
Post No. 14,516
Date uploaded in London – 15 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-3
பரஞ்சோதி முனிவர் , அவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில், நிறைய அதிசயச் செய்திகளைக் கொடுக்கிறார்; அதில் ஒன்று பாண்டிய நாட்டில் எடைக்கு எடை முத்து கிடைக்கும் என்னும் செய்தி ஆகும் . மதுரை நகர பெண்களிடம் ஒரு படி எள் , அல்லது கொள்ளு கொடுத்தால் அவர்கள் ஒரு படி முத்து கொடுப்பார்கள் . அதை பெண்கள் வளையல்களாகவோ, மாலைகளாகவோ செய்துகொள்ளலாம். மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு உள்ள முத்து அங்கி, முத்து மாலைகளை பார்க்கையில் இது உண்மைதான் என்றும் தெரிகிறது .
வேழம் உடைத்து மலைநாடு
மிகுமுத்து உடைத்து தென்னாடு;
தாழ்வில் தொண்டை வளநாடு
சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்
சோழன் புவிசோறு உடைத்தென்னும்
துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து
வாழும் பெருமைத் திருநாடு
வளம்சேர் சோழ மண்டலமே
மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விடச் சோழ நாடே சிறந்தது.

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து
என்றார் ஒளவையார் (தொண்டை மண்டல சதகம், மேற்கோள் 13)
****
இதோ திருவிளையாடல் புராணப் பாடல்
துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்
கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை
கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்
எள்ளு மாறவு மளப்பன விடைக்கிடை முத்தம் 42
துள்ளுகின்ற கெண்டை மீன்போலுங கண்களையுடைய நெய்தனிலப் பெண்களால், சுறா மீனோடு உண்ணுதற் பொருட்டு, கள்ளையும் இனிய
கரும்பையும், வாங்குதற் பொருட்டும், புளியங்காய், தினை கிழங்கு, தேன் இவைகளை, வாங்குதற் பொருட்டும், அவரை கொள், எள் இவைகளை வாங்குதற் பொருட்டும்,
அளவுக்கு அளவு முத்துக்கள் அளக்கப் பெறும்
.
அந்தக் காலத்தில் பண்டமாற்றுமுறை நாடங்கிலும் வழகத்தில் இருந்தது யாரிடம் எது அதிகம் இருந்த தோ அதைக் கொடுத்து வேறு ஒரு பண்டத்தை வாங்கினார்கள் பாண்டிய நாட்டில் முத்துக்கள் ஏராளமாக கிடைத்ததால் அதை அளந்து கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் .
கருவி வாள் சொரி மணிகளும் கழை சொரி மணியும்
அருவி கான்ற பல் மணிகளும் அகன் தலை நாகத்து
இரவி கான்ற செம் மணிகளும் புனம் கவரி மான்
குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல். 49
.மேகங்கள் சொரிந்த முத்துக்களும், மூங்கில்கள் சொரிந்த முத்துக்களும், அருவிகள் ஒதுக்கிய பல்வகை மணிகளும்,
அகன்ற படத்தினையுடைய நாகத்தினின்றும், உமிழப்பட்ட,
சூரியன்போலும் சிவந்த மணிகளும், தினைப்புனத்தின் கதிர்களைக்
கவர்கின்ற கூட்டமாகிய மான்களும் குருவிகளும் வீழும்படி,
குறமகளிர் கவணில் கோத்து எறிகின்ற கற்ககள் ஆகும்
கொடிச்சியர் – குறிஞ்சிநில மகளிர். (49)
குறிஞ்சிநில மகளிர், கவண் கல் வீசவும் ரத்தினக் கற்களைத்தான் பயன்படுத்துவார்களாம்!
—–subham—-
Tags-, கவண் கல், தானியத்துக்கு, முத்து , பரஞ்சோதி முனிவர், ரத்தினக் கற்கள், வேழம் உடைத்து மலைநாடு,தென்னாடு முத்துடைத்து