HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL; இந்துமத கலைச்சொல் அகராதி- 21 (Post.15,230)

Written by London Swaminathan

Post No. 15,230

Date uploaded in London –  30 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தட்சிணை – தட்சிணா அல்லது தட்சிணை குருவுக்கும் புரோகிதருக்கும் கொடுக்கும் காணிக்கை அல்லது கட்டணம் அல்லது பரிசுப்பொருள். பிரஜாபதியின் மனைவிக்கும் இந்தப் பெயர் அதாவது யாகத்தையே கணவனாக உருவகித்து தட்சிணையை மனைவியாக உருவகம் செய்யும் சொல். தற்காலத்தில் பெண்களும் இப்பெயரைச் சூட்டிக்கொள்கிறார்கள்

Dakshina -Fees or gifts or presents given to the priest who performed a Puja or Homa . Also, feminine name.  One of Prajapathi’s wife had this name where the fees/Dakshina is personified as a woman.

****

தட்சிணாயணம்-சூரியனின் தென் திசைப்பயணம் – ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள்  தட்சிணாயண  காலம்- எனப்படும். ஜூலை மாதம் நடுவில் இருந்து ஜனவரி மாதம் நடுவரை உள்ள ஆறு மாத காலம். இதற்கு எதிர்ப்பதம் உத்தராயணம்: ஜனவரி மாத மத்தியில் இருந்து ஜூலை மாத மத்தி வரை உள்ள காலம். உத்தராயண காலம் அதிகம் புண்ணியம்  படைத்ததாக கருதப்படுகிறது.

DAKSHINAAYANA-  Dakshina means South. Sun’s apparent southward journey time. It is six months from Mid July and Mid January. Uttarayana is from Mid January to Mid July. Uttarayana is considered  holier than Daksinayana.

***

தானம் / நன்கொடை: இதில் பலவகை உண்டு. கல்வியை ஒருவருக்கு இலவசமாக அளிப்பது வித்யா தானம்; பசுமாட்டினை கொடுத்தால் அது கோதானம்; தங்கத்தைக்க கொடுத்தால் அது  ஸ்வர்ண  தானம் ;பணம் காசை கொடுத்தாலும் தானம் செய்தார்கள் என்று சொல்வார்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்கப்படுவது தானம் இதில் 16 வகை இருக்கிறது. தானம் செய்தால் மேல் உலகத்திலும் அடுத்த ஜென்மத்திலும் பலன் உண்டு என்றும் இந்துக்கள் நம்புகிறார்கள்

Dhanam -dhaanam

English word donation is derived from this Sanskrit word. Anything given to deserving people without expecting anything from them is Dhaanam. Hindus believe such a donation will benefit them in the next word or future births. There are various types of Dhanams. Gold, land, food grains  and money are the main ones. Scriptures list sixteen types of such Dhanams.

***

தர்ப்பை

இது ஒரு புல்லின் பெயர் எல்லா சடங்கு களிலும் இந்துக்கள்  இதைப்  பயன்படுத்துவார்கள்; தர்ப்பையில் பாய்கள் செய்து அதில் அமர்ந்து தியானம் செய்வதும் உண்டு இது புனிதமான ஒரு தாவரம். மோதிர விரலுக்கு அணிவதற்காக பவித்ரம் செய்வார்கள்; தர்ப்பணம் முதலிய சடங்குகளுக்கு கூர்ச்சம் செய்வார்கள்.

Dharbha

Holy grass; Hindus use it in all their ceremonies whether it is auspicious or not. They make different ring like shapes with it. Pavitram is for the ring finger. It is used in purification ceremonies as well. Dharba mat is used for meditation. Koorcham shape is used for inauspicious ceremonies.

***

தீர்க்க சுமங்கலி நீண்டகால திருமண வாழ்வு பெரியோர்கள் மனமார்ந்த பெண்களே ஆசீர்வதிக்கும் போது தீர்க்க சுமங்கலி ஆக இருங்கள் என்று வாழ்த்துவார்கள்.

Dirgha Sumangali

Long lived married life. When married women seek blessings from elders or saints, they are blessed with these words.

***

திரவியம் அல்லது திரவியம் யாகத்திற்கான பொருள்களை திரவியம் என்பார்கள் அதை சுத்தப்படுத்துதல் திவ்யசுத்தி.

Dravyam

Material used for fire ceremonies (Homa, Havan, Yaga, Yajna); purifying such materials is called Dravya Suddhi

***

தியானம் மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே விஷயத்தை சிந்தித்தல் கவனம் சிதறாமல் செய்யும் முறை

Dhyana

It is meditation. Focussing the mind on a particular thing or object or God is Dhyaana.

***

தேவி

இந்துக்களின் பெண் தெய்வங்களுக்கு பின்னொட்டாக வரும் சொல்; பொருள்- இறைவி ; அரசிகளுக்கும் இதை பயன்படுத்துவார்கள்

உதாரணம் – விஷ்ணு பத்னிக்கள் ஸ்ரீ தேவி, பூதேவி ; ராமா பிரான் மனைவி- சீதா தேவி ; பாண்டிய ராணி – பூதப்பாண்டியன் தேவி – புறநானூறு  

Devi

All Hindu goddesses are called Devis; also queens.

Examples: Sri Devi, Bhu Devi along with Vishnu. Bhuta Pandyan Devi in 2000 year old Sangam Tamil Book Purananuru.

***

தபித்தி

ரிக்வேதம் குறிப்பிடும் ஒரு அரசன் பெயர் தபித்தி . அவனை அசுரர்களும் தஸ்யுயூக்களும் தூக்கிச் சென்ற போது அரசனை இந்திரன் காப்பாற்றினான். அசுரர்களை அழித்து அவர்களுடைய குதிரை, ரதம், பசுக்களை தபித்திக்கு இந்திரன் அளித்தான்.

Dabhiti

A king mentioned in the Rig Veda who was saved by Indra from being carried off by the Asuras and Dasyus. Indra burnt all their weapons in a kindled fire and enriched Dhabiti with their cattle, horse and chariots.

***

ததிக்ராவண்

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வீக குதிரைக்கு ததிக்ராவண் என்று பெயர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ததிக்ராவண் பற்றிய மந்திரம் வருகிறது

த॒³தி॒⁴க்ராவ்‍ண்ணோ॑ அகாரிஷம் ஜி॒ஷ்ணோரஶ்வ॑ஸ்ய வா॒ஜின: ।ஸு॒ர॒பி⁴ நோ॒ முகா॑² கர॒த்ப்ரண॒ ஆயூக்³ம்ஷி தாரிஷத் ॥

இந்த மந்திரம் யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதையில் வருகிறது .

பொருள்-

அனைத்துலகத்தையும் தாங்குபவனும் அளப்பவனும்  ஜெயசீலனும் சகல வித்தைகளும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவம் எடுத்தவனுமான  வேகவானுமாகிய பரம புருஷனுக்கு வந்தனம் செய்கிறேன் . நம்முடைய முகத்தினையும் மற்ற இந்திரியங்களை நன் மனம் உடையவர்களாக அவர் செய்ய வேண்டும் . நம்முடைய ஆயுளை இடையூறு இல்லாமற் காக்கவேண்டும்

அஸ்வ- குதிரை; இந்த இடத்தில் ஹயக்ரீவன் என்பது – குதிரை முகக் கடவுள்.

Dadhikra

Divine horse in Rig Veda. Brahmins around the world recite the mantra of Dadhikra thrice a day. It is described as straight going, the graceful moving, the resplendent, rapid, the destroyer of enemies like a heroic prince.

***

ததீசி ரிஷி

மஹாபாரத காலத்துக்கும் முந்திய ரிஷி . தேவர்களின் வேண்டுகோளின்படி இவர் தன்னையே தியாகம் செய்தார். இவருடைய முதுகெலும்பினைக் கொண்டு இந்திரன் வஜ்ராயுதம் செயது காலகேய தானவர்களையும் அவர்களுடைய தலைவனானான விருத்திராசுரனையும் கொன்றான்

Dadhicha

A celebrated ancient sage who sacrificed himself and gave his backbone to Indra with which he made his powerful Vajraayudha. He used it to kill Kalkeya Danavas and their leader Vritra. This was related by Lomasha rishi to Yuthisthira when the Pandavas were visiting Agastya rishi’s hermitage.

To be continued………………………………

Tags- ததீசி ரிஷி,  தட்சிணை Dabhiti , Darbha, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL; இந்துமத கலைச்சொல் அகராதி- 21

ஆதி சங்கரர், வள்ளுவர் சொன்னதை அருணகிரி நாதரும் செப்பினார்! (Post.15,229)

Written by London Swaminathan

Post No. 15,229

Date uploaded in London –  30 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் —திருக்குறள் 280

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை; உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

****

ந தேன ஜாயதே  சாதுர் யே நாஸ்ய முண்டிதம் சிரஹ- ஸம்ஸ்க்ருத பழமொழி

மொட்டை அடித்துக்கொண்டதால் மட்டும் சந்யாசி ஆகிவிடமுடியாது

xxx 

புத்தர் உரைப்பதும் அஃதே

தம்மபதம் 266, 270):– ஒருவர் மஞ்சள் உடை தரித்து யாசகம் செய்து வாழ்வதால் புத்த பிட்சு ஆகிவிடமாட்டார். நேர்மையான பாதையை ஏற்று மாமிச உணவைத் தவிர்ப்வரே புத்த பிட்சு எனப்படுவார்

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர், அருணகிரிநாதர்  ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

***

இதோ அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்

காடுகள் புக்குந் …… தடுமாறிக்

காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்

காசினி முற்றுந் …… திரியாதே

சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்

தேற வுதிக்கும் …… பரஞான

தீப விளக்கங் காண எனக்குன்

சீதள பத்மந் …… தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்

பாழ்பட வுக்ரந் …… தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்

பாடலை மெச்சுங் …… கதிர்வேலா

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்

சோலை சிறக்கும் …… புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்

தோகை நடத்தும் …… பெருமாளே.

(தமிழிலும் ஆங்கிலத்திலும்

    பொருள் எழுதியது

    ஸ்ரீ கோபால சுந்தரம்)

……… சொல் விளக்கம் ………

காவி யுடுத்தும் … காவித் துணியை உடுத்திக் கொண்டும்,

தாழ்சடை வைத்தும் … தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து

வைத்தும்,

காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,

காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,

காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,

காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து

அலையாமல்,

சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்

பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்

தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,

பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி

விளக்கத்தினையான் காணும்படி,

எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த

தாமரை அடிகளைத் தந்தருள்க.

பாவ நிறத்தின் தாருக வர்க்கம் … பாவமே உருவெடுத்த

தாருகாசுரன் கூட்டத்தினர்

பாழ்பட உக்ரம் தருவீரா … பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே,

பாணிகள் கொட்டும் பேய்கள் … போர்க்களத்தில் கைகளைக்

கொட்டும் பேய்கள்

பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா … உளறும்

பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும் … அன்னங்கள் நிற்கும்

வயல்கள் சூழ்ந்த

சோலை சிறக்கும் புலியூரா … சோலைகள் விளங்கும்

புலியூரனே (சிதம்பரேசனே),

சூரர் மிகக்கொண்டாட … சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக

நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே. … நடனமாடும்

மயிலினை நடத்தும் பெருமாளே.

சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை

குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன், சிவன் என்று ஆகிவிடும்.

***

சங்கரரும் சாடுகிறார்

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

***

திருமூலரின் திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.

புத்தர் பேருரை

உச்சுக்குடுமி, மொட்டை, ஜடாமுடி, காவித்துணி, மஞ்சள் உடை, நிர்வாண கோலம் இவைகளால் ஒருவன் துறவி ஆகிவிட முடியாது என்று புத்தர், வள்ளுவர், திருமூலர், ஆதிசங்கரர் முதலிய பல தீர்கதரிசிகள் எடுத்துரைத்தத்தைக் கண்டோம். புத்தர் மூன்று இடங்களில் இதைச் சொல்வது குறிப்பிடத்தக்கது இன்றைய பெளத்த துறவிகள் புத்தர் சொன்னதைக் கடைப்பிடிப்பதில்லை என்பதை உலகெங்கிலுமுள்ள புத்த குருமார்களைக்கண்டால் புரியும்.

புத்தர் தம்மபதத்தில்,  மூன்று இடங்களில் இக்கருத்தை வலியுறுத்துகிறார் (தம்மபதம் 141, 264, 393)

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்

.—subham—

Tags – சடை, தாடி, குடுமி, மொட்டை, அருணகிரிநாதர் , திருப்புகழ் , மழித்தலும் , பஜகோவிந்தம், நூலும் சிகையும் ,ஜடிலோ முண்டி திருமூலர்,

இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை! (Post.15,228)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,228

Date uploaded in London –   30 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை! 

ச. நாகராஜன்  

சமூக ஊடகம் தரும் குறிப்பு இது: 

“இன்று நாம் தேவியையும் மகாதேவனையும் இந்த உலகில் உள்ள ஒவ்வொவருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தேசத்தைத் தருமாறு வேண்டிக் கொண்டோம்.

 கிறிஸ்தவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு. முஸ்லீம்களுக்கு 57 நாடுகள் உள்ளன. புத்த மதத்தினருக்கு எட்டு அல்லது ஒன்பது நாடுகள் உள்ளன. யூதர்களும் ஒரு நாட்டைத் தாங்கள் கொண்டுள்ளனர்.

 ஆனால் நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு என்று ஒரு நாடும் இல்லை.

நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு நமது என்று சொந்தம் கொண்டாட ஒரு அங்குல இடம் கூட இல்லை என்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும்.

 மனித குலத்தின் மிகப் பெரும் துரோகிகளான காந்தியும் நேருவும் செய்த துரோகத்தினால் நூறு கோடி ஹிந்துக்களுக்கு ஒரு அங்குல இடம் கூட இல்லை.

 நாங்கள் தேவியையும் மகாதேவனையும் எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரு தேசத்தைக் கொடு என்று வேண்டுகிறோம்.

எங்களுக்கு என்று ஒரு தேசத்தைக் கொடு – எங்கே ஒரு மசூதியும் மதரஸாவும் இல்லையோ எங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லையோ அப்படிப்பட்ட இடம் ஒன்றை – எங்களுக்கென்று ஒரு நாட்டைக் கொடு!

அவர்களால் நாங்கள் மிகவும் ஓய்ந்து போய்விட்டோம். நொந்து போயிருக்கிறோம்.

 உலகமே எங்களை விட்டு நழுவிப் போய் விட்டது.

இது தான் எங்களது கடைசிப் புகலிடம்.

இதையும் அவர்கள் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

“எங்களைக் காப்பாற்று; எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று; மனித குலத்தின் எதிரிகளாயும் சனாதன தர்மத்தின் எதிரிகளாயுமுள்ள அவர்களை மொத்தமாக அழி” என்பதே தேவியிடமும் மகாதேவனிடமும்எங்களின் ஒரே பிரார்த்தனை.

 யதி நரசிங்கானந்தின் (Yati Narsinghanand) இந்த பிரார்த்தனை ஹிந்து ராஷ்டிரம் உருவாக வேண்டும் என்ற கருத்தை இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்படுத்தியுள்ளது.

 தெலிங்கானா மகராஷ்டிர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நரசிங்கநாத்தின் இந்த பிரார்த்தனையை எதிர்த்து எப்.ஐ. ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இஸ்லாமிய அமைப்புகள் ஜம்மு காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், வட கிழக்கு பிராந்தியங்கள் உள்ளிட்ட இடங்களில் ஹிந்துக்களுக்குச் சொல்லவொண்ணா தொந்தரவுகளைக் கொடுத்து அவர்கள் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கும் இந்த நேரத்தில்ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்ற தேவை  – DEMAND – உருவாவதில் ஆச்சரியம் இல்லை!

ஆதாரம், நன்றி ட்ரூத் வார இதழ்

Source : KOLKATA WEEKLY TRUTH Volume 93 Issue 28 Dated 14-11-2025

FOURTEEN BEAUTIFUL CARTOONS FROM DECCAN CHRONICLE

 MOST BEAUTIFUL AND MEANINGFUL CARTOONS ARE PUBLISHED IN DECCAN CHRONICLE NEWSPAPER.

HERE ARE 14 CARTOONS UP TP 29TH NOVEMBER 2025.

–SUBHAM–

TAGS- CARTOONS, DECCAN CHRONICLE, 29-11-25

NO BROADCAST ON 30 NOVEMBER 2025

PLEASE NOTE THAT WE ARE NOT BROADCASTING ON SUNDAY 

THE 30TH NOVEMBER 2025.

GNANAMAYAM WILL RESUME ITS BROADCAST ON SUNDAY 

THE 7TH DECEMBER., 2025.

PLEASE JOIN US ON 7TH DECEMBER 2025

LONDON TIME 12 NOON.

INDIAN TIME- EVENING 5-30 PM.

REGARDS.

–SUBHAM–

நம்மாழ்வார் பாடலில் (Wheel of Time) காலச் சக்கரம் (Post No.15,227)

Written by London Swaminathan

Post No. 15,227

Date uploaded in London –  29 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்மாழ்வாரின் பாசுரங்களில் நிறைய சுவையான தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல சொற்களை நாம் இன்று பயன்படுத்துவதே இல்லை.

இதோ சில நம்மாழ்வார் பாசுரங்கள் Wheel of Time

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,
எண் இல் பல்கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே,
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே,
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே.

English translation of verse 4.3.5:

Unto Lord Kaṇṇaṉ, my benefactor great, holding the discus that ‘Time’ controls Wheel of Time,
Delectable like the garland fine is my soul;
Deems He my love as His gleaming gold crown smart,
The jewels innumerable on His person, the silken robes appropriate
And the praises the three worlds heap on Him, their aggregate.

Translation by by S. Satyamurthi Ayyangar , Wisdomlib.org

3149 கண்ணி எனது உயிர் காதல்
       கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
       ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
       நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
       கால சக்கரத்தானுக்கே (5) Wheel of Time


3149. My life is the garland that adorns you.
My love is a golden light for you.
Your crown, countless ornaments, beautiful clothes
are all only my love.
The praises that all the people of the three worlds utter
are my love for you.
You are our dear god Kaṇṇan and you carry a discus Wheel of Time in your hands.
Give your grace to the world.

Tanslation by Kausalya Hart from Project Madurai

*****

3150 கால சக்கரத்தொடு வெண்
       சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த Big Bang, Big Shrink


       நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
       ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
       கமலம் அன்ன குரைகழலே (6)


3150. Even though you do not come when I shout out,
calling you and saying,
“O Narayana! You carry a discus
and a white conch in your hands.
You swallowed the world and spit it out,”
I keep your beautiful sounding anklets
that you wear on your lotus feet
as an ornament on my head.

Wheel of Time

நம்மாழ்வார் பாசுரத்தை பக்திக் கண்களோடு மற்றும் பார்ப்பதால் அவர் சொன்ன விஞ்ஞான , அறிவியல் விஷயங்களை உரைகாரர்கள் புறக்கணித்து விடுகின்றனர் . ஏராளமான பாசுரங்களில் நாம்  விஷ்ணுவை, கண்ணனை சங்கு சக்ர கதாதாரிகளாகச் சந்திக்கிறோம்; அதுமட்டுமல்லாமல் ,

வனமாலி கதி சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகி என்ற ஐம்படைத் தாலியையும் பல பாசுரங்களில் தமிழில் கொடுத்திருப்பதையும் காண்கிறோம் . அப்படிப் பாடும் ஆழ்வார்கள் , இங்கு காலச் சக்கரம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர் என்பதே என் கருத்து. ஏனெனில் விஷ்ணு  சஹஸ்ரனாமத்தின் முதல் வரியிலுள்ள பூத பவ்ய பவத் பிரபு சொற்களையும் பல பாசுரங்களில் நம்மாழ்வார் அப்படியே தமிழ்ப்ப டுத்தியிருக்கிறார்; அதாவது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் அதற்கு கட்டுப்படடாமல் வெளியே நிற்பவனும் நீயே என்றும் பாடியுள்ளார் ; இது நாசா NASA=National Aeronautics and Space Administration விஞ்ஞானிகளுக்கும் தெரியாத, புரியாத விஷயம்.

காலச் சக்கரம் என்ற சொல்லில், வெறும் சுதர்சன சக்கரம் மட்டும் இருப்பதாக நினைத்து உரைகாரர்கள் உரை எழுதிவிட்டனர்;  ஆனால் இந்துக்கள் காலம் என்பது ஒரு சக்கரம் போல மீண்டும் மீண்டும் வரும் என்று சொல்கின்றனர் இதுவரை நாசா அல்லது ரஷ்ய விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை.. காலம் எனபது நீண்ட நெடுங்கோட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று இன்றுவரை அவர்கள் எழுதி வருகின்றனர் . அது தவறு ; இதை எல்லா இந்து சாது சன்யாசிகளும் மீண்டும் மீண்டும் பாடி  ப்பரவுகின்றனர் .

நம்மாழ்வார் பாசுரத்தில் இறைவன் உலகங்களை உண்டும் உமிழ்ந்தும் (Big Bang, Big Shrink ) விளையாடுகிறான் என்ற வரிகளை நம்மாழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் பார்க்கலாம் அதுதான் காலச்சக்கரம் –மீண்டும் மீண்டும் யுகங்கள் தோன்றும்– அழிவும் ஆக்கமும் நடைபெறும் — பிக் பேங் (Big Bang, Big Shrink )  என்பதை எழுதுவோர் பிக்  ச்ரிங்க் பற்றி எழுதுவதில்லை ; அப்பரும் மாணிக்க வாசகரும் பாரதியும் நம்மாழ்வாரும் மட்டும்தான் அதைப்  பாடியுள்ளனர் ஆகவே காலச் சக்கரம் என்பதை டிஸ்கஸ் என்று மொழிபெயர்க்காமல் Wheel of Time  வீல் ஆப் டைம் அல்லது டைம் வீல் என்று மொழிபெயர்த்து விளக்க வேண்டும்; சாதாரண சக்கரம் என்று ஆழ்வார் நினைத்திருந்தால் ஏனைய பாசுரங்களைப்போல அவர் இங்கும் சங்கு சக்கரம் என்று மட்டும் சொல்லியிருப்பார்.

என்னுடைய விளக்கத்துக்கு மூன்று ஆதரங்காளைத் தருகிறேன்:

1

நாரதர் போல, சித்தர்களை- கின்னரர்ளைப் போல, பல இடங்களுக்கு, கிரகங்களுக்குச் செல்ல முடியும், மனோவேகத்தில் பயணம் செய்தால் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியும் என்பதை இந்துக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள்

2

அருணகிரிநாதர் திருப்புகழில் முருகப்பெருமான் மயில் மீதேறி ஒரு நொடிப்பொழுதில் உலகத்தை வலம் வந்ததாகப் பாடுகிறார். இந்த ஒரு நொடி என்ற சொல்லினை அவர் என் சேர்த்தார் என்று சிந்திக்க வேண்டும் . நம்மாழ்வாரும் இறந்துபோன பிராமணச் சிறுவர்களை ஒரு முகூர்த்த நேரத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் — கண்ணனும் அர்ஜுனனும் மீட்டு வந்ததை பாடுகிறார் ஏன் அவர் 48 நிமிடத்துக்குள் என்று குறிப்பிட்டார் என்றும் சிந்திக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு முன்பாக பெரியாழ்வாரும் கண்ணனின் Space Travel ஸ்பேஸ் ட்ராவல் பற்றிப் பாடியுள்ளார். ஆயினும் நம்மாழ்வார் ஒரு முகூர்த்தம்– 48 நிமிடங்களுக்குள் — நடந்ததையும் குறிப்பிடுகிறார்

3

இறந்துபோன பூம்பாவையின் எலும்பிலிருந்தது அந்தப்பெண்ணை மீட்டுத் தந்த திருஞான சம்பந்தர் வளர்ந்த நிலையில் பருவப்பெண்ணாகப் பூம்பாவை வந்தாள் என்றும் படிக்கிறோம்; இறந்து போன பிராமணச் சிறுவனை  சுந்தரர்  முதலை  வாயிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுத் தந்த போது அவனையும் வளர்ந்த  சிறுவனாக வெளிவந்தான்  என்றும் பெரிய புராணம் கூறுகிறது .

புலவர்களுக்கு அடைமொழி– பொய்யா  மொழி உடையார்; அவர்கள்  பொய்யே சொல்ல நினைக்காத புலவர்கள்; ஏன் இப்படி ஒரு நொடிஒரு முகூர்த்தம், ஆண்டுக்கணக்கில் வளர்ச்சி என்பதையெல்லாம் குறிப்பிடுகிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்கும் காலம் என்பது சுழற்சியுடைய ஓர் சக்கரம் என்பதும் நமக்கு வெளியே வேறு உலகத்தில் அவர்கள் வளர்கிறார்கள் என்பதும் தெரியும்; கம்பனும் கூட ஆகாயவாசிகள் என்ற அழகான சொல்லால் இவர்களைக் குறிப்பிடுகிறான்

****

Kaalachakra Mandala in Bhutan

Prime Minister Narendra Modi recently attended Kaala Chakra ceremony in Bhutan.

Kalachakra Mandala-1

The Meaning of Kalachakra Mandala

Kaalachakra is a Sanskrit word that means the wheel of the time or time cycle, where Kaala means time and Chakra means wheel. It means Kaalachakra is the representation of the time circle. Everything that occurs in our universe will occur in a particular cycle of time.

The world outside, the universe, and its cycles of emergence and disintegration are all included in the outside Kalachakra. Internal fluxes of breath and energy, as well as the cycles of death and rebirth, are all represented in the inner Kaalachakra.

A different definition of Kaalachakra is the practice of purification carried out by a person to transform ordinary death, birth, and manifestation on both a personal and universal level-each which is typically uncontrollably subject to the passage of time into the fully enlightened state of complete Buddhahood.

Three Primary Kaalachakra

Buddhism views the existence of three distinct Kalachakra, or “bodies,” as being essential to comprehending life and connecting our “being” to the universe. This exact idea, which provides a straightforward yet powerful method to practice dharma and, more significantly, compassion, is what gave rise to the Kalachakra Mandala’s current notoriety.

External Kaalachakra: Astrology, astronomy, and mathematics are included here and can be regarded as the fundamental sciences.

Internal Kaalachakra: The chakras are the physical structures and energy systems that make up the human body.

Enlightenment Kaalachakra: The study and application of the other Kalachakra, which takes us from our ordinary state to the state of Buddha-hood or Enlightenment, is the third Kalachakra.

—Subham—

Tags- Kala chakra, Bhutan, நம்மாழ்வார் பாடல், (Wheel of Time), காலச் சக்கரம்

December 2025 Calendar: More Quotes from Prasnottara Ratnamalika of Adi Shankara (Post.15,226)

Written by London Swaminathan

Post No. 15,226

Date uploaded in London –  29 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

In the past two months we saw some quotations from Adi Shankara’s Prasnottara Ratnamalika in the monthly calendars. Here are some more quotes from the hymn. The meaning of the hymn is Garland of Gems of Questions and Answers

Festivals in December 2025:

3-Kartika Deepa Festival in South Indian Temples; 11 Tamil Poet Bharatiyar’s Birth Day; 16- First Day of Holy Month Maarkazi/ Maargaseersha; 19 Hanumath Jayanthi; 25- Christmas; 30- Vaikunda Ekadasi in South Indian Tempes

4- Purnima/Full moon day;  19  Amavasyai/ New moon Day

Ekadasi Fasting Days-  15 , 30

Auspicious Days : 01-12-2025 – Monday,  08-12-2025 – – Monday,  , 10-12-2025 – Wednesday  14-12-2025 – Sunday, 15-12-2025 – – Monday.

****

1 December Monday

63. Like the lotus shines on seeing the sun, on seeing whom will a clan shine?

On seeing its members with good characters coupled with humility.

***

2 December Tuesday

64. Who can make this world as his slave?

He, who speaks sweet words, holds conversation which leads to good, and observes Dharma can make this world as his slave.

***

3 December Wednesday

65. What attracts the mind of the wise man?

Good poems and a wise lady.

***

4 December Thursday

66. Who will never face danger?

He who obeys the advice of elders and also has humility.

***

5 December Friday

67. Whom will the Goddess of wealth love?

She will love a person with active mind and just conduct.

***

6 December Saturday

68. From whom would the Goddess of wealth run away?

She will run away from lazy people and those who insult teachers and Brahmins (learned people).

***

7 December Sunday

69. Where should we live?

We should live near good people.

***

8 December Monday

70. From which country, we should go away?

That country which is ruled by a miserly tyrant.

***

9 December Tuesday

71. How can man be without sorrow?

By having a wife with humility and stable wealth.

***

10 December Wednesday

72. In the world what type of man will always be sad?

He who has wealth but does not give it to anybody will be sad.

***

11 December Thursday

73. What leads to worst words about a man?

His begging from debased people.

***

12 December Friday

74. Who is valorous than Lord Sri Rama?

That man who does not loose his stability in spite of arrows from the God of love.

***

13 December Saturday

75. What should occupy your thought day and night?

The feet of God and not this life.

***

14 December Sunday

76. Who are blind even though they have eyes?

Atheists.

***

15 December Monday

77. Who would be called lame in this world?

He who goes for pilgrimage when he is old.

***

16 December Tuesday

78. What is most Theertha (scared water)?

That which removes dirt from the mind.

***

17 December Wednesday

79. What should be spoken by men?

The name of Hari.

***

18 December Thursday

80. What should not be told by a wise man?

Lie and ills about others.

***

19 December Friday

81. What should man earn?

Knowledge, wealth, strength, fame and Punya (result of good deeds)

***

20 December Saturday

82. What wipes away all good characters?

Miserliness.

***

21 December Sunday

83. Who is the enemy?

Time.

***

22 December Monday

84. Which ministry should be avoided?

The ministry without wise and old ministers.

***

23 December Tuesday

85. In this world, in what should man be sincere?

In government service.

***

24 December Wednesday

86. What is dearer than the soul?

Dharma of our caste and company of good people.

***

25 December Thursday

87. What is like the ever perennial banyan tree?

Charity given to the proper people.

***

26 December Friday

88. What is the weapon for everybody?

The capability of proving with just deeds.

***

27 December Saturday

89. Who is the mother for everybody?

Cow.

***

28 December Sunday

90. What is the army?

Courage.

***

29 December Monday

91. What is like God of death?

A careless life.

***

30 December Tuesday

92. Where is poison?

With bad people in this world.

***

31 December Wednesday

93. What is an unclean (untouchable) state?

The time when one takes loan and cannot repay.

—Subham—

Tags- December 2025 Calendar, Adi Shankara, Prasnottara Ratna Malika, Continued

சீனாவின் ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க்! (Post.15,225)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,225

Date uploaded in London –   29 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்!

சீனாவின் ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxiaபார்க்! 

ச.நாகராஜன்


சீனாவில் ஜாங்க்யே நகரில் அமைந்துள்ள ஜாங்க்யே டான்க்ஸியா உலகில் உள்ள 34 பெரும் மீடியாக்களினால் உலகின் மிக அழகிய இயற்கை வனப்பு மிக்க நில வடிவம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்.

240 லட்சம் வருடங்களுக்கு முன்னால் மணல்கற்களும் தாதுக்களும் கலந்த கலவையினால் உருவான இடம் இது. காற்றும் மழையும் தொடர்ந்து அடிக்கவே இங்குள்ள அழகுள்ள வடிவமைப்புகள் காலப்போக்கில் உருவாகி விட்டன.

இங்குள்ள ஜாங்க்யே நேஷனல் பார்க் 322 சதுர கிலோமீட்டரில் அமைந்த பார்க். வானவில் வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த இடத்தை யுனெஸ்கோ உலகளாவிய பாரம்பரிய தளங்களில் ஒன்றாக 2009ம் ஆண்டில் அறிவித்து விட்டது.

கொய்லான் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இந்த பார்க் அமைந்துள்ளது. இது ஜாங்க்யே நகருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சீனாவின் தலை நகரான பீகிங்கிலிருந்து 1700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

 விசித்திரமான வண்ணக் கலவைக்காக பிரசித்தி பெற்ற பார்க்காக இது ஆகியுள்ளது. வியக்க வைக்கும் சிவப்பு, பழுப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மணல்கற்கள் மடிப்பு மடிப்பாக அதனுள்ளிருக்கும் பல்வேறு ஆக்ஸைடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரில் உள்ள பல்வேறு கனிமங்களில் சேர்க்கையானது மணல்கற்களின் துகள்களில் ஊடுருவ, இந்த இரசாயன கூட்டுப்பொருள்கள் அவற்றுடன் ஒன்று சேர்ந்து இந்த இயற்கை வனப்பை உருவாக்கியிருக்கிறது. இதை லேயர் கேக் ஹில்ஸ் (Layer Cake Hills) என்று அனைவரும் புகழ்கின்றனர்.

மார்கோ போலோவே இதன் உயிர்த்துடிப்பான அழகையும் வண்ணங்களையும் பார்த்து வியந்து போற்றியுள்ளான்.

இது இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 510 சதுர கிலோமீட்டரைக் கொண்ட பகுதி ஜாங்க்யே க்யிகாய் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் பல்வேறு வண்ணங்கள் என்று பொருள். இன்னொரு பகுதி 332 சதுரகிலோமீட்டரைக் கொண்டது. இது பிங் கௌ என்று அழைக்கப்படுகிறது. பனிப் பள்ளத்தாக்கு என்பது இதன் பொருள்.

 இந்த வானவில் அடுக்குத் தொடரானது பெருவில் அமைந்துள்ள ரெய்ன்போ மலைகள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஸ்பெக்ட்ரம் தொடர்,  அமெரிக்காவில் உள்ள ரெய்ன்போ தொடர் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.

ஜாங்க்யே பழைய காலத்தில் யான்ஜி என்று அழைக்கப்பட்டது. இங்கு புத்தமத குருமார்கள் மடாலயங்களை அமைத்து வழிபட்டார்கள். ஆகவே இது பாரம்பரியத்தை விளக்கும் இடமாகவும் அமைந்து விட்டது. நிலவியலின் சரிதத்தைச் சொல்வதோடு கலை, பண்பாடு ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதியாகவும் இது அமைந்து விட்டதால் சீன அரசு இதன் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

  உலகில் அதிக மக்கள் சென்று விரும்பிப் பார்க்கும் இடமாக இது அமைந்து விட்டது. அத்துடன் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஈர்க்கும் இடமாகவும் இந்தப் பகுதி அமைந்து விட்டது. டிஸ்னியின் முலன் (MULAN) என்ற திரைப்படத்தில் இந்தப் பகுதியின் அழகிய காட்சி இடம் பெறுகிறது.

 அத்துடன் இது சீனாவின் புகழ்பெற்ற சில்க் ரோட் என்னும் பெருவழியில் உள்ள இடமாகவும் உள்ளது. சில்க் ரோட் என்பது சீனவாவின் வடக்கே உள்ள பெருவழி. இது உலக வரலாற்றைப் பல்வேறு விதங்களில் பலமுறை மாற்றியுள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. 7000 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த வழியில் ஏராளமான வணிகர்களும் அரசர்களும் அவர்களின்  படைகளும் சென்றுள்ளன.

இந்த சில்க் ரோட் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க் இந்த சில்க் ரோடில் அமைந்திருப்பதால் இதன் புகழ் நாளுக்கு நாள் பெருகி வருகிறது!

**

டிசம்பர் 2025 காலண்டர்: ஆதி சங்கரர் பொன்மொழிகள் (Post.15,224)

Written by London Swaminathan

Post No. 15,224

Date uploaded in London –  28 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கடந்த இரண்டு மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த டிசம்பர் மாதக் காலண்டரில் காண்போம்.

டிசம்பர் மாதப் பண்டிகைகள் :

03-12-2025 –  கார்த்திகை தீபத் திருநாள்; 11- பாரதியார் பிறந்த தினம்;16-மார்கழி மாதப் பிறப்பு; 19 ஹனுமத் ஜெயந்தி; 25- கிறிஸ்துமஸ்; 30-வைகுண்ட ஏகாதசி

04-12-2025 – வியாழன், பவுர்ணமி; 19-12-2025 – வெள்ளி, அமாவாசை

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-  15 , 30

முகூர்த்த நாட்கள் : 01-12-2025 – திங்கள்,  08-12-2025 – திங்கள், 10-12-2025 – புதன்,  14-12-2025 – ஞாயிறு, 15-12-2025 – திங்கள்,

டிசம்பர் 1 திங்கட்கிழமை

சூரியனைக்கண்டால் தாமரை மலர்கிறதுஅதே போல யாரைக்கண்டால் ஒரு குலமே மலரும்?

நல்லகுணங்களும் அடக்கமும் உள்ளவர்களை க்கண்டால் குலமே மலரும்

***

டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை

யார் உலகத்தையே தனக்கு அடிமையாக்க முடியும்?

இனிமையான சொற்களை பேசி நன்மை தரும் உரையாடலைச் செய்வோருக்கும் தருமத்தைக் கடைப்பிடிப்போருக்கும் உலகமே அடிமை ஆகிவிடும்.

***

டிசம்பர் 3 புதன்கிழமை

கற்றோரின் மனத்தைக் கவர்வோர் யார்?

நல்ல கவிதைகளும் புத்திசாலிப்பெண்ணும்.

***

டிசம்பர் 4 வியாழக்கிழமை

யாருக்கு எப்போதும் ஆபத்து வராது?

பெரியோர்களின் சொல்லைக் கேட்டு அடக்கத்தோடு இருப்பவனுக்கு எப்போதும் ஆபத்து இல்லை

***

டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை

யாரை செல்வத் திருமகள் நேசிப்பாள் ?

நன்னடத்தையும் சுறுசுறுப்பான எண்ணமும் உடையவனை.

***

டிசம்பர் 6 சனிக்கிழமை

யாரிடமிருந்து லெட்சுமி ஓடிப்போவாள் ?

சோம்பேறிகளிடமிருந்தும் ஆசிரியர்களையும் பிராமணர்களையும் நிந்திப்போரிடமிருந்தும்

(பிராமணர்கள்= வேத விற்பன்னர்கள் )

***

டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை

நாம் எங்கே வசிக்க வேண்டும்?

நல்லோர் வாழுமிடத்தில்.

***

டிசம்பர் 8 திங்கட்கிழமை

எந்த நாட்டிலிருந்து வெளியேறவேண்டும்?

கருமியும் கொடுங்கோலும் உடையவன் நாட்டிலிருந்து.

***

டிசம்பர் 9  செவ்வாய்க்கிழமை

கவலையில்லாத மனிதன் யார் ?

அடக்கத்துடனுள்ள நல்ல மனைவி நிலையான வருமானம் இரண்டும் இருந்தால் .

****

டிசம்பர் 10  புதன்கிழமை

எப்போதும் துக்கம் உள்ளவன் யார்?

செல்வம் இருந்தும் அதை பிறருக்கு கொடுக்காதவன் துன்பத்தில் உழல்வான்.

***

டிசம்பர் 11  வியாழக்கிழமை

எப்போது கெட்ட பெயர் ஏற்படும்?

கீழ்த்தர மனிதர்களிடம் பிச்சை எடுக்கும்போது .

***

டிசம்பர் 12  வெள்ளிக்கிழமை

ராமபிரானைவிட பராக்ரமம் மிக்கவன் யார்?

காமதேவனின் அம்புக்கணைகளுக்கும் அசங்காதவன்

***

டிசம்பர் 13 சனிக்கிழமை

அல்லும்  பகலும் மனதில் இருக்க வேண்டியது எது?

இறைவனின் பாத கமலங்கள் நம்முடைய வாழ்க்கை அல்ல.

***

டிசம்பர் 14  ஞாயிற்றுக் கிழமை

கண்களிருந்தும் குருடன் யார்?

நாஸ்தீகன்

***

டிசம்பர் 15  திங்கட்கிழமை

முடவன் யார் ?

வயதான காலத்தில் யாத்திரை செல்பவன்

***

டிசம்பர் 16  செவ்வாய்க்கிழமை

புனித தீர்த்தம் எது?

மனத்திலிருந்து அழுக்கைப்போக்கும் எல்லாம் புனித தீர்த்தம்.

***

டிசம்பர்  17  புதன்கிழமை

எதை மனிதன் பேசவேண்டும்?

ஹரியின்  நாமத்தை .

***

டிசம்பர் 18  வியாழக்கிழமை

புத்திசாலிகள்  பேசக்கூடாதது எது?

பொய்யும் புரளியும் .

டிசம்பர் 19  வெள்ளிக்கிழமை

மனிதன் சம்பாதிக்க வேண்டியவை யாவை ?

அறிவுபணம்பலம்புகழ் புண்ணியம்

***

டிசம்பர் 20  சனிக்கிழமை

நல்ல குணங்கள் இருந்தும் அவை எப்போது பயனற்றுப்போகின்றன

கருமித்தனத்தால்.

***

டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை

எதிரி யார் ?

காலம்

***

டிசம்பர் 22  திங்கட்கிழமை

அரசன் தவிர்க்க வேண்டிய அமைச்சு எது?

புத்திசாலிகளும் வயதானவர்களும் இல்லாத  அமைச்சரவை

***

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை

இந்த உலகத்தில் விசுவாசமாக இருக்க வேண்டிய இடம்?

அரசாங்க சேவைகளில்.

***

டிசம்பர் 24  புதன்கிழமை

உயிரினும் அரியது எது?

குலதர்மமும் சத் சங்கமும்

***

டிசம்பர் 25  வியாழக்கிழமை

ஆலமரம் போல அழியாதது எது?

நல்லோருக்குக் கொடுத்த தானம் /நன்கொடை

***

டிசம்பர் 26  வெள்ளிக்கிழமை

எல்லோரிடமுள்ள ஆயுதம் எது?

எதையும் நியாயத்தின் அடைப்படையில் நிரூபிப்பது.

***

டிசம்பர் 27  சனிக்கிழமை

எல்லோருக்கும் தாயார் யார்?

கோ மாதா/ பசு மாடு

***

டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை

எது ஒருவனுடைய படை /சேனை?

துணிவு

***

டிசம்பர் 29  திங்கட்கிழமை

எது மரணத்துக்குச் சமம் ?

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை .

***

டிசம்பர் 30  செவ்வாய்க்கிழமை

விஷம் எங்கே இருக்கிறது?

கெட்ட மனிதர்களிடத்தில்

***

டிசம்பர் 31  புதன்கிழமை

தீண்டத்த தகாதவன் போன்ற  நிலை ஒருவனுக்கு எப்போது ஏற்படுகிறது?

கடன் வாங்கிய பின்னர் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது

–subham—

Tags- டிசம்பர் 2025 காலண்டர்,  ஆதி சங்கரர் பொன்மொழிகள், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

Ancient Tamil Encyclopaedia -Part 36; One Thousand Interesting Facts -Part 36(Post No.15,223)

Written by London Swaminathan

Post No. 15,223

Date uploaded in London –  28 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 36

அருந்ததிகடவுள் வாழ்த்து பரத்தை  மணிமிடை பவளம்

ITEM 215

Akananuru verse 14 was composed by poetess Okkur Maasaaththiyaar. Almost all the Sangam books and Tirukkural have Invocation to God and in Tamil it is written as Kadavul Vaazththu. That word is found in this verse! Very interesting!

A woman is waiting for her man and the bard/singer is praising the God by playing Sevvazi Raga on his Yaaz instrument.

We learn from this poem hat Tamils praised God in music when something good happened.

***

216

Another interesting thing in this poem is the colour contrast.

Akanauru is divided into three big sections:

Kalitriyaanai nirai- verses 1 to 120

Manimidaipavalam – verses  120 to 300

Niththilak kovai – verses 300 to 400

Mani-midai-pavalam means between sapphire and coral- a colour contrast.

That word is used for poems from 120 to 300. But we come across the word here for the first time.

She described the forest land where the multicoloured cochineal insects are moving amidst the sapphire-coloured Kaaya flowers on the ground. A beautiful colour combination.

***

217

Both Mani and Pavala/Pravala are in Sanskrit as well.

Nemi- is another Sanskrit word used by the poetess to mention the Wheel of the chariot.

***

218

Kuthirai for horse is used in the verse. Most of the poets used Pari for horse. My research shows it is the jumbled form of Turaga = Horse= Turkey=Land of horses or land of Horse training.

The basis for my guess is Kikkuli’s horse manual of 1400 BCE found in Turkey with Sanskrit instructions.

In colloquial Tamil we find such jumbled words where Madurai becomes Marudai, Kuthirai becomes Kuruthai. When we repeat the word quickly, we get Thuraga.

Tamils interpret it as Jumping (Kuthi) animal.

There are more animals described by the poetess in this verse which is not uncommon.

***

Akananuru verse 14 அகநானூறு பாடல் 14. முல்லைத் திணை பாடியவர் – ஒக்கூர் மாசாத்தனார்

பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி

காயாஞ் செம்மற் றாஅய்ப் பலவுட

னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு

மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய

வஞ்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்

திரிமருப் பிரலை புல்லருந் துகள

முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்

குறும்பொறை மருங்கின் நறும்பூ வயரப்

பதவுமேய லருந்து மதவுநடை நல்லான்

வீங்குமாண் செருத்தற் றீம்பால் பிலிற்றக்

கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு

மாலையு முள்ளா ராயிற் காலை

யாங்கா குவங்கொல் பாண வென்ற

மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்

செவ்வழி நல்லியா ழிசையினென் பையெனக்

கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்நிறுத்

தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே

விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்

கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்

கார்மழை முழக்கிசை கடுக்கு

முனைநல் லூரன் புனைநெடுந் தேரே

Those who need the English version may get it from Vaidehi.

***

219 அருந்ததி

Akananuru verse  16 by Saakalaasanaar is interesting for two things

1.Beautiful description of a baby boy

2.Even a prostitute is praised as chaste Arundhati

Tamil men visiting prostitutes is described throughout Akam literature. Except Kailasapathy, Sri Lankan Tamil scholar, nobody dared to talk about it.

பரத்தை= Para Stree= Prostitute

Paraththai is derived from Sanskrit Para Stree = Other woman apart from one’s wife.

Here a prostitute comes near the baby who is playing with his toy cart in the street, and looks around. When she was sure that nobody was around lifted the baby boy and hugged him and said You are my life. The boy looked like her lover. But the real mother of the boy was watching all these things from behind the door in her house. She came out, hugged her and said “You are also his mother and you are like the divine woman in the sky (Chaste Arundhati)”. And that woman scratched the ground with her toe feeling very shy and she looked like a thief caught red handed.

***

220

Can a courtesan be compared with the divine Arundhati? If we go by Sanskrit literature where we see Vasantasena and Charudatta, then we think it is possible. Some women born as prostitutes still mentally remain pure but bodily impure.

I have explained it in my two part article Three Prostitutes with Buddha, Jesus and Sri Ramakrishna Paramahamsa.

***

221

Children and prostitutes were wearing golden jewellery. It shows the wealth of India.

We have already seen about the otters living in the rivers, which are rarely found in Tamil Nadu now.

The toy cart would remind us of Mrchchakatika ,a beautiful Sanskrit drama written by Sudraka. Pandithamani M Kathiresan Chettiyar has translated it into Tamil (Manniyal Siruther).

One more point: Puthalvan in Tamil is derived from Putra, a Sanskrit word. Ancient Tamils never hesitated to use Sanskrit words.

***

Akanauru Verse 16- அகநானூறு 16, சாகலாசனார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்

தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,

மாசு இல் அங்கை மணி மருள் அவ்வாய்,

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்  5

தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே,

கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும்

காணுநர் இன்மையின் செத்தனள், பேணிப்

பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இளமுலை

வருக மாள என் உயிர்” எனப் பெரிது உவந்து  10

கொண்டனள், நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்,

“மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?

நீயும் தாயை இவற்கு” என யான் தற்

கரைய வந்து விரைவனென் கவைஇ,

களவு உடம்படுநரின் கவிழ்ந்துநிலம் கிளையா  15

நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்

பேணினென் அல்லனோ மகிழ்ந, வானத்து

அணங்கு அருங்கடவுள் அன்னோள் நின்

மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?  19

For English translation of the poem go to

—Subham—

Tags- 36 Ancient Tamil Encyclopaedia -Part 36; One Thousand Interesting Facts -Part 36, Arundhati, Invocation to God, Colour contrast, Sapphire and coral, அருந்ததி, கடவுள் வாழ்த்து, பரத்தை, மணிமிடை பவளம்