Post No. 14,794
Date uploaded in London – 24 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நூல்கள்
ரகுவம்சம் – ரகு
மேகதூதம் -மேக
குமாரசம்பவம் – குமா
சாகுந்தலம் – சாகுந்த
மாளவிகாக்னிமித்ரம் – மாளவிகா
விக்ரமோர்வசீயம் – விக்ரம
ருதுசம்ஹாரம் – ருது
ரிஷி முனிவர்களின் ஆசிரமங்கள் , உறைவிடங்கள், பர்ணசாலைகள் பற்றி காளிதாசர் வர்ணித்தது போல வேறு எவரும் வர்ணித்ததில்லை ; இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு இடையே அவர்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். வன விலங்குகள் கூட முனிவர்களின் கட்டளைக்காக கீழ்ப்படிந்தே நடந்தன. விஷப் பாம்புகளும் அவர்களைத் தீண்டியது இல்லை . பாம்பு கடித்து முனிவர் இறந்தார், யானை மிதித்து ரிஷி இறந்தார் என்று நாம் படித்ததில்லை ஆனால் இவை எல்லாம் மனிதர்கள், சாதாரண மனிதர்கள் விஷயத்தில் நடந்தன.
எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு ஒரே துறையில் புலியும் மானும் பகைமையை விடுத்து நீர் குடிக்கும்
காளிதாசரின் சொற்களில் காடுகளைக் காண்போம் :
முனிவர்கள் தங்கு தடையின்றி தவம் இயற்ற காடுகள் துணை புரிந்தன. தபோவனம் என்ற சொல்லால் அவர் ரிஷிகளின் உறைவிடங்களை அழைக்கிறார்.
இதை குமார 3-24;- ரகு 2-18, 11-13, சாகுந்தல 1-18 விக்ரமோர்வசீய 5-17 ஸ்லோகங்களில் காணலாம்
கிளிகளின் கூடுகளிலிருந்து நீவார அரிசி விழும் காட்சிகளை அங்கே காணலாம் – சாகுந்தல 1-13
அங்கே இங்குடி எண்ணெய் எடுப்பதற்காக பயன் படுத்திய எண்ணெய்க் கறை படிந்த கற்களைக் காணலாம்.
மான்கள் அச்சமின்றி உலாவும் ;தேர் வரும் சப்தமும்கூட அவைகளை ஒன்றும் செய்யாது .
மரக்கிளைகளில் ரிஷி முனிவர்கள் உலர்த்திய ஈரத் துணி களிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும்
செடிகொடிகளைச் சுற்றி நீர்பாய்ச்சுவதற்காக வெட்டிவிட்ட பாத்திகளும் காணப்படும்– ரகு
மாலை வேளைகளில் முனிவர்களின் மகன்கள் எல்லோரும் கூட்டமாக யாகத்துக்கான சமித்துக்களைக் கொண்டு வருகிறார்கள் . அவர்கள் கைகளில், குச புல், பழங்கள் பூக்களும் இருக்கும். இந்தப்பணிகளை ரிஷிகளின் இளம் புதல்வர்கள் செய்தனர்
புண்ய சமிதி குச நிர்மித்தம் ரிஷி குமாரகைஹி – என்று விக். வர்ணிக்கிறது .
பறவைகளையும் மிருகங்களையும் அன்பாக நடத்தினார்கள்
சாகு1-13; 4-13 , ரகு1-50, 1-51
மான்களை பிள்ளைகளாக சுவீகரித்து அவைகளுக்குப் பெயர்களை சூட்டினார்கள் .
ஸ மே புத்ர க்ருதகோ தீர்க்கபாங்கோ நாம மிருக– சாகு 4-13
மான்கள் புற்களை மேயும்போது அவைகளின் முகங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு இங்குடி எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்- ரகு 1-50
பர்ணசாலைகளின் வாசல்களில் மான்கள் கூட்டமாக காத்திருந்தன . ரிஷிகளின் மனைவிமார்கள் அவைகளுக்கு உணவு அளித்தனர் ; இது குழந்தைகளுக்குத் தாய்மார்கள் உணவு ஊட்டுவது போல இருந்தது . சாகு
மாலையில் சூரியன் அஸ்தமிக்கையில் மான்கள் கூட்டமாக யாக மேடைகளை சுற்றி அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தன.
குடிசைகளுக்கு முன்பாக நிவார அரிசி குமிக்கப்பட்டிருந்தது.
செடி கொடி மரங்களுக்கு ஆஸ்ரமப் பெண்கள், புதல்விகள் நீர் பாய்ச்சினார். அவைகளைத் தங்கள் குழந்தைகள் என்று அழைத்தார்கள்
Parṇaśālā (पर्णशाला) பர்ண என்றால் இலை; சாலை என்றால் கூடம்
****
சில வருணனைகளைக் காளிதாசனின் சொற்களில் காண்போம்
परस्पराक्षिसादृश्यमदूरोज्झितवर्त्मसु।
मृगद्वन्द्वेषु पश्यन्तौ स्यन्दनाबद्धदृष्टिषु॥ 1-40
parasparaakShisaadR^ishyamaduurojjhitavartmasu |
mR^igadvandveSu pashyantau syandanaaabaddhadR^iSTiSu || 1-40
மன்னரின் ரதம் வரும் ஒலியைக்கேட்டு இரண்டு ஜோடி மான்கள் சற்று விலகி நின்றன . ஒன்றை ஒன்று கண்களை உற்றுநோக்கி சுதக்ஷிணாவையும் திலீபனையும் பார்த்தன . ஆண் மானும் பெண் மானும் பரஸ்பரம் ராஜா ராணிகளின் கண்களைப்போல தங்கள் துணைவி அல்லது கணவனின் கண்களைப்போல இருப்பதை உறுதி செய்தன.
அதேபோல திலீபனும் சுதக்ஷிணாவும் ஒப்பிட்டுப்பார்த்துக் காதல் சிரிப்பு சிரித்தனர்.
श्रेणीबन्धाद्वितन्वद्भिरस्तम्भां तोरणस्रजम्।
सारसैः कलनिर्ह्रादैः क्वचिदुन्नमिताननौ॥ १-४१
śreṇībandhādvitanvadbhirastambhāṁ toraṇasrajam |
sārasaiḥ kalanirhrādaiḥ kvacidunnamitānanau || 1-41 .
வானத்தில் கொக்குகள் மாலை வடிவத்தில் பறந்து சென்ற்ன்.அது மன்னரை வரவேற்கும் தோரணம் போல இருந்தது
இந்த கொக்கு= மாலை சங்கத் தமிழ் உவமைகளிலும் உளது .
ग्रामेष्वात्मविसृष्टेषु यूपचिह्नेषु यज्वनाम्।
अमोघाः प्रतिगृह्णन्तावर्घ्यानुपदमाशिषः॥ १-४४
grāmeṣvātmavisṛṣṭeṣu yūpacihneṣu yajvanām |
amoghāḥ pratigṛhṇantāvarghyānupadamāśiṣaḥ || 1-44 .
போகும் வழியில் யாகப்பசுக்கள் கட்டப்பட்ட யூப ஸ்தம்பங்களையும் கண்டு ஆங்காங்கு நிறுத்தி ஆசி பெற்றனர். வேதத்தில் சிறந்தோர் புனித நீர் தெளித்து ஆசிகூறினர் ; கிராமத்தின் எல்லையில் நின்ற அவை மன்னர் தானமாக அளித்தவை
யூப நெடுந்தூண் சங்க இலக்கியத்திலும் உள்ளது .
वनान्तरादुपावृत्तैः समित्कुशफलाहरैः।
पूर्यमाणमदृश्याग्निप्रत्युद्यात्यैस्तपस्विभिः॥ १-४९
vanāntarādupāvṛttaiḥ samitkuśaphalāharaiḥ |
pūryamāṇamadṛśyāgnipratyudyātyaistapasvibhiḥ || 1-49
காட்டுக்குள்ளிருந்து ஆஸ்ரமத்துக்கு ரிஷிகள் யாகத்துக்குத் தேவையான மரக்குச்சிகள், பழங்கள், குச புற்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்த போது வீடு திரும்பும் தந்தையைக் குழந்தைகள் வரவேற்பது போல யாகத் தீ அவர்களை வரவேற்றது.
आकीर्णमृषिपत्नीनामुटजद्वाररोधिभिः।
अपत्यैरिव नीवारभागधेयोचितैर्मृगैः॥ १-५०
ākīrṇamṛṣipatnīnāmuṭajadvārarodhibhiḥ |
apatyairiva nīvārabhāgadheyocitairmṛgaiḥ || 1-50 .
ரிஷி முனிவர்களின் கைகளிலிருந்து உணவினைப் பெறும் வரை மான்கள் வழியை அடைத்து நின்றன ; தாயிடம் உணவினைப் பெற குழந்தைகள் மொய்ப்பது போல இருந்தது அந்தக்காட்சி.
सेकान्ते मुनिकन्याभिस्तत्क्षणोज्झितवृक्षकम्।
विश्वासाय विहङ्गानामालवालाम्बुपायिनम्॥ १-५१
sekānte munikanyābhistatkṣaṇojjhitavṛkṣakam |
viśvāasāya vihaṅgānāmālavālāmbupāyinam || 1-51 .
ஆஸ்ரமத்திலுள்ள இளம்பெண்கள் செடிகளை சுற்றியுள்ள பாத்திகளில் தண்ணீரை விட்டுவிட்டு உடனே அவரமாகப் பின்வாங்கினர். காத்திருக்கும் பறவைகள் அச்சமின்றி தண்ணீர் குடிப்பதற்காக இவ்வாறு செய்தனர் . அந்த அளவுக்கு உயிரினங்கள் மீது அன்பு செலுத்தினர்.
இவை ரகு வம்ச ஸ்லோகங்கள். மேலும் காண்போம்.
To be continued………………….
Tags- அழகான கானகம், ஆஸ்ரமம், காளிதாசரின், வர்ணனை மான்கள், பறவைகள் அன்பு, கொக்கு, மாலை முனிவர், ரிஷிகள், இளம் பெண்கள், சங்க இலக்கியம் ,