Post No. 15,027
Date uploaded in London – 26 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தை நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்வது சம்பிரதாயமாக உள்ளது. இதற்குப் பலர் உரை எழுதியபோதும் பாஸ்கர ராயர் எழுதிய உரையே சிறந்தது . அதை கணேச அய்யர் என்பவர் நீண்ட விளக்கவுரையுடன் பதிப்பித்துள்ளார் . அதில் உள்ள பல சுவையான செய்திகளில் ஒன்று மனைவியின் பெருமையை பேசுகிறது சகல கலா வல்லுனரான அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தின் பெருமையைத் லலிதா தேவி தெரிவித்ததற்கு காரணம் அவருடைய மனைவியான லோபா முத்திரை என்று சொல்கிறது. வெற்றி அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் இருப்பது ஒரு பெண்தான் “Behind every successful man, there is a woman” என்ற ஆன்றோர் பொன்மொழிக்கு உதாரணமாக அமைகிறது இந்தக் கதை.
லலிதா சஹஸ்ர நாமத்திலுள்ள ஆயிரம் நாமங்களையும்
ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துடைய விஷ்ணு ரூபம் ), அகஸ்தியருக்கு உபதேசம் செய்தார்.
அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா மஹா பதிவிரதை; அதாவது கற்புக்கரசி; தேவிக்கு பன்னிரு பக்தைகள், சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் லோபாமுத்ரா .
லலிதா த்ரிசதியின் அவதாரிகையில் அம்பாள் ஹயக்ரீவரைப் பார்த்து த்ரிசதியை அகஸ்தியருக்கு உபதேசிக்கும்படி ஆக்ஞா பிக்கையில் அதற்கு லோபாமுத்ரையின் கணவராக இருப்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது
பத்ன்யஸ்ய லோபமுத்ராக்யா மாமுபாசுதேதி பக்திதஹ
அயம் ச னிதராம் பக்தஹ தஸ்மாத் அஸ்ய வதஸ்ய தத்
பொருள்
இவருடைய மனைவியான லோபாமுத்திரை என்னை விசேஷமான பக்தியுடன் வழிப்படுகிறாள் ; இவரும் என்னுடைய பரம பக்தர் ஆகையால் நீர் அதை இவருக்குச் சொல்லும்..
இதிலிருந்து அகஸ்தியரும் கு சத்யவான், நளன் போல மனைவியால் பயன்பெற்றது தெரிகிறது. அம்பாளை அடைவதற்கான 15 உத்திகளில் ஹாதி வித்யையில் சிறந்தவள் லோபாமுத்ரா.
அகஸ்தியரின் பெருமையை நாம் எல்லோரும் அறிவோம் ; புராதன இந்தியாவின் மாபெரும் என்ஜினீயர் ; பல் மொழி வித்தகன் ; மனு ஸ்ம்ருதி சொன்னதையும் மீறி கடல்கடந்து சென்று ஏழு தென் கிழக்காசிய நாடுகளில் இந்து கலாசாரத்தையும் மொழியையும் பரப்பியவர்
கங்கை நதியைப் பயனுள்ள பாதையில் திருப்பிவிடுவதற்குப் பல மன்னர்கள் முயன்றும் பலனளிக்க வில்லை அதே வம்சத்தில் வந்த பகீரதன் கடும் தவம் இயற்றி கங்கையை பாக்கித்தான் பக்கம் போகாமல் இந்தியாவுக்குள் திரும்பிவிட்டார். அதே போல காவிரி நதி கேரளா பக்கம் சென்று கடலில் விழுந்து வீணாகியது . அதைத்தடுத்து காவிரியைத் தமிழ் நாட்டின் பக்கம் திருப்பினார் அகஸ்தியர் . ராமபிரான் போன்றோர் அக்காலத்தில் தென் இந்தியாவுக்கு வருவத கு சாலை போட்ட முதல் என்ஜினீயர் அகஸ்தியர் விந்திய மலை வழியாகச் சாலை அமைத்து அதன் கர்வத்தைப் பங்கம் செயதார் என்று இதை புராணங்கள் வருணிக்கின்றன
அதுமட்டுமால்லாமல் பாப்புலேலேஷன் பிராப்ளம் POPULATION PROBLEM லாங்குவேஜ் பிராப்ளம் LANGUAGE PROBLEM போன்ற பிரச்சினைகள் சிவபெருமானை வாட்டி வதைத்தது உடனே அவரை சிவன் தென் திசைக்கு அனுப்பினார் அவர் பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தோரை தென்னாட்டிற்கு அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார் அதற்கு முன்னர் வடக்கு உயர்ந்து தென் திசை தாழ்ந்து இருந்தது ஏனெனில் வடக்கே ஜனத்தொகை பெருகியது.
அப்போது அகஸ்தியருக்கு மன உளைச்சல்கள் ஏற்பட்டது உங்களுக்கும் உமா தேவியாருக்கும் கல்யாணம் நடக்க விருக்கும்போது என்னை இப்படி தென்திசைக்கு ணைப்புவது நியாயமா? என்று கேட்க “கவலைப்படாதே மதுரையில் மீனாட்சி கல்யாணம் நக்கும்போது நீவீர் இதே காட்சியைக் காண்பீர் என்றார் சிவன். அது சரி, தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்ய்யுங்கள் என்றும் சொன்னீர்களே ; எனக்கு சம்ஸ்க்ருதம் மட்டும்தானே தெரியும் என்றார்
சிவன் சொன்னார் : இரு மொழிகளும் என்னிடமிருந்தே வந்தன; ஒரே அமைப்புடையவை. நீ எளிதில் கற்றுக்கொள்ளலாம் மேலும் என் மகன் முருகன் அங்கே இருக்கிறான் அவன் உனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பான் என்றார் சிவன். இதை அருணகிரிநாதர், பரஞ்சோதிமுனிவர், சிவஞான முனிவர், பாரதியார் ஆகியோர் பாடியதிலிருந்தும் அதற்கு முன்னால் காளிதாசன் பாடிய ராகு வம்சம் மூலமும் நாம் அறிகிறோம்.
பாண்டிய மன்னன் திருமாறனை வியட்நாகுக்கு அழைத்துச் சென்று இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார் வியட்நாமில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது ஸ்ரீமாறன் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுதான்.
இவ்வளவு பெருமைபெற்ற அகஸ்த்தியர் மிகவும் குட்டை; ஆனால் அவர் மணந்ததோ மத்தியப்பிரதேச மஹாராணி , பேரழகி லோபாமுத்ரா. அவள் பல கண்டிஷன்களைப் போட்டாள்; அதையெல்லாம் நிறைவேற்றிய பின்னர் அகத்தியரை மணந்து கொண்டாள். அவளைத் தென்னாட்டிற்கு அழைத்து வர அகஸ்தியர் த்ருண தூமாக்னி என்ற தொல்காப்பியனை மத்திய பிரதேச விதர்ப்ப தேசத்துக்கு அனுப்பினார் அவர்கள் மதுரையை நெருங்கி வருகையில் வைகை நதி வெள்ளப்பெருக்கு எடுத்ததால் அத்தொல்காப்பியர் என்னும் த்ருண துமாக்கினி ஒரு கம்பினைப் பிடித்துக் கண்டு RIVER CROSSING ரிவரை க்ராஸ் பண்ணலாம் என்றார்; அதில் அகஸ்தியர் குற்றம் கண்டு பிடித்ததால் தொல்காப்பியம் எழுதிய த்ருண தூமாக்கினியும் அகஸ்தியரும் ஒருவரை ஒருவர் சபிக்கவே அகஸ்தியம் அழிந்தது; இது புகழ்பெற்ற நச்சினார்க்கினியர் நமக்குத் தந்த தகவல்.
இவ்வளவு பின்னணி உடைய அகஸ்தியருக்குப் பல நூல்கள்களை உபதேசித்த ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசிக்கவில்லை அகஸ்தியர் வியந்தார் என்னிடம் குறையுளதோ; அல்லது குரு மறந்து விட்டாரோ அல்லது என்னுடைய பெயரில் அவளவு அலட்சியமா அல்லது உபதேசத்துக்குக் காலம் கனியவில்லையோ என்று எண்ணி எண்ணி பரிதவித்தார் .
அப்போது குரு ஹயக்ரீவர் சொல்கிறார்
லோபாமுத்திர பத்தேகஸ்த்ய
சாவதானமானா ஹா ச்ருணு
நாம்நாம் சஹஸ்ரம் யான்நோக்தம்
காரணம் தத் வாதாமி தே
லோபாமுத்ரையின் கணவனான அகஸ்தியனே கேள் ! கவனமாகக் கேள். இதுவரை சஹஸ்ர நாமத்தை உனக்கு நான் என் சொல்லவில்லை என்று சொல்கிறேன்
இதில்தான் முக்கிய விளக்கத்தைத் தருகிறார் உரைகாரர் ; அகஸ்தியரை அழைத்த ஹயக்ரீவர் “ஏ லோபமுத்ராவின் கணவரான அகஸ்தியனே கேள் என்று ஏன் சொன்னார் ? .
தேவியின் பன்னிரு சீடர்களில் ஒருவரான லோபாமுத்ரை என்பதால் உனக்கு ரஹஸ்யத்தைச் சொல்லப்போகிறேன் என்ற தொனி இதில் உள்ளது
அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்
ரஹஸ்யமிதி மத்வாஹம்
நோக்தவாம்ஸ்தே ந சான்யதா
புனச்ச பிருச்சஸே பக்த்யா
தஸ்மாத் தத் தே வதாம்யஹம்
அது ரஹஸ்யமென்று நினைத்துதான் நான் உனக்குச் சொல்லாமல் இருந்தேன். திரும்பவும் நீ பக்தியுடன் கேட்பதால் இதைச் சொல்கிறேன் என்கிறார் ஹயக்ரீவர்.
ஸ்ரீ வித்யை என்பது தேவியின் ரகசிய சக்திகளை விளக்கும் சாஸ்திரம் ஆகும்; இதை பன்னிரண்டு பேர் மட்டுமே விளக்கினார்கள் அவர்களில் அகஸ்தியரும் அவர் மனைவி லோபாமுத்ராவும் அடக்கம்.யார் அந்த 12 பேர்?
மனு: சந்த்ர குபேரச்ச லோபாமுத்ரா மன்மத
அக்ஸ்திரக்னி ஸூர்யச்ச இந்திர: ஸ்கந்த: சிவஸ்ததா
க்ரோத பட்டாராகோ திவ்யா துவாதசாமீ உபாசகாஹா
மனு, சந்திரன் குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகஸ்தியன், அக்கினி, சூர்யன், இந்திரன் ஸ்கந்தன், சிவபெருமான் , க்ரோத பட்டராகன் (துர்வாசர்); இவர்கள் அனைவரும் ஸ்ரீவித்யை எனப்படும் தேவி ரஹஸ்யங்களை அறிந்து உபாசித்து வருகிறார்கள்.
லோபாமுத்ரா லலிதா தேவியினுடைய சிஷ்யை, மஹா பக்தை ஆகையால் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் என்று லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லிக்கொடுத்தார் போலும்.
நமது காலத்தில் இதை ஆங்கிலத்தில் விளக்கியவர் ஆர்தர் ஏவலன் எனப்படும் சார் ஜான் வுட்றாப் ARTHUR AVALON ALIAS SIR JOHN WOODROFFE ஆவார் ; அவருக்கு முன்னர் பாஸ்கர ராயர் (1690-1785) சம்ஸ்க்ருதத்தில் உரை எழுதினார்
அவர் நாற்பதுக்கும் மேலான நூல்களை மேற்கோள் காட்டி உரை எழுதியுள்ளார்
அவருடைய உரையில் அகண்ட பாரத ஸ்லோகம் வருகிறது:
ஆ ப்ராஸ: காமரூபாத் த்ருஹிண சூதநத:
ப்லாவிதாத் ஆப்ரதீ சோ
காந்தாராத் ஸிந்து சாரத்ராத் ரகுவரசரிதாத்
ஆ ச சேதோ:ரவாசு:
ஆகேதாராத் உதீஸஹ துசின கஹிந்த::
சந்தி வித்வத் சமாஜா:
யே யே தான் ஏஷ யத்ன: சுகயது ஸமஜான்
கச்சமத் கர்த்து மீஷ்டே
கிழக்கில் பிரம்மபுத்ரா நதி காமரூப (Assam ) தேசம் வரையிலும் , மேற்கில் ஸிந்து நதி ஓடும் காந்தார (Afghanistan/Iran) தேசம் வரையிலும் தெற்கில் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்ட சேது (Rameswaram) வரையிலும் வடக்கில் பனி மூடிய கேதாரம் (Himalya) வரையிலும் எந்தெந்த வித்வத் சமாஜங்கள் இருக்கின்றனவோ அவைகளை என்னுடைய இந்த முயற்சியானது சுகம் அடைய செய்யட்டும் . மந்த புத்தியுள்ளவர்களைத் திருப்தி செய்ய யாரால்தான் முடியும்?
***
குரு/Sun சூரியன்; சீடன் Lotus தாமரை
தமிழில் உரை எழுதிய கணேச அய்யர் வேறு எங்குமில்லாத ஒரு உவமையை நமக்குச் சொல்கிறார். குரு என்பவர் சூரியன் போன்றவர் என்றும் அவருடைய உபதேசத்தினால் மொட்டு போல இருந்த சீடநின் அறிவு சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் என்றும் போதசாரம் நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறார்..
தொடரும்
TAGS- மனைவியின் பெருமை, லலிதா சஹஸ்ர நாமம், மனு, லோபாமுத்ரா, அகஸ்தியன்,