



Post No. 14,462
Date uploaded in London – 2 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.அக்ஷய திருதியை என்றால் என்ன அர்த்தம் ? ஒவ்வொரு ஆண்டும் எப்போது வரும் ?
1.அக்ஷய அழிவில்லாத ; திருதியை = மூன்றாவது நாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ( அம்மாவாசையில் அடுத்த மாதம் துவங்குவதாக எண்ணுவோருக்கு வைகாசி மாதம் ) வளர்பிறையில் மூன்றாம் நாள் அட்சய திருதியை கொண்டா டப்படுகிறது.
****
2.இந்த 2025 ஆம் ஆண்டு (30.04.25 புதன்கிழமை) அக்ஷய திருதியை நாளில் ஏற்பட்ட கூடுதல் சிறப்பு என்ன ?
2. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா பொறுப்பேற்றார்
சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு அட்சய திருதியை நாளில் ,காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கினார். அதன்பின், ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.
****
3.அக்ஷய திருதியை தினத்தில் மக்கள் தங்க நகைக்கடைகளுக்கு படை எடுப்பது ஏன்?
3.இந்த ஆண்டு அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்; அந்த தினத்தில் எதைச் செய்தாலும் .எதை வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அன்று நகைகளையும் ரத்தினங்களை வாங்குகிறார்கள் .
தங்கத்தின் விலை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.
****
4.அக்ஷய திருதியை நாளுக்கும் கும்பகோணத்துக்கு என்ன தொடர்பு?
4.அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார்கள். மேலும் ஒரே மண்டபத்தில் தங்கி பக்கதர்களுக்குத் தரிசனம் தருவார்கள்.
****
5.ஆந்திரத்திலுள்ள சிம்மாசலம் கோவிலில் இந்த தினத்தில் என்ன நடக்கும் ?
5.ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் அருகில் சிம்மாசலம் மலையிலுள்ள வராஹ லெட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மீதுள்ள லிங்க வடிவிலுள்ள சந்தனப் பூச்சு இந்த ஒரு நாள் மட்டும் அகற்றப்படும் அப்போது சுய உருவில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்
முன்னொரு காலத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின் மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.
****
6.இமய மலை புனிதத் தலங்களில் இந்த தினத்தில் என்ன நடக்கும்?
6.பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும். கேதார் நாத் ஜோதிர்லிங்க கோவிலும் பத்ரிநாத் பத்ரி நாராயணர் கோவிலும் திறக்கப்படுகிறது .
****
7.அக்ஷய திருதியை நாள் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள வேறு நம்பிக்கைகள் என்ன ?
7.பரசுராமர் அவதரித்த திருநாள்; கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த
திருநாள்; பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்; பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்; வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. திரேதாயுகம் தொடங்கிய நாள்; கனகதாரா ஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியாரால் இயற்றப்பட்டது.
****
8.எந்த தானியத்துடன் அக்ஷய திருதியை இணைத்துப் பேசப்படுகிறது ?
8.அரிசி, கோதுமை அல்லது பார்லியை யாகக்கிரியைகளில் இந்துக்கள் பயன்படுத்துவார்கள்; வட இந்திய குளிர்ப்பிரதேசங்ககளில் பார்லி எளிதில் விளைகிறது .பார்லி தோன்றிய நாள் இதுதான் .
***
9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் அக்ஷய திருதியை ஏன் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது ?
9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி நகரில் ஜகந்நாதர் கோவில் உள்ளது; அங்கு நடக்கும் ரத யாத்திரைதான் உலகப் பிரசித்திபெற்றது; ஆக்ஸ்போர்டு அகராதியில் ஜக்கர்நாட் juggernaut என்ற சொல்லை உருவாக்கியது .
இன்றைய தினத்தில்தான் ரதம் அமைக்கும் பணிகளும் சந்தன் யாத்ரா சடங்குகளும் தொடங்குகின்றன
juggernaut
/ˈdʒʌɡənɔːt/
noun
a huge, powerful, and overwhelming force.
“the juggernaut of public expenditure”
British
a large, heavy vehicle, especially an articulated lorry.
“the juggernaut thundered through the countryside”
***
10.ஹரே கிருஷ்ணா இயக்கக ISKCON temples கோவில்களில் என்ன நடக்கும்?
10.கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சந்தனத்தைச் சார்ந்தும் விழா துவங்கும் இது 21 நாள் நடைபெறும்; சேவைப் பணிகளில் தொண்டர்கள் இறங்குவார்கள் விஷேஷ பூஜைகளும் பிரசாதமும் முக்கிய அம்சங்கள்.
–subham—
Tags- அக்ஷய திருதியை , ரத யாத்திரை, ஜெகன்நாத், பரசுராமர், கங்கை நதி , தங்கம் , காஞ்சி மடம்