காளிதாசன் காவியங்களில் சிவபெருமான்- 3 (Post No.14,808)

Written by London Swaminathan

Post No. 14,808

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART THREE OF MY RESEARCH ARTICLE

காளிதாசன் பயன்படுத்திய அதே பெயர்களை சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியதை காண்போம்.

சங்கப் புலவர்களில் முக்கியமானவர்கள் அம்மூவன்உருத்திரங்கண்ணனார் ஆகிய இருவரர் ஆவர் . இவர்களுடைய பெயர்கள் சிவனின் பெயர்கள் ;அங்கயற்கண்ணி என்றால் அழகிய மீன்போன்ற கண்களை  உடையவள் என்று பொருள் அதே போல அம்மூவன் என்றால் அழகிய மூன்று கண்ணுடையோன் என்பது பொருள் இது  சிவனின் பெயர்!

MR RUDRAKSHA

ருத்ர- Rudra +கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்க நூல்கள் பெரும்பாணாற்றுப்படை  மற்றும் பட்டினப்பாலை ஆகியவற்றை  எழுதிய பிராமணப் புலவர் ஆவார் .

உமா அக்ஷ மாலையைக் கையில் அணிந்திருந்த செய்தி குமார சம்பவத்தில் 5-11 வருகிறது

   இதே போல சங்கப்புலவர் காமக்கண்ணியார் என்பது காமாக்ஷி என்பதன் தமிழ் வடிவம் என்பதை காஞ்சி மஹா சுவாமிகளும் உ.வே சாமிநாத அய்யரும் உறுதிப்படுத்தியுள்ளனர் . அங்கும் காம + அக்ஷி   வருவதைக் கவனிக்க வேண்டும் ஆக, சிவன் அவனது பெயர்களைக் கண்டுவிட்டாம் 

மதுரைக் கவுண்டின்ய கோத்ர கவுணியன் பூதனார்  உள்பட பல பெயர்கள் பூத என்ற சொல்லுடன் இருக்கின்னறன. இவர்கள் அனைவரும் சைவர்கள் ; சிவன் பெயரை உடையவர்கள்

பூத  நாதன் ,பெரும் பூதன் பூதன் இளநாகன் பூதப்பாண்டியன் ,கருவூர்  பூதன் சாத்தனார்    த்து  பூதன்  தேவன் வெண்  பூதன் சேந்தன் பூதன்  ,குன்றம் பூதநார்  ; பூத என்பது சிவனை வழிபடுவோருக்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

சங்க இலக்கிய நூல்களில் சிவன் பற்றி வரும் பாடல்களும் பாடியோரும்

பரணர் -அகம் 181 – முக்கட் செல்வன்; புறம்198;

புறம் — காரி கிழார் – முக்கட் செல்வர் நகர் வலம்

புறம் –  மஹாதேவன்

புறம் 55 — இளநாகன் – முப்புரம் எரித்தவன் –

புறம் 56 – நக்கீரன்– சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமன் கொடிகள் வாகனங்கள்

புறம் 91 – அவ்வையார்

அவ்வையார் பாடல்

பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

புறம் 198 – பேரி சாத்தனார் –ஆல் அமர் கடவுள் / தட்சிணாமூர்த்தி;  

புறம் 219 – பூதநாதனார்

புறம் 259 – பெரும்பூதன்

புறம்  276 – பூதன் இளநாகன்

ஐங்குறுநூறு 181 – சிவனும் நால்வேதமும்

கலித்தொகையில் எண்ணற்ற பாடல்களில் ராவணன் அடி  வாங்கியது
உமா தேவி
, ரிஷபக் கொடி முதலியன பாடப்பட்டுள்ளன.

முருகு256; சிறு.97  முதலிய நூல்களிலும் சிவன் பாடப்படுகிறார் ; இவை அனைத்தையும் ஒரே புலவரிடத்தில் காணவேண்டுமென்றால் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன் நூல்களில் மட்டுமே காண முடியும் ; சிவ புராணம் மற்றும் சைவம் சம்பந்தமான புராணங்களை அறிஞர்கள் குப்தர் காலத்துக்கும் பின்னுக்கு வைக்கின்றனர் . காளிதாசன் சொன்ன விஷயங்கள் குப்தர் கால கல்வெட்டுகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் காணப்படுவதால் காளிதாசன் அவைகளுக்கு முந்தியவன் என்பது கலை வரலாற்று மாபெரும் அறிஞர் சிவராம மூர்த்தியின் கருத்து. பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட காளிதாசனின் அத்தனை நூல்களையும் தற்கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சந்திரா ராஜனும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னரே வைத்து அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

e)      சூல ப்ருத் ,சூலின்  (Trident bearer)

காளி : Ragu II 38, Kuma VII 40, III 57,IV 94 Mega 15, 19,

சங்கம்  : அகம்  1 (பாரதம்  பாடிய  மஹாதேவன் )

துர்கா தேவியை சூலி என்ற சொல்லால் குறுந்தொகை 218 குறிப்பிடுகிறது .சிவனுக்கும் துர்க்கைக்கு மட்டுமே சூலம் உண்டு

f)       Vrushanga (On the Bull mount, Bull flag)

Kali: Kuma III 23,14,62, VII 29,VIII 20, Ragu II 35, 36

Cankam : புறம் 56 ( நக்கீரன் ,  பிராமண  புலவர் )

g)      பார்வதி  பரமேஸ்வரன்

h)      Kali: Ragu I-1 = சங்கம்  அகம்  1, புறம்  166

i)        Purasasana

Kali :Kuma VII 30= புறம்  55 (மருதம்  இளநாகன் )

Tripura Thaganm (one who burnt three forts)

Kali :Mega 58= சங்கம் புறம்  55, பரி  5-2,கலி  2-1 to 8, 38-1,கலி  1

j)        Ardhanari (half siva half shakthi) அர்த்த நாரீ

Ragu 1, Kum VII 28 =Cankam : ‘மாதொரு பாதியான்  ’ (ஐங்குறுநூறு   கடவுள் வாழ்த்து r)

k)      Maheswaran (Great Lord)

Kali Ragu III 49= சங்கம்  புறம்  166, கலி  1

l)        ருத்ர  (angry towards bad)

Ragu II 54,Kuma II 26,III 76,Malavi I-4

சங்கம்  புறம்  56 (நக்கீரன் )

XXX

NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- பரிபாடல் 9

மணிமிடற்றண்ணற்கு

xxx

TRAYAMBAKA த்ரயம்பக-  முக்கண்ணான்.

xxx

ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon

xxx

MR RED

Lord Siva is RED like dusk

வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து

உரு உடன் இயைந்த தோற்றம் போல,

அந்தி (RED COLOUR) வானமொடு கடல் அணி கொளாஅ,

வந்த மாலை பெயரின், மற்று இவள்

அகநானூறு  360

The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)

அகநானுறு  கடவுள் வாழ்த்தில்  செவ்வான் அன்ன  மேனி– body like dusky red sky

புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை

****

பிறைநுதல்

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,

கலித்தொகை 104-11

***

ARUDRA –STAR GOD–

Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20

பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150

In Indian astronomy, the star Betelgeuse is known as Ardra (आर्द्रा) or Thiruvathirai. It is a prominent red supergiant star in the constellation Orion. Ardra is also the name of the sixth nakshatra (lunar mansion) in Hindu astrology, which corresponds to the region of the sky encompassing Betelgeuse

****

சப்தரிஷி URSA MAJOR CONSTELLATION

ஏழு ரிஷிகளை பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள் . அவர்கள் சொல்லும் அதே வரிசையில்  பாணினி  தனது சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார் . அந்த எழுவர்தான் சிவனிடம் உமாவின் சார்பில் தூது சென்றதாக குமார சமிபத்தில் காளிதாசன் குறிப்பிடுகிறான் ; அந்த எழுவரையும் தமிழர்கள் கும்பிடுவது நற்றிணைப் பாடலில் 231 உள்ளது

கைதொழு மரபின் எழுமீன் போலப்  — பாடியவர் இளநாகனார்

ஐந்தாவது பரிபாடலில் சப்த ரிஷிகள் மற்றும் வர்களுடைய மனைவிமார் பற்றிய குறிப்பும் சிவபெருமான் முப்புரங்களை எரித்த செய்தியும் வருகிறது.

SAPTA RISHI — URSA MAJOR– GREAT BEAR– DIPPER CONSTELLATION

வளர்க காளிதாசன் புகழ் ! வாழ்க சங்கத் தமிழ்ப் புலவர்கள்

–SUBHAM—

TAGS- சப்தரிஷிகாளிதாசன் காவியங்களில், சிவபெருமான்- PART 3

GNANAMAYAM 27TH JULY 2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 27TH JULY 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team.

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – THIRUVANCHIYAM Temple

****

Talk by Prof. S Suryanarayanan from Chennai

Topic- Natural Tourism In Tamil Literature

****

SPECIAL EVENT-

Talk by RAJU KANDASAMY fromCoimbatore  in Tamil.

Topic – AI Tamil

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 27-7 -2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு — தலைப்பு-  திருவாஞ்சியம் ஆலயம் 

****

சொற்பொழிவு : சென்னையிலிருந்து பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன்

தலைப்பு — இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா- 2 ம்பகுதி

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு- கணினி அறிஞர் ராஜு கந்தசாமி அவர்கள்

தலைப்பு- AI Tamil

RAJU KANDASAMY

Innovative tech enthusiast and strategist with experience in Generative AI, XR, Digital Twins and industrial robotics. Vast experience in building and upscaling autonomous teams, setting up practices and product management. Tech innovator with 3 US patents granted in XR, 4 more patents filed. Built a tech start-up from the ground up and successfully handled assignments in setting up new product development teams. Skilled in real-time high-transaction rate enterprise systems and managing development teams. Specialized in setting up products and product teams from scratch and scaling them up.

  • Top skills

Generative AI • Large Language Models (LLM) • Extended Reality • Game Development • Reinforcement Learning

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, July 27, 2025, Programme, 

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்! (Post No.14,807)

ஞானமயம் வழங்கும் 27-7-2025  உலக இந்து செய்திமடல் (Post No.14,807)

Written by London Swaminathan

Post No. 14,807

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 27-ம் தேதி 2025-ம் ஆண்டு .

(compiled from popular Newspapers of India)

முதலில் இந்தியச் செய்திகள்!

அமர்நாத் யாத்திரை

அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமர்நாத் யாத்திரை 2025 ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடைகிறது. இந்த புனித யாத்திரை 37 நாட்கள் நடைபெறும். இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளதாவது:

யாத்திரை தொடங்கியதிலிருந்து புனித குகை ஆலயத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இதன் மூலம் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

இந்த புனித பயணம் அனைவருக்கும் அமைதி, வலிமை மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும் என்று மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளார்.

********

கன்வர் யாத்திரை

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

ச்ராவண மாதத்தை முன்னிட்டு ஹரித்வார் கங்கை நதியில் கன்வர் யாத்ரீகர்கள் புனித நீராடி வருகின்றனர்.

ச்ராவண  சிவராத்திரி மற்றும் கன்வர் யாத்திரையின் இறுதி நாளையொட்டி ஹரித்வாரில் ஏராளமான யாத்ரீகர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். கங்கையில் சேமித்த புனித நீரை கன்வர் என்று அழைக்கப்படும் காவடியில் சுமந்து சென்று சொந்த ஊர்களிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வது வழக்கம்

*****

இனி மாநிலச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே. கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

அவர் சொல்லியிருப்பதை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையை ஒட்டி பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த குவிந்ததால் ஸ்ரீரங்கம் பகுதிகள் திணறியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்

ராமேஸ்வரத்தில் காலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் திருக்குளம் பகுதியில், ஏராளமானோர் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து வழிபடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததந்தனர்.

.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோதையார், பரளியார் ஆகிய நதிகள் இணைந்து தாமிரபரணியாக உருவெடுக்கும் “குமரி சங்கமான” மூவாற்று முகம் ஆற்றோரம் இன்றஆற்றோரம் இன்று ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

*****

பிரதமர் நரேந்திர மோடி விஜயம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோவிலுக்கு விஜயம் செயதார்

சோழர்களின் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இந்து மன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்

. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்

****

1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பாக, 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

-விநாயகர் சதுர்த்தி நாளில், வீதிகள் தோறும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். வரும் ஆக.,27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிம்ம வாகனம், சிவ பார்வதி, முருக விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அன்ன வாகனம், விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில், 3 அடி முதல், 11 அடி வரையில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

****

சபரிமலையில் விமான நிலையம்.. 3500 அடி ரன்வேயுடன்.. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கேரள மாநில அரசு,

 மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பத்தனம்திட்டா அருகே செருவல்லியில் இந்த விமான நிலையம். அமையும்.

திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

புதிய விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை மற்றும் அதே அளவுள்ள டாக்ஸி பாதை இருக்கும்.

பயணிகள் முனையத்தின் வடிவமைப்பில் இரண்டு பல மாடி வளைவு அமைப்பு (Multiple Apron Ramp System) கொண்ட ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும்..

நீண்ட தூரம் செல்லும் பெரிய ரக விமானமான போயிங் 777-300 மாதிரி விமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான விமானங்களையும் கூட கையாளக் கூடிய வகையில் விமான நிலையம் அமையும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. பயணிகள் கட்டிடம் , தனி சரக்கு முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*****

மதுரை ஆதீனத்துக்கு திராவிட போலீஸ் தொல்லை

பாரதீய ஜனதா  கட்சியின்  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது  திமுக அரசு.

இப்படி தேவையற்ற மனுக்களைப் போட்டு இந்து மதத் தலைவர்களையும் நீதிமன்ற நேரத்தையும் அவமதிக்கும் வழக்கத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும், உடனடியாக மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் காவல்துறை மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

****

ஆடி அமாவாசை..

ஓணம் திருநாளை முன்னிட்டு 15 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு  6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு கேரள அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும்

அதில் ½ லிட்டர் தேங்காய் எண்ணெய், ½ கிலோ சர்க்கரை, ½ கிலோ பாசிப்பருப்பு, சேமியா பாயசம் மிக்ஸ் பாக்கெட், மில்மா நெய் 200 கிராம், முந்திரி பருப்பு, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, தேயிலை, துவரம் பருப்பு, உப்பு தூள் உள்பட 15 பொருட்கள் அடங்கி இருக்கும்.

அத்துடன் மாநிலத்தில் பல இடங்களிலும் ஓண சந்தைகள் திறந்து காய்கறிகள், பழங்கள், நேந்திரங்காய் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.

****

அடுத்ததாக வெளிநாட்டுச் செய்தி .

ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவிலில் இனவெறி வாசகம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

 ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

 இந்த தாக்குதல்,  வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்

 ****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, World Hindu News, 27 July 2025, Broadcast

ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம் (Post No.14,806)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 806

Date uploaded in London – 28 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-7-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை 

ஆலயம் அறிவோம்

ஶ்ரீ வாஞ்சியம்

ஆலயம் அறிவோம் நிகழ்ச்சி. வழங்குவது

பிரஹன்னாயகி சத்யநாராயணன்

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி

தெற்றுஞ் செஞ்சடைத் தேவர்பிரான் பதி

சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்

பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் தென்கரைத் தலங்களில் 70வது தலமாக அமைந்துள்ள திருவாஞ்சியம் திருத்தலமாகும்.

இந்தத் தலம்  திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமங்கள் :  ஶ்ரீ வாஞ்சியேசுவரர், வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர்

அம்மன் : மங்களாம்பிகா, மங்களநாயகி, வாழவந்த நாயகி

தல விருட்சம் : சந்தனம்

தீர்த்தம் : குப்த கங்கை,  இமய தீர்த்தம்

ஆகமம் : காமிக ஆகமம்

காசியை விட வீசம் அதிகம் என்று புகழப்படும் இத்தலம் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

யமன், தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் அனைவராலும் வெறுக்கப்படுவதால் தனது பணி காரணமாக அமைந்துள்ள தோஷத்தை நீக்கவும் தான் மன அமைதி இழந்து தவிப்பதை நீக்கவும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவரும் மனம் இரங்கி யமனைத் திருவாஞ்சியம் சென்று வழிபடுமாறு கூறி அருளினார்.

உடனே யமனும் இங்கு வந்து தவமிருந்து சிவபெருமானிடம் தமது குறைகளை முறையிட்டு வழிபடவே சிவபிரான் யமனை இந்தத் தலத்தின் க்ஷேத்திரபாலகனாக நியமித்தார்.

அத்துடன் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தத் தலத்திற்கு வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,இங்கு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக் காலத்தையும் தருமாறும் யமனுக்கு உத்தரவிட்டார். இந்தத் தலத்தின் ஒரு சிறப்பு  முதலில் யமனை வழிபட்ட பின்னரே சிவபிரானை வழிபடும் மரபாகும்.

இங்கு யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். எதிரே யமதீர்த்தம் உள்ளது. மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் மகத்தில் தீர்த்தம் இருக்கும். இரண்டாம் நாள் பரணி அன்று ஸ்வாமி யமதீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பது மரபாகும்.

இத்தலம் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

திருமால் பூமிதேவியைத் தழுவிக் கொண்டதால் அவருடன் ஊடல் கொண்ட லக்ஷ்மி அவரை விட்டுப் பிரிந்தாள். லக்ஷ்மியை அடைவதற்கு திருமால் தவம் செய்த இடம் நாரணமங்கலம் என்ற இடமாகும், இது ஊருக்கு மேற்கே இரண்டு மைலில் உள்ளது.

லக்ஷ்மி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த இடம் அச்சுதமங்கலம் ஆகும்.

திருமாலையும் லக்ஷ்மியையும் சேர வைத்த பெருமை இத்தலத்திற்கே உண்டு.

இங்குள்ள கருவறுத்தான் சந்நிதியில் நந்தி மட்டும் உண்டு.

பண்டைக் காலத்தில் இந்தத் தலம் மேற்கு முகமாக இருந்ததென்றும், ஒருவர் பொய் பிரமாணம் செய்ததால் ஸ்வாமி கிழக்கு முகமாகத் திரும்பி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ராஜகோபுரத்தை அடுத்து கோவிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் எமதர்மராஜாவின் சந்நிதி உள்ளது. மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எம வாகனத்தில் சிவபிரான் ஊர்வலம் செல்கிறார்.

யமனுக்கும் பைரவருக்கும் அதிகாரம் இல்லாத தலம் இது.

கிரகண காலத்தில் அனைத்துத் தலங்களின் நடையும் அடைக்கப்படும்.

ஆனால் இங்கு மட்டும் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறும்.

எமதர்ம ராஜாவின் சந்நிதிக்கு முபாக பலிபீடமும் நந்தியும் உள்ளன.

அடுத்து வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது  வலது புறம் அபயங்கர விநாயகரும் இடது புறம் பால முருகனும் உள்ளனர்.

இடது புறத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. கொடி, பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்லும் போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும் இடது புறம் சுப்ரமண்யரும் உள்ளனர்.

மூலவரின் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர்.

இடது புறம் நடராஜர் சந்நிதி உள்ளது.

இந்தத் தலத்தில் ஶ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி, சோமாஸ்கந்த மூர்த்தி, வெண்ணெய்ப் பிள்ளையார், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர், பிருத்வி லிங்கம்,அப்பு லிங்கம், மஹாலக்ஷ்மி, தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாய லிங்கம், தக்ஷிண கைலாஸ நாதர், ஸரஸ்வதி, சனீஸ்வர பகவான், ஷட் லிங்கம், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், ஆனந்த கூபம், பைரவர், நட்டுவன் பிள்ளையார், மங்களநாயகி அம்மன், வாழவந்தாள் என்னும் உற்சவ மூர்த்தி சந்நிதிகளையும், தல விருட்சமான சந்தன மரங்கள்,, தேரடி மண்டபங்கள், சந்தியாவந்தன மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்; முறைப்படி வழிபடலாம்.

ஶ்ரீ வாஞ்சியத்தில் யமதர்மன் ஸ்திரமாய் இருக்கிறார். யம பயம் நீங்க இந்தத் திருத்தல வழிபாடு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மங்களாம்பிகையும், ஶ்ரீவாஞ்சியேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

 –subham—

 tags-ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம் 

அழிந்து வரும் தரிசு நில இயற்கைக் காட்சி! “பேட்லேண்ட்ஸ்” (BADLANDS) Post.14805

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,805

Date uploaded in London – 28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

அழிந்து வரும் தரிசு நில இயற்கைக் காட்சி! “பேட்லேண்ட்ஸ்” (BADLANDS) 

ச. நாகராஜன்

அருமையான ஒரு சயின்ஸ் ஃபிக் ஷனுக்கான காட்சியை அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோடா மாநிலத்தின் பேட்லேண்ட்ஸ் (BADLANDS) பகுதியில் காணலாம். இங்கு வாழ்ந்த பூர்வகுடியினரான சியோக்ஸ் இந்தியர்கள் (SIOUX INDIANS) இதற்கு மகோ சிகா (MAKO SICA) என்ற பெயரைச் சூட்டி இருந்தனர். மகோ சிகா என்றால் மோசமான நிலம் என்று பொருள்.

இது 6000 சதுரமைல்களைக் கொண்ட பிரம்மாண்டமான பரப்பாகும்.

முதலில் ‘பேட்லேண்ட்ஸ்’ தெற்கு டகோடாவில் ஒய்ட் ரிவருக்கு (White River) அருகில் இருந்தது. 1978ல் இது பிரம்மாண்டமான நேஷனல் பார்க் ஆனது.

தியோடர் ரூஸ்வெல்ட் நேஷனல் பார்க் சுமார் 110 சதுரமைல் பரப்பளவில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட் (1858-1919) இதை வெகுவாகப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை கடல் ஆக்கிரமித்திருந்தது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் முகடு மேலே புடைத்து எழவே பாறைகளால் ஆன மலைப் பகுதி ஒன்று உருவானது. இது கடலை நொறுக்கி வீழ்த்தி மேலெழும்பி மரங்கள், புல்வெளி நிறைந்த அழகான காடு ஒன்றை உருவாக்கியது.

இங்கு பிரம்மாண்டமான மிருகங்கள் வாழ்ந்தன. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்று ப்ரோண்டோதெரியம் (BRONTOTHERIUM) என்ற மிருகமாகும். எட்டு அடி உயரமுள்ள இது தூண்கள் போன்ற நான்கு கால்களுடன் நடந்து சென்றது. இதன் தலையில் அமைந்துள்ள கொம்பு உச்சியில் இரண்டாகப் பிளந்து காட்சி அளித்தது,. இதன் அளவில் பாதி அளவு இருந்த இன்னொரு மிருகம் மெஸோஹிப்பஸ் என்று அழைக்கப்பட்டது.

உறைய வைக்கும் குளிரில் வெள்ளமென பாய்ந்தோடும் நதி இந்தப் பகுதியை அழியக் கூடிய பகுதியாக மாற்றியது. தாவரங்கள் இல்லாத காரணத்தால் மலையில் இருந்த பாறைகள் தொட்டாலேயே உதிரும் நிலைமைக்கு வந்தன.

வருடாவருடம் பெய்யும் மழை இந்தப் பகுதியைச் சிறுகச் சிறுக சிதைக்கவே ஏராளமான நீரோடைகளும் ஆறுகளும் ஆங்காங்கே உருவாக ஆரம்பித்தன.  வெள்ளை நதி எனப்படும் ஒயிட் ரிவர் (W(hite River ) இங்கு உருவான ஒரு நதி தான். வெளிறிய வண்டல்கள் குழைந்து கரையாமல் இருக்கவே அப்படியே இது நதி நீராகப் பாய்ந்தது.

ஒரு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த விரியன் பாம்புகள் மட்டும் தான் இந்தப் பகுதியில் வாழ்ந்தன. சில கொறிக்கும் விலங்குகளும் இங்கு வாழ ஆரம்பித்தன.

அழிந்துக்கொண்டே வரும் மிருகங்கள், பாழாகிப் போகும் இயற்கையான நில வளம் – இவற்றை எப்படிப் பாதுகாப்பது?

இதைப் பாதுகாக்க 1963ல் இங்கு 50 காட்டெருதுகள் கொண்டு விடப்பட்டன.  ஆயிரத்திதொள்ளாயிருத்து எண்பதுகளில் சுமார் 300 விலங்குகள் இங்கு வாழ்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகளும் இங்கு கொண்டு விடப்பட்டன. அரிய மான் இனம் ஒன்றும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பயிர்த் தொழில் இங்கு தடை செய்யப்பட்டது.

ஒருவழியாக அழிந்து கொண்டிருந்த இந்தப் பகுதியை அழியாத இயற்கை வளம் நிறைந்த காட்சிகள் கூடிய நிலப்பகுதியாக இருக்க வைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

இந்தப் பகுதியின் அருமையை அறிந்தவர்கள் உலகெங்கிலுமிருந்து இப்போது திரளாக இங்கு வந்து பேட்லேண்ட்ஸ் தேசியப் பூங்காவைப் பார்த்து மகிழ்கின்றனர்!

உலகின் இயற்கையான அதிசயங்களுள் ஒன்று மகோ சிகா  அதாவது பேட்லேண்ட்ஸ்!

**

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!

DINAMALAR REPORT

POSTED BY LONDON SWAMINATHAN

ஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது . ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம். அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம். என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர் தமிழக நீதித்துறையில் கவனிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் ஜி ஆர் சுவாமிநாதன்.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாக பணிபுரிகிறார். மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரிடம் நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு ‘நான் மதரீதியாக, ஜாதி ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் மதரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு வாஞ்சிநாதன், ” உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும். நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எழுத்து பூர்வமாக பதில் அளிக்கிறேன்,” என்று தெரிவித்திருக்கிறார். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறித்து இந்த வாஞ்சிநாதன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரம் சூடு பிடித்துள்ளது.

தற்போது வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும், ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, சிடி செல்வம், கலையரசன், சசிதரன், அரி பரந்தாமன், அக்பர் அலி, விமலா, எஸ் எஸ் சுந்தர் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படபோவதாக அறிவித்திருக்கிறார்கள்.

எளிய குடும்பம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரிகளுக்கு ஆதரவானவர், குறிப்பிட்ட சாதி, இனங்களுக்கு ஆதரவானவர் என்று குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக படித்து சென்னையில் கண்ணன் என்ற மூத்த வழக்கறிஞரிடம் பணிபுரிந்தவர். இந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர்தான் பிற்காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தார். முதன் முதலில் நீதிபதியாக இருந்த காலத்தில் தனது சொத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட முதல் நீதிபதி இவர் தான்.

ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருட காலத்தில் சுமார் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி சந்துரு 95,607 வழக்குக்கு தீர்ப்பு வழங்கியதை விட அதிகம். ‘வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளின் கோபம் தற்காலிகமானது தான். வழக்கு முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு இருக்கும்”, என்று சொன்னவர் ஜி ஆர் சுவாமிநாதன். ‘நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்ல; நீதியே கடவுள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னவர்.

என்ன நியாயம்

இப்படி எல்லாம் சொன்ன நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது ஒட்டுமொத்தமாக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எதிர்ப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகிறது. தாங்கள் விரும்பிய தீர்ப்புகளை வழங்கினால் அவரை நீதி காவலர் என்று சொல்லுவதும், நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கினால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவதூறு பரப்புவதும் எந்த வகையில் நியாயம்?

ஒருவர் வழக்கறிஞராக படித்து பணியாற்றி குறிப்பிட்ட சித்தாந்தம் உடைய கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராகி, அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து, பின்னர் நீதிபதிகளாக மாறிய பின்னரும்உடை மாறினாலும் உணர்வில் கலந்த சித்தாந்தத்தின் பக்கம் இருந்து, சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை தீர்ப்புகளாக வழங்கிய பெருமக்கள். பல தீர்ப்புகளை அரசுக்கு ஆதரவாக வழங்கிய நீதிபதிகளை நாடே அறியும்.

குறிப்பிட்ட பல வழக்குகளுக்கு நள்ளிரவில் நீதிமன்ற நீதிபதிகளின் வீட்டு கதவுகள் திறக்கப்படுவது, ஒரே இரவில் அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவது சாதாரண ஏழை குடிமக்கள் வழக்காடிகளுக்கு கிடைக்குமா என்றால் இல்லை என்பது நிதர்சன உண்மை . நீதித்துறையையும் காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து எப்படி நடத்தினார்கள் என்பதற்கு உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

வருத்தம்

ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் நீதிபதிகள், அவர்கள் கொடுத்த தீர்ப்பின் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும், அது குறித்து எல்லாம் எனக்கு கோபம் இல்லை. தமிழகத்தில் தற்போது நடக்கக்கூடிய படுகொலைகள் போதை கலாச்சாரம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது, இயற்கை வளச்சுரண்டல்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அதிகரித்து வரும் பாலியல் வக்கிரங்கள், என எவ்வளவோ நடப்பதை எல்லாம் தங்கள் கண்ணில் படாதது போல, காதுகளில் கேட்காதது போல வாய் மூடி மவுனிகளாக இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இதை எழுதுகிறேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரி ஆதரவாளரா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவரா? என்றால் இல்லை. பல இடங்களில் கம்யூனிச சித்தாந்தங்களையும் ஈ.வே.ராமசாமி போன்றவர்களையும் குர்ஆன், பைபிள் போன்ற மத நூல் கருத்துக்களையும் உயர்வாக பேசி இருக்கிறார்.

வழக்காடியவர்

பெருமாள் முருகன் என்கின்ற எழுத்தாளர்’ மாதொருபாகன்’ என்ற நூலை எழுதியது கொங்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஒரு பிரிவினர் குறித்து அவதூறாக நூல் எழுதுகிறார். பல்வேறு சாதி, சமூக அமைப்புகள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி, கடையடைப்பு என கொந்தளிப்பான நேரத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2015 -ஜன.,12ல் பெருமாள் முருகனை கூட்டத்திற்கு வரவைத்து, டிஆர்ஓ பேச்சு வார்த்தை நடத்தினார்.

கூட்டத்தில் ”மாதொருபாகன் நூல் பிற்காலத்தில் அச்சிடக் கூடாது. அப்படி அச்சிட்டாலும் திருச்செங்கோடு குறித்தும், குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாக எழுதிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறக்கூடாது. ஏற்கனவே அச்சிட்ட நூல்களை திரும்ப பெற வேண்டும்” என்று கூறி கையெழுத்து பெருமாள் முருகனிடம் வாங்கியது குறித்து பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று வருத்தத்தோடு பதிவு செய்த நேரத்தில் பெருமாள் முருகனுக்கு எதிரான நடவடிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது, சமாதான கூட்டம் என்கின்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து போல் அரசு நிர்வாகம் செயல்படக்கூடாது அவருக்கு துப்பாக்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்காடியது இந்த ஜி.ஆர் சுவாமிநாதன்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்ற ஆரா வெங்கடாசலபதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவற்றை மறுக்க மாட்டார்கள்.

சேக் முகமது என்கின்ற யானை பாகன் ‘லலிதா ‘என்கின்ற யானையை வளர்க்கிறார். வயதான யானை உடன் நலன் பாதிக்கப்படுகிறது. வனத்துறையினர் தனி நபர்கள் யானையை வளர்க்கக்கூடாது. லலிதா என்கின்ற யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய போது, ”யானையை சேக் முகமது என்ற பாகனிடமிருந்து பிரித்து செல்ல வேண்டாம்.பாகன் பராமரிப்பில் யானை இருக்க வேண்டும்.60 வயதாக இருக்கும் யானைக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முறையாக மருத்துவம் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் யானையை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது முறையாக உணவு வழங்கி ஓய்வெடுக்க செய்ய வேண்டும். தனி நபர்கள் யானைகள் வளர்க்கக்கூடாது என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும்” என்று தீர்ப்பு கொடுத்தார்.

‘ஒரு நபர் ஹிந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறி விடுகிறார். ஹிந்துவாக இருந்தபோது இந்து பெண்மணியோடு திருமணம்; பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு இஸ்லாமிய பெண்மணியோடும் திருமணம் செய்கிறார். இஸ்லாமிய மத மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார். இறந்த பிறகு ஹிந்து முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதத்தை சார்ந்த மனைவி உரிமை கோருகிறார். இஸ்லாமிய மனைவி இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உரிமை கோருகிறார்.

எந்த மத சம்பிரதாய முறையில் அடக்கம் செய்வது என்று உரிமை கோரக்கூடிய விஷயத்தில். ஹிந்து மனைவி வீட்டில் இறந்த கணவரை வைத்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொள்ளுங்கள்; பின்னர் இறந்த கணவர் உடலை இஸ்லாமிய மத மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் இஸ்லாமிய மதப் பழக்கத்தின்படி அவர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தி கொள்ளட்டும், அடக்கம் செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பு கொடுத்தவரும் இவரே.

ரத்து

சவுக்கு சங்கர் விஷயத்தில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்தது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தான். சவுக்கு சங்கர் நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார். ”மனுதாரர் எப் ஐ ஆர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லை. ஜாமின் மட்டுமே கேட்கிறார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை .கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.சில கருத்துக்களை தெரிவித்ததற்காக சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம். போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில் நிலைமை படு மோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு தடுக்கலாம். அதற்கு எளிதாக ரிமாண்ட் செய்ய மறுக்கலாம். மனுதாரர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.சில கருத்துக்களை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்கு போடுவது என்பது சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம். இதில் விசாரணை என்பது ஒரு பொருளும், கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறுகின்றது” என்றார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று சொல்லி குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

மறதி

என்னை நீதிமன்ற அறையில் யாரும் சந்திக்க வர வேண்டாம்; நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். வலதுசாரி இயக்கத்தை சார்ந்தவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் நாளை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் அழைத்தாலும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்த கருத்தை லாவகமாக இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய மாநாடுதான் கொரோனா நோய் பரவலுக்கு காரணம் என்று பல வெளிநாட்டைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது அவர்களுக்கு பிணை வழங்கியது இவரே.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 70 வழக்குகளை ரத்து செய்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர். ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் திராவிடர் கழக உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தார்.

ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ பாதிரியார்’ திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. அமைச்சர் சேகரர் பாபு, மனோ தங்கராஜ் போன்றவர்கள் சுசீந்திரம் கோவிலுக்குள் போனால் சட்டை இல்லாமல் போக வேண்டும். ஆனால் நாங்கள் சர்ச்சுக்கு போகும் போது கோட்டு சூட், டை அணிந்து செல்வோம். எம்.ஆர்.காந்தி என்ற எம்எல்ஏ பாரதமாதா மீது செருப்பு போட்டு நடக்க மாட்டாராம். ஆனால் பாரத மாதாவால் நாங்கள் அசிங்கங்களில் இருந்து பாதுகாக்க சாக்ஸ் ஷூ அணிந்து செல்வோம்” என்று பேசியவுடன் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றம் நாடிய போது ‘கொரோனா வந்த சூழலில் 269,143,506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ் ‘ வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்தார். மற்றபடி,’மத நம்பிக்கை சீர்குலைத்தல் இரு பிரிவினருடைய மோதல் உருவாக்குதல் பிரிவினை தூண்டுதல் 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) இவற்றை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு வெறும் காலுடன் நடப்பவர்களை கேலி செய்வது, இந்த தேசத்தை அவமதிப்பது போன்ற வற்றை ஏற்றுக்கொள்ள இயலாது’ என்றார்.

கலெக்டர்களுக்கு அறிவுரை

திருநெல்வேலி தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்குகிறது என்று தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என்று முத்தாலங்குறிச்சி காமராஜ் என்ற எழுத்தாளர் வழக்கு தாக்கல் செய்கிறார். வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2024 நவ.,11ல் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரடியாக ஆய்வுக்கு செல்கிறார்கள். மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நீதிபதிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆய்வுக்கு சென்ற நீதிபதிகளோ அங்கு செல்லாமல் மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, சத்திரம் பொது குடியிருப்பு, குறுக்குத்துறை முருகன் கோவில் என்ற பகுதிகளுக்கு சென்று கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு ராமயன்பட்டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு,” யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறீர்கள்; தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கி வந்தனர்

நீர்நிலை காவலர்கள்

இதேபோல தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், கொத்தையம் அருகே வெடிக்காரன் வலசு’அரளிகுத்து குளம் ‘என்ற நீர் நிலையில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இரு விவசாயிகள் நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் அரளிகுத்து குளத்தை பாதுகாத்து இந்த பகுதி விவசாயத்திற்கு உதவி புரிய வேண்டும் என்று வழக்கு தொடுக்க, இதே நீதிபதிகள் நேரடியாக கள ஆய்வு செய்கிறார்கள். உடன் மாவட்ட கலெக்டர் மற்றும் பதிவுத்துறை ஐஜி அரசுத்துறை அதிகாரிகள் செல்கிறார்கள்.

” கண்ணுக்கு முன்னால் தெரியும் நீர்நிலை அரளிக்குத்து குளத்தை தரிசு நிலம் என்று மாற்றப்பட்டது எப்படி? பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போது சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யாமல் பொய்யாக ஆவணம் எப்படி தாக்கல் செய்தீர்கள்” என்று மாவட்ட கலெக்டரை கண்டித்து நீதிமன்றம் ‘அரசினுடைய ‘சிப்காட் ‘திட்டத்திற்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் நீர்நிலையை பாதுகாக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. உடனடியாக அரளி குத்து குளத்தை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய ‘நீர்நிலை காவலர்கள்’ இவர்கள்.

ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழநியில் புனிதமான வையாபுரி குளத்தில் ஆஸ்பத்திரி ஹோட்டல்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் எல்லாம் கலக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் வையாபுரி குளத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் வகையில் வையாபுரி குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் யாரும் சொல்ல முடியாத தைரியமான உத்தரவை பிறப்பித்தவர் ஜி.ஆர் .சுவாமிநாதன்.

பாராட்டு

போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த வழக்கு – டேவிட்சன் ஆசிர்வாதம் குறித்து பாஜவின் அண்ணாமலை குற்றம் சாட்டிய போது ” அந்த வழக்கை முழுமையாக விசாரித்து பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் காவல் கமிஷனராக மதுரையில் இருந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர். அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது” என்று கூறியவர்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் ஜாதி ரீதியான பிரச்சனை-பட்டியல் மக்களுக்கு எதிராக தீண்டாமை சுவர் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். இது இரண்டாவது வைக்கம் போராட்டம் என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டார்.

அந்த சமயத்தில் அஸ்ரா கார்க் மதுரை மாவட்ட எஸ்பி ஆக இருந்தார். சின்மயா சோமசுந்தரம், பொன் கருணாநிதி ஆவின் முன்னாள் மேலாளர் ஆதிமூலம் ஆகியோரோடு பட்டியல் மக்களை ஆலையத்திற்குள் அழைத்துச் சென்ற நபர்களில் ஒருவன் நான் என்கின்ற அடிப்படையில் இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற பின்னர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக முத்தாலம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பல ஆண்டு மூடப்பட்ட கோவில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரிவினர் நீதிமன்றத்தை நாடும்போது’ கோவிலை பூட்டி வைப்பது என்பது கடவுளை சிறையில் வைப்பதற்கு சமம் கோவில் திறக்கப்பட வேண்டும். வழிபாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தீர்ப்பு கொடுத்தவர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.

சந்தேகிக்கிறேன்

இதுபோல் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு வாகனங்களில் வருபவர்கள் பாஸ் குறித்து வழக்கு விசாரிக்கும் போது மற்ற கட்சி மாநாடுகளில் பங்கேற்பவர்களுக்கு இதுபோல் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்களா ? அப்படி வண்டி வாகனங்களில் வருபவர்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை மதுரைக்கு வந்த பிறகு தேவையான விவரங்கள் கேட்கலாமே என்று கேட்டார். உடனே சங்கிகளின் முருகன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என்று அவதூறு கிளப்பியவர்களும் இவர்களே.

இயற்கையை பாதுகாப்பது, விலங்குகள் நலனில் அக்கறை, மதங்களைக் கடந்து மனிதத்தோடு தீர்ப்பு வழங்குதல், மத மோதல் தடுப்பது. நாட்டுப்பற்று வெளிப்படுத்துவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிபணிய மறுப்பது என நீதியின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கிய ‘நீதி காவலரை’ பதவியில் இருந்த போதும் பதவிஓய்வின் பிறகும் சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை செயல்படுத்திய முன்னாள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக வன்மத்தோடு மிரட்டும் தொணியில் அவதூறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.

திராவிட கம்யூனிச இந்து மத வெறுப்பு என எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு பிரதமர் இந்து மத நம்பிக்கை தேச மதிப்பு மீது கொச்சைப்படுத்தல் என பேசிய பெருமக்கள் வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞரை முன் முகமாக வைத்து செய்யும் அரசியல், முன்னாள் நீதிபதிகள் மீதான மதிப்பை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கிறது. இவர்கள் நீதிபதியாக இருந்த போது எந்த எண் ணத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மதுரை ஆதீனம் குறித்து மற்றும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்துவதை முன்னெடுத்துச் செல்லும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவருக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பவர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் பயனடைந்தவர்கள் மற்றும் நீதியின் பக்கம் நின்று வழக்காடிய வழக்கறிஞர்கள், பதவியில் இருந்த முன்னாள் நீதிபதிகள் மற்றும் பொது மனிதர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டாம். அதே நேரத்தில் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக முன்னாள் நீதிபதிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது கண்டனத்திற்குரியது என்று கூறாதது ;அநீதிக்கு மறைமுகமாக மௌனமாக இருந்து ஆதரவு தெரிவிப்பது போல் இருக்கிறது. ஒரு நபரை எதிர்த்து இத்துணை பேர் குரல் கொடுப்பதிலிருந்து தெரிகிறது, ஏதோ விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்கு அரசு ஆதரவுடன் இவர்கள் செயல் படுகிறார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்.

உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

வல்லவர் எல்லாம் நல்லவரானால் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே….

நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே…. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.-இராம. இரவிக்குமார்

இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

MODI JI IN G K PURAM HINDU TEMPLE

DIKSHITAS WITH MODIJI 

GANGA KONDA CHOZA PURAM TEMPLE VISIT BY PM NARENDRA MODI.

சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று – மோடி பேச்சு

JULY 27,2025

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றார்.கங்கை கொண்ட சோழப்புரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார். அப்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கேட்ட பிரதமர் மோடி, சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது;வணக்கம் சோழ மண்டலம். சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. பாரத நாட்டின் வளர்ச்சிக்காக என் வேண்டுதலை சிவனிடம் வைத்தேன். 1000 ஆண்டுகள் நிறைவுசெய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை கண்டு வியந்தேன். சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.

“நமசிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க… இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க…” எனும் சிவபெருமானை வாழ்த்திப் போற்றும் பாடலை பாடியவர், சிவனின் தரிசனமும், சிவ முவக்கத்தையும், இளையராஜாவின் இசையும், ஓதுவார்களின் பாடல்களும் எனது ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான்

சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். நாட்டின் வளர்ச்சிக்காக, 140 கோடி மக்களின் நலனுக்காக சிவனிடம் எனது வேண்டுதலை வைத்தேன். ஆயிரம் ஆண்டுகள் நிறைவு செய்த பிரகதீஸ்வரர் கோயிலில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கைகொண்ட சோழப்புரம் கண்காட்சியை கண்டு வியந்தேன். சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமத்தேந். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.

சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கான எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழ இரு பெயர்களும் நாட்டின் அடையாளங்கள். பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கு முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை நிகழ்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. ராஜேந்திர சோழனிந் அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்ததோடு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

****

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

27 JULY 2025

கங்கை நீரைக் கொண்டு வந்தது மூலம் பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பிடித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது  பாரதப் பிரதமர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.

 வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், நமது  பாரதப் பிரதமர் மோடி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்.

தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம் இது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

******

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள்: மோடி அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “ராஜராஜ சோழன், அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

ராஜேந்திர சோழனின் 1,005-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத்தொடங்கிய 1000-வது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச்சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா்கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை (ஜூலை 23) மாலை தொடங்கியது.

–SUBHAM—

TAGS- ராஜேந்திர சோழன், சிலைகள்: சோழ சாம்ராஜ்யம், பொற்காலம் மோடி பேச்சு

Pictures of 2500 Indian Stamps!- Part 68 (Post No.14,804)

Written by London Swaminathan

Post No. 14,804

Date uploaded in London –  July 27, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 68

Pictures of 2500 Indian Stamps continued……………………

ENJOY GREAT SAINTS OF INDIA ON INDIAN MAPS.

DESIGNED BY LONDON SWAMINATHAN.

IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

HAVE YOU EVER SEEN 100 YEAR OLD POST CARDS?

–subham—

Tags- Indian stamps, on maps, Saints, designs, logos, 25,000, PART 68, POSTAL HISTORY, OLD POST CARDS

காளிதாசன் காவியங்களில் சிவபெருமான் -2 (Post No.14,803)

Written by London Swaminathan

Post No. 14,803

Date uploaded in London –  27 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part two

காளிதாசன் கடவுள் வாழ்த்தாக சிவனை வைத்த நூல்கள் :

ரகு வம்சம்

சாகுந்தலம்

விக்ரமோர்வசீயம்

மாளவிகாக்நிமித்ரம்

****

சங்க இலக்கியங்களில் சிவ பெருமான் கடவுள் வாழ்த்துள்ள நூல்கள்: – ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

சிவனுடைய மனைவியின் பெயர்களைக் காளிதாசன் குறிப்பிடும் இடங்களையும் நினைவிற்கொள்வது அவசியம் – அம்பிகா, அபர்ணா, பவானி, கெளரி, கபாலாபரணா / காளி, உமா. இதே போல தமிழ் இலக்கியத்திலும் உமா, காளி, துர்கா, கொற்றவை, காடுகிழாள்,  பழையோள் என்ற இடங்களில் கணவன் சிவன் என்பதையும் மறந்துவிடக்கூடாது .

****

சிவன்

அர்த்தேந்துமெளலின் – மேக 57.  பிறைசூடி ; அர்த்த இந்து = பாதி சந்திரன்

அநங்கசத்ரு- மன்மதனின் எதிரி

அந்தகாரி – உலககினை அழிப்பவர்

பூதாதிபதி – பூதங்களின் தலைவன்

சந்திர மெளலி  – பிறைசூடி

தூர்ஜதி-

இந்து மெளலி  – பிறைசூடி

கிரீச – மலைவாசி; இமயமலையில் வசிப்பவன்

ஹர- விக்னங்களை , எதிரிகளை அழிப்பவன்

மதநாந்தகர – மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

மஹேச- பெரிய கடவுள்

மஹேஸ்வர – பெரியோன்

ம்ருகாங்க மெளலி  –

நீலகண்ட – நீலமணிமிடற்றவன் , (மணிமிடற்றன்)

பசுபதி- பிராணிகளின் தலைவன்

பிநாகபாணி- பினாகம் என்னும் வில்லை உடையவன் பிநாகின்

புராரி –புரம் எரித்தவன்

சம்பூ

சங்கர- நன்மை செய் பவன்

சிவ- மங்களம்  உண்டாக்குபவன்

ஸ்மராரி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

ஸ்மராராதி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்

த்ரி லோசன –முக்கட் செல்வன்

த்ரி நேத்ர- முக்கட் செல்வன்

அயுக்ம நேத்ர- மூன்றாவது காண் உடையவர்

த்ரி புராரி-முப்புரம் எரித்தவன்

உமாபதி-உமையின் கணவன்

வ்ருஷ வாகன- விடை ஏறி 

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் ஒன்றரைக் கண் வாத்தியார் ஒருவர் இருந்தார் அவரை அரைப்பரமசிவம் என்று நாங்கள் கிண்டல் செய்வோம் ; அதாவது எங்களுக்குள் பேசிக்கொள்வோம் ; உண்மையில் நாங்கள் ஆசிரியரைக் கிண்டல் செய்த சொல் தேவாரத்தில் உள்ளது சிவகுக்குள்ள மூன்று கண்களை அர்த்தநாரி வடிவத்தில் காணும் பொது சிவனை ஒன்றரைக் கண்ணா என்று அப்பர் பாடுகிறார் இதைக் காளிதாசனும் பாடியிருக்கிறான்!

அம்மூவன்  அழகிய மூன்று கண்ணுடையோன்

உருத்திரங்கண்ணனார் – Mr திருவாளர் ருத்ராக்ஷ

பரிமேல் அழகர் – திருவிளையாடல் புராணத்தில் சிவனுக்கு பரஞ்சோதி கொடுத்த பெயர்

எண்குணத்தான் ஆகிய பெயர்களும் சிவன் பெயர்களே

திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத்தான் என்ற சொல்லுக்குப் பரிதியார் மட்டும், சிவன் என்று உறுதியாகக் கூறுகிறார் . எவரும் சமணர், புத்தர் என்று கூறவில்லை

காளிதாசன் சொல்லும் எட்டுக்குணங்களுக்கு  தேவார பாடல்கள் ஆதரவு கொடுக்கின்றன. அந்த எட்டு தண்ணீர், தீ, ஆகாயம், பூமி, வாயு, எஜமானன், சூரியன் சந்திரன்.  இவை ருத்ரா, சர்வா, பசுபதி, உக்ரா, அசனி, பாவ, மஹாதேவா மற்றும் ஈசான..

அஷ்டமூர்த்தி = அஷ்ட + மூர்த்தி, எட்டு வடிவம் கொண்டவன். ஐந்து பூதங்களும் சந்திரன், சூரியன், இயமானன் என்ற மூன்றும் சேர்ந்து எட்டு உருவில் உள்ளதையே அஷ்டமூர்த்தி என்பர்

அஷ்டமூர்த்தி என்பது காளிதாசன் சொன்ன சொல்   .

Eight forms has Shiva, lord of all and king:

And these are water, first created thing;

And fire, which speeds the sacrifice begun;

The priest; and time’s dividers, moon and sun;

The all-embracing ether, path of sound;

The earth, wherein all seeds of life are found;

And air, the breath of life: may he draw near,

Revealed in these, and bless those gathered here—Sakuntalam Drama

****

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருவரே என்று    குமார சம்பவ ஏழாவது காண்டத்தில் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார்

ஒரே இறைவன் மூன்றாகப் பிரிந்து மும்மூர்த்திகள் ஆகின்றனர்; அவர்கள் மூவரும் மாறிமாறி  முதலிடத்துக்கு வருவார்கள். ஒரு சமயம் விஷ்ணுவுக்கும் மேலாக சிவனும் ,இன்னும் ஒரு சமயத்தில் சிவனுக்கும் மேலாக விஷ்ணுவும் மற்ற ஒரு சமயத்த்தில் இவர்களுக்கு மேலாகப் பிரம்மாவும் வருவார்கள் என்கிறார் இவ்வளவு தெளிவாக மும்மூர்த்திகளையும் விளக்கியது காளிதாசன்தான் 7-44

तमन्वगच्छत्प्रथमो विधाता श्रीवत्सलक्ष्मा पुरुषश्च साक्षात् ।

जयेति वाचा महिमानमस्य संवर्धयन्त्या हविषेव वह्निम् ॥

சங்க இலக்கியத்தில் காளிதாசன்  பயன்படுத்திய  சொற்களையே சங்கப்புலவர் பயன்படுத்தினர்; யஜுர் வேத ருத்ரம்- சமகத்தில் எவ்வளவோ அடைமொழிகள் சிவபெருமானுக்கு இருந்த போதிலும் காளிதாசன் தேர்ந்தெடுத்ததை மட்டுமே தமிழ்ச் சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியது கவனத்திற்கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.

அவைகளைத் தொடர்ந்து காண்போம்  …..

To be continued…..

tags- காளிதாசன், காவியங்கள் ,  சிவபெருமான் -,part 2

அனைத்து மக்களையும் வாழ வைக்கும் கோவில்கள்! (Post No.14,802)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,802

Date uploaded in London – 27 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

அனைத்து மக்களையும் வாழ வைக்கும் கோவில்கள்! 

ச. நாகராஜன்  

இந்தியாவில் பதினெட்டு லட்சம் ஹிந்து கோவில்கள் உள்ளன. 

இவற்றில் 33000 கோவில்கள் மிக மிக விசேஷமானவை. 108 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்கங்கள், 108 வைணவ திவ்ய ஸ்தலங்கள், 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் என மகிமை வாய்ந்த தலங்களையும் அங்குள்ள கோவில்களின் பெருமையையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது.

நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் தனது சர்வே படி இவை இந்த தேசத்தின் ஜிடிபி-யில் 2.32 சதவிகிதமாக இருக்கிறது என்று கூறுகிறது.

ஹிந்துக்கள் 4.74 லட்சம் கோடி ரூபாயை ஒவ்வொரு வருடமும் மதம் சார்ந்த யாத்திரைகளுக்குச் செலவழிக்கின்றனர். இந்த யாத்திரைகள் எட்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் நல்குகின்றன.

இதில் அமர்நாத்திலும் வைஷ்ணவி தேவி ஆலயத்திலும் கிடைக்கின்ற பணத்தால் பயன் பெறுவோரில் 90 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள்.

சோம்நாத் ஆலயத்தில் கிடைக்கும் வருமானத்தில் 60 சதவிகிதம் முஸ்லீம்களுக்குச் செல்கிறது.

ஒரு சிறிய கோவில் கூட் சுமார் 25 பேருக்கு வேலை தருகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீல் சேர் உதவியை அளிப்போர் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். சந்தனம் விற்போர் மட்டும் ஒரு நாளைக்கு வெவ்வேறு ஆலயங்களிலிருந்து ஒரு நாளைக்கும் ரூ 300 முதல் ரூ 500 வரை சம்பாதிக்கின்றனர்.

இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டம். ஆழ்ந்து ஆராய்ந்தால் எத்தனை கோடி பேர் நமது ஆலயத்தினால் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கையைத்

தரும்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் கோவில்களால் ஆன்மீக உயரத்தில் ஏறுவோர் எத்தனை லட்சம் பேர்!

தங்களது பிரச்சினைகளுக்கு பிரார்த்தனையால் விடிவைக் காண்போர் எத்தனை லட்சம் பேர்!

இதையெல்லாம் கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. 

அளப்பரிய கோவில்களின் ஆற்றலுக்கு கும்பாபிஷேகம் இன்றியமையாதது. 

கும்பமானது சிவலிங்கத்தைப் போலவே தத்துவம், புவனம்,வர்ணம், பதம், மந்திரம்,கலை என்ற ஆறு அத்துவாக்களின் (அத்துவா என்றால் வழி என்று பொருள்) வடிவமாக உள்ள ஆற்றலுக்கெல்லாம் உறைவிடம். கும்பமானது கங்கை உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களும் நிறைந்தது. எல்லாத் தெய்வங்களும் நிறைந்தது.

 கும்பத்தின் உச்சி சாந்தியதீத கலை. முகம் சாந்தி கலை. மார்பு வித்யா கலை. உந்தி பிரதிஷ்டா கலை. முழந்தாள் நிவிர்த்தி கலை. 

புவனம் ரோமம், வர்ணம் தோல், மந்திரம் ரத்தம், பதம் நரம்பு, தத்துவம் எலும்பும் தசையும் – என இவ்வாறு கும்பம் அத்துவா வடிவாக இருக்கிறது.

 கும்பத்தைப் பட்டுத் துணியாலும் பருத்தியாலும் சார்த்ஜ்த்ஜி இருக்கின்றார்கள்.  கும்பத்தில் இருக்கின்ற செம்மண், கூர்ச்சம்,  அதைச் சுற்றிய நூல், கும்ப ரத்தினம், சுவர்ண புஷ்பம் எல்லாம் சப்த தாதுக்கள்.

நியாச மந்திரங்கள் அதற்கு உயிர். 

கும்பத்தின் அடியிலே ஆத்ம தத்துவங்களும், நடுவில் வித்யா தத்துவங்களும், உச்சியில் சிவதத்துவங்களும் பூஜிக்கப்படும்.

 கும்ப ரத்னங்கள் மனோன்மணி உள்ளிட்ட நவ சக்திகள் ஆகும்.

லம்ப கூர்ச்சம் இச்சா, ஞானக் கிரியைகளாகும்.

 கும்பத்தின் மேல் சுற்றப்பட்ட முப்புரிநூல் சரஸ்வதி,  லட்சுமி, ரௌத்திரி என்னும் சக்திகளாகும்.

இவ்வாறு கும்பமே சக்தி மயமாக இருக்கிறது.

 இந்தக் கும்பத்தில் ஆவாகனம் செய்து, மந்திர தியான வடிவில் நீர் முழுவதும் பரவியதாக பாவித்து அதை பிம்பத்திலும் கும்பத்திலும் அபிஷேகம் செய்து அந்த மூர்த்திகரம் பிம்ப கும்பங்களில் என்றும் விளங்கச் செய்வதே கும்பாபிஷேகம் ஆகும்.

 இப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டவுடன் அங்குள்ள விக்ரஹம் ஜீவ சக்தியைப் பெறுகிறது.

 கோவில் முழுவதும் தனிப் பெரும் ஆற்றலைப் பெறுகிறது.

அங்கு உள்ளே நுழைந்தவுடன் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நல்ல ஆற்றல் பக்தர்களின் உடலிலும் உள்ளத்திலும் பாய்கிறது.

இன்னும் உள்ளார்ந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் தீர்கின்றன. ஆன்ம முன்னேற்றம் சித்திக்கிறது.

 இப்படி பதினெட்டு லட்சம் கோவில்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் அதை உள்வாங்கிக் கொண்ட மக்களும் வாழும் தேசம் தெய்வ தேசம் என்பதில் என்ன ஐயம்!

பாரத நாடு பழம்பெரும் நாடு

நீர் அதன் புதல்வர்

இந்நினவகற்றாதீர் – மகாகவி பாரதியார்

(குறிப்பு: கும்பாபிஷேக தத்துவம் பற்றிய கூடுதல் விவரங்களை திருவாவடுதுறை ஆதீன (1961ம் வருட) வெளியீடான கும்பாபிஷேக தத்துவம் என்ற நூலில் காணலாம்.

***