Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கிலத்தில் பாம்புக்கு இரண்டு சொற்கள் உண்டு; ஸர்பண்ட், ஸ்னேக் ; இரண்டு சொற்களும் சர்ப்ப, (ஸ்) நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களின் மருவு. இது இதைக் காட்டுகிறது? உலகிலேயே பாம்பு பற்றி அதிகம் அறிந்தவர்கள் இந்துக்களே. சர்ப்ப கந்தி என்ற மூலிகையின் பெயரில் இந்த சர்ப்பம் வருவதால் இதை எழுதுகிறேன் .
மூலிகை மஹிமை
இந்த ரவுல்பியா செர்பென்டினா மூலிகையை இந்துக்கள் 2500ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவருகிறார்கள்; காந்திஜியும் தினமும் இதை பயன்படுத்திவந்தார் .
இதன் தாவரவியல் பெயர் – Rauwolfia Serpentinaரவுல்பியா செர்பென்டினா ; இதிலுள்ள ரசாயனப் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; மனக்கவலையைக் குறைத்து நல்ல தூக்கத்தையும் அளிக்கிறது.
இந்த மூலிகையின் ஸம்ஸ்க்ருதப் பெயருடன் ரவுல்பியா எப்படி ஒட்டிக்கொண்டது ?
லியனார்ட் ராவுல்ப் LEONARD RAWOLF என்ற ஜெர்மானியர் இதை சரக சம்ஹிதையில் கண்டார். இதன் அபூர்வ குணங்களை அறிந்து மேலை உலகத்துக்கு 1558-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் . அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டது .
இதன் தமிழ்ப் பெயர் என்ன ?
பாம்புக்களா
சர்ப்பம் என்னும் பாம்புக்கும் இந்த மூலிகைக்கும் என்ன சம்பந்தம் ?
சர்ப்பகந்தி இந்தியா எங்கும் வளர்கிறது இதே வகையைச் சேர்ந்த மேலும் நூறு மூலிகைகளையும் தற்காலத்தில் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதை அமெரிக்கர்களும் பயன்படுத்தத் துவங்கினர்
காந்திஜி ஏன் பயன்படுத்தினார் ?
இது மன அமைதியை உண்டாக்கி வேதாந்த சிந்தனையில் ஈடுபட உதவியதால் சர்ப்பகந்தி கஷாயத்தை அவர் அருந்தினார்.
இந்த மூலிகையில் ரெஸெர்பின் என்னும் ரசாயன உப்புReserpine அல்கலாய்ட்ஸ் இருக்கிறது; இது நரம்பு மண்டலத்தின் பணியை சமணப்படுத்தி இருதயத் துடிப்பைக் குறைக்கிறது ; முதலில் இதைஎடுத்துக் கொள்வோருக்கு தலைவலி, தவறான இருதயத் துடிப்பு வரும். ஆனால் போகப் போக சரியாகிவிடுகிறது
Rauwolfia serpentina (L.) is also known as Indian snakeroot belongs to the Apocynaceae family.
இதற்கு இந்திய ஸ்னேக்ரூட் என்ற பெயரும் உண்டு. இது தாவரவியலில் அபோசயநேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
இதில் முப்பது வகையான ரசாயனப் பொருட்கள் உள.
இந்தியாவில் இதற்குப் பல பெயர்கள் உண்டு; அவையாவன
India Arpa, avulpori, badgo, chandra, covannamilpori, dhan-barua, korengdabai, paathal garda, patalgaruda,saneggara, sarpa jhar, sarpangandh, vado
இதை ஹோமியோபதி மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள் .
ஏற்றுமதி
சென்ற ஆண்டு ஏற்றுமதி புள்ளிவிவரத்தின்படி இந்தியாதான் இதை அதிகம் ஏற்றுமதி செய்துள்ளது. இதை அதிகம் வாங்கிய நாடுகள் – ஜெர்மனி, பாகிஸ்தான், இலங்கை ஆகும்
இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஏற்றுமதியில் நிற்பது ருமேனியா இந்தியா 202 கப்பல்களில் அனுப்பியது ருமேனியா 13 கப்பல்களில்தான் ஏற்றுமதி செய்தது
இது இந்தியா முழுதும் பயிரிடப்பட்டாலும் இமயமலை அடிவாரத்தில்தான் அதிகம் வளர்க்கப்படுகிறது தென்னாட்டிலும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் இதை வளர்க்கிறார்கள்.
இதைக் கடையில் வாங்கி சாப்பிடலாமா?
நிறைய கடைகளில் இது கிடைத்தாலும் டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது; ஒருவரின் இருதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை முறையாக அளந்து ,அறிந்து , பின்னர் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் .
–subham—
Tags- காந்திஜி, பிடித்த, சர்ப்பகந்தி மூலிகை , பாம்புக்கடிக்கு, ரத்த அழுத்தம், மன அமைதிக்கு, ரவுல்பியா செர்பென்டினா,
லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர்
திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —
தலைப்பு –வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவில் பற்றி பேசினார்
*****
பெங்களூர் எஸ். நாகராஜன்
ராமரின் பெருமை- பற்றி பேசினார்
****
இன்றைய ராம நவமி சிறப்பு நிகழ்ச்சி:
ஸ்ரீ ராமர் மீதான பாடல்கள், கீர்த்தனைகள், கிருதிகள்
பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர்) மற்றும் செல்வி கெளரி கார்த்திகேயன், ஆகாஷ் ரமேஷ் .
****
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 6-4-2025
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்
முதலில் ராம நவமி பற்றிய செய்திகள்
மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி
மேற்கு வங்கம் முழுவதும் இன்று ஒரு கோடிக்கும் மேலான இந்துக்கள் பங்கேற்கும் 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடக்கின்றன . இதை இருபது இந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது
மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி இது பற்றிய தகவல்களை வெளியிட்டார் ,
கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடிக்கும் மேலான இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்குள் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் சுவேந்து அதிகாரி கூறினார்
சென்ற ஆண்டு ராம நவமி ஊர்வலம் மீது தாக்குதல்கள் நடந்தன ; ஆகையால் மேற்கு வங்க அதிகாரிகள் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். ****
ராம ரத யாத்திரைக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அல்உமா பாஷாவின் மரணத்தை தொடர்ந்து 2000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்றும் தமிழகத்தின் பெருநகரங்கள் தோறும் கலாச்சார சீரழிவுக்கும், போதைப்பொருள் பரவலாக்கலுக்கும் வழிவகுக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும் தமிழக காவல்துறை என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFI இயக்கத்துக்கு ஆதரவாக விசிக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலம் முழுவதும் அனுமதி அளித்த தமிழக காவல்துறை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஷாகீன் பாக் என்கிற பெயரில் கூடாரம் அமைத்து பல நாட்கள் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டினத்தில் ராம நவமி தினத்தன்று ராம ரத யாத்திரை நடத்த ராம பக்தர்களுக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்க்கொண்டு ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களை அகதிகள் போல நடத்தும் தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கும் தமிழக காவல்துறையின் ஹிந்து விரோத நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.
*****
திருவாரூர் ஆழித் தேரோட்டம்
திருவாரூரில் நாளை ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரசித் தி பெற்ற ஆழித்தேரோட்டம் நாளை ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.
ஆசியாவிலேயே பெரிய தேர்:
அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை கொண்டதாகவும், 96 அடி உயரம் கொண்டதாகவும் உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது.
இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளூர் விடுமுறை:
தேரோட்டத்தையொட்டி ஏப்.7-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
****
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோர்ட் அனுமதி
தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீக்கியுள்ளது.
நாளை ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
கோவிலின், புனரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்கும்வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து, யாகசாலை பூஜைகள் துவங்கிவிட்டன.
இந்த சமயத்தில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிட்டார். மேலும், கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை. ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்யப்பட்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட ஐகோர்ட்டு மதுரைக்கிளை, தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.
*****
முருகன் தலங்களில் பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம்
பழனி மற்றும் கழுகுமலை முதலிய தலங்களில் பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம் ஆகிவிட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம் . இந்த விழாவின் போது, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று, மலைக்கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
ஏப்ரல் 10-ஆம் தேதி, வள்ளிநாயகி அம்மனுடன் திருமுருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பிறகு, மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வருவார்.
இதே போல
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் தேதி காலை வைரத் தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானை, விநாயகர் பெருமான் ஆகியோர் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது 12-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
****
மருதமலை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணியசாமி கோயிலில் மகாகும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனால் கோயில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்திபெற்ற மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகம் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை நடைபெற்றது.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி L E D திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
******
உத்தரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
இங்குள்ள இலந்தை மரம் பழங்காலம் தொட்டு இன்றும் பூத்துக்குலுங்குகிறது. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.
மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம். இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.
****
சுவிட்சர்லாந்து நாட்டில் புதிய கோவில்
சுவிட்சர்லாந்து ஓல்ரன் திறிம்பார்க் தலத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகுஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 11.ஆம் தேதி நடைபெறுகிறது அம்பிகை அடியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தரிசித்தும் பூர்ணாகுதி மற்றும் மண்டலாபிஷேக உபயங்களை ஏற்றும் அம்பிகையின் திருவருளை பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகிகள் வேண்டுகின்றனர்.
நன்கொடை அனுப்புவதற்கான பாங்கு கணக்கு விவரங்கள் எங்கள் இரண்டு பிளாக்குகளிலும் நாளை வெளியாகும்.
****
மத்தியப்பிரதேசத்தில் கோவில் நகரங்களில் மதுபானத்துக்குத் தடை
மதுபானத்திற்கு கோவில் நகரங்களில் மத்திய பிரதேச அரசு விதித்த தடை ஏப்ரல் முதல் தேதி முதல் செயல்முறைக்கு வந்துவிட்டது
மத்திய பிரதேச அரசு, மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, 19 முக்கிய நகரங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் இந்த முடிவை முன்பே அறிவித்து இருந்த தார். முதல் கட்டமாக ஆறு நகராட்சிகள், ஆறு நகர பேரூராட்சிகள் மற்றும் ஆறு கிராம பஞ்சாயத்துகளில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் 19 மத வழிபாட்டுத் தலங்களில் மது விற்பனையைத் தடை செய்வதற்கான மத்தியப் பிரதேச அரசின் முடிவு குறித்து துணை முதல்வரான ஜெகதீஷ் தேவ்தா சில கருத்துகளைப் பகிர்ந்ததார் .
“இந்த முடிவுக்கு மரியாதைக்குரிய முதல்வருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் படிப்படியாக மது விலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்றாலும், இது ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை”, என்று கூறிநார்
தடை அமல்படுத்தப்படும் நகரங்கள்: உஜ்ஜைன், மைஹார், டாடியா, பன்னா, மண்டலா, முல்தாய், மந்த்சௌர், ஓர்ச்சா, சித்ரகூட், அமர்கண்டக், மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், சல்கான்பூர், பந்தக்பூர், குண்டல்பூர், பர்மன்கலா, லிங்கா, பர்மன்குர்ட் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது *****
ஹிந்து கடவுள் குறித்து அவதுாறு: கேரள கம்யூ., எழுத்தாளரால் சர்ச்சை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஹிந்து கடவுளை மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான்குமார் அவதூறாக பேசியதாக பா.ஜ., மா.கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மா.கம்யூ., சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான் குமார் பரிசு வழங்கி பேசினார்.
அப்போது ஹிந்து கடவுள் குறித்து அவர் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய எழுத்தாளரின் காரை பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வழிமறித்தனர். மா.கம்யூ., தொண்டர்களும் அங்கு திரண்டனர்.
இரு தரப்பினரும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராபின்சன் 30, என்பவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த அருமனை போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்
விழாவில் பேசப்பட்ட ஆடியோ பரிசோதிக்கப்படும் என்றும், அதில் ஹிந்து கடவுள் பற்றி அவதூறு பேசியிருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.எஸ்.பி., உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
****
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் வெளியீடு
பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைவரிடமும் தெய்வீகத்தை காண வேண்டும் என்பதே நமது கலாச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நன்மை பயப்பதாகவும் அவர் கூறினார். உலகை கட்டியெழுப்ப அவை மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறிய மோகன் பகவத், நமது வேதங்களை மறுகட்டமைப்பது அவசியம் என்றும் சுட்டிக் காட்டினார்.
*****
சோழர் கால கற்றளி கண்டுபிடிப்பு
முதலாம் பராந்தகச் சோழர் காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில் கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருங்களூர் அருகே, புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோவிலின் சிற்பங்கள், கட்டுமான சிதிலங்கள், கல்வெட்டுகள் ஆகியன புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கற்றளி என்றால் கல்லால் கட்டப்பட்ட கோவில் என்று பொருள்.
முற்கால சோழர் கலைப்பாணியில் முருகன், துர்க்கை, பிரம்மா மற்றும் இடுப்பளவு உடைந்த நிலையில் ஒரு சிற்பம், மூன்று நந்தி சிற்பங்கள், யாளி வரிசை, ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டின் துண்டுப் பகுதி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் 13- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகனைத்தும் விளக்கும் ஜோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை செங்கண் நெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிரக் காணும் நாளே!
– குலசேகர ஆழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் கோதண்டராமர் குடி கொண்டுள்ள வடுவூர் ஆகும். தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இது பஞ்ச ராமர் ஸ்தலங்களில் ஒன்றும் ஆகும். இது வைணவர்களின் 108 அபிமான ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைகிறது!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கோதண்டராமர் கோவில், அதம்பார் கோதண்டராமர் கோவில், பருத்தியூர் ராமர் கோவில் தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோவில் வடுவூர் கோதண்டராமர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களும் அமைந்துள்ள இடங்கள் பஞ்ச ராமர் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரே நாளில் இந்த ஐந்து திருத்தலங்களையும் வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. அயோத்திக்குச் செல்ல முடியவில்லையே என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தத் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனதிருப்தி அடைகின்றனர்.
இங்கு வழிபட்டால் பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
இங்கு மூலவர் கோதண்டராமர்
தாயார் சீதா தேவி
ஶ்ரீ ராமர் சீதாதேவியுடனும் லட்சுமணன் ஹனுமாருடனும் இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள உற்சவ மூர்த்தியின் அழகு அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அற்புத அழகைக் கொண்டது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.
வனவாசம் முடிந்து இராமர் அயோத்திக்குக் கிளம்பினார். அவரைத் தங்களுடேனேயே தங்குமாறு முனிவர்கள் வேண்டினர். தான் தங்கி இருந்த இடத்தில் தனது சிலை ஒன்றை அமைத்து அங்கு வைத்தார் ராமர். ,முனிவர்கள் அதைத் தங்களுக்கே கொடுக்குமாறு வேண்ட அப்படியே அருளினார் ராமர். ராமரை அங்கிருந்தே வழிபடலாயினர் முனிவர்களும் இதர மக்களும்.
காலப்போக்கில் இந்த சிலை இருந்த இடம் தெரியாமல் போனது.
பிற்காலத்தில் தலைஞாயிறு என்ற இடத்தில் தான் கண்டெடுத்த ராமர் சிலையை இங்கு ஸ்தாபித்தார் மராத்தியமன்னரான சரபோஜி.
இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் சரபோஜி மன்னர் தனது யாத்திரை ஒன்றில் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு பூமியிலிருந்து ஜெய் ஶ்ரீ ராம் என்ற ஒலி வந்தது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னர் அந்த இடத்தைத் தோண்டுமாறு உத்தரவிட்டார்.
அங்கே ராமர், சீதை, பரதர், லட்சுமணர், சத்ருக்னன், ஹனுமார் ஆகிய சிலைகள் இருந்தன. அங்குள்ள மக்கள் அந்தச் சிலைகளை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே பரத சத்ருக்னர் சிலைகளை அங்கேயே கிராம மக்கள் வழிபட நிர்மாணித்தார் மன்னர்.
கிராமத்தார் பரதனை ராமராகவும் சத்ருக்னனை லட்சுமணராகவும் நிர்மாணித்து புதிதாக சீதா தேவியின் சிலையைச் செய்து ஸ்தாபித்தனர்.
ராமர்சிலையை ஊர்வலமாகக் கொண்டு சென்ற போது வடுவூரை நெருங்கிய சமயத்தில் அனைவரும் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போது சரபோஜி மன்னர் கனவில் ராமர் தோன்றி தன்னை அங்கேயே அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்.
அங்கேயே சரயு குளம் ஒன்றைப் புதிதாகக் கட்டி விக்ரஹங்களையும் பிரதிஷ்டை செய்தார் மன்னர்.
இதுவே வடுவூர் கோதண்டராமர் கோவிலின் வரலாறு.
ருக்மிணி சத்யபாமை ஆகிய தேவியருடன் ஶ்ரீ கிருஷ்ணர் தனி சந்நிதியில் இருந்து இங்கு அருள் பாலிக்கிறார். கோதண்டராமர் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பே இவரே கர்பக்ருஹத்தில் குடிகொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.
இந்த ஆலய பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஸேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்டோரின் சன்னிதிகள் உள்ளன,
ஶ்ரீ ராமநவமியையொட்டி இங்கு பத்து நாட்கள் ப்ரம்மோத்ஸவம் நடைபெறும். பக்தர்கள் திரளாகக் கூடி வழிபடுவது வழக்கம். கருட சேவை மற்றும் தேர் உற்சவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள தேர் மன்னார்குடியில் உள்ள தேரை அடுத்து மிகவும் பெரிய தேராகும். வடுவூர் கிராமத்தில் உள்ள வடபதி மற்றும் தென்பதி என்று அழைக்கப்படும் கிராமத்தோர் இந்த தேர் உற்சவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தேரின் ஒவ்வொரு வடத்தையும் தென்பதி மற்றும் வடபதி மக்கள் இழுப்பது மிகவும் பிரசித்தமான ஒன்று. வைகுண்ட ஏகாதசித் திருநாளும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ கோதண்டராமரும் சீதா தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நூல் அறிமுகம் : இரு நூல்கள்
கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள்
நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை
தொகுப்பாசிரியர் திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம்
ச. நாகராஜன்
தினசரி பாராயணத்திற்கும் அனைத்துத் தல வழிபாட்டிற்கும் உகந்ததாக கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள், நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை ஆகிய சிறந்த இரு நூல்களைத் தொகுத்து அளித்துள்ளார் சிவஶ்ரீ திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம் அவர்கள்.
கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள்
இந்த நூலில் 123 கந்தபுராணப் பாடல்கள் தினசரி பாராயணத்திற்காகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
கந்தபுராண பாராயணம் கை மேல் பலன் தர வல்லது.
இருபதினாயிரம் பேர்கள் கவலைகளைப் போக்கும் கந்தபுராண பாடல்களை பாராயணம் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட பாடல்களைப் பாடி ஆறு பேர்கள் புத்திரபாக்கியம் பெற்றதாகவும் இந்தத் தொகுப்பு நூலாசிரியர் தெரிவிக்கும் போது மகிழ்ச்சியே ஏற்படுகிறது.
சிவபெருமான் துதி, விநாயகர் துதியில் ஆரம்பித்து அறுபடி வீடு முருகப் பெருமானைப் போற்றுதல் காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், கந்தன் என்ற திருநாமம் பெற்றது உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
இந்த நூல் சிவத்தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவி மற்றும் இறைவன் நாமங்களைத் தொகுத்து வழிபடக் கூடிய விதத்தில் நாமாவளியாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி வடகரைத் தலங்கள் 63
காவிரி தென்கரைத் தலங்கள் 127
ஈழ நாட்டுத் தலங்கள் 2
பாண்டிய நாட்டுத் தலங்கள் 14
மலை நாட்டு தலம் 1
கொங்கு நாட்டு தலங்கள் 7
நடுநாட்டு தலங்கள் 22
தொண்டை நாட்டு தலங்கள் 32
துளுவ நாட்டு தலம் 1
வடநாட்டு தலங்கள் 5
கல்வெட்டில் தேவாரம் கண்டெடுக்கப்பட்ட தலங்கள் 2
திருவாசக தலங்கள் 2
திருவிசைப்பா தலங்கள் 8
வைப்புத் திருத்தலங்கள் 12
வாரணாசி காசி தலம் 1
ஆன்மார்த்த மூர்த்தி 1
ஆக மொத்தம் 300
ஆக இப்படி 300 தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவி மற்றும் இறைவனின் திருநாமங்கள் தொகுக்கப்பட்டு திரிசதி நாமார்ச்சனை செய்ய உகந்ததாக இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக இரு தலங்களின் நாமார்ச்சனையை இங்கு காண்போம்:
தில்லை சிதம்பரம்
சிவகாமசுந்தரி ஸமேத சிதம்பரேஸ்வர சிவாய நம:
திருவேட்களம்
ஓம் சற்குணாம்பாள் ஸமேத பாசுபதேஸ்வர சிவாய நம:
இந்த நூலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சிவஶ்ரீ ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார், மயிலாடுதுறை ஆகியோர் வாழ்த்துரை அளித்துச் சிறப்பித்துள்ளனர்.
மெய்யன்பர்கள் பலவிதத்திலும் மேன்மையுறவும் இகபர சௌபாக்கியம் பெறவும் உதவக்கூடிய விதத்தில் அற்புதமாக இந்த நூல்களைத் தொகுத்த சிவஶ்ரீ திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம் அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ibis birds with long beaks ; I took the pictures in Sydney Royal Botanic gardens
I used to watch birds from my son’s house in Pennants Hill surrounded by forests. The forest extends to over 100 miles, but dotted with residences. Since I get up at 4-30 am, I used to listen to kookaburra’s laughing. They are called laughing birds because when they join in chorus, they make big laughing sound. But at five am they only make hiccup sound.
Another bird is the noisiest cockatoos. They are seen everywhere like Indian crows. They make irritating noise. But individually look beautiful; they are snow white in colour with a yellow crest. On a foggy day, they raided our lemon tree in the garden and gobbled ten to 15 fruits in half hour.
Emu is a typical Australian bird; but now they have even Emu farms in India. The birds are huge. I saw them only in mini zoos in parks.
Bush turkey visits our gardens. Colourful parrots, what we call in India Panchavarna Kili , are seen everywhere. Pigeons, crows with white neck are also found in all gardens.
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
In the rain forests rare lyre birds are seen.
Kookaburras wait for 20 to 30 minutes and catch insects , lizards etc. They visit our garden everyday.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
More pictures from Nelson Bay and Australian Museum.
The big giant size Chess board is in India as well. I took pictures from Malampuza Dam (Kerala in India) garden 10 or 15 years ago and posted it.
I took these Chess board pictures in Nelson Bay.
The stuffed Tiger and Lion are of great interest to children There is a white shark, Dinosaur etc in the Canteen area of Australian Museum .
All these are educative and create interest in Nature.
Giant Size Chess board in Nelson Bay, Australia. Children play with th coins and learn Chess.
Stuffed wild animals.
Giant Size White Shark made up of Marble?
–Subham—
Tags- Australian ,Titbits, Part 1, Australian Museum, Stuffed animals, Giant Size, Chess, White Shark, Dinosaur, Chess
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
I have written about our visit to Blue Mountains from Sydney. There huge Dinosaur figures welcome (or scare) children . They are mechanically activated. They roar and move and open their wide jaws. When children see the big sharp teeth, they scream!
The good thing about this show is that all the scientific information is also provided with the huge models.
Here are the pictures
Dinosaur Egg Model
*****
Stuffed Kangaroo (Not Dinosaur)
For full details , please download my books from pustaka.co.in
–Subham—
Tags- Australian ,Titbits, Part 1, Dinosaur Valley ,Blue Mountains, New South Wales
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.
Here is my latest book:
Shiva Temple in Australia
Foreword
I have visited Australia twice in the last ten years. During 2024-2025, I was lucky to stay there for three months continuously. Australia is the sixth largest country in the world. Unless one is young and wanderlust, it is difficult to cover all the important tourist spots. There are 10,000 beaches!
When I mentioned that I should go to Uluru/ Ayers Rock in the middle of the continent, even my relatives who have been living there for over three decades, advised me against the trip. But the East coast of the continent lashed out by the vast Pacific Ocean is the area where 87 % of the people live. I have covered all the important places in the New South Wales where Sydney is located. Of the seven states, I have covered only two states New South Wales and Queensland.
Though I have visited the most famous natural wonder Great Barrier reef, Brisbane city, Bondi Beach and Nantien Buddhist temple, I have not written much about them in this book. But I have written detailed articles in Tamil. I have travelled by train, ferry, plane and car which helped me to understand the actual life there. Hope this book with lot of useful tips will encourage new visitors to see all the places without any difficulty.
Australian Weather is a problem for travellers. Even Sydney experiences rain in 140 days in a year. So, people walk with umbrellas. I would suggest everyone to study the weather before travelling to a tourist spot.