தமிழ் மறை எனப்படும் திருக்குறளைத்
தந்த திரு வள்ளுவரிடம் 30 ++++ கேள்விகளைக் கேட்டவுடன் அவர் நறுக்கென்று மிகச் சுருக்கமாக அளித்த
பதில்கள் இந்த மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.
முக்கிய விழாக்கள் – ஏப்ரல் 6 -யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, 13-இராமநவமி, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு/விகாரி வருடம் பிறப்பு, (17- மதுரையில் மீனாட்சி
திருக்கல்யாணம்,
18-எதிர் சேவை, 19-கள்ளழகர் வைகை ஆற்றில்
எழுந்தருளல்); 17- மஹாவீர் ஜயந்தி’; 19- புனிதவெள்ளி
சாந்தாநந்த சுவாமிகளை தரிசித்தது முதல் ராஜம் ஐயர்க்கு உலக
வேலைகளில் ஆர்வம் குறைந்து நிஷ்டையும் தியானமும் அதிகரித்தது.சென்னை செல்வந்தர்கள்
ஒரு பத்திரிக்கை நடத்தி அதில் சாந்தானந்த சுவாமிகளின் உபந்யாசங்களையும் வேதாந்த
விஷயத்தையும் வெளியிட விரும்பினர்.
அந்த
நேரத்தில் சுவாமி விவேகாநந்தர் சென்னை விஜயம் செய்ததால், அவரும் ராஜம் ஐயரும் சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டது. இருவரும் கொஞ்ச நேரம் பேசினர். சுவாமிகளும் ‘’பிரபுத்த பாரதம் என்ற பெயரில் (விழிப்படைந்த
பாரதம்) பத்திரிக்கையை நடத்துங்கள் என்று
கூறி, அது எப்படி இருக்க வேண்டும் என்று
நீண்ட அறிவுரை வழங்கினார்.
முதல்
ஆண்டுக்குள்ளேயே 1500
சந்தாதாரர்
4500 சந்தாதரர்களாக உயர்ந்தது . இது ராஜம்
ஐயரின் பெருமையைக் காட்டுவதாக இருக்கிறது.
இரண்டு
ஆண்டுகளுக்கு பத்திரிக்கை மிகவும் பிரமாதமாக ராஜம் ஐயரின் கட்டுரைகளுடன் வெளி
வந்தது. அவர் அகால மரணம் அடைந்தவுடன் ‘ராஜம் ஐயர் இறந்துவிட்டதால் பத்திரிகையை நிறுத்துகிறோம்‘ என்று அறிவிப்பு வெளியிட்டு
நிறுத்திவிட்டனர்.பின்னர் இப்பத்திரிக்கை வடக்கிலிருந்து
வெளியானது.
சுவாமி
விவேகாநந்தரின் நீண்ட அறிவுரை, ராஜம் ஐயரின் படைப்புகள் , பத்திரிக்கையின் நோக்கம் ஆகியவற்றை
இணைப்பில் காண்க.
அருளாளர்களும் மகான்களும், கவிஞர்களும், அறிஞர்களும் எதை எதை
வேண்டும் என்று கூறியுள்ளார்கள்?
சரி, பார்ப்போமே என்று உள்ளே இறங்கினால் சுரங்கம் போல வேண்டும்
என்பது பற்றிய பட்டியல் வருகிறது, வருகிறது, வந்து கொண்டே இருக்கிறது.
சில ‘வேண்டும்’-களை இங்கு பார்ப்போம்.
முதலில் நினைவுக்கு வருபவர் வள்ளலார். அவரது ஒருமையுடன் உனது
திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பது மனதைக் கவரும், மனதிற்கு இதமளிக்கும்,
உத்வேகமூட்டும், அறிவுரை ஊட்டும் ஒரு பாடல்.
எத்தனை அற்புதமான பாடல். மிகத் தெளிவாக ஒரு
மனிதனுக்கு வேண்டியவற்றைப் பட்டியலிட்டுத் தந்து விடுகிறார் வள்ளலார் பெருமான்.
இந்தப் பாடலை சாவித்திரி பாடும்படியான காட்சி இடம் பெறும் படம் கொஞ்சும் சலங்கை. சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் இது. தொடர்ந்து அதே காட்சியில் ஜெமினிகணேசன் நாகஸ்வரம் வாசிக்கிறார். பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசை நம்மை மயக்கும்.
சரி, பாரதியார் என்ன
வேண்டுகிறார் என்று பார்த்தால் அது ஒரு பெரிய பட்டியலாக நீளுகிறது.
காணி நிலம் வேண்டும்
என்ற பாரதியாரின் பாடல் இடம் பெறும் படம் அந்தமான் கைதி.
2.33 நிமிடம்
நீடிக்கும் பாடலை எம்.ஜி.ஆரும் கதாநாயகியும் பாடும் காட்சி இடம் பெறுகிறது.1951ஆம்
ஆண்டு வெளியான அந்தமான் கைதி படத்தில் இடம் பெறுகிறது. பாடலைப் பாடிய்வர்கள்
சிதம்பரம் ஜெயராமனும் எம் எல் வசந்தகுமாரியும்.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!