துக்காராம் மஹராஜ்- Part 1 (Post 14,453)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,453

Date uploaded in London – –30 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

துக்காராம்! – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் வணக்கம். நமஸ்காரம்.

இன்று பகவானின் பக்தர்களில் சிறந்தவராகக் கருதப்படுபவரும் ஏராளமான அபங்கம் என்னும் துதிப்பாடல்களைப் பாடி அருளியவருமான துக்காராம் மஹராஜ் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்.

மகராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள தேஹுவில்  துக்காராம் மஹராஜ் அவதரித்தார். அவரது தந்தையின் பெயர் போல்ஹோபா. தாயார் கங்காயி என்பவர். இவரது காலம் சிவாஜி மஹாராஜின் காலத்தை ஒட்டியது. சிவாஜியின் பிறந்த தேதி19-2-1630. சிவாஜி மறைந்த தேதி 3-4-1680. ஆகவே அவர் 1630க்கு முன்னர் பிறந்தவர் என்பது தெரிகிறது. 1608ம் ஆண்டு அவர் பிறந்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

துகோபா உள்ளிட்ட பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். வர்காரி சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.

கிருஷ்ணரை அவர் விதோபா என்றே அழைத்தார்.

துக்காராம் இறை பக்தியில் ஜாதியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

‘ஒரு மனிதனின் ஜாதியைப் பற்றி ஒருபோதும் கடவுள் சிந்திப்பதில்லை. கடவுளுக்கு அவரது பக்தர்கள் அனைவரும் சமமே” என்றார் அவர். மிகப் பெரும் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த அவரை மக்கள் பெரிதும் மதித்தனர்.

இந்த ஒன்றே அவருக்குப் பல விரோதிகளைத் தந்தது. மாம்பாஜி என்ற ஒருவன் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். முதலில் துக்காராம் அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் பொறுப்பைத் தந்திருந்தார். ஆனால் கிராமத்தில் உள்ள அனைவரும் துக்காராமை பெருமதிப்புடன் வணங்குவதைக் கண்ட அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. ஒரு முறை முள் கம்பினால் அவன் துக்காராமை அடித்தான். அவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டுவது அவனது வழக்கம்.  ஆனால் இறுதியில் அவனும் துகாராமின் நல்ல சீடர்களுள் ஒருவனாக ஆனான்.

4600 அபங்கங்களை அவர் இயற்றியுள்ளார் என்று தெரிகிறது.

மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏழு கோடி பேர்கள் ஜாதி வித்தியாசம் இன்றி அவரது அபங்கங்களைப் பாடுகின்றனர் என்ற ஒன்றே அவரது சிறப்பைச் சுட்டிக் காட்டும்.

சத்ரபதி சிவாஜி, துக்காராமைத் தனது குருவாக மதித்தார். ஒரு முறை பண்டரிபுரத்தில் நடைபெறும் ஆஷாட சுக்ல ஏகாதசி உற்சவத்தில் தனது அபங்கங்களைப் பாட விரும்பிய துக்காராம் அங்கு சென்றார்.

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் துக்காராமின் அபங்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைக் கேட்க விரும்பி மாறுவேஷத்தில் கிளம்பினார்.

அப்போது ஔரங்கசீப் எப்படியேனும் சிவாஜியைப் பிடிக்க எண்ணி தன் ஒற்றகளை நாலா பக்கமும் அனுப்பிக் கொண்டிருந்தான். சிவாஜி பண்டரிபுரத்தில் துக்காராமின் அபங்கம் கேட்க வரலாம் என்ற செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த அவன் அவரைக் கைது செய்து கொண்டு வர ஒரு குதிரைப் படையையே அனுப்பினான்.

 இதை துக்காராமும் அறிந்தார். குதிரைப் படை வந்து கோவிலை முற்றுகை இட மன்னருக்குத் தீங்கு வராமால் காக்க பண்டரிநாதனை வேண்டினார் துக்காராம். பண்டரிநாதன் மனம் கனிந்தான், சிவாஜியைப் போல ஒரு உருவம் குதிரை மீதேறிச் செல்வதைக் கண்ட ஔரங்கசீப்பின் குதிரைப் படை சிவாஜியைத் தொடர்ந்தது. காடு மேடெல்லாம் சுற்றி அலைந்த சிவாஜி பின்னர் திடீரென்று காணாமல் போனார்.

மறுநாள் சிவாஜி மஹாராஜ் தன்னைப் போலவே ஒரு சிவாஜி குதிரையில் ஏறிச் சென்றதையும், ஔரங்கசீப்பின் குதிரைப்படை அழிந்த விதத்தையும் கேட்டு பாண்டுரங்கனின் கருணையை எண்ணி மனம் கசிந்தார்.

துக்காராம் ஒரு  முறை வறுமையால் வாடியதை அறிந்த சிவாஜி தானே ஒரு வியாபாரி வேஷம் பூண்டு துக்காராமிடம் வந்து தானிய மூட்டைகளை அளித்தார். அவர் சிவாஜி தான் என்பதை அறிந்து கொண்ட துக்காராம் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார். அதை வழக்கம் போல பக்தர்களுக்கு விநியோகித்தார்.

துக்காராமின் வாழ்வில் இறைவன் நடத்திய அற்புதங்கள் பல. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். துக்காராமின் பக்திப் பாடல்களை கேட்டு பக்தி மேலோங்கிய குடியானவன் ஒருவன் தன் குடும்பப் பொறுப்பைக் கவனிக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனது சிறிய குழந்தை இறந்து விட்டது. இதனால் துக்கமும் வெறுப்பும் கோபமும் அடைந்த அந்தக் குடியானவைனின் மனைவி நேராகத் துக்காராமிடம் வந்து முறையிட்டாள்

“உங்களால் தானே என் கணவர் குடும்பத்தையே மறந்து விட்டார். அதனால் தானே என் குழந்தையின் வியாதியைக் கூட அவர் தீர்க்க முனையவில்லை. இதோ! குழந்தை இறந்து விட்டதே? இதற்கு நீர் தானே பொறுப்பு?“ என்று அழுது புலம்பினாள்.

இதைக் கேட்ட துக்காராம் மிக்க வருத்தமுற்றார். “பாண்டுரங்கா, இந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாட்டாயா?” என்று முறையிட்டார்.

அவர் மெய்மறந்து கண்களை மூடிப் பாடுகையில் குழந்தை எழுந்து வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. அவர் கண் விழித்துப்ப் பார்த்து பாண்டுரங்கனின் கருணையைக் கண்டு வியந்து போற்றினார்.

ஊரார் அனைவரும் தம் கண் எதிரில் நடந்த இந்த சம்பவத்தால் மெய் சிலிர்த்தனர்.

*

 To be continued…………………………….

Leave a comment

Leave a comment