
Post No. 14,535
Date uploaded in London – 20 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Vāgbhaṭa (वाग्भट) Ashtāṅgasaṅgraha (अष्टाङ्गसंग्रह)
அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதி புகழ் பெற்றவர் வாக்பட்டர் . அவர் பற்றிய இரண்டு சுவையான கதைகளை (சம்பவம்) படிப்பதற்கு முன்னால் அவர் செய்த நூலினை அறிவோம். மருத்துவ உலகில் சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவருக்கு அடுத்தாடியாக நிற்பவர் வாக்பட்டர்;
இலக்கண உலகத்தில் பாணினி- வரருசி -பதஞ்சலி ஆகிய மூவரையும் மும்முனிகள் என்பார்கள் அதே போல இந்துக்கள் , சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர் ஆகிய மூவரையும் மருத்துவத்தின் மும்முனிகள் என்பார்கள் .
சரகர் சுஸ்ருதர் போலவே ஐவரும் சம்ஸ்க்ருத மொழியில் ஏழாயிரம் சூத்திரங்களடங்கிய அஷ்டாங்கஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதியுள்ளார்.
வாக்கபட்டரின் வாழ்க்கை பற்றி ஆராய்வதில் ஜெர்மானியர்கள் இறங்கினர் ; அவர் எழுதிய நூல்களுக்கான உரைகளின் அடிப்படையில் அவர் ஒரு காஷ்மீரி என்ற முடிவுக்கு வந்தனர். .நீண்ட நாள் வாழ்வது எப்படி என்ற காய கல்ப விஷயங்களை எழுதியதால் இவர் புகழ் ஜாவா /இந்தோனேஷியா, கம்போடியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் பரவியது . ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் வாக்பட்டர், எகிப்துக்குச் சென்று அந்த நாட்டிலேயே இறந்ததாகச் சொல்கின்றனர் . அவர்கள் இரண்டு உண்மைக் கதைகளையும் எழுதியுள்ளனர்.
****
முதல் கதை

எகிப்தை ஆண்ட மன்னர்களில் ஒருவருக்கு தீராத வயிற்று நோய் ஏற்பட்டது ; அவருக்கு வாக்பட்டரின் புகழ் தெரிந்தது. எகிப்து நாட்டுக்கு வந்து தனக்கு சிகிச்சை தரும்படி வேண்டினார். அக்காலத்தில் கடல்கடந்து செல்வது கடினமானது; சாஸ்திர விரோதமானது ; ஆயினும் வாக்பட்டரோ ஆயுர் வேதம் மட்டுமின்றி ஜோதிடத்திலும் வல்லவர் . தனது ஜாதகப்படி வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து துணிச்சலாக கடற்பயணம் மேற்கொண்டார் . அங்கே மன்னரின் தீராத வயிற்று நோயைத் தீர்த்துவைத்தார் .
ஒரு நோயாளி கூப்பிடும்போது நோயினைத் தீர்க்கப் போகாமல் இருந்தால் அது பாவம் , குற்றம் என்று வைத்திய நூல்கள் கூறுவதால் அவர் இந்த முடிவினை எடுத்தார். நான்கு மாத காலம் கப்பல் பயணம் செய்து, எகிப்துக்குச் சென்ற அவருக்கு மன்னர் ராஜ உபசாரம் செய்தார் . மன்னரின் நோயினை மூன்றே மாதங்களில் தீர்த்து வைத்தார் . நாடே அதை விழாவாகக் கொண்டாடியது . மன்னர் மனம் மகிழ்ந்து, அந்தக் கால வழக்கப்படி பாதி நாட்டினை பரிசாகக் கொடுத்தார் ஆனால் வாக்பட்டரோ அதை ஏற்க மறுத்து, என்னை நாட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள்; அதுவே போதும் என்றார் . உடனே மன்னர் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் திரைப்படக் கதைகளைப் போல வேறு ஒரு திருப்பம் ஏற்பட்டது! .
****
இரண்டாம் கதை அல்லது சம்பவம்

எகிப்து நாட்டின் அரசகுமாரி, திருமணம் ஆவதற்கு முன்னரே கருவுற்றாள்; காரணம், அந்தப்புர வேலையாள் ஒருவன் அவளை ஆசைகாட்டி ஏமாற்றிக் கற்பழித்து விட்டான். இந்தச் செய்தி பரவினால் அந்த வேலையாளுக்கு மரண தண்டனை கிடைக்கும்; அரச குமாரி தனது மானத்தைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொள்வாள் ; இதனால் அரசியும் அரச குமாரியும் வாக்கபட்டரை ரகசியமாகச் சந்த்தித்துக் கருவினைக் கலைத்துவிடுங்கள் என்ற மன்றாடினார்கள் .
இந்து மத நூல்களில் ப்ருணுஹத்தி (கருக் கொலை ) என்பது பிரம்மஹத்தி (பிராமணாள் கொலை) –க்கு சமம் என்று சொல்லியுள்ளது ஆகையால் கருவினைக் கொல்ல முடியாது என்றார் . அப்போது அவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்தனர் நீங்கள் மறுத்தால் வேலைக்காரன் மரண தண்டனையால் சாவான்; என் மகள் தற்கொலையால் சாவாள்; அவளுடைய வயிற்றிலுள்ள கருவும் சாகும்; மூவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்வது பாவம் இல்லையே என்று அரசி வாதாடினாள் ; வாக் பட்டர் மனம் இரங்கி, மூவரின் உயிரையும் காப்பாற்றுவதாக வாக்களித்தார் ; ஜோதிடப்படி தனக்கு வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து இருந்ததால் தன்னுயிரைக்கொடுத்து மூன்று இன்னுயிர்களைக் காப்பாற்றுவோம் என்று முடிவு செய்தார் ..
அரசனின் முக்கிய மந்திரியிடம் சென்று மன்னர் மகள் கர்ப்பவாதியாகிவிட்டாள்; அதற்கு காரணம் தான்தான் என்றார் . மன்னருக்கும் செய்தி கிடைத்தது ; யாரும் வாக்பட்டரை நம் பத்தயாராக இல்லை ;ஆனால் பொறாமை கொண்ட அரசவை வைத்தியர்கள் வாக் பட்டர் கற்பழித்தது உண்மையே என்று வாதாடினார்கள் ; மன்னரும் வேறு வழியின்றி மரண தண்டனைக்கு நாள் குறித்தார் . விஷயம் அறிந்த அரசியும், அரச குமாரியும் பதறிப்போனார்கள் ; அரச குமாரிக்கு ஒரு யோஜனை பிறந்தது . வாக்பட்டரின் முழு மருந்துகளையும் அறிந்தவள் அவள் .
வாக்பட்டர் பலவித ரசாயனங்கள், ரசக்குப்பிகள் ஆகியவற்றைச் செய்து வைத்திருந்தார் ; அதில் மாரக தூபம் என்னும் குப்பியைத் திறந்தால், விஷப்புகை பரவி அனைவரும் இறக்க நேரிடும்; இன்னும் ஒரு குப்பி அமர தூபம் ; அதைத் திறந்து வரும் புகையைச் சுவாசித்தால் அனைவரும் சாகா வரம்பெற்று நீண்ட காலம் வாழ்வார்கள் . அரச குமாரி என்ன செய்தாள் தெரியுமா ? எல்லோரையும் சாகடிக்கும் குப்பியைக் கொண்டு வந்து அதில் அமர தூபம் என்று எழுதினாள் . அரண்மனையிலுள்ள வைத்தியர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து அதன் பலனைப் பெறலாம் என்று அறிவித்து அழைப்பும் அனுப்பினாள்; இளவரசியின் அழைப்பினை எவரும் அவமதிக்க முடியாதே; முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே வந்தார்கள் வாக்பட்டரும் அங்கே வந்தார் ; தன்னைக் காதலித்துக் கற்பழித்த பணியாளையும் அரச குமாரி அழைத்தாள்; எல்லோரும் உள்ளே வந்த பின்னர் அறைக் கதவினைத் தாளிட்டாள் ; புகை வெளியே போகாமல் இருப்பதற்கு அந்த ஏற்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தார்கள் திடீரென அரசி குமாரி தனது உடைவாளினை உருவி கற்பழித்தவனை சதக் சதக் என்று குத்திக் கொன்றாள்; அவன்தான் தன்னைக் கற்பழித்தவன் என்றும் அறிவித்தாள்; எல்லோரும் திகைத்து நின்றார்கள்; நாம் எல்லோரும் இப்போது அவனுடன் செல்வோம் என்று குப்பியைத் திறந்தாள் ; எவரும் பேசுவாதற்கு நா எழுவதற்கு முன்னாள் மயக்கம் போட்டு உயிர் நீத்தார்கள் ஆக , அவளும் வாக்கபட்டரும் உள்ளே இருந்த கருவும் உயிர்த்தியாகம் செய்தன ; வாக்பட்டரின் பூத உடல், ஜோதிடத்தில் சொன்னபடி, மறைந்தது; புகழ் உடம்போ உலகம் முழுவதும் பரவியது .

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டியது அவர் எழுதிய ….. அஷ்டாங்கஹ்ருதயம் நூல்; அது பற்றித் தனியாகக் காண்போம் .
—subahm—-
Tags- அஷ்டாங்கஹ்ருதயம் , மருத்துவ நூல் , வாக்பட்டர், எகிப்து , மன்னர் , நோய், ரசக்குப்பி, மாரக தூபம் , அமர தூபம்