

Post No. 14,975
Date uploaded in London – 12 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

YAJNA VARAHA/ BOAR SANSKRIT INSCRIPTION
ஏரான் வராஹ கல்வெட்டு(ERAN IN M. P.) மிகவும் அற்புதமான, புதுமையான கல்வெட்டு ஆகும். இது மத்திய பிரதேசத்தில் ஏரான் என்னுமிடத்தில் உள்ளது. சாதாரணமாக கல்வெட்டுகள் பாறைகளிலும் சிலைகளின் அடியிலும் இருக்கும். ஆனால் இந்த வராஹம் என்னும் காட்டுப்பன்றி கல்வெட்டு , அந்த வரஹத்தின் தொண்டைப் பகுதியில் காணப்படுகிறது. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய உருவம் 1500 ஆண்டுகள் பழமை உடைத்து. இதில் ஒரு தேள் இருப்பது மிகவும் புதிராக உள்ளது. தோரமான என்னும் மன்னர் பற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இது.
இதன் விவரங்களைக் காண்போம் :

பரிபாடல் பதினோராம் எண் பாடல் போலவே இதில் நிறைய வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன .பரிபாடல் நூ லி லுள்ள பாடலில் மிதுன ராசி, பங்குனி போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பயிலப்பட்டுள்ளன . இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் பங்குனி முதலிய விவரங்களுடன் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால் இது விருச்சிக ராசியன்று நிறுவப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது
பாரத தேசத்திலுள்ள பழமையான முக்கியமான கல்வெட்டு இது.; ராசிச் சக்கரம் என்பதைக் கிரேக்கர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்தார் கள் என்று பிதற்றுவோருக்கு பரிபாடல் நூலும் இந்தக் கல்வெட்டும் மரண அடி கொடுக்கிறது.
எதற்காக வராஹ அவதாரம் ? Geological Science Story

அசுரர்கள் பூமாதேவியைக் கடலில் ஒளித்து வைக்கவே அதைக் கடலில் இருந்து தோண்டி எடுக்க விஷ்ணு பகவான் மிகப்பெரிய வராஹ அவதாரம் எடுத்தார் வலிமையான மூக்கின் மூலம் பூமியை தூக்கி நிலை நிறுத்தினார். அது போல மன்னன் தோரமானன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்று கல்வெட்டு செப்புகிறது .
மச்ச, கூர்ம, வராஹ அவதாரங்கள் Geological Science Story
பூகர்ப்ப விஞ்ஞான விஷயங்களை பாமர மக்களுக்குச் சொல்லும் கதைகள் ஆகும் பூமி முதலில் நீரால் சூழப்பட்டு இருந்தது பின்னர் நிலம் தோன்றியது அதை விளக்கும் விஞ்ஞானக்கதை இது .
கல்வெட்டு விவரம்
மன்னன் குடும்பம் விஷ்ணு பக்தர்கள்; இதனால் வராஹ அவதார வடிவத்தில் தோரமான ராஜா விஷ்ணு பகவானுக்கு கோவில் எடுப்பித்தார் . அவருடைய சகோதரன் தான்ய விஷ்ணு ; அண்ணனைப்போலவே குணங்கள் நிறைந்தவர்; இவர்களுடைய தாத்தா ஹரிவிஷ்ணு . அவருக்கும் முந்தியவர் இந்திரா விஷ்ணு என்னும் பிராமண முனிவர் ஆவார் . நாற்கடலும் புகழ் பரப்பி போமி முழுதையும் வென்ற தோரமானான் பங்குனி தசமி திதியில் இதை ராகின ஏடு என்னுமிடத்தில் நிறுவினான் .
பூமியை வராஹ வடிவில் தூக்கி நிறுத்திய பகவான் வெற்றி வீரர். அவர் தன்னுடைய பலம் வாய்ந்த முகத்தினால் மலையாள பந்தாடினார் திரிலோக மாளிகையை நிலை நாட்டினார்
கோப்ராஹ்மணர்கள் மக்கள் அனைவரும் நலத்துடன் வாழ்க.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்று வாழ்த்துவது மரபு .
வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்
லாம்அரன் நாமமே
சூழ்க வையக
முந்துயர் தீர்கவே. 1
என்பது சம்பந்தர் தேவாரம் . ஆனால் பார்ப்பனர் என்பது புறநானூற்று வாழ்த்து இதையே சம்ஸ்க்ருதத்தில் கோ / பசு, ப்ராஹ்மண என்று பகர்வர்.
தேள் உருவம் ஏன்?
குப்தர் கால சிற்பிகள் மகா மேதாவிகள் . அவர்கள் வராஹத்தின் மாலையை மிகவும் நீளமாகச் செய்து பன்றியின் உடல் முழுதும் சுற்ற வைத்துள்ளார்கள்; அதில் இருபத்தெட்டு வட்டங்கள் உள. அவற்றில் ஒன்றில் தேள் உருவமும் ஏனையவற்றில் ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ளனர் 28-ல் மட்டும் தேள் இருப்பதால் அது பங்குனி தசமியில் விருச்ஸிக ராசி அன்று யக்ஞ வராஹ சிலை கோவில் எடுப்பிக்கப்பட்தாக கருதலாம் ஏனையவை 27 நட்சத்திரங்கள்!.
அற்புதமான பன்றி வடிவ கோவில் கல்வெட்டு இந்துக்களின் மகத்தான வான சாத்திர அறிவைக் காட்டுகிறது.


–Subham –
Tags- வராஹ வடிவ, அற்புத, சம்ஸ்க்ருதக் கல்வெட்டு, தோரமான மன்னன் , குப்தர் காலம்