விட்ட எழுத்து எது? விடாத எழுத்து எது? திருமூலர் விடுகதை! (Post No.14,556)

Written by London Swaminathan

Post No. 14,556

Date uploaded in London –  26 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் அசபை என்ற ஒரு அத்தியாயமே நாலாம் தந்திரத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து வரும் திருவம்பலச் சக்கரம்  என்ற அத்தியாயத்தில் தான் விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றித் திருமூலர் ரிக்வேதம் போல விடுகதை பாஷையில் பாடு கிறார்.

அசபை — இது அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

இந்த விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றி மூன்று விளக்கங்களை மூன்று புஸ்தகங்கள் கூறுகின்றன. சி +வ என்று சைவசித்தாந்த திருமந்திரம் நூல் கூறுகிறது . ஆங்கிலத்தில் திருமந்திரத்தை வெளியிட்ட இணையதளம்  ஓ +ம்  என்று கூறுகிறது. ,மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக (2009 )மலரில் ஒரு கட்டுரையில் ஹம் +சம்  என்று ஒருவர் எழுதியுள்ளார்.

இதற்குப்பின் வரும் ஒரு பாடலில் அவ்வுண்டு சவ்வுண்டு என்ற பாடலுக்கும் வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படுகிறது ஆனால் இது அம் +சம் (ஹம் +சம்) என்னும்  அஜபா மந்திரம் என்பதே சரி.

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்

ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்

விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்

கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

918: Significance of Letter Om

They know not how the Lord

Became conjoint with Her,

Who, on the blooming lotus sits;

They who chant the letter aspirated “O”

Conjoint with the letter unaspirated “m”

May well preserve their life ever.

*****

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது,

சவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை,

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்,

சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

English translation of verse 933:

There is Letter Hau

There is Letter Sau

In them are comprehended all;

How they entwined are,

None knows;

They who know this union mystery

Are indeed blessed

Of both, Sakti and Sadasiva.

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 2. திருஅம்பலச் சக்கரம் > பாடல்: 933
எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.

****

இதை அவ்வையார் விநாயகர் அகவலில் காணலாம்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

****

பரமஹம்ச

ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.

ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.

இதை

அஹம் = நான் = ஜீவாத்மன்

ச: = அவனே + பரமாத்மன்

அஹம்+ச; = அம்ச (ஹம்ச)

இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.

இந்த உண்மையை உணர்ந்தவர்  பரமஹம்சர் என்று அழைக்கப்படுகிறார்கள்  . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.

—subham—-

Tags– அசபை , அஜபா , ஹம்சம் , பரம ஹம்சர் ,ஊமை எழுத்து, சிவோஹம் , விட்ட எழுத்து , விடாத எழுத்து, எது, திருமூலர் விடுகதை

Leave a comment

Leave a comment