சென்னை நங்கநல்லூர் கோவில்கள் (Post.14,318)

Nanganallur Sri Anjaneyar Temple; roadsise bypaaser worshipping from the road.

Written by London Swaminathan

Post No. 14,318

Date uploaded in London –  28 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சென்னைப் பு ற    நகரப் பகுதியான  நங்க நல்லூரில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்..

இப்போது அந்த வட்டாரத்தில் ராஜ ராஜேஸ்வரி கோவில், பெருமாள் கோவில், குருவாயூரப்பன் கோவில் ஆகியனவும் பக்தர்களை ஈர்த்து வருகின்றன .

நாங்கள் 2025 மார்ச் 18-ஆம் தேதி அனுமார் கோவிலுக்கும் ராஜேஸ்வரி கோவிலுக்கும் சென்றோம்.

ஊரின் பெயரைச் சொன்னவுடன் ஆஞ்சனேயர் தோற்றம்தான் மனக் கண்களில் தோன்றும். இங்கு 32 அடிக்கு பிரம்மாண்டமாக உள்ள கம்பீரமான ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்தது.

சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோவிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவிலும் இவ்வூரின் பழமைக்கு சான்று பகர்கின்றன.

இவை தவிர உத்திர குருவாயூரப்பன் கோவில், ஐயப்பன் கோவில், இராஜராஜேசுவரி கோவில், இராகவேந்திர கோவில் சத்ய நாராயணன் கோவில், தேவி கருமாரியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில் ஏழூரம்மன் கோவில், ஹயவதன பெருமாள் கோவில், அர்த்த நாரீசுவரர் கோவில், லட்சுமி நாராயணன் கோவில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோவில், சித்தி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்கள்

இருக்கின்றன . காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டது .

ஆஞ்சனேயரை ரோட்டிலிருந்தே தரிசிக்கலாம்.  போகும் வரும் பக்தர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி ஒரு கும்பிடு போடுகினறனர். நாங்கள் வாங்கிச் சென்ற துளசி மாலையை கர்ப்பக்கிரகத்தில் சார்த்தாமல் பிரகாராத்தில் உள்ள அனுமார் படத்துக்குப் போடச் சொன்னார் பட்டர். ஏன் என்று புரியவில்லை.

இப்போதெல்லாம் பகதர்கள் கூட்டம் பெருகிவிட்டதால் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் போலும் ; வடக்கில் நாங்கள் திரயம்பகேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போதும் சந்நிதிக்குள் நுழையும் போதே பூக்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள் எல்லாப்   பூக்களையும் போட்டால் சாமி மறைந்துவிடுவார்!  இதற்கு மாற்றுவழி காண்பது நல்லது.

கேரளத்திலுள்ள குருவாயூர்க் கோவிலைப் போலவே நங்க நல்லூர் கோவிலும் இருப்பதாக , அங்கு சென்றவர்கள் சொன்னார்கள்.

Sri Lakshmi Sathyanarayana Perumal Temple, Next to Rajarajeswari Temple

Sri Rajarajeswari Temple, Nanganallur

Nanganallur Anjaneya Temple

ராஜ ராஜேச்வரி கோவில்

இது ஒரு குறுகிய சந்தில் உளது ஆண்கள் மேல்ச்  சட்டையைக் கழற்றிவிட்டே செல்லலாம். பதினெட்டாம் படி போல படிகளில் ஏறி நல்ல லட்சணமான ராஜேஸ்வரியைத் தரிசிக்கலாம்  பிரகாரத்தை   வலம் வந்த பின்னர் அதே படிகளில் இறங்கி வெளியேறவேண்டும்.

அருகிலுள்ள சந்நிதியில் திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் பூஜித்த சிவலிங்கமும் , அவருடைய தண்டமும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் பிற சந்நிதிகளும் இருக்கின்றன. சிறிய கோவில் ஆனாலும் சுவற்றில் அழகான படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

பெரும்பாலான கோவில்கள் புதிதாகத் தோன்றியவை; ஆயினும் பக்தர்களின் கூட்டத்துக்குக் குறைவில்லை .

—SUBHAM—

TAGS- சென்னை ,நங்கநல்லூர் ,கோவில்கள் , ராஜராஜேஸ்வரி, ஆஞ்சனேயர்

சாயி-கியாட்ரி என்பது என்ன? ஒரு சைக்கியாட்ரிஸ்டின் அனுபவமும் விளக்கமும்! (Post No.14,317)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,317

Date uploaded in London – –28 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 7-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

சாயிகியாட்ரி என்பது என்னஒரு சைக்கியாட்ரிஸ்டின் அனுபவமும் விளக்கமும்! 

ச.நாகராஜன்

 உலகப் பெரும் சைக்கியாட்ரிஸ்ட் நிபுணர் சாமுவேல் ஹெச். சாண்ட்விச் (SAMUEL H. SANDWEISS) ஆவார். 

அவர் தனது உளவியல் அனுபவங்களுடனும் மெத்தப் படித்தப் படிப்புடனும் புட்டப்பர்த்தியில் இருந்த ஶ்ரீ சத்யசாயி பாபாவை அணுகினார்.

ஆனால், என்ன ஆச்சரியம்! பாபாவிடம் அவர் ஒரு புது வித சைக்கியாட்ரியைக் கண்டார்.

பல்வேறு செய்திகளை அவர் சேகரித்தார். பல வித அனுபவங்களை அவர் பெற்றார். அவற்றையெல்லாம் தொகுத்து “சாயிபாபா தி ஹோலி மேன்… அண்ட் தி சைக்கியாட்ரிஸ்ட்” – (SAIBABA THE HOLY MAN… AND THE PSYCHIARRIST) என்ற புத்தகத்தை எழுதினார்.

கல்லுக்குள் இருக்கும் கடவுள்!

ஹோவர்ட் மர்பெட் எழுதிய சாயிபாபா – மேன் ஆஃப் மிராகிள்ஸ் என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவத்தைத் தருகிறார் சாண்ட்விச்.

டாக்டர் ஒய்.ஜே. ராவ் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் ஜியாலஜி பிரிவின் தலைவராகப் பணியாற்றுபவர்.

அவர் பாபாவை ஒரு சமயம் புட்டபர்த்தி சென்று தரிசித்தார்.

பாபா அங்கிருந்த ஒரு உடைந்த பாறாங்கல் துண்டு ஒன்றை கையில் எடுத்தார். அதை ராவின் கையில் கொடுத்த பாபா, “இதில் என்ன இருக்கிறது? என்று கேட்டார்.

ராவ் தான் நிலவியல் நிபுணராயிற்றே! அந்தப் பாறாங்கல்லில் இருந்த கனிம தாதுக்களை எல்லாம் விவரித்தார்.

பாபா, “அதை நான் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள்” என்றார்.

ராவ் சற்று யோசித்து விட்டு, “மாலிக்யூல், அணுக்கள், எலக்ட்ரான், புரோடான்” என்றார்.

பாபா, “இன்னும் ஆழமாக….” என்றார்.

ராவ், “எனக்குத் தெரியாது ஸ்வாமி” என்றார்.

பாபா ராவின் கையில் இருந்த அந்தத் துண்டுக் கல்லை வாங்கினார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாயால் ஒரு ஊது ஊதினார். என்ன ஆச்சரியம். ஒழுங்கற்ற வடிவமத்தில் இருந்த கல் இப்போது கிருஷ்ணரின் சிலையாக மாறி இருந்தது!

நிலவியல் நிபுணர் அந்தக் கல்லின் நிறம் மாறி இருந்ததையும் அதன் தாதுக்கள் மாறி இருந்ததையும் நுட்பமாகக் கவனித்தார்; பிரமித்தார்!

பாபா: “பார்த்தீர்களா? உங்களது அணு,த்திரள், அணுக்கள் ஆகியவற்றை எல்லாம் கடந்து உள்ளே கடவுள் இருக்கிறார். கடவுள் இனிப்பானவர். ஆனந்தம் தருபவர். இதை உடைத்துப் பாருங்கள்; இதன் ருசியைப் பாருங்கள்!

திகைத்துப் போன ராவ் கிருஷ்ணரின் பாதத்தில் இருந்த ஒரு துணுக்கை எடுத்து வாயில் போட்டார். அது இனித்தது!

“இதிலிருந்து சொல்லுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய உண்மையை நான் கண்டு கொண்டேன்.,. நவீன அறிவியல் முதல் வார்த்தையைத் தான் தருகிறது. ஆனால் ஆன்மீகப் பெரியார்களோ அதன் கடைசி வார்த்தை வரை அனைத்தையும் அறிந்தவர்கள்” என்றார் ராவ்!

ராவ் பெற்ற அனுபவங்களைப் போலவே விதவிதமான அனுபவங்களைப் புட்டபர்த்தியில் பெற்ற சாண்ட்விச் திகைத்தார்; பிரமித்தார்.

இறுதியில் அவர் கூறினார் இப்படி: “ உளவியலின் லட்சியம் மதத்தின் லட்சியம் போல இறைவனை உணர்வது தான். இதை அன்பின் மூலமாக அடைய முடியும். பாபாவினுடனான எனது அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போது இவரது அறிவியலை “சாயி-கியாட்ரி” (Sai-chiatry) என்றே சொல்வேன்.

ஆத்மாவைப் பற்றிய – பிரக்ஞையைப் பற்றிய இதை அன்பின் சாயிகியாட்ரி (Sai-chiatry of Love ) என்றே சொல்வேன்.

அறிவியலுக்கும் அப்பாற்பட்டது தான் சாயிகியாட்ரி!

இதை உலகின் பெரும் சைக்கியாட்ரி நிபுணர் அனுபவித்துக் கூறிய போது பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்!

***

Hindu Crossword2732025 (Post No.14,316)

Written by London Swaminathan

Post No. 14,316

Date uploaded in London –  27 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2   3 4
         
5     6  
         
7        
         
8       ←9
         
10       ↑ 11 

ACROSS

1.Name of a Gandharva; name of Tamil new year (9 letters)

5.Venus; white colour (5)

6.Parvati’s another name (3)

7.Unchageable; permanent; Pole star; boy’s name in Hindu Puranas (6)

8.Bangladesh; Tamil name of Bengal (8)

9.Girl’s name; free from impurities  (5)

10.Village chief; used throughout India from Vedic days (7)

DOWN

1.Krishna’s father; epithet of Krishna (7)

2.Parrot in Sanskrit; also son of Vyasa(4 letters)

3.Wife of Vasistha; Symbol of Chastity (9)

4.Rising up; used with sunrise (6)

11.Exertion; hard work; used in Indian languages ↑  (4)

V 1IS2VAVA3SU4
A U   R D
S5UKRA U6MA
U A   N Y
D7HRUVAD A
E  D  H M
V8ANGALAMA←9 
   A  T R
G10RAMANI S↑ 11 

–subham—

Tags- Hindu Crossword2732025

LONDON SWAMINATHAN’S NEW BOOK ON AUSTRALIA


I HAVE WRITTEN 139 BOOKS IN TAMIL AD ENGLISH.

OUT OF THEM TWO ARE OUT OF PRINT. OTHER 137 BOOKS ARE AVAILABLE FROM PUSTAKA.CO.IN.

HERE IS MY TAMIL BOOK ON AUSTRALIA 

அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா- book title

பொருளடக்கம்

1.ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!

2.ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்

3.மருந்து மரங்கள்

4.உலக அதிசயம்: ஆஸ்திரேலிய பவளப்  பாறைகள் !

5.ஆஸ்திரேலியா முழுதும் தங்கக் குவியல், ரத்தினக் குவியல்

6.ஆஸ்திரேலியாவில் அய்யர் மலை

7.ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்

8.பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’

9.ஆஸ்திரேலிய பழங்குடிகள் மொழிகளில் தமிழ்ச் சொற்கள்

10.ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்

நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்

11.பத்தாயிரம் கடற்கரைகள்

12. சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

13. கொண்டையுள்ள காக்காட்டு; சிரிக்கும் பறவை கூகாபர்ரா;  கோமாளிப் பறவை!

14. பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!

15.ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை, கார் விலை குறைவு !

16.பாரமேட்டா நதியில் படகு சவாரி

17.ஆஸ்திரேலிய பாலைவன அதிசயங்கள்! பத்து லட்சம் ஒட்டகங்கள்

18. டால்பின் பார்க்க நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்

19.பத்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நகரங்கள்

20. டாஸ்மேனியா தீவு, அடிலெய்ட், டார்வின், பிரிஸ்பேன் நகரின் சிறப்புகள்

21.அதிசய ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள்

22.ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இந்துக்களா?

23.ஆஸ்திரேலிய நீல மலைக்கு (Blue Mountains) எனது பயணம் 

24.ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் ! ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா?

25.ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில்

26.சிட்னி நூலகத்துக்கு விஜயம்

27.ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?

28.சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்

29.ஆதிவாசி மொழிச் சொற்கள்

30.சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்     

31.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

******

அட்டைப்படத்தில் சிட்னி ஆபரா ஹவுஸ் 

அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா book title

முன்னுரை

ஆஸ்திரேலியா என்னும் கண்டம் முழுதும் ஒரே நாடு ! உலகிலுள்ள பெரிய நாடுகளில் ஆறாவது இடத்தைப் பிடிப்பதோடு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நிற்கும் நாடு; கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளிலும் பெயர் எடுத்த நாடு. உலகில் வேறும் எங்கும் இல்லாத பிராணிகளும் பறவைகளும் தாவரங்களும் நிறைந்த நாடு. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் குடியேறிய நாடு; பழங்குடி மக்கள் தங்களுக்காக 250 மொழிகளையும் பண்பாட்டினையும் உருவாக்கி நாற்புறமும் வசித்த பூமி.

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டேன்;  பத்து நாட்கள் தங்கியபோது சிட்னி நகரம், மற்றும் வட கோடியில் கடலில் உள்ள அதிசயமான பவளப் பாறைகள், இடையிலுள்ள பிரிஸ்பேன் நகரம் முதலியவற்றைக் கண்டேன் ; ஆனந்தம் கொண்டேன்.

இப்போது மூன்று மாதங்கள் தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது  டிசம்பர் 2024  முதல்  2025-ஆம் ஆண்டு மார்ச் வரை தங்கியதில் இந்த கண்டத்தை நன்கு ஆழமாக அறிவதற்கும் , புதிய இடங்களைக் கவருவதற்கும் வாய்ப்பு கிடைத்தது . நான் கண்ட அதிசயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் வேட்கையால் கட்டுரைகளாக எழுதினேன்; இப்பொழுது அந்தக் கட்டுரைகள் உங்கள் கைகளில் புஸ்தகமாகமத் தவழ்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் பற்றியும் ஒரு புஸ்தகமே எழுதலாம். நானோ ஏழு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களையே கண்டேன் .ஆகையால் முழுவதையும் கண்டதாக நினைத்து விடாதீர்கள்; ஆயிரம் அதிசயங்களில் ஒரு பகுதியை  மட்டும் எழுதியதாக சொல்லுவேன். இதன் மூலம் நீங்களும் ஆஸ்திரேலியாவைப் பார்க்க வரவேண்டும் என்பதே என் ஆசை. நான் முன்னர் எழுதிய 135 புஸ்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்துவரும் ஆதரவுக்கும் அவைகளை புஸ்தகங்களாகக் கொண்டுவந்த புஸ்தக. காம் நிறுவனத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

மார்ச் 2025

swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – March 2025

Subject –Travel

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 135 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

london swaminathan in pacific ocean

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—PLEASE SEE ALL MY 137 BOOKS IN PUSTAKA.CO.IN

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்! (Post No.14,315)

Written by London Swaminathan

Post No. 14,315

Date uploaded in London –  27 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசை 2025 மார்ச் 16- ஆம் தேதி நிறைவேறியது; கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தில் அவருடைய திவ்ய தரிசனம் கிடைத்தது  மாயூரத்திலிருந்து 22 கிலோமீட்டரில் கூத்தனூர் இருக்கிறது

வைத்தீஸ்வரன் கோவிலில் குல தெய்வத்தை தரிசித்துவிட்டு அக்ஷர்தாம் விடுதியில் இலவச காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு காரில் சென்றோம் . ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசாரியைகள் ஆகியோரின் கூட்டம் நெருக்கித் தள்ளியது. கடவுளளைத் தரிசிக்கக் கட்டணம் கிடையாது; விசேஷ   கட்டண டிக்கெட்டும் இல்லை . வரிசையில் நின்றோம் ; எங்கள் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை; காலை நேர பூஜைக்காகத் திரை போடாப்பட்டது முக்கால் மணிநேரம் கியூவில் நின்று குமர குருபரரின் சகல கலா வல்லி மாலையில் நினைவில் நின்ற பாடல்களை ஜபித்துக்கொண்டு பொறுமையாக நின்றோம் திரை திறந்தவுடன் வெண்ணிற ஆடையுடன் தாமரையில் வீற்றிருந்த சரஸ்வதி தேவியை வணங்கினோம்..

இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது; இந்த ஊரினைச் சேர்ந்த கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் ஆண்டுதோறும் ராமாயண உபன்யாசத்துக்காக மதுரைக்கு வருவார்.  அவரை,  புகழ்பெற்ற , டி .வி .எஸ்  T V S  நிறுவனம் அழைக்கும் சாத்திரிகள் மஹா வேத பண்டிதர்; எங்கள் ஆத்தில் (வீட்டில்) தங்குவார். சுவாமி அறையில் பூஜை செய்வார் ; அறை தெப்பக்குளம் ஆகிவிடும்;மாமி கோபித்துக் கொள்ளாதீர்கள் நான் ஜபம் செய்தால் இப்படி ஆகிவிடும் என்பார். ரிக்வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து காஞ்சி மகா சுவாமிகளிடம் வீடு, பசு மாடு, சால்வை, தங்க க் காசு பரிசு பெற்றவர் ; ராமாயண உபன்யாசம் முழுதும் ரிக் வேத மேற்கோள்கள் வரும் அவருக்கு நான்தான் காரியதரிசி. மாலையில் டி .வி .எஸ்  T V S  காரர்கள் அனுப்பிய கார் வந்தவுடன் நானும் அவரும் டி .வி .எஸ்  T V S  நகருக்குப் பயணம் செய்து பள்ளிக்கூடம் செல்வோம்; பள்ளியின்  ஹாலில் நடக்கும் உ பன்யாசத்தைக் கேட்பேன். நோட்ஸ் எடுத்து மறுநாளைக்கு மதுரை தினமணிப் பத்திரிகையில் அது அப்படியே வரும் ; இதனால் என் மீது தனிப்பட்ட அன்பு. நேரம் கிடிக்கையில் ரிக்வேத பெருமைகளை கேட்டறிவோம். வார விடுமுறைகளில் எனது தந்தை தாயாரும் வருவார்கள்; அவர் “குழந்தை ! நீ கூத்தனூருக்கு வந்து சரஸ்வதியைத் தரிசிக்க வேண்டும்” என்று சொல்லுவார் ; அப்போது முதல் இருந்த ஆசை இப்போது நிறைவேறியது!

வீட்டில் தங்கி இருக்கையிலோ அல்லது சாப்பாடு பரிமாறுகையிலோ என் தாய், தந்தையர் வேறு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்று கேட்டால் நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பதில்கொடுப்பார் ; கூத்தனூர் கோவிலில் முக்கால் மணி நேரம் கியூவில் நிற்கையில் நான் மேலே சொன்ன விஷயங்கள் நிழல் ஆடின.

இந்து மதத்தின் புதிய வடிவங்கள் !

இப்போதெல்லாம் எல்லோருக்கும் சுருக்கு வழிப் பெருக்கல் கணக்கில் ஆசை வந்துவிட்டது அதாவது, படிக்காமலேயே பாஸ் செய்ய வேண்டும் ; உழைக்காமலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுருக்கு வழியில் மக்கள் இறங்கிவிட்டார்கள்; நாங்கள் சென்ற நாளில்   பள்ளிக்கூட ஆசிரியைகளும் தங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர் ; முன்னரெல்லாம்,  மாணவர்கள் ஹால் டிக்கெட் எண்களைக் கோவிலில் சுவரில் எழுதி வந்தார்கள் ; அதாவது மூட நம்பிக்கை! அப்படி எழுதினால் பாஸ் ஆகலாம் அல்லது நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற நம்பிக்கை அத்தகைய மூடர்களின் கிறுக்கல்களை நான் படம் பிடித்தேன் இப்போது சுவரை நெருங்க முடியாதபடி தள்ளி, கம்பிகளைக் கட்டிவிட்டனர், தயவு செய்து உங்கள் எண்களை எழுதாதீர்கள் என்று எழுதியும் போட்டுள்ளனர்.

மஹா வேடிக்கை

இதைவிட மகா வேடிக்கை ! கோவிலுக்கு முன்னால், நூற்றுக் கணக்கான பேனா, நோட்டுப் புஸ்தகக் கடைகள்; அத்தனையிலும் சரஸ்வதி தேவியின் படங்கள்; அந்தப் பேனாவை வைத்து எழுதினால் படிப்பு வரும், பாஸ் மார்க் வரும் என்ற நம்பிக்கை! குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வதற்கு பெற்றோர்கள் சிறு குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். கியூ வரிசையில் நின்றபோது பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்; ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பரீட்சை என்று பய பக்தியுடன் பதில் தந்தனர்!

ஒட்டக்கூத்தன் வாழ்க

இந்தத் தலத்துக்குப் பெயரை உண்டாக்கியாவர் புகழ்பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர் ஆவார். அவருக்கு சரஸ்வதி அருள்புரிந்த இடம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் உண்டாக்கியது . அவரால் பெருமை பெற்றது இந்த ஊர்; சரஸ்வதியால் பெருமை பெற்றார் அவர் .

கற்க வேண்டிய பாடங்கள்

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போகாதே.

கோடை விடுமுறைக் காலத்தில், சுற்றுலா ஊர்களுக்குச் செல்லாதே.

ஐயப்ப பக்தர் வரும் சீஸனின் எந்த தலத்துக்கும் போகாதே ; அதில் தள்ளுமுள்ளு ரவுடிகள் அதிகம்.

ஒவ்வொரு ஊரிலும் விஷேச நாட்கள் உண்டு; ஊரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்து அந்த நாட்களில் செல்லாதே ; பரிக்கல் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர நாள்  விஷேச நாள் என்பதை அறியாமல் சென்று வரிசையில் நின்றோம்.

****

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

4. Goddess of all Learning! Ocean of Mercy! You rest on the grateful tongues (lips) of poets and preserve the sea of Sanskrit scholarship and the rich heritage of Tamil songs. May you grant that I become proficient in the deep and varied branches of Learning! May you grant me the gift of singing felicitous songs!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே —குமரகுருபரர் அருளிய சகல கலா வல்லி மாலை

10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.

English Translation of Sakalakalavallai malai from The Tanjore Art Gallery Guide Book, year 1954

–SUBHAM—

TAGS- கூத்தனூர் ,சரஸ்வதி கோவில் , ஒட்டக்கூத்தன், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள், ரிக்வேதம், உபன்யாசம் , டி .வி .எஸ்., சகல கலா வல்லி மாலை

காங்கோ படுகை (CONGO BASIN) (Post No.14,314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,314

Date uploaded in London – –27 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்! 

காங்கோ படுகை (CONGO BASIN) 

ச. நாகராஜன்

இருண்ட கண்டம் என்று ஆப்பிரிக்கா அழைக்கப்படக் காரணம் அதன் நடுப்பகுதியை பத்தொன்பதாம் நூற்றாண்டு யாத்ரீகர்கள் பார்த்து பயந்ததால் தான்! 

அந்த நடுப்பகுதியில் இருந்தது உள்ளே நுழைய முடியாத அடர்ந்த காடு – அதில் உள்ளே உலவும் பயங்கரமான மிருகங்கள்! அதை விட அதி பயங்கரமானவர்கள் – மனிதர்களைத் தின்னும் காட்டுமிராண்டிகள் – அங்கு உள்ளே இருந்தார்கள்.

 அதற்குள் போக யாருக்குத் தான் துணிவு வரும்?

இது தவிர பிரம்மாண்டமான காங்கோ நதியானது தனது கிளை நதிகளுடன் அங்கு பாய்ந்து கொண்டிருந்தது.

 ஆனால் ஹென்றி ஸ்டான்லி (1841-1904) என்ற எதற்கும் அஞ்சாத வெள்ளைக்காரர் துணிந்து காட்டிற்குள்ளே சென்று ஆராயலானார்.

 ஜோஸப் கான்ராட் (1857-1924) என்ற போலந்து தேச எழுத்தாளர் இந்த காங்கோ காடுகளின் மர்மத்தை வியந்து கொண்டாடி தனது நாவலான  ‘ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Heart Of Darkness) என்ற நாவலைப் படைத்தார்.

நீளமான பாம்பு போல வளைந்து வளைந்து ஓடும் இந்த காங்கோ நதியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

ஜாம்பியாவின் வடமேற்கில் சம்பேஸி ஆறாகத் தோன்றும் இந்த நெடிய பாம்பு வடக்கே ஓடி பின் மேற்குப் பக்கமாகத் திரும்புகிறது.

2900 மைல் ஓடி உலகின் ஆறாவது பெரிய ஆறாகப் பரிமளிக்கிறது இது!

 அமேஸான் நதிக்கு அடுத்தபடியாக சுமார் 14,60,000 கன அடி நீரை இது அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கொண்டு தள்ளுகிறது.

காங்கோ படுகையின் பரப்பு  மட்டும் பதிமுன்று லட்சத்து முப்பத்தைந்தாயிரம் சதுர மைல் பரப்பாகும். இதில் பெரும்பகுதி ஜைரே நாட்டில் சுற்றிலும் மலைகள் சூழ இருக்கிறது.

எழுத்தாளரான ஜோஸப் கான்ராட் இதற்குள் சென்று பார்த்து விட்டு உலகில் ஆதி காலத்தில்  முதன் முதலில் தோன்றிய பகுதிக்குச் செல்வது போல இருந்தது என்றார்.

 பெரிய குரங்குகளளும், கொரில்லாக்களும் இங்கு ஒரு புறம் கொட்டம் அடிக்கும்: இன்னொரு புறம் இருக்கும் ஆப்பிரிக்க கிளிகள் அழகிய பட்டாம்பூச்சிகள் இன்னும் இன்ன பிற அழகிய பறவைகளின் கூட்டத்தை வர்ணிக்கவே முடியாது; அப்படி ஒரு அழகு!

சூரிய ஒளி புக முடியாதபடி அடர்ந்திருக்கும் மரங்களின் கீழே பிரம்மாண்டமான கட்டு விரியன்களும் ராஜ நாகங்ளும் நெளிந்து கொண்டிருக்கின்றன!

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் இங்குள்ள மூன்று விஷேசமான மிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 ஒகாபி என்று ஒரு அதிசய மிருகம் அங்கு இருந்தது. அடுத்து அட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கழுதை, இலைகளை மட்டும் தின்று வாழ்வது ஒரு அதிசயம்! மூன்றாவது, குதிரை போன்று இருக்கும் ஒரு வரிக்குதிரை இரவில் மட்டும் உலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

1899ம் ஆண்டு உகாண்டாவில் இருந்த பிரிட்டிஷ் கவர்னரான சர் ஹென்றி ஜான்ஸன் என்பவர்  ஒகாபியைப் பற்றி நன்கு ஆராய்ந்து அது ஒருவிதமான ஒட்டகசிவிங்கி என்பதைக் கண்டுபிடித்தார்.

காங்கோவில் உள்ள மயில் உலகில் வேறெங்கும் காண முடியாத ஒரு மயில் வகையாகும். ஆனால் இதைக் காண்பது மிக மிக அரிய விஷயமாகும்.

 ஆப்பிரிக்க மழைக்காடுகளோ ஆறு அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு விதமான தாவர வகைகள் உண்டு.

இந்த மழைக்காடுகள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள ஜைரே நாட்டில் உள்ளன.

 உலகின் அதிசய இடங்களில் முக்கியமான ஒரு இடம் இந்த காங்கோ தான்!

 இருண்ட கண்டத்தின் இதயமான காடு என்று காங்கோ படுகை அழைக்கப்படுவது சரிதானே!

***

Darshan at Two Temples and Sri Muralidhara Swamikal Ashram (Post No.14,313)

Written by London Swaminathan

Post No. 14,313

Date uploaded in London –  26 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

On March 18, 2025 I was fortunate enough to have Darshan at Nanganallur Anjaneya Temple and Raja Rajeswari temple and Sri Muralidhara Swamikal at Maharanyam near Malaippattu in Chennai- Sriperumpudur route.

In fac,t I have to add two more temples to the above list. At the Maharanyam Ashram of Sri Muralidhara Swamikal there are two temples: one for Perumal/Vishnu and another for Anjaneya.

First, I went to Nanganallur Anjaneya temple and had good darshan (reverential viewing of god or saint). The huge Anjaneya is visible even from the road. By passers worshipped Hanuman sitting on bicycle or motorcycle.

Someone suggested that we should visit Rajarajeswari temple and my wife was very keen because her name and the goddess name are one and the same. It is a small but beautiful temple. Male devotees have to take off their shirt like Parikkaal Narasimhar temple.

And one has to climb steep steps covered with golden coloured metal. And there are other smaller shrines as well. Nearby there is a Vishnu temple too.

****

I had been in touch with Sri Muralidhara Swamikal’s devotees for over a decade in London. They advised me to visit the Swamiji and get his blessings. When I went to the Ashram, the doors were closed and there was a board Sying Restricted entry; fortunately, I left a message over telephone. But Swamiji himself came into the adjacent Perumal Temple. After paying pranams to him I introduced myself. He made kind enquiries and asked his disciple to take me around the temple, ashram and the dining hall for my lunch.

There is a beautiful Hanuman temple like Nanganallur Hanuman. After the arti I was taken around the Go Shala (cow shed), Veda Patassla, Library and the Dining Hall. I had lunch there and met Swamiji again.

Sri Muralidhara Swamikal is one of the few genuine saints in Tamil Nadu. I have been following him on Facebook for a decade. His main teaching is to recite god’s name every day. Unlike many Babas and many Gurus, there is no cult attached. He has Veda patasalas (Vedic Schools ) in several places. His devotees have started branches in different countries around the world. Only through London devotees I came to know about the good work of Swamiji and arranged meetings when his disciple Ramanujam came to London. Recital of God’s name is the gateway to God and so he called it Namadwar (naamadwaar=Name Door/Gate).

Please visit his Ashram and support his activities through donations. I also did it.

****

I attach below a writeup which his American devotees have placed in their website:

Sri Sri Muralidhara Swamiji

His Holiness Maharanyam Sri Sri Muralidhara Swamiji, hailing from Chennai, India, is a philosopher and spiritual preceptor who practices and propagates the practical aspects of Indian spirituality.

His key activities are in the direction of educating people of the fact that real happiness is very much within one’s own self and that inner peace and tranquillity will naturally lead to universal brotherhood and harmony. Realization of this truth in this age of haste and hurry is as much possible and practicable as it was in earlier ages, and can be attained by simple but sustained practices that include mind control and chanting of the Divine Name of God, especially the “Hare Rama…” Mahamantra.

He inculcates a spirit of universal acceptance, coupled with intense faith and steadfast devotion on the path the spiritual seeker is treading on.

Sri Swamiji believes that Nama Kirtan (singing the name of the Lord) is the easiest way to perform Bhakti and attain liberation in this Kali Yuga. Srimad Bhagavatam and many other scriptures in Sanatana Dharma advocate this as the simplest means to attain the Lord. Scriptures say, “While mental repetition of the Divine Names leads to the good of the individual, chanting the Divine Names loudly purifies the chanter, the listener and the very place where the chanting is done.”, Sri Swamiji advocates singing of the ‘Hare Rama…’ Mahamantra as the only way to overcome the ills of worldly existence and attain divine bliss.

More information about Sri Sri Swamiji’s activities can be found in the following websites:

Nama Dwaar

Madhuramurali

Nanganallur Anjaneyar/ Hanuman temple

Sri Anjaneyar Temple at Maharanyam, Sri Muralidhara Swamiji Ashram

Vedic School Students and the Teacher

Sri Muralidhara Swamiji 

—subham—

Tags- Nanganallur, Anjaneyar temple, Rajarajeswari temple, Sri Muralidhara Swamikal, Namadwar, Maharanyaam, Nama Sankirtan

மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் தரிசனம் (Post No.14,312)

Written by London Swaminathan

Post No. 14,312

Date uploaded in London –  26 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைப்பட்டு கிராமத்துக்கு அருகில் மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் ஆஸ்ரமம் உளது; அங்கு மார்ச் மாதம் 18- ஆம் தேதி (2025) சென்று சுவாமிகளைத் தரிசனம் செய்தேன். இதன் வாயிலாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

லண்டனுக்கு  சுவாமிகளின் சீடர் ராமானுஜம் பரப்புரை செய்ய வந்த தருணங்களில் நானும் என்னால் இயன்ற பங்களிப்பினைச் செய்தேன். அப்போது அவரது சீடர்கள் மஹாரண்யத்துக்குச் சென்று சுவாமிகளை நேரில் தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லிவந்தனர் . ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் சென்றபோதும் மனதில் நினைத்தேன்; ஆனால் செயலில் இறங்கவில்லை. இந்த ஆண்டு நல்ல வாய்ப்பு கிடைத்தது. நங்க நல்லூர் ஆஞ்சனேயர் கோவில், மற்றும் புதிய ராஜ ராஜேஸ்வரி கோவில் ஆகியவற்றுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு காரில் சிட்டாகப் பறந்தேன்.  பெரிய ஏமாற்றம்! ஆஸ்ரமக் கதவு பூட்டியிருந்தது.கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி RESTRICTED ENTRY என்று வெளியேயுள்ள போர்டில் எழுதி இருந்தனர். அப்போதுதான் புரிந்தது போன் செய்யாமல் வந்தது தவறு என்று .

ஆஸ்ரமத்தை அடுத்து நல்ல அமைதியான சூழ்நிலையில் பெருமாள் கோவில் உள்ளது; பெருமாளை சேவித்தபின்னர் ஒரு தொன்னையில் நல்ல வெண்பொங்கல் பிரசாதமும் கிடைத்து . அங்குள்ள பட்டர், போன் செய்துவிட்டு இங்கே அமருங்கள் என்றார் போன் செய்தபோது ரிகார்டட் மெஸேஜ் RECORDED MESSAGE  வந்தது. அதில் நான் லண்டனி லிருந்து தரிசனத்துக்கு வந்த செய்தியை ரெகார்ட் செய்தேன் அதைக் கேட்டார்களோ இல்லையோ தெரியவில்லை சுவாமிகளே கோவிலுக்குள் பிரவேசித்தார் .

அடடா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது என்று எண்ணி இறும்பூது எய்தி அவரை நமஸ்கரித்தேன்; . லண்டனில் அவரது  சீடர்களுடன் உள்ள தொடர்பினைச் சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டன் செல்லும் வழியில் குல தெய்வம் வைத்தீஸ்வரனைத் தரிசிக்க இந்தியாவுக்கு வந்த செய்தியினைத் தெரிவித்தேன் .

உடனே ஒரு சீடரை அழைத்து இவரை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்வித்து, பின்னர் ஆஸ்ரமத்தைச் சுற்றிக்  காட்டிவிட்டு சாப்பாடு செய்வித்து போஜனம் முடித்தவுடன் அழைத்து வாருங்கள் என்றார் .

அருகில் அருமையான அனுமார் கோவில்; அதி உயரமான பெரிய கருப்பு நிற அனுமார் சிலை.. அங்கு எனக்காக சிறப்பு தீவாராதனை காட்டி ஆஸ்ரமத்துக்குள்ள அழைத்துச் சென்றார்கள் அங்கே கோ  சாலை, வேத பாட சாலை, போஜன சாலை, நூலகம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டேன்.  பின்னர் மீண்டும் சுவாமிகளைத் தரிசித்தேன். சீடரிடம் ஆஸ்ரமத்துக்குச் சிறிய நன் கொடையை கொடுத்துவிட்டு சுவாமிகள் அனுமதியுடன் அவரது புகைப்படத்தை எடுத்தேன் . பின்னர் அவர் ஆஸ்ரமத்துக்குள் சென்ற பின்னர் நானும் சென்னைக்குப் புறப்பட்டேன்.அன்று மாலையே எனது நண் பர் ராமானுஜம்,    நாரத கான சபாவில் பேசவிருப்பதாகவும் சுவாமிகளும்  அப்போது இருப்பார் என்றும் சீடர் சொன்னார். ஆனால் அடுத்த நாளில் லண்டன் பயணம் இருந்ததால் போக இயலவில்லை . என்னை ஆஸ்ரமத்தைச் சுற்றிக்காட்டிய இளைஞர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இருப்பதாகச் சொன்னார். அவரது அர்ப்பண மனப்பான்மை சுவாமிஜியின் நற்பணிக்கு ஒரு அத்தாட்சி.

****

சுவாமிகளின் கொள்கை என்ன ?

நாம சங்கீர்த்தனத்தின் மூலம்- அதாவது, இறைவனின் நாமமான ஹரே ராம ஹரே க்ருஷ்ண — என்ற பெயரை பக்தியுடன் உச்சரிப்பதன் மூலமே இறைவனை அடையாலாம் ; கலியுகத்தில் இதுதான் எளிதான வழி ; மேலும் சனாதன தர்மத்தின் ஆணி வேரான  வேதங்களை பாதுக்காகவேண்டும் கோ மாதா என்னும் பசுக்களை பாதுகாக்கவேண்டும் என்பதே முக்கியக் கொள்கை . இதை நடை முறையில் கொண்டு வருவதற்காக சுவாமிகள் பல்வேறு இடங்களில் வேத பாடசாலைகளை நடத்துகிறார். நல்ல சொற்பொழிவுகளால்   நாம சங்கீர்த்தனத்தைப் பரப்புகிறார். நாமத் வார் –நாமத்தின் மூலம் இறைவனை அடையும்  வாயில்- என்பது இவர் பயன்படுத்தும் சொல். அமெரிக்கா , பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகளில் இவரது பக்தர்கள் கிளைகளை நடத்தி  ராம – கிருஷ்ண நாமத்தின் பெருமையைப் பரப்புகிறார்கள்

வேத பாட சாலை, 

அங்கு ஏகாதசி நாட்களில் பெரிய வழிபாடுகள் நடை பெறுகின்றன. அடுத்தமுறை சென்னை சென்றால் மலைப்பட்டு கிராமம்  வரை செல்லுங்கள். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நல்ல சாமியார்களின் ஒருவர் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் . ஏனைய ‘பாபா’க்கள், ‘குரு’க்கள் போல கல்ட் CULT –புதிய சம்பிரதாயம்- எதுவும் இல்லாமல் ஒரிஜினல் இந்து மதக் கொள்கைகளை வலியுறுத்துபவர். ஆகையால் தயக்கமின்றி செல்லலாம். முடிந்தவரை நன்கொடை கொடுத்து அரிய வேதங்களைப் பாதுகாக்க  உதவுங்கள் .

–சுபம்–

முரளீதர சுவாமிகள், மலைப்பட்டு, மஹாரண்யம், நாமத் துவார், நாம சங்கீர்த்தனம், வேத பாட சாலை, கோ சாலை 

உங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டுங்க? (Post No.14,311)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,311

Date uploaded in London – –26 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

ங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டுங்க? 

ச. நாகராஜன்

 ஒளிவு மறைவு இல்லாமல், வெட்கப்படாமல் சொல்லுங்க, உங்களுக்கு எதைக் கண்டால் பயம்? உங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டு? 

உலகில் குறைந்தபட்சம் 350 போபியாக்களால் ஆண்களும் பெண்களும் பயப்பட்டு அவதிப்படுகின்றனர்.

150 போபியாக்களின் பட்டியலில் பெரும்பாலான மக்கள் வந்து விடுகின்றனர்.

பொதுவாகப் பெண்களிடம் கரப்பான் பூச்சியையோ எலியையோ சிலந்தியையோ காட்டினால் போது,ம்.

ஆ, ஓவென்று அலறிக் கூச்சல் போட்டு கூட்டத்தையே கூட்டி விடுவர்.

போபியா என்பது உணர்வுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவலைப்பட வைத்து பயத்தை ஊட்டி அதிர வைக்கும் ஒன்று.

சிலர் லிப்டில் ஏற மாட்டார்கள்.

இன்னும் சிலர் விமானத்தில் பயணப்படவே மாட்டார்கள்.

தங்களின் பழைய கால அனுபவங்கள், நண்பர், குடும்பத்தினர் ஆகியோர்

பட்ட அவஸ்தைகள், நெருங்கியவரின் உயிரிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் போபியாக்கள் ஏற்படுகின்றன.

இது தர்க்கரீதியாகத் தவறு என்பதும் போபியாக்காரர்களுக்குத் தெரியும். என்றாலும் பயம் பயம்தானே!

சிறுவயதில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவன் முதுகில் கரப்பான் பூச்சியையோ அல்லது சிலந்தியையோ விட்டெறிந்தால் வாழ்நாள் முழுதும் கரப்பான்பூச்சி பயம், சிலந்தி பயம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வரும்.

தெருவில் இறங்கி நடக்க பயம் என்றால்  அது AMBULOPHOBIA.

ஆனால் இதற்கெல்லாம் இப்போது சிகிச்சை முறை உண்டு.

தெருவில் நடக்கப் பயப்படுவோரை குழுவாகச் சேர்த்து மெதுவாக மெல்ல மெல்ல தெருவில் நடக்கப் பழக்கப்படுத்துவார்கள்.

BEHAVIOUR THERAPY என்ற சிகிச்சையில் பல போபியாக்கள் நாளடைவில் மறைந்து விடும். பூனையைக் கண்டால் பயப்படுபவர்களுக்கும் கூட சிகிச்சை உண்டு.

சாமான்யர்களுக்கு மட்டுமல்ல, பிரபலங்களுக்கும் போபியாக்கள் உண்டு.

லிஸ்டைப் பார்ப்போமா?

விமானப் பயணம்  (AEROPHOBIA)

விமானப் பயணம் என்றாலேயே ஜெனிபர் அனிஸ்டன், டோனி கர்டிஸ், முகம்மது அலி, மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோருக்குப் பயம்!

உயரத்தைக் கண்டால் பயம் (ACROPHOBIA)

உலகின் பெரிய கோபுரமான ஈபில் டவரை வடிவமைத்த குஸ்டாவ் ஈபிலுக்கு உயரத்தை நினைத்தாலேயே பயம். டைரக்டர் உடி ஆலனுக்கும் உயரம் என்றாலேயே பயம். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதிக போபியாக்களைக் கொண்ட ஹாலிவுட் பிரபலம் இவர் என்பது தான் அது!

பூனைக்குப் பயம் (AILUROPHOBIA)

வரலாற்றுப் பிரபலங்களான ஜூலியஸ் சீஸர், நெப்போலியன், முஸோலினி, அலெக்ஸாண்டர் தி கிரேட் ஆகியோருக்குப் பூனை என்றாலேயே பயம் இது ஒரு நீண்ட பட்டியல். இதில் ஹிட்லர், செங்கிஸ்கான், வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பலரும் வருகின்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேச பயம் (GLASSOPHOBIA)

பல பிரபலங்களுக்கு மக்கள்திரளைக் கண்டு அவர்களிடம் பேசுவது என்றாலேயே பயம். பிரபல நடிகை மர்லின்மன்ரோ, நடிகர் லாரன்ஸ் ஆலிவர் ஆகியோர் ஸ்டுடியோவில் அபாரமாக நடிப்பார்கள். ஆனால் பொதுமேடை என்றாலேயே நடுநடுங்கி விடுவர்.

குதிரை பயம் (EQUINOPHOBIA)

நடிகர் ராபர்ட் பாட்டின்ஸனுக்கு குதிரைகள் என்றாலேயே பயம். இவரது படமான வாடர் ஆஃப் எலிபண்ட்ஸ் படத்தில் வரும் குதிரைக் காட்சியை எடுப்பதற்குள் படக்குழுவினருக்கு போதும் போதும் என்றாகி விட்டது!

கரப்புசிலந்திபாம்பு பயம் (KATSARIDAPHOBIA, ARACHNOPHOBIA, OPHIDIOPHOBIA)

இதற்கு பட்டியலே வேண்டாம். டைரக்டர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கிலிருந்து நமது வீட்டு அம்மணிகள் வரை இந்த லிஸ்டில் அடக்கம்!

கண்ணாடி பயம் (EISOPTROPHOBIA)

பேவாட்ச் படத்தில் நடித்த பிரபல நடிகை பமீலா ஆண்டர்ஸனுக்குக் கண்ணாடியைக் கண்டாலேயெ பயம்.

350 போபியாக்களையும் அதற்குப் பயப்படுவர்களையும் ஒரு பட்டியல் எடுத்துத் தொகுக்க ஆரம்பித்தால் அது போபியா களஞ்சியம் ஆகிவிடும்!

ஆனால் இதற்கெல்லாம் சிகிச்சை உண்டு. அது சரி, இந்த சிகிச்சைக்கே பயம் என்றால் என்ன செய்வது?!

***

Hindu Crossword25325 (Post No.14,310)

Written by London Swaminathan

Post No. 14,310

Date uploaded in London –  25 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

1 2 3 
      
45 6  
    ← 7 
  8     
      
9     

 Across

1. (5 letters)- This river joins Bhadra to form a big river.

4. (5) capital of Bihar; old name Pataliputra.

7. (4) Vedic Wind God

8.(6) Arjuna’s son by a Naga princess Ulupi who fell in the battle on the eighth day, fought on the side of the Pandavas, killed by the Rakshasa Alumbusha

9. (6) name of a river; Sanskrit meaning is good, auspicious, happy

Down

1.River flowing through Madhya Pradesh, Gujarat and Maharashtra; meaning Heat, Warmth. (5 letters)

2.Meaning Dance(5)

3. Noise, Cry, howling (5)

5.Name of a woman; in Hindi it means And(4)

6.Meaning New or Number Nine (4)

T1UN2GA3 
A A R 
P4A5TN6A 
TUYAV7 
I8RAVAN
 A A  
B9HADRA

—SUBHAM—-

TAGS- Hindu Crossword 25325