கேட்பது நாம்! பதில் சொல்வது அறிஞர்கள்!! (Post No.14,444)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,444

Date uploaded in London – –28 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

MOTIVATION ARTICLE PUBLISHED ON 22-3-25 IN KALKIONLINE 

 கேட்பது நாம்!  பதில் சொல்வது அறிஞர்கள்!!

ச. நாகராஜன்

1)   விமரிசனத்திலிருந்து தப்ப  முடியுமாதப்புவதற்கு என்ன செய்வது?

ஓ, முடியுமே! விமரிசனத்திலிருந்து நீங்கள் தப்பவேண்டுமென்றால் ஒரு வேலையையும் செய்யக் கூடாது. ஒன்றும் பேசக் கூடாது. ஒரு மனிதனாகவும் கூட இருக்கக் கூடாது.    – எல்பர்ட் ஹப்பர்ட்

2)   நம்மை எல்லையற்றவராகச் செய்வது எது?

கற்பனா சக்தி நம்மை எல்லையற்றவராகச் செய்கிறது. –  ஜான் மூர்

3)   எவ்வளவு சுமையை ஒருவன் தூக்க முடியும்?

சுமையின் அளவு குதிரையின் வலிமையைப் பொறுத்தது.   – தால்முட்

4)   வணிகம் எப்படிச் செய்ய வேண்டும்?

சகோதரர்கள் போலச் சேர்ந்து வாழுங்கள்; அன்னியர்கள் போல வணிகம் செய்யுங்கள்.  – அராபிய பழமொழி

5)   யாரைத் தவிர்க்க வேண்டும்?

மூன்றை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 1) தெரு நாய் 2) பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 3) தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு மேதாவி என்று நினைப்பவன் – வேல்ஸ் பழமொழி

6)   எவன் திறமையுள்ளவன்?

எவன் ஒருவன் தான் திறமையுள்ளவன் என்று நினைக்கிறானோ அவன் திறமையுள்ளவனே.    – வர்ஜில்

7)   எவன் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்?

முட்டாளும் செத்துப்போனவனும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

–    ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல்

8)   வெற்றிக்கான முதல் விதி எது?

தன்னை நம்புவதே வெற்றி பெறுவதற்கான முதல் விதி. – ரால்ப் வால்டோ எமர்ஸன்

9)   எதற்கு விதி தேவையில்லை?

நேர்மைக்கு விதியே தேவையில்லை –  ஆல்பர்ட் காமஸ்

10) அதிர்ஷ்டம் யாருக்கு வரும்?

தைரியசாலியையே அதிர்ஷ்டம் தேடி வரும். – வர்ஜில்

11) யாருடைய தவறை மன்னிக்கக் கூடாது?

தன்னுடைய தவறைத் தவிர மற்ற அனைவருடைய தவறையும் மன்னிக்கலாம்.- மார்கஸ் போர்ஸியஸ் கடோ

12) சோதனை வரும் போது எது  முக்கியம்?

சோதனைக் காலத்தில் ஒரு அவுன்ஸ் விசுவாசமானது  ஒரு பவுண்ட் புத்திகூர்மையை விட மேல். – எல்பர்ட் ஹப்பர்ட்

13) வெற்றி அளக்கப்படுவது எப்படி?

இலக்கை நோக்கிக் குறிபார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது..இலக்கை நோக்கி தவறாமல் அம்பை எய்து விட வேண்டும். அது தான் வெற்றியின் அடையாளம்  – இத்தாலிய பழமொழி

14) எதற்குக் கெட்ட காலம் கிடையாது?

நல்ல கருத்துக்களுக்கு கெட்ட காலமே கிடையாது. ஹெச். கார்டன் செல்ஃப்ரிட்ஜ்

15) எப்படி மற்றவருடன் பழகுவது?

ஒருபோதும் காது கேளாதவனிடம் முணுமுணுக்காதே; கண் தெரியாதவனிடம் கண் சிமிட்டாதே! அவ்வளவு தான்! –  ஸால்வேனியா பழமொழி

**

Leave a comment

Leave a comment