Post No. 14,442
Date uploaded in London – 27 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ; லைப்ரரியில் புஸ்தகம் எடுத்தால் இடையிடையே பென்சிலால் சிறிய ஓரெழுத்துக் குறிப்புகள் எழுதுவேன்; சில நேரங்களில்ஆங்கிலப் புஸ்தகத்தில் தமிழிலும் எழுதுவேன் . சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பல்கலைக்கழக லைப்ரரிக்குச் சென்று நான்கு புஸ்தகங்களை எடுத்தேன் ; ஜான் ப்ரோ JOHN BROUGH என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸம்ஸ்க்ருதக் காதல் கவிதைகளின் தொகுப்பு அந்தப் புஸ்தகம்; நான் முதல் தடவையாக அதை எடுப்பதாக நினைத்துக்கொண்டு கடைசிப்பக்க இண்டெக்ஸ் பகுதிக்குச் சென்றேன்; என் கையெழுத்தில் 10-3-1999 தேதி எழுதப்பட்டிருந்தது என்ன அதிசயம் அதே புஸ்தகத்தை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நான் எடுத்திருக்கிறேன் . உள்ளே புரட்டிப் பார்த்ததில் என்னுடைய ஓரெழுத்துக் குறிப்புகள் இருந்தன
ஜான் ப்ரோ JOHN BROUGH அந்த நூலில் முன்னுரையில் கவிதை என்றால் என்ன, யாப்பு என்றால் என்ன , மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதையெல்லாம் மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் வெளியிட்டுள்ளார் அவை கிரேக்க, லத்தீன், ஆங்கில மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை ஒரு ஜெர்மன் மொழிக்கவிதையை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்பதையும் காட்டியுள்ளார் .எனக்குள்ள கெட்ட பழக்கங்கள் ; இரவில் ஒன்பது மணிக்கே தூங்கப் போய் காலை நாலு மணிக்கு எழுந்திருப்பதாகும்; சமீப காலமாக இன்னும் ஒரு கெட்ட பழக்கமும் வந்துவிட்டது ;நள்ளிரவில் அல்லது இரவு ஒரு மணி வாக்கில் எழுத்து ஒரு மணி நேரத்துக்கு ஏதாவது படித்தல் அல்லது நான் சேகரித்த 20,000 தபால்தலைகளின் ஆழகினை ரசித்தல் போன்றவற்றில் ஈடுபடுவேன்; அப்படிப் படித்தபோது என்ன நிகழந்தது என்பதைச் சொல்கிறேன்:
ஜான் ப்ரோ JOHN BROUGH மொழிபெயர்த்த ஒரு எறும்புக் கவிதையை படித்தேன். நள்ளிரவில் எழுந்த நான் அந்த எறும்புக் கவிதையை படித்தேன் . மீண்டும் தூக்கம் கண்களை சிமிட்டும் முன்பாக அதைத் தமிழில் மொழிபெயர்த்தேன் ; இதோ ஜெர்மன், ஆங்கில மொழிபெயர்ப்பும் என்னுடைய தமிழ்த் தழுவல் கவிதையும்
IN HAMBURG LEBTEN ZWEI AMEISEN
DIE WOLLTEN NACH AUSTRALIEN REISEN
BEI ALTONA AUF DER CHAUSSEE
DA TATEN IHNEN DIE BEINE WEH
UND DA VERZICTETEN SIE WEISE
DANNAUF DEN LETZTEN TEIL DER REISE (German)
MEANING
In Hamburg there lived two ants who made up their minds to travel to Australia. Then, on the pavement at Altona (just outside Hamburg) their feet hurt; and thereupon they sensibly gave up the last part of the journey.
ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் வாழும் இரண்டு எறும்புகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடிவுசெய்தன . நகரின் வெளிப்புறத்துக்குச் சென்றபோதே கால்கள் வலி எடுத்தன ; உடனே அடுத்த பகுதி பயணத்தை புத்திசாலித்தனமாகக் கைவிட்டன.
இதை அப்படியே மொழிபெயர்த்தால் ஆங்கிலம் படித்தோருக்கு முழு வீச்சு புரியாது என்பதற்காக ஜான் ப்ரோ பின்வருமாறு ஆங்கிலத்தில் எழுதுகிறார்
Two ants who lived in London planned
To walk to Melbourne overland
, but footsore in Southampton Row
When there were still some miles to go,
They thought it wise not to extend
The journey to the bitter end. (English)
POEMS FROM THE SANSKRIT; TRANSLATED WITH INTRODUCTION BY JOHN BROUGH; PENGUIN BOOKS
கவிதையில் எதுகை, மோனை வருவதற்காக ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஆஸ்திரேலியாவை சம்பந்தப் படுத்துகிறார்கள்; தேசப்பட புஸ்தகத்தில் இந்த இடங்கள் எங்கே, எங்கே உள்ளன என்று பார்த்தால் கவிதையின் முழுத்தாக்கம் தெரியும்.
இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று இரவு ஒரு மணிவாக்கில் யோசித்தேன்; வேகமாகப் பேனாவை எடுத்து ஒரு தாளில் எழுதினேன். இதோ அந்தக் கவிதை
சென்னை எறும்பிரண்டின் பயணம் திரு
வெண்ணையை நோக்கி நடந்தனவே வேகமாக (ஆனால்)
எண்ணெயில் சிக்கிக்கொண்டன கால்கள் (அந்தோ|)
என்னைப் பாட வைத்தது வெகு சோகமாக
எதுகை, மோனைகளை தடித்த எழுத்துக்களில் காட்டியுள்ளேன்.
–subham—
Tags – ஜான் ப்ரோ, நள்ளிரவில், நான் எழுதிய, கவிதை, ஜெர்மன் , மொழிபெயர்ப்பு