லண்டனில் எல்லோருக்கும் 13 கிலோ தங்கம் கிடைக்கும்!

IMG_8016

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2302

Time uploaded in London :– 9-20 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7982

லண்டனுக்கு வருவோர் அதிர்ஷ்ட சாலிகள்! லட்சுமி கடாக்ஷம் நிறைந்தவர்கள்!. தங்கக் கட்டி கிடைக்கும்! அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல! 13 கிலோ தங்கம், அதாவது 13,000 கிராம் தங்கம்! தொடலாம், எடுக்கலாம், தூக்கலாம். ஆனால் வீட்டுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

லண்டனில் த்ரெட்நீடில் தெருவில் இங்கிலாந்து வங்கியின் காட்சியகம் (Bank of England Museum in Thread needle Street, London) உள்ளது. அங்கு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் 13 கிலோ தங்கக் கட்டியை வைத்துள்ளனர் அதன் கீழே ஒரு கை நுழையும் அளவுக்கு ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர். எல்லோரும் அதைத் தூக்கிப் பார்க்கலாம். நானும் முயன்றேன். ஒரு கையால் தூக்குவது கடினம்தாம். இவ்வளவுக்கும் அந்தக் கட்டி முக்கால் அடி நீளம் கூட இல்லை.

IMG_7992 IMG_7996

இதன் விலை என்ன?

இந்திய மார்க்கெட்டில் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை

ரூபாய் 2600. அப்படியானால் 13,000 கிராம் x ரூ 2600 = ???

நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள்!! இது உங்களுக்கு இன்றைய வீட்டுப் பாடம் (ஹோம் ஒர்க்).

மத்திய லண்டனில் பாங்க் ஸ்டேஷன் அருகில் இந்த மியூசியம் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் காப்பகத்தில் டன் கணக்கில் தங்கக் கட்டிகள் இருக்கின்றன. நமக்கு மாதிரிக்காக ஒரு சிறிய கட்டியை மேலே வைத்தூள்ளனர்.

இந்த மியூசியத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக வணிகவியல், வங்கிகள் பற்றிப் படிப்போருக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், விளையாட்டு மூலம் தெரிந்துகொள்ள பணவீக்கக் கருவி ஒன்று வைத்திருக்கிறார்கள். அதை நெம்புகோல் போல அழுத்தினால் பணவீக்கம் மேலே செல்லும். அருகிலேயே, பணவீக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இங்கிலாந்து வங்கி அதை இரண்டு சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவது எப்படி? என்று பல பெரிய போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

IMG_7991

இங்கிலாந்து வங்கி, இந்தியாவின் ரிசர்வ் பாங்கு போன்றது. 400 ஆண்டுகளுக்கு முன் வங்கி தோன்றியதிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி, மாற்றங்கள், கரன்ஸி, நாணயம் அச்சிடுவது எப்படி? என்பனவற்றை விளக்கி வீடியோ ஆடியோ காட்சிகள் அமைத்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக பல கரன்ஸி துண்டுகளை வெட்டி இணைக்கும் புதிர் வைத்து இருக்கிறார்கள். நான் திங்கட் கிழமை அங்கே போன போது எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள்.

பாலிமர் (Polymer Currency) கரன்ஸி வருகிறது!!

காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து சேதம் அடைவதால் உலகில் முப்பதுக்கும் மேலான நாடுகள் பாலிமர் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துப் பயன்படுத்துகின்றனர். இனி பிரிட்டனிலும் பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப் போகிறார்கள். கொஞ்ச காலத்தில் காகித கரன்ஸி நோட்டுகள் அரிய பொருள் ஆகி விடும்.

இந்த மியூசியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த தினசரி உபயோக நாணயங்கள், ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை விலைக்கும் விற்கிறார்கள். காசுள்ளவர்கள் வாங்கலாம்.

ஆனால் மியூசியத்தைப் பார்க்க கட்டணம் இல்லை. 13 கிலோ தங்கக் கட்டியைத் தொடவும் தூக்கவும் கட்டணம் இல்லை. அந்த ‘த்ரில்’ ஒன்றே போதுமே. லண்டனுக்கு வந்தால் கட்டாயம் பாருங்கள்.

IMG_7962

இந்தியாவில் உள்ள வங்கி மியூசியங்களிலும் இப்படிப் பல உத்திகளைக் கையாண்டால் மக்களின் பொது அறிவு மிகும்!

இங்கிலாந்து வங்கியில் லெட்சுமி!

பிரிட்டனின் செல்வச் செழிப்புக்கு என்ன காரணம்?

நம்முடைய கோஹினூர் வைரம் போன்ற பல அபூர்வ, அதிர்ஷ்டகரமான வைரங்களையும், செல்வம் கொடுக்கும் பல மர்ம சிலைகளையும் பிரிட்டிஷ்காரகள் வைத்திருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் பொம்மை போலத் தோன்றும். ஆனால் அதன் ரஹசியங்களைத் தக்கோரிடம் அறிந்து இதை வைத்துள்ளனர். இங்கிலாந்து வங்கி மியூசியத்தில் லெட்சுமியின் சிலை கிரேக்க பாணியில் இருக்கிறது. தான்ய லெட்சுமியை, கிரேக்கர்கள் செரிஸ் (Ceres= Sri) என்பர். ஸ்ரீ = திரு என்னும் லெட்சுமியின் பெயரே இப்படி செரி என்று மறுவியுள்ளது. நமது அருகிலுள்ள ஸ்ரீலங்காவில் கூட ஸ்ரீ என்பதை ‘சிரி’ என்பர். சிரிமாவோ பண்டாரநாயகெ (நாயக) என்பர்.

இந்த மியூசியத்தில் ஆடியோ, வீடியோ காட்சிகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். நான் போன போது பிரான்ஸ், ஜெர்மனியிருந்து வந்த பள்ளி மாணவ, மாணவியர் — பல கருவிகளை இயக்கி பல விஷயங்களைக் கற்பதைப் பார்த்தேன். 400 ஆண்டுகளுக்கு   முன் லண்டன் எப்படி இருந்தது, வங்கி எப்படி துவங்கியது போன்றவை பொம்மை உருவில் காட்டப்பட்டுள்ளன. ஹெண்டல் என்ற இசை மேதை ஒரு வங்கிக் கணக்கர் என்ற வியப்பான செய்தியும் படம் மூலம் அறிந்தேன்.

IMG_7984 IMG_7985

மாதத்துக்கு ஒரு வியாழக்கிழமையன்று வங்கியின் கவர்னர்கள் கூட்டம் நடைபெறும். அதை மக்கள் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து நிற்பர். காரணம் என்னவெனில் வங்கியின் வட்டி விகிதம் உயருமா, குறையுமா, அதேயளவு நீடிக்குமா என்று அக்கூட்டம் முடிவு செய்யும். வட்டி விகிதம் கூடினால், ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் கட்டும் வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயரும். இந்த முடிவு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மியூசியத்தில்  அறியலாம். சின்ன மியூசியம்தான். ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டால் பக்கத்திலுள்ள கில்ட் ஹால் ஆர்ட் காலரி (இலவசம்),  சாமுவேல் ஜான்சன் மியூசியம் (கட்டணம் உண்டு) ஆகியவற்றையும் பார்க்கலாம். அருகில் லண்டன் மியூசியமும் உளது.

IMG_7951 IMG_7976 IMG_8007 IMG_8013

மாணவர்கள் விளையாடுவதற்காக பண வீக்கக் கருவி, வெட்டி ஒட்டும் புதிரகள் முதலியன வைத்துள்ளனர்.

–சுபம்–

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

swan1

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

Written  by London swaminathan

Date: 2 November 2015.

Post No:2294

Time uploaded in London :–  7-41 (காலை)

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).சர்வாரம்பா தண்டுலப்ரஸ்த மூலா:

எல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு!

ஒப்பிடுக:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.

xxxx

2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)

எங்கு அவை ஒழுக்கமுடையோர்

இருக்கிறார்களோ அதுவே சபை!

ஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை!!

xxx

3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)

முதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை

xxx

4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)

சூரியன் தன்னதனியனாகச் சொல்கிறான்

xxx

5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)

எங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது

xxx

6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா

சொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)

ஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த

xxx

7).ஸ்வாத்யாய  ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)

வேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்

xxx

swan2

8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்)

அன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்

Xxxx

9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை! பின்னர் என்ன வேறுபாடு?

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

xxx

crane

10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)

தலைக்கு மேலே பாம்பு! இமய மலையில் மூலிகைகள்!

(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்?)

ஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.

சாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்

–சுபம்–

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

IMG_7834 (2)

Written  by London swaminathan

Date: 31 October 2015.

Post No:2289

Time uploaded in London :–  10-05 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

இதோ சில சம்ஸ்கிருதப் பழமொழிகள்:–

5b9f3dfbd232bad184e25ce9f3059f23

நகைச்சுவை நடிகர்கள், முட்டாள்கள் போல நடித்து நமக்கு அறிவூட்டினர்.

முட்டாள்களின் (அவ) லட்சணம்

தூரத: சோபதே மூர்கோ லம்பசாடபடாவ்ருத:

தூரத்திலிருந்து பார்க்கும்போது பகட்டான ஆடைகளோடு முட்டாள் பிரகாசிக்கிறான்.(பக்கத்தில் போனால் வண்டவாளம் தெரிந்துவிடும்)

அர்தோ கடோ கோஷமுபைதி நூனம்

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது (அதிகம் பேசுபவன் மூடன்)

அசுபம் வாக்யமாதத்தே புரீஷமிவ சூகர: — மஹாபாரதம்

எப்படிப் பன்றிகள் மலத்தை நாடிப் போகின்றனவோ, அது போல மூடர்கள் சொல்லத் தகாத சொற்களையே (கெட்ட வார்த்தை) நாடுவர்.

தாவஸ்ச சோபதே மூர்கோ யாவத் கிஞ்சின்ன பாஷதே – ஹிதோபதேசம்

எதுவரை மூர்கர்கள் (முட்டாள்கள்) வாயைத் திறப்பதில்லையோ அதுவரை அவர்கள் சமாளிப்பார்கள் (பேசத் துவங்கினால் யார் என்று தெரிந்து விடும்!!)

ந சோபதே சபா மத்யே ஹம்ஸ மத்யே பகோ யதா – ஹிதோபதேச/ சாணக்ய நீதி தர்பண

சபை மத்தியில் முட்டாள்கள் இருப்பதானது, அன்னப் பறவைகளின் இடையே கொக்கு நிற்பதற்குச் சமம்.

(அன்னமும் கொக்கும் வெள்ளைதான் ஆயினும் எளிதில் இனம் கண்டு விடலாம்; அது போல அறிஞர் சபையில் முட்டாள்கள் உட்கர்ந்தாலும் அவர்களை கொக்கு போலக் கண்டுபிடித்து விடலாம். வானத்தின் மீது மயிலாடக் கண்ட வான் கோழி தானும் தன் பொல்லா சிறகை விரித்தாடிய கதைதான் இது!!)

-சுபம்–

ஒரு குட்டிக் கதை: கள்ள நாணயம், கள்ள மனம்

counterfeit-coins

படம்– அமெரிக்க கள்ள நாணயம்

Compiled  by London swaminathan

Post No.2278

Date: 27 October 2015

Time uploaded in London: 10-36 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு வாத்தியார் (ஆசிரியர்) இருந்தார். அவர் பெயர் வி.ஜி.சீனிவாசன். அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது:

“நான் கள்ள நாணயம், போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டாலோ, அவை என் கைக்கு வந்தாலோ உடனே அவைகளை இரண்டு துண்டாக வெட்டி, யாரும் எடுக்க முடியாதபடி சாக்கடையில் தூக்கி எறிந்து விடுவேன். நீங்களும் அப்படிச் செய்ய வேண்டும்” என்று ஆசிரியர் வி.ஜி.எஸ் சொன்னார். அது முதல் நானும் அதைச் செய்துவருகிறேன். இதற்கு அவர் சொன்ன காரணங்கள்:

1.ஒருவர் நம்மை கள்ள நாணயத்தைக் கொடுத்து ஏமாற்றுகிறார். ஏமாந்ததால் நமக்குக் கோபமும் வெறுப்பும், மனக் கசப்பும் ஏற்படுகிறது.

2.கொஞ்ச நேரம் கழித்து கோபம் தணிந்தவுடன், அதே காசை நாமும் நைஸாக வேறு ஒருவருக்குக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறோம்.

3.அசந்து மறந்து அவர் அதை வாங்கிக் கொண்டால், அவரும் மற்றவரை ஏமாற்றத் தயாராகிறார்.

4.யாரோ ஒருவர் செய்த தப்பு, ஆயிரக்கணக்கான ஏமாளிகளையும், குற்றவாளிகளையும் உருவாக்குகிறது.

5.இதைத்தடுக்க ஒரே வழி—அந்த கள்ள நாணயத்தை அழிப்பதுதான்.

இது ஏன் என்னுடைய நினைவுக்கு வந்தது என்றால், சுவாமி ராமதாஸ் எழுதிய ஒரு கதையை ஆங்கிலப் புத்தகத்தில் படித்தேன். இதோ அந்தக் கதை:–

ஒரு ஊரில் ஒரு சாது (துறவி) இருந்தார். அவர் நன்கு தையல் கலையை அறிந்திருந்தார். ஆகையால் எல்லோர் கொண்டுவரும் துணிகளையும் தைத்துக் கொடுப்பார். அவர்கள் கொடுக்கும் பணத்தை அன்போடு வாங்கிக் கொள்வார்.

ஒரு பெரிய வணிகனும் அவரைப் பயன் படுத்திவந்தான். வண்டி வண்டியாக துணிகளைக் கொண்டுவந்து இறக்குவான். இந்தத் துறவி அவைகளைத் தைத்தவுடன் காசு (கூலி) கொடுத்துவிட்டு உடைகளை எடுத்துச் செல்வான். ஆனால் அவன் கொடுக்கும் காசு எல்லாம் கள்ள நாணயங்கள். துறவிக்கும் தெரியும் அவை எல்லாம் கள்ள நாணயங்கள் என்று. ஆனால் அமைதியாக அவைகளை வாங்கிக் கொள்வார்.

ஒருநாள் அந்தத் துறவி அடுத்த ஊருக்குப் போக வேண்டி இருந்தது. உடனே சீடனை அழைத்து தையல் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். வழக்கமான வாடிக்கையாளர்கள் வந்து தையல் கூலி கொடுத்துவிட்டுத் துணிகளை எடுத்துச் சென்றனர். வழக்கமாக துறவியை ஏமாற்றும் கள்ள வணிகனும் வந்தான். நிறைய துணிகளை வாங்கிக் கொண்டு, வழக்கம்போல கூலியாகக் கள்ள நாணயங்களைக் கொடுத்தான். துறவியின் சீடன் அதைக் கண்டு பிடித்துவிட்டான். துணிமணிகளைக் கொடுக்க முடியாது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டான்.

9cfts

படம்- பிரிட்டிஷ் கள்ள நாணயம்

ஊரிலிருந்து திரும்பி வந்த துறவி, யார் யார் வந்தனர், என்ன நடந்தது என்ற விஷயங்களை எல்லாம் கேட்டறிந்தார். அப்பொழுது சீடனும், ஏமாற்ற வந்த வணிகன் பற்றியும் அவன் கொடுத்த கள்ள நாணயங்கள் பற்றியும் அவனைத் திருப்பி அனுப்பியது பற்றியும் சொன்னான்.

உடனே துறவி, அவனைக் கடிந்துகொண்டார். ஏன் அவனைத் திருப்பி அனுப்பினாய்? அவன் மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் நான் அவன் தந்த கள்ள நாணயங்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். அவை அனைத்தையும் தோட்டத்தில் புதைத்துவிட்டேன் என்றார்.

இதுவே துறவிகளின் இயல்பு.அவர்கள் எல்லோருக்கும் உதவுவதோடு, மற்றவர்களைப் பாதுகாப்பதும் அவர்தம் பணி.

(தொடர்ந்து ஏமாற்றுபவர்களை இதுபோலப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்பதல்ல. தற்காலத்தில், சட்டபூர்வ வழிகளில் அவர்களைச் சமாளிக்கலாம்–சுவாமி.)

–சுபம்–

மனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே:சாணக்கியன்

no-talking

Compiled  by London swaminathan

Post No.2275

Date: 26 October 2015

Time uploaded in London: 16-01

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருத/தமிழ் பொன்மொழிகள்

1).புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

2).அக்ருத்யம் நைவ கர்தவ்யம் ப்ராணத்யாகே அப்யுப்ஸ்திதே- பஞ்சதந்திரம்

பொருள்:உயிரே போகுமென்றாலும் செய்யக் கூடாத (தீய) செயல்களைச் செய்யக்கூடாது.

3).ஒப்பிடுக (ஹிந்தி): ப்ராண் ஜாயேன் ந வசன் ஜாயேன்

4).ஈன்றாள் பசி காண்பாண் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை – குறள் 656

Xxx

மனசா சிந்திதம் கார்யம் வசசா ந ப்ரகாசயேத்

அன்யலக்ஷிதகார்யஸ்ய யத: சித்திர்ன ஜாயதே –

—-சாணக்ய நீதி தர்பணம்

மனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே; இன்னொருவரின் பார்வையில் விழுந்தால்  அது வெற்றியடையாது.

xxx

அதிரபசக்ருதானாம் கர்மணாமாவிபத்தேர்பவதி

ஹ்ருதயதாஹீ சல்யதுல்யோவிபாக: — பர்த்ருஹரி

பொருள்: சிந்தித்துச் செயல்படாவிட்டால் இறுதிவரை அது முள் போலத் தைக்கும்

ஒப்பிடுக: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 467

Xxx

அபரிக்ஷ்ய ந கர்தவ்யம், கர்தவ்யம் சுபரிக்ஷிதம் – பஞ்சதந்திரம்

பொருள்:-ஆராயாமல் எதையும் செய்யாதே, நன்கு ஆராய்ந்தபின்னரே எதையும் செய்ய வேண்டும்.

பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்

இருள் தீர எண்ணிச் செயல் – குறள் 675

Xxx

IMG_7040 (2)

ஆமுகாபாதி கல்யாணம் கார்ய சித்திம் ஹி சம்சதி – கதாசரித் சாகரம்

பொருள்:– செயல் செய்யும்போது மங்களகரமான விஷயத்துடன் துவங்கினால் அது வெற்றியடையும்.

–Subham–

வள்ளுவர் குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!

stick2

Written by London swaminathan

Post No.2272

Date: 25 October 2015

Time uploaded in London: 6-37 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சரக சம்ஹிதையில், திருக்குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!

வாக்கிங் ஸ்டிக் பற்றி வள்ளுவர் சொன்னார்:

கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றன் துணை –குறள் 414

பொருள்:– ஒருவன் தானே கற்றுத் தெரிந்துகொள்ளவில்லை என்றாலும், கற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவனுக்கு கஷ்டம் (ஒற்கம்) வரும்போது, அது ஊன்றுகோல் (கைத்தடி, வாக்கிங் ஸ்டிக்) போல உதவும்.

stick3

ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் சத்ரூணாம் ச நிசூதனம்

அவஷ்டம்பனமாயுஷ்யம் பயக்னம் தண்டதாரணம்

–சரக சம்ஹிதா 5-102

கைத்தடியின் ஐந்து உபயோகங்கள்

ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் = கீழே விழுவதிலிருந்து தடுக்கும்

சத்ரூணாம் நிசூதனம் = எதிரிகளைத் தாக்க உதவும்

அவஷ்டம்பனம் = ஊன்றுகோலாக உதவும்

ஆயுஷ்யம் = நீண்ட ஆயுள் கிடைக்கும்

பயக்னம் = பயத்தைத் தடுக்கும்

அந்தக் காலத்தில் முதியோர் நலனில் எந்த அளவுக்கு அக்கறை இருந்தது என்பதை மேற்கூறிய இரண்டு பாடல்களும் காட்டும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே முதியோர் விஷயங்களை எழுதியும் வைத்தனர்.

இதோ மேலும் ஒரு எடுத்துக்காட்டு:

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி  யே ந வதந்தி தர்மம் – நீதி சதகம் 3-58

எங்கு முதியோர் இல்லையோ அது சபை இல்லை;

தர்மத்தை உபதேசிக்காத முதியோர், முதியோரே அல்ல.

என்று நீதி சதகம் கூறும்.

–சுபம்–

உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை

India-Bhudda-Stamp

Post No.2269

Date: 24 October 2015

Time uploaded in London: 13-12

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பழங்கால பௌத்த மத நூலில் காணப்படும் ஒரு சுவையான உண்மைக் கதை:–

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் மதுரா நகரத்தில் உபகுப்தர் என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் வாசவதத்தை என்னும் ஒரு விலைமாது (வேசி) இருந்தாள். அவளுடைய வேலைக்காரி ஒரு நாள் உபகுப்தர் கடைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் சென்றாள். உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து தன்னுடைய எஜமானியான வாசவதத்தையிடம் அவருடைய ரூப லாவண்யத்தை வருணித்துச் சொன்னாள். அதைக் கேட்டது முதல் வாசவதத்தையின் மனம் சஞ்சலம் அடைந்தது. நாளாக ஆக வாசவத்தையின் ஆவலும் ஆசையும் அதிகரித்தது.

ஒருநாள், ‘உங்களுடைய முக தரிசனத்துக்காக நான் ஏங்குகிறேன்’ என்று ஒரு காதல் கடிதம் எழுதி அதை வேலைக்காரி மூலம் உபகுப்தருக்கு அனுப்பி வைத்தாள். ‘நானோ ஒரு ஏழை; என் முக தரிசனத்தினால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் நானே ஒரு நாள் உன்னைப் பார்க்கவரும் நிலை வரும்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வாசவதத்தையின் மனம் அடங்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். ‘உங்களுடைய காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் முகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்புமட்டும் கொடுத்தால் போதும் என்று பிரார்த்திக்கிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாமென்று எழுதி அனுப்பினாள். அவர் அதை வாசித்துவிட்டு பழைய பதிலையே சொல்லிவிட்டார்.

காலம் உருண்டோடியது. மதுரா நகரத்தில் ஒரு பெரிய கொலை நடந்தது. வாசவதத்தையின் காதலன் அவளுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்தான். ஊர் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. அரசனுடைய சேவகர்கள் வந்து, கொஞ்சமும் விசாரிக்காமல், அவள் விலை மாது என்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு காதலனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் கூறிவிட்டனர்.

buddha bhutan

பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பாரத நாட்டில் கிடையாது. ஆகையால் மன்னனும் இவளுடைய அங்கங்களை சிதைத்து அவலட்சணமாக்கி ஊரை விட்டு வெளியே விரட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டான். வாசவதத்தை என்னும் பேரழகி, அங்கம் சிதைந்த நிலயில் கோரமாக காட்சி தந்தாள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதால் சுடுகாட்டில் வசித்தாள். என்றும் விசுவாசம் மாறாத வேலைக்காரி மட்டும் அவளுடனே சென்று, வாசவ தத்தைக்குத் துணையாக சுடுகாட்டில் வசித்தாள்.

இந்தச் செய்தி பலசரக்கு வியாபாரி உபகுப்தரின் காதையும் எட்டியது. உடனே அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வந்தார். வாசவதத்தையின் வேலைக்காரி, உபகுப்தரை அடயாளம் தெரிந்து கொண்டு, வாசவதத்தைக்கு இன்னாரென்று அறிமுகம் செய்துவைத்தாள். அங்கமெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதே என்று மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள். துக்கமும் வெட்கமூம் அவளை வாட்டி வதைத்தது.

உபகுப்தரோவெனில், கொஞ்சமும் தயக்கமின்றி வாசவதத்தையின் அருகில் போய் அமர்ந்தார். “ஸ்வாமி இந்த உடலானது அன்றலர்ந்த செந்தாமரை போன்று திவ்ய தேஜசுடன் இருந்தபோது உங்களைப் பார்க்க கெஞ்சினேனே; விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்துகொண்டு காண்போர் மனதை எல்லாம் வசீகரித்தேனே; இப்பொழுது துரதிருஷ்டமும், கஷ்டமும் என்னை வதைக்கின்றன. அப்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இப்பொழுது வந்தீர்களே; வெறுக்கத்தக்க சரீரம்படைதவளாகி விட்டேனே” என்று வருந்திச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட உபகுப்தர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பிறகு அவர் நிதானமாக, “வாசவதத்தாய்! உன்னைப் பார்க்க இதுவே உரிய தருணம். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை உன்மூலம் அறிந்து கொண்டேன். இனி வருந்திப் பயனில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்து; மன நிம்மதி கிடைக்கும்” என்று உபதேசம் செய்தார். அவருடைய வாக்கு என்னும் அமிர்ததாரையில், வாசவதத்தையின் துக்காக்னி அணைந்தது. அவள் பெரும் ஆறுதல் அடைந்தாள். பின்னர் அவள் புத்த சங்கத்தை நாடிச் சென்று இறுதிவரை அங்கிருந்து சாந்தி பெற்று உயிர் நீத்தாள்.

Bud16

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் (தருமம்) சரணம் கச்சாமி!!

சங்கம் சரணம் கச்சாமி!!!

(உபகுப்தர், வாசவதத்தை என்ற பெயர்கள் பல கதைகளில் வரும். ரவீந்திர நாத் தாகூர் எழுதிய உபகுப்தர் கவிதையில் அவர் ஒரு புத்த மத துறவி போல காட்டப்படுகிறார். நான் எழுதிய கதை அசோகர் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது)

–சுபம்–

மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்

secretdoctrineblavatsky

Written by S NAGARAJAN

Post No.2264

Date: 22 October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 blavatsky1

.நாகராஜன்

தியாஸபி இயக்கம்

தியாஸபி இயக்கம் பிரம்மாண்டமான ஒன்றாக 19ஆம் நூற்றாண்டில் உருவானதும் அதில் சென்னை முக்கியப் பங்கு ஆற்றியதும் வரலாறு நமக்குத் தரும் உண்மைகள்.

ஆவி உலக ஆராய்ச்சிகள், அதி தேவ புருஷர் தோற்றம் என்று பல்வேறு புதுச் செய்திகளை உலக மக்கள் சற்று அதிசயத்துடன் பார்த்தனர்.

மஹாகவி பாரதியார் தியாஸபியை கிண்டல் செய்தார். ஸ்வாமி விவேகானந்தரோ தியாஸபியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விட்டார்.

எந்த ஒருவரை மிக பிரம்மாண்டமான நிலையில் தியாஸபி உட்கார வைத்ததோ அந்த மாபெரும் சிந்தனா புருஷர் ஜே கே (ஜே கிருஷ்ணமூர்த்தி) தியாஸபியைத் தாமே துறந்த போது, கடைசி மரண அடியாக அது அமைந்தது.

இருந்தாலும் வேகமாக அது வளர்ந்ததற்கான காரணம் மேடம் ப்ளாவட்ஸ்கியின் அற்புத ஆற்றல்கள்.

 670-Theosophical-Society

ப்ளாவட்ஸ்கியின் அற்புதங்கள்

சரித்திரத்தை அலசும் போது ஸ்காஃப் (Pskoff) என்ற நகரில் அவர் ஆற்றிய அற்புதங்கள் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றன:

  • மனதில் நினைக்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான பதில்களை அவர் தந்தார். அதாவது தாட்ரீடிங் (thought reading) அவருக்குக் கை வந்த கலையாக இருந்தது
  • பல்வேறு வியாதிகளுக்கு லத்தீனில் மருந்துகள் எழுதித் தரப்பட்டு பின்னால் குணப்படுத்தப்பட்டன.
  • யாருக்கும் தெரியாத ரகசியங்கள், ஒருவரின் அந்தரங்க ரகசியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு சந்தேகங்கள் தவிடுபொடியாக்கப்பட்டன.
  • ஒரு நாற்காலி போன்ற சாமான்களின் எடை அல்லது நபர்களின் எடை ஆகியவற்றில் நினைத்தவுடன் மாறுதலை ஏற்பட வைத்தார்.
  • முன்பின் தெரியாதவரிடமிருந்து கடிதங்கள் பெற்று உடனடி பதில்களை அவர்களின் கேள்விகளுக்குத் தந்தார்.
  • நிகழ்வில் நேரடியாக ஒருவரின் பொருள்களை நகர்த்தினார்
  • தான் விரும்பிய இசை ஸ்வரங்களை வானில் ஒலிக்கச் செய்தார்.

 Theo-logo-400-g

செஸ் டேபிள் நிகழ்வு

ஸ்காஃப் நகரில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. அவரது மாமனார் யாஹோன்டோஃப் (Yahonotoffs) இல்லத்தில் நடந்தது அது.

மேடம் ப்ளாவட்ஸ்கியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்து ஹாலில் சேர்களில் அமர்ந்தனர். அவரது சகோதரர் லியோனைட் அவர்களைச் சுற்றி வந்து ஒரு இடத்தில் நின்றார். மீடியம்கள் ஒருவரின் எடையை அதிகமாக்கவும் குறைக்கவும் முடியும் என்று கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டி அவர், “நீ இது சரிதான் என்கிறாயா? உன்னால் அப்படிச் செய்ய முடியும் என்கிறாயா?” என்று கேட்டார்.

 

 

மீடியம்களால் நிச்சயம் செய்ய முடியும். சில சமயம் நானே அதைச் செய்திருக்கிறேன்என்றார் ப்ளாவட்ஸ்கி.

நீங்கள் இப்போது முயற்சி செய்ய முடியுமா?” என்றார் பார்வையாளர்களுள் ஒருவர்.

அனைவரும் அதை வேண்டவே, “நான் முயற்சி செய்து பார்க்கிறேன்என்றார் அவர்.

இதோ இந்த செஸ் டேபிளை தரையில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் இதை இப்போது தூக்கிப் பார்க்கலாம். அப்புறம் அதை நான் ஃபிக்ஸ் செய்கிறேன். பிறகு அதை யாராலும் தூக்க முடியாதுஎன்றார் அவர்.

 

 

 

அதை நீங்கள் தொடவே மாட்டீர்களா?” என்றார் ஒருவர்.

நான் ஏன் அதைத் தொட வேண்டும்?” என்றார் அவர்.

அவரது பேச்சைக் கேட்ட இளைஞர்களில் ஒருவர் அந்த செஸ் டேபிளை இறகு போலத் தூக்கினான்.

பின்னர் கீழே வைத்தான்.

 

 220px-TheSecretDoctrine

ஆல் ரைட்என்ற மேடம் இப்போது அந்த டேபிளின் மீது தன் அகன்ற நீல நிற விழிகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். பின்னர் தன் பார்வையை அகற்றாமல் அந்த இளைஞனை சைகையால் அதைத் தூக்குமாறு பணித்தார். அவன் அந்த டேபிளை பழையபடி அலாக்காகத் தூக்க முயன்றான். முடியவில்லை. தன் பலம் முழுவதும் பிரயோகித்தான் முடியவில்லை. இரண்டு கைகளாலும் குனிந்தவாறு தூக்க முயன்றான். ஆனால் முடியாமல் முயற்சியில் தோற்றான்.

 

 

லியோனைட், “ஆஹா, இது நன்றாக இருக்கிறதேஎன்றார். ஆனால் அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது. அந்த இளைஞனும் தன் சகோதரியும் முன்னரே பேசி வைத்து இப்படி ஒரு டிராமா போடுகிறார்களோ!

 

 

திடீரென்று அவர், “நான் இதைத் தூக்கிப் பார்க்கிறேனே!” என்றார். அவர் செஸ் டேபிளைத் தூக்க முயன்றார். முழு பலத்தையும் பிரயோகித்தார், ஆனால் முடியவில்லை. வெறி வந்தது போல தன் மார்பை டேபிளின் மீது வைத்து தன் கைகளை அப்படியே டேபிளைச் சுழற்றி பலத்துடன் தூக்க முயன்றார். மூன்று கால்களுடன் கூடிய அந்த டேபிள் ஆடியது. மரம் நொறுங்கும் சப்தம் கேட்க கால்கள் முறியலாயின. ஆனால் டேபிளை அவரால் தூக்க முடியவில்லை.

 

 

தன் முயற்சியில் தோற்ற அவர், “HOW STRANGE’ என்று கூவினார்.

அந்த வார்த்தைகளையே மேடத்தின் வெற்றிக்கான அங்கீகாரமாக அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

 

 

ஒவ்வொருவராக இப்போது முன் வந்து டேபிளைத் தூக்கிப் பார்த்து அது பயன் தராது என்பதைத் தாமே தெரிந்து கொண்டு வியந்தனர்.

இதைத் தொடர்ந்து மேடம் பல்வேறு அற்புதங்களை அந்த நகரில் நிகழ்த்தவே நகரமே அவருக்கு அடிமையானது.

 

 

அபூர்வ சக்தி கொண்ட ஒருவராக உலகம் அவரைப் பார்க்க அவர் நிகழ்த்திய ஏராளமான நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன.

ஒரு கொலை கேஸில் குற்றவாளியைக் கூட அவர் கண்டு பிடித்தார்.

 மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை சுவை நிரம்பிய ஒன்று. தியாஸபியின் வளர்ச்சி மற்றும் ஆவி உலக ஆராய்ச்சி ஆகியவற்றை அறிய விரும்புவோர் மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தே ஆக வேண்டும்!

 

*************

5 இடங்களில் பொய் சொல்லலாம்: மஹாபாரதத்தில் வியாசர் புத்திமதி

tn_state_emblems_over_time

Written  by London swaminathan

Post No.2258

Date: 20 October 2015

Time uploaded in London: 8-21 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பொய் சொல்லுவது பற்றி ஆதி சங்கரர், திருவள்ளுவர், பிளாட்டோ ஆகியோர் என்ன சொன்னார்கள் என்று சென்ற ஆண்டு எழுதினேன் (கீழே காண்க). இவர்கள் எல்லோரும் “நன்மை பயக்குமெனின் பொய் சொல்லலாம்” — என்று சொல்லி விட்டார்கள். வியாசர் இவர்களை யெல்லாம் மிஞ்சிவிட்டார். ஐந்து இடங்களில் பொய் சொல்ல நமக்கு அனுமதி தருகிறார்.

ந நர்மயுக்தம் வசனம் ஹினஸ்தி ந ஸ்த்ரீஷு ராஜன் ந விவாஹ காலே

ப்ராணாத்யயே சர்வதனாபஹாரே பஞ்சான்ருதான் யாஹுரபாதகானி

–மஹாபாரதம் (ஆதி பர்வம்) 82-16

பொருள்:

பின்வரும் ஐந்து விஷயங்களில் பொய் சொன்னால் அது பொய்யாகக் கருதப்படமாட்டாது. அவைகள் தீமை செய்யாது: பெண்களிடத்தில், ஜோக் சொல்லுகையில், விவாஹ/கல்யாண விஷயங்களில், உயிர் போகக்கூடிய நிலையில், செல்வம் முழுதும் இழக்க நேரிடும்போது பொய் சொல்லலாம். அவை பாபமற்ற பொய்களாகும்.

satyameva

இதைச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம்:

பெண்களிடத்தில்: மனைவி மீதுள்ள அன்பின் காரணமாக மல்லிகைப் பூவோ, புடவையோ, நகைகளோ வாங்கி வந்தால் உடனே,

“ஏங்க, இதுக்கு என்ன விலை கொடுத்தீங்க?” என்று கேட்பார்கள். உடனே நாம் பொய்யான விலையைத் தான் கூறுவோம். எல்லா பெண்களுக்கும் தெரிந்த உண்மை—கணவன்மார்கள் எப்போதுமே கூடக்காசு கொடுத்து ஏமாறுவார்கள் என்று.

கணவன், மிகக் குறைவான விலையில் அதை வாங்கியதாகப் பொய் சொல்லுவான். ஆனால் பேரம் பேசியே பழக்கப்பட்ட பெண்களுக்கு, கணவன் பேரம் பேசாமல், கேட்ட காசைக் கொடுத்துவிட்டு வந்தது தெரிந்துவிடும். பெண்களிடத்தில் பொய் சொல்லி மாட்டிக் கொண்ட கதை இதுதான்.

இதே போல கல்யாண விஷயங்களிலும் பெண்ணின் அழகு, பையனின் வேலை-சம்பளம் பற்றி எல்லாம் பொய் சொல்லுவது சகஜம். கல்யாணம் நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் எதிர்பார்ப்பது போல 100 சதவிகித பொருத்தம் எங்கேயும் இராது. ஆனால் திருமணம் நடந்தபின் வாழ்க்கை எனும் வண்டி, தடம் புரளாமல் ஓடும்.

உயிரைக் காப்பாற்றவோ, தனது மானத்தைக் காப்பாற்றவோ பொய் சொல்லல்லாம். செல்வம் முழுதையும் ஒருவனிழந்தால் மானம் போகும்; அதன் மூலம் குடும்பமே சீரழியும். அதைத் தடுக்க பொய்சொன்னால் தவறில்லை. தமாஷுக்காகவும் (ஜோக்) பொய் சொல்லல்லாம். நாம் குழந்தைகளிடம் பல பொய்களைச் சொல்லுவோம் பூச்சாண்டி என்போம், பேய்-பிசாசு என்போம். அவர்களை நல்வழிப்படுத்தவும் அவர்கள் ஏமாறுவதில் நமக்குக் கிடைக்கும் ஆனந்தத்துக்காவும் இப்படிச் செய்கிறோம்.

நாங்கள் மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கி பீரோவுக்குள் ஒளித்து வைப்போம். குழந்தைகள் தூங்கியவுடன் அதை கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கப் போவோம். காலையில் அவர்கள் எழுந்தவுடன், அதைப் பார்த்து ஆனந்தம் அடைவர். கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸ் கொண்டு வந்ததாகப் பொய் சொல்லுவோம். இதெல்லாம் ஒரு கிளுகிளுப்பு தரும் விஷயம்!!

வியாசர் சொன்ன ஐந்து இடங்களிலும் பொய் சொல்லலாம். ஆனால் இறுதிப் பலன் நன்மையில் முடிய வேண்டும். “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” — என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலவே வியாசர் பொய்யும் நன்மையில் முடிய வேண்டும்.

emblem_of_india-svg

நான் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன்

 

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !

By London Swaminathan
Post No.837 Date. 13-02-2014

திருக்குறளில் வள்ளுவரும், பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகாவில் (பிரஸ்னோத்தரரத்னமாலிகா ஸ்தோத்திரம்) ஆதி சங்கரரும், கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் எப்போது பொய் சொல்லுவது அனுமதிக்கப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.
மஹாபாரத்திலும் சில கதைகள் உண்டு. பொய் சொன்னாரா இல்லையா என்று தீர்மானிக்க முடியாத தர்ம சங்கடமான நிலைமைகள் அவை.

வள்ளுவர் கூற்று

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (292)

பொருள்: குற்றமில்லாத நன்மையைத் தரும் என்றால் பொய் கூட வாய்மையாகக் கருதப்படும்
அதாவது ஒரு பொய்யானது மாசு மருவற்ற தூய நன்மையை உண்டாக்குமானால் அது உண்மை எனவே கருதப்படும்.

“சத்யமேவ ஜயதே= வாய்மையே வெல்லும்” என்ற உபநிஷத் வாசகம் தமிழ்நாடு அரசின் மற்றும் இந்திய அரசின் சின்னங்களில் காணப்படுகிறது. குருகுலத்துக்குப் போகும் பையனுக்கு வாத்தியார் சொல்லித் தரும் முதல் பாடம் “சத்யம் வத= உண்மையே பேசு” என்பதுதான். தமிழ், வடமொழி இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் இதே கருத்து திரும்பத் திரும்ப வருகிறது. அப்படி இருந்தும் ஆதி சங்கரர் சொல்லுகிறார்:

சங்கரர் கூற்று

யார் நம்பத் தகாதவன்?
எப்போதும் பொய் சொல்பவன்.
எப்போது பொய் சொன்னால் பாபம் ஆகாது?
தர்மத்தைக் காக்கச் சொல்லும் போது.

இந்தக் கேள்வி பதில் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா துதியில் வருகிறது. இது ஒரு அற்புதமான துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் பிரஸ்ன பாணியில் அவர் எழுதி உள்ளார். 67 பாடல்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள். பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். பாடல் 46, 47–ல் இந்த இரண்டு கேள்விகளும் பதில்களும் வருகின்றன.

ஆதி சங்கரரின் கூற்றுப்படி தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம். அது பாவமில்லை. ஒருவேளை அவர் மஹாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா கதையை மனதில் வைத்து இப்படிச் சொல்லி இருக்கலாம்.

1965-war-victory

அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’:

பொய்யே சொல்லாத தர்மனையும் பொய் சொல்ல வைத்தார் கிருஷ்ணன். எதற்காக? தர்மயுத்தம் வெல்ல வேண்டும் என்பதற்காக. தர்மன் பொய் சொல்ல மாட்டான் என்று தெரிந்த கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா’ என்ற பெயருள்ள ஒரு யானையைக் கொல்லச் செய்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் அஸ்வத்தாமாவுக்கு சாவு என்று கூச்சல் இடுகிறான். துரோணர் காதில் அது விழவே தர்மனிடம் உண்மையா என்று அறிய வருகிறார். அவன்‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’: = அஸ்வத்தாமா சாவு………. யானையோ மனிதனோ– என்று சொல்கிறான்.

அதாவது யானையோ மனிதனோ ஒரு‘அஸ்வத்தாமா காலி! யானையோ மனிதனோ என்பது சம்ஸ்கிருத வாக்கியத்தில் பின்னால் வரும். அந்த நேரத்தில் பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை உண்டாக்கி துரோணர் காதில் விழமுடியாதபடி செய்கின்றனர். துரோணர், மகனின் “மரணச் செய்தி” கேட்டு ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர்கிறார். அவரை திருஷ்டத்யும்னன் கொல்கிறான்.

ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைச் செய்யலாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒரு நல்ல காரியம் நடக்கத் தீமை இல்லாத பொய்களைச் சொல்லலாம். பையன் அழகானவனா, பெண் அழகானவளா என்று கேட்கும்போது ஆம் அழகானவர் என்று சொல்வதில் தப்பில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது.!!

coin satya

கௌசிகர் கதை

மஹாபரதத்தில் இன்னொரு சுவையான கதையும் உண்டு. வாழ்நாள் முழுதும் பொய் சொல்ல மாட்டேன் என்று கௌசிகர் என்ற பிராமணர் சபதம் செய்கிறார். அவர் காட்டில் இருக்கையில் வழிப்போக்கர் குழு ஒன்றைத் திருடர்கள் துரத்தி வருகின்றனர். அந்த வழிப்போக்கர்கள் கௌசிகர் இருக்கும் இடத்தைக் கடந்து ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். திருடர்கள் சற்று நேரத்துக்குப்பின் அங்கே வந்து கௌசிகரிடம் யாராவது இப்படி வந்தார்களா? என்று கேட்டனர். அந்த ‘உண்மை விளம்பி’ (!) ‘ஆமாம் அதோ அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று உண்மையைக் கூறுகிறார். பின்னர் வழிப்போக்கர்களைத் திருடர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இது வாய்மை அல்ல என்பது வள்ளுவனின் கருத்து.

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை (291) என்பது வள்ளுவன் துணிபு.

சத்யகாம ஜாபாலா கதை

உபநிஷதத்தில் இன்னும் ஒரு அற்புதமான கதை உண்டு. சத்யகாமன் என்ற சிறுவன், குருவிடம் போய் வகுப்பில் சேர ‘அப்ளிகேஷன்’ கொடுக்கிறான். அவரோ தம்பி மனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லையே. அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாம் எழுதாமல் ‘பிளாங்க்’ ஆக இருக்கிறதே- என்றார். அவன் எங்கள் அம்மா பெயர் ஜாபாலா என்கிறான். வீட்டுக்குப் போய் காலியான இடங்களை நிரப்பி உங்கள் அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாவற்றோடும் வா என்கிறார். அவன் அம்மாவிடம் போய் நடந்த கதையைச் சொல்கிறான். அவளும் ‘மஹா உத்தமி!’ (!) ‘உன் அப்பா யார் என்று எனக்கே தெரியாது’ என்கிறாள். அவனும் உடனே குருவிடம் போய் அம்மா சொன்னதை அப்படியே சொல்கிறான்.
குரு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இன்று முதல் உன்பெயர் ‘சத்ய காமன் (உண்மை நாடுவோன்)’. நீ எனது சீடன். பிராமணன் பொய்யே பேசமாட்டான். ஆகையால் நீயும் ஒரு பிராமண குலத்தில் உதித்தவனே என்று சொல்கிறார். உண்மைக்கு அவ்வளவு மதிப்பு (அந்தக் காலத்தில்!!!)
பிளாட்டோ கூற்று

கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவர் Noble Lie “நோபிள் லை” (உன்னத பொய்) சொல்லலாம் என்று ‘ரிபப்ளிக்’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எஸ். எம். டயஸ் எழுதிய ஆங்கில திருக்குறள் விளக்கத்தில் இதைக் கூறுகிறார். அதாவது கல்வி மற்றும் ராஜாங்க விஷயங்களில் இப்படி உன்னத காரியங்களுக்குப் பொய் சொல்லலாம் என்பது அவரது கருத்து. சாக்ரடீஸ் போன்றோர் இந்திய கலாசாரத்தை நன்கு அறிந்தவர்கள்.

சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவருடைய சீடர் அரிஸ்டாடில். அவருடைய சீடர் அலெக்ஸாண்டர். இந்தியாவை எப்படியாவது பார்த்து ரிஷி முனிவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று அலெக்ஸாண்டர் துடியாய்த் துடித்தார். (இது பற்றிய விஷயத்தை சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் புத்தகங்களில் இருந்து ஏற்கனவே விரிவாகக் கொடுத்துவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க விருப்பம் இல்லை!).

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

நாணயங்கள், தபால் தலை, அரசு சின்னங்களாகியவற்றில் சத்யமேவ ஜயதே/ வாய்மையே வெல்லுமென்ற, உபநிஷத வாக்கியமிருக்கிறது.

“நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி!!

blue jackal

சம்ஸ்கிருத பொன்மொழிகள்

Written by London swaminathan

Post No.2251

Date: 17 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

“நீல வர்ண ஸ்ருகால:”

ஆத்மபக்ஷம் பரித்யஜ்ய பரபக்ஷேசு யோ ரத:

ச பரைர் ஹன்யதே மூடோ நீலவர்ண ஸ்ருகாலவத் (ஹிதோபதேச)

தன்னுடைய சொந்த இனத்தை விட்டு யார் ஒருவர் வேறுபக்கம் செல்கிறாரோ, அவர்களை அந்த வேறுபக்க ஆட்கள் கொன்றுவிடுவார்கள்- நீல வர்ண நரிக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பது சம்ஸ்கிருதப் பாடலின் பொருள்.

ஹிதோபதேசம் கதை

ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. ஒரு நாள் பக்கத்திலுள்ள நகரத்தில் நுழைந்தது. அதைப் பார்த்து நாய்கள் குரைக்கவே அது, துணிகளுக்கு சாயமேற்றும் ஒரு சாயப் பட்டறையில் நுழைந்தது. அங்கே இருட்டாக இருந்தது. அந்த நரி தவறிப்போய், ஒரு சாயம் வைத்திருந்த ‘டிரம்’மில் விழுந்தது. உடலெல்லாம் நீலச் சாயம் ஏறியது. காலையில் காட்டுக்குள் வந்தவுடன் எல்லா மிருகங்களும் அதை விநோதப் பிராணியாகப் பார்த்தன. உடனே நரி, தான் தேவலோகத்திலிருந்து வந்திருப்பதாகவும் தானே அரசன் என்றும் பறைசாற்றியது. தன்னுடைய சொந்த இன நரிகளை அலட்சியம் செய்தது. சிங்கம் உள்பட, எல்லா மிருகங்களும் அடங்கி ஒடுங்கி , அதற்கு அடிமையாக இருந்தன. ஒரு நாள் எங்கோ நரிகள் கூட்டம் ஊளையிடுவதைக் கேட்டவுடன் நீலவர்ண நரிக்கும் பிறவிக்குணம் தலைக்கேறியது. மிகப் பெரிய சத்தத்தோடு ஊளையிட்டது. இதைப் பார்த்த் சிங்கம் முதலிய கொடிய விலங்குகள், அது வெறும் நரி, இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றியிருக்கிறது  என்று அறிந்து அதன் மீது பாய்ந்து அதைக் குதறிக் கொன்றன.

blue fox

xxx

பெண்ணுக்கு ‘அழகு’ குறி, அம்மாவுக்குப் ‘பணம்’ குறி!

ரூபம் வரயதே கன்யா, மாதா வித்தம், பிதா ஸ்ருதம்

பாந்தவா: கலுமிச்சந்தி மிஷ்டான்னமிதரே ஜனா: – பஞ்ச தந்திரம்

கல்யாணம் என்று வந்து விட்டால் பெண்ணுக்கு மாப்பிள்ளையின் அழகும், அம்மாவுக்கு மாப்பிள்ளையின் பணவசதியும், அப்பாவுக்கு மாப்பிள்ளையின் அறிவும், சொந்தக் காரர்களுக்கு அவனது குலமும், ஏனையோருக்கு கல்யாண விருந்தும் குறியாக (முக்கியம்) இருக்கும்!!!

Xxx

விக்ரீயந்தே ந கண்டாபிர்காவ: க்ஷீரவிவர்ஜிதா: — சார்ங்கதர பத்ததி:

பால் இல்லாத பசுக்களின் கழுத்தில் மணி கட்டினாலும் அதிக விலைக்கு விற்கமுடியாது.

Xxx

விஹ்வலா ஹி ராஜப்ரக்ருதி: — காதம்பரி

ராஜாவின் போக்கு சந்தேகத்துக்குரியது (அரசனிடம் கவனமாக இருக்க வேண்டும்)

ஒப்பிடுக:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

பொருள்: –மன்னன் அருகில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தீ மூட்டி குளிர்காயும்போது எப்படி தீக்கு மிக அருகிலும் அல்லது தீயிலிருந்து மிகத் தொலைவிலும் செல்வதில்லையோ அப்படி அகலாது, அணுகாது பழக வேண்டும்

 

“பாம்பு என்று தாண்டுவதா, பழுது என்று மிதிப்பதா?”

“பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் – திரிகடுகம்”

Xxx

 

வ்ருத்தா நாரீ தபஸ்வினீ – சாணக்ய நீதி தர்பணம்

வயது முதிர்ந்துவிட்டால் பெண்கள் எல்லாம் தவசிகள் (அவ்வையார்) ஆகிவிடுவர்.

ஒப்பிடுக:

சௌ சூஹே காகர் பில்லீ ஹஜ் கோ சலீ

Xxx

நாஸ்தி கங்கா சமம் தீர்த்தம் நாஸ்தி மாத்ரு சமோ குரு:

கங்கையின் புனிதத்துக்குச் சமமான ஜலம் இல்லை’

அம்மாவுக்குச் சமமான குருவும் இல்லை.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும் மூன்று “க” முக்கியம் என்பார். கங்கை, கோவிந்தன், காயத்ரி.

ஆதிசங்கரர் பஜகோவிந்தத்திலும்  கங்கா ஜலம், கோவிந்தன் (முராரி), பகவத் கீதை ஆகிய மூன்று ‘க’ முக்கியம் என்பார்.

—சுபம்–