சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் – Part 2 (Post No.14,332)

Written by London Swaminathan

Post No. 14,332

Date uploaded in London –  31 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்ச் மாதம் (2025)  சென்னை முதல் கும்பகோணம் வரை  பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

PART -2.

மாடு கடத்தல் – சந்தைக்கா? கசாப்புக் கடைக்கா?

Temple with Anti Hindu DMK Flags

Tonnes of Paddy Bags in scores of Trucks near Tirumeeycahur

சோழ நாடு சோறுடைத்து சேரநாடு வேழமுடைத்து பாண்டிய நாடு முத்துடைத்து தொண்டை நாடு சான்றோர் உடைத்து 

Screen on the Plane

****

CHENNAI AIRPORT

சென்னை விமான நிலையத்துக்குள் – இன்டர்நெஷனல் டெர்மினல் 

Chennai Airport International Terminal Sculptures 

Yaali

–Subham—

Tags- சென்னை – சுவாமிமலை , சாலையோர,  காட்சிகள், Part 2, 

London Swaminathan’s New book on DREAMS & INSCRIPTIONS

London Swaminathan’s New book on DREAMS & INSCRIPTIONS

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.

Here is one of my latest books

கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய 

புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

பொருளடக்கம்

1.விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கனவு

2.எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

3.வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

4.விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

5.ராமாயணத்தில் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள்

6.கனவில் கண்ட சுப சகுனங்கள்: காளிதாசன் தரும் தகவல்

7.தொல்காப்பியத்தில் கனவுகள்

8.திருக்குறள்,  தமிழ்ப் பழமொழிகளில் கனவுகள்

9.சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள்

10.விலங்குகள் கனவு காணும்! தமிழர்கள் கண்டுபிடிப்பு!

11.மத்தியக் கிழக்கு நாடுகளில் சுவையான கல்வெட்டுகள் !

12.தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர்

13.ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி

14.காந்திஜி சாப்பிட்டதை நாமும் சாப்பிடலாமே !

15.ஒரு லட்சம் பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள்!

16. ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை! பல நகரங்களில் குண்டு வெடிக்குமாம்!!

17.இந்திய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ?

18.கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல் — உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள்

19.காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!!

20.தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு?

21.வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி

22.மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள்

23.தெலுங்கு மொழிக் கவிஞர் போதனா 

24.குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம், ந தும், தர்பார் கம் ?”

25.செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள்

26.ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கம்!

27.சீனாவில் குமாரவிஜய செய்த சாதனைகள்

28.கண்ணன் பெயரில் உள்ள மர்மம் !

29.பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ?

30.நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்!

31.வறுத்த பருப்பை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே!

******

அட்டைப்படம் : புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் யானை வந்தது ; விக்கி மீடியா காமன்ஸ் மற்றும்  ஜார்ஜியா வெப்சைட் புத்தர் ஓவியம்; நன்றி

                                                     முன்னுரை

கனவுகள் பற்றிய  இந்துக்களின் நம்பிக்கைக்கும் மேலை நாட்டு மன ஆராய்ச்சி நிபுணர்களான கார்ல் யங்,  சிக்மண்ட் பிராய்ட்( Carl Jung , Sigmund Freud ) ஆகியோரின் கொள்கைக்கும் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. இந்துக்களின் ஆராய்ச்சிகள் எப்படி அவர்களை பொய்யாக்குகின்றன என்பதை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காணலாம். இதற்கான ஆதாரங்களை  சம்ஸ்க்ருத, மற்றும் சங்கத்தமிழ்  இலக்கியத்திலிருந்தும் மக்களின் அனுபவங்களிலிருந்தும் கொடுத்துள்ளேன்.

கல்வெட்டுகளில் நாயின் பெயரை முதன் முதலில் பொறித்த பெருமை தமிழனுக்கு உண்டு. அது பற்றிய கட்டுரைகளையும் கனவுகள்கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள் என்ற  இந்த நூலில் காணலாம். தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை மேலும் பல புதிய கட்டுரைகளை எனது ‘பிளாக்’குகளில் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் எழுதினேன். அவைகளையும் நீங்கள் இந்த நூலில் படிக்கலாம் . இப்படி விளக்கிக் கொண்டே போவதைவிட நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தாலே உள்ளடக்கம் புரிந்து விடும்.. இது தொடர் கதை அல்ல; ஆகையால் எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.

130 புத்தகங்களுக்கு மேல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பின்னரும் புதிய சுவையான விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் எழுதுவதை நிறுத்த மனம் வரமாட்டேன் என்கிறது.  நீங்களும் படிப்பதை நிறுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் உளது.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன், மார்ச் 2025

swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய 

புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – February 2025

Subject – Literature, Culture & History

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 137+2 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malysia, Singapore, Italy and Greece

*****

IF YOU WANT TO SEE ALL THE 137 BOOKS, PLEASE GO TO PUSTAKA.COO.IN

HOW TO READ OR DOWNLOAD OR GET PRINTED BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

வேத கால மூலிகை மருத்துவம் பற்றி புதிய தகவல்கள் (Post No.14, 331)

Written by London Swaminathan

Post No. 14,331

Date uploaded in London –  31 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான  ஆண்டுகளாகவே வாய்மொழி மூலமே அது பரப்பப்பட்டு வருவதை  இன்றும் நாடு முழுதுமுள்ள வேத பாடசாலைகளில் காண்கிறோம் . மனிதர்களுக்கு வேதம் நிர்ணயித்த ஆயுட்காலம் நூறு ஆண்டுகள்தான். நம்மில் பலரும் அரிதாகவே நூறு ஆண்டுகளுக்கு வாழ்கிறோம். அதற்குள்  நாடி நரம்புகள் தளர்ந்து தோல் சுருங்கி முகம் வாடி  விடுகிறது பிராமணர்கள் தினமும் மதிய வேளையில் நூறாண்டுக் காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க என்ற மந்திரத்தைச் சொல்லி, சூரியனை விரல் இடுக்குகளின் வழியே பார்க்கிறார்கள் . இவை எல்லாம் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன .

இப்பொழுது உலகெங்கிலும் வைட்டமின்-டி VITAMIN- D  பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது; அது இருந்தால் நோய் நொடிகள் மனிதனை அண்டாது ; இதனால் இந்து மதத்திலும் இந்து ஜோதிடத்திலும் சூரியனை ஆரோக்கியத்துக்கான அதிபதி என்று சொன்னார்கள் ; இந்துக்கள் சூரிய நமஸ்காரத்தை பொழுது விடியும் முன்பாகச் செய்வதும், பிராமணர்கள் சூரியனின் போக்கினை வைத்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதும் இதனால்தான் .

ரிக் வேதத்தில் 1-34-6

வேத கால இந்துக்கள் அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர்களை ஆரயோக்கியத்துக்கான தெய்வங்களாக வணங்கினார்கள் ; இந்துக்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்; அதையே ஆண்டாள் முப்பத்து மூவர் என்று திருப்பாவையில் பாடுகிறார். அந்த முப்பத்து மூவரில் இந்த இரட்டையர் அடக்கம்; இந்த இரட்டையரை வேண்டும் துதி, ரிக் வேதத்தில் 1-34-6 வருகிறது.

இன்னும் ஒரு ரிக் வேதத்  துதி 6-74-2 சோம ருத்ரா என்ற மூலிகையைக் குறிக்கிறது .

பில்லி- சூனியம், மாய மந்திரம் முதலியவற்றால் வரும் நோய்களை மூலிகைகள் அகற்றி விடும் என்று அதர்வ வேத துதிகளும் பாடுகின்றன 4-9-919-39-1

அந்தக் காலத்தில், நோய் நொடிகளை பூதங்களும் பிசாசுகளும் உண்டாக்குவதாகவும் பில்லி சூனியம் போன்றவற்றால் பிறர்  உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்க முடியும் என்றும் நம்பினார்கள் ; சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த நம்பிக்கை மேலை நாடுகளில் பரவலாக இருந்தது; யாருக்காவது அல்லது ஒரு ஊருக்காவது கெடுதி வந்தால் அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்களை சூனியக்காரிகள் என்று சொல்லி உயிருடன் எரித்தனர். இவ்வாறு எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் என்று நூல்கள் விளம்புகின்றன.

இந்து மத வைத்தியர்கள் பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும், இப்படி பேய் பிசாசுகள், பூதங்கள் என்று பாமர மக்களுக்குச் சொன்னார்கள் ; கிரகணம் என்பதை சந்திரன், பூமியின் நிழல்கள் என்று அறிந்து துல்லியமாகக் கணக்கிட்டு சொன்ன பின்னரும் சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவதாக பாமர மக்களுக்குச் சொன்னதை இதற்கு எடுத்துக்காட்டகச் சொல்லலாம் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த பாம்பு விழுங்கும் நிகழ்ச்சிகளை சங்கப்புலவர்கள்  பாடியுள்ளனர்.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மூலிகைகளை நோய் தீர்க்கப் பயன்படுத்தினர் என்பதாகும் . மூலிகைகளின் சக்தி பற்றி மேலும் ஒரு ரிக் வேதத் துதி தெளிவாகவே பேசுகிறது 10-97-1/ 23

****

புதிய செய்தி என்னவென்றால் வேத கால மூலிகைகளைப் பிற்கால நூல்களும் குறிப்பிட்டுள்ளன. இதைக் கருத்திற்கொண்டால் உலகிலேயே மிகப் பழமையான மருத்துவம் ஆயுர்வத மருத்துவம் என்பது உறுதியாகிறது

அதர்வண வேதம் சொல்லும் மூலிகைகள் சரக சம்ஹிதையிலும் உளது; சரகரும் சுஸ்ருதரும் சொன்ன மருந்துகளை இன்று வரை நாம் பயன்படுத்திவருகிறோம்மேலை நாடுகளின் மருத்துவ அணுகுமுறைக்கும் இந்திய சித்த, ஆயுர்வேத மருத்துவ அணுகுமுறைக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டினை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

நோயே வராமல் வாழ வைப்பது ஆயுர்வேதம்; சித்த மருத்துவம்.

நோய் வந்த பின்னர்– அதாவது நோய்களை உடலில் உருவாக்கித் தீர்ப்பது மேலை நாட்டு மருத்துவம்.

பார்மசி கம்பெனிகள் நாள்தோறும் கோடிக்கணக்கான மருந்துகளை விற்கின்றன ; இதே அளவுக்கு மூலிகைகளை விற்றால் உலகில் நோய் நொடி இல்லாமல் அனைவரும் சித்தர்களாகவே வாழமுடியும் அதனால்தான் சித்த மருத்துவம் ஆயுளை வளர்க்கும் வேதம் என்று நமது மருத்துவ முறைகளுக்குப் பெயர் சூட்டினார்கள்.

கீழேயுள்ள பட்டியலில் எந்த எந்த மூலிகை வேதத்திலும் பிற்கால நூல்களிலும் உளது என்பதைக் காலாம் .

இந்திர வாருணி –  அதர்வ வேதம்1-23-1 – சுஸ்ருத சம்ஹிதை 6-11-15

பிரிஷ்ணி பர்ணி -அதர்வ வேதம் 2-25-1 – சரக சம்ஹிதை6-9-43

குஷ்ட மூலிகை – -அதர்வ வேதம் 5-4-6 – சரக சம்ஹிதை 1-3-9

சங்க புஷ்பி – கெளசிக சூத்ரா 10-16 – சுஸ்ருத சம்ஹிதை 6-52-43

பிப்பாலிகா -அதர்வ வேதம் 6-109-3- சரக சம்ஹிதை 6-11-47; சுஸ்ருத சம்ஹிதை 6-52-25

ஹரித்ரா – -அதர்வ வேதம் 1-23-1 – சரக சம்ஹிதை 1-3-13; சுஸ்ருத சம்ஹிதை 6-52-19

லாஃஸா -அதர்வ வேதம் 5-5-2 – சரக சம்ஹிதை 6-9-67; சுஸ்ருத சம்ஹிதை 4-9-10

பலாச -அதர்வ வேதம் 6-15-1 – சரக சம்ஹிதை 6-12-63

ஷாமி- -அதர்வ வேதம் 6-27-2 – சரக சம்ஹிதை 1-27-157

குக்குலு -அதர்வ வேதம் 19-38-1 – சரக சம்ஹிதை 6-17-79

சங்க புஷ்பி = சங்கு புஷ்பம்;  பிப்பாலிகா = திப்பிலி;  ஹரித்ரா =மஞ்சள்;  குக்குலு =குங்கிலியம் பிசின்; லாக்ச = அரக்கு; பலாச= புரசு; ஷாமி= வன்னி; இந்திர வாருணி= பேய்த் தும்மட்டி;

பிரிஷ்ணி பர்ணி = சித்திரப்பலாடை (Sittirappaladai) ;கொலாபொன்ன (Kolaponna)

REFERENCE BOOK – MEDICINES OF EARLY INDIA, BY KANJIV LOCHAN, VARANASI, YEAR 2003

—SUBHAM—

TAGS- வேத கால, மூலிகை மருத்துவம் , புதிய தகவல்கள் 

GNANAMAYAM BROADCAST ON SUNDAY 30- 3 – 2025 SUMMARY  

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time One Pm (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

30-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

 நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Mr Natarajan, Mrs Nirmala Natarajan, Amersham, UK

***

World Hindu News in Tamil  was presented by Vaishnavi Anand from London and Gomathy Karthikeyan from Chennai

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Dwaraka Rukmini  temple in Gujarat .

***

Bengaluru S Nagarajan spoke on Samartha Ramdas Swamikal

****

Mrs Karthikeyan sang.

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

ஆமார்ஷாம் திருமதி நிர்மலா நடராஜன், திரு நடராஜன்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –துவாரகையிலுள்ள துவாரகாதீஸ்வரர் கோவில் பற்றிப் பேசினார்

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

சமர்த்த ராமதாசர் பற்றிப் பேசினார்

****

சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

பாடினார்

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,30-3-2025, BROADCAST , SUMMARY

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 30-3-2025 (Post No.14,330)

Vel Yatra

Written by London Swaminathan

Post No. 14,330

Date uploaded in London –  31 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30–ம் தேதி 2025-ம் ஆண்டு

****

முதலில் ராம நவமி செய்தி

அயோத்தியில்  ஏப்ரல் ஆறாம் தேதி ராம நவமி உற்சவம்

இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ராமபிரானின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். ராம நவமி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் ராம நவமி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் சிறப்பு ஊர்வலங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள ராம நவமி விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால்  அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

ராம நவமி, ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு வருகை தருகிறார்கள் .

உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. குமார், ராம நவமிக்கு முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொண்டார், இதன் மூலம் பண்டிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தார்.

கொண்டாட்டங்களின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.

மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கோவில் சுற்றுவட்டார பகுதியை கண்காணிக்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

****

வேல் யாத்திரைக்குஉச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

 சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலையில், ஹிந்து கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. ஆனால், இந்த மலையை இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

****

காஞ்சி சுவாமிகள் திருப்பதி விஜயம்

காஞ்சி சங்கராசார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மார்ச் 21-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆந்திரப் பிரதேச காளஹஸ்தி திருத்தலத்தில் தங்கி சந்திர மெளலீஸ்வர பூஜை செய்தார் காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு அவர் வந்த போது அவரை  தக்க மரியாதைகளுடன் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர் .

அவர் காளஹஸ்தி நகரிலிருந்து திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளார் அங்கு வசந்த நவராத்ரி பூஜைகளை நடத்துவார் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதிவரை வசந்த நவராத்ரி பூஜைகள் சங்கர மட்டத்தில் நடைபெறும். விசுவாவசு புது வருடம் மற்றும் யுகாதியை ஒட்டி சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறும் .

****

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போதுகோவில் நிர்வாகம் விளக்கம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி எப்போது என்று கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை நிர்வாக அதிகாரி அலுவலகம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.  

இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பசுவான் புண்ணியத் திருத்தலம்”வாக்கிய பஞ்சாங்கம்” முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெர்விக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபசுனா திருந்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் தேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், 

*****

அம்ரூத் திட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் .பழநியில் வளர்ச்சிப்பணிகள்


 தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் அம்ருத்2.0 திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்களில் ஒருங்கிணைந்த முழுமை வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கபோகின்றன. 

தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகமக்கள் வசிக்கும் 51 நகரங்களில், அம்ரூத் 2.0 திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.

இதில் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளந . இங்கு அடுத்து வரும் 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தேவையான ரோடு, வாறுகால், குடிநீர், பூங்காக்கள், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான முழுமை திட்டம் உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இத்திட்டம் செயல்படுத்த முழுமையான திட்டம் தயாரிக்கும் பணியில் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.

****

 மருதமலை கோவில் குடமுழுக்குவேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை 

கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்

அதில்,’குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.

சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர், தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருபுகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும். யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக, தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது, 36 யாக குண்டத்தில் தமிழிலும், 36ல் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

****

திருப்பதி -அன்னதான நன்கொடை இருப்பு ரூ.2,200 கோடி

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:


திருமலையிலுள்ள வெங்கடாசலபதி அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எஸ்.வி.அன்னதான அறக்கட்டளைக்கு இதுவரை 9.7 லட்சம் பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இதுவரை 249 பக்தர்கள் ரூ.44 லட்சம் வீதம் நன்கொடை வழங்கி உள்ளனர். 139 பக்தர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது இத்திட்டத்தில் ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம்

திருப்பதியில் மார்ச் 25 ஆம் தேதி, மார்ச் 30ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. வார நாட்களில் 65 ஆயிரத்திற்கு மேலான பக்தர்களும் வார இறுதி நாட்களில் 80 ஆயிரத்திற்கு மேலானவர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்தது.

சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

****

100 ஆண்டு பழமையான இந்துக் கோவில்  இடிப்பு? : மலேசியாவில் பதற்றம்!

 

மலேசியாவில் நான்காவது பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார்கள். மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் தான் பெரும்பாலான இந்துக்கள் வாழ்கின்றனர். மலேசியாவின் தலைநகர்  கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான இந்து கோவில், இடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. மசூதி கட்டுவதற்காக இந்து கோவிலை இடம் மாற்றுவது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ கந்தசுவாமி கோவில், சுந்தரராஜப் பெருமாள் கோவில், பத்துமலை முருகன் கோவில் என 50க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் மலேசியாவில் உள்ளன.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே,1894 ஆம் ஆண்டு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், மலேசியாவில் கட்டப்பட்டது. பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இக்கோயில், பிரபலமான ஜேக்கல் மால் தெருவின் குறுக்கே அமைந்துள்ளது.

தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில்  இருக்கும் நிலம் இரண்டு பகுதியாக உள்ளது. ஒன்று  தனியாருக்குச்  சொந்தமானது மற்றும் மற்றொன்று அரசுக்குச் சொந்தமானது ஆகும்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில்  அரசு நிலத்தில் தான் உள்ளது.  2014ம் ஆண்டு, கோயில் அருகே உள்ள தனியார் நிலம், பிரபல ஜவுளி தொழில் நிறுவனமான ஜேகல் டிரேடிங் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. நிறுவனத்தின் மறைந்த நிறுவனர் முகமது ஜாகல் அகமது, இந்து கோயில் உள்ள இடத்தில், பெரிய  மசூதியைக் கட்டி இஸ்லாமியர்களுக்கு பரிசளிப்பதற்காக இந்த கோயில் நிலத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது.

இந்துக் கோவில்  இருந்த இடத்தில், பெரிய மசூதியைக் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு, மலேசிய அரசும், கோலாலம்பூர் நகர சபையும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கோயிலை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப் பட்டது.

தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவிலை இடமாற்றம் செய்வதற்கான மொத்த செலவுகளையும் ஜேகல் டிரேடிங் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவும் முன்வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோவிலுக்கான மாற்று இடங்களை  தூரம், நிலத்தின் அளவு மற்றும் வெள்ள அபாயம் ஆகியவற்றின் காரணமாக, கோவில் நிர்வாக குழு நிராகரித்துள்ளது.

இதற்கிடையே கோவில் இடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில், அந்தப் பகுதியில் 4 மசூதிகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இந்து கோவில்தான் உள்ளது. அதுவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது. எனவே இந்துக்களின் உணர்வை  மலேசிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என இந்து மக்கள் விரும்புகின்றனர்.

*****

இந்து தர்ம கலாச்சாரமே வெற்றிக்குக் காரணம்”!– அமெரிக்க FBI  தலைவர் காஷ் படேல் கருத்து

தனது வளர்ச்சிக்கும்வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

FBI  என்பது பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்  என்னும் அமெரிக்க ஸ்தாபனம் ஆகும். குற்றங்களையும் பயங்கரவாதத்தையும் புலனாய்வு செய்வது அதன் பணி

இந்திய வம்சாவளியினரின் மகனான 45 வயதான  ‘காஷ்’ படேல், இப்போது அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த  FBI  தலைவராக உள்ளார். தனது  தலைமைப் பண்புக்கு இந்து கலாச்சார மதிப்பீடுகள் எப்படி உதவின ? என்பதை காஷ் படேல்  விளக்கியிருக்கிறார்.

அமெரிக்க அரசியல் போர்க்களத்தில் ஒரு இந்துப் போர் வீரன் என்ற தலைப்பில்  ‘காஷ்’ படேலின் கட்டுரையை  அமெரிக்காவின் India Tribune என்ற  இணையச் செய்தி இதழ் வெளியிட்டுள்ளது.

1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் கருத்துக்களை உள்ளடக்கியதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது.

இந்தக் கட்டுரை, புலம்பெயர்ந்த இந்து குடும்பத்தின் எளிமையான தொடக்கத்திலிருந்து அமெரிக்க அரசின்  உயர் பதவிகள் வரை காஷ் படேலின் பயணத்தை விவரிக்கும் இந்த கட்டுரை, அவரது வாழ்க்கையில் இந்து மதம்  ஏற்படுத்திய செல்வாக்கு பற்றி விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாக, Deep State-க்கு எதிரான உறுதியான  போராட்டத்துக்கும், இந்துமத கலாச்சாரமே தனக்குத் துணிவைத் தந்ததாக காஷ் படேல் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, FBI தலைவராகப் பதவியேற்றபோது, ​​பைபிளுக்குப் பதிலாக பகவத்கீதையின் மீது சத்திரியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு, உலகத்தின் மிகப் பெரிய தேசமான அமெரிக்காவின் FBI- யை, முதல் தலைமுறை இந்தியர்  வழி நடத்த உள்ளதாகப்  பெருமிதத்துடன் கூறியிருந்தார். மேலும், தனது பெற்றோரை, ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று வாழ்த்தி வரவேற்று, செனட் நீதித்துறை குழுவின் முன் அறிமுகப்படுத்தி வைத்த காஷ் படேல், பெற்றோரின்  பாதங்களைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று  வாழ்த்துவதிலிருந்து, தனது பெற்றோரின் ஆசிகளைப் பெறுவது வரை, காஷ் படேல், தனது இந்தியப் பாரம்பரியத்தை விட்டுவிடாமல் வைத்திருக்கிறார்.

அமெரிக்கராக இருப்பதும் இந்துவாக இருப்பதும் முரண்பாடான அடையாளங்கள் அல்ல என்பதை காஷ் படேல் நிரூபித்துள்ளார். ஒரு மதச்சார்பற்ற அரசை வழிநடத்தும் அதே வேளையில், தனது இந்துமத பின்னணி மற்றும் மதிப்புகளின் வழி நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும் என்பதையும் அமெரிக்க FBI  தலைவர்  காஷ் படேல் நிரூபித்திருக்கிறார்.

****

திருத்தணி முருகன் கோவிலில் ரூ. 1.49 கோடி உண்டியல் காணிக்கை!

திருத்தணி முருகன் கோவி லில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

கடந்த 31 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், ஒரு கோடியே 49 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணம், 650 கிராம் தங்கம், சுமார் 13 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

****

சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்குகிறது.

புதிய காப்பீட்டு திட்டம்

சபரிமலையில் தற்போது விபத்து காப்பீடு திட்டம் பக்தர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வாயிலாக மரணம் அடைபவர்களுக்கும் எவ்வித பண பலனும் கிடைக்காமல் இருந்தது. இவ்வாறு இறக்கும் பக்தர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

****

திருப்பத்தூர் ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் வால்மீகி ராமாயண ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு:

கோயில் திருப்பணி வேலைகள் நடை பெற்று வருகிறது. கோவிலை சுத்தம் செய்யும் போது தமிழாக்கம் செய்யப்பட்ட 2075 வால்மீகி ராமாயண ஒலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது.

பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்கள் அதில் உள்ளன. யுத்த காண்டம் மட்டும் இல்லை.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும்   வாசித்த செய்தி மடல்

அடுத்த ஒளிபரப்பு

ஏப்ரல் ஆறாம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 30-3-2025

ஆலயம் அறிவோம்! த்வாரகா ருக்மிணி தேவி கோவில் (Post No. 14,329)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,329

Date uploaded in London 31 March 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 30-3-25 அன்று ஒளிபரப்பான உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்

ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்

நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.

–    ஆண்டாள் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது மஹாலக்ஷ்மியின் அவதாரமான ருக்மிணி தேவியின் ஆலயமும் த்வாரகா ஈசனாக உள்ள ஶ்ரீ கிருஷ்ணரின் ஆலயமும் அமைந்துள்ள த்வாரகா திருத்தலமாகும்.

த்வாரகா திருத்தலம் குஜராத் மாநிலத்தில் மேற்குக் கடற்கரையில் கோமதி (GOMTI RIVER) நதிக்கரையில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. அஹமதாபாத்திலிருந்து இது 167 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மதுராவில் பிறந்த ஶ்ரீ கிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்த பின்னர் த்வாரகாவில் தனது நகரை அமைத்துக் கொண்டு அரசாண்டார் என்பதை மஹாபாரதம் விரிவாக எடுத்துரைக்கிறது.

அவர் பூமியை விட்டுச் சென்ற பின்னர் த்வாரகா கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்பது வரலாறு.

சமீபத்தில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகள் த்வாரகா நகரின் பாகங்கள் கடலுக்கடியில் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.

ருக்மிணி தேவியின் ஆலயம் த்வாரகா நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமாகும்.

இங்குள்ள ருக்மிணி தேவியின் விக்ரஹம் அழகிய சலவைக் கல்லால் ஆனது. ருக்மிணி தேவி நான்கு திருக்கரங்களில் சங்க, சக்ர, கதா, பத்மத்துடன் திகழ்கிறாள்.

இந்தக் கோவிலில் பக்தர்கள் ஜல தானத்தைக் கோவிலுக்குச் செய்கின்றனர்.

ஆலய கோபுரத்தில் தெய்வங்களின் சிற்பங்களும் யானைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

த்வாரகா நகருக்கு வருகை புரிவோர் இந்த ஆலயத்தில் ருக்மிணி தேவியை வழிப்பட்ட பிறகே அவர்களின் யாத்திரை பூர்த்தி பெறும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயம் பற்றிய பழம் பெரும் வரலாறுகள் உள்ளன.

ஶ்ரீ கிருஷ்ணரின் ஆலயம் சற்று தூரத்தில் ஏன் உள்ளது என்பதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

ஒரு முறை துர்வாச மஹரிஷியை கிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் தங்கள் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தனர். செல்லும் வழியில் தனது தாகத்தைத் தணிக்க, தண்ணீரை ருக்மிணி கிருஷ்ணரிடம் கேட்க அவர் தனது பாதத்தால் தரையை அமிழ்த்தி கங்கையை வெளிவரச் செய்து ருக்மிணி தேவி அருந்தக் கொடுத்தார்.

ஆனால் துர்வாஸ மஹரிஷி முதலில் தனக்கு நீரை அருந்த ருக்மிணி கொடுக்கவில்லை என்பதால் கோபமுற்றார். ஆகவே அவர் ருக்மிணி தனது கணவருடன் சேர்ந்து இல்லாமல் இதே இடத்தில் தனியே இருப்பாள் என்று சாபம் கொடுத்தார். ஆகவே கிருஷ்ணரும் ருக்மிணியின் 12 வருடங்கள் தனித்தனியே வசித்தனர்.

ருக்மிணி தனியே வசித்த இடமே இப்போது ஆலயம் இருக்கும் இடமாகும். 12 வருடங்கள் தவம் புரிந்து தனது சாபத்தை ருக்மிணி போக்கிக் கொண்டாள் என்று புராண வரலாறு கூறுகிறது.

ஜகத் மந்திர் என்று பிரபலமாக அழைக்கப்படும் த்வாரகாதீஷ் ஆலயம் கிருஷ்ணருக்கான ஆலயமாகும். த்வாரகாவின் அரசன் என்ற பொருளைத் தரும் த்வாரகா ஈசன் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

ஐந்து அடுக்கு ஆலயமான இது 72 தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.

இது சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆலயம் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆதி சங்கரர் இங்கு விஜயம் செய்து தங்கியுள்ளார்.

“சார் தம்” என்ற நான்கு தலங்களுக்குச் செல்லும் யாத்திரையில் த்வாரகா யாத்திரையும் ஒன்றாகும்.

த்வாரகா, ராமேஸ்வரம், பத்ரிநாத் மற்றும் பூரி ஆகிய நான்கு தலங்களின் யாத்திரை சார் தம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

த்வாரகாதீசர் தலமானது 108 வைணவ திவ்ய தலங்களில் விஷ்ணுவின் 98 திவ்ய தேசமாக வழிபடப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் இந்த ஆலயம் மேற்கு நோக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்பக்ருஹத்துடன் ஒரு கீழ் தளமும் இங்கு உள்ளது. 95 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள இந்த ஆலயம் அழகிய சலவைக்கல்லால் ஆன ஒன்றாகும்.

மோக்ஷ த்வாரம் என்ற பிரதான நுழை வாயிலையும் ஸ்வர்க த்வாரம் என்ற வெளியே போகும் வாயிலையும் இது கொண்டுள்ளது. இந்த வாயிலிலிருந்து 56 படிகள் மூலம் கோமதி நதியை அடையலாம்.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தூபி  256 அடி உயரம் உள்ளது. இதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள கொடியில் சந்திர மற்றும் சூரிய பிம்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சூரிய சந்திரர் உள்ள வரையில் இங்கு கிருஷ்ணர் இருப்பதை இது சுட்டிக் காட்டுவதாக ஐதீகம்.

முக்கோண வடிவில் உள்ள இந்தக் கொடியின் நீளம் மட்டும் 50 அடியாகும்.

ஒரு நாளைக்கு நான்கு முறை இந்த ஸ்தூபியில் புதுக் கொடி ஏற்றப்படுகிறது. புதுக் கொடியை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி ஏற்றுகின்றனர்.

ஹர்யானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரம்,  உத்தர பிரதேசத்தில் உள்ள  மதுரா குஜராத்தில் உள்ள த்வாரகாதீசர் தலம் ஆகிய மூன்றும் கிருஷ்ண பக்தர்கள் மேற்கொள்ளும் மூன்று திவ்ய கிருஷ்ண தல யாத்திரை தலங்களாகும்.

ராஜபுத்ர மஹாராணியான பக்த மீரா இந்தத் திருத்தலத்திலேயே இறைவனுடன் ஒன்றாகக் கலந்தாள் என வரலாறு கூறுகிறது.

சப்த பூரி ஸ்தலங்களுள் ஒன்றாகவும் த்வாரகா அமைகிறது.

ஆதி சங்கரர் ஸ்தாபித்த நான்கு மடங்களுள் த்வாரகா மடமும் ஒன்று என்பது குறிப்பிடத் தகுந்தது.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள வோர்ல்ட் டேலண்ட் ஆர்கனைசேஷன் த்வாரகாவை 2021 மார்ச் 22ம் தேதி உலகின் அற்புதமான இடம் WORLD AMAZING PLACE என்ற நற்சான்றிதழை வழங்கிக் கௌரவித்துள்ளது.

எல்லையற்ற பெருமையைக் கொண்ட இந்தத் திருத்தலம் இந்து மதத்தின் புனிதமான தலமாகும். மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட நூல்களில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நூல்கள் மூலம் இதன் பெருமையைச் சிறிது தெரிந்து கொள்ளலாம்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ கிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

** 

ரேகை சாஸ்திரம் பற்றி பிரபல விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் (Post No.14,328)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,328

Date uploaded in London – –31 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-3-25 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ரேகை சாஸ்திரம் பற்றி பிரபல விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் கூறிய சம்பவம்! 

ச. நாகராஜன் 

பிரபல விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸ் அறிவியலில்,  ‘போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்ஸேட்’ (Bose-Einstein condensate) என்பதைக் கண்ட விஞ்ஞானி. இவரது பல கண்டுபிடிப்புகள் க்வாண்டம் இயற்பியல் தோன்றிய ஆரம்ப காலத்தில் அனைவரையும் வியக்க வைத்தன!

1-1-1894ல் பிறந்த இவர் 4-2-1974ல் மறைந்தார்.

இவரது வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள் உண்டு.

அவை அனைத்தும் இந்திய சாஸ்திரங்கள் கூறும் கொள்கைகளை விளக்கும் சம்பவங்களை மெய்ப்பிக்கும் சம்பவங்களாகும்.

அவற்றில் ஒன்று இது.

ஒரு நாள் காலையில் அவரிடம் பெருமதிப்பு கொண்டவரும் அவரது மாணாக்கருமான பிரபல இயற்பியல் பேராசிரியரான பார்த்தா கோஸ்  (Partha Gose) அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

பேச்சின் இடையில் ஜோதிடம் மற்றும் கைரேகை பார்ப்பது போன்றவை எல்லாம் எவ்வளவு குருட்டுத்தனமானது என்பதை உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருந்தார் பார்த்தா கோஸ்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்யேந்திரநாத் போஸ் பேசலானார்.

“நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன், கேள்.. எனது இளமைப் பருவத்தில் ஒரு ஜோதிடர் எனது கைரேகையைப் பார்த்து விட்டு ஒரு ரேகையைச் சுட்டிக் காண்பித்து,  நான் படிப்பில் சுமாராகத் தான் இருப்பேன் என்று கூறினார்.

பின்னர் ஐரோப்பா சென்று உயர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன்.

வால்டேருக்கு (விசாகப்பட்டினம்) ஒரு முறை நான் தேர்வு அதிகாரியாகச் சென்றேன். அங்கு பல பேராசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது கைரேகையைக் கணித்த இந்தப் பழைய சம்பவத்தைப் பற்றிக் கூறினேன். எல்லா பேராசிரியர்களும் சிரித்தனர் – ஒருவரைத் தவிர!

அவர் எனது கைரேகையைப் பார்க்க விரும்பினார். நானும் காண்பித்தேன்.

அவர் எனது கைரேகையை நன்கு பார்த்து விட்டு,  இந்த ரேகை ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது.” என்று சொல்லி விட்டு நிறுத்தி விட்டார்.

‘என்ன சொல்கிறது’, என்று நான் வலியுறுத்திக் கேட்டபின் அவர், “ உங்களது குழந்தைகளில் ஒன்று பிறந்த பிறகு இயற்கையற்ற விதத்தில் மரணம் அடைவதைக் குறிக்கிறது” என்றார்.

நான் திடுக்கிட்டேன்.

தொலைதூரத்தில் வால்டேரில் இருந்த ஒருவர் என்னைப் பற்றி முழுதுமாக அறிவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? சில நாட்களுக்கு முன்னர் தான் எனது அண்டைப்புறத்து பெண்மணி ஒருவர் எனது குழந்தையை அவரது மடியில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தக் குழந்தை கொதிக்கும் பாலில் தவறி விழுந்து உடனே இறந்து விட்டது.”

இதை அவர் கூறி முடித்தவுடன் அனைவரும் பிரமித்தனர்.

“இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க அனைவரும் மௌனமாக இருந்தனர்.

ஆக, கைரேகை சாஸ்திரம் உண்மை தான் என்பதையும், ரேகையைச் சரியாகப் பார்ப்பவர் உண்மைகளை நுணுக்கமாக ரேகைகளின் மூலமாகக் கண்டறிய முடியும் என்பதையும் அவர் கூறிய  இந்தச் சம்பவம் விளக்குகிறது!

***

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் (Post No.14,327)


POSTER FOR NEW RETIREMENT HOME

Written by London Swaminathan

Post No. 14,327

Date uploaded in London –  30 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்ச் மாதம் (2025)  சென்னை முதல் கும்பகோணம் வரை  பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

சாலை ஓரக் கோவில்கள் ஏராளம் ; கரும்புச் சாறு, வெள்ளரிக்காய், பலாப்பழம், பனை நுங்கு , மல்லிகைப்பூக்களை விற்கும் ஆட்களை நிறைய  காண முடிகிறது

போகும்  வழியெல்லாம் ‘டோல் கேட்’டுக்களுக்குப் பஞ்சமில்லை.. டாக்சிக்காரர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ‘பேட்டா’வுடன் கிலோமீட்டருக்கு 13 முதல் 15 ரூபாய் வரை வாங்குகின்றனர்.

இரட்டை அறை  ரூம்களுக்கு 2000 ல் 3000 வரை ஓரிரவுக்குச் செலவாகிறது . சாப்பாட்டுக்கு அதிக செலவாகாது; ஒரு வேளைக்கு  முழுவயிறு சாப்பாட்டுக்கு 100 முதல் 125 ரூபாய் வரை இருந்தால் போதும்.

காப்பி, டீ   என்பதெல்லாம் சாலை ஓரக் கடைகளில்  கொள்ளை மலிவு ;15 ரூபாய்தான்!

வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்வோருக்கு அது சொர்க்க பூமிதான் .

முதியோர் இல்லம் போன்றவற்றில் அறையில் தங்கினால் மாதத்துக்கு முப்பதாயிரம் ரூபாய் வேண்டும்; சொகுசான வசதி படைத்த இடங்களில் வயதானோர் வாழ்ந்தா ல் இதைப்போல இரு மடங்கு ரூபாய் வேண்டும் .

எனக்குத் தெரிந்த மூன்று நான்கு குடும்பங்கள் கோவை நானா- நானியில் தங்கியுள்ளனர் ; நான் அந்த இடத்தைப் பார்த்ததில்லை. கும்பகோணத்தில் வெஜிட்டேரியன் இந்துக்கள் மட்டுமே தங்கும் ஸ்ரீவத்சம் விடுதியில் எனது நண்பர் தனியாக வாழ்கிறார். அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ‘போர்’ அடிக்காமல் இருக்க அந்த இடத்திலேயே கச்சேரிகள் உபந்யாசங்கள்  நடப்பதாகவும் கூறினார்.

வைத்தீஸ்வரன் கோவில் அக்ஷர்தாமில் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்தேன்; கும்பகோணம் ஸ்ரீவத்சத்தில்  (Retirement Homes) பிராமண சாப்பாடு, காப்பி உள்பட ஒரு நாளைக்கு 2000 ரூபாய்தான் ; இது நல்ல வசதியுள்ள இரட்டைப் படுக்கை அறைக்கான செலவு.

மஹாரண்யம் ஆஸ்ரமத்தில் எனக்குப் பிடித்த தையல் இலையில் சாப்பாடு சாப்பிட்டேன் 

வழியெங்கும் பூக்கடைகள் , மாலைக் கடைகள் 

TO BE CONTINUED…………………………….

–subham—

Tags- Kumbakonam, Old age home, Retirement Home, Roadside views, கும்பகோணம் ஸ்ரீவத்சம்,   சென்னை – சுவாமிமலை, சாலையோரக் காட்சிகள், பூக்கடைகள் , மாலைக் கடைகள் , PART 1

London Swaminathan’s New book on Shakespeare

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are raedily available in Pustaka.co.in

Enjoy reading them.

Here is one of my latest books

ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு book title

பொருளடக்கம்

1. பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல்

2. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் 155 பெண்கள்

3. பெண்கள் மீது அவ்வையார், அம்பலவாணர் தாக்குதல்

4.ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள்

5.ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1

6. வராஹமிஹிரர் சொல்லும் அண்டங்காக்கை ஜோதிடம்

7. ஷேக்ஸ்பியர், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் கிரகணங்கள்

8.ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் சகுனங்கள்

9.தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் ஜோதிடம்- ஒரு ஒப்பீடு-1

10. தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் ஜோதிடம்- ஒரு ஒப்பீடு-2

11.மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்; ஷேக்ஸ்பியர் வசனங்கள்

12.தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-1

13.தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும் -2

14.ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் — மனு

15.தமிழ் பன்றிகளும் ஆங்கிலப் பன்றிகளும்

16. தமிழ் சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் பணம்

17.தமிழ் நாய்களும் ஷேக்ஸ்பியர் நாய்களும் பட்டபாடு!

18.கருமிகள் பற்றி ஷேக்ஸ்பியரும் ரிக் வேதமும் தமிழ் வேதமும் செப்புவது என்ன?

19.தமிழ், சம்ஸ்க்ருத ஷேக்ஸ்பியர் நூல்களில் கோபம், சினம்  

20.தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் தேச பக்தி

21.தமிழ், சம்ஸ்க்ருத ஷேக்ஸ்பியர் நூல்களில் பொறாமை

22.தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- குடிபோதை

**********

புஸ்தக அட்டையில் ஷேக்ஸ்பியர் படம் 

ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு book title

முன்னுரை

பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் Great Men Think Alike என்பது ஆன்றோர் வாக்கு. 38 நாடகங்களையும், 154 கவிதைகளையும் புனைந்த ஷேக்ஸ்பியர் ஒரு பெரிய சிந்தனையாளர், நாடக நடிகர் , நாடகம் படைத்தவர், மஹா மேதை என்பதை உலகம் அறியும். அவருடைய நாடக கதா பாத்திரங்களை சம்ஸ்க்ருத நாடகங்களுடனும் படைப்புகளுடனும் ஒப்பிட்டு பல நூல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் தலைப்பு வாரியாக அவரது படைப்புகளை ஒப்பிட்டு தமிழ் நூல்கள் வெளியாகவில்லை; ஒரு வேளை, அந்தக் காலத்தில் யாரேனும் முயற்சி செய்து இருக்கலாம்.. சொல்லப்போனால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அப்படியே சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி யாரும் தமிழில் மொழிபெயர்க்கவும் இல்லை. கதைகளைத் தழுவிய நூல்களும், நாடகக் கதை சுருக்கங்களும் மட்டுமே வெளியாகின. காரணம் என்னவெனில் அவரது ஆங்கிலம் 600 ஆண்டுகளுக்கு முந்திய ஆங்கிலம்; அவரே ஆயிரத்துக்கும் மேலான புதிய சொற்களை உருவாக்கியுள்ளார். அவர் உபயோகித்த ஆங்கிலச் சொற்களின் பொருள் இப்போது அடியோடு மாறிவிட்டது. ஆங்கிலப் பாடம் பயில்வோர் கூட அவரது ஆங்கிலத்தை மொழிபெயர்த்தே படிக்கவேண்டியுள்ளது  அதாவது நமது கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தே படிக்கவேண்டியுள்ளது; நானும் கூட அதிக நேரம் செலவிட்டு தமிழ், ஸம்ஸ்க்ருதப் பாக்களுடன் ஒப்பிட்டேன்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க ஆங்கில அறிவும், தமிழ் அறிவும், நாடகம் அல்லது கதைகளை எழுதும் புலமையும் தேவை. லண்டனில் பி பி சி தமிழோசையில் சங்கர் அண்ணா மொழிபெயர்த்த நாடகங்களில் நானும் நடித்து இருக்கிறேன். அவரும் கூட அதை புஸ்தகமாகப் போடுவதற்கும் வெளியிடுவதற்கும் மறுத்துவிட்டார். காரணம் அவை கதைத் தழுவல்கள்தான்; சில நேரங்களில் தமிழ்ச் சுவைக்காக ஒரிஜினல் வரிகளை மாற்ற வேண்டியிருந்தது.

என்னுடைய  இந்த நூலில் பணம், பெண்கள் , பேய்கள், சகுனங்கள், மூட நம்பிக்கைகள், ஜோதிடம், தேசபக்தி, பொறாமை போன்ற 22 தலைப்புகளில் ஷேக்ஸ்பியரது கருத்துக்களை ஒப்பிவிட்டு எழுதியுள்ளேன். நான் முன்னர் எழுதிய கட்டுரைகளை அல்லது அவற்றின் பகுதிகளை எடுத்து ஒப்பிட்டதால் முன்னர் எழுதிய விஷயங்கள் மீண்டும், மீண்டும் வரும். அவை இல்லாமல் ஒப்பிட முடியாது. ஒவ்வொன்றுக்கும் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே தமிழில் கொடுத்தேன். அல்லது புத்தகம் பெருத்துவிடும்;  சுவையும் குன்றிவிடும்.

படித்து மகிழுங்கள்; இதைப் படித்த பின்னர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முழுக்கப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும் என்று நம்புகிறேன்.

லண்டன் சுவாமிநாதன்

நவம்பர் 2024

Swami_48 @ yahoo.com

swaminathan. santanam @gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – November 2024

Subject – Literature

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Malaysia and Greece

*****

 IF YOU WANT TO SEE ALL THE 137 BOOKS, PLEASE GO TO PUSTAKA.COO.IN

HOW TO READ OR DOWNLOAD OR GET PRINTED BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள் (Post No.14,326)

Written by London Swaminathan

Post No. 14,326

Date uploaded in London –  30 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பண்டிகைகள்:–  ராமநவமி- 6; மஹாவீரர் ஜெயந்தி -10; பங்குனி உத்தரம் – 11/12; ஹனுமான் ஜெயந்தி -12;  தமிழ் புத்தாண்டு – 14; அக்ஷய திருதியை – 30

கிறிஸ்தவப் பண்டிகை= புனித வெள்ளி – 18; ஈஸ்டர் ஞாயிறு -20; ஈஸ்டர் திங்கள் -21

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 8, 24;

பூர்ணிமா -12;  அமாவாசை – 27.

சுப முகூர்த்த தினங்கள்

ஏப்ரல்  4, 7, 9, 11, 16, 18, 23, 25, 30

ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை

துகிலில் வர்ணம் வீசு-என்

துணியில் வர்ணம் பூசு!

முகில்வண்ணா!உன்நிறமென்

துகிலில் நன்றாய்ப்பூசு!

****

ஏப்ரல் 2 புதன்கிழமை

1 )ஆயுள் பூராவும் வண்ணான்

அடித்துத் தோய்த்தாலும்,

ஒட்டிய உன் வண்ணம்

விட்டுவிடாதவண்ணம் (துகிலில்………..)

****

ஏப்ரல் 3 வியாழக்கிழமை

2 )செவ்வண்ணம் வேண்டாம் ;

பச்சைநிறமும்  வேண்டாம் ;

உந்தன் முகில் வண்ணத்தையே

என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)

****

ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை

3 ) வாழ்நாளெல்லாமென்னைக்

காத்திருக்கவைத்தாலும்

வர்ணம் பூசிக் கொள்ளாமல்

வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)

****

ஏப்ரல் 5 சனிக்கிழமை

நீரினும் நுண்ணியது எது?

பூமியினும் பாரமானது  எது?

தீயினும் வெம்மையானது  எது?

மையினும் கருமையானது எது?

****

ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை

நீரினும் நுண்ணியது ஞானம்!

பூமியினும் பாரமானது பாபம்!

தீயினும் வெம்மையானது க்ரோதம்!

மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)

****

ஏப்ரல் 7 திங்கட்கிழமை

மீராவின் கிரி தரன் சரணத்திலே,

பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,

ஷ்யாம் சரணத்திலே

இணைந்ததென்னிதயம் (துகிலில்)

****

ஏப்ரல் 8 செவ்வாய்க்கிழமை

எழுந்திரு அன்பே  எழுந்திரு அன்பே

கையில் குழலுடன் காதலனே எழுந்திரு

இரவும் முடிந்ததே விடியலும் வந்ததே

கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே

****

ஏப்ரல் 9 புதன்கிழமை

கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய

காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு

****

ஏப்ரல் 10 வியாழக்கிழமை

வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க

ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே

வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே

மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே

*****

ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை

மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்

என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே

****

ஏப்ரல் 12 சனிக்கிழமை

காலில் கொலுசுடன் ஆடுவேனே மீரா ஆடுவேனே

தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே  என் நாராயணன்

தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே

****

ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை

இராணா அனுப்பிய விஷமும் குடித்தேனே

தானாக சிரித்தபடி குடித்தேனே நானும்

தானாக சிரித்தபடி குடித்தேனே

****

ஏப்ரல் 14 திங்கட்கிழமை

உலகம் முட்டாளென சொல்லுமே

சுலபத்தில் ஏளனம் செய்யுமே

சுலபத்தில் ஏளனம் செய்யுமே

****

ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை

கலகம் செய்து குடும்பம் அழிப்பாளென்று

உலகில் சொல்லும்  உறவுகளே

உலகில்  சொல்லும்  உறவுகளே

****

ஏப்ரல் 16 புதன்கிழமை

இல்லத்தில் இருப்பானே இல்லாது மறைவானே

உள்ளபடி காட்டிலே உல்லாசமாய் திரிவானே

இராதை உடனே இராசத்தில் இருப்பானே

பாதை காட்டியே பாவையுடன் வருவானே

****

ஏப்ரல் 17 வியாழக்கிழமை

மீரா கொண்டேன் அழியா உறவே

கோவர்த்தன கிரிதாரியுடன்

மீரா கொண்டேன் அழியா உறவே

****

ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை

நீ துக்கங்களை அறவே களைவாயே

நீ துக்கங்களை அறவே களைவாயே

அன்று அழகாய் சேலைகள் தந்தாயே

நின்று திரௌபதி மானம் காத்தாயே

****

ஏப்ரல் 19 சனிக்கிழமை

பக்தனைக் காக்க உருமாறி வந்தாயே

தக்க தருணத்தில் நரஹரியாய்  வந்தாயே

நரசிம்ம கோலத்தில் நரனை அழித்தாயே

வரங்கள் வாங்கியவனை வாகாய் பிளந்தாயே

****

ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை

ஆதி மூலமாய் முதலை வாயிலிருந்து காத்தாயே

ஜோதியாய் கஜேந்திரனுக்கு சுகம் அளித்தாயே

****

ஏப்ரல் 21 திங்கட்கிழமை

ஓ மீராவின் கிரிதாரி

துக்கம் என்னை சூழ்ந்திருக்க காக்க வைப்பாயோ

வருவாயே  வருவாயே என்னை விடுவிப்பாயே 

*****

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை

உன் காரணமாக உலக சுகம் விட்டேனே  என்னைக் காக்க வை ப்பது ஏநோ

கருநீல அழகனுக்கு காணிக்கை  தந்தேன்; காதலுடன் என் வாழ்னவ காலடியில் தந்தேன்

****

ஏப்ரல் 23 புதன்கிழமை

ஹரி குணம் பாடி நான் ஆடுவேனே  பிரபு குணம் பாடி நான் ஆடுவேனே

என் மனக் கோவிலில் இருப்பேனே

நான் கீதை, பாகவதம்  படிப்பேனே

****

ஏப்ரல் 24 வியாழக்கிழமை

எழுந்திரு அன்பே   எழுந்திரு அன்பே   னகயில் குழலுடன் காதலனே எழுந்திரு

இரவும் முடிந்ததே  விடியலும் வந்ததே  கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே

****

ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை

கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய

காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு

****

ஏப்ரல் 26 சனிக்கிழமை

வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க

ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே

****

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை

வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே

மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே

மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்

என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே

****

ஏப்ரல் 28 திங்கட்கிழமை

உன் பணியாளாய் 

வைத்துக் கொள்  lஎன்னை உன் பணியாளாய் 

வைத்துக் கொள்

****

ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமை

கோவிந்தனை என்னுடன் கூட்டியே  வந்தேனே

பேரமும்பேசி அன்னையே போற்றியே பெற்றேனே

****

ஏப்ரல் 30 புதன்கிழமை

மலிவென்று சிலரும் மகத்தென்று சிலரும்

கலியிலே கூறவே கருத்திலே  எடைபோட்டேனே

கருநிறம் என்பாரே கடல்வெண்மை என்பாரே

கருத்தினில் நிறைந்தவனுக்கு ஒரு நிறம் இல்லையே

Please note that i have taken Tamil translations of Mirabai from the websites; thanks.

—-subham—-

Tags- மீராபாய் , ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள்