
Post No. 14,751
Date uploaded in London – 11 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாயசம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள். அல்லது என்று இருந்தால் ஏதேனும் ஒன்றினைக் கூறினாலும் பத்து மார்க்குகள் உண்டு!
****
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்— 1. பாயசம் செய்வதற்கு பால், முந்திரிப்பருப்பு, திராட்சை/சுல்தானா /கிஸ்மிஸ் பலம், சர்க்கரை அல்லது வெல்லம்
— பத்து மார்க்குகள்.
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10………………………
****

விடைகள்—
1. பாயசம் செய்வதற்கு பால், முந்திரிப்பருப்பு, திராட்சை/சுல்தானா /கிஸ்மிஸ் பலம், சர்க்கரை அல்லது வெல்லம் — பத்து மார்க்குகள்.
2.மிகவும் பிரபலமானது சேமியா பாயசம் –பத்து மார்க்குகள்
3.ஜவ்வரிசி அல்லது தேங்காய் பாயசம் –பத்து மார்க்குகள்
4. ரவா அல்லது பால் அல்லது பருப்பு பாயசம் –பத்து மார்க்குகள்
5.கேரளா ஸ்பெஷல் /சக்கப்பிரதமன் /பலாப்பழ பாயசம் –பத்து மார்க்குகள்
6.ஏலக்காய் , வாதம் பருப்பு போடலாம் –பத்து மார்க்குகள்
7.தமிழ் நாட்டில் இலையில் முதலில் பரிமாறுவது
பின்னர் ரசம் சாதத்த்துக்குப்பின்னர் பரிமாறுவது –பத்து மார்க்குகள்
8.கடவுளுக்கு நைவேத்யம் அல்லது கல்யாண விருந்து அல்லது பிறந்த நாளில் வைப்பது –பத்து மார்க்குகள்
9.கையினால் நக்கிக் குடிப்பது வழக்கம் ; இப்போதெல்லாம் பிளாஸ்டிக் கப்பில் கொடுக்கிறார்கள் ; தேவைப்பட்டவர்களுக்கு ஸ்பூன் —பத்து மார்க்குகள்.
10. கேரளத்தில் படிப்பாயசம் நேர்த்திக்கடன். –பத்து மார்க்குகள்.
படிப்பாயசம் என்றால் என்ன?
பொதுவாக, படிப்பாயசம் என்பது பால், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்புப் பாயசம் ஆகும். இது முருகனுக்கு படைக்கப்படும் பிரசாதம் என்பதால், இதற்கு படிப்பாயசம் என்று பெயர். ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த பாயாசம் முருகனுக்கு படைக்கப்படுகிறது. கேரளத்திலும் தென் தமிழ் நாட்டிலும் பல இடங்களில் படிப்பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது .
–subham—
Tags- பாயசம், பத்து விஷயங்கள் , 100 மார்க் ,பத்து மார்க்குகள், படிப்பாயசம்