தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!

dd-marriage-stills12

இந்துமதத்தில் 8 வகைத்  திருமணங்கள்

Written by London swaminathan

Research article No. 1789 Date 9th April 2015

Uploaded from London at  10-18 காலை

கட்டுரையின் முதல் பகுதி நேற்று “இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!” – என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. முதலில் அதைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நல்ல விளக்கம் தரும்.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.

-தொல்.பொருளதிகாரம்—1038

 

தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.

எட்டுவகைத் திருமணங்களின் விவரம்

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம்

பிராம்மம் வகைத் திருமணங்கள்

வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.

கார்த்தி ரஞ்சனி

கார்த்தி- ரஞ்சனி கல்யாணம்

தெய்வம் வகைத் திருமணங்கள்

ஆத்யத்தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்கு தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது

ஆருஷம் வகைத் திருமணங்கள்

தான் செய்ய வேண்டிய யாகாதி கர்மங்களுக்காக வரனிடத்தில் (மாப்பிள்ளைப் பையன் =வரன்) ஒன்று அல்லது இரண்டு ரிஷபங்களையும் (காளை மாடு) பசுக்களையும் வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்துகொடுப்பது

பிரஜாபத்திய வகைத் திருமணங்கள்

ஒரு பிரம்மசாரியை (கல்யாணம் ஆகாத பையன்) அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும்போது நீங்கள் இருவரும் தருமம் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தை கேட்கும் பணத்தைக் கொடுத்து, பெண்ணுக்கு நகைகள் வாங்கிப் போட்டுக் கல்யாணம் செய்து கொள்வது.

காந்தர்வ வகைத் திருமணங்கள்

ஸ்த்ரீயும் புருஷனும் ஒருவருக்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல் (காதல் திருமணம்)

இராக்ஷச வகைத் திருமணங்கள்

ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை (பெண்) அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக்களை (சொந்தக்காரர்கள்)  அடித்தும், கொன்றும் வலிமையால் கொண்டுபோவது

பைசாச வகைத் திருமணங்கள்

ஒரு கன்னிகை தூங்கும்போதும், குடியினால் வெறித்திருக்கும் போதும், பித்துக் கொண்டவளாய் இருக்கும்போதும் அவளுடன் புணர்வதாம்.

இதற்குப் பின்னர் எந்தெந்த வருணத்தினர் யாரைக் கல்யாணம் செய்யலாம் என்ற விஷயங்களை அவர் சொல்லுகிறார். இவை மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்திலும் உள.

மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா

மிர்ச்சி – செந்தில் திருமணம்

நச்சினார்க்கினியர் சொல்லும் சில சுவையான விஷயங்கள்:–

பிராம்மம் வகைத் திருமணங்களில் மாப்பிள்ளையின் வயது 48, பெண்ணின் வயது 12. (பெண்ணின் வயது சங்க காலத்திலும் வேத காலத்திலும் 12 முதல் 16 தான். அதில் வியப்பேதும் இல்லை). ஆனால் ஆணுக்கு 48 வயது இருக்கக் காரணம் அவர் அவ்வளவு காலத்துக்கு பிரம்மசாரியாக இருந்து வேதம் மற்றும் அதன் அங்கங்களைப் படித்துப் பின்னர் திருமணம் செய்துகொள்ள வருவர். (திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களின் விளக்க உரைகளில் ஆண்கள் 48 வயது வரை பிரம்மசர்யம் அனுஷ்டிக்கும் அபூர்வ விஷயங்களைக் காணலாம். ஒருவர் மனம், மொழி, மெய் மூன்றினாலும் 12 ஆண்டுகள் ப்ரம்மசர்யம் கடைப்பிடித்தால் அபூர்வ சக்திகள் – குறிப்பாக நினைவாற்றல்—உருவாகும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறுகிறார். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகாநந்தர் போன்றோர் அபூர்வ நினைவாற்றல் பெற்றதை அவர்களின் புண்ய சரித்திரங்களில் படித்தறியலாம்)

பிரஜாபத்யம் பற்றியும் நச்சினார்க்கினியர் கூடுதல் தகவல் தருகிறார். பெண் வீட்டார் தருவதைப் போல இருமடங்கு வரதட்சிணையை மாப்பிளை வீட்டார் தர வேண்டும்.

ஆர்ஷம் (ஆர்ஷமென்ற சொல் ‘ரிஷி தொடர்புடைய’- என்று பொருள்) வகைத் திருமணங்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு பசு, காளை இடையே நிற்பர். அந்த மாடுகளின் கொம்பும் குளம்பும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும் இந்த பசு—காளை மாடு போல என்றும் இன்பத்துடன் வாழுங்கள் என்று சொல்லி புனித நீர் அபிஷேகம் செய்வர்.

தெய்வம் வகைத் திருமணங்களில் அக்னி சாட்சியாகத் திருமணம் நடக்கும் (சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், ராமாயணத்தில் ராமனும் தீ வலம் வந்து மணம் முடித்ததைக் காணலாம்)

ஆசுரம் (அசுரர் போன்ற) வகைக் கல்யாணங்களில் வீரதீரச் செயல்கள் செய்வோருக்குப் பெண் கொடுப்பர். மஹா பாரதத்தில் இதைக் காணலாம். அர்ஜுனன் வில் வித்தையில் வென்று திரவுபதியை வெல்கிறான். யாதவ குல இளைஞர்கள் மஞ்சுவிரட்டு/ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று பெண் பெறுவர். இது கலித்தொகையில் வருகிறது.

ராக்ஷசம் என்பது கடத்தல் திருமணம்; காந்தர்வம் என்பது காதல் திருமணம் (இது பற்றி நேற்றைய கட்டுரையில் ரிக் வேதம் முதல் புராணம் வரையுள்ள எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன். சம்ஸ்கிருத காவியங்களில் இதற்கு மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள).

அட்லி ப்ரியா

திருமண புகைப்படங்கள்

மணம் 1

பாரதம் முழுவதும் ஒரே நாகரீகம்

 

ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். ஒரே சூத்திரத்தில் தர்மார்த்த காம (மோக்ஷம்) பற்றிச் சொல்லிவிட்டு அதே மூச்சில் மனு ஸ்ம்ருதியில் உள்ள எண்வகைத் திருமணம் பற்றியும் சொல்கிறார்.

ஆரிய-திராவிட வாதத்துக்குச் சாவுமணி அடிக்கும் கீழ்கண்ட சங்க இலக்கிய விஷயங்களை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதுவரை எழுதியுள்ளேன்:-

1.வசிஷ்டர் மனைவி அருந்ததியே உலக மஹா கற்புக்கரசி

  1. ரிக் வேதத்தில் சொல்லியபடி கரிகாலனும் அதியமான் நெடுமான் அஞ்சியும் ஏழு அடி நடந்து சென்றே விருந்தினர்களை வழி அனுப்பினார்கள்
  2. கங்கை நதியும் இமய மலையும் புனிதமானவை. இமயத்தில் கல் எடுத்து கங்கையில் குளிப்பாட்டி கண்ணகிக்குச் சிலை எடுத்தான் செங்குட்டுவன்.
  3. அமிர்தம் என்பது கிடைத்தற்கரியது.(சங்க இலக்கியத்தில் மூன்று வகை ஸ்பெல்லிங் பயன்படுத்தி இந்தச் சொல்லை எழுதியுள்ளனர்)
  4. பருவங்கள் ஆறு
  5. படைகள் நான்கு வகை

7.கொடிகள், சின்னங்கள், வெண்குடை வைத்துக் கொள்வது (மஹாபாரத காலம் போலவே)

  1. ஜம்பு, சால்மலி என்பது போல தாவரங்களின் அடிப்படையில் நிலப் பாகுபாடு (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை)

eagle-shaped-yagna-kunda

9.கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் வைத்து வேள்வி செய்தது; சோழன் பெருநற்கிள்ளி, ராஜ சூய யாகம் செய்தது; பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது

  1. பிராமணர்கள், நான்மறை (வேதம்) இரண்டுக்கும் மதிப்பு கொடுப்பது.

11.வாழ்க்கையின் லட்சியங்களை அறம், பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது

  1. தங்களை சூரிய சந்திர குலத் தோன்றல் என்று அழைத்துக் கொள்வது (புறநானூற்றில் பல இடங்களில் புறா- சிபி கதை)

13.சம்ஸ்கிருத மொழி அடிப்படையில் அகத்தியரைக் கொண்டு இலக்கணம் எழுதியது; அதில் பாணினியைப் பின்பற்றியது.

14.தொல்காப்பியத்தில் வேத கால இந்திரன், துர்க்கை, வருணனை தமிழர் தெய்வங்கள் என்று காட்டியது.சங்க இலக்கியம் முழுதும் சிவனையும் விஷ்ணுவையும் ராமனையும் கிருஷ்ணனையும் பலராமனையும் போற்றியது

15.அரசனைக் கடவுள் என்று போற்றுவது

16.போர் துவக்க துர்யோதனன் செய்தது போல ஆநிரை கவர்தல்

17.சாதகப் பரவை, கிரவுஞ்சப் பறவை, அன்னப் பறவை எடுத்துக் காட்டுகளை அப்படியே சங்க இலக்கியத்தில் புகுத்தியது

18.இறந்தோர்- தெற்குத் திசையில் (தென் புலத்தார்) வாழ்வது

  1. கணவனே கண்கண்ட தெய்வம் என்பது; மறு பிறப்பிலும் நீயே கண்வன் ஆக வேண்டும் என்பது

20.மறுபிறப்பு மற்றும் கர்ம வினைகள நம்புவது

21.ஆண் குழந்தை மூலம் ஈமக் கிரிய செய்து கரை கடப்பது

  1. வேதத்தில் உள்ள முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்களை வழிபடுவது

23.சூரியன், சந்திரன் (பிறை) வழிபாடு

24.சோதிடம், சகுனங்களை நம்புவது

25.சம்ஸ்கிருதம் போலவே சந்தி (புணர்ச்சி) விதிகளை இன்று வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது

26.சதி என்னும் உடன்கட்டை ஏறுவதைப் பின்பற்றியது

27.இறந்தோரை தகனம் செய்வது

28.திருமணத்தில் தாலி கட்டுவது, தீ வலம் வருவது

29.பேய்களை ஓட்ட வெண்கடுகு பயன்படுத்துவது

30.சுப காரியங்களுக்கு மஞ்சள் அரிசியும், அசுப காரியங்களுக்கு வெள்ளை அரிசியையும் பயன்படுத்துவது

31.நீரைப் பயன்படுத்திப் புனிதப்படுத்துவது.

32.போர் துவங்கும் முன் கழுத்தை வெட்டிக் கொண்டு உயிர் பலி கொடுப்பது (மஹாபாரதத்தில் அரவான்; தமிழில் நவகண்டம்)

33.இந்திர விழா கொண்டாடுவது

இது போன்ற நூற்றுக் கணக்கான சங்க இலக்கிய—வேத, இதிஹாச ஒற்றுமைகள், ஆரிய திராவிட வாதத்தை ‘சட்னி’-யாக்கிவிட்டன. ‘’புல்டோசர்’’ கொண்டு புழுதி ஆக்கிவிட்டது. இதை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் மேற்கோள் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறேன். ஆரிய திராவிட பொய்மை வாதத்துக்கு எதிராக தமிழர்கள் கொடுக்கும் செமை அடி இன்னும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் வரும். படித்து இன்புறுக.

ஏக பாரதம் வெல்க!! தமிழும் சம்ஸ்கிருதமும் வாழ்க, வாழ்க!!

முடிவுரை: சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம் (Sanskrit Nyayangal)

tamil muchu

Article written by S NAGARAJAN

Post No. 1788; Date 9th April 2015

Uploaded from London at 6-08 am

  1. முடிவுரை

.நாகராஜன்

 

தொன்று தொட்டு நம் நாட்டிற்கே உரித்தான சிறப்பியல்புகளில் ஒன்று நியாயங்களை எடுத்துக் காண்பித்து ஒரு நிலையை நடுநிலைமையுடன் அணுகுவது.

எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!

இது உங்களுக்கே நியாயமா படுதா?

இது எந்த வகை நியாயத்திலே சேர்த்தி?

இந்த அநியாயம் அடுக்காதப்பா!

கடவுள் உனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுவார்!

நியாயமா நடந்து பார்த்துப் பிழை!

இப்படி அன்றாட வாழ்வில் இடம் பெறும் இது போன்ற வாக்கியங்களின் அடிநாதமாக இருப்பது பல்வேறு நியாயங்கள்.

அந்த நியாயங்கள் இன்று தொகுப்பாரின்றி விளக்குவாரின்றி அருகிக் கிடக்கின்றன.

அதைப் போக்கவே இந்த எளிய முயற்சி!

சுமார் 900 நியாயங்கள் இருப்பதாக பல்வேறு அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் நுணுகி ஆராய்ந்தால் மேலும் பல நூறு நியாயங்கள் கிடைக்கக் கூடும்.

இவையெல்லாம் பல்வேறு பாஷ்யங்களில்விளக்கவுரைகளில்பல அரிய உண்மைகளை விளக்கும் போது சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஆழ்ந்த சம்ஸ்கிருத ஞானமும், பல் வேறு நூல்களில் உள்ளவற்றைக் கற்கும் ஆர்வமும், அதற்கான நேரமும் இருப்போருக்கு இந்த நியாயங்கள் எளிதில் பிடிபடும்.

இவற்றில் சிலவற்றையாவது தமிழில் தரவேண்டும் என நீண்ட காலமாக எண்ணி வந்துள்ளேன்.

tamil

அதன் அடிப்படையில் சுமார் 132 நியாயங்களை இது வரை பார்த்துள்ளோம்.

காலம் கனிந்து இறைவன் அருள் கைகூடுமானால் மேலும் பல நியாயங்களைத தமிழில்  அளிக்க முயல்வேன்.

சம்ஸ்கிருத செல்வம் முதல் பாகத்தில் சுபாஷிதங்கள் பலவற்றைப் பார்த்தோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் நியாயங்களைப் பார்த்துள்ளோம்.(ராமாயண வழிகாட்டியில் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான சில ஸ்லோகங்களைப் பார்த்தோம்)

சம்ஸ்கிருதம் ஒரு பாற்கடல்.

சுவைக்கச் சுவைக்க அமிர்தம் தான்!

அமிர்தக் கடலில் நடுவிலும் கூட மூழ்கலாம்! ஏனெனில் அமிர்தக் கடலில் மூழ்கினால் மரணமே தான் கிடையாதே!

ஆகவே சம்ஸ்கிருதப் பாற்கடலில் இன்னும் சற்று மூழ்குவோம்.

அடுத்த பாகம் மலரும்விரைவில்!

அன்புடன்

.நாகராஜன்

snagarajans@gmail.com

சான்பிரான்ஸிஸ்கோ

நாள் : 31-3-2015

இதைப் பரப்புவோர் தயவு செய்து என் சகோதரர் திரு சுவாமிநாதனின் ப்ளாக் பெயரையும் கட்டுரையின் முழு வடிவத்தில் இதை ஆக்கியோன் பெயர் உள்ளிட்டவற்றை அப்படியே வெளியிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்.

namaste2

72 Books!

I give below the 72 Books written by my brother S NAGARAJAN. He has written over 2000 articles to Tamil magazines and some blogs:–

 

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

Breakthrough to Success

சுய முன்னேற்றம்

வெற்றிக்கலை

ஜோதிடம்

ஜோதிடம் உண்மையா?

ஜோதிட மேதைகளின் வரலாறு!

நவகிரகங்கள்

நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

மாயாலோகம்! (பாகம் 1)

மாயாலோகம்! (பாகம் 2)

மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

டயானாவின் கதை

சரித்திர நாவல்

நாக நங்கை

விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

சிறுவர் புராணக் கதைகள்

புராணத் துளிகள்!

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

அறிவியல்

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 1)

அறிவியல் துளிகள்! (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

வருவார் காந்திஜி!

புதிர்கள்

மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

 

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

அறிவியல்

அறிவியல் துளிகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 4)

அறிவியல் துளிகள்! (பாகம் 5)

அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்

மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

புராணத் துளிகள் பாகம் 2

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

ராமாயண வழிகாட்டி பாகம் 1

ஸ்வர்ண லோகம் பாகம் 1

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 5 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

அறிவியல் துளிகள்! (பாகம் 7)

அறிவியல் துளிகள்! (பாகம் 8)

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

தமிழ் என்னும் விந்தை பாகம் 1

முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

If you want to buy them, please contact the publishers. You can continue reading his new articles in this blog free of cost—London swaminathan.

(Pictures are taken from different sources;thanks for the pictures)

இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

rukmini2

ருக்மிணியை   கிருஷ்ணர் கடத்திச் செல்லும் படம்

Written by London swaminathan

Research article No. 1786; Date 8th April 2015

Uploaded from London at   காலை 9-32

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

-தொல்.பொருளதிகாம்– 1038

இந்துமதம் ஒரு அழகான மதம். அதில் காதல்,கடத்தல் திருமணங்களும் உண்டு. மொத்தம் எட்டு வகையான திருமணங்களை மனு நீதி நூல் குறிப்பிடுகிறது. வேதகாலம் முதல் இதிஹாச புராண காலம் வரை இந்த எட்டு வகை மணங்களும் இருந்தன. இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இதைக் குறிப்பிடுகிறது. அடுத்த வரியிலேயே அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காமம்) என்பதையும் குறிப்பிடுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே தர்மம் இருந்தது என்பதை தொல்காப்பியர் முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். நிற்க.

1.உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் விமதா என்பவன் புருமித்ர என்பவரின் மகளான காமத்யுவைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதைப் பாடி வைத்துள்ளனர் முற்கால ரிஷிகள் ( ரிக் வேதம் 1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12).

2.கிருஷ்ண பரமாத்மா, அவர் மீது காதல் கொண்ட ருக்மிணியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்தார்.

3.கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை அர்ஜுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணரே உதவினார்.

4.மஹாபாரதத்தில் பீஷ்மர், காசிராஜனின் புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா அக்கிய மூவரையும் கடத்திச் சென்று இருவரை விசித்ரவீர்யனுக்கு மணம் முடித்தார்.

bhishma-amba-ambika-ambalika-300x225

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் பீஷ்மர் கடத்தும் காட்சி

அந்தக் காலத்தில் காதல், கடத்தல் பற்றிய பல சுவையான விஷயங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. புராணங்கள் பொய்க்கதைகள் அல்ல, அக்கால உண்மைச் சம்பவங்களை அப்படியே சொன்னவை என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

கடத்தல் திருமணங்களை ராக்ஷச வகைத் திருமணங்கள் என்பர்.

ருக்மிணியின் தந்தையான ருக்மி, தன் புதல்வியை சிசுபாலனுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் அவளுக்கு கண்ணன் மீது காதல். ஆகையால் அவர் கடத்திச் சென்றார். இதனால் சிசுபாலனுக்கும், கண்ணனுக்கும் ஜென்மப் பகை ஏற்பட்டது.

சுபத்ராவை துர்யோதணனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பலராமன் எண்ணினார். அது அவருடைய தம்பியான கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அர்ஜுனனை ஒர் பிராமணன் போல வேஷம் போட்டு பல நாட்களுக்கு அரண்மனையில் தங்க வைத்தார். பின்னர் சுபத்ராவைக் கடத்திச் செல்ல உதவியும் செய்தார். அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள். ஆனால் இது கிருஷணருக்கும் பலராமனுக்கும் இடையே உரசலை உண்டாக்கியது.மஹாபாரதப் போரில் எந்தப் பக்கமும் சேர மாட்டேன் என்று சொல்லி பலராமன் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டார்.

subhadra

சுபத்திரையை அர்ஜுனன் கடத்தும் படம்

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரழகிகளை நித்திய பிரம்மச்சாரியான பீஷ்மர் கடத்திச் சென்றார்.எதற்காக? பாண்டு வம்சம் தழைக்க வேண்டும் என்று வளர்ப்புத் தாயார் சத்தியவதி சொன்னதால். ஆனால் மூவரில் அம்பா என்ற பெண், “நான் ஏற்கனவே ஷால்வ மன்னரைக்  காதலிக்கிறேன்” என்றாள். உடனே பீஷ்மர் அவளை விடுவித்து, “போய் வா மகளே” என்றார். ஆனால் ஷால்வ மன்னனோ “பிச்சை கேட்டுப் பெண் எடுப்பவன் நான் அல்ல, போய் விடு” என்று அவளை அனுப்பி வைத்தான். இதனால் வெகுண்டெழுந்த அம்பா, பீஷ்மருக்கு கடும் சாபம் போட்டாள்.

“பெண் சாபம் பொல்லாதது. குடும்பத்தையே வேரோடு அழிக்கும்” — என்று மனு தனது நீதி நூலில் எச்சரித்தது சரியாகப் போயிற்று. “பெண்கள் எங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வாழும்” — என்று மனு ஒரு ஸ்லோகத்தில் திட்டவட்டமாகச் சொன்னது ஏன் என்று புரிகிறது.

மிக வியப்பான விஷயம் நாம் சினிமாக்கதைகளில் பார்ப்பது போலவே அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. நமது சமய நூல்கள் பல நீதிகளைப் புகட்ட இந்த உண்மைக் கதைகளை அப்படியே உள்ளதை உள்ளவாறு இயம்பின. காதலும், கடத்தலும் இப்படி வாழ்நாள் முழுதும் ரணங்களை, தீராத பகையை உண்டாக்கும் என்பதையும் இவை தெள்ளிதின் விளக்கும்.

rukmini

எட்டு வகைத் திருமணங்கள்

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் 20 ஆவது ஸ்லோகம் முதல் எட்டு வகைத் திருமணங்களை விளக்குகிறார். அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் சிங்காரவேலு முதலியார் இவைகளை விரிவாக அளித்துள்ளார். ஆயினும் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பன உரைகாரர் எழுதிய தொல்காப்பிய உரையில் முழு விவரங்களையும் தருகிறார்.

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன. இக் கட்டுரையின் தொடர்ச்சியில்  — இரண்டாவது பகுதியில் — எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

வேதத்தில் பரத நாட்டியம்!

JR

Picture of Famous Bharata Natyam Dancer Dr Janaki Rengarajan

Research Article written by London swaminathan

Post No. 1777; Date 5th April 2015

Uploaded from London at  14-00

This is already published in English in two parts

உலகிலேயே மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அதிலுள்ள பல சம்ஸ்கிருதச் சொற்களை தமிழர்களாகிய நாம் இன்றும் அன்றாடம் பேசும் உரையாடலில் பயன்படுத்துகிறோம். இன்றும் அந்த வேதம் கோவில்களிலும் யாகங்களிலும், திருமணச் சடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நாட்டியம் பற்றியும், சங்கீதம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. வேதத்தில் வரும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், தங்க நகைகள், நாட்டியம் – சங்கீதம் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் அவர்கள் எவ்வளவு நாகரீகம் படைத்தவர்கள் என்பதை எண்ணி வியக்கிறோம்.

ஒரு நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகள் – உணவு, உடைகள், உறைவிடம் – ரோட்டி கப்டா அவர் மகான் – நிறைவடையும் போதுதான் கவலைகள் மறையும்; கலைகள் மலரும். அவைகள் பரிணமிக்க மேலும் சிறிது காலம் பிடிக்கும். ரிக் வேத காலத்தில் பெண்கள் நகை அணிந்து சபைகளுக்குச் செல்லும் மந்திரங்களைப் பார்க்கையில் அவர்கள் நாகரீகத்தில் மிகவும்  முன்னேறியவர்கள் என்று தெரிகிறது.

குஜராத்தி பெண்கள் இன்று ‘கர்பா’ நடனம் ஆடுவது போல— மேலை நாட்டில் கம்பத்தைச் சுற்றி ‘மே போல் டான்ஸ்’ ஆடியது போல— வேத காலப் பெண்கள் வட்டமாக நின்று ஆடிய குறிப்புகளும் உள.

இந்திரனை நாட்டியக்காரன் என்று ரிக்வேத மந்திரங்கள் துதிபாடுகின்றன. இந்திரன் ஆடியதோடு மற்றவர்களை ஆடவைத்ததையும், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆடியதையும் காண்கிறோம்.

பிற்கால புராணக் கதைகளில் இதன் முழு விவரங்களும் கிடைக்கின்றன. தேவ லோகத்தில் அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா – ஆடியதை நாம் அறிவோம். கந்தர்வர்கள் என்பவர்களை இசையுடன் இணைத்து கந்தர்வ கானம் என்று புகழ்வதையும் நாம் கேட்கிறோம். இதற்கெல்லாம் வேதத்தில் மூலம் (வேர்) இருக்கிறது.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களில் இதுபற்றி கூடுதலாகத் தகவல் கிடைக்கிறது. அர்ஜுனன், அலி வேடம் தரித்து உத்தரை என்ற ராஜ குமாரிக்கு சங்கீதம் நடனம் பயிற்றுவித்ததை அறிவோம். தமிழில் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் நாட்டியம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. (இது பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் காண்க). இந்தப் பிண்ணனியில்தான் சம்ஸ்கிருதத்தில் பரதர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரமும் புகழ் பெற்றது.

janki fb

வேதத்தில் வரும் நாட்டிய விஷயங்கள்

தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி 25-2-1989-ல் பம்பாய் ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் சென்னை நாரத கான சபையிலும் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதாவது: ரிக் வேதத்தில் சரியான பாத அசைவுகளோடு ஆடும் மருத்துகளை ந்ருதவ: (நடனமாடுவோன்) என்று அழைக்கின்றனர்.

மார்பில் தங்க நகைகளோடு ஆடும் நடனக்காரர்களே! உங்கள் சகோதரத்துவத்தை நாடி மானுடப் பிறவிகளும் ஓடி வருகின்றனர். எங்களையும் பார்த்துக் கொள்வாயாக  – என்று ரிக் வேத துதி கூறுகிறது (8-20-22)

மருத்துக்கள் தாளத்துக் கேற்ப ஆடுவதோடு மட்டும் நில்லாமல், பாடவும் செய்கின்றனர். மருத்துக்கள் ஆண்கள். பெண்களில் மிகச் சிறந்த நடனம் ஆடும் உஷை (அதிகாலைப் பொழுது) பற்றிய அழகிய பாடலும் உண்டு. அவள் பகட்டான ஆடை அணிந்து வரும் காட்சியை ரிக் வேத ரிஷி வருணிக்கிறார்.

“அதிகாலைப் பொழுது — உஷா— கிழக்கு வானத்தில் அழகிய வண்ணங்களில் தோன்றிவிட்டாள். பறவைகள் சிறகடித்துப் பாடுகின்றன (புள்ளும் சிலம்பின காண் – ஆண்டாள் திருப்பாவை)). மனிதர்கள் எழுந்து சுறுசுறுப்பான வேலைகளில் இறங்கிவிட்டனர். உஷத் காலம், ஒரு நடனக்காரி போல, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறாள்”.

உவமை பற்றிய விதிகள், மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே, உயர்ந்த விஷயங்களையே உவமைகளாக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வேத காலத்தில் நாட்டியம் என்பது மிகவும் பிரபலமாக இருந்ததால்தான் புலவர் இந்த உவமையைக் கையாளுகிறார்.

நாட்டியக் கலை மிகவும் உன்னத நிலைக்குச் சென்றதைக் காட்டும்  – மிகவும் வளர்ச்சி பெற்றதைக் காட்டும் — பல உவமானங்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. நாட்டியக்காரிகள், சமூகத்தில் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் இல்லாமல் எந்தப் புனிதச் சடங்கும் நடைபெறமுடியாது. புனிதத்துவத்துக்கும், பூரனத்துவத்துக்கும் சின்னமாக விளங்குவது பூரண கும்பம். “ஓ! அழகிய பெண்மணியே, நெய்யும் தேனும் நிறைந்த அந்த பூரண கும்பத்தை எடுத்து வா” என்று இன்னும் ஒரு துதி கூறும்.

அமரகோசம் என்னும் அற்புத சம்ஸ்கிருத நிகண்டில் நாட்டியம் பற்றிப் பல சொற்கள் இருப்பதையும் நாகசாமி எடுத்துரைத்தார்:

தாண்டவம் நடனம் நாட்யம் லாஸ்யம் ந்ருத்யம் ச நர்த்தனே

தன்யத்த்ரிகம் ந்ருத்ய கீத வாத்யம் நாட்யம் இதம் த்ரயம்

(ஆங்கிலச் சொற்பொழிவில் இருந்து நான் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை என்று அறிக)

இனி சந்திரா ராஜன் எழுதிய காளிதாசன் எற ஆங்கில நூலில் சொல்லும் சில கருத்துக்களைக் காண்போம்:–

பரத மாமுனி, சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல்தான் உலகில் நாடகம், நாடகவியல் கோட்பாடுகள் பற்றிய மிகப் பழைய நூல் (பழங்காலத்தில் நாடகமும் நடனமும் இணைந்தே மக்கள் முன் வைக்கப்பட்டன).

வேத மந்திரங்களைப் பல்ர் பாடியதற்கான சான்றுகளைப் பார்க்கையில் அவை கோஷ்டி கானம் என்பது தெளிவாகிறது. மேலும் அதில் திரும்பத் திரும்ப வரும் பல்லவிகலையும் காண்கிறோம். மேலும் பெண்கள் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கைகளில் நீர்க்குடங்களுடன் யாக மேடைகளைச் சுற்றி ஆடிப் பாடி நடன மாடிய காட்சிகளும் மந்திரங்களில் வருகின்றன. இந்தப் பல்லவி, ஆடல், பாடல் ஆகியன அக்காலத்தில் நாடகத்தின் ஆதி வடிவம் ஆகும்.

எங்களுக்கு வரம்பிலா மகிழ்ச்சியை அருள்வாயாக என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-100); மாட்சிமை பொருந்திய அன்னை உன்னை ஈன்றெடுத்தாள். அருள் பெற்ற அன்னை உன்னைப் பெற்றெடுத்தாள்– என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-134).

இந்திரனை நாட்டியக் காரன் என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் வசந்த காலத்தில் நடனமாடும் மருத்துக்கலைப் பற்றியும் பாடுகின்றன (ரிக். 5—52; 6—63). அஸ்வினி தேவர்களும் இவ்வாறு போற்றப்படுகின்றனர்.

jr natraj pose

காளிதாசனில் நாட்டியம்

உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வசித்தான் என்னும் பல அறிஞர்களின் கருதை சங்க காலப் பாடல்களும் உறுதி செய்வதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இதே பிளாக்கி- கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். அவனும் பல இடங்களில் நாட்டியம் பற்றிக் குறிப்பிடுகிறான். அவனுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த வராஹமிகிரரும் பிருஹத் சம்ஹிதாவில் கிரகணமும், கிரகங்களும் நாட்டியப் பெண்களைப் பாதிப்பது பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுவான்.

காளிதாசன் எழுதிய நடனக் குறிப்புகலைத் டனிக் கட்டுரையில் தருவேன்.

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் நடனம் பற்றி வரும் இடங்கள் பின்வருமாறு:

ரி.வே.:–

1-130-7; 2—22-4; 5-52-12; 6-63-5; 7-33-9, 7-33-12, 7-10-95; 8-20-22, 8-24-9, 8-24-12, 8-92-2; 10-100, 10-123-5, 10-134, 10-132-6

அ.வே.

4-37-1, 4-37-4, 4-37-5, 7-12-2, 12-1-1, 12-1-41

ரிக் வேதத்தில் கந்தர்வர், அப்சரஸ் பற்றிய பாடல்களும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.

அதர்வவேதத்தில் பூமி பற்றிய பாடல் மக்கள் எப்படி ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.

இருபதுக்கும் மேலான இசைக் கருவிகள், இருபதுக்கும் மேலான ஆபரணங்கள், இருபதுக்கும் மேலான நடனக் குறிப்புகள் முதலியன் 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது — ரோடி-கப்டா அவ்ர் மகான்—பற்றிய கவலையே இல்லாத ஒரு செழிப்பான நாகரீகத்தைக் காட்டுகிறது என்பதில் இனியும் ஐயம் உண்டோ!!

jan2 (2)

மனு ஸ்மிருதியில் மிருகங்கள்!

Heron_070067-717950

Research Article No.1771; Date:- 3 ஏப்ரல், 2015

Written by London swaminathan

Uploaded at London time – காலை 7-43

(இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.)

 

மனு நீதி நூலைப் பற்றி இந்து விரோதிகளும் வெளிநாட்டினரும் நிறைய அவதூறுகளைப் பரப்பியதால்  அதிலுள்ள நிறைய நல்ல விஷயங்கள் உலகிற்குத் தெரியாமல் போய்விட்டன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வரை மனு நீதிக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல மதிப்பு இருந்தது. இது கல்வெட்டுகளில் இருந்தும், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் இருந்தும் வள்ளலார் போன்றோர் எழுத்துக்களாலும் தெரியவருகிறது. சங்க காலத்தில் ஒரு சோழ மன்னனுக்கே மனுநீதிச் சோழன் என்ற பெயர் இருந்ததும் அவன் தேர்க்காலில் தனது மகனையே பலிகொடுத்ததையும் நாம் அறிவோம்.

மனு ஸ்மிருதியில் சில இடைச் செருகல்கள் உள. அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் உலகிலேயே தலை சிறந்த நீதி நூல் இதுதான் என்பது புலப்படும். அவர் சொல்லவரும் விஷயங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் வியப்பு மேலிடும். திருலோக சீதாராம் என்னும் தமிழ் அன்பர் அழகிய தமிழில் மனு நீதியை மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் படித்து ஆராய வேண்டிய விஷயம் இது. எனினும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மனு கையாண்ட சில உவமைகள் மட்டுமே.

cat

இந்துக்கள் இயற்கையின் நண்பர்கள். இயற்கையில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனித்து அதைத் தகுந்த இடத்தில் உவமைகளாகப் பயன் படுத்தி, அரிய பெரிய உண்மைகளை மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்கின்றனர். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் கற்றுக் கொண்ட விஷயங்களின் நீண்ட பட்டியலை நாம் முன்னரே பார்த்தோம். மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் பறவை, மிருகங்களின் கதைகளும் உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளை இந்தியச் சிறுவர்கள் அனைவரும் அறிவர்.

மனுவும் தக்க இடங்களில் பிராணிகளைப் பயன்படுத்தி அறிவுரை வழங்குகிறார். மனுவுக்கு மிகவும் பிடித்தது கொக்கு. இதற்கு அடுத்த படியாக அவர் அதிகம் பயன்படுத்துவது பூனை! கொக்கும் பூனையும் தந்திரத்தால் இரை தேடுகின்றன.

கொக்கின் குணத்தை நல்லதுக்கும் கெட்டதுக்கும் உவமையாக்குகிறார். சில பிராமணர்கள் ருத்ராக்ஷப் பூனை போலவும், காத்திருக்கும் கொக்கு போலவும் கபடதாரிகள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். இது நாலாவது அத்தியாயத்தில் வருகிறது.

LionAttack

ஏழாவது அதிகாரத்தில் மன்னனின் குணநலன்கள் பற்றிச் சொல்லுகையில் அவன் கொக்கு போல காத்திருந்து காலம் கருதி இடத்தாற் செயின் வெற்றி கிட்டும் என்கிறார். இதையே பிற்காலத்தில் அவ்வையாரும் வள்ளுவரும் வாக்குண்டாம், திருக்குறள் ஆகியவற்றில் பயன்படுத்தினர். மனு என்பவர் ரிக்வேத காலத்தில் (கி.மு.1700-க்கும் முன்னதாக) வாழ்ந்தவர். இன்றைய மனு நீதி நூல் 2300 ஆண்டுக்கு (கி.மு.3-ஆம் நூற்றாண்டு) முந்தையது என்று அறிஞர்கள் பகருவர்.

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு – வாக்குண்டாம்

என்று அவ்வையாரும் மனு சொன்னதையே சொல்கிறார்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து – குறள் 490

என்று வள்ளுவரும் மனு சொன்னதையே சொல்கிறார்

 

4-30, 4-192, 4–196/7, 5-14, 7-106, 11-136, 12-66 (மனுவில் குறைந்தது எட்டு இடங்களில் கொக்கு வருகிறது)

bee_with_flower

ஆமையோ ஆமை!

மனு பயன் படுத்திய ஆமை உவமை, பகவத் கீதையிலும் திருக்குறளிலும் உள்ளது. மன்னன் தனது ரஹசியங்களையும் துறைகளையும் ஆமை தனது உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்து பாதுகாப்பது போலக் காக்க வேண்டும் என்கிறார் மனு (7—105). புலன் அடக்கம் பற்றிச் சொல்லுகையில்  குறளும் கீதையும் ஆமை பற்றிப் பேசும்.

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து – குறள் 126,

கீதை 2-58, மனு 7-105, திவ்விய பிரபந்தம் 2360.

ஏழாம் அத்தியாயத்தில், எதிரிகளை அழிக்க, ஒரு அரசன் ,”கொக்கு போல திட்டம் தீட்டவும், சிங்கம் போல தாக்கவும், ஓநாய் போல பாயவும்,தோல்வி வரும்பட்சத்தில் முயல் போலப் பின்வாங்கவும் வேண்டும் என்கிறார்.

வரிவிதிப்பு பற்றிச் சொல்லுகையில் மக்களுக்கு மிதமாக வரி விதிக்க வேண்டும். அது தேனீயானது மலர்களில் இருந்து தேனை எடுப்பது போலவும், அட்டையானது பிராணிகளிடத்தில் இருந்து ரத்தம் எடுப்பது போலவும், கன்றானது தனது தாயாரிமிருந்து பால் குடிப்பது போலவும் இருக்க வேண்டும் என்பார்.

survive-wolf-attack

புலித்தோல், மான் தோல் முதலியவற்றை தியானத்துக்குப் பயன்படுத்துவது பற்றியும் சொல்கிறார். வேறு பல இடங்களில் நிறைய மிருகங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவைகள் உவமை அல்ல.

மனு நீதி சாத்திரத்தைப் படித்துப் பயன்பெறுக.

வில்வம், துளசியின் மகிமை!!

tulsi

Tulsi Worship= இல்லந்தோறும்  துளசி மாடம்

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமி நாதன்

ஆய்வுக் கட்டுரை எண்—1768; தேதி 2 ஏப்ரல் 2015

லண்டனில் கட்டுரை ஏற்றப்படும் நேரம்—காலை 8- 36

மரங்களுக்கு வணக்கம், நமஸ்காரம்!

இந்துக்கள் பூமியை வணங்கினர், உழக்கூடிய நிலத்தை வணங்கினர், நீர் நிலைகளை வணங்கினர் காடு மலைகளை வணங்கினர், செடி-கொடி-மரங்களை வணங்கினர், பறவைகள் ,மிருகங்களை வணங்கினர். இது எல்லாம் மூட நம்பிக்கைகளா? இல்லை. புறச் சூழல் என்பதை பயபக்தியுடன் அணுக வேண்டும் என்ற மனப் பரிபக்குவமே இந்த வழிபாட்டை ஏற்படுத்தியது.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்து பூமியில் காலடி வைக்கும் முன் அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு காலடி வைப்பர் (பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே). மரங்களை வெட்டும்போதும், கிணறு வெட்டும் போதும் இதே அணுகு முறையே. அதாவது உன்னை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். உன்னை பூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் போலவே நீயும் சாஸ்வதமக இருக்கவேண்டும் என்பதே அவர்தம் கொள்கை!

மேலும் எந்த மரம் செடி கொடிகளுக்கு மருத்துவப் பலன்கள் அதிகமோ அவை மேலும் அதிகமாகப் போற்றப்படுகின்றன. மருத்துவப் பலன் கருதி அவைகளை அழித்துவிடக் கூடாதென்பத ற்காக இப்படிப் புனிதத்துவம் ஊட்டினரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. சோம லதை என்னும் அபூர்வ, மனதைச் சுத்திப்படுத்தும், வேத கால மூலிகை அடியோடு அழிந்துவிட்டது! இந்த சோமக் கொடியைப் போற்றி வேதத்தில் ஏராளமான துதிகள் உள்ளன.(விவரங்களை எனது பழைய கட்டுரையில் காண்க)

pipal.jpgworship

பிள்ளை பெற அரச மர வழிபாடு

Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship

கீழ்கண்ட செய்யுட்களே இதற்குச் சான்று பகரும்:

அரசமர வழிபாடு

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே

அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

அடியில் பிரம்மனும். நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

அரச மர வழிபாடு வேதத்திலும், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது.

tulsi2

துளசி வழிபாடு

யந்மூலே சர்வ தீர்த்தானி யந்மத்ய சர்வதேவதா:

யதக்ரே சர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்

 

அடியில் எல்லா புண்யக்ஷேத்ரங்களும் , நடுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நுனியில் சகல வேதங்களும், நிலைபெற்ற ஒப்பற்ற துளசி தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்.

 

 

தர்ப்பை வழிபாடு

குசமூலே ஸ்திதோ ப்ரம்மா குச மத்யே து கேசவ:

குசாக்ரே சங்கரம் வித்யாத் சர்வே தேவா: சமந்த இதி

தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சங்கரனும் இருக்கிறார்கள்.

தர்ப்பைகளின் தச வித (பத்து வித) புற்கள்:

குசா: காசா யவா தூர்வா கோதூமாஸ் சாத குந்துரா:

உசீரா வ்ரீஹ்யோ முஞ்சா தச தர்பாஸ்ச பல்பஜா:

குசம், நாணல், யவை, அருகு, கோதுமை, நீர்முத்தக் காசு (கோரை), வழல், நெற்பயிர், முஞ்சிப் புல், விச்வாமித்ரம் இவை பத்து வகை புற்கள் ஆகும்.

தர்ப்பையின் தேவர்கள்

குஸாஸ்து ரௌத்ரா விக்ஞேயா கௌசம் ப்ராஹ்மம் ததா ஸ்ம்ருதம்

ஆர்ஷந்து தௌர்வமாக்யாதம் வைஸ்வாமித்ரம் து வைஷ்ணவம்

இன்னன்ன தர்பைகளுக்கு இன்னன்ன தேவதைகள் என்பதை அறிக:

குசா: = ரௌத்ரர்கள்

கௌசம் = ப்ராம்மம்

தௌர்வம் = ஆர்ஷம்

வைஸ்வாமித்ரம் = வைஷ்ணவம்

இவை தவிர வில்வ அஷ்டகம், துளசி ஸ்தோத்திரம் என்ற துதிகளும் இருக்கின்றன.

தர்ப்பை, துளசி, வில்வம் ஆகியவற்றை எந்த நேரத்தில், எப்படிப் பறிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகள் இருக்கின்றன. சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் கலைக் களஞ்சியமான அபிமான சிந்தாமணியில் இவற்றைக் காணலாம்.

Bilva(Maredu)

மூவிதழ் கூவிளம் = வில்வம் படம்

வில்வத்தின் மகிமை

வில்வத்தின் மகிமையை தமிழ் செய்யுட்களிலும் காணலாம்:

கூவிளம் ஒன்று சாத்தின் குலவு சாலோகமாகும்

கூவிளம் இரண்டு சாத்தின் குலவு சாமீபமாகும்

கூவிளம் மூன்று சாத்தின் குலவு சாரூபமாகும்

கூவிளம் நான்கு சாத்தின் கூடுஞ் சாயுச்சந்தானே

சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும் மூன்று சாத்தினால் அவன் உருப் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பர் பெரியோர்.

வில்வமே புனிதனாகும், விளம்பு வில்வத்தின் மிக்காம்

வில்வமுள் சக்தியாகும், வில்வத்தின் கோடு வேதம்

வில்வவேர் பதினோர் கோடி, வியனுத்திரரேயாகும்

வில்வமேத்துநர்க்கே தேவர் மெய்வடிவுவாகுமன்றே

பொருள்: பத்திரங்களில் வில்வம் சிவசொரூபம், மரத்தின் முட்கள் சக்தி சொரூபம், கிளைகள் வேதம், வேர் 11 கோடி ருத்திரர்கள், வில்வ மரத்தை வணங்குவோர் தெய்வ வடிவைப் பெறுவர்.

vilva tree

Vilva/Bilva Tree worship = வில்வ மரத்தின் படம்

பஞ்ச வில்வம் எனப்படும் ஐந்து வில்வங்கள்

வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பௌர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பர் சான்றோர்.

இலைகளைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதன் பெருமையை பகவத் கீதையில் (9—26) கண்ணபிரானும், புறநானூற்றில் (பாடல் 106) கபிலரும் செப்புவதை “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற கட்டுரையில் தந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் தலம் தோறும் ஒரு குறிப்பிட்ட மரம் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் 21 இலைகளால் பிள்ளையாரை பூஜிக்கிறோம், இதை எல்லாம் பார்க்கையில் தாவரங்களுக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவதை அறிய முடிகிறது (21 இலைகளின் பட்டியலை வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்).

pipal sacred   circumambulate the peepal tree

Tree Worship is popular in India! You get fresh oxygen which purifies your blood very fast!!

swami_48@yahoo.com

கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

meeenakshi

Written by London Swaminathan

Research Article No.1765;  Dated 1April 2015.

Uploaded at London time 8-50 (GMT 7-50)

கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில்

தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமையுடையவைதாம். அதற்கு முன் தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தனவா? அவை எப்படி இருந்தன?

பிள்ளையார்பட்டி, மஹாபலிபுரம், திருப்பறங்குன்றம், நரசிங்கம் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட  கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்பட்டவையே. அப்படியானால் அதற்கு முன் என்ன மாதிரி கோயில்கள் இருந்தன?

சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோவில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. ஆயினும் கோவில்களின் தோற்றத்தை நாம் அறியோம். அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தகவலை 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ்நாட்டு மலரில் எழுதிய தொல் பொருட்துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார்.

டாக்டர் இரா.நாகசாமி இன்னும் ஒரு அரிய பாட்டினையும் பிங்கலந்தை நிகண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:–

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை

பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும் – பிங்கலந்தை 29

 

அதாவது தெய்வத் திரு உருவங்கள் செய்ய இந்த பத்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில்கள் மரம் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், முஸ்லீம் படை எடுப்புகளாலும் அழிந்து போயின. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

gopura darsan

அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை (6-71)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்

கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,

கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்

இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,

திருக்கோயில் – சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,

தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.

அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோவில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைச் சொல்லுகின்றனர். அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியாவில் 20 வகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிருஹம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

ஒரு அத்தியாயம் முழுதும் கோவில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாகக்  கூறுகிறார். இதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் எஞ்சினீயர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்தது தெரிகிறது.

tv malai

வராகமிகிரர் எழுதிய பலவிஷயங்களில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:-

“நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோவில்களைக் கட்ட வேண்டும்.

ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும்.

யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோவில் கட்டுவோருக்குக் கிடைக்கும்.

ஆற்றங்கரை,கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோவில் அமைவது மிகவும் விசேஷம்.

கோவில்கள் இருபது வகைப்படும். அவையாவன:–

மேரு, மந்தரா, கைலாச, விமானச் சந்த, நந்தன, சமுத்க, பத்ம, கருட, நந்திவர்த்தன, குஹராஜ, குஞ்சர, வ்ருஷ, ஹம்ச, சர்வதோபத்கர, கட, சிம்ஹ, வ்ருத்த, சதுஸ்கோண, ஷோடசரி, அஷ்டசரி.

மேரு என்னும் வகைக் கோவில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் உடையவை. அகலம் 32 முழம்,  உயரம் 64 முழம்”.

இதுபோல 20 வகைக் கோவில்களுக்கும் நீள, அகல, உயரங்களைச் சொல்லிவிட்டு கர்ப்பக் கிரஹ அளவுகளையும் கொடுக்கிறார். பல்வகை கட்டிடக் கலை சொற்களையும் உபயோகிக்கிறார். இல்லாத ஒரு விஷயத்தை அவர் கற்பனை செய்து எழுதமுடியாது. இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் எந்த அளவுக்கு நமது கட்டிடக் கலைத்திறன் 1500 ஆண்டுஅளுக்கு முன் இருந்தது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

இதுவரை தமிழ்- சம்ஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் தகவல்களை யாரும் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் மிகவும் பழையவனான பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி கோவிலை வலம் வரும் போதும், பிராமணர்கள் ஆசி வழங்கும் போதும் மட்டுமே அவன் குடையும் தலையும் தாழ்ந்து வணங்கும் என்று புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர் (புறம்-6). சிலப்பதிகாரத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். எவரேனும் இரு மொழி இலக்கியங்களில் வரும் கோவில்கள ஒப்பிட்டு ஆராய்வது பலன் தரும்.

வாழ்க அப்பர், வராஹமிஹிரர்!! வளர்க கோவில் கலை!!

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

kuruvi on kambi

Written by London Swaminathan

Article No.1761;  Dated 31 March 2015.

Uploaded at London time 9-00 (GMT 8-00)

பழமொழிக் கதைகள்!

ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, ஜூலை மாதம்- 1900—ஆம் ஆண்டு

 

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.

அவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.

பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன்? சீ! சீ! வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.

kuruvi,fb

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று ஊரே சிரித்தது.

வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.

brahmin

சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்

காஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.

இரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.

ஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். அவன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்!

(படங்கள் பல்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி)

கதை கேட்ட நாயை ……………. அடி!

dog3

நாய்க் காசு

Article No.1756; Date:- 29  March, 2015

Written by London Swaminathan

Uploaded at London time  15-00 (GMT 14-00)

 From today  clocks go one hour forward in the UK.

 

பழமொழிக் கதை!

ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, மே மாதம்- 1900—ஆம் ஆண்டு

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து வெளியான பழைய பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்ததில் சில சுவையான கதைகள் கிடைத்தன. எனது சொந்த நடையில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகிறேன்

ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.

dog2

பிச்சை எடுக்கும் நாய் படம்

ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.

அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.

பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.

dog-begging-200

கும்பிடு போடும் நாய்

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.

இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.

இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.

அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.

இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!

dog

 நாய் படங்கள்

“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******