லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள் – Part 1 (Post No.15,113)

Written by London Swaminathan

Post No. 15,113

Date uploaded in London –  23 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரத்தினக் கற்களுக்கு உண்மையிலேயே நல்ல பலன்களைத் தரும் அற்புத சக்தி உண்டு என்பதை இந்துமத சாஸ்திரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றன . ரத்தினங்களைக் குறிக்கும் மணி என்ற சொல் வேதங்களிலேயே உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாராகமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதை நூலில் பல அத்தியாயங்களில் ரத்தினைக் கற்கள் பற்றிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன.

அகஸ்தியர் எழுதிய லலிதா நவரத்ன மாலை போல பாரதியாரும் பாரத மாதா நவரத்ன மாலை எழுதியிருப்பது இன்றுவரை அந்த நம்பிகை இருந்து வருவதற்குச் சான்றாக அமைகிறது

லலிதா நவரத்ன மாலையில் நவரத்தினங்களை வைரத்தில் தொடங்கி வைடூரியத்தில் முடிகிறது

1-வைரம்

2-நீலம்

3-முத்து

4-பவளம்

5-மாணிக்கம்

6-மரகதம்

7-கோமேதகம்

8-பதுமராகம்

9-வைடூரியம்

பாரதியாரும் இதே வரிசையில் பாரத மாதா நவரத்ன மாலையைப் பாடியுள்ளார்!

சுமார் 2300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகளில் முடி முதல் அடி வரை ஆண்களும் பெண்களும் அணிந்த நகைககளைப் பார்க்கையில் முத்தும் பவளமும் ரத்தினக் கற்களும் இருப்பதைக் காண்கிறோம்..

கற்பக தரு என்னும் மரம் போலவும், காமதேனு என்னும் பசு மாடு போலவும் நினைத்தையெல்லாம் நல்கும் சிந்தாமணி என்னும் ரத்தினம் சீவக சிந்தாமணி என்ற நூலுக்கு தலைப்பாகவே உள்ளது. சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியமே ரத்தினக் கற்கள் பொதிந்த சிலம்பின் அடைப்படையில் இருப்பதையும் எல்லோரும் அறிவர். பாகவத புராணத்தில் வரும் ஸ்யமந்தகம் என்ற கல்லின் கதை மிக மிக நீண்டது அதுமட்டுமல்லடயமண்ட் என்ற சொல்லே ஸ்யமந்த என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தே என்றும் ஆராய்ச்சியில் தெரிகிறது

லலிதா சஹஸ்ரநாமம் போன்ற துதிகளை லட்சக் கணக்கானோர் நாள்தோறும் படித்தும் கேட்டும் வருகின்றனர் ஆயினும் அவர்கள் பக்திக்கடலில் மூழ்கி அதைத் துதிக்கும்போது அதிலுள்ள ரத்தினைக் கற்களை அவர்கள் மனத்தில் நினைப்பதில்லை . ஆயினும் இவைகளை ஆழ்ந்து நோக்கினால் அந்தக் காலத்திலேயே கடவுள் கூடரத்தினைக் கற்களை அணிந்தது தெரிகிறது; இதே செய்தி  ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி நூலிலும் இருக்கிறது;

“தாயே இந்திரனின் ரத்தினைக் கிரீடம் பதிந்த தலை உங்கள் கால்களில் நம ஸ்காரம் செய்கிறது. அதில் இடறி விழாமல் வாருங்கள்” என்று சங்காரச்சார்யார் பாடுகிறார்.

இப்போது லலிதா சஹஸ்ர  நாமத்தில் உள்ள நாமாவாளிகளில் ரத்தினக்  கற்களைக் காண்போம்.

குருவிந்த மணிச்ரேணி கனத் கோடீர மண்டிதா

என்பது இறைவியைத் துதிக்கும் ஒரு நாமம் .குருவிந்தம் என்பது பத்மராகக் கல். இதன் நிறம் சிவப்பு.  இதிலிருந்துதான் கொரண்டம் Corundum என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது .

பேர்ல் PEARL  என்னும் முத்து தொடர்பான ஆங்கிலச் சொல்லும் பரல் என்ற தமிழ்த் சொல்லில் இருந்தே பிறந்தது . ப்ரவாள என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே பவளம் என்ற சொல் பிறந்தது ஷியமந்தகம் என்ற கிருஷ்ணனின் வைர மணியில் இருந்து டயமண்ட் வந்தது இதற்குப் பெரிய சான்று உலகின் புகழ்பெற்ற கோஹினூர் முதல் எல்லா வைரங்களும் பாரத நாட்டிலிருந்தே போயின; தென் ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் வைரம் கிடப்பது சில நூற்றாண்டுக்குட்பட்டது; பாரத வைரங்களோ ஆதி காலத்திலிருந்தே புகழ் பரப்பி வருகின்றன.

வஜ்ரம் என்ற ஆயுதம் இந்திரனின் ஆயுதம். உலகிலேயே கடினமான பொருள் வைரம் என்று இன்று பெளதீக நூல்கள் இயம்பும். ஆனால் வஜ்ரம் கடினமானது என்பதை இந்திரன் மூலம் வேத காலம் முதல் இந்துக்கள் பகர்கிறார்கள். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிகள் சஸ்கிருத, தமிழ்ப் பழமொழிப் புஸ்தகங்களில்  உள்ளன ஆகையால் வைரம் என்றால் பாரத நாடு என்பதே பழங்காலச் செய்தி..

பழங்காலச் சிலைகளையும் கோவிலில் உள்ள கிரீடங்களையும் பார்த்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையில் கிரீடங்கள் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம் இதற்கு காரணம் பெண்களின் அடர்ந்த கூந்தல் ஆகும். இந்த நாமாவளியில் வரும் கோடீரம் என்பது பெண்கள் அணியும் முடி/ கிரீடம் ஆகும் . இதை அணிந்த உருவத்தில் அமலாபாலை  தியானிப்பதால் நல்ல பலன்கள் கிட்டும் என்பதால் ஹயக்ரீவர் அகஸ்திய முனிவருக்கு அருளிய லலிதா சஹஸ்ரநாமத்தில் இதைக் காண்கிறோம்.

***

What is Corundum? What is Ruby?

Corundum குருவிந்தம், native Aluminium Oxide, the hardest naturally occurring mineral known apart from diamond (Corundum rates 9 on Mohs scale of hardness); lack of cleavage also increases its durability; its crystals are barrel shaped prisms of trigonal system varieties of gem quality Corundum is RUBY. (red) and SAPPHIRE (usually blue).

Poorer quality and synthetic Corundum are used in industry

***

RUBY ரூபி

The red transparent variety of the mineral Corundum, aluminium oxide . small amounts of Chromium oxide, substituting Aluminium Oxide, give ruby its colour. Natural rubies are found in Myanmar/Burma, Sri Lanka and other countries.

Rubies can also be produced artificially, and such synthetic stones are used in lasers.

***

இதிலுள்ள செய்தி என்னவென்றால் ,

குருவிந்தமும் ரூபியும்/மாணிக்கமும் சகோதரிகள் .இராண்டும் அலுமினியம் ஆக்சைட். கொஞ்சம் குரோமியம் ஆக்சைட் சேர்ந்தால் அது மாணிக்கம்/ ரூ பி ஆகிவிடும் . இந்த விஷயம் இந்துக்களுக்கு முன்னரே தெரியும் ஆதலால் இரண்டையும் தொடர்புபடுத்தியே பேசுவர். இரண்டும் சிவப்பு நிறம். வைரத்துக்கு அடுத்தபடியான கடினத் தன்மை கொண்ட    தாது குருவிந்தம். மேலும் ரூ பி எனப்படும் மாணிக்கம் லேசர் முதலிய கருவிகளில் பயன்படுவது அதன் அபார சக்தியைக் காட்டுகிறது.

இதை மாணிக்கத்தின் இரண்டாவது சாதி, ஜாதிலிங்கம் பதுமராகம் என்று தமிழ் அகராதி விளக்கும்.

அடுத்த நாமம் பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோல பூஹு

இதன் பொருள் , பத்மராகத்தால் செய்யப்பட கண்ணாடி போன்று பளபளக்கும் கன்னங்களை உடையவள்; அதாவது சிவந்த கன்னங்கள் என்று வருணிக்கிறார் ஹயக்ரீவர்.

இதை செளந்தர்ய லஹரி (62) ஸ்லோகத்துடன் ஒப்பிடலாம்

அங்கே தேவியின் உதடுகள் பவள நிறத்தில் உள்ளதாக ஆதி சங்கரர் துதி பாடுகிறார்.

To be continued……………………..

Tags- லலிதா சஹஸ்ரநாமம்  நவரத்தினங்கள், Part 1, பாரதியார், அகஸ்தியர் ,நவரத்ன மாலை,

Leave a comment

Leave a comment