நிதிதிகள் மூன்றினைத் தவிர குட்டி சந்நிதிகளில் கிருஷ்ணர், புவனேஸ்வரி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், கால பைரவர் முதலானோரின் விக்கிரகங்களும் இடம்பெற்றுள்ளன .
கோவிலின் தனிச் சிறப்பு
வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இங்கே காணப்படுகின்றன. மிகப்பெரிய சிவன் சிலையும் அனுமன் சிலையும் கோவிலுக்கு மெருகு ஊட்டுகின்றன. அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிலைகளை படம் பிடிப்பதோடு செல்பி எடுக்கவும் தவறுவதில்லை .
இவை தவிர இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாடலும் ஒரு மண்டபத்தில் இருக்கின்றன. இந்தியா சென்று தரிசிக்க முடியாதவர்கள் இந்த மண்டபத்தை வலம் வந்தால் போதும்; கோவிலில் யாக சாலை இருப்பதோடு எதிர்கால விரிவாக்கத் திட்டங்களும் உள்ளன .
****
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
நாங்கள் சென்ற நாளில், நகரத்தார் சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தும் காவடி, பால்குட நிகழ்ச்சியும் நடந்தது ; நூற்றுக்கும் மேலானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பெண்களும் ஆண்களும் காவடி மந்து வர, முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியும் வலம் வந்தார் . சூலுர் சிவ சண்முக குருக்கள் சொன்ன நீண்ட தமிழ் சங்கல்பத்தை அவர்கள் பக்தி சிரத்தையோடு சொன்னார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில், லண்டன் முருகன் கோவிலில் நடந்த நகரத்தார் உற்சவத்துக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்து சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். இன்றைய உற்சவத்தைப் பார்த்தபோது அந்த நினைவலைகள் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்தன
சிவராத்திரி நிகழ்ச்சிகள்
அடுத்து வரப்போகும் சிவராத்திரி நாளில் சிவனுக்கு பக்தர்களே பாலபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கணபதி ஹோமம் முதல் ஏகாதசரருத்ர ஹோமம் /அபிஷேகம் வரை நடத்தும் அறிவிப்புகளையும் கோவில் வெளியிட்டுள்ளது சென்ற ஆண்டு தமிழ் அன்பர்கள் அங்கு திருவாசக முற்றோதலையும் நடத்தி இருக்கிறார்கள் . எல்லா சமூகத்தினரும் கோவிலைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பு .சிட்னி நகருக்கு வரும் அன்பர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்து பார்க்க வேண்டிய கோவில் இது
இதோ கோவிலின் முகவரி :
The full address of the temple is
Shri Shiva Mandir
Address: 201 Eagleview Rd,
Minto New South Wales 2566
—subham—
Tags- ஆஸ்திரேலியாவில், அழகான சிவன் கோவில் -25
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25, மிண்டோ(Minto, NSW 2566
Date uploaded in Sydney, Australia – 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 16- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
மகாகும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!
பிரயாக்ராஜ் மகாகும்ப மேளாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். உலகின் பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான இந்த எண்ணிக்கை, இந்த விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் மகாகும்ப நகரத்திற்கு வருகை தந்ததால், உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமாக இது மாறியுள்ளது. ஒன்றரை மாதங்களில் பிரயாக்ராஜுக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் .
ஐம்பது கோடி மக்கள் நேரடியாக பங்கேற்ற உலகின் முதல் விழா இது.
மனித வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் பங்கேற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை
உலகிலேயே மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில் 55 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி., அரசு கூறியுள்ளது.
‘பூர்ணிமா’ சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்; பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்து வருகிறார்.
பிப்ரவரி பத்தாம் தேதி கும்பமேளாவுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.
பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். அவர் அக்ஷயவத் என்னும் புகழ்பெற்ற புனித ஆலமரத்தையும் படே ஹனுமான் கோவில் அனுமனையும் வணங்கினார்
கடந்த 5-ம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். அதற்கு முன்னதாக பூட்டான் மன்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பவுர்ணமி அன்று தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஒட்டகம், குதிரைகளில் ஊர்வலகமாக வந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீராடி வருகின்றனர்.
மஹா கும்பமேளா என்பது ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கைக்கானது. இதில் தேவையில்லாத விஷயங்களையோ, 5 ஸ்டார் கலாசாரமாகவோ சித்தரிக்க வேண்டாம்’ என, சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்
மாடலாக இருந்து சன்னியாசியான ஹர்ஷா ரிசாரியா, மாலை விற்கும் மோனலிசா, ஐ.ஐ.டி., பாபா அபய் சங், நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதுவா மஹா கும்ப மேளா? மஹா கும்பமேளாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் செயல்படுகின்றன. இது சாதுக்கள், ஆன்மிகவாதிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல கூட்டத்தை சமாளிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் நதிக்கரையில், மணலில், திறந்த வெளியில் துாங்குகின்றனர். பஜனை செய்கின்றனர். புனித நீராடிய பின், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம், புண்ணிய நதியில் நீராடுவதுதான். என்று. ஹிந்து துறவி. மஹந்த் தர்மேந்திர தாஸ் கூறினார்,
*****
மைசூரில் மூன்றுநாள் கர்நாடக கும்பமேளா
மைசூர் கும்பமேளா பிப். 10 ம் தேதி-தொடங்கியது
தெற்கின் பிரயாகராஜ்’ என்று அழைக்கப்படும் டி.நரசிபுரா, திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடினர். முதல் நாளன்றே இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காவேரி-கபில-ஸ்பதிகா, நதிகளின் புனித சங்கமமாக விளங்குவது திருமகூடலி. இங்கு கும்பமேளா பிப்ரவரி பத்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூன்றுநாள் நடந்தது
வெள்ளி ரதத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் ஊர்வலம் வந்தனர். கும்பமேளாவின் இரண்டாவது நாள் பிப்ரவரி. 11 ம் தேதி மாலையில், வாரணாசியில் கங்கை நதியில் நடைபெறுவது போல மஹா ஆரத்தியும் நடத்தப்பட்டது
*******
டில்லி மாநகரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் புதிய கட்டிடம்
உலகத்திலேயே மிகப்பெரிய இந்து சமய தொ ண்டர் படையான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின்– அதாவது ஆர் எஸ்.எஸ். அமைப்பின்- புதிய கட்டிடம் டில்லி மாநகரத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி திறக்கப்படுகிறது .
புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் குஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது.
சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.
சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது.
இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.
****
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை – ஐகோர்ட் அதிருப்தி
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ. 54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன் எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துது.
திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலக வாடகை பாக்கி ரூ 54,35,660 அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
xxxxxxx
அர்ச்சனை தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை அர்ச்சகர்களுக்கு சொந்தமில்லை! வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!
கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்த கோவிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கை இணை உண்டிகளில் செலுத்த உத்தரவிடப்படுகிறது இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வர பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும் தட்டு காணிக்கை உண்டியல் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
இப்படிக்கு திருக்கோவில் செயல் அலுவலர்”
அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அர்ச்சகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது .
*****
பக்தர்களை தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கும் தமிழக அரசு : இந்து முன்னணி கண்டனம்!
கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அறநிலையத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை உள்ளிட்ட வழிகளில் இந்து சமய அறநிலையத்துறை பல கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என திமுக அரசு நினைப்பதாக விமர்சித்துள்ள அவர், திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
*****
திருப்பதி லட்டு கலப்பட புகாரில் நால்வர் கைது
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரித்த நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக எழுந்த விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
லட்டு கலப்பட விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் உள்பட நான்கு பேரை, அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
*******
பழநி தைப்பூசத் திருவிழா: அண்ணாமலை நேர்த்திக்கடன்
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை,48 நாள் விரதத்தை நிறைவு செய்து பழனி கோவிலில் காவடி சுமந்து வழிபாடு செய்தார்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் துவங்கினர்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 – 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.
அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
*****
கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது யானைகள் மோதல்- 3 பேர் பலி
கோழிக்கோடு, மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருவிழாவின் போது இரண்டு கோயில் யானைகள் பட்டாசு வெடித்து ஓடிய கொடூரமான சம்பவத்தில் 3 முதியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் குருவங்காட்டைச் சேர்ந்த லீலா மற்றும் அம்முக்குட்டி மற்றும் கொயிலாண்டியைச் சேர்ந்த ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த முப்பது பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வேல் யாத்திரை :பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை காக்க வலியுறுத்தி சென்னையில் வேல் யாத்திரை நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டது.
xxxxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
Date uploaded in Sydney, Australia — 17 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-2-2025 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
முத்து ஏர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி
தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது கொங்கு நாட்டில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் கொண்டுள்ள திருநணா திருத்தலமாகும். பவானி என்று இப்போது இந்தத் தலம் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் பவானி நகரம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வடமேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்றது இந்தத் திருத்தலம்.
இறைவர் : சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு)
இறைவி : வேத நாயகி, பவானி, சங்கமேஸ்வர், பந்தார் விரலம்மை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்ளிட்டவை.
,
தல விருக்ஷம் : இலந்தை
திருநணா என்றும் பவானி முக்கூடல் என்றும் புராணங்களால் இத்தலம் சிறப்பிக்கப் பெறுகிறது. வானி என்பது பவானி நதியின் பழம் பெயராகும். பவானி, காவிரி, மற்றும் மறைந்திருக்கும் அமுத நதி ஆகிய மூன்றின் சங்கமமே பவானி சங்கமம் ஆகும். இது தட்சிணப் பிரயாகை என்றும் கூடுதுறை என்றும் அழைக்கப்படுக்கிறது.
இத்தலமானது சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதும கிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் என்றும் குறிக்கப்படுகிறது.\
இங்கு சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் இடையே முருகன் சந்நிதி இருப்பதால் இது சோமாஸ்கந்த மூர்த்தி சிறப்புடையதாக ஆகிறது.
இக்கோவிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. வடக்கு நோக்கியே பிரதான வாயிலான ராஜ கோபுரம் உள்ளது. இது ஐந்து நிலை கோபுரமாகும். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வாயிலின் மேற்புறம் ராஜ விநாயகரும், கீழ்ப்புரம் முத்துகுமாரசுவாமியும் காட்சி அளிக்கின்றனர்.
அடுத்து மேல்புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் சௌந்தரவல்லித் தாயார் கோயிலும் உள்ளன.
இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
குபேரன் ஒரு நாள் தன் விமானத்தில் வரும் போது இங்கு காவிரியாற்றின் கரை ஓரத்தில் புலி, மான், பசு, யானை, சிங்கம் உள்ளிட்டவை பகை இன்றி இருப்பதைப் பார்த்தான். அங்கு ஒரு இலந்தை மரத்தையும் பார்த்தான். அப்போது தெய்வீக அசரீரி ஒன்று “இந்த இலந்தை மரத்தின் அடியில் ஜோதி மயமான லிங்கம் இருக்கிறது. இதை வழிபடுவாயாக” என்றது.
அதன்படி குபேரன் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை வழிபட சிவபிரான் அவனுக்கு காட்சியளித்து அருளினார். அவனது வேண்டுதலின்படி அழகாபுரியைப் போல இத்தலம் திகழ ஆரம்பித்தது. இது தட்சிண அளகை என்ற திருப்பெயரைப் பெற்றது. இறைவனுக்கு அளகேசன் என்ற நாமமும் உண்டாயிற்று.
இத்தலத்தைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
1802ம் ஆண்டில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்னும் ஒரு துரை. அவர் இங்கு பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் பதவி புரிந்ததால் கூடுதுறை மகத்துவமும் வேதநாயகியின் பெருமையும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சுவாமியை தரிசிக்க அவர் விரும்பினாலும் ஆங்கிலேயர் என்பதால் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி இல்லை.
இதனால் வேதநாயகி சந்நிதிக்கு எதிரே மதிலில் மூன்று துவாரங்களைச் செய்து அதன் வழியே அம்மனை தரிசிக்கலானார்.
ஒரு நாள் இரவு வேதநாயகியைப் போல அலங்காரம் கொண்ட பெண் ஒருத்தி அவர் கனவில் வந்து அவரை வெளியே போகும் படி சொல்ல அவரும் எழுது வெளியே சென்றார். சில நிமிடங்களில் அந்த பங்களாவின் கூரை இடிந்து கீழே விழுந்தது. அவர் தனது உயிர் தப்பியது வேதநாயகின் கருணையினால் தான் என்பதை உணர்ந்தார்.
உடனே தந்தத்தினாலேயே ஒரு கட்டிலை – அதாவது பல்லக்கு ஊஞ்சலைச் செய்து காணிக்கையாகக் கோவிலுக்கு அளித்தார். அது கொடுக்கப்பட்ட தேதி 11-1-1804 என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்றும் கோவிலின் உள்ளே காணலாம்.
இந்தக் கோவிலில் இன்னொரு அதிசயம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவானின் ஒளியானது, மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாளன்று, சங்கமேஸ்வரர், சுப்ரமண்யர், வேதநாயகியம்மன் சந்நிதிகளில் காலை நேரத்தில் பூஜை செய்வது போல மூர்த்திகளின் மீது படுகிறது.
இங்குள்ள கூடுதுறையில் ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் திரளாக வந்து குளிப்பது வழக்கம். ஆடி பதினெட்டாம் நாளில் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் குழுமி நீராடுகின்றனர்.
இங்குள்ள அபிஷேக மண்டபத்தின் வடபால் அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அமுதமே இங்கு லிங்கமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கம் அதற்குரிய ஆவுடையாரின் மேல் இருக்கிறது. எளிதிலே இதை எடுக்கலாம்; திரும்பவும் வைக்கலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த அமுதலிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு மகப்பேறு அடைவதற்காக கோயிலை வலம் வருகின்றனர். இப்படிச் செய்வதால் மகப்பேறு அடையமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தை இந்தத் தலத்தில் அருளியுள்ளார்.
இன்னும் ஏராளமான சிறப்புகளையும் புராண வரலாறுகளையும் இந்தக் கோவில் கொண்டிருக்கிறது.
அவற்றை அருணகிரிநாதரின் திருப்புகழ், பவானி கூடல் புராணம், வேதநாயகி பிள்ளைத் தமிழ், வேதநாயகி அம்மன் சதகம் உள்ளிட்ட பல நூல்களின் வாயிலாக அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சங்கமேஸ்வரரும் அன்னை வேதநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-2-25 கல்கி ஆன் லைன் கட்டுரை
விஞ்ஞானிகளை அரண்டு மிரண்டு பயப்பட வைத்த ஒரு விஞ்ஞானியின் கண் திருஷ்டி!
ச. நாகராஜன்
திருஷ்டி பற்றிய திரைப்படப் பாடல்!
1992ம் ஆண்டு வெளி வந்த சின்ன கவுண்டர் படத்தில் வரும் ஒரு பாடல் இது.
ஆண்: கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… ஹே…
இதைத் தொடர்ந்து நடனக் குழுவும் இதையே பாடுகிறது.
பின்னர் தீமை தரும் கண் திருஷ்டிகளின் பட்டியலும் பாட்டில் இடம் பெறுகிறது.
குழு: ஊரு கண்ணு உறவு கண்ணு… நாய் கண்ணு நரி கண்ணு… நோய் கண்ணு நொல்ல கண்ணு… நல்ல கண்ணு கொல்லி கண்ணு… கண்ட கண்ணு முண்ட கண்ணு… கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்… கண்ட பிணி தொலையட்டும்… கடுகு போல வெடிக்கட்டும்… நல்லதெல்லாம் நடக்கட்டும்… நாடும் காடும் செழிக்கட்டும்…
பாடலை எழுதி படத்தை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இசை அமைத்துப் பாடியவர் இளையராஜா.
திரு விஜயகாந்த் (1952-2023) அவர்களே வியக்கும் படி படம் சக்கை போடு போட்டது. அனைவரும் இந்தப் பாடலையும் ‘சின்னக் கவுண்டர்’ விஜயகாந்த் நடையையும் வெகுவாக ரசித்தனர்.
பகுத்தறிவுவாதிகளுக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் சங்கடத்தைத் தந்தது.
கண் திருஷ்டியாவது தீமையைத் தருவதாவது என்பது அவர்களின் கொள்கை.
ஆனால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் திருஷ்டி பற்றிய நம்பிக்கை உண்டு. அதற்கு அந்தந்த நாட்டு பரிகாரங்கள் விதம் விதமானவை.
விஞ்ஞானிகள் இந்த கெட்ட திருஷ்டி (EVIL EYE) பற்றிய ‘மூட’நம்பிக்கையைப் பற்றிக் கை கொட்டிச் சிரித்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
அவர்களே அரண்டு மிரண்டு பயப்படும் வண்ணம் ஒரு விஞ்ஞானி இதர விஞ்ஞானிகளை பயமுறுத்தினார். அந்த சம்பவம் தான் இது!
பாலி இருந்தாலே பயம் தான்!
உல்ப்கேங் பாலி (1900-1958) ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க கருதியற்பியல் விஞ்ஞானி. 1945ல் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். அடாமிக் ஃப்யூஷன் பற்றிய அவரது பார்முலா உலகப் புகழ் பெற்றது!
அவரைக் கண்டாலேயே விஞ்ஞானிகளுக்குப் பயம்
அவர் சோதனைச்சாலையில் இருந்தாலோ எதையாவது பார்த்தாலோ நிச்சயமாக ஏதாவது கோளாறு ஆகி விடும் என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது! பாதி சோதனையின் போது மின்சக்தி போய்விடும். வாக்குவம் டியூபுகள் லீக் ஆகும், சாதனங்கள் உடையும் அல்லது பழுதுபடும் , இப்படி நிச்சயம் ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும். சோதனை உருப்படாது. ஆகவே அவர் சோதனையின் நடுவில் வந்தாலே விஞ்ஞானிகள் நடுநடுங்குவர்.
ஒரு நாள் புரபஸர் ப்ராங்க், கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது லாபரட்டரியில் ஒரு முக்கிய சோதனையை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சாதனம் உடைந்து விட்டது. அந்தச் சமயத்தில் பாலி டென்மார்க்கிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் இருக்க சான்ஸே இல்லை!
ஆனால் பின்னால் தான் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாதனம் உடைந்த அதே வினாடியில் தான் ஜூரிச்சிலிருந்து கோபன்ஹேகனுக்கு பாலியை ஏற்றிக் கொண்டு சென்ற புகைவண்டி கோட்டிங்டன் இரயில் நிலையத்தில் வந்து நின்றதாம்! அடேயப்பா, ரயில் நிலையத்தில் அவர் வந்த போதே இந்த ‘எபக்ட்’ என்றால் ஒருவேளை சோதனை செய்யும் லாபரட்டரிக்கு அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்களுக்குள் ‘பாலி விளைவைப்’ பற்றிப் பேசி மகிழ்ந்தனராம்!
நீல்ஸ்போரின் குதிரைலாடம்!
அதிர்ஷ்டம், கண் திருஷ்டி ஆகியவற்றை எல்லாம் நம்பாத இன்னொரு
இயற்பியல் விஞ்ஞானி நீல்ஸ் போர் (1885-1962).
1922ல் நோபல் பரிசைப் பெற்றவர்.
அவரைப் பார்ப்பதற்கு அவரது சக விஞ்ஞானி ஒருவர் கோபென்ஹேகனுக்கு வந்தார். அவரைச் சந்திக்கும் போது அவரது மேஜைக்கு அருகில் இருந்த சுவரில் குதிரை லாடம் ஒன்று பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியமுற்றார்.
ஏனெனில் அதிர்ஷ்டத்தை நம்பும் எல்லோரும், குதிரை லாடத்தை (Horseshoe) வீட்டில் பதித்து வைத்துக் கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் வரும் என்று அதை வீட்டுச் சுவரில் பதித்து வைப்பது வழக்கம்.
ஆனால் விஞ்ஞானியான நீல்ஸ் போர் இதை மூட நம்பிக்கை என்று சொல்பவர் ஆயிற்றே!
வியப்புற்ற அமெரிக்க நண்பர், “என்ன, குதிரை லாடம் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நிச்சயம் நீங்கள் நம்பாதவர் தானே!! அப்படி என்றால்..? என்று இழுத்தார்.
நீல்ஸ் போர், “நண்பரே! அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நான் நம்பவே இல்லை. அது சுத்த அபத்தம்! என்றாலும் கூட அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்கிறார்களே! அந்த லாஜிக்கிற்காகத் தான் அதை மாட்டி வைத்துள்ளேன்” என்றார்.
இந்த லாஜிக்கைக் கேட்டு நண்பர் அசந்து போனார்!
இப்படி ஏராளமான பகுத்தறிவு விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் சுவையான முரண்பட்ட நம்பிக்கைகளும் செயல்களும் உண்டு!
Date uploaded in Sydney, Australia – 16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I went to Minto Shiva Temple today 16-2-2025 with my family; the temple is in Minto in New South Wales in Australia. It is at a distance of one hour drive from Sydney.
The temple is a beautiful temple and it won’t take more than half hour to have darshan (holy viewing).
It is a Shiva temple with a huge Shiva Linga in the main shrine. On both sides we have Ashtabhuja Durga and Ram parivar shrines.
Apart from these , there are shrines for Ganesh, Subrahmanya, Bhuvaneswari, Navagraha, Krishna and Kala Bhairava
The main attractions are huge Shiva and Hanuman sculptures outside the main shrine. The temple construction is a mixture of North and South Indian styles. The main Shiva Linga has Archana and Aradhana (PUJA) like every Tamil temple. Other gods have beautiful dress like North Indian temples.
Another unique feature of the temple is installation of Twelve Jyotirlingas’ – exact replica of Indian Shrines – but in smaller scale.
The temple is run by Gujaratis with the support of other communities in the area. I saw a lot of Nepali Hindus vising the temple.
The huge Shiva and Anjaneya sculptures gave lot of opportunities for youngsters to take photos and selfies.
It is in a quite area and new extensions are also planned.
Sulur Siva Shanmuka Kurukkal and another Pandit ji helped us to have good Darshan and gave us Prasad.
Sri Siva Shanmuka Kurukkal ji explained that the main Shiva linga is worshipped with Abhisheka Aradhanas like South Indian Agama temples.
***
Nagarathar Kavadi Function
LONDON SWAMINATHAN WITH SRI SULUR SIVA SHANMUKA KURUKKAL
We had two birds in one stone today. The Nagarathar community celebrated the annual Kavadi function today and Sulur Shiva Shanmuka Kurukkal officiated it. Hundreds of Nagarathar community devotees attended it and scores of gentlemen took Kavadis and others Paal Kudam (milk pots). Lord Muruga (Skanda) was taken in procession. They went round the temple. That reminded me my participation as Chief Guest at London Nagarathar annual event held in London Sri Murugan temple two years ago. The event added more divine atmosphere.
Sri Lankan Tamils organise several events in the temple now and then. Shivaratri on 26th February 2025 will attract a huge crowd and special Homams and Shiva linga abishekam are already announced.
The full address of the temple is
Shri Shiva Mandir
Address: 201 Eagleview Rd,
Minto NSW 2566
LONDON SWAMINATHAN IN MINTO MANDIR, AUSTRALIA
–subham—
Tags- My Visit, Minto Shiva Temple, Australia , Nagarathar, Kavadi, Event
Date uploaded in Sydney, Australia – 16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4;
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
………..
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
இந்த வரிகளில் தனக்கு என்ன வேண்டும் என்று அவ்வையார் வேண்டுகிறார்.
1.இறைவனே குருவாக வேண்டும்
2.முந்தை வினைகளை நீக்கவேண்டும்
3.உபதேசம் செய்தருளவேண்டும்
4.ஐம்புலன்களை அடக்க அருள்புரியவேண்டும்
5.ஒன்பது வாசல்களைக் கொண்ட உடம்பினை என் வசத்தில் வைத்துக்கொள்ள இவையெல்லாம் தேவை.
இதற்குப் பின்னர் வரும் வரிகளில் யோக விஷயங்கள், மூச்சுப் பயிற்சி , குண்டலினியை எழுப்புவது முதலியன பற்றி வேண்டுகிறார்
இந்த வரிகளில் 3, 4, 5, 9 ஆகிய எண்களை அவ்வையார் பயன்படுத்துவத்தைக் கவனிக்கவேண்டும் ; இந்த பரிபாஷையை எல்லா ஆன்மீகப் பாடல்களிலும் , துதிகளிலும் காணலாம். இவை எல்லாம் பகவத் கீதையிலிருந்து துவங்குகிறது அங்கும் ஒன்பது வாயில், மூன்று மலங்கள், ஐந்து புலன்கள் வருகின்றன வள்ளுவனும் துறவு என்னும் பகுதியில் இதை ஜூஸ் பிழிந்து தந்து விடுகிறான்.
நீக்க வேண்டியது மூன்று மலங்கள்
வேண்டிப் பெறுவது நான்கு நலன்கள்
அடக்க வேண்டியது ஐந்து மத யானைகள் (புலன்கள்)–
உடலுக்கு ஒன்பது வாசல்கள் —- அவ்வையார்
****
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே……….
மும்மலங்களுக்கு சைவர்கள் கூறும் விளக்கம் – ஆணவம்,கன்மம், மாயை என்பதாகும் .
இன்னுமொரு விளக்கம் :–
மூன்று மலங்கள் – காமம் க்ரோதம் லோபம் ; அதாவது வேண்டாத ஆசைகள் காமம்; அவை கிடைக்காதபோது ஏற்படும் சினம் என்னும் கோபம்; சிறிது கிடைத்துவிட்ட பின்னர் எழும் பேராசை, குறிப்பாக பண விஷயத்தில்-லோபம் .
சிறைச்சாலைக்குச் செல்லுவோர் பற்றிய செய்திகளைப் படித்தால் எல்லோரும் இந்த மூன்று காரணங்களுக்காகவே சிறையில் அடைக்கப்படுவதைக் காலம்; ஆகையால் கீதையில் கண்ணன் இந்த மூன்றினையும் நரகத்தின் வாசல்கள் என்று வருணிக்கிறான் .
******
chocolate Ganesh
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி….
சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை நான்கினையும் தந்து அவற்றின் மூலம் சாலோக, சாமீப, சாரூப சாயுஜ்ய நிலையை அடைய வேண்டும்.
दर्शनाद् यस्य सालोक्यं
सामीप्यं स्पर्शनात् तथा
सारूप्यं स्नानतो याति
सायुज्यं तन्-निवासतः– கார்க சம்ஹிதா
darśanād yasya sālokyaṃ
sāmīpyaṃ sparśanāt tathā
sārūpyaṃ snānato yāti
sāyujyaṃ tan-nivāsataḥ
sAlokyam.. சாலோக்யம் – இறைவனை வணங்கும் அடியார் குழாத்தில் சேருதல்;
sAmeepyam.. சாமீப்யம்- இதன் வாயிலாக இறைவனை நெருங்கிச் செல்லுதல்;
sArupyam.. ஸாரூப்யம்- அவனது உருவினை அடைதல் ;
sAyujyam..சாயுஜ்யம் – அவனோடு ஐக்கியமாதல்
சிவன் என்று சொல்லக் சொல்ல சிவமயமாவதை திருமூலரும் பாடுகிறார் .இறுதியில் ஆதி சங்கரர் போதித்த அத்வைத நிலை வரும்; அதாவது
அஹம் பிரம்மாஸ்மி; தத்துவமசி என்னும் உபநிஷத வாக்கிய நிலை ; நானே கடவுள்; அது நீயே.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716) திருமூலர் அருளிய திருமந்திரம்.
முதலில் இறைவனே குருவாக வேண்டும் என்றும் அவ்வை வேண்டுகிறார். இந்த குரு பற்றிய கொள்கை இந்து மதத்துக்கே உரியது அருணகிரிநாதருக்கு முருகனே குரு ஆனான். மாணிக்கவாசகருக்கு சிவனே குரு வடிவில் தோன்றினார்
குரு இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் கிடையாது என்பது இந்துக்களின் கொள்கை; அவரிடமிருந்து உபதேசம் பெறவேண்டும் என்பதும் இந்துக்களின் கொள்கை. இதை உபநிஷதங்கள் தெளிவாக இயம்புகின்றன. பிராமணர்கள் இரண்டாவது பிறவி எடுக்கையில்– அதாவது பூணூல் போடுகையில் — தந்தை மூலமாக காயத்ரீ மந்திர உபதேசம் பெறுகிறார்கள்; அப்போது தந்தையே குரு.
பாரதி , திருமூலர் போன்றோர் குருவின் பெருமையை புகல்கிறார்கள்:
காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவை யெதிர் கண்ட போதே
மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளே
பேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்
சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!—பாரதியார்
குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.
இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
— திருமூலரின் திருமந்திரம்
*****
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி……………………
ஒன்பது வாசல் வீடு/ நகரம் என்று உடலை வருணிப்பதை வேத மந்திரத்திலேயே காண்கிறோம். பின்னர் தமிழ் அடியார்கள் இதைக் கூறி வந்தனர்.
இதோ அதர்வண வேத மந்திரம்:
ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்து உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)
பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:
இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வாரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||
sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī
nava-dvāre pure dehī naiva kurvan na kārayan–(பகவத் கீதை – 5-13)
அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்
15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:
“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.
—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957
*****
ஐம்புல அடக்கத்தைப் பாடாத புலவர் இல்லை வள்ளுவன் குறள் இதோ:-
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24)
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
வீட்டு நிலம் – மோட்சம், வீடுபேறு அல்லது மேலான நிலை
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பனனிடத்தில் உலகம் வசப்படும் ; முனிவர்கள், சாது சந்யாசிகள் இப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவர்களை உலகமே வணங்குவதைக் காண்கிறோம்.
*****
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்………
முன் வினையின் பயனால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடலாம்; அதை நீக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு
பிரம்மன் எழுதிய தலை எழுத்து முருகனின் கால் பட்டு அழிந்தது என்று அருணகிரிநாதர் பாடுகிறார் . முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பதை திருமூலரும் பாடுகிறார் கோவிந்தனின் புகழ் பாடினால் அவை எல்லாம் தீயினில் பஞ்சுபோலக் கருகிச் சாம்பலாகும் என்று ஆண்டாளும் உறுதி செய்கிறார்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே– கந்தர் அலங்காரம்
“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே”.— திருமந்திரம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.– ஆண்டாள் பாடிய திருப்பாவை
To be continued………………………………..
Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4, ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி….
Date uploaded in Sydney, Australia – 15 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை–3
மூஷிக வாகனம் ஏன்?
எலி என்பது மனிதனின் ஆசைகளையும் புலன் இன்ப வேட்கையையும் குறிக்கும். அதைக் கட்டுப்படுத்த வல்லவர் விநாயகர் ; வீடுகளில் எலியைக் கண்டோருக்கு அதன் ஆசையும் இனப்பெருக்க வேகமும் நன்றாகவே விளங்கும். கணபதியை வணங்குவோருக்கு அந்தக் கட்டுப்பாடு வரும். ஏனெனில் கணபதி ஆஞ்சனேயரைப் போலவே பிரம்மச்சாரி. தெற்கிலும், வடக்கிலும் பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் மனைவியராகக் காட்டுவது அவர்களின் சக்தி ரூபம்; உண்மையில் மனைவியர் இல்லை ஆகவே பிரம்மசாரி கடவுளை வணங்குவோருக்கு ஆசை மீது கடிவாளம் போட முடியும் என்பதைக் காட்டவே அவர் எலி வாகனதாரியாக நம்மிடையே காட்சி தருகிறார். எலி என்பது நம்முடைய அஹம்காரத்தைக் குறிக்கும் என்று ஒரு விளக்கமும் உண்டு
அஹங்காரம் , மம காரம் இரண்டையும் கட்டுப்படுத்துவோர் சொர்கத்துக்குப் போகமுடியும் என்று வான்புகழ் வள்ளுவனும் தேன் இனிய தமிழில் செப்புகிறான்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்– (அதிகாரம்: துறவு குறள் எண்:346)
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை நீக்கியவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்வான்.
இன்னும் ஒரு விளக்கம் – எலியைப் போல அவர் எங்கும் செல்வார் ; அவர் இல்லாத இடம் OMNIPRESENT இல்லை; இது எல்லாக் கடவுளருக்கும் பொருந்தும் .
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
மூஷிக = எலி , மூஞ்சூறு
முப்பழம் = மா, பலா, வாழை ; இது தமிழருக்கே உரித்தான வசனம். ஏனெனில் இவை தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள்; பழங்கள். முத்தமிழ் போன்று இனிமையானவை ; இவை விநாயகரின் கை நிறைய இருப்பதை திருப்புகழில் பாடுகிறோம்; அருணகிரிநாதரும் கைத்தல நிறை கனி என்று பாடி பிள்ளையார் துதியைத் துவக்குகிறார்.
****
சொற்பதம் கடந்த – இது உபநிஷத வாக்கியம் ; வேத்தின் ஞான காண்டம் உபநிஷத் என்னும் பகுதி; அவைகளில் வெறும் சடங்குகளினாலோ துதிகளாலோ மட்டும் இறைவனை அடைய முடியாது; அவைகள் படிக்கட்டுகள்தான்; ஏணிதான் ; அதை பயன்படுத்தி மேல் நிலைக்குச் சென்றால் சொற்கள் அடங்கிவிடும்; பேசா அனுபூதி பிறந்து விடும்; ஏனெனில் அவனைக் கண்டவர் விண்டிலர்;அப்ரமேயம் என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லும்; பகவத் கீதையில் விஷ்வ ரூப தரிசனம் இதை உணர்த்தும் ஆகையால் இறைவனை சொற்களால் வருணிக்க இயலாது ; இதை அவ்வையார் அழகாக சொற்பதம் கடந்த என்று சொல்லிவிட்டார் வக்ர துண்டம்/ வளைந்த துதிக்கை மூலம் நமக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கணேசன் நினைவு படுத்துவதால் துரியமெய்ஞ் ஞான அற்புதம் என்கிறார் அவ்வை.
நூலறிவால் இறைவனை அடைய முடியாது; நுண்ணறிவினாலேயே அவனை அடையமுடியும் ; இதை அருணகிரிநாதரும் புகல்கிறார்.
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!— திருவாசகத்தின் சிவ புராண வரிகள்.
சைவத் திருமுறைகள் அனைத்தும் நம சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மகிமையைப் போற்றுகின்றன ; வேதங்களில் யஜுவ்ர் வேதத்தின் ருத் ரம் சமகம் பகுதியில் முதல் தடவையாக நமச்சிவாய என்பதைக் கேட்கிறோம். பின்னர் இதை சைவ அடியார்களின் தேவார, திருவாசக, திரு மந்திர நூல்களில் படிக்கிறோம்
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். 15 – நல்வழி
என்று அவ்வையார் நல்வழி நூலிலும் பகர்ந்தார்
திருமூலரின் திருமந்திரமும் சிவ என்ற இரண்டெழுத்தே போதும் என்கிறது :
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே. (கடவுள் வாழ்த்து. 4)
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716)
TO BE CONTINUED……………………………………
TAGS- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3, மூஷிக வாகனம் ஏன்?, மாயப் பிறப்பு, சொற்பதம் கடந்த