Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
ALBERT EINSTEN, E V RAMASWAMY NAICKER, FOUR MORE NEW PAINTINGS, STAMP EXHIBITION, CHILDREN’S DAY, SENAPATI BAPAT, CASHEW NUTS, APPLE, FIVE VEENAS, ASIANA 77, MOTHER AND BABY, PAEDIATRICS CONFERENCE LEO TOLSTOY, J POOLEY, UNICEF, RAJAJI, GANDHIJI KISSING , RUSSIN REVOLUTION, CHARLI CHAPLIN
–SUBHAM—
TAGS- ALBERT EINSTEN, E V RAMASWAMY NAICKER, FOUR MORE NEW PAINTINGS, STAMP EXHIBITION, CHILDREN’S DAY, SENAPATI BAPAT, CASHEW NUTS, APPLE, FIVE VEENAS, ASIANA 77, MOTHER AND BABY, PAEDIATRICS CONFERENCE, LEO TOLSTOY, J POOLEY, UNICEF
பழமொழிகள் புழங்காத நாடு உலகில் இல்லை ; அனுபவம் மிக்கவர்கள் அழகாக, சுருக்கமாக அந்தக் காலத்தில் சொன்னதை மக்கள் நினைவு வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் வருகையில் பயன்படுத்துகிறார்கள் அந்தக் காலத்தில் எழுத்தில் கொணர வழி இல்லாததால் நிறைய அழிந்து போய்விட்டன. இப்போது நல்ல முன்னேற்றம்! எல்லாம் எழுத்தில் வந்ததோடு பல நாட்டுப் பழமொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும் முடிகிறது . பல பழமொழிகளைப் படித்தவுடன் நான் அவைகளை ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தேன்; அந்தத் தொகுப்பு இதில் இடம்பெறுகின்றன.
வெளிநாட்டுப் பழமொழிக் கதைகள் மிகவும் சுவையாக உள்ளன ; மேலும் வெளிநாட்டுப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் இடையே வியப்பான ஒற்றுமையும் உளது .
பழமொழிகள் விஷயத்தில் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் தனி இடம் உண்டு. தமிழில் உள்ள இருபதாயிரம் பல மொழிகளை மூன்று வெள்ளைக்காரர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொகுத்து வெளியிட்டுவிட்டனர். சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் , பாஷா, சாணக்கியன் முதலியோர் நூல்களில் காணப்பட்ட பழமொழிகள் போன்றவை தனித்தனியே வந்துவிட்டன. ஆனால் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும் மேலான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் அந்தக் காலத்திலேயே அச்சேறிவிட்டன. இவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே கிடைக்கின்றன. தமிழில் இன்னும் எவ்வளவோ செய்யவேண்டிய பணிகள் இருப்பதை இது காட்டுகிறது; எனது ‘பிளாக்’கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பழமொழிகளும் நூற்றுக் கணக்கான சுபாஷித ஸ்லோகங்களும் வெளியாகியுள்ளன. பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் யானைகள் பற்றிய 200 பழமொழிகள் ; கழுதை, நாய் குதிரை பற்றிய பழமொழிகள் என்றெல்லாம் தனித்தனியே கட்டுரைகள் எழுதினேன். இந்த நூலில் வெளிநாட்டுப் பழமொழிகளைத் தமிழ்ப் பழமொழிகளுடன் ஒப்பிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள் .
முதல் பத்து கட்டுரைகளுக்குப் பின்னர் பொதுவான பழமொழிக் கட்டுரைகளும் , பிற கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. புத்தகம் மிகவும் சிறியதாகிவிடக் கூடாதே என்பதைக் கருத்திற்கொண்டு இவைகளைச் சேர்த்தேன் ஆனால் சுவையில் குறை இராது.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஏப்ரல் 2025
swami_48 @yahoo.com
swaminathan. santanam @gmail.com
வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்
நம் நாட்டுக் கதைகளும்!
Book Title
பொருளடக்கம்
1.உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்
2.பீமன் பற்றிய பழமொழி!
3.அர்ஜுனன் கதையும் சீனப்பழமொழியும்
4. ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள்
5.சீனக் கதை: செவிடன் காதில் சங்கு ஊதியது போல!
6.சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்!
7.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
8.தமிழ்ப் படுகொலைகளும் உலகப் பழமொழிகளும்
9.ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
10.கோழி அடிக்க குறுந்தடி வேண்டுமா?
11.உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா
12.உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்!
13. தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள்
14.அவனின்றி ஓர் அணுவும் அசையாது- கதை
15.கண்டோம்! கண்டோம்!! கண்டோம்!!! கண்ணுக்கினியன கண்டோம்!! 2 குட்டிக் கதைகள்
16.வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்?
17.“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?”
18.அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப்
பழமொழிகளுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை சீனப் பழமொழிகளின் கதைகளை தைவான் எனப்படும் தேசீய சீனா தபால்தலைகளாக வெளியிட்டதிலிருந்து அறியலாம் . அட்டைப்படத்தில் இவை உள்ளன
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
35.கல்ஹணர்
காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால் கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.
காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் , 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.
36.மனோவினோத
பல கவிதைத் தொகுப்புகளில் மனோவினோத என்ற புலவரின் தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வரைபற்றிய வேறு விவரம் கிடைக்கவில்லை .மனோவினோத என்பது இருடைய புனைப்பெயர். இவர் வங்காளத்தைச் சேர்ந்த 12- ஆம் நூற்றாண்டு கவிஞர்.
37.முராரி
அனார்கராகவ என்ற நாடகத்தை எழுதியவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்.
38.விஷ்ணுசர்மன்
விஷ்ணு சர்மா எழுதிய நூலின் பெயர் பஞ்சதந்திரம்
அவர் 80 வயதுப் பிராமணன் . அவரது ஊர் மயிலாப்பூர் , தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர்/ Madras! விஷ்ணு சர்மா சம்ஸ்க்ருதத்தில் எழுதியதால் இதை மகிழாரூப்யம் என்று எழுதியுள்ளார். எண்பதுக்கும் மேலான கதைகள் உள்ளன. அத்தனையிலும் மிருகங்கள், பறவைகள், மற்றும் அசட்டுப் பிராமணன்– கதா பாத்திரங்கள்.
அவர் எழுதிய ஒரிஜினல் இல்லை ; ஒருவேளை நாளந்தா நூலகத்தை முஸ்லீம்கள் எரித்தபோது கரியாகி இருக்கலாம்.
பாரசீக மொழியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டது ; பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியவுடன் அராபிய வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது.
ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் இது வெளியாகியுள்ளது
பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்துமதக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தர்கள் காப்பி அடித்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மம் ;போதி சத்துவர் அவர்; என்று பொய்யுரை பரப்பினர். அவைகளை ஜாதகக்கதைகள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்தனர்; அதில் மஹாபாரதம், ராமாயணமும் உள்ளன.
ஆங்கிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் இதை பிட்பாய் என்று எழுதியுள்ளார் யார் அந்த பிட்பாய் ? இது வித்யாபதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் அல்லது வாஜ்பேயீ என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் என்று ஆராய்சசியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ( Vajpeyee = Vidyapathi=Bidpai=பைபிளை) ஆங்கிலத்தில் The Fables of Bidpai (or Pilpai in various European languages, Vidyapati or Vajpeyee in Sanskrit) என்று முதலி வெளியாகியது .
ஆங்கிலத்தில் அண்மைக்காலத்தில் மொழிபெயர்த்தவர்
ஆர்தர் W. ரைடர் / Arthur W. Ryder, மற்றும் டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை சந்திரா ராஜன்
லா பாந்தேன் 400ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துறவி பிப்லாய் Bidpai or Piplai எழுதியது என்கிறார். அதை ஐரோப்பியர்கள் பிட்பை என்றும் மொழிபெயர்த்தனர்
39.நாராயண
ஹிதோபதேசம் என்ற பெயரில் பிராணிகள் பற்றிய கதைகளைத் தொகுத்து எழுதியவர் . பால வம்ச தவள சந்திரன் காலத்தவர்; காலம் பத்தாம் நூற்றாண்டு . இதில் ஏராளமான நீதி மொழிகள் உள்ளன. காலம் எட்டாம் அல்லது ஓன்பதாம் நூற்றாண்டு.
40.நயசந்திர சூரி
சமண மதத் துறவியான இவர் ஹம்மீர மஹாகாவ்ய என்ற நூலை எழுதினார் . ரந்தம்போர் என்ற இடத்திலிருந்து ஆண்ட மன்னர் வரலாற்றினை இது கூறுகிறது அவனை 1301-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜி என்ற முஸ்லீம் தளபதி போரில் கொன்றான்.
41.நீலகண்ட தீட்சிதர்
மதுரையை ஆண்ட திருமலை நாயகரின் (1623–16 February 1659 CE) அமைச்சராக இருந்தவர் நீலகண்ட தீக்ஷிதர் . இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார். அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் கண்களை இழந்த நிலையில் அவர் பாடிய அற்புத நூல் ஆனந்தஸாகரஸ்தவம் .
இவரது பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், கற்பனை நயம், நையாண்டி, அறிவியல் நோக்கில் விளக்கம், ஆழ்ந்த தெய்வ பக்தி, தனது சொந்த அனுபவங்களின் தொகுப்பு, மகான்களின் பெருமை உள்ளிட்ட ஏராளமானவற்றை உணர்ந்து ரஸிக்கலாம். நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியதாக 18 நூல்கள் உள்ளன. மஹாகாவியம் என்ற வகையில் சிவலீலார்ணவா, கங்காவதரணம், முகுந்தவிலாஸம் ஆகிய மூன்று நூல்களும், நாடகம் என்ற துறையில் நளசரித்ரமும் சம்பு நூல் வரிசையில் நீலகண்ட விஜய சம்பு என்ற நூலும், கவிதை நூல்களில் அன்யாபதேச சதகம், கலிவிடம்பனம், சபாரஞ்ஜன சதகம், சிவோக்தகர்ஷ மஞ்சரி, சிவதத்வ ரஹஸ்யம், ஆனந்தஸாகரஸ்தவம், சண்டிரஹஸ்யம், ரகுவீரஸ்தவம், குருதத்வமாலிகா, வைராக்ய சதகம், சாந்தி விலாஸம் ஆகிய பத்து நூல்களும், சமய சம்பந்தமான நூல்களுள் சௌபாக்ய சந்த்ராதபா என்ற நூலும் பாஷ்ய நூல்களுள் கையடரின் மஹாபாஷ்யப்ரதீபத்திற்கான ப்ரகாஸா என்ற நூலும் ஆக இப்படி 18 நூல்கள் அவரால் இயற்றப்பட்டவை.
42.ராஜசேகர
இவர் எழுதிய நூல்களில் மிகப்புகழ்பெற்றது காவ்ய மீமாம்ச ;இது கவிதை மற்றும் கவிஞனின் இலக்கணத்தை வரையரை செய்கிறது இவர் ஒரு கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியரும் ஆவார் . இவர் எழுதிய ஏனைய நூல்கள் – கற்பூர மஞ்சரி , வித்தசால பஞ்சிகா . இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு.
இவரது நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஏனைய கவிதைத்தொகுப்பு நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
44.அப்பைய தீட்சிதர்
வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் என்ற ஊரில் 1520ஆம் ஆண்டு பிறந்தார்.அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விநாயக சுப்ரமண்யன். தீக்ஷிதரின் தந்தையாரின் பெயர் ரங்கராஜாத்வாரி. ராம கவி என்ற ஒரு வைஷ்ணவ ஆசாரியரிடமே அவர் தன் இளமைக் கல்வியைக் கற்றார். சிவ வைணவ பேதத்தை அகற்றி அத்வைத சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தவர். மிகச் சிறந்த பண்டிதரான அவர் 104 நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. உரைகளுக்கு உரை, மறுப்புரை என எழுதியவர் பெரிதும் பாராட்டப்படும் நூல்கள் – பரிமளம் , சதுர்மத சாரம் ;அதில் நயமஞ்சரி என்பது அத்வைதத்தையும், நயமணிமாலை என்பது கண்டமதத்தையும் நய-மயூக மாலிகா ராமானுஜ சித்தாந்தத்தையும் நய முக்தாவளி என்பது மத்வருடைய சித்தாந்தந்த்தையும் விரித்துரைக்கிறது.
சித்தாந்தலேச சங்கிரகம் மிகவும் பிரபலமான ஒரு நூல். அத்வைதம் பற்றிய அனைத்தையும் சொல்லும் நூல் இது.
ஆனந்த லஹரி சந்திரிகா என்ற அவரது நூல் பற்பல வித்தியாசமான தத்துவங்களை விளக்குகிறது.
வயதான காலத்தில் ஒரு நாள் அவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று சந்நிதியில் நடராஜரோடு ஐக்கியமானார்.
அப்போது அவர் கூறிய ஸ்லோகம்பத்தியில் முடிந்தது . இதன் மீதி பாதியை அவரது சகோதரரின் பேரனான நீலகண்ட தீக்ஷிதர் பின்னால் நிறைவு செய்தார். அப்பைய தீக்ஷிதர் 1593ஆம் ஆண்டு 73ஆம் வயதில் மறைந்தார்.
கந்தபுராணத்தை நன்கு ஆராய்ந்து காலத்திற்கேற்றபடி இப்படி ஒரு நூலைத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிராகிருத மொழி பற்றிய குறிப்பு
சம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய மொழி வழக்கு ; பிராகிருதம் என்பது பேச்சு வழக்கு ; காளிதாசனின் புகழ் மிகு சம்ஸ்க்ருத நாடகங்களில் பெண்களும் ஊழியர்களும் பிராகிருதத்தில் கதைப்பார்கள்; புலவர்களும் மன்னர்களும் புரோகிதர்களும் சம்ஸ்க்ருதத்தில் பேசுவார்கள். சம்ஸ்க்ருதம் அறிந்த எவரும் ப்ராக்ருதத்தைப் புரிந்து கொள்ளலாம் ; ஆர்ய என்பதை அஜ்ஜ என்பார்கள்; அது தமிழில் அய்யர் என்றாகிவிடும்! இதைப்புரிந்து கொள்ள திருவிளையாடல் என்னும் திரைப்படம் உதவும் ; சிவாஜி கணேசன் விறகுவெட்டியாகப் பேசுவது தமிழ் பிராகிருதம் ; அவரே புலவராகப் பாடுவதும் பேசுவதும் தமிழ் சம்ஸ்க்ருதம். தமிழ் நாவல்கள் , சினிமாப்பாட்டுகள் பிராகிருதம்; பாரதியார் கண்ணதாசன் கவிதைகள் தமிழ் சம்ஸ்க்ருதம் ; இதனால் ஹால போன்ற மன்னரின் காதா சப்த சதி இதில் உள்ளது ; ஆயினும் அறுபது கவிஞர்களுக்கு மேலேயும் நாம் இந்தக் கட்டுரைத்தொடரில் காணப்போகிறோம்.
18.தாமோதர மிஸ்ரா
ஹநுமான் நாடக என்னும் நூலை எழுதியவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. இந்த நாடகத்தில் 14 காட்சிகள் / அத்தியாயங்கள் உள்ளன ராமபிரான் பிறப்பிலிருந்து ராவணாவதம் வரையுள்ள இதில் ஆறாவது அங்கத்தில் அனுமான் தூதராக அறிமுகப்படுத்தப்படுகிறார் ; அதிகமான அங்கங்கள் இருப்பதால் இது மஹாநாடகமென்ற பிரிவில் உள்ளது
19.தனேஸ்வர
பிராகிருத சூரசுந்தரி நாவலை கவிதை வடிவத்தில் எழுதினார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு.
19.தர்மகீர்த்தி
பெளத்த சமய தத்துவ வித்தகர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் பிராமாணவார்த்திகா என்ற பெரிய தத்துவ நூலை எழுதினார் இவர் தென்னிந்தியாவில் பிறந்த பிராமணர் என்றும் குமாரிலபட்டரின் உறவினர் என்றும் திபெத்திய படைப்புகள் கூறுகின்றன.
20.திவாகர
ஹர்ஷ மன்னர் அரசவைப் புலவர்களில் ஒருவர் . காலம் ஏழாம் நூற்றாண்டு. மாதங்க திவாகர சண்டாள/ தலித் குலத்தில் பிறந்தவர் ; ஹர்ஷரின் அரசவைப் புலவர்களில் ஒருவர் ; ஜாதி வேறுபாடுகள் அக்கால இந்தியாவில் இல்லை என்பதற்கு இவர் எடுத்துக் காட்டு.
21.ஹர்ஷ 606-647 CE
மன்னர்களில் புலமை பெற்ற ஆசிரியர்- எழுத்தாளர் இவர் ; புலவர்களை எல்லாம் ஆதரித்த மன்னரே ரத்னாவளி, ப்ரியதர்சிகா, நாகானந்தம் ஆகிய புகழ்பெற்ற நாடகங்களை எழுதினார்.
22.மஹேந்திர வர்மன் 600-630 CE
மிகப்பெரிய புலவன் ; மாமன்னன்; ஓவியன் ; கலைஞன் . நாடக ஆசிரியன் ;இவன் எழுதிய மத்தவிலாஸ பிரஹசணம் என்ற நாடகம் சம்ஸ்க்ருத மொழியில் எழுந்த நல்ல நகைச்சுவை நாடகம் ; புத்தமதம் மற்றும் காபலிக மதம் ஆகியன எப்படிச் சீரழிந்தன என்பதைக் காட்டும் நாடகம் இது ; ஓவியக்கலையில் வல்ல மன்னன் பல குடைவர்க் ரை கோவில்களையும் தோற்றுவித்தான் ; அப்பர் பெருமானால் மீண்டும் சைவ சமயத்துக்குத் திரும்பினான்; சிம்ம விஷ்ணுவின் மகன்.
23. போதாயன
இவனது காலத்தில் போதாயனஎன்ற ஆசிரியர் பகவத்தாதஜுகம் என்ற இன்னும் ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதியதை மன்னரே மாமண்டூர் கல்வெட்டில் கூறியுள்ளார்
During his period “Bhagwatajjukam”, another satire (prahasan), was written by Bodhayan. King Mahendravarman mentioned this on a stone inscription in Mamandur along with his own Mattavilas Prahasan
1400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைக் கழகம் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் ஒருங்கே வளர்த்தன . அப்பர் பெருமான் பாடல்களில் தமிழின் வளர்ச்சியைக் காணலாம். அவர் சங்க கால பிராமண நக்கீரன்- பிராமணப் புலவன் தருமி ஆகியோருக்கு இடையே நடந்த மோதலையும் பாடலில் குறிப்பிடுகிறார்.சேர நாட்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதியதை கணக்கிட முடியாது.
24.கோவிந்தா
ஸ்வயம்பூசந்தஸ் என்ற நூலில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவை அபிப்பிராம்ச என்னும் கிளை மொழியில் உள்ளது காலம் எட்டாம் நூற்றாண்டு
25.ஹால
சாதவாகன மன்னனர்; காதல் கவிதைகளை பிராகிருதம் மொழியில் தொகுத்தார். காதா சப்த சதி என்னும் பெயரில் எழுநூறு கவிதைகள் உள்ளன. காலம் இரண்டாம் நூற்றாண்டு
26.ஹரிபட்ட
புத்தமத துறவி; ; காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; காலம் 12ஆம் நூற்றாண்டு; ஆர்யசுராவின் ஜாதகமாலை போல இவர் முப்பத்து நான்கு கதைகளை ஜாதகமாலை என்ற பெயரில் பாடல் வடிவில் கூறியுள்ளார்
27.ஜகந்நாத
ஷாஜஹான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த இவர் பாமினி விலாச, ரசகங்காதாரே முதலிய பல நூல்களை எழுதினார் ; காலம் 17ஆம் நூற்றாண்டு.
28.ஜயதேவ
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலின் அஷ்டபதி பாடல்களை இன்றும் பஜனைகளில் கேட்கலாம். நாயகன்- நாயகி பாவத்தில் கிருஷ்ணனைப் புகழும் பாடல்கள் அவை. புத்தரை பத்தாவது அவாதாரங்களில் ஒன்றாகப் புகழ்ந்து புத்த மதத்தைக் கபளீகரம் செய்த பெருமை உடையவர் ; காலம் 12 ஆம் நூற்றாண்டு
29.கலசக
காஷ்மீர் மன்னர்- புலவர் – காலம் பத்தாம் நூற்றாண்டு
30.குதுகால
லீலாவதி என்ற பிராகிருத நூலை எழுதியவர் ; காலம் எட்டாம் நூற்றாண்டு
31.க்ஷேமந்திர
காஷ்மீர் புலவர்; பல்மொழி வித்தகர் காலம் 11ஆம் நூற்றாண்டு.
காஷ்மீர் மாநிலப் புலவர்களில் மிகவும் பிரபலமானவர் க்ஷேமேந்திரா; இவர் புலவர் மட்டுமல்ல; நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் கூட . இவரை வால்டேருக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் கல்ஹணரின் ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர் எஸ் பண்டிட். க்ஷேமேந்திரா , குணாத்யர் எழுதிய பிருஹத் கதாவை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார் தன்னை வியாஸதாஸர் என்று அழைத்துக்கொண்டார் மஹாபாரதத்தை கவிதை வடிவில் பாரத மஞ்சரி என்ற பெயரில் எழுதினார் . ஏனைய நூல்கள் – நார்மமாலா, கவி கண்டாபுரண , சமய மாத்ரிகா . ஒரு வேசியின் துணிகரச் செயல்களைக் கூறும் கவிதை சமய மாத்ருகா நூலாகும்.
32.க்ஷேமீஸ்வர
கூர்ஜர பிரதிகார மன்னர் மஹீபால காலப் புலவர் ; சந்திரகெளசிக, நைஷதந்த போன்ற நாடகங்களின் ஆசிரியர்; காலம் பத்தாம் நூற்றாண்டு
33.குமாரதாஸ
ஜானகிஹரண என்ற காவியத்தைப் படைத்தவர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
34.மாக
மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர் ; சிசுபாலவதம் என்ற காவியத்தை எழுதியவர்; காலம் ஆறாம் நூற்றாண்டு
To be continued…………………………..
Tags- மாக, க்ஷேமந்திர, நாடக ஆசிரியர்கள், சம்ஸ்க்ருத மழை, பகுதி 3, கவிஞர்கள் ஜயதேவ , கீத கோவிந்தம் , மஹேந்திர பல்லவன், கால, ஹர்ஷ, பிராகிருதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
21-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை
நீடித்து வாழ சுவாச ரகசியம்!
ச. நாகராஜன்
பூவுலகில் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் இயற்கையாகத் தாமே செய்வது சுவாசிப்பது என்னும் இன்றியமையாத செயலாகும்.
உணவில்லாமல் சில நாட்கள் கூட இருக்க முடியும். ஆனால் காற்றை சுவாசிக்காமல் நான்கு நிமிடங்களுக்கும் மேல் இருக்க முடியாது. ஆறு நிமிடங்கள் இருந்தால் அது ஒரு அதிசயமே
ஒரு நாளைக்கு 25000 முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாசித்தலுக்கும் ஒருமுனைப்பட்ட கவனத்திற்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. சுவாசம் சரியில்லையேல் கவனமும் இருக்காது; உடல் இயக்கங்களும் பாதிக்கப்படும். சுவாசம் சீரற்றதாக இருந்தால் மனமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
ஆனால் நமக்குத் தெரியாமலேயே மூன்றில் ஒரு பங்கு சுவாசிக்கும் திறனையே நாம் பயன்படுத்துகிறோம்.
ஆகவே தான் ஆசனப் பயிற்சியும் தியானமும் நமது முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
பதஞ்சலி முனிவர் இதை வெகு அழகாக விளக்கிக் கூறுகிறார்.
உடலையும் மனதையும் பேணி நீடித்து வாழச் செய்வது சுவாசமே.
ஆழ்ந்த சுவாசம், பிராணாயாமம் ஆகியவை ஆயுளை நீட்டிக்கும் வழிகளாகும்.
இன்னொரு ரகசியமும் சுவாசத்தில் உண்டு.
ஸ்வரோதய விஞ்ஞானம் என்ற நமது சாஸ்திரத்தின் படி மூச்சுக் கலையை வைத்து ஜோதிடமும் கூறலாம்; நமது காரியங்களில் சுலபமாக வெற்றியும் பெறலாம்.
நன்றாக சுவாசிப்பது உடலில் இருக்கும் அழுக்குகளையும் மலங்களையும் நீக்குகிறது என்பதை பதஞ்சலி மகாமுனிவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
நமது முன்னோர்கள் மூச்சைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அதை விளையாட்டுகளில் கூடப் புகுத்தி விட்டார்கள்.
எடுத்துக்காட்டாக சடுகுடு எனப்படும் கபடி விளையாட்டை எடுத்துக் கொள்வோம். எவர் அதிகமாக மூச்சைப் பிடித்து விளையாடுகிறாரோ அவர் தான் ஜெயிப்பார்.
இதே போலவே ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளிலும் இந்த மூச்சு பிடிப்பது அவசியமே. வின்னிங் ஷாட் எனப்படும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி தருணங்களில் இந்த சுவாசக் கட்டுப்பாடே வெற்றியைத் தரும்.
மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மனதையும் உடலையும் சீராக வைக்க உதவுகிறது.
சுவாசமே உயிர்; நன்கு சுவாசித்தால் பூமியில் நீண்ட காலம் வாழலாம் என்கிறது ஆன்றோர் மொழி!