முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்!!(Post.14351)

Written by London Swaminathan

Post No. 14,351

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முப்பது கோடி முகமுடையாள் உயிர்-

மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.– பாரதியார் 

பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . அப்போது இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்ற அரிய செய்தியை நமக்கு பாரதியார் அளிக்கிறார். இதனால்தான் பாரதி பாடாத பொருளே இல்லை என்று அறிஞர்கள் செப்புகிறார்கள் . இதை எழுதும் இந்த ஆண்டில் பாரத மக்கட் தொகை 146 கோடி . அதாவது உலகிலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு. சீனாவையும் நாம் மிஞ்சிவிட்டோம்!

சரி, அப்பட்டியானால் மஹாபாரத காலத்தில் என்ன மக்கட்தொகை? ராமாயண காலத்தில் ஜனத்தொகை என்ன? இவை பற்றி பல சுவையான செய்திகள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரிக காலத்தில் ஜனத்தொகை என்ன ?  ஹரப்பா வட்டாரத்தில் நமக்கு 300 க்கும் குறைவான எலும்புக்கூடுகளே கிடைத்துள்ளன. ஆனால் நாடு முழுதும்  பழங் கற்கால தடயங்கள் கிடைத்துள்ளன எல்லாம் குறைந்தது 5000 ஆண்டுகள் பழமை உடைத்து .

மஹாபாரதப் போரில் 7+11=18  அக்சௌகிணி अक्षौहिणी சேனைகள் கலந்து கொண்டதாகப் படிக்கிறோம்.

அந்தக் காலத்தில் படைகளில்தான் அதிகம்பேர் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள் ;  விவசாயம்  என்பதெல்லாம் பெரும்பாலும் குடும்பத்துக்கான தொழிலாகவே இருந்தது; ஆகையால் படைபலத்தைக் கொண்டு ஒரு நாட்டின் ஜனத்தொகையைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு அக்சௌகிணி अक्षौहिणी  என்பது 65,610 குதிரைகள், 21,870 தேர்கள்,  21,870 யானைகள், 109,350 காலாட்படை வீரர்கள் = : 218,700 வீரர்கள் கொண்டது! இது போல பதினெட்டு பட்டாளங்கள்.

 பெண்கள் அக்காலத்தில் போருக்கு வரவில்லை. ஆகையால் இதே போல இன்னும் ஒரு மடங்கு வீட்டில் இருந்திருப்பார்கள் இவர்களைத் தவிர வயதானோரும் ஏனைய தொழில் செய்வோரும், குழந்தைகளும் இருந்திருப்பார்கள்; ஆகவே குத்து மதிப்பாகத்தான் கணக்கிடலாம்.

ஆயினும் இந்த எண்ணிக்கை பிற்கால எண்ணிக்கையுடன் ஒப்பிட உதவுகிறது.

In the Mahabharata, an “akshauhini” is a military formation comprising 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 infantry, totaling 218,700 warriors, excluding charioteers. 

Here’s a more detailed breakdown: 

  • Chariots: 21,870
  • Elephants: 21,870
  • Horses: 65,610
  • Infantry: 109,350
  • Total: 218,700 warriors (excluding charioteers)
  • In the Kurukshetra War: The Kauravas (Duryodhana’s army) had 11 akshauhinis, while the Pandavas (Yudhishthira’s army) had 7.

புராதன இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யம் மெளரிய பேரரசு ஆகும் ; அதில் அங்கம் வகித்த மாமன்னன் அசோகன் நடத்திய கலி

ங்கத்துப் போரும் அதனால் அவன் மனம் மாறி புத்த மத்தை ஏற்றுக் பரப்பியதையும் நாம் அறிவோம் . அந்த கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம்பேர் காயமடைந்தனர் ; ஆனால் இதில் மஹாபாரதப் போர் போல இமயம் முதல் குமரி வரையுள்ள படைகள் ஈடுபடவில்லை.  நாட்டின் பெரும் பகுதியில் உள்ளோர் ஈடுபட்டிருக்கலாம் ; ஆக அப்போது இரண்டரை லட்சம் படைவீரர்கள் இந்த மாபெரும் யுத்தத்தில் இருந்துள்ளனர்

ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு நமக்கு ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கிறது; ஒரிஸ்ஸா ஜனத்தொகை  மூன்றரை லட்சம்! இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்!

மவுரிய பேரரசின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல ; ஏனெனில் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலிலும் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார் மெகஸ்தனிஸ் சொல்லும் எண்ணிக்கை – மவுரிய பேரரசில் 6.5 லட்சம் படைவீரர்கள் உள்ளனர்

ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனத்தொகை சுமார் நாலு கோடிப் பேர்தான்

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல், மவுரியர் கால மக்கட் தொகை கணக்கெடுப்பு பற்றிப் பேசினாலும் சென்சஸ் புள்ளிவிவரங்   களைத்த தரவில்லை.

வெள்ளைக்கார்கள்  நடத்திய 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்திய ஜனத்தொகை  23-5 கோடி

இப்போது இந்திய படைவீரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி ; பொதுவாக உலகம் முழுதும் ஜனத்தொகை பெருகிக்கொண்டுதான் வருகிறது ஆகையால் இந்தப் படைவீரர் எண்ணிக்கை அதைக் காட்டுவதைக் காணலாம்.

The Indian Army, the world’s largest standing army, has a strength of approximately 1.237 million active troops and 960,000 reserve troops, making it a significant military force. 

The Indian Armed Forces, with over 1.4 million active personnel, are the world’s second-largest military force and possess the world’s largest volunteer army, comprising the Indian Army, Navy, and Air Force. 

Here’s a more detailed breakdown:

Indian Army: காலாட் படை / ராணுவம்

    • 1,232,000 active personnel 
    • 900,000 reserve personnel 
    • ~310 manned aircraft 
  • Indian Navy: கப்பற்படை
    • 135,000 active personnel 
    • 100,000 reserve personnel 
    • Approx 1926+ aircraft 
    •  

Indian Air Force: விமானப் படை

  • 135,000 active personnel 
  • 100,000 reserve personnel 
  • Approx 1926+ aircraft 
  • Paramilitary Forces: Approximately 1.3 million paramilitary personnel பாரா மிலிட்டரி எனப்படும் ஓரளவு ராணுவம்.

இது தவிர போலீஸ் காவலர்கள்!

புற நானூற்றில் கபிலர் நிறைய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் ; பாரியின் முன்னூறு ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டதாகப் பாடுகிறார்  சிறிய பறம்பு நாட்டில் 300 ஊர்கள் இருந்திருக்குமானால் சேர சோழ பாண்டிய தேசங்கள் முழுதும் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்; இன்றைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள்; ஊர்கள் உள்ளன. மக்கட் தொகையில் நூறு கோடிப்  பேர் அங்கே இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்..

எண்கள் பற்றி எச்சரிக்கை தேவை

ராமாயண காலத்தில் மிகவும் குறைவான மக்களே நாடு முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் எல்லா  எண்களுடனும் ஆயிரம் , கோடி என்ற சொற்களை பிற்காலக் கவிஞர்கள் சேர்த்துக் கொண்டனர். இதை ரிக்வேதம் முதல் ராமாயணம் வரை காணலாம். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர்  என்றால் அவருக்கு எண்ணற்ற மனைவியரென்று பொருள்; இதே போல ரிக் வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் வருகிறது . அங்கும் ஆயிரம் என்பதை நாம் எண்ணற்ற என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

–SUBHAM—

TAGS- மக்கட்தொகை, ஜனத்தொகை, சென்சஸ், பழங்கால, போர் வீரர் , ராமாயண, மஹாபாரத, சிந்துவெளி , காலம் , வெள்ளைக்காரர், முப்பது கோடிமுகமுடையாள்,  பாரதியார்

ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே தீர்வு –  மகான்களின் தீர்மானம்! (Post.14,350)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,350

Date uploaded in London – –6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே குழப்பங்கள் தீர ஒரே தீர்வு –  மகான்களின் தீர்மானம்!

ச. நாகராஜன்

மஹா கும்ப மேளா ஆரம்பத்ததிலிருந்து ஏராளமான மகான்கள், துறவிகள் ஹிந்து ராஷ்ட்ரம் உடனே வேண்டும்; அனைத்து விதமான குழப்பங்களுக்கும் அது ஒன்றே தீர்வு என்று சொல்லி வந்துள்ளனர்.

இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஹிந்து ராஷ்ட்ர மாநாடு மஹா கும்பமேளாவை ஒட்டி நடந்தது.

ஹிந்து ராஷ்ட்ரத்தை அமைக்கத் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய  மகான்கள் உறுதி பூண்டு அதை பகிரங்கமாகத் தெரிவித்தும் உள்ளனர்.

அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய எல்லா  முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி 31, 2025 அன்று அகில் பாரதீய தர்மசங் மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி (HJS) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தின.

நாம் இந்தியாவை பெரிதாக ஆக்குவோம்; இதை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்குவோம், ஜெய் ஶ்ரீ ராம் , ஹர ஹர மஹாதேவ் என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.

ஹிந்து ராஷ்ட்ரம் அமையவிருப்பதை எண்ணி அனைவரும் உற்சாகம் மேலிட தங்கள் மகிழ்ச்சியை உரைகளில் காட்டினர். ஓரிழையில் இணைந்து அனைவரும் பாடுபடுவோம் என்று முழங்கினர்.

மாநாடு சங்கொலியுடன் ஆரம்பித்தது.

ஶ்ரீ ஸ்வாமி கர்பத்ரி வேத சாஸ்த்ர அனுசந்தான் கேந்திரத்தின் சார்பில் ஆசுதோஷ் ஜா மற்றும் அனுபம் குமார் த்ரிவேதி வேத ஸ்லோகங்களை முழக்கினர்.

நீலேஷ் குல்கர்னி (சனாதன் ப்ரபாத் தினசரியின் உதவி ஆசிரியர்) சனாதன் ப்ரபாத் பத்திரிகையின் பணியை விரிவாக எடுத்துரைத்தார்.

சத்குரு டாக்டர் சாருதத்தா பிங்களே (National Guide of Hindu janajagruthi Samithi – HJS மற்றும் சத்குரு நிலேஷ் சிங்பால் ஜனஜாக்ருதி சமிதி  (Dharma Pracharak of HJS) மகான்களுக்கு மலர் மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளைச் சூட்டி கௌரவித்தனர்.

பங்க்ளாதேஷில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி அனைவரும் கவலை தெரிவித்தனர். காசி, மதுரா, மற்றும் இதர ஆலயங்கள் ஆகியவற்றை விடுவிக்க சட்டபூர்வமான போராட்டம் நடத்தப்படும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஏற்று தீர்மானித்தனர்.

ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க ஒரு நடைமுறை இயக்கம் வேண்டும்.

இந்தியா “ஹிந்து ராஷ்டிரம்” என்று சட்டபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கூடியிருந்த அனைத்து மகான்களும் தங்கள் உரைகளில் வலியுறுத்தினர்.

ஆதாரம், நன்றி: Sanathan Prabhat 28-2-25 இதழ்

***

London Swaminathan’s March 2025 Articles Index;  Index No.148 (Post No.14,349)

London Swaminathan in Opera House, Sydney

Written by London Swaminathan

Post No. 14,349

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Around (half) the world in 100 Days! (Post No.14,301)23/3

Darshan at Two Temples and Sri Muralidhara Swamikal Ashram (Post  No.14,313)26/3

Ferns for Breakfast in Sydney (Post No.14,270)4/3

Gangaikonda chozapuram and Parikkal Narasimha Swami Temple (Post No.14,307) 24/3

Modern Trends in Hinduism; Koothanur Saraswathi Temple Visit! (Post No.14,319) 28/3

My Visit to Petronas Twin Towers in Malaysia (Post.14,302)23/3

Rare Pictures from 1911 Book (Post No.14,320)28/3

Rare Pictures of Gopalakrishna Bhagavathar and Kanchi Paramacharya (Post No.14,321)28/3

Saint Purandaradasa’s Quotations – April 2025 Calendar (Post No.14,324)29/3

Statues in the Royal Botanic Garden in Sydney (Post.14,262)2/3

Way to Muralidhara Swamikal Ashram near Malaippattu  (Post No.14,322)28/3

Wonders of Batu Caves Skanda Shrine in Malaysia (Post No.14,298)22/3

GNANAMAYAM 2-3-2025 BROADCAST SUMMARY 2,9, 16, 23, 30 March 2025

GNANAMAYAM 2-3-2025 BROADCAST Programme 2,9, 16, 23, 30 March 2025

Hindu Crosswoord8325 (Post.14,282)1,2,3,6,7, 8, 9, 12, 27 March 2025

Holiday Notice 11/3/2025

London Swaminathan’s February 2025 Articles Index;

Index No. 147 (Post No.14,273)5/3

****

 Darling Harbour, Sydney, Australia 

 Sydney Harbour Bridge

தமிழ்க் கட்டுரைகள்

தந்தை யார்?குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post No.14,284) 9/3

டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293) 12/3

ஆசைக்கு வெட்கமில்லை! குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -3 (Post 14,288) 11/3

கணவனே கண்கண்ட தெய்வம்: குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -2(Post.14,288) 10/3

காணக் கண் கோடி வேண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர்  புன்சிரிப்பு ! (Post No.14,309) 25/3

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்! (Post No.14,315 ) 27/3

கொலம்பியா  நாட்டில்  அதிசய  சிலைகள் ! (Post No.14,265) 3/3

சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்—30 (Post No.14,256) 1/3

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் (Post No.14,327) 30/3

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் – Part 2 (Post No.14,332)

டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர் ! (Post No.14,275) 6/3 

சென்னை நங்கநல்லூர் கோவில்கள் (Post.14,318) 28/3

நான் கண்ட மலேசியாவின்  உயர்ந்த கட்டிடம் 1483 அடி! (Post No.14,300) 23/3

பத்து மலை (மலேசியா) முருகனைப் பார்க்க வாருங்கள்! (Post No.14,297) 22/3

பரிக்கல் நரசிம்மர் கோவில்- மீண்டும் விஜயம் ! (Post.14,306) 24/3

புரந்தரதாசரும் பாரதியாரும் (Post.14,257) 1/3

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு! (Post.14,272) 5/3

புரந்தரதாஸரின் புகழ்மிகு கீர்த்தனைகள் (Post.14,281) 8/3

மனைவி வாழ்க! புரந்தரதாசர் புகழ் மாலை!! (Post.14259) 2/3

மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் தரிசனம் (Post No.14,312) 26/3

மிஸ் லட்சுமிக்கு ( HEY, MISS LAKSHMI!) புரந்தரதாசர் கேள்வி (Post No.14,268) 4/3

வேத கால மூலிகை மருத்துவம் பற்றி புதிய தகவல்கள் (Post No.14, 331) 31/3

தமிழ் தெரியுமா4325 ? (Post.14,267) 4/3

ஆண்டவனிடம் புரந்தரதாசர் கேள்வி: நீ கருணை உள்ளவனா ? (Post.12,278) 8/3

ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள் (Post No.14,326) 30/3

கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post No.14,295) 21/3

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-3-2025 (Post No.14,287) 2, 9, 16, 23, 30 தேதிகளில்

In the botanic garden

In Sydney Murugan Temple

–subham—

Tags- London Swaminathan’s  March 2025 Articles Index;  Index No.148 

London Swaminathan’s New TAMIL book -Research Articles on Tamil-Avestan- Sanskrit- Greek Languages

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them. Two Tamil books are printed in two separate volumes.

Here is one of my latest books

தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்      BOOK TITLE

பொருளடக்கம்

1.தமிழ் மொழி – அவஸ்தன் மொழி தொடர்பு

2.தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு- Part 2

3.கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள்

4.தமிழ் மக்கள் சம்ஸ்க்ருதம் இன்றி வாழமுடியுமா?

5. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-1

6. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-2

7. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி- 3

8.திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி?

9.நீ பசுவை வணங்கினால் நான் நாயை வணங்குவேன்’

10.மொழி அழகு: ருதம், ம்ருதம், அம்ருதம், ப்ரம்ருதம், சத்யாந்ருதம்

11.தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 1

12.தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்பு

13. பாகதம் -இழிசனர் வழக்கு

14. ஆங்கில மொழியில் சம்ஸ்க்ருத இலக்கணச் சொற்கள்

15.தமிழ் மொழியில் ஆங்கில இலக்கணச் சொற்கள்

16. இந்து வழிபாட்டில் இலக்கணம்

17. தமிழ் மொழியில் பாணினியின் அஷ்டாத்யாயி

18. பாணினியின் சாதனை

19. மூன்று தமிழ் நூல்களில் ‘அதிகாரம்’

20.தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி பற்றி பாரதி

21.இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்!

22.தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு

23.குதிரை, பரி, புரவி, இவுளி தமிழ்ச் சொற்களா?

24.சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்லுவது என்ன ?  இதோ 4 கதைகள்

25.யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம்

26.புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்

27.நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி

28.சென்ற மொழியியல் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள்

*******

அட்டைப்படத்தில் அவஸ்தன், கிரேக்க, சம்ஸ்க்ருத மொழிக்  கல்வெட்டுகளைக் காணலாம்

–Subham—

முன்னுரை

தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க -மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளியாகும் இந்த நூல் மொழியியல் ஆராய்ச்சி குறித்த எனது இரண்டாவது நூலாகும். உலகின் மிக முக்கியமான நான்கு மொழிகளின் ஒற்றுமைகளை இருபத்தைந்துக்கும் மேலான கட்டுரைகள் ஆராய்கிறது .

தமிழ் தெரிந்தவர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிவதில்லை; சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. இதனால் பல தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கிரேக்கம் மற்றும் அவஸ்தன் மொழி பற்றி நிறைய பேருக்குத் தெரியவே தெரியாது. அவைகள் பற்றிய ஆங்கில நூல்களை நான் படித்தபோது தமிழ் சம்ஸ்க்ருத மொழிகளுடன் அவைகளுக்குள்ள அபூர்வ ஒற்றுமை தெரிந்தது.  பாரதியார் பாடலில் சொன்னது போல தமிழ் மொழியை ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்றால், தமிழின் பழமை எவ்வளவு என்பது எல்லோருக்கும் விளங்க வேண்டும். சிவ பெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை யானது தமிழ் மொழி! எழுத்துக்களைக் கற்கும் சிறுவர் சிறுமியர் கற்பது அரிச்சுவடி; அதாவது தமிழ் எழுத்துக்கள், திருமால் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது; அதனால் அதற்கு அரிச்சுவடி என்று பெயரென்பதை அம்பலவாண தேசிகர் அறப்பளீஸ்வர சதகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகின் ஆதி மொழிகள் என்றும் எந்த ஒரு பழைய மொழியிலும் இவ்விரு மொழிகளின் சொற்கள் இருப்பதைக் காணலாம் என்றும் நான் என் கருத்தினை முன்வைத்து ஆதாரங்களைக் காட்டியிருக்கிறேன். மொழியியல் ஆராய்ச்சிக்கு இந்த நூலும் இதற்கு முந்தைய எனது நூலும் துணை புரியும். மேலும் புது நோக்கில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை .

தமிழ் வாழ்க! சம்ஸ்கிருதம் வளர்க!

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

அக்டோபர், 2024

Swami_48 @ yahoo.com

Swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க -மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – October 2024

Subject – Culture and Language

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

–Subham—

MY BOOKS

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 137+2 நூல்கள்:

HOW TO GET THE BOOKS? PLEASE GO TO Pustaka.co.in and type London Swaminathan in Author Box

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

(48.Country of Kangaroos and Koalas!

Amazing Australia!!  )

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78.விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபாமோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ்ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள்கல்வெட்டுகள் தமிழ் பற்றிய 

புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

(88.தமிழ்சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள் )

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

Xxxx

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

திருமீயச்சூர் கோவிலுக்கு மீண்டும் பயணம்! (Post No.14,348)

Written by London Swaminathan

Post No. 14,348

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 க்ஷேத்திர  புராணேஸ்வரர் சிலை 

பிரும்மா 

நர்த்தன கணபதி 

நால்வரும் சேக்கிழார் பெருமானும் 

நாகர்கள் 

மார்ச் மாதம் 16 ஆம் தேதி (2025) கூத்தனூரில் சரஸ்வதி தேவி தரிசனத்தை முடித்துக் கொண்டு திருமீயச்சூருக்குச் சென்றோம் . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இறைவியின் தரிசனம் கிடைத்தது .

இந்த முறை விஜயத்தில் கண்ட புதிய விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள புகழ்பெற்ற க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலை பார்வதியின் கோபத்தை சிவன் தணிக்கும் காட்சியாகும் அதைப் பார்த்தவுடன் ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு கணவன் மனைவி ஜோடியும் நின்று ரசித்துப் பார்க்க வேண்டிய சிலை அது ; நானும் புகைப் படம் எடுத்தேன் .

க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலையைக் காணவும் . சிலையை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால் வெவ்வேறு முக பாவங்கள் தெரியும் வண்ணம் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம், அவற்றிலுள்ள சுதைகள், மற்றும் பிரகாரத்திலுள்ள லிங்கங்கள், நாகர்கள் எல்லாம் நூறு சதவிகித பெர்பெக்ஷன் PERFECTION பூரணத்துவம் கொண்டவையாகும் . லலிதாம்பிகையின் அழகையோ காண்பதற்குக் கண் கோடி வேண்டும்!

பிரகாரத்தில் உள்ள சிவ லிங்கம், மற்றும் நால்வர் சிலைகள் மனதில் விட்டு நீங்காது நிற்கின்றன.  கோவில் முழுதும் நல்ல சூரிய வெளிச்சம் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் எல்லா சிலைகளையும் ரசித்துப் பார்க்க முடிகிறது.

சிவலிங்கங்கள் 

*****

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இதோ

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் கிளி அதிசயம் (Post No.11,772)

 Post No. 11,772; Date uploaded in London – –  5 MARCH 2023                 

யாளியின் சிலைக்குக் கீழே கிளியைக் காணலாம் 

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது.

நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023)  சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார்.  பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக்  கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.

நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச  நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.

பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார்  . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)

கொலுசு அதிசயம்

இந்த மேக நாதர் கோவிலில்  லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத்  துவங்கியவுடன் , சமையல்  அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).

அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக  அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.

11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்.

அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்.

சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.

கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .

பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே..

கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன

சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle)  அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .

அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோவில் இது

இறைவர்                   : முயற்சி நாதர், மேகநாதர்

இறைவியார்               : சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்

தல மரம்                   : வில்வம்

தீர்த்தம்                    : சூரிய புஷ்கரணி

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர்

யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.

சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது.

–subham–

Tags- திருமீயச்சுர் , லலிதாம்பிகை, லலிதா சஹஸ்ரநாமம் , சிவன் ,கோவில், கொலுசு,  வளையல் , மேகநாதர், மீண்டும் விஜயம்,

குழந்தைகள்  பிழைக்க வழி செய்யும், அரிசி அளவிலான, அதிசய கருவி! (Post.14,347)

Written by London Swaminathan

Post No. 14,347

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இருதய நோயுள்ளவர்களுக்கு பொருத்தப்படும் பேஸ்மேக்கர் PACEMAKER பற்றிப் பலரும் அறிவார்கள் . ஒருவரின் உடலுக்குள் இருதயத்துக்கு அருகில் பொருத்தப்படும் இக்கருவி இருதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது அந்த துடிப்பு தாறுமாறாகப் போனால் அதை மின்சக்தி மூலம் தூண்டிவிட்டு சரியாக்குகிறது. நீண்டகாலம் செயல்படும் பேட்டரி இதற்கான மின் சக்தியை அளிக்கிறது .

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எப்படி இறந்தார்  ?

இதன் முக்கியத்தை உணர நிலவில் முதலில் காலடிவைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG பிற்காலத்தில் எப்படி மரணம் அடைந்தார் என்பதை அறிய வேண்டும் . அவரது உடலில் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவியை அகற்றியபோது ரத்தம் கசிந்ததால் மரணம் சம்பவித்தது.

இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிசிக்கும் GRAIN OF RICE சிறிய அளவுள்ள கருவி TINY PACEMAKER குழந்தைகளுக்கானது.  நூறில் ஒரு குழந்தை தாறுமாறான இருதாயத் துடிப்புடன் HEART DEFECTS, பிறக்கின்றது. ஆனால் அது ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடுகிறது ஆயினும் அந்த ஒருவாரம் கவலை தரும் வாரமாக அமைகிறது . அந்தத் தருணங்களில் செயற்கை இருதயக் கருவியைப் பொருத்துவது சிக்கலானது; இப்போதைய அமெரிக்கக் கண்டுபிடிப்பு இந்த சிக்கலை நீக்கிவிடுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக டாக்டர் ரோஜர்ஸ் PROF.JOHN ROGERS, NORTHWESTERN UNIVERSITY, ILLINOIS, USA இது செயல்படும் முறையை விளக்கினார்.

இந்த மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி 3.5 மில்லிமீட்டர் நீளமும் ஒரு மில்லிமீட்டர் தடிமனும் உடையது; உடலில் குத்த பயன்படும் சிரிஞ்ச் ஊசி முனையில் இதை வைத்துவிடலாம். இதைக் குழந்தையின் உடலுக்குள் செலுத்தியவுடன் அது இருதயத் துடிப்பை அளந்து தகவல் கொடுக்கும். ஒரு வாரத்துக்குப் பின்னர் அது உடலில் கரைந்துவிடும்.

குழந்தையின்  உடலின்  மேல் சிறிய, மென்மையான , மின்சார கம்பி இணைப்பு இல்லாத, ஒரு கருவியும் இருக்கும்; இருதயத் துடிப்பு சரியாக இல்லாவிட்டால் அதில் மின்சக்தி உண்டாகி உடலுக்குள் செலுத்தப்பட்ட தற்காலிக பேஸ்மேக்கரை செயல்படவைக்கும்.

இது தற்காலிக உபயோகத்துக்கு மட்டுமே உதவும். பின்னர் உடலில் செலுத்தகப்பட்ட பேஸ்மேக்கர் கரைந்துவிடும்.

குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்தாலும் கூட தற்காலிக பேஸ்மேக்கர்தான் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சி உதவியாளர் பேராசிரியர் இகோர் எப்பமோவ் PROF.IGOR EFIMOV,  கூறுகிறார்.

இந்தக் கண்டுபிடிப்பு வேறு சில சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது பயோ எலெக்ட்ரானிக் மெடிசின் BIO ELECTRONIC MEDICINES என்பது உடலுக்குள் கரைந்துவிடும் மருந்துகளாகும். நரம்புகள், எலும்புகள் , உடலுக்குள் உள்ள  புண்கள் முதலியவற்றைக் குணப்படுத்தவும் இதே உத்தியைக் கையாளலாம் என்று பேராசிரியர் ஜான் ரோஜர்ஸ் சொல்கிறார். உடலுக்குள் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் இந்த பயோ எலெக்ட்ரானிக் மருந்துகள் உதவும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் இந்தக் குட்டிக் கருவிகள் எதிர்காலத்தில் மருத்துவப் புரட்சியைத் தோற்றுவிக்கும் .

PACEMAKER: An electronic device that is implanted in the body to monitor heart rate and rhythm. It gives the heart electrical stimulation when it does not beat normally. It runs on batteries and has long, thin wires that connect it to the heart.

–SUBHAM—

TAGS- குழந்தைகள் , அரிசி அளவிலான அதிசய கருவி, 

இருதய நோய் ,  பேஸ்மேக்கர் PACEMAKER , அறிவார்கள் . இருதயத்  துடிப்பு,நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ,

தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை? (Post No.14,346)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,346

Date uploaded in London – –5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை? 

ச. நாகராஜன் 

உலகில் இன்று பல லட்சம் பேர்கள் தூக்கமின்றித் தவிக்கின்றனர்.

நடைப்பயிற்சி, விளையாட்டுகள், உடல் பயிற்சி ஆகிய எல்லாவற்றையும் விட உடலுக்குத் தேவையானது நல்ல தூக்கமே. 

தூக்கம் அப்படி என்ன உடலுக்கு நன்மை செய்கிறது? 

லோபரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தூக்க ஆய்வு மைய இயக்குநரான டாக்டர் ஜிம் ஹார்ன் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.

(Dr. Jim Horne, Director of the Sleep Research Laboratory, Loughborough University).

உடலில் மூளையைத் தவிர இதர எல்லா அங்கங்களும் தூக்கமின்றி எட்டு முதல் பதினோரு நாட்கள் வரை இயங்க முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

நல்ல ஓய்வுசரியான உணவு ஆகியவற்றால் அந்த அங்கங்கள் பழைய ஆற்றலைத் திருப்பிப் பெற முடியும் என்றது அவரது ஆய்வு.

ஆனால் மூளையோ சரியான ஓய்வை எடுக்கவில்லை என்றால் மனிதனின் நடத்தையே மாறி விடும். மாயாஜாலத் தோற்றங்கள் உருவாக ஆரம்பிக்கும். உடல் சித்திரவதைக்கு உள்ளாவது போல பாதிக்கப்படும்.

ஒரே ஒரு நாள் நல்ல தூக்கத்தை இழந்தால் கூட அது நமது அன்றாட வாழ்வில் பல தவறுகளை ஏற்படுத்தி விடும். மூளையின் மேல் பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் என்னும் மூளையின் படைப்பாற்றல் பகுதியானது மட்டும் போதுமான ஊக்கம் (மோடிவேஷன்) மற்றும் நாளங்களில் போதுமான அளவு அட்ரினலின் இருந்தால் இன்னும் இயங்கும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை.?

நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது என்பது பெரும்பாலானோரால் சொல்லப்படும் ஒரு கூற்று.

பொதுவாக ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஒருவருக்குத் தூக்கம் தேவை.

ஆனால் சிலருக்கு 5 முதல் 7 மணி நேரம் வரை தூக்கம் போதுமானதாக இருக்கிறது.

மிகச் சிலருக்கே ஐந்து மணி நேர உறக்கம் போதுமானதாக இருக்கிறது.

தூக்கம் இல்லையே என்று புலம்புவதும் வருந்துவதுமே இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை வியாதியை ஊக்குவிக்கிறது என்கிறது ஆய்வின் முடிவு.

இது வந்து விட்டால் மனத்தளர்ச்சி, சோர்வு கூடவே சேர்ந்து வரும்.

தூக்கத்தில் முதல் பகுதி மிகவும் முக்கியமானது. இது துரித கண் இயக்கம் அல்லது ராபிட் ஐ மூவ்மெண்ட் (ரெம் ஸ்லீப்) (Rapid Eye Movement – REM Sleep) என்று கூறப்படுகிறது.

இது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கிறது.

சுழற்சி முறையில் ஆழ்ந்த உறக்கத்தையும் லேசான உறக்கத்தையும் நமது இயல்பான தூக்கம் மாறி மாறிக் கொள்கிறது.

மதியத்தில் நேரம் இருந்தால் ஒரு சிறிய நேப் எனப்படும் குட்டித் தூக்கம் போடலாம்.

இது 30 நிமிட நேரம் மட்டும் இருந்தால் போதும்.

சரி, நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன?

நல்ல தூக்கத்தைப் பெற முதலில் தூக்க நேரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்ளப் பழக வேண்டும்.

இந்த ஸ்லீப் ரொடீனானது, ஸ்லீப் ஹைஜீன் (sleep hygiene)

எனப்படுகிறது.

தேவையற்ற எண்ணங்களை அகற்றுதல், தியானத்தை மேற்கொள்ளல் நல்ல தூக்கத்தைத் தரும்.

மைண்ட்புல்நெஸ் என்பதை மேற்கொள்ளலாம்.

உறங்குவதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளல் முக்கியம்.

நல்ல உணவுத் திட்டம், நல்ல உடல்பயிற்சி ஆகியவை நல்ல தூக்கத்தைத் தரும்.

முயன்றால் முடியாதது ஒன்று இல்லை!

***

காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம்- Part 2 (Post.14,345)

Written by London Swaminathan

Post No. 14,345

Date uploaded in London –  4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

POSTERS ON THE WALL OF KANCHI SHANKARACHARYA MUTT DEPICTING THE LIFE OF ADI SHANKARA, THE GREASTEST PHILOSOPHER THE WORLD HAS EVER SEEN. I TOOK THESE PICTURES ON 15-3-2025

காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்; 

மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .

சுவரில் சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

இதோ அந்த விஷயங்கள்

My OLD ARTICLES in this blog 

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)


MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)

14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)

108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)

பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)

Next Post
LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)

வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)

AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)

காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12940)

Tamil and Vedas

https://tamilandvedas.com › quiz-…

·Translate this page

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை ; அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கின்றன ? Xxxx. 7. காமாட்சி …

ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஓர…

·Translate this page

2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …

A blog exploring themes in Tamil and vedic literature | Page 471

Tamil and Vedas

https://tamilandvedas.com › page

·Translate this page

tamilandvedas.com, swamiindology.blogspot.com … காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! … காமாட்சி சந்நிதி 24 தூண்கள் …

காஞ்சீபுரம் கோவில்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › கா…

·Translate this page

14 Apr 2013 — காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி … சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச …

–subham—

Tags –,காஞ்சி சங்கராச்சாரியார்,  மடம், சுவரில் ,சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் ,

திருக்குறளில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் கண்டுபிடிப்பு ! (Post No.14,344)

 Written by London Swaminathan

Post No. 14,344

Date uploaded in London –  4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருக்குறளில் ஐம்பது சதவிகித குறள்களுக்கு மேல் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காணப்படுகின்றன. ஆகையால் யாராவது ஒருவர் தனித்தமிழ் எம்று சொன்னால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் மூட்டை கட்டி வைத்துவிடலாம்.

சுமார் அறு நூறு குறளகளில் ஸம்ஸ்க்ருத்க் சொற்கள் இருப்பதை நான் ஹைலைட்டர் பேனாவைத்து வர்ணம் பூசியுள்ளேன். காமம், மனது, காலம், லோகம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை வள்ளுவர் தாராளமாமகப் பயன்படுத்தியுள்ளார் .

வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர்  பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது. வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:

அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்

*****

கலம் தமிழ்ச் சொல்லா ?

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!  என்ற முதல் வரிகளுடன் துவங்கும் இரண்டு பாடல்கள் புறநானூற்றில் (228, 256) உள்ளன.

சங்க இலக்கியப் பாடல்களில் மேலும் நிறைய இடங்களில் வருகிறது திருவள்ளுவரும் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் .

இதற்கு முன்னர், உலகின் மிகப்பழைய நூல் என்று பேரறிஞர்கள் ஒப்புக்கொண்ட ரிக்வேதத்தில் கலசம் என்ற சொல்பல இடங்களில் வருகிறது. கலம்கலசம், கலயம் ஆகியன ஒரே பொருளில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது  மட்கலம் என்ற சொல்லையும் எல்லோரும் அறிவார்கள்; பானை, குடம் என்பதே இதன் முதல் பொருள். மேலும் ஆபரணம், கப்பல், படகு என்ற பொருளிலும் தமிழில் கையாளப்படுகிறது

ரிக்வேதத்தில் வரும் கலசம் என்பதற்கும் தமிழில் வரும் கலம் என்பதற்கும் ஒரே எழுத்துதான் வித்தியாசம்

கலசம் (ரிக் வேதம் = கலம் தமிழ் வேதம்

திருக்குறளில் கலம் வரும் இடங்கள் :

1000, 660, 60,575, 1262, 605

திருக்குறளுக்கும் ரிக்வேதத்துக்கும் உள்ள கால இடைவெளி  3500 ஆண்டுகள்!

சம்ஸ்க்ருதத்தில் ச/S ஒலியும் தமிழில் /L  ஒலியும் சிறப்பான சப்தங்கள்; காலப்போக்கில் தமிழானது ச ஒலியை இழந்திருக்கலாம் .  எழுத்துக்கு தொல்காப்பியர் விதித்த தடையை நாம் எல்லோரும் அறிவோம்.

என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே உலகின் பழைய மொழிகள்; இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பதையும் காட்டியுள்ளேன். ஆகையால் கலம்கலசம் ஆகியன ஒரே மூலத்திலிருந்து வந்தும் இருக்கலாம்

ரிக் வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :

RV. 3-32-15;  10-32-9; 9-62-19;  9-86-11

அதர்வண வேதத்தில் கலசம் வரும் இடங்கள் :

AV.20-8-3; 19-53-3

பால் அல்லது தண்ணீர் அல்லது சோம ரசத்தை வைக்கும் பாண்டமாக ரிக் வேதம் இதைப் பயன்படுத்துகிறது ; முழுவதும் சோம ரசம் பற்றிப் பாடும் ஒன்பதாவது மண்டலத்தில் கலசம் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது .

ஆக கலசமே கலமாகச் சுருங்கியது என்பதே என் துணிபு

ஆதாரம் இல்லாமல் நானெதையும் சொல்வதில்லை . ஒரு சில ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எடுத்துக் கொள்வோம்

கார்களுக்குப் பெட்ரோல் போடுவோருக்கு Gallon காலன் என்ற சொல் தெரியும்; இப்போது லிட்டர் வந்துவிட்டது  இது ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் என்பதன் அளவு ; அதாவது அப்படி ஒரு கலம் (Vessel) இருந்திருக்க வேண்டும்.

இதைவிட நேரடி ஆதாரத்தைப் பார்ப்போம்.

பாரசீகம், கிரேக்கம், லத்தீன் ஆகியன பழைய மொழிகள்; சொல்லப்போனால் தமிழுக்கும் முன்னரே இலக்கியம் படைத்த மொழிகள் அவை .

அதிலுள்ள சொல் goldan (PAARASEEKAM; Persian)

Cauldron =calidarium ‘cooking-pot’ (English)

galleon– ship

கால்ட்ரன் , கோல்டான், காலிடேரியம் எல்லாம் பானை / பாண்டம் என்றே பொருள்படும் இவை ஆங்கில, பாரசீக, லத்தீன் மொழிச் சொற்கள் அதாவது தமிழுக்கு ஸ்நானப்ராப்தி இல்லாத சொற்கள் என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !

இன்னும் ஒரு சொல் கல்லியன்; இதற்கு ஸ்பானிய மொழியில் கப்பல் என்று பொருள்; திருவள்ளுவரும் கலன்= கப்பல்  என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஒரு சொல் ஐரோப்பிய மொழியில் இருந்தால் அதற்கும் தமிழுக்கும் தொடர்பே இருக்க முடியாது என்பது கால்டுவெல் கும்பலின் வாதம் !

ஆனால் காலன் , கால்ட்ரன், கல்லியன் , காலிடேரியம் எல்லாம் குழிவான கப்பல் போன்ற இடத்தை, பாத்திரத்தை, பாண்டத்தைக் குறிப்பதைக் காண்கிறோம்.

ஆகவே வில்லியம் ஜோன்ஸ் போன்ற சம்ஸ்க்ருத ஆதரவுக் கும்பல், கால்டுவெல் போன்ற திராவிட மொழிக்குடும்ப ஆதரவுக் கும்பல்களின்  வாதங்களை ஒதுக்கிவிட்டு தமிழ்- சம்ஸ்க்ருத மூல மொழிக் கொளகையை ஏற்றால் கலம்= கலசம் என்பது சகோதரச் சொற்கள் (Cognate Words) என்பது விளங்கும் இது எனது கொள்கை மட்டுமல்ல. சிவா ஞான முனிவர், பரஞ்சோதி முனிவர், பாரதியார் பாடல்களிலும் உள்ள உண்மை

முந்தைய ஆராய்சசிக் கட்டுரைகளில் நேவி= நாவ =படகு என்பதையும் ஸ்கிப் = ஷிப்= கப்பல் என்பதையும் கண்டுள்ளோம். ஆகவே உலகில் கப்பல் ஓட்டுதலைக் கண்டுபிடித்ததும் இந்துக்களே என்பதை இந்தச் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.

Skip= ship = kappal –

Navy= naava= boat= pataku

 –சுபம்—

Tags- கலம், கலசம்,திருக்குறள், சம்ஸ்கிருதத் சொற்கள், ரிக் வேதம்

ரோஸ் ஐஸ் ஷெல்ப்! (Ross Ice Shelf) (Post No.14,343)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,343

Date uploaded in London – –4 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-3-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

ரோஸ் ஐஸ் ஷெல்ப்! (Ross Ice Shelf) 

                                ச. நாகராஜன்                                                    

உலகின் மிகப்பெரிய பனிப்படி அடுக்கு!

“அடடா! இதை விட பெரிய பனிப்படி அடுக்கு ஒன்றை இனிமேல் பார்க்கவே முடியாது” என்று 1841ம் ஆண்டு ரோஸ் பனிப்படி அடுக்கைப் (Ross Ice Shelf)  பார்த்த ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ் (Captain James Clark) Ross வியந்தார்.

அவர் பெயராலேயே உலகின் ஆகப் பெரும் பனிப்படி அடுக்கு பின்னால் அழைக்கப்படலாயிற்று!

பிரிட்டிஷ் அரசால் தென் துருவப் பகுதியை ஆராயப் பணிக்கப்பட்டார் ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ்.

குறிப்பாக தெற்கில் உள்ள காந்த துருவத்தை (South Magnetic Pole) ஆராய வேண்டும் என்பது அவரது லட்சியம்.

1773ல் ஜேம்ஸ் குக் அட்லாண்டிக் பகுதியை முதன் முதலில் ஆராய்ந்தார். தொடர்ந்து 1823ல் ஜேம்ஸ் வெடல் என்பவர் ஆராய்ந்தார்.

1840 நவம்பரில் சிறிய ஆனால் வலிமை மிக்க கப்பல்களான டெர்ரர் மற்றும் எர்பஸ் (Terror and Erebus) ஆகிய இரண்டும் அந்த பனிப்படி அடுக்குப் பகுதிகளுக்குச் சென்றன. மெதுவாக ஆனால் கவனமாக அந்த படுபயங்கரமான பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார் ரோஸ். திடீரென்று அவரது பணியாளர்களுள் ஒருவன் ‘ஆஹா’ என்று கத்தினான்.

உடனே டெலஸ்கோப் மூலம் அந்தக் பகுதியைப் பார்த்த ரோஸ் வியந்தார். அந்தப் பகுதிக்குள் கப்பலில் செல்வது சாத்தியம் தானா?

முன்னே சென்ற போது தான் அந்தப் பனிப்படி அடுக்கை நெருங்கிப் பார்க்க முடிந்தது.

இந்தப் பனிப்படி அடுக்கைத் தாண்டி, இனி தென் காந்த துருவத்திற்குச் செல்வதற்கு வழியே இல்லை என்று அவர் உணர்ந்தார். இரண்டு வருடம் அந்தப் பகுதியில் சுற்றி ஆராய்ந்த ரோஸ் ஏராளமான குறிப்புகளை எடுத்தார்.

மிதக்கின்ற உலகின் மிகப் பெரும் பனிப்படி அடுக்கு என்ற ரோஸ் ஐஸ் ஷெல்ப் 500 மைல் நீளம் உள்ளது.

அது கடலிலிருந்து தென் துருவத்திற்கு உள்ளே 600 மைல் பரந்து விரிந்திருந்தது. அதன் மேல் பரப்பு மட்டும் இரண்டு லட்சம் சதுர மைல் என்ற பிரம்மாண்ட பரப்பைக் கொண்டிருந்தது. ஒரு கன்வேயர் பெல்ட் போல 25 மைல் நீளத்திற்கு உயர்ந்தும் சரிந்தும் இருந்த அது கண்கொள்ளாக் காட்சியைத் தந்தது!

தென்பகுதியில் இந்த ஐஸ்கட்டியின் கனம் 2400 அடியாகவும் வடக்கில் இதில் பாதியாகவும் இருந்தது.

மிகத் தொலைவில் இருந்த ட்ரான்ஸாண்டார்டிக் மலைகளிலிருந்து வந்த க்ளேஸியர் எனப்படும் பிரமாண்டமான பனிப்பாறைகள் இந்தப் பனிப்படி அடுக்கின் பின்னால் வந்து சேர்ந்தன. இந்தப் பனிப்பாறைகளுள் மிகப் பெரியதான பியர்ட்மோர் பனிப்பாறை உள்ளிட்டவை அடங்கியிருந்தன.

அடுக்கு அடுக்காக இவை சேரவே ரோஸ் பனிப்படி அடுக்கு மிக பிரம்மாண்டமாக ஆனது!

ஆனால் இந்த பனிப்படி அடுக்கின் மேல் பரப்பு வியக்கத் தக்க அளவில் சம பரப்பைக் கொண்டிருக்கவே பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இங்கு முகாம் அமைத்து ஆராய ஆரம்பித்தனர்.

1908ல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான எர்னஸ்ட் ஷாக்கில்டன் (Ernent Shackleton) இதன் மேற்குப் பகுதியில் தனது முகாமை அமைத்து தென் துருவத்தை அடைந்தே ஆவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.

அவரது மூன்று பணியாளர்கள் தென்காந்த துருவத்தை அடைந்து சாதனையைப் படைத்தனர்.

1908, அக்டோபர் 29ம் தேதியன்று நான்கு மட்டக்குதிரைகள் பூட்டிய பனிச்சறுக்கு வண்டிகளில் ஏறி முதன்முதலாக பியர்ட்மோர் க்ளேஸியர் மீது ஏறினார் ஷாக்கில்டன்.

துருவத்தின் உச்சி இன்னும் 100  மைல் இருக்கும் போது குதிரைகள் இறந்தன. உணவும் தீர்ந்து விட்டது. வேறு வழியின்றி அவர் குழு கீழே இறங்க வேண்டியதாயிற்று.

1911 ஜனவரியில் இன்னொறு ஆய்வாளரான காப்டன் ராபர்ட் ஸ்காட் ஷாக்கில்டன் இறங்கிய பகுதியை அடைந்தார். அதே சமயம் நார்வேயிலிருந்த வந்த இன்னொரு ஆய்வாளரான ரோல்ட் அமுண்ட்சென் என்பவர் கிழக்குப் பகுதியில் இறங்கினார். இருவருக்கும் இடையே போட்டி – முதலில் யார் சிகரத்தை அடைவது என்று!

வெயில் அதிகமாக இருந்த சமயம் பார்த்து அமுண்ட்சென் தொடர்ந்து முன்னேறி 1911 டிசம்பர் 14ம் தேதியன்று துருவத்தை அடைந்தார். அடுத்த மாதம் தான் ராபர்ட் ஸ்காட் அங்கு சென்றார்.

திரும்பும் போது ஸ்காட்டின் மிருகங்கள் இறக்கவே அவர் படாத பாடு பட்டார். பலர் இறந்தனர்.

கடைசியில் ஒருவழியாக குழுவினரில் உயிர் பிழைத்தவர்களில் மீதிப் பேர் தரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

ஸ்காட் தனது டயரில் இப்படி எழுதினார்:

“அட, கடவுளே! இது ஒரு மோசமான பகுதி தான்!”

Antarctic Region எனப்படும் தென் துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் எம்ப்ரர் பெங்குயின் இந்தப் பனிப்படி அடுக்கில் ஆயிரக் கணக்கில் உள்ளன என்பது அதிசயமான செய்தி தான்!

இங்குள்ள பெண் பெங்குயின் முட்டை இடும்போது ஆண் பெங்குயின் அதன் மீது இருந்து முட்டைக்கு உஷ்ணத்தைக் கொடுத்து குஞ்சு வெளி வரும் வரை காக்கிறது!

இப்படி பல அதிசயங்கள் இந்த தென் துருவப் பகுதியில் உள்ளன!

***